01.12.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.03.85     Om Shanti     Madhuban


கடின உழைப்பில் இருந்து விடுபடுவதற்கான இலகுவான வழிமுறை, அசரீரி ரூப ஸ்திதியைக் கொண்டிருப்பதாகும்.


குழந்தைகளின் அன்பினால், பாப்தாதா சத்தத்திற்கு அப்பாற்பட்ட நிர்வாணா ஸ்திதியில் இருந்து சத்தத்திற்குள் வந்துள்ளார். எதற்காக? குழந்தைகளான உங்களுக்கு அவர் இருக்கும் சத்தத்திற்கு அப்பாற்பட்ட நிர்வாணா ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுப்பதற்காகவும், உங்களை இனிய வீடான நிர்வாணாவிற்கு அழைத்துச் செல்வதற்காகவுமே. நிர்வாணா ஸ்திதியே, எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுபட்டுள்ள ஸ்திதி ஆகும். நிர்வாணா ஸ்திதியே அசரீரி ஸ்திதி ஆகும். அசரீரியான, நிர்வாணா ஸ்திதியில் இருந்தவண்ணம், நீங்கள் பௌதீக ரூபங்களில் சத்தத்திற்குள் வருகிறீர்கள். பௌதீக ரூபத்தில் வரும்போது, உங்களிடம் அசரீரி ரூபத்தின் விழிப்புணர்வு இருக்கவேண்டும். அசரீரியான நான், பௌதீக ரூபத்தின் ஆதாரத்துடன் பேசுகிறேன். பௌதீக ரூபத்தில் இருக்கும்போது, உங்களின் விழிப்புணர்வில் அசரீரி ஸ்திதி இருந்தால், அது அசரீரியில் இருந்து பௌதீகத்தினூடாக வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் வருதல் எனப்படுகிறது. ஆதிரூபம் அசரீரியானது. பௌதீக ரூபமே அதன் ஆதாரம் ஆகும். அசரீரி மற்றும் பௌதீகம் என்ற இந்த இரட்டை விழிப்புணர்வு சக்திவாய்ந்தது. பௌதீகத்தின் ஆதாரத்தை எடுக்கும்போது, அசரீரி ரூபத்தை மறக்காதீர்கள். நீங்கள் இதை மறப்பதனாலேயே, நினைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. லௌகீக வாழ்க்கையில், நீங்கள் இயல்பாகவே உங்களின் பௌதீக ரூபத்தை நினைப்பீர்கள். நீங்கள் இன்னார் என்றும், நீங்கள் அந்த வேளையில் அந்தப் பணியைச் செய்கிறீர்கள் என்றும் நினைப்பீர்கள். அந்தப் பணி மாறும். ஆனால், நீங்கள் இன்னார் என்பது மாறாது. அல்லது நீங்கள் அதை மறப்பதில்லை. அதேபோன்று, நான் ஓர் அசரீரி ஆத்மா என்ற ஆதி ரூபம் எப்போதும் இயல்பாகவும் தொடர்ச்சியாகவும் நீங்கள் பணியைச் செய்யும்போது நினைவு செய்யப்பட வேண்டும். இந்த விழிப்புணர்வு உங்களுக்குள் ஏற்பட்டதும், நீங்கள் ஓர் அசரீரி ஆத்மா என்ற அறிமுகம் ஏற்பட்டதும் - அறிமுகம் என்றால் ஞானம் என்று அர்த்தம் - ஞானச் சக்தியால் நீங்கள் ரூபத்தை அறிந்து கொள்வீர்கள். அதை அறிந்தபின்னர் எவ்வாறு உங்களால் அதை மறக்க முடியும்? ஞானச் சக்தியால், சரீர உணர்வை நீங்கள் மறக்க முயற்சி செய்தாலும், அந்த விழிப்புணர்வை நீங்கள் மறப்பதில்லை. எனவே, அவ்வாறாயின் எவ்வாறு உங்களால் இந்த ஆத்ம உணர்வு ரூபத்தை மறக்க முடியும்? எனவே, இதை உங்களுக்குள் கேட்டு, அதைப் பயிற்சி செய்யுங்கள். நடக்கும்போதும், அசையும்போதும் எந்தவொரு பணியைச் செய்யும்போதும், பௌதீகத்தின் ஆதாரத்துடன் அசரீரி ரூபம் பணியைச் செய்கிறதா எனச் சோதித்துப் பாருங்கள். அப்போது உங்களிடம் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுபட்ட ஸ்திதி, அசரீரியான ஸ்திதி, தடைகளில் இருந்து விடுபட்ட ஸ்திதி இருக்கும். நீங்கள் அந்த முயற்சியில் இருந்து விடுபட்டிருப்பீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் மறக்கும்போதே அது முயற்சியாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அதன்பின்னர் நீங்கள் அதை நினைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் ஏன் அதை மறக்கிறீர்கள்? நீங்கள் அதை மறப்பீர்களா? பாப்தாதா கேட்கிறார்: நீங்கள் யார்? நீங்கள் சரீரதாரியா அல்லது அசரீரியா? நீங்கள் அசரீரி, அல்லவா? அசரீரியாக இருக்கும் நீங்கள், ஏன் அதை மறக்கிறீர்கள்? நீங்கள் உங்களின் ஆதி ரூபத்தை மறந்து, ஆதாரத்தை நினைக்கிறீர்கள். நீங்கள் செய்வதையிட்டு உங்களுக்கே வியப்பாக இல்லையா? நீங்கள் இப்போது வியப்படைகிறீர்கள்,இல்லையா? உண்மையானதை நீங்கள் மறந்து, பொய்யானதை நினைக்கிறீர்கள். சிலவேளைகளில், பாப்தாதா குழந்தைகளையிட்டு வியப்படைகிறார். நீங்கள் உங்களையே மறந்து, பின்னர் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் உங்களையே மறந்து, மனவிரக்தி அடைகிறீர்கள். உங்களின் அன்பினால் தந்தையை அசரீரியில் இருந்து சரீரத்திற்குள் உங்களால் அழைக்க முடிகிறது. எனவே, உங்களால் நீங்கள் நேசிக்கும் ஒரேயொருவரை ஒத்த ஸ்திதியில், அசரீரி ஸ்திதியில் ஸ்திரமாக இருக்க முடியாதா? பாப்தாதாவால் குழந்தைகள் கடினமாக உழைப்பதைக் காண சகிக்க முடிவதில்லை. மாஸ்ரர் சர்வசக்திவான்கள், ஆனால் கடினமாக உழைக்கிறார்கள்! மாஸ்ரர் சர்வசக்திவான்களான நீங்கள் சகல சக்திகளின் அதிபதிகள் ஆவீர்கள். தூய எண்ணத்துடன் எந்த வேளையிலும் நீங்கள் அழைக்கும் சக்தி எதுவாயினும், அதிபதிகளான உங்களின் முன்னால் அந்த சக்தி பிரசன்னமாகும். சகல சக்திகளும் சேவையாளர்களாக இருக்கும் இத்தகைய ஓர் அதிபதி, கடினமாக உழைக்க வேண்டுமா? அல்லது அவர் தூய எண்ணங்களால் அவற்றுக்குக் கட்டளை இடுவாரா? அவர் என்ன செய்வார்? நீங்கள் அரசர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் பிரஜைகளா? பொதுவாக, தகுதிவாய்ந்த ஒரு குழந்தை என்னவென்று அழைக்கப்படுவார்? அவர் குழந்தை- அரசன் என்று அழைக்கப்படுவார், அப்படியல்லவா? எனவே, நீங்கள் யார்? நீங்கள் குழந்தை- அரசர்களா அல்லது தங்கியிருக்கும் குழந்தைகளா? நீங்கள் உரிமையுள்ள ஆத்மாக்கள், அல்லவா? எனவே, இந்தச் சக்திகளும் இந்த நற்குணங்களும் உங்களின் சேவையாளர்களே. அவற்றை அழையுங்கள். அவை உங்களின் முன்னால் வரும். தமது பலவீனங்களால், சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கும் சக்திசாலிகளும் தோற்கடிக்கப்படுகிறார்கள். நீங்கள் பலவீனமானவர்களா? நீங்கள் தைரியசாலிக் குழந்தைகள், அல்லவா? சர்வசக்திவானின் குழந்தைகள் பலவீனமாக இருந்தால் அனைவரும் என்ன கூறுவார்கள்? அது நல்லதாகத் தென்படுமா? எனவே, எவ்வாறு அவற்றை அழைத்து, அவற்றுக் கட்டளை இடுவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், ஒரு பணியாளன் யாருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவான்? அதிபதியாக இருப்பவருக்கே. அதிபதியே பணியாளன் ஆகுகிறார். கடினமாக உழைக்கும் ஒருவர் பணியாளன் அல்லவா? இப்போது நீங்கள் மனதின் இந்தக் கடின உழைப்பில் இருந்து விடுபட்டுவிட்டீர்களா? யக்ஞத்தில் சேவை செய்யும்போது, உங்களின் சரீரத்தால் பௌதீகமாகக் கடினமாக செயற்படுதல் வேறு விடயம். அதுவும் யக்ஞ சேவையின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டால், கடின பணியாகத் தோன்றாது. தொடர்பில் இருக்கும் ஆத்மாக்கள் மதுவனத்திற்கு வரும்போது, பலருக்கு இங்கு உணவு சமைக்கப்படுவதைப் பார்க்கும்போது, அதேவேளை, ஏனைய பணிகளும் செய்யப்படுவதைப் பார்த்து, எவ்வாறு உங்களால் இவ்வாறு கடிமான பணிகளைச் செய்ய முடிகிறது என வியக்கிறார்கள். இத்தனை பெரியதொரு பணி செய்யப்படுவதைக் கண்டு அவர்கள் உண்மையில் வியப்படைகிறார்கள். எவ்வாறாயினும், இதைச் செய்பவர்கள் இந்தப் பெரிய பணியையும் எவ்வாறு கருதுகிறார்கள்? சேவையின் முக்கியத்துவத்தால், அவை அனைத்தும் ஒரு விளையாட்டைப் போன்றே தோன்றும். அது கடின உழைப்பாகத் தோன்றாது. கடின பணியின் ரூபம் மாறிவிடும். ஏனெனில், நீங்கள் இதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளீர்கள். அத்துடன் நீங்கள் தந்தையை நேசிக்கிறீர்கள். எனவே, மனதின் கடின உழைப்பில் இருந்து விடுபடுவதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. துவாபர யுகத்தில் இருந்து, தேடுவதாலும் பரிதவித்து அழைப்பதாலும் உங்களின் மனதால் நீங்கள் கடினமாக உழைத்தீர்கள். உங்களின் மனதால் கடினமாக உழைப்பதனால், பணத்தைச் சம்பாதிப்பதற்காகக் கடினமாக உழைப்பதும் அதிகரித்தது. இன்று நீங்கள் கேட்கும் எவரும் என்ன சொல்கிறார்கள்? பணம் சம்பாதித்தல் உங்களின் மாமியார் வீட்டுக்குச் செல்வதைப் போன்றதல்ல! உங்களின் மனதின் கடின உழைப்பால், நீங்கள் பணம் சம்பாதிக்கும் கடின உழைப்பையும் அதிகரித்தீர்கள். சரீரமும் நோய்வாய்;ப்பட்டது. இதனாலேயே, சரீரத்தால் செய்யும் எதிலும் கடின உழைப்பே உள்ளது. மனதின் கடின உழைப்பும் உள்ளது. பணத்தின் கடின உழைப்பும் உள்ளது. அது மட்டுமன்றி, இன்று, உங்களின் குடும்பத்தின் மீதுள்ள அன்பின் பொறுப்பை நிறைவேற்றும் கடின உழைப்பும் உள்ளது. சிலவேளைகளில் ஒருவர் முகங்கோணுவார். சிலவேளைகளில், இன்னொருவர் முகங்கோணுவார். அதன்பின்னர், அவரை சமாதானப்படுத்துவதிலும் அவருடனான உறவைச் சீர் செய்ய முயற்சி செய்வதிலும் நீங்கள் மும்முரம் ஆகுகின்றீர்கள். இன்று, ஏதாவதொன்று உங்களுடையதாக உள்ளது. நாளை, அது உங்களுடையதாக இல்லாமல் போகலாம். இது மாறியும் நடக்கும். எனவே, அந்த விடயங்கள் அனைத்திற்காகவும் நீங்கள் கடினமாக உழைத்துக் களைப்படைந்தீர்கள், அல்லவா? நீங்கள் உங்களின் சரீரத்தால், மனதால், செல்வத்தால், உறவுமுறைகளால் களைப்படைந்தீர்கள்.

அனைத்திற்கும் முதலில், பாப்தாதா மனதின் கடின உழைப்பை முடிவிற்குக் கொண்டுவருகிறார். ஏனெனில், மனமே விதை ஆகும். மனதின் கடின உழைப்பானது, சரீரத்தாலும் செல்வத்துக்காகவும் கடினமாக உழைக்கும் அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். மனம் சரியாக இல்லாவிட்டால், பணியொன்றைச் செய்தல் என்று வரும்போது, உங்களால் அதை அந்தத் தினத்தில் செய்ய முடியாது என நீங்கள் கூறுவீர்கள். உங்களுக்கு நோய் இருக்காது. ஆனால், 103 இல் காய்ச்சல் இருப்பதைப் போன்று நீங்கள் உணர்வீர்கள். எனவே, உங்களின் மனதின் கடின உழைப்பானது, உங்களின் சரீரத்தால் கடினமாக உழைப்பதைப் போன்று உணரச் செய்யும். பணத்தைப் பொறுத்தவரையும் அவ்வாறே இருக்கும். மனதில் சிறிதளவு நோய் இருந்தாலும், நீங்கள் அதிகளவு உழைக்க வேண்டியுள்ளது, பணம் சம்பாதிப்பது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது சூழல் சரியாக இல்லை என நீங்கள் கூறுவீர்கள். எவ்வாறாயினும், உங்களின் மனம் சந்தோஷமாக இருக்கும்போது, எதுவும் பெரிய விடயம் இல்லை என நீங்கள் சொல்வீர்கள். அதே பணிதான். ஆனால் மனதின் கடின உழைப்பானது உங்களின் சரீரத்தால் கடினமாக உழைப்பதைப் போன்று உணரச் செய்யும். மனதின் பலவீனம், சூழலிலும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. பாப்தாதாவால் குழந்தைகள் தமது மனங்களால் கடினமாக உழைப்பதைக் காணச் சகிக்க முடிவதில்லை. நீங்கள் 63 பிறவிகளாகக் கடினமாக உழைத்தீர்கள். இப்போது, இந்த ஒரு பிறவி சந்தோஷத்திற்கான பிறவி ஆகும். இது அன்பிற்குரிய பிறவி, பேறுகளுக்கான பிறவி, ஆசீர்வாதங்களுக்கான பிறவி ஆகும். இது உதவியைப் பெறுவதற்கான பிறவி ஆகும். எனவே, இந்தப் பிறவியிலும் ஏன் கடினமாக உழைக்கிறீர்கள்? ஆகவே, கடின உழைப்பை அன்பாக மாற்றுங்கள். இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதன் மூலம் அதை முடித்துவிடுங்கள்.

இன்று, பாபாவும் தாதாவும் குழந்தைகளின் கடின உழைப்பைப் பற்றி தமக்கிடையே அதிகளவில் கலந்துரையாடினார்கள். நீங்கள் செய்வதைப் பார்த்தும், மனதின் கடின உழைப்பிற்கான காரணத்தையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் பார்த்து பாபாவும் தாதாவும் புன்னகை செய்தார்கள். நீங்கள் சகல வகையான குழந்தைகளையும் உருவாக்குகிறீர்கள். சிலவேளைகளில் முகம் அல்லது ஒரு கால் அல்லது ஒரு கையற்ற வலதுகுறைந்த குழந்தைகளையும் உருவாக்குகிறீர்கள். நீங்கள் வீணானவற்றின் சந்ததியை உருவாக்குகிறீர்கள். பின்னர், அந்தப் படைப்பை உருவாக்கியதால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதைப் பராமரிப்பதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. இத்தகையதொரு படைப்பை உருவாக்குவதால், நீங்கள் அதிகளவு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. பின்னர் நீங்கள் களைப்படைவதுடன், மனவிரக்தியும் அடைகிறீர்கள். அதன்பின்னர், அது மிகவும் கஷ்டமாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள். இது மிகவும் நல்லது. ஆனால் இது மிகவும் கஷ்டமானது. உங்களுக்கு அதைக் கைவிடவும் விருப்பமில்லை. நீங்கள் பறக்கவும் விரும்புவதில்லை. எனவே, என்ன செய்ய வேண்டும்? நீங்கள் நடக்க வேண்டியுள்ளது. நடப்பதற்கு நிச்சயமாக முயற்சி தேவைப்படும். எனவே, இப்போது பலவீனமான படைப்பை உருவாக்குவதை நிறுத்துங்கள். நீங்கள் மனதின் கடின உழைப்பில் இருந்து விடுபடுவீர்கள். அதன்பின்னர் நீங்கள் என்ன வியப்பான விடயங்களைக் கூறுகிறீர்கள்? நீங்கள் ஏன் இத்தகைய படைப்பை உருவாக்கினீர்கள் எனத் தந்தை கேட்கிறார். தற்காலத்தில் மக்கள் சொல்வதை நீங்களும் சொல்கிறீர்கள்: கடவுள் அதைத் தரும்போது நான் என்ன செய்வது? நீங்கள் கடவுளைக் குறைகூறுகிறீர்கள். இந்த வீணான படைப்பைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு அது தேவையில்லை. ஆனால் மாயை வந்தாள். எனக்கு விருப்பமில்லை, ஆனால் அது நிகழ்ந்தது. ஆகவே,சர்வசக்திவானின் குழந்தைகளான அதிபதிகள் ஆகுங்கள். அரசர்கள் ஆகுங்கள். பலவீனம் என்றால் தங்கியிருக்கும் பிரஜைகள் என்று அர்த்தம். ஓர் அதிபதி என்றால் சக்திவாய்ந்த அரசன் என்று அர்த்தம். எனவே, அதிபதியாகி அழையுங்கள். உங்களின் ஆதி ஸ்திதி என்ற மேன்மையான சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து, உங்களின் சேவையாளர்களான சக்திகளை அழையுங்கள். அவற்றுக்குக் கட்டளை இடுங்கள்! அப்போது உங்களின் சேவையாளர்கள் உங்களின் கட்டளைகளைப் பின்பற்றாமல் விடுவது சாத்தியம் இல்லை. நான் என்ன செய்வது? சகித்துக் கொள்ளும் சக்தி இல்லாததால், நான் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஏற்றுக்கொள்ளும் சக்தி இல்லாததால் இது நிகழ்ந்தது என நீங்கள் கூற மாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களின் பணியாளர்கள் பயன்படாவிட்டால், அவர்கள் எத்தகைய சேவையாளர்கள்? பணி முடிந்தபின்னர் உங்களின் சேவையாளர்கள் வந்தால் என்ன நிகழும்? நீங்கள் காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, உங்களின் சேவையாளர்களும் சரியான நேரத்தில் பிரசன்னம் ஆகுவார்கள். சரியான வேளையில் எந்தவொரு சக்தியோ அல்லது நற்குணமோ வெளிப்படாவிட்டால், அதிபதிக்கு காலத்தின் முக்கியத்துவம் தெரியாது என்பதையே அது காட்டுகிறது. எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சிம்மாசனத்தில் அமர்வது நல்லதா? அல்லது கடினமாக உழைப்பது நல்லதா? இப்போது இதற்கு நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. கடினமாக உழைப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது அதிபதியாக இருப்பதை விரும்புகிறீர்களா? நீங்கள் இவற்றில் எதை விரும்புகிறீர்கள்? இதற்கு, சதா ஒரு பயிற்சியைச் செய்யுங்கள் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: அசரீரியான நான், பௌதீக சரீரத்தின் ஆதாரத்துடன் இந்தப் பணியைச் செய்கிறேன். கரவன்ஹார் ஆகி, உங்களின் பௌதீக அவயவங்களால் அதைச் செய்யுங்கள். உங்களின் உண்மையான, அசரீரியான ரூபத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்தால், உண்மையான ரூபத்தின் நற்குணங்களும் சக்திகளும் இயல்பாகவே வெளிப்படும். உங்களின் ரூபத்தைப் போன்றே, அந்த ரூபத்தின் நற்குணங்களும் சக்திகளும் இயல்பாகவே செயற்பட ஆரம்பிக்கும். ஒரு குமாரி தாய் ஆகும்போது, தாயின் ரூபத்தில் நற்குணங்களும் சக்திகளும், சேவை செய்யும் மனப்பான்மை, தியாகம், அன்பு, களைப்பற்ற சேவை என்ற வடிவில் இயல்பாகவே வெளிப்படும். எனவே, உங்களின் அநாதியான, அழியாத ரூபத்தை நினைப்பதன் மூலம், இந்த நற்குணங்களும் சக்திகளும் இயல்பாகவே வெளிப்படும். அந்த ரூபம் இயல்பாகவே விழிப்புணர்வையும் ஸ்திதியையும் உருவாக்கும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குப் புரிகிறதா? உங்களின் வாழ்க்கையில் கடின உழைப்பு என்ற வார்த்தையை முடித்துவிடுங்கள். நீங்கள் கடினமாக உழைப்பதனாலேயே எதையும் சிரமமாக உணர்கிறீர்கள். கடின உழைப்பு முடிவடையும்போது, கஷ்டம் என்ற வார்த்தையும் இயல்பாகவே முடிவடைகிறது. அச்சா.

சிரமமான எதையும் சதா இலகுவாக ஆக்குபவர்களுக்கும், கடின உழைப்பை அன்பாக மாற்றுபவர்களுக்கும், தமது மேன்மையான ரூபத்தின் விழிப்புணர்வால் தமது மேன்மையான சக்திகளையும் நற்குணங்களையும் அனுபவம் செய்பவர்களுக்கும், எப்போதும் தந்தைக்கு அன்பின் பிரதியுபகாரத்தைக் கொடுப்பவர்களுக்கும், தந்தைக்குச் சமமாக ஆகுபவர்களுக்கும், மேன்மையான விழிப்புணர்வெனும் மேன்மையான ஆசனத்தில் எப்போதும் அமர்ந்திருந்து, அதிபதியாகத் தமது சேவையாளர்களினூடாகப் பணியை நிறைவேற்றுபவர்களுக்கும், இத்தகைய குழந்தை அரசர்களுக்கும் மாஸ்ரர் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா இரட்டை வெளிநாட்டுச் சகோதர, சகோதரிகளைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார்:
சேவையால் உங்களால் தந்தையின் சகவாசத்தை அனுபவம் செய்ய முடிகிறது. சேவை செய்யச் செல்லுதல் என்றால் சதா தந்தையின் சகவாசத்தில் இருத்தல் என்று அர்த்தம். நீங்கள் அசரீரி ரூபத்தில் அல்லது சூட்சும ரூபத்தில் இருந்தாலும், தந்தை எப்போதும் சேவையாளர் குழந்தைகளுடன் இருக்கிறார். கரவன்ஹார் உங்கள் மூலம் செய்விக்கிறார். அனைவரையும் அசையச் செய்யும் ஒரேயொருவர், உங்களையும் அசையச் செய்கிறார். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கருவிகளாகி, விளையாட்டை விளையாட வேண்டும். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் வெற்றிக்கான உரிமையைக் கோரும் இத்தகைய சேவையாளர்கள், அல்லவா? வெற்றி உங்களின் பிறப்புரிமை. வெற்றி சதா உங்களுக்கு மகத்தான, புண்ணியாத்மாவாக இருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும். மகத்தான புண்ணியாத்மாக்கள் ஆகுபவர்கள், அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்கள் என்ற உயர்த்தியைப் பெறுவார்கள். அச்சா.

இப்போது, அனைவரின் உதடுகளில் இருந்தும், ஒரேயொருவரே இருக்கிறார், இவர் மட்டுமே அந்த ஒருவர் என்ற பாடல் வெளிப்படும் நாளும் வரும். இது நிகழ்ந்ததும், அனைத்தும் நிறைவுபெறும். இப்போது நீங்கள் இந்தப் பாகத்தை அண்மையில் கொண்டுவரவேண்டும். இந்த அனுபவத்தைக் கொடுப்பதே, கவர்வதற்கான விசேடமான வழிமுறை ஆகும். தொடர்ந்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுங்கள். ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். அவர்கள் வெறுமனே ஞானத்தைக் கேட்டுத் திருப்தி அடைவதில்லை. எனவே, அவர்கள் ஞானத்தைக் கேட்கும் அதேவேளையில் தொடர்ந்து அனுபவத்தையும் கொடுங்கள். அப்போது அவர்கள் ஞானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வார்கள். அவர்கள் பெறும் பேறுகளால், ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உணர்வார்கள். அந்த மக்களின் சொற்பொழிவுகள் வெறுமனே ஞானம் நிறைந்தவை. உங்களின் சொற்பொழிவுகள் ஞானம் நிறைந்தவையாக மட்டுமின்றி, அனுபவத்தின் அதிகாரத்தையும் கொண்டிருக்க வேண்டும். எனவே, நீங்கள் அனுபவத்தின் அதிகாரத்துடன் பேசும்போது, தொடர்ந்து அவர்களுக்கு அனுபவத்தையும் கொடுங்கள். உதாரணமாக, நல்ல பேச்சாளர்களால் அவர்கள் பேசும்போது, மக்களை அழச் செய்யவோ அல்லது சிரிக்க வைக்கவோ முடியும். மௌனத்தில், அவர்களை மௌனத்திற்குள் அழைத்துச் செல்வார்கள். மண்டபத்தின் சூழலைத் தாம் பேசும் விடயத்தை ஒத்ததாக அவர்கள் ஆக்குவார்கள். அது தற்காலிகமானது. அவர்களாலேயே அவ்வாறு செய்ய முடியும் என்றால், மாஸ்ரர் சர்வசக்திவானான உங்களால் எதை அடைய முடியாது? ஒருவர் அமைதி எனச் சொல்லும்போது, அமைதிக்கான சூழல் இருக்க வேண்டும். ஒருவர் ஆனந்தம் என்று சொல்லும்போது, ஆனந்தமான சூழல் இருக்க வேண்டும். இத்தகைய அனுபவத்தைக் கொடுக்கும் சொற்பொழிவுகளே வெளிப்படுத்துகைக்கான கொடியை ஏற்றிவைக்கும். அவர்கள் ஏதாவது சிறப்பியல்பைக் காண வேண்டும். அச்சா. காலம் இயல்பாகவே உங்களைச் சக்திகளால் நிரப்புகிறது. அது ஏற்கனவே நிறைவேறியுள்ளது. நீங்கள் அதை மீண்டும் செய்ய வேண்டும். அவ்வளவே. அச்சா.

விடைபெறும் வேளையில் பாப்தாதா தாதி ஜான்கியைச் சந்திக்கிறார்.
இவை அனைத்தையும் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். விசேடமான அதியன்பிற்கினிய குழந்தைகளிடம் அனைத்திலும் அதிகூடிய சந்தோஷம் உள்ளதல்லவா? சந்தோஷக் கடலின் அலைகளில் - சந்தோஷக் கடலும் சகல பேறுகளின் கடலும் - தொடர்ந்து முன்னேறுபவர்கள், தொடர்ந்து மற்றவர்களையும் அந்தக் கடல்களின் அலைகளில் முன்னேறச் செய்கிறார்கள். நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கடலில் நீந்தத் தெரியாக ஒருவரை அவர்கள் என்ன செய்வார்கள்? அவரின் கைகளைப் பிடித்து நீராடச் செய்வார்கள், அப்படியல்லவா? இதுவே நீங்கள் செய்யும் பணியாகும். சந்தோஷ அலைகளில், சுகமான அலைகளில் தொடர்ந்து முன்னேறுதல். நீங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்கிறீர்கள், அல்லவா? உங்களை மும்முரமாக வைத்திருப்பதற்கு நீங்கள் நல்ல பணியைக் கண்டுள்ளீர்கள். நீங்கள் எவ்வளவு மும்முரமாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு நேரம் இருக்கிறதா? நீங்கள் எப்போதும் இதில் மும்முரமாக இருக்கிறீர்கள். எனவே, மற்றவர்கள் உங்களைப் பார்க்கும்போது, அவர்களும் உங்களைப் பின்பற்றுகிறார்கள். நினைவும் சேவையுமே உள்ளன. வேறு எதுவும் புலப்படுவதில்லை. இயல்பாகவே, உங்களின் புத்தி நினைவையும் சேவையையும் நோக்கிச் செல்கிறது. வேறெங்கும் செல்வதில்லை. நீங்கள் உங்களின் புத்தியைச் செயற்பட வைக்க வேண்டியதில்லை. அது தானாகவே இயங்குகிறது. இதுவே எதையாவது கற்ற ஒருவர், மற்றவர்களுக்குக் கற்பித்தல் எனப்படுகிறது. உங்களுக்கு நல்லதொரு பணி கொடுக்கப்பட்டுள்ளது. உங்களைப் புத்திசாலி ஆக்கிவிட்டுத் தந்தை சென்றுவிட்டார், அல்லவா? வெறுமனே உங்களை இன்னார் ஆக்கிவிட்டுச் செல்லவில்லை. உங்களைப் புத்திசாலியாக ஆக்கி, ஓரிடத்தைக் கொடுத்துவிட்டே அவர் சென்றார். உங்களிடம் எப்போதும் அவரின் சகவாசம் உள்ளது. ஆனால் அவர் உங்களைக் கருவி ஆக்கியுள்ளார். அவர் உங்களைப் புத்திசாலியாக்கி, ஓர் ஆசனத்தைக் கொடுத்துள்ளார். ஆசனத்தைக் கொடுக்கும் சம்பிரதாயம் இங்கேயே ஆரம்பமாகியது. உங்களுக்குச் சேவை சிம்மாசனத்தையும் சேவைக்கான ஆசனத்தையும் கொடுத்துவிட்டுத் தந்தை சென்றார். இப்போது, அவர் குழந்தைகள் அனைவரும் எவ்வாறு முன்னேறுகிறார்கள் என்பதைப் பற்றற்ற பார்வையாளராக இருந்தவண்ணம் பார்க்கிறார். உங்களிடம் அவரின் சகவாசம் உள்ளது. அவர் பார்வையாளரும் ஆவார். அவர் இரண்டு பாகங்களையும் நடிக்கிறார். பௌதீக ரூபத்தில், அவரைப் பற்றற்ற பார்வையாளர் என்று அழைக்கமுடியும். அவ்யக்த ரூபத்தில், அவரைச் சகபாடி என்று அழைக்க முடியும். அவர் இரண்டு பாகங்களையும் நடிக்கிறார். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு மூச்சிலும் நினைவிற்கும் சேவைக்குமான சமநிலையைப் பேணுவதன் மூலம் சதா சந்தோஷமாக இருந்து ஆசீர்வாதங்களைக் கோருவீர்களாக.

உங்களின் நினைவிற்கான இணைப்பை எப்போதும் தொடர்பில் வைத்திருப்பதில் நீங்கள் கவனம் செலுத்துவதைப் போன்று, சேவைக்கான இணைப்பும் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். ஒவ்வொரு மூச்சிலும் நினைவும் சேவையும் இருக்க வேண்டும். இது சமநிலையைப் பேணுதல் எனப்படுகிறது. இந்தச் சமநிலையுடன், நீங்கள் சதா ஆசீர்வாதங்களை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்படுகிறீர்கள் என்ற ஒலி உங்களின் இதயத்தில் இருந்து வெளிப்படும். நீங்கள் கடின உழைப்பில் இருந்து அல்லது போராடுவதில் இருந்து விடுதலை அடைவீர்கள். என்ன? ஏன்? எவ்வாறு?என்ற கேள்விகளில் இருந்து நீங்கள் விடுபட்டு, எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள். அதன்பின்னர், உங்களின் பிறப்புரிமையாக வெற்றியை அனுபவம் செய்வீர்கள்.

சுலோகம்:
தந்தையிடமிருந்து ஒரு வெகுமதியைப் பெறுவதற்கு, உங்களிடமிருந்தும் உங்களின் சகபாடிகளிடமிருந்தும் தடைகளில் இருந்து விடுபட்டவர் என்ற சான்றிதழை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.