02.01.2019        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். இயலுமானவரை நினைவுசெய்தலிலும்; கல்வியிலும் அதிகளவு கவனம் செலுத்துங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் மிகப்பெரிய வியாபாரிகள். எனவே, எதைப் பற்றி நீங்கள் எப்பொழுதும் கவனம் செலுத்தவும், சிந்திக்கவும் வேண்டும்?

பதில்:
எப்பொழுதும் இலாப, நட்டத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் இதைப் பற்றிச் சிந்திக்காது விட்டால், நீங்கள் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகவேண்டும். நீங்கள் பின்னர் தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற உங்கள் இராச்சிய ஆஸ்தியை 21 பிறவிகளுக்கு இழப்பீர்கள். எனவே, தந்தையுடன் ஒரு சிறந்த பேரத்தைச் செய்யுங்கள். தந்தையே அருள்பவர், குழந்தைகளாகிய நீங்கள் சுதாமாவைப் (குசேலர்) போன்று ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுத்து, உலக இராச்சியத்தைக் கோருகின்றீர்கள்.

ஓம்சாந்தி.
 குழந்தைகள் இங்கு அமர்ந்திருக்கின்றார்கள். இது ஒரு பாடசாலை. இது ஓர் ஆன்மீக ஒன்றுகூடல் இல்லை. உங்கள் முன்னால் அமர்ந்திருப்பவர் ஓர் ஆச்சிரமத்தின் தலைவரோ அல்லது ஒரு சந்நியாசியோ அல்லர். சுவாமி உங்களுடன் குழப்பமடைகின்றார் என்ற பயத்திற்கான கேள்வியே கிடையாது. பக்தி மார்க்கத்தில், அவர்கள் ஒரு சாதுவை அல்லது சந்நியாசியைத் தங்கள் வீட்டிற்கு அழைக்கும்பொழுது அவர்கள் அவருடைய பாதங்களைக் கழுவி அந் நீரைப் பருகுகின்றார்கள். அந்த ஒரேயொருவர் தந்தையாவார். வீட்டில் குழந்தைகள் எப்பொழுதாவது தங்கள் தந்தையிடம் பயப்படுவதுண்டா? நீங்கள் உங்கள் தந்தையுடன் உணவருந்தி, பருகி, விளையாடுகிறீர்கள். நீங்கள் அதைச் சந்நியாசிகளுடன் அல்லது குருமார்கள் போன்றோருடன் செய்வதுண்டா? அங்கு, நாள் முழுவதும் நீங்கள் குருஜி, குருஜி! என்று கூறுகின்றீர்கள். இங்கு, நீங்கள் அதைச் செய்யத் தேவையில்லை. அவர் தந்தையாவார். நீங்கள் ஆசிரியரின் ஆஸ்தியை ஆசிரியரிடமிருந்தும், குருவின் ஆஸ்தியைக் குருவிடமிருந்தும் பெறுகின்றீர்கள். தந்தையிடமிருந்து, நீங்கள் சொத்தைப் பெறுகின்றீர்கள். ஒரு குழந்தை பிறந்தவுடன், அவர் ஒரு வாரிசு ஆகுகின்றார். இங்கு, கூட, நீங்கள் தந்தையை இனங்கண்டு கொள்ளும்பொழுது, தந்தையின் குழந்தைகள் ஆகி, பின்னர் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். தந்தை சுவர்க்கத்தைப் படைப்பவர். எவ்வாறு அல்லது எங்கிருந்து இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க இராச்சியத்தைக் கோரினார்கள் என்பது எவருக்கும் தெரியாது. நீங்கள் அவ்வாறு இருந்தீர்;;;;;கள் என்பதையும், மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் யார் என்பதையும், தாங்கள் யாரை வழிபடுகின்றார்கள் என்பதையும் பற்றி மக்கள் முற்றிலும் சிந்திப்பதே இல்லை. அவர்கள் ஒரு சிவாலயத்திற்குச் சென்று சிவலிங்கத்தின் மீது நீரை அபிஷேகம் செய்து வீடு திரும்புகின்றார்கள். அவர்களுக்கு முற்றிலும் எதுவும் தெரியாது. நீங்கள் மரணபூமியின் அச் சரீரங்களை நீக்கி, அமரத்துவ தாமத்துக்குச் செல்வீர்கள் என்ற உணர்வு உங்களுக்கு இப்பொழுது உள்ளது. பேறு மிகவும் பெரியதாகும். பக்திமார்க்கத்தில் எப்பேறும் கிடையாது. பாபாவே கூறுகின்றார்: நான் 12 குருமார்களை ஏற்றுக் கொண்டிருந்தேன். அது நேர விரயம் என்பதையும், உண்மையில், அவர் தொடர்ந்தும் மேலும் அதிகமாகக் கீழிறங்கினார் என்பதையும் அவர் இப்பொழுது புரிந்துகொள்கிறார். எவ்வாறாயினும், அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எவர்மீதும் எந்த விரோதத்தையும் கொண்டிருப்பதில்லை. நாங்கள் ஒரேயொரு தந்தை மீது மாத்திரம் அன்பைக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் வகுப்பறைக்குள் வரும்பொழுது, இப் படங்களைப் பார்க்கையில் மிகவும் சந்தோஷம் அடைய வேண்டும். ஏனெனில் அவ்வாறு ஆகுவதற்கே நீங்கள் கற்கின்றீர்கள். எவ்வாறு இந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, குழப்பமடையாதீர்கள். தந்தை மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார், இருப்பினும், சிலர் ஞானத்தைச் செவிமடுக்கும்பொழுது, ஞானத்தால் வியப்படைந்து ஏனையோருக்கும் அதைக் கூறி, பின்னர் ஓடி விடுகின்றார்கள். அவர்கள் பின்னர் மாயைக்கு உரியவர்கள் ஆகுகின்றார்கள். தங்கள் இராச்சியத்தை நீங்கி, சென்று வேறோர் இராச்சியத்திற்கு உரியவர்கள் ஆகுகின்ற, துரோகிகள் என்று அவர்கள் அழைக்கப்படுகின்றார்கள். தந்தை உங்களை முயற்சி செய்வதற்கு அதிகளவு தூண்டுகிறார். பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிகளவு அலைந்து திரிகின்றார்கள். அவர்கள் பல தானங்களைச் செய்கின்றார்கள், பெருமளவு புண்ணியத்தைச் செய்கின்றார்கள், யாத்திரைகள் சென்று உபவாசமும் இருக்கின்றார்கள். சரி, ஒருவர் ஒரு காட்சியைக் கண்டால் அதில் என்ன உள்ளது? அவர்கள் மேலேறுகின்ற ஸ்திதிக்குச் செல்லவில்லை. உண்மையில், அவர்கள் மேலும் கீழிறங்குகின்ற ஸ்திதிக்குள் வருகின்றார்கள். உங்களுக்கு ஒவ்வொரு நாளும் மேலேறுகின்ற ஸ்திதியாகும். ஏனைய அனைவருக்கும், அது கீழிறங்குகின்ற ஸ்திதியாகும். ஞானம் பிரம்மாவின் பகல் எனவும், பக்தி பிரம்மாவின் இரவு எனவும் குருமார்கள் கூறுகின்றார்கள். ஞானத்திற்கும் பக்திக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. நீங்கள் ஞானத்தினூடாகச் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு அத்தகைய இலகு ஞானத்தைக் கூறுகின்றார்: நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆத்மாக்கள் கூறுகின்றார்கள்: ஓ அழிவற்ற தந்தையே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். அதில் முக்தி, ஜீவன்முக்தி இரண்டும் உள்ளடங்குகின்றன. பக்திமார்க்கத்தில் நீங்கள் முற்றிலும் எதையும் அறியாதிருந்தீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள்; நீங்கள் மேலும் தேடிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் பாடுவதுண்டு: ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்! அதில் அர்த்தம் இல்லாததுடன்; (சுவையற்றது) நீங்கள் கடவுள் என்று கூறும்பொழுது நீங்கள் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்வதில்லை. அதிமேலான சிவபாபா என்று கூறியவுடன், நீங்கள் உடனடியாக உங்கள் ஆஸ்தியை நினைவுசெய்கின்றீர்கள். இது இராவண இராச்சியம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். சத்தியயுகத்தில் இராம இராச்சியம் இருக்கின்றது. அது இப்பொழுது கலியுகம் ஆகும். சத்தியயுகத்தில் மிகச்சொற்ப மனிதர்களே இருந்தார்கள். ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே இருந்தது. அங்கு அமைதியும் சந்தோஷமும் இருந்தன. இங்கு, மக்கள் அமைதியைத் தேடித் தொடர்ந்தும் அலைந்து திரிகின்றார்கள். அவர்கள் பெருமளவு பணத்தைக் கருத்தரங்குகள் போன்றவற்றில் செலவிடுகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு எழுத முடியும்: அவரே அமைதிக்கடலும், தூய்மைக்கடலும், அத்துடன் செழிப்பின் கடலும் ஆவார். அவரிடமிருந்தே அனைத்தும் பெறப்படுகின்றன. நீங்கள் சத்தியயுகத்தில் பெரும் செல்வந்தர்களாக இருந்தீர்கள் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். அங்கு உலகில் அமைதி இருந்தது. எவ்வாறாயினும், ஆத்மாக்கள் பரந்தாமமாகிய, தங்கள் வீட்டில் அமைதியை அனுபவம் செய்;கின்றார்கள். உலகில் நாங்கள் மாத்திரம் இருந்தபொழுது, அமைதி, சந்தோஷம் உட்பட அனைத்தும் இருந்தன. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அத்தகைய சுவர்க்கத்தைப் பற்றி அவர்கள் சமயநூல்களில் என்ன எழுதியுள்ளார்கள் எனப் பாருங்கள்! தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்கள் எக்கேள்விகள் போன்றவற்றையும் கேட்கத் தேவையில்லாதவாறு நான் உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகின்றேன். எல்லாவற்றிற்கும் முதலில், சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் கூவியழைக்கின்றீர்கள்: வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள், அதாவது, வந்து பழைய உலகைப் புதியதாக்குங்கள். எவ்வாறாயினும், நீங்கள் முற்றிலும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. நூல்; சிக்குப்பட்டுக் கொண்டுள்ளது, அதை இப்பொழுது சிக்கெடுத்து, சீராக்க வேண்டும். பக்தியில், அவர்கள் பல்வேறு விக்கிரகங்களை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் கிருஷ்ணருக்குச் சக்கரத்தைக் கொடுத்து, அதன் மூலம் அவர் அகாசூரன், பகாசூரன் (அசுரர்கள்) போன்றவர்களைக் கொன்றதாகக் காட்டியுள்ளார்கள். அவர் வன்முறையாளரா? அவர்கள் பின்னர் அவர் இன்ன இன்னாரைக் கடத்தியதாகக் கூறுகின்றார்கள். அவர்கள் அவரை இரட்டை வன்முறையாளர் ஆக்கிவிட்டார்கள். அது ஓர் அற்புதம். அது சமயநூல்களை எழுதியுள்ளவர்களின் புத்தியின் அற்புதம் ஆகும். பின்னர் அவர்கள் அவரை வியாசக் கடவுள் என்று அழைக்கின்றார்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவுசெய்து, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். செய்வதற்கு வேறு எதுவுமில்லை. பாபாவை நினைவுசெய்யாத பலர் இருப்பதால், நீங்கள் யோகத்தில் அமருமாறு செய்யப்படுகின்றீர்கள்;; அவர்கள் தங்களுடைய சொந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு முற்றிலும் நேரம் இருப்பதில்லை. எவ்வாறாயினும், இங்கு, உங்கள் வேலையைச் செய்யும்பொழுதும், நீங்கள் பாபாவை உங்கள் புத்தியின் மூலம் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் அன்பிற்கினியவராகிய, எனது காதலிகள். நான் இப்பொழுது உங்களுக்குக் கூறுகின்றேன்: ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து உங்களை என்னுடன் மாத்திரம் இணைத்துக் கொள்ளுங்கள். உணவு உண்ணும் பொழுதும், பருகும்பொழுதும் நான் ஓர் ஆத்மா என்ற பழக்கத்தைப் பதிய வைத்துத் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் இவ்விடயங்களைச் சில சதங்கள் பெறுமதிக்குக் கூட (நினைவுசெய்தல் மிகவும் எளிமையாக இருப்பது) ஏற்றுக் கொள்ளாததுடன் என்னை நினைவும் செய்வதில்லை! நீங்கள் உங்களுடைய குழந்தைகள் போன்றோரை நினைவுசெய்கின்றீர்கள், ஆனால் உங்களால் என்னை நினைவுசெய்ய முடியவில்லை. உண்மையில், இப்படிக் கூறுவது தவறு: எவரையாவது விசேடமாக எனக்காக, தியானத்தை நடத்தச் செய்யுங்கள். பாபா வந்து நேரடியாகக் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். தந்தை முன்னைய கல்பத்திலும் உங்களுக்கு நேரடியாக விளங்கப்படுத்தினார். அவர் இப்பொழுது கூறுகின்றார்: ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் என்னைச் சந்தித்துள்ள, இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய குழந்தைகளே, உங்களுடைய 84 பிறவிகளும் இப்பொழுது முடிவுக்கு வருகின்றன. வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு நீங்கள் இப்பொழுது நிச்சயமாகத் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். விகாரத்தில் ஈடுபடுவதன் காரணமாக, நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தூய்மையாகாது விட்டால், நீங்கள் ஒரு குறைந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்து, 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள். இதுவே சுயதரிசனச் சக்கரம். எவருக்கும் இதன் அர்த்தம் தெரியாது. நீங்கள் சங்கை ஊத வேண்டும். இவை ஞான விடயங்கள். அவர் சுவர்க்கத்தைப் படைப்பவராகிய, உங்கள் எல்லையற்ற தந்தை ஆவார். தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் மேலேறும் ஸ்திதிக்குள் செல்வீர்கள். இது அத்தகைய ஓர் இலகுவான விடயம். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். தந்தை ஒவ்வொரு 5000 வருடங்களும் இங்கு வருகின்றார். நீங்கள் இப்பொழுது மிகவும் நன்றாக முயற்சி செய்ய வேண்டும். ஏன் நீங்கள் செல்வத்தின் பின்னால் துரத்திச் செல்கின்றீர்கள்? அச்சா, நீங்கள் ஒரு மாதத்திற்கு 100,000 அல்லது 200,000 சம்பாதித்தாலும், அவை அனைத்தும் முடிவடையவுள்ளன. உங்கள் குழந்தைகளும் அதைப் பயன்படுத்துவதற்கு இருக்க மாட்டார்கள். உங்களுடைய மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் அதிலிருந்து உண்பார்கள் என்ற பேராசை உள்ளது. அவர்கள் அனைவரும் அதே குடும்பத்தில் மறுபிறவி எடுப்பார்கள் என்பதல்ல. அவர்கள் எங்கு மறுபிறவி எடுப்பார்கள் என்று உங்களால் கூறமுடியாது. நீங்கள் 21 பிறவிகளுக்கு ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் குறைந்தளவு முயற்சியைச் செய்தால், பிரஜைகளின் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுவதுடன், உங்களுக்குப் பெருமளவு இழப்பும் நேரிடும். எனவே, நீங்கள் இலாப, நட்டத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். வியாபாரிகள் பெருமளவு பாவத்தைச் செய்கின்றார்கள், எனவே அவர்கள் நிச்சயமாகப் புண்ணியத்திற்காகச் சிறிதளவை ஒதுக்கி வைக்கின்றார்கள். இது அரிதாகவே சிலர் செய்கின்ற, அழிவற்ற ஞான இரத்தினங்களின் வியாபாரம். நீங்கள் தந்தையுடன் நேரடியாக இப் பேரத்தைச் செய்ய வேண்டும். தந்தை உங்களுக்கு ஞான இரத்தினங்களைக் கொடுக்கின்;றார். அவர் அருள்பவர். குழந்தைகளாகிய நீங்கள் ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுக்கின்றீர்கள், தந்தையோ உங்களுக்கு ஓர் எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கின்றார். அதனுடன் ஒப்பிடும்பொழுது, இது ஒரு கைப்பிடி அரிசியாகும். நீங்கள் அனைவரும் குசேலர் (சுதாமா) ஆவீர்கள். நீங்கள் எதைக் கொடுத்து எதைப் பெறுகின்றீர்கள்? நீங்கள் உலக இராச்சியத்தைக் கோரி, உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஒரேயொரு பாரத தேசம் மாத்திரம் இருக்கும் என்று உங்கள் புத்தி கூறுகின்றது. தத்துவங்களும் புதியவையாக இருக்கும். ஆத்மாக்கள் சதோபிரதானாக இருப்பார்கள்;. சத்தியயுகத்தில், நீங்கள் தேவர்களாக இருந்தபொழுது, நீங்கள் தூய தங்கமாக இருந்தீர்கள். பின்னர், திரேதாயுகத்தில், ஆத்மாக்களில் சிறிதளவு வெள்ளிக் கலப்படம் கலக்கப்பட்டிருந்தது, அது திரேதாயுகம் என அழைக்கப்பட்டது. நீங்கள் ஏணியில் தொடர்ந்தும் கீழே இறங்கினீர்கள். இந்நேரத்தில், நீங்கள் மிகவும் மேன்மையானவர்களாக இருக்கின்றீர்கள். பல்வகை ரூபமும் உள்ளது, ஆனால் மக்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. பல்வேறு விக்கிரகங்கள் உள்ளன. சிலர் கிறிஸ்துவின் படத்தை வைத்துள்ளார்கள், ஏனையோர் சாய்பாபாவின் படத்தை வைத்துள்ளார்கள். சிலர் இஸ்லாமியர்களையும் தங்கள் குருமார்கள் ஆக்குகின்றார்கள். அவர்கள் அங்கே சென்று, அதிகளவு மதுபானம் அருந்துபவர்களின் கொண்டாட்டத்தைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அதிகளவில் அறியாமை இருள் இருக்கின்றது. அவை அனைத்தும் பக்தியின் இருள். நீங்கள் வைத்திருக்கின்ற சகவாசத்தைப் பற்றி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூறப்பட்டுள்ளது: நல்ல சகவாசம் உங்களை அக்கரை சேர்க்கின்றது, தீய சகவாசம் உங்களை மூழ்கடிக்கின்றது. மாயையின் ஐந்து விகாரங்களே தீய சகவாசம் ஆகும். நீங்கள் இப்பொழுது உங்களை அக்கரை சேர்க்கின்ற, உண்மையான தந்தையின் சகவாசத்தைக் கண்டுகொண்டுள்ளீர்கள். தந்தை மாத்திரம் உண்மையைப் பேசுகின்றார். நீங்கள் ஒவ்வொரு கல்பமும் சத்தியத்தின் சகவாசத்தைப் பெறுகின்றீர்கள். அரைச் சக்கரத்தின் பின்னர், நீங்கள் இராவணனின் தீய சகவாசத்தைப் பெறுகின்றீர்கள். முன்னைய கல்பத்தைப் போன்றே, இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் நிச்சயமாக உலக அதிபதிகள் ஆகுவீர்கள். இங்கு, பிரிவினை இடம்பெற்றதால், அதிகளவு சண்டை உள்ளது. அங்கு, ஒரேயொரு தர்மம் மாத்திரம் இருந்தது. தேவர்களின் பிரிவினையற்ற ஒரேயொரு இராச்சியம் இருந்தபொழுது, உலகில் அமைதி இருந்தது. அங்கு, ஒரேயொரு தர்மமே இருந்தது. அங்கு எங்கிருந்து அமைதியின்மை வரமுடியும்? அது கடவுளின் இராச்சியமாக இருக்கின்றது. கடவுள் அந்த இராச்சியத்தை ஆன்மீக ஞானத்தின் மூலம் ஸ்தாபித்தார், எனவே அங்கு நிச்சயமாகச் சந்தோஷம் இருந்திருக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களை நேசிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எந்தளவுக்கு அலைந்து திரிய வேண்டியிருந்தது என்பது எனக்குத் தெரியும். கடவுள் நிச்சயமாக ஏதோவொரு ரூபத்தில் வருவார் என்;று மக்கள் புரிந்துகொள்கின்றார்கள். அவர் ஓர் எருதை ஓட்டுவதாகச் சிலவேளைகளில் அவர்கள் காட்டுகின்றார்கள். எவராவது ஓர் எருதை ஓட்ட முடியுமா? அதிகளவு காரிருளே உள்ளது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் கூற வேண்டும்: தந்தை உங்கள் அனைவருக்கும் ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்கு வந்துள்ளார். பிரம்மாவினூடாகப் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பாபா எப்பொழுதும் ஆலமரத்தின் உதாரணத்தைக் கொடுக்கின்றார். உண்மையில், அதன் அத்திவாரம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கு, வேறெந்தச் சமயமும் இருக்க மாட்டாது. பாரதம் அழிவற்ற தேசமும், அழிவற்ற யாத்திரைத் தலமும் ஆகும். அது தந்தையின் பிறப்பிடம். பாபா இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகிறார். அவர் ஆசிரியரின் ரூபத்தில் உங்களுக்குக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் கற்று, என்னை விடவும் முன்னேறிச் செல்கின்றீர்கள். நான் இராச்சியத்தைக் கோருவதில்லை. இங்கு வாருங்கள் என்று கூறி, நீங்கள் எப்பொழுதாவது என்னைச் சுவர்க்கத்திற்கு அழைத்துள்ளீர்களா? நான் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புகின்றேன். இது அத்தகையதோர் அற்புதமான விளையாட்டு. தந்தை கூறுகின்றார்: அச்சா, குழந்தைகளே, உங்களுக்கு நீண்ட ஆயுள் இருப்பதாக! நான் சென்று ஓய்வு ஸ்திதியில் நிலைத்திருப்பேன். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது உங்கள் தலையின்மேல் அனர்த்தங்கள் உள்ளன. இதனாலேயே நீங்கள் இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கு முழு முயற்சி செய்ய வேண்டும். தந்தையை நினைவுசெய்வதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் கற்கின்ற அளவிற்கேற்ப, ஒரு மேன்மையான குலத்திற்குள் செல்வீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் சொந்தச் சேர்வைகளை அரையுங்கள், உங்கள்; போதை உயரும். குழந்தைகள் எப்பொழுதும் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். வெளியே, உலகில், புதல்வர்கள் மாத்திரம் அதைப் பெறுகின்றார்கள், ஆனால் புதல்விகளோ தானம் செய்து கொடுக்கப்படுகின்றார்கள் (திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றார்கள்). இங்கு, ஆத்மாக்கள் அனைவரும் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள், அதுவும் எல்லையற்ற ஒன்றாகும். எனவே நீங்கள் இதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார், எனவே நீங்கள் ஒரு நாளேனும் தவற விடக்கூடாது. சிலர் பாபாவிற்குக் கூறுகின்றார்கள்: எனக்கு நேரமில்லை. ஓ உண்மையாகவா? ஆத்மாவாகிய உங்களுக்கு என்னுடன் கற்பதற்கு நேரமில்லை என்று கூறுவதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1.நீங்கள் வைத்திருக்கின்ற சகவாசத்தைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஒரேயொரு உண்மையான தந்தையின் சகவாசத்தை வைத்திருங்கள். ஐந்து விகாரங்களாகிய, மாயையின் சகவாசத்திலிருந்து மிகவும் தொலைவில் இருங்கள்.

2.உங்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். உங்கள் சுய போதையில் அமிழ்ந்திருங்கள். கூறப்பட்டுள்ளது: உங்கள் சொந்தச் சேர்வைகளை அரையுங்கள், நீங்கள் போதையுற்றிருப்பதை உணர்வீர்கள். ஒருநாளேனும் இக்கல்வியைத் தவறவிடாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா கவலையற்ற நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்து, தந்தையின் உதவி மூலம் ஒரு சிலுவையை முள்ளாக மாற்றுவீர்களாக.

கடந்த காலக் கணக்குகள் ஒரு சிலுவை போன்றவை, ஆனால் தந்தையின் உதவி மூலம் அவை ஒரு முள் போன்று ஆகுகின்றன. அனைத்தும் இங்கு தீர்க்கப்பட வேண்டும் என்பதால், பாதகமான சூழ்நிலைகள் நிச்சயமாக வரும். ஆனால் தந்தையின் உதவி மூலம் அவை ஒரு முள்ளாக மாறுகின்றன. மகத்துவமான தந்தை உங்களுடன் இருப்பதால், அது பெரியதொன்றைச் சிறிதாக ஆக்குகின்றன. இந்த நம்பிக்கையைக் கொண்டிருந்து சதா கவலையற்றவராக இருங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக எனது என்பதை உங்களுடையது என்று மாற்றி, இலேசாக இருங்கள், அனைத்துச் சுமைகளும் ஒரு விநாடியில் முடிவடையும்.

சுலோகம்:
சுலோகம்: நல்லாசிகள் எனும் கையிருப்பு மூலம் எதிர்மறையானவற்றைச் சாதகமானவையாக மாற்றுங்கள்.

தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி.

சுய பரிசோதனை எனும் ஸ்திதி மூலம் ஒவ்வொருவரின் இதயத்தின் இரகசியங்களையும் அறிந்து அவர்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குங்கள். இதற்கு உங்களில் சாதாரணமான ஒன்றிலும் மேலதிக ஸ்திதியை அனுபவம் செய்து, இந்த அனுபவத்தைப் பிறருக்கும் கொடுங்கள். புறநோக்கில் வரும் நேரத்திலும், சுய பரிசோதனை எனும் ஸ்திதியை உங்களுடன் வைத்திருங்கள்.