02.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சரீரமற்றவர்களாகித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் ஆதி தர்மத்தில் ஸ்திரமாக இருப்பீர்களாயின் நீங்கள் பலத்தைப் பெறுவீர்கள். நீங்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதுடன் உங்கள் மின்கலமும்; தொடர்ந்தும் நிரப்பப்படும்.

கேள்வி:
நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அறிவதால் குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு சதா அசைக்க முடியாதவராக விளங்குவீர்கள்?

பதில்:
உருவாக்கப்பட்டுள்ள குண்டுகள் முதலியன நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். விநாசம் நடைபெறும் பொழுது மாத்திரமே எங்கள் புதிய உலகம் வரும். இது அநாதியாகவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைவரும் மரணிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை நீக்கி விட்டு, ஓர் இராச்சியத்தில் பிறப்பெடுப்பீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நாடகத்தைப் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிக்கிறீர்கள். இதில் தளம்பல் அடைதல் என்ற கேள்வியே கிடையாது. அழுவதற்கான அவசியம் எதுவும் இல்லை.


ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகிறார்: ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் ஏன் இந்து சமயம் என அழைக்கப்பட்டது? நீங்கள் அதற்கு விடை காணவேண்டும். முதலில் ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே இருந்தது. பின்னர் அவர்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகியபொழுது அவர்களால் தங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியவில்லை. எனவே அவர்கள் தங்களை ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் தேவர்கள் என அழைப்பதற்குப் பதிலாக ஆதி சனாதன இந்துக்கள் என அழைக்க ஆரம்பித்தனர். இருப்பினும் அவர்கள்; ஆதி சனாதன எனும் வார்த்தைகளைக் கொண்டிருந்தனர்;; அவர்கள் தேவர்கள் எனும் பெயரை மாற்றி, தங்களை இந்துக்கள் என அழைத்தனர். வெளி இடங்களிலிருந்து இஸ்லாமியர்கள் வந்த பொழுது, அவர்கள் இந்து சமயம் எனும் பெயரைப் பயன்படுத்தினர். ஆரம்;பத்தில் இந்துஸ்தான் என்ற பெயரேனும் இருக்கவில்லை. எனவே, நீங்கள் இதனை ஆதி சனாதன இந்து தேவிதேவதா தர்மம் எனப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக அவர்கள் தர்மாத்மாக்கள். அவர்கள்; அனைவரும் அநாதியான தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. தாமதமாக வருபவர்கள் ஆதி சனாதன தர்மத்தவர்கள் எனக் கூறப்பட மாட்டார்கள். இந்துக்கள் மத்தியிலும் தாமதமாக வருபவர்கள் இருக்கிறார்கள். ஆதி சனாதன இந்துக்களுக்கு நீங்கள் அவர்களுடையது ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் என்பதைக் கூற வேண்டும். கூறுங்கள்: நீங்கள் ஆதி சனாதன சதோபிரதான் நபர்களாக இருந்தீர்கள். பின்னர் மறுபிறவிகள் எடுக்கும் பொழுது, நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது நினைவு யாத்திரையின் மூலம் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். அவர்கள் இந்த மருந்தை விரும்புவார்கள். பாபாவே சத்திர சிகிச்சையாளர். இந்த மருந்தை விரும்புபவர்களுக்கு நீங்கள் அதனைக் கொடுக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது நினைவூட்டப்படுவதைப் போன்றே நீங்களும் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். நீங்கள் எவ்வாறு தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகினீர்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இப்பொழுது தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையின் மூலம் சதோபிரதான் ஆகுகின்றீர்கள். ஆதி சனாதன இந்துக்களாக இருப்பவர்கள் நிஜமான தேவர்கள் ஆகுவதுடன் தேவர்களை வழிபடுபவர்களாகவும் ஆகுவார்கள். அதிலும் சிவன், இலக்ஷ்மிநாராயணன், இராதாகிருஷ்ணர், இராமர்சீதையினதும் பக்தர்களே தேவர்களின் பக்தர்களும் தேவ குலத்துக்கு உரியவர்களும் ஆவார்கள். சூரிய வம்சத்துக்கு உரியவர்களாக இருந்தவர்கள் பின்னர் சந்திர வம்சத்துக்குரியவர்கள் ஆகினார்கள் என்பதை நீங்கள் இப்போது நினைவு செய்கின்றீர்கள். எனவே நீங்கள் அந்தப் பத்தர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இங்கே புரிந்து கொள்வதற்காக வருபவர்களை ஒரு படிவத்தை பூர்த்தி செய்யுமாறு நீங்கள் வினவ வேண்டும். பிரதான நிலையங்களில் மக்கள் பூர்த்தி செய்வதற்குப் படிவங்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். உங்களிடம் எவர் வந்தாலும் பாடநெறியை ஆரம்பத்திலிருந்து கொடுப்பீர்கள். அவர்கள் தந்தையை அறியாதவர்களாக இருப்பதால் நீங்கள் அவர்களுக்கு விளங்கப்;படுத்த வேண்டிய முதலாவதும் பிரதானமானதுமான விடயம்: நீங்கள் உங்கள் சிரேஷ்;ட தந்தையை அறியாதவர்களாக இருக்கிறீர்கள். ஆதியில் நீங்கள் அப்பாலுள்ள தந்தைக்கு உரியவர்கள். நீங்கள் இங்கே வந்து, இப்பொழுது ஒரு லௌகீகத் தந்தைக்கு உரியவர் ஆகிவிட்டீர்கள். நீங்;கள் உங்களுடைய அப்பாலுள்ள தந்தையை மறந்துவிட்டீர்கள். எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். அங்கே இந்த எண்ணற்ற சமயங்கள் எதுவும் இருப்பதில்லை. எனவே அவர்கள் பூர்த்தி செய்யும் படிவத்திலேயே அனைத்தும் தங்கியிருக்கின்றது. சில குழந்தைகள் மிக நன்றாக விளங்கப்படுத்தினாலும் அவர்கள் அறவே யோகம் செய்யாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் சரீரமற்றவர்கள் ஆகுவதோ தந்தையை நினைவு செய்வதோ இல்லை. அவர்களால் நினைவில் நிலைத்திருக்க முடியாதுள்ளது. தாங்கள் மிக நன்றாக விளங்கப்;படுத்துகிறார்கள் என அவர்கள் அறிந்திருக்கின்ற பொழுதிலும், அருங்காட்சியகம் முதலியவற்றை அவர்கள் திறக்கின்ற பொழுதிலும் மிகச்சிறிதளவே நினைவு செய்கிறார்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது. தந்தை உங்களை எச்சரிக்கிறார். உங்களால் மற்றவர்களை மிக நன்றாக நம்பச்செய்ய முடியும் என நினைக்க வேண்டாம். அதனால் என்ன பயன்? நல்லது அவர்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகினாலும் அதில் என்ன உள்ளது? இங்கே நீ;ங்கள் சரீரமற்றவர்கள் ஆகவேண்டும். அனைத்தையும் செய்யும் பொழுது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாவே அனைத்துப் பணிகளையும் சரீரத்தின் மூலம் மேற்கொள்ளுகின்றார். இதை எவ்வாறு நினைவுசெய்வது அல்லது இவ்விடயங்களைப் பற்றி எவ்வாறு சிந்திப்பது என்றேனும் தெரியாதவர்கள் மூடர்கள் (புத்துக்கள்) என அழைக்கப்படுகிறார்கள். உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியாமல் உள்ளது. உங்களிடம் சேவை செய்வதற்கான பலம் இல்லை. நினைவைக் கொண்டிருக்காமல் எவ்வாறு ஓர் ஆத்மாவால் பலத்தைப் பெறமுடியும்? எவ்வாறு அவரின் மின்கலம் நிரம்ப முடியும்? முன்னேறுவதற்குப் பதிலாக அந்த ஆத்மா நிறுத்தத்தை அடைகிறார்;; அவரிடம் சக்தி இருக்காது. 'தர்மமே சக்தி" எனப்படுகிறது. ஓர் ஆத்மா தன்னுடைய ஆதி தர்மத்தில் ஸ்திரமாக இருக்கும் பொழுது மாத்திரமே, அவரால் சக்தி பெறமுடியும். தந்தையை எவ்வாறு நினைவு செய்வது என அறியாத பலர் உள்ளனர். உங்களால் இதை அவர்களின் முகங்களிலிருந்து கூறமுடியும். அவர்கள் ஏனைய அனைவரையும் நினைவு செய்வார்கள்; ஆனால் தந்தையை நினைவு செய்ய முடியாதிருக்கும். நீங்கள் யோகத்தின் மூலம் மாத்திரமே சக்தி பெறுவீர்கள். நினைவு செய்வதன் மூலமே அதிகச் சந்தோஷமும் ஆரோக்கியமும் இருக்கும். பின்னர், உங்கள் அடுத்த பிறவியில் நீங்கள் பிரகாசிக்கின்ற புதிய சரீரங்களைப் பெறுவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும்; பொழுது தூய சரீரங்களைப் பெறுவீர்கள். 'இது 24 கரட் தங்கமாகையால் அதிலிருந்து செய்யப்படும் ஆபரணங்களும் 24 கரட்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நேரத்தில் அனைவரும் 9 கரட் தங்கமாக உள்ளார்கள். சதோபிரதானாக இருப்பவர்கள் 24 கரட் தங்கம் எனவும், சதோவாக இருப்பவர்கள் 22 கரட் தங்கம் எனவும் கூறப்படுகிறார்கள். இவ்விடயங்கள் மிக நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: எல்லாவற்றிற்கும் முதலில் அவர்களைப் படிவத்தை நிரப்புமாறு வினவுவதால், அவர்கள் உங்களை எவ்வளவுக்குச் செவிமடுக்கிறார்கள் எனவும், அவர்கள் எவ்வளவுக்குக் கிரகித்துள்ளார்கள் எனவும்; உங்களால் கூற முடியும். இருப்பினும் அவர்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கிறார்களா என்னும் விடயம் உள்ளது. நினைவு யாத்திரையின் மூலம் மாத்திரமே நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகிறீhகள். அது பக்தி மார்க்கத்தின் பௌதீக யாத்திரைகள், ஆனால் இதுவோ ஆன்மீக யாத்திரை ஆகும். இங்கே ஆத்மாவே யாத்திரை செல்கிறார். ஏனைய யாத்திரைகளில் ஆத்மா, சரீரம் ஆகிய இரண்டுமே யாத்திரை செல்கின்றன. தூய்மையாக்குபவராகிய தந்தையை நினைவு செய்வதால் ஆத்மா அந்தப் பிரகாசத்தைப் பெறுகின்றார். ஒரு மாணவனை அந்தளவுக்குப் பிரகாசிக்கச் செய்வதற்காக பாபா சிலவேளைகளில் சிலரில் பிரவேசிக்கிறார். தாயும், தந்தையும் ஆகிய இருவருமே சிலவேளையில் ஞானத்திலும், சிலவேளையில் யோகத்திலும் உதவி செய்கிறார்கள். தந்தை எப்பொழுதும் சரீரமற்றவர். அவருக்குச் சரீரம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. எனவே தந்தையால் உங்களுக்கு இரண்டினதும் பலத்தின் (ஞானம், யோகம்) மூலம் உங்களுக்கு உதவி செய்ய முடியும். யோகம் இல்லாவிட்டால் நீங்கள் எவ்வாறு அந்தப் பலத்தைப் பெறுவீர்கள்? எவரேனும் ஒருவர் யோகியா அல்லது ஞானியா எனப் புரிந்துகொள்ள முடியும். பாபா நாளுக்கு நாள் யோகம் பற்றிய புதிய விடயங்களை விளங்கப்படுத்துகிறார். முன்னர், அவர் இதை விளங்கப்படுத்தவில்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இப்போது பாபா உங்களைச் சகோதர, சகோதரிகள் எனும் உறவுமுறையிலிருந்து அகற்றி சகோதரத்துவப்; பார்வையே (சகோதரன், சகோதரன் என்னும் பார்வை) இருக்கும் வகையில்; மிகவும் சக்திவாய்ந்த முறையில் ஈடேற்றுகின்றார். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். இது மிகவும் மேன்மையான பார்வை ஆகும். இம் முயற்சி இறுதி வரை தொடர வேண்டும். நீங்கள் சதோபிரதான் ஆகும் பொழுது உங்கள் சரீரத்தை நீக்குவீர்கள். எனவே உங்கள் முயற்சிகளை இயலுமான வரை அதிகரியுங்கள். இது முதியவர்களுக்கும் இலகுவானதாகும். நாங்கள் இப்பொழுது நிச்சயமாக வீடு திரும்;ப வேண்டும். இளைஞர்கள் ஒருபொழுதும் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். முதியவர்கள் ஓய்வு ஸ்திதியில் இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இந்த ஞான விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. அது அவ்வாறு வளரும்போது முழு விருட்சமும் தயாராகுகிறது. முட்கள் மாற்றமடைந்து, சிறியதொரு புதிய விருட்சத்தின் மலர்கள் உருவாக்கப்பட வேண்டும். அது புதியதாகி, பின்னர் மீண்டும் பழையதாகும். முதலிலே விருட்சம் சிறியதாக இருந்து பின்னர் அது தொடர்ந்தும் வளர்கின்றது. அது வளர்ந்து இறுதியில் முட்களைக் கொண்டிருக்கிறது. முதலில் மலர்களே இருக்கின்றன் அதன் பெயரே சுவர்க்கம் என்பதாகும். பின்னர், அந்த நறுமணமும், சக்தியும் இருப்பதில்லை. முட்களிலே எந்த நறுமணமும் கிடையாது. சாதாரண மலர்கள் அந்தளவு நறுமணத்தைக் கொண்டிருப்பதில்லை. தந்தையே பூந்தோட்டத்தின் அதிபதியும், படகோட்டியும் ஆவார். அவர் அனைவரது படகையும் அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றார். விவேகமான, புத்திசாலிக் குழந்தைகளினால், அவர் எவ்வாறு படகை அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றார் என்பதையும், அவர் உங்களை எங்கே அழைத்துச் செல்கின்றார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்ளாதவர்கள் முயற்சியும் செய்ய மாட்டார்கள். அது வரிசைக்கிரமமானது. சில ஆகாயவிமானங்கள் ஒலியை விட வேகமாகப் பயணிக்கின்றன. ஓர் ஆத்மா எவ்வாறு பறக்கின்றார் என்பதை எவரும் அறியவும் மாட்டார்கள். ஆத்மா ரொக்கட்டை விடவும் வேகமாகப் பறக்கிறார். ஆத்மாவைப் போன்று வேகமானது எதுவும் இல்லை. அவர்கள் வேகமாகச் செல்லக்கூடிய வகையில் அத்தகைய எரிபொருளை ரொக்கட்டுகளுக்கு இடுகின்றார்கள். அவர்கள் விநாசத்திற்கான பல்வேறு போர்த் தளபாடங்களையும் தயாரித்துள்ளார்கள். அவர்கள் நீராவிக்கப்பல்களிலும், ஆகாயவிமானங்களிலும்கூட குண்டுகளை எடுத்துச் செல்கின்றார்கள். இந்நேரத்தில்;, அவர்கள் சகலவிதமான ஆயத்தங்களையும் முற்கூட்டியே செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் அவர்கள் இவ்வாறு எழுதுகின்றார்கள்: நாங்கள் அக் குண்டுகளை உபயோகிக்கமாட்டோம் என்று எங்களால் கூற முடியாது. தாங்கள் அக் குண்டுகளை உபயோகிப்பது சாத்தியமாகலாம் என்றே அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். இந்த ஆயத்தங்கள் அனைத்தும் செய்யப்படுகின்றன. விநாசம் நிச்சயமாக இடம்பெறவேண்டும். குண்டுகள் உபயோகிக்கப்படாமல் இருப்பதும், விநாசம் இடம்பெறாமல் இருப்பதும் அசாத்தியமாகும். உங்களுக்கு ஒரு புதிய உலகம் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. இது நாடகத்திலே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். 'வேடனுக்குக் கொண்டாட்டம், இரைக்குத் திண்டாட்டம்" எனக் கூறப்படுகின்றது. நாடகத்திற்கு ஏற்ப அனைவரும் மரணிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் ஞானத்தைக் கொண்டிருப்பதினால், தளம்பலடைய மாட்டீர்கள், ஆனால், அனைத்தையும் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிக்கிறீர்கள். அழ வேண்டிய தேவையில்லை. அனைவரும் தங்களுக்குரிய நேரத்தில் தங்கள் சரீரத்தை நீக்க வேண்டும். உங்களது அடுத்த பிறவியை இராச்சியத்தில் பெறுவீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். 'நான் ஓர் இளவரசன் ஆகுவேன்". ஆத்மா இதனை அறிந்திருப்பதினால், அவர் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு இன்னொன்றைப் பெறுகின்றார். ஒரு பாம்பும் ஆத்மாவைக் கொண்டுள்ளது. அது கூறும்: நான் ஒரு தோலை நீக்கி, இன்னொன்றைப் பெறுகின்றேன்;; சிலவேளைகளில், அதுவும் தனது சரீரத்தை நீக்கி, மீண்டும் ஒரு பாம்புக்குட்டி ஆகும். குழந்தைகளும் பிறப்பெடுக்கிறார்கள். அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தும் கடையப்பட வேண்டும். தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்வதே பிரதான விடயமாகும். குழந்தைகள் தங்கள் தாயையும் தந்தையையும் பற்றிக் கொள்வதைப் போன்று, ஆத்மாக்களாகிய நீங்களும், உங்கள் புத்தியின் யோகத்தின் மூலம் தந்தையை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு ஞானத்தைக் கிரகிக்கின்றீர்கள் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சோதிக்க வேண்டும். நாரதரின் உதாரணம் உள்ளது. பக்தர்கள் ஞானத்தைப் பெறும்வரை அவர்களால் தேவர்கள் ஆகமுடியாது. இது இலக்ஷ்மியைத் திருமணம் செய்தல் என்ற கேள்வி மாத்திரமல்ல் ஞானத்தைப் புரிந்துகொள்வதற்கான கேள்வியும் ஆகும். நீங்கள் சதோபிரதானாக இருந்தபோது, முழு உலகத்தையும் ஆட்சி செய்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீண்டும் சதோபிரதான் ஆகுவதற்கு இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் உண்மையான சக்தியைச் சேர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் உண்மையான யோகம் செய்வதற்கு முயற்சி செய்து வந்தீர்கள். உங்களால் எவ்வளவுக்கு விளங்கப்படுத்த முடியும் எனவும், நீங்கள் எவ்வளவுக்குச் சரீர உணர்விலிருந்து வெளிவருகிறீர்கள் எனவும் நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். ஆத்மாவாகிய நான் இச் சரீரத்தை நீக்கி, இன்னொன்றைப் பெறுகிறேன். ஆத்மாவாகிய நான் என்னுடைய இச் சரீரத்தின் மூலம் செயற்படுகிறேன். இவை என்னுடைய அங்கங்கள். நடிகர்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் பாகங்களை நடிக்கிறோம். இது இந்த எல்லையற்ற நாடகத்தில் உள்ள ஒரு பெரிய விளையாட்டு ஆகும். இந்த நாடகத்தில் உள்ள நடிகர்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். 'இதில் பிரதான நடிகர்கள் யார்? முதற்தரத்தினர், இரண்டாந்தரத்தினர், மூன்றாந்தரத்தினர் யார்?" என நீங்கள் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தந்தையிடமிருந்து அறிந்துள்ளீர்கள். நீங்கள் படைப்பவரிடமிருந்து படைப்பு பற்றிய ஞானத்தைப் பெறுகிறீர்கள். படைப்பவர் வந்து, தன்னையும் தனது படைப்பையும் பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். இது அவர் பிரவேசித்துள்ள அவரது இரதம் ஆகும். எனவே இச் சரீரத்தில் இரு ஆத்மாக்கள் இருப்பதாக நீங்கள் கூறுவீர்கள். சரீரத்தை விட்டுப் பிரிந்த ஆத்மாவை வரவழைத்து, அவர் வரும் பொழுது உணவு படைப்பது ஒரு பொதுவான விடயம் ஆகும். முன்னர் பலர் இவ்வாறு வருவதும் அவர்களிடம் வினாக்கள் வினவப்படுவதும் வழக்கமாக இருந்தது. அவர்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டார்கள். இப்பொழுதும் சிலரால் தாங்கள் முன்னைய பிறவியில் யாராக இருந்தார்கள் என்பதை உங்களுக்குக் கூற இயலுகின்றது. எவராலும் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிக் கூறமுடியாதுள்ளது; அவர்களால் உங்களுக்குக் கடந்த காலத்தைப் பற்றி மாத்திரமே கூறமுடியும். அனைவரையும் இதில் நம்ப முடியும் என்றில்லை. பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது மௌனத்தில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் ஞானத்திலும் யோகத்திலும் சக்திவாய்ந்தவர்களாகும் பொழுது, நீங்கள் உறுதியானவர்களாகவும் திடகாத்திரமானவர்களாகவும் (ளழடனை) ஆகுவீர்கள். தற்பொழுது குழந்தைகளாகிய உங்களில் பலர் கள்ளங்கபடமற்றவர்களாக இருக்கிறீர்கள். பாரதவாசிகளாக இருந்த தேவர்கள் மிகவும் திடகாத்திரமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் செல்வத்தில் மிதந்தார்கள். இப்பொழுது அவர்கள் வெறுமையாகி இருக்கிறார்கள். அவர்கள் வளமாக (ளழடஎநவெ) இருந்தார்கள், நீங்கள் வளமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். எப்படி இருந்த பாரதம் இப்பொழுது எப்படியாகிவிட்டது என்பது உங்களுக்குத் தெரியும். தானியமோ, தண்ணீரோ அல்லது எதுவுமே இருக்காது என்பதால், மக்கள் பட்டினியில் மரணிப்பார்கள். சில இடங்களில் தொடர்ந்தும் வெள்ளப் பெருக்கு ஏற்படும், மற்றைய இடங்களில் ஒரு துளி நீரும் .இருக்காது. இந்நேரத்தில் துன்ப மேகங்களே இருக்கின்றன. சத்தியயுகத்தில், சந்தோஷ மேகங்கள் இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த நாடகத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். இது வேறெவருக்கும் தெரியாது. பட்ஜ்ஜைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிகவும் நல்லது: ஒருவர் எல்லைக்குட்பட்ட பௌதீகத் தந்தை, ஆனால் அவரோ அப்பாலுள்ள எல்லையற்ற தந்தையாவார். இச் சங்கமயுகத்தில், ஒருமுறை மாத்திரமே இத் தந்தை உங்களுக்கு உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுத்து, புதிய உலகைப் படைக்கிறார். இது கலியுகத்து உலகம், இது நிச்சயமாகச் சத்தியயுகமாக ஆகும். நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் இருக்கிறீர்கள். உங்களுடைய இதயம் சுத்தமாக இருந்தால், உங்களுடைய ஆசைகள் பூர்த்தி செய்யப்படும். 'நான் ஏதாவது தீமை செய்தேனா? நான் எனக்குள்ளே எவரைப் பற்றியும் விகார எண்ணங்கள் எதனையேனும் கொண்டிருந்தேனா? நான் யார் என்பதை அறிந்து அப்போதையில் நிலைத்திருந்தேனா அல்லது நான் எனது நேரத்தை வம்பளப்பதில் வீணடித்தேனா?" என ஒவ்வொரு நாளும் உங்களையே வினவுங்கள். 'என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்" என்பதே தந்தையின் கட்டளையாகும்! நீங்கள் நினைவுசெய்யாவிடில், தந்தைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

 
தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானத்தினதும் யோகத்தினதும் போதையில் நிலைத்திருந்து, உங்கள் இதயத்தைச் சுத்தமாக வைத்திருங்கள். வீணான எண்ணங்களிலும் வம்பளத்தலிலும் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

2. ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள்; நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இதை மிக உறுதியாகப் பயிற்சி செய்யுங்கள். சரீரம் அற்றவர்கள் ஆகுங்கள். உங்களை உங்கள் ஆதி தர்மத்தில் ஸ்திரப்படுத்தி, தந்தையை நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தீங்கு விளைவிக்கின்ற எண்ணங்கள் எதனையும் முடித்து விடுகின்ற, உங்களை அவதூறு செய்பவர்களையும் ஈடேற்றுகின்ற ஒரு ஞானமுள்ள ஆத்மாவாக இருப்பீர்களாக.

ஒருவர் உங்களை அவதூறு செய்தாலும், உங்களுக்குத் தீங்கு விளைவித்தாலும் உங்களைத் தினமும் அவமரியாதை செய்தாலும் உங்கள் மனதில் அவருக்கான வெறுப்பு உணர்வுகள் எதுவும் இல்லாதிருக்கட்டும். உங்களை அவதூறு செய்தவர்களை ஈடேற்றுவது ஞானமுள்ள ஆத்மாக்களின் கடமை ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் 63 பிறவிகளாகத் தந்தையை அவதூறு செய்தாலும், தந்தை உங்களை நன்மையளிக்கும் பார்வையுடனேயே பார்த்தார். எனவே தந்தையைப் பின்பற்றுங்கள். ஞானமுள்ள ஆத்மா என்பதன் அர்த்தம் அனைவருக்காகவும் நன்மை அளிக்கும் உணர்வுகளைக் கொண்டிருப்பது என்பதாகும். சிறிதளவேனும் தீங்கு விளைவிக்கின்ற எண்ணம் இல்லாதிருக்கட்டும்.

சுலோகம்:
மன்மனபவ எனும் ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்துங்கள், நீங்கள் அப்பொழுது பிறர் மனதின் உள்நோக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.