02.02.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.11.85     Om Shanti     Madhuban


கடவுளின் பாக்கியசாலிக் குழந்தைகளின் பண்புகள்.


பாப்தாதா குழந்தைகள் அனைவரினதும் நெற்றிகளில் பாக்கிய ரேகைகளைப் பார்க்கிறார். குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் நெற்றியிலும் பாக்கிய ரேகைகள் உள்ளன. ஆனால், தந்தையான இறைவனுக்கு நீங்கள் சொந்தமான வேளையில் இருந்து, சில குழந்தைகளின் ரேகைகள் தெளிவாக உள்ளன. ஆனால் ஏனையோரின் ரேகைகள் தெளிவற்றவையாக உள்ளன. இறைவன் என்றால் பாக்கியத்தை அருள்பவர். இறைவன் என்றால் அருள்பவர். இதனாலேயே, நீங்கள் குழந்தைகள் ஆகும்போது, நீங்கள் அனைவரும் உங்களின் பாக்கியத்தைக் கோருவதற்கான உரிமையை நிச்சயமாகக் கோருகிறீர்கள். அதாவது, உங்களின் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். எவ்வாறாயினும், உங்களின் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற ஆஸ்தியைப் பயன்படுத்துவதில், அதைச் சேவைக்காகப் பயன்படுத்தி அதை மேன்மையானதாகவும் தெளிவாகவும் ஆக்குவதில் நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். ஏனெனில், நீங்கள் உங்களின் பாக்கியத்தை உங்களுக்காகவும் சேவைக்காகவும் அதிகளவில் பயன்படுத்தும் அளவிற்கு, அது அதிகரிக்கும். அதாவது, அந்த ரேகை தெளிவானது ஆகும். தந்தை ஒரேயொருவரே. அவர் அனைவருக்கும் ஒரேமாதிரியாகவே கொடுக்கிறார். தந்தை வரிசைக்கிரமமாகப் பாக்கியத்தைப் பகிர்ந்தளிப்பதில்லை. ஆனால், தமது பாக்கியத்தை உருவாக்குபவர்கள், அதாவது, பாக்கியசாலி ஆகவிருப்பவர்கள், வரிசைக்கிரமம் ஆகுகிறார்கள். ஏனெனில், அவர்கள் தமது கொள்ளளவிற்கேற்பவே மகத்தான பாக்கியத்தை அடைகிறார்கள். இதனாலேயே, சிலரின் ரேகைகள் தெளிவாக உள்ளன. ஏனையவர்களின் ரேகைகள் தெளிவாக இருப்பதில்லை. தெளிவான ரேகையைக் கொண்ட குழந்தைகள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தங்களைப் பாக்கியசாலிகளாகக் கருதுவார்கள். இத்துடன், ஏனையவர்களும் அவர்களின் முகங்களில் இருந்தும் செயல்களில் இருந்தும் தமது பாக்கியத்தை அனுபவம் செய்கிறார்கள். இத்தகைய பாக்கியசாலிக் குழந்தைகளைக் காணும் மற்றவர்கள், இந்த ஆத்மாக்கள் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களின் பாக்கியம் எப்போதும் மேன்மையானது எனக் கூறுகிறார்கள். உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் என்னை பகவானின் (பாக்கியத்தை உருவாக்கும் இறைவன்) குழந்தையாக அனுபவம் செய்கிறேனா? அதாவது, நான் செய்யும் அனைத்திலும் பாக்கியவானாகக் (அதிர்ஷ்டசாலி) கருதுகிறேனா? பாக்கியம் உங்களின் ஆஸ்தி. உங்களின் ஆஸ்தியை நீங்கள் பெறாமல் விடுவது என்பது சாத்தியமில்லை. நீங்கள் உங்களின் பாக்கியத்தை உங்களின் ஆஸ்தியாக அனுபவம் செய்கிறீர்களா? அல்லது, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளதா? ஆஸ்தி இலகுவாகப் பெறப்படுகிறது. அதற்குக் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. உலகிலும், ஒரு குழந்தைக்கு இயல்பாகவே அவரின் தந்தையின் பொக்கிஷங்களுக்கும் ஆஸ்திக்குமான உரிமை இருக்கும். தனது தந்தையின் ஆஸ்தியைப் பெற்ற போதையும் அவரிடம் இருக்கும். உங்களுக்கும் இத்தகைய பாக்கியத்தின் போதை உள்ளதா? அல்லது அது உயர்ந்து மீண்டும் குறைகிறதா? உங்களிடம் அழியாத ஆஸ்தி உள்ளது. எனவே, உங்களிடம் அதிகளவு போதை உள்ளது! ஒரு பிறவி மட்டுமன்றி, உங்களிடம் பல பிறவிகளின் பாக்கியம் உங்களின் பிறப்புரிமையாக உள்ளது. நீங்கள் இதை மகத்தான பிரகாசத்துடன் பேசுகிறீர்கள். மற்றவர்கள் எப்போதும் உங்களின் புலப்படும் பாக்கியத்தின் பிரகாசத்தைக் காணக்கூடியதாக இருக்க வேண்டும். உங்களிடம் பிரகாசமும் ஆன்மீக போதையும் உள்ளதா? அது அமிழ்ந்துள்ளதா, அல்லது வெளிப்பட்டுள்ளதா? பாக்கியசாலி ஆத்மாவின் அடையாளம், அந்தப் பாக்கியசாலி ஆத்மா சதா ஒரு மடியின்மீது பராமரிக்கப்படுவார், அவர் கம்பளத்தில் நடப்பார், ஊஞ்சல்களில் ஆடுவார், சேற்றில் இறங்க மாட்டார். இத்தகையதோர் ஆத்மாவின் பாதங்கள் ஒருபோதும் அழுக்காவதில்லை. அந்த மக்கள் கம்பளங்களில் நடப்பார்கள். ஆனால், நீங்களோ உங்களின் புத்திகளின் பாதங்களைப் பூமியில் வைத்திருப்பதற்குப் பதிலாக, தேவதைகளின் உலகில் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் உங்களின் புத்தியின் பாதங்களை இந்தத் தூசு படிந்த பழைய உலகில் வைப்பதில்லை. அதாவது, உங்களின் புத்திகளை அழுக்காக அனுமதிப்பதில்லை. பாக்கியசாலிகள் களிமண்ணால் செய்த விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடுவதில்லை. அவர்கள் எப்போதும் இரத்தினங்களுடனேயே விளையாடுகிறார்கள். பாக்கியசாலி ஆத்மாக்கள் சதா நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே, அவர்களிடம் எப்போதும் முற்றிலும் சகல ஆசைகளை அறியாத ஸ்திதி காணப்படும். பாக்கியசாலி ஆத்மா சதா மகாதானியாகவும் புண்ணியாத்மாவாகவும் ஆகித் தொடர்ந்து மற்றவர்களின் பாக்கியத்தை உருவாக்குகிறார். பாக்கியசாலி ஆத்மா எப்போதும் தனது கிரீடம், சிம்மாசனம், திலகத்தை அணிந்திருப்பார். பாக்கியசாலி ஆத்மா, பாக்கியத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் அளவிற்குத் துறவியாகவும் இருப்பார். துறவறம் பாக்கியத்தின் அடையாளம் ஆகும். துறவறம் உங்களின் பாக்கியத்தை மிகவும் தெளிவாக ஆக்குகிறது. பாக்கியசாலி ஆத்மா எப்போதும் இறைவனுக்குச் சமமாக, அசரீரியாகவும் அகங்காரம் அற்றவராகவும் விகாரம் அற்றவராகவும் இருப்பார். இத்தகையதோர் ஆத்மா சதா இந்த மூன்று தகைமைகளாலும் நிரம்பியிருப்பார். நீங்கள் இந்த அடையாளங்கள் அனைத்தையும் உங்களுக்குள் அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் பாக்கியசாலிகளின் பட்டியலில் இருப்பவர்கள், அல்லவா? எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் கொள்ளளவிற்கேற்ப இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் சகல சக்திகளாலும் நிரம்பியுள்ளீர்களா? நீங்கள் அதிபதிகள், அல்லவா? தந்தையின் புகழில், அவர் கொள்ளளவிற்கேற்பவர் என்றோ அல்லது வரிசைக்கிரமமானவர் என்றோ நீங்கள் ஒருபோதும் சொல்ல மாட்டீர்கள். அவர் எப்போதும் சகல சக்திகளாலும் நிரம்பியிருப்பவர் என்றே நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் சகல சக்திகளும் கொண்டுள்ள மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆயின், நீங்கள் ஏன் கொள்ளளவிற்கேற்ப ஆகுகிறீர்கள்? நீங்கள் சதா சகல சக்திகளும் கொண்டவர்கள். கொள்ளளவிற்கேற்ப என்ற வார்த்தையை மாற்றுங்கள். எப்போதும் சகல சக்திகளும் நிரம்பியவர்கள் ஆகுவதுடன் மற்றவர்களையும் அவ்வாறே ஆக்குங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

எந்தெந்தப் பிராந்தியங்கள் வந்துள்ளன? நீங்கள் அனைவரும் ஆசீர்வாதங்களின் பூமியை வந்தடைந்து, உங்கள் மடிகளை ஆசீர்வாதங்களால் நிரப்பியுள்ளீர்கள், அல்லவா? ஆசீர்வாதங்களின் பூமியின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு நடவடிக்கையும் விசேடமான ஆசீர்வாதத்தால் நிரம்பியிருக்கும். நீங்கள் யாகபூமியான இங்கு வரும்போது, நீங்கள் காய்கறி வெட்டினால் என்ன, தானியங்களைச் சுத்தம் செய்தாலென்ன, இவை இரண்டும் யக்ஞ சேவையின் ஆசீர்வாதங்களால் நிரம்பியிருக்கும். உதாரணமாக, மக்கள் யாத்திரை செல்லும்போது, ஆலயங்களைச் சுத்தம் செய்வதை மகத்தான புண்ணியச் செயலாக அவர்கள் கருதுகிறார்கள். இந்த மகா யாத்திரைத்தலத்தில், அல்லது இந்த ஆசீர்வாதபூமியில் ஒவ்வொரு செயலும் ஒவ்வோர் அடியும் வேறு எதுவும் அன்றி ஆசீர்வாதங்களாலேயே நிரம்பியுள்ளது. நீங்கள் உங்களின் மடிகளை எந்தளவிற்கு நிரப்பியுள்ளீர்கள்? நீங்கள் உங்களின் மடிகளை முற்றாக நிரப்பிக் கொண்டு திரும்பிச் செல்வீர்களா? அல்லது உங்களின் கொள்ளவிற்கேற்ப மட்டுமே நிரப்புவீர்களா? நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்திருந்தாலும், மேலாவைக் கொண்டாடுவதற்காகவே வந்துள்ளீர்கள். மதுவனத்தில், ஓர் எண்ணமோ அல்லது ஒரு விநாடியோ வீணாக்கப்படக்கூடாது. இங்கு சக்திசாலி ஆகுகின்ற இந்தப் பயிற்சியானது, உங்களின் சொந்த இடங்களிலும் உங்களுக்கு உதவி செய்யும். படிப்பும் குடும்பமும்: இந்தப் படிப்பில் இருந்து நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் குடும்பத்திடமிருந்து விசேடமான அனுபவத்தைப் பெறுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

பாப்தாதா சகல பிராந்தியங்களையும் சேர்ந்தவர்களுக்கு ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் மகாதானிகளாகவும் ஆகுவதற்குப் பாராட்டுக்களை வழங்குகிறார். மக்களின் பண்டிகை இப்போது முடிவடைந்துவிட்டது. ஆனால் உங்களிடமோ உற்சாகம் நிறைந்த பண்டிகை எப்போதும் உள்ளது. உங்களிடம் எப்போதும் மகத்தான நாளே உள்ளது. இதனாலேயே, ஒவ்வொரு நாளும் உங்களிடம் வாழ்த்துக்கள் உள்ளன. வாழ்த்துக்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. மகாராஷ்டிரா என்றால், நீங்கள் மகத்தானவர்களாகி எப்போதும் உங்களின் மடிகளை ஆசீர்வாதங்களால் நிரப்புவதுடன் மற்றவர்களையும் மகத்தானவர்கள் ஆக்குகிறீர்கள். கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மலர்ச்சிநிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். அத்துடன் உங்களின் மலர்ச்சிநிறைந்த முகங்களால் நீங்கள் மற்றவர்களையும் மலர்ச்சிநிறைந்தவர்கள் ஆக்குகிறீர்கள். தொடர்ந்து உங்களின் மடிகளை நிரப்புங்கள். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்போதும் குளிர்மை நதிகளைப் போல் குளிர்மைக்கான ஆசீர்வாதத்தைக் கொடுப்பீர்கள். குளிர்மை தேவிகள் ஆகி, மற்றவர்களையும் குளிர்மை தேவிகள் ஆக்குவீர்கள். அந்தக் குளிர்மையால், எப்போதும் அனைவரின் சகல வகையான துன்பங்களையும் தொடர்ந்து நீக்குங்கள். உங்களின் மடிகளை இத்தகைய ஆசீர்வாதங்களால் நிரப்புங்கள். அச்சா.

மேன்மையான பாக்கியத்திற்கான தெளிவான ரேகைகளை சதா கொண்டிருப்பவர்களுக்கும், தந்தையைப் போல் சதா சகல சக்திகளாலும் நிரம்பியிருப்பவர்களுக்கும், முழுமையான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், சதா இறை பிரகாசத்தைக் கொண்டிருப்பதுடன், தமது பாக்கியத்தின் ஆன்மீக போதையைப் பேணுபவர்களுக்கும், தமது ஒவ்வொரு செயலாலும் பாக்கியத்தை உருவாக்குவதுடன், மற்றவர்களையும் பாக்கியத்தின் ஆஸ்தியைக் கோரச் செய்பவர்களுக்கும், இத்தகைய மேன்மையான பாக்கியசாலி, மாஸ்ரர் இறை குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும். அச்சா.

அவ்யக்த பாப்தாதா மூத்த தாதிகளைச் சந்திக்கிறார்:
ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை பாபாவுடன் முன்னேறுபவர்கள் அனைவரினதும் சிறப்பியல்பானது, தந்தை பிரம்மா ஒவ்வொரு செயலையும் அனுபவம் செய்து, அந்த அனுபவங்களின் அதிகாரத்துடன் இராச்சியத்தின் அதிகாரத்தைப் பெற்றதைப் போன்று, நீண்ட காலமாக நீங்கள் அனைவரும் பெற்றுள்ள ஒவ்வொரு வகையான அனுபவத்தின் அதிகாரத்தால், நீங்களும் நீண்ட காலத்திற்கு இராச்சிய அதிகாரத்தில் சகபாடிகளாக இருப்பீர்கள். உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்த எண்ணம், எங்கு இருக்கச் சொன்னாலும், அல்லது எவ்வாறு அசையச் சொன்னாலும், நாம் அதற்கேற்பவே செய்து, தந்தையுடன் திரும்பிச் செல்வோம் என்பதே ஆகும். எனவே, ஒன்றாகச் செல்வோம் என்ற முதலாவது சத்தியத்தை பாப்தாதா நிறைவேற்ற வேண்டியுள்ளது. நீங்களும் தந்தை பிரம்மாவுடனேயே இருக்கப் போகிறீர்கள். நீங்கள் இராச்சியத்தை ஆள்வதில் அவருடன் இருப்பீர்கள். பக்தி மார்க்கத்திலும் அவருடன் இருப்பீர்கள். இந்த வேளையில் உங்களின் புத்திகளில் எந்தளவிற்கு சதா சகவாசம் உள்ளதோ, அதற்கேற்பவே, நீங்கள் சதா அவருடன் இராச்சியத்தில் இருப்பீர்கள். நீங்கள் இப்போது சிறிது தொலைவில் இருந்தால், சில பிறவிகளில் நீங்கள் தொலைவில் இருப்பீர்கள். ஏனைய பிறவிகளில் நெருக்கமாக இருப்பீர்கள். எவ்வாறாயினும், சதா தந்தையுடன் இருப்பவர்களின் புத்திகள், அங்கும் அவருடனேயே இருக்கும். பௌதீக ரூபத்தில், நீங்கள் அனைவரும் 14 வருடங்கள் ஒன்றாக இருந்தீர்கள். சங்கமயுகத்தின் 14 வருடங்கள் என்பது பல வருடங்களுக்குச் சமமானது. நீங்கள் சங்கமயுகத்தில் பௌதீக ரூபத்துடன் நீண்ட காலம் தங்கியிருந்தீர்கள். அதுவும் மகத்தான பாக்கியமே. உங்களின் புத்தியால் நீங்கள் தந்தையுடன் இருக்கிறீர்கள். நீங்கள் வீட்டிலும் அவருடன் இருக்கிறீர்கள். இராச்சியத்திலும் அவருடனேயே இருப்பீர்கள். வெகு சிலர் மட்டுமே சிம்மாசனத்திலும் அமர்ந்திருந்தாலும், அவர்கள் நிச்சயமாக இராஜ குடும்பத்துடன் நெருக்கமான உறவுமுறையிலும் நாள்முழுவதற்குமான நேர அட்டவணையிலும் ஒன்றாக இருக்கும் பாகத்தை நடிப்பார்கள். ஆரம்பத்தில் இருந்து தந்தையுடன் இருக்கும் சத்தியம், கல்பம் முழுவதும் தொடரும். பக்தி மார்க்கத்திலும், நீங்கள் நீண்ட காலத்திற்கு ஒன்றாக இருப்பீர்கள். இந்தக் கடைசிப் பிறவியிலேயே சிலர் சிறிது தொலைவில் இருக்கிறார்கள். ஏனையோர் நெருக்கமாக இருக்கிறார்கள். ஆனால், அவ்வாறிருந்தும், நீங்கள் கல்பம் முழுவதும் ஏதாவதொரு ரூபத்தில் அவருடனேயே இருப்பீர்கள். நீங்கள் இத்தகைய சத்தியத்தைச் செய்துள்ளீர்கள், அல்லவா? ஆகவே, உங்களை மக்கள் என்ன பார்வையுடன் பார்க்கிறார்கள்? தந்தையின் ரூபத்திலேயே! பக்தி மார்க்கத்தில், இவை அனைத்தும் இறைவனின் வடிவங்களே என இது குறிப்பிடப்படுகிறது. இது ஏனெனில் நீங்கள் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை உங்களின் ரூபங்களின் மூலமாகப் புலப்படுகிறார். இதனாலேயே, நீங்கள் தந்தையின் ரூபங்கள் என அவர்கள் கூறுகிறார்கள். இதுவே தந்தையுடன் இருப்பவர்களின் சிறப்பியல்பு ஆகும். மற்றவர்கள் உங்களைப் பார்க்கும்போது, அவர்கள் தந்தையை நினைப்பார்கள். அவர்கள் அந்த நபரை நினைக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் தந்தையை நினைப்பார்கள். தந்தையின் நடத்தை, தந்தையின் திருஷ்டி, தந்தையின் செயல்கள் என்பவை உங்களிடமிருந்து அனுபவம் செய்யப்பட வேண்டும். நீங்கள் புலப்படக்கூடாது. ஆனால், தந்தையின் செயல்களும் அவரின் திருஷ்டியும் உங்களிடமிருந்து அனுபவம் செய்யப்பட வேண்டும். இதுவே சமமாக இருக்கும் விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகளின் சிறப்பியல்பு ஆகும். நீங்கள் அனைவரும் அவ்வாறானவர்கள், அல்லவா? மற்றவர்கள் உங்களில் அகப்பட்டுக் கொள்வதில்லை, அல்லவா? இன்னார் மிக நல்லவர் என அவர்கள் கூறுவதில்லை. இல்லை. தந்தை அவரை நல்லவர் ஆக்கியுள்ளார். அவர்கள் உங்களினூடாகத் தந்தையின் திருஷ்டியையும் தந்தையின் பராமரிப்பையும் பெறுகிறார்கள். அவர்கள் உங்களிடமிருந்து தந்தையின் மேன்மையான வாசகங்களைச் செவிமடுக்கிறார்கள். இது உங்களின் சிறப்பியல்பு ஆகும். இதுவே அன்பாகவும் அதேவேளை பற்றற்றவராகவும் இருத்தல் எனப்படுகிறது. நீங்கள் அனைவராலும் நேசிக்கப்படலாம். ஆனால், மற்றவர்களைச் சிறைப்படுத்தும் ஒருவர் ஆகாதீர்கள். தந்தையை நினைப்பதற்குப் பதில், அவர்கள் உங்களை நினைப்பதாக இருக்கக்கூடாது. அல்லது, தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுவதற்காக, அல்லது தந்தையின் மேன்மையான வாசகங்களைச் செவிமடுப்பதற்காக, அவர்கள் உங்களை நினைப்பதாக இருக்கக்கூடாது. இதுவே அன்பாகவும் பற்றற்றவராகவும் இருத்தல் எனப்படுகிறது. இது அத்தகையதொரு குழு, அல்லவா? பௌதீக ரூபத்திடமிருந்து பராமரிப்பைப் பெறுவதற்கு ஏதாவது சிறப்பியல்;பு இருக்க வேண்டும். ஏதாவது சிறப்பியல்பு உள்ளதல்லவா? அவர்கள் உங்களிடம் வரும்போது, எதைக் கேட்கிறார்கள்? தந்தை என்ன செய்தார்? அவர் எவ்வாறு செயற்பட்டார்? இதையே நீங்கள் நினைவு செய்ய வேண்டும், அல்லவா? நீங்கள் இத்தகைய விசேடமான ஆத்மாக்கள். இது தெய்வீக ஒற்றுமை எனப்படுகிறது. அவர்களுக்குத் தெய்வீகத்தை நினைவுபடுத்துவதன் மூலம், நீங்கள் அவர்களைத் தெய்வீகமானவர்கள் ஆக்குகிறீர்கள். இதனாலேயே தெய்வீக ஒற்றுமை (தெய்வீக ஒற்றுமை என அந்தக் குழுவிற்குப் பெயரிடப்பட்டிருந்தது) இருந்தது. நீங்கள் 50 வருடங்களாக அழியாதவர்களாக இருந்துள்ளீர்கள். எனவே, அழியாதவர்களாக இருப்பதற்குப் பாராட்டுக்கள். பலர் வந்தார்கள். பலர் சுற்றுலா சென்றுவிட்டார்கள் (பாபாவை விட்டுச் சென்றுவிட்டார்கள்.) ஆனால் நீங்கள் அனைவரும் அநாதியாக அழியாதவர்களாக இருக்கிறீர்கள். அநாதியாக, நீங்கள் பாபாவுடன் இருக்கிறீர்கள். ஆரம்பத்திலும் நீங்கள் பாபாவுடன் இருந்தீர்கள். நீங்கள் சூட்சும வதனத்தில் பாபாவுடன் இருந்தால், எவ்வாறு சேவை செய்வீர்கள்? குறைந்தபட்சம் நீங்கள் சிறிதளவு ஓய்வு எடுத்தீர்கள். ஆனால், தந்தைக்கு ஓய்வு தேவையில்லை. பாப்தாதா இதில் இருந்தும் விடுபட்டுள்ளார். அவ்யக்த ரூபத்திற்கு ஓய்வு தேவையில்லை. ஆனால், வியக்த் ரூபத்திற்கு (பௌதீகம்) ஓய்வு தேவை. உங்களை இவ்வாறு ஆக்கினால், சகல பணிகளும் பூர்த்தியாகும். அவ்வாறிருந்தும், சேவை செய்வதற்கு உங்களுக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்தால், நீங்கள் தந்தையைப் போல் களைப்பற்றவர் ஆகுகிறீர்கள். அதன்பின்னர் உங்களுக்குக் களைப்பு ஏற்படுவதில்லை. அச்சா.

தாதிஜியுடன் பேசுகிறார் (30ஃ03ஃ85)
தந்தை உங்களைக் குழந்தைப்பருவத்தில் இருந்தே கிரீடம் தரித்தவர் ஆக்கிவிட்டார். நீங்கள் வந்தவுடனேயே பாபா உங்களின் மீது சேவைக்கான பொறுப்புக் கிரீடத்தை அணிவித்துவிட்டார். பின்னர், அவ்வப்போது, எத்தகைய பாகம் நடிக்கப்பட்டாலும், அது யாசகத்திற்குரிய பாகமோ அல்லது மகத்தான களிப்பிற்குரிய பாகமோ, நாடகத்தின்படி, நீங்கள் சகல சந்தர்ப்பங்களிலும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் பாகத்தை ஏற்றுக் கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் அவ்யக்த பாகத்தின் கிரீடத்தை எடுத்துக் கொள்வதற்கும் கருவி ஆகினீர்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்த விசேடமான பாகம் உங்களுக்கு உள்ளது. பாபா பொறுப்பானவராக இருப்பதைப் போல, நீங்கள் சதா உங்களின் பொறுப்பை நிறைவேற்றுபவர். அதனால், பொறுப்பின் கிரீடத்துடனான விசேடமான பாகம் உங்களுக்கு உள்ளது. ஆகவே, இறுதியிலும் அவர் உங்களுக்குத் தனது திருஷ்டியின் மூலம் கிரீடத்தையும் திலகத்தையும் ஏனைய அனைத்தையும் கொடுத்தார். அதனால் உங்களின் ஞாபகார்த்தம் நிச்சயமாகக் கிரீடத்தைக் கொண்டிருக்கும். குழந்தைப்பருவத்திலும், கிருஷ்ணர் ஒரு கிரீடத்துடனேயே காட்டப்படுகிறார். எனவே, ஞாபகார்த்தத்திலும் அவர்கள் கிரீடம் தரித்த குழந்தையையே வழிபடுகிறார்கள். ஏனைய அனைவரும் சகபாடிகள். ஆனால் நீங்கள் கிரீடத்தை அணிந்திருப்பவர். அனைவரும் சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள். ஆனால், சமமாக இருக்கும்போது பொறுப்பை நிறைவேற்றுவது வேறொரு ரூபம் ஆகும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1. குமார்கள்: குமார்கள் என்றால் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பவர்கள் என்று அர்த்தம். அனைத்திலும் மிகப்பெரிய பந்தனம், மனதில் வீணான எண்ணங்களைக் கொண்டிருத்தலே. இந்த பந்தனத்தில் இருந்தும் விடுபடுங்கள். இந்த பந்தனம் உங்களைச் சிலவேளைகளில் கட்டுவதில்லை, அல்லவா? ஏனெனில், எண்ணத்தின் சக்தியே ஒவ்வோர் அடியிலும் வருமானத்தைப் பெறுவதற்கான அடிப்படை ஆகும். எதன் அடிப்படையில் நீங்கள் நினைவு யாத்திரையில் செல்கிறீர்கள்? உங்களின் எண்ணங்களின் சக்தியின் அடிப்படையிலேயே நீங்கள் பாபாவைச் சென்றடைகிறீர்கள். அப்படியல்லவா? நீங்கள் சரீரமற்றவர் ஆகுகிறீர்கள். எனவே, மனதின் சக்தியானது விசேடமானது. வீணான எண்ணங்கள் மனதின் சக்தியைப் பலவீனம் ஆக்குகின்றன. ஆகவே, இந்த பந்தனத்தில் இருந்து விடுபடுங்கள். குமார் என்றால் சதா தீவிர முயற்சியாளர் என்று அர்த்தம். ஏனெனில், பந்தனத்தில் இருந்து விடுபடுபவர்கள் இயல்பாகவே துரித கதியைக் கொண்டிருப்பார்கள். சுமையுடன் இருப்பவர்கள், மெதுவான கதியிலேயே செல்வார்கள். இலேசாக இருப்பவர்கள் எப்போதும் விரைவாகச் செல்வார்கள். இப்போது, காலத்திற்கேற்ப, முயற்சிக்கான காலமும் சென்றுவிட்டது. நீங்கள் இப்போது தீவிர முயற்சியாளராகி, உங்களின் இலக்கை அடைய வேண்டும்.

குமார்களான நீங்கள் உங்களின் வீணான பழைய கணக்குகளை முடித்துவிட்டீர்களா? புதிய கணக்கானது, சக்திசாலியாக இருப்பதற்கான கணக்கு ஆகும். பழைய கணக்கு என்பது வீணானது. எனவே, பழைய கணக்கு முடிந்துவிட்டது. எவ்வாறாயினும், உறவுமுறைகளில், நீங்கள் ஒருபோதும் பழைய கணக்குகளை வைத்திருப்பதில்லை. நீங்கள் பழைய கணக்குகளை முடித்து, தொடர்ந்து முன்னேறி, புதிய கணக்குகளை அதிகரிக்கிறீர்கள். எனவே, இங்கும், நீங்கள் பழைய கணக்குகளை முடித்து, ஒவ்வோர் அடியிலும் அனைத்திலும் புதிதான, சக்திவாய்ந்த கணக்கைச் சதா வைத்துள்ளீர்கள். உங்களின் ஒவ்வோர் எண்ணமும் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். தந்தையைப் போலவே, குழந்தைகளும் இருக்க வேண்டும். தந்தை சக்திசாலி ஆவார். எனவே, குழந்தைகளும் தந்தையைப் பின்பற்றி, சக்திசாலி ஆகவேண்டும்.

2. தாய்மார்கள்: எந்த ஒரு குணத்தில் தாய்மார்கள் விசேடமாக அனுபவம் வாய்ந்தவர்கள்? அந்த விசேடமான நற்குணம் என்ன? (தியாகம், சகிப்புத்தன்மை). வேறு ஏதாவது நற்குணங்கள் உள்ளனவா? தாய்மார்களின் ரூபம் குறிப்பாகக் கருணைநிறைந்தது ஆகும். தாய்மார்கள் கருணைநிறைந்தவர்கள். எல்லையற்ற தாய்மார்களான நீங்கள் எல்லையற்ற ஆத்மாக்களிடம் கருணைகொள்கிறீர்களா? உங்களுக்குள் கருணை பிறக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கருணைநிறைந்தவர்களால் மற்றவர்களுக்குச் சேவை செய்யாமல் இருக்க முடியாது. நீங்கள் கருணைநிறைந்தவர்கள் ஆகும்போது, இயல்பாகவே பல ஆத்மாக்கள் நன்மை அடைவார்கள். இதனாலேயே, தாய்மார்கள் உபகாரிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். உபகாரி என்றால் மற்றவர்களுக்கு நன்மை செய்பவர் என்று அர்த்தம். தந்தை உலக உபகாரியாக இருப்பதைப் போன்று, தாய்மார்களான உங்களுக்கும் தந்தைக்குச் சமமான உபகாரிகள் என்ற விசேடமான பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உற்சாகம் உங்களுக்குள் உள்ளதா? என்னவாக இருந்த நீங்கள் இப்போது என்னவாகி உள்ளீர்கள்? உங்களின் மாற்றத்துடன் நீங்கள் மற்றவர்களுக்காகவும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டுள்ளீர்கள். எல்லைக்குட்பட்ட சேவைக்கும் எல்லையற்ற சேவைக்கும் இடையே உங்களிடம் சமநிலை உள்ளதா? அந்தச் சேவையில் உங்களின் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன. மற்றையது எல்லைக்குட்பட்ட சேவை. நீங்கள் எல்லையற்ற சேவையாளர்கள். சேவைக்காக எந்தளவிற்கு உங்களிடம் ஊக்கமும் உற்சாகமும் உள்ளதோ, அந்தளவிற்கு அதிக வெற்றி கிடைக்கும்.

தாய்மார்கள் தமது தியாகத்தாலும் தவத்தாலும் உலக நன்மைக்குக் கருவிகள் ஆகியுள்ளார்கள். தாய்மார்களின் சிறப்பியல்பு தியாகமும் தவமும் ஆகும். நீங்கள் இந்த இரண்டு சிறப்பியல்புகளுடன் சேவையிலும் மற்றவர்களைத் தந்தைக்குச் சொந்தமாக்குவதிலும் மும்முரமாக இருக்கிறீர்களா? சங்கமயுக பிராமணர்களின் கடமை சேவை செய்வதே ஆகும். பிராமணர்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. பெயரளவில் பிராமணர்களாக இருப்பவர்களுக்கும் நிச்சயமாக ஒன்றுகூடல்கள் உள்ளன. அதில் அவர்கள் கதைகளை வாசிப்பார்கள். எனவே, இங்கும், கதைகள் சொல்வதென்றால் சேவை செய்தல் என்று அர்த்தம். ஆகவே, உலக அன்னையாகி உலகைப் பற்றிச் சிந்தியுங்கள். எல்லையற்ற குழந்தைகளைப் பற்றிச் சிந்தியுங்கள். வீட்டில் வெறுமனே அமர்ந்திருக்காதீர்கள். எல்லையற்ற சேவையாளர்களாகி, சதா முன்னேறுங்கள். நீங்கள் எல்லைக்குட்பட்டதில் 63 பிறவிகளைக் கழித்தீர்கள். இப்போது எல்லையற்ற சேவையில் முன்னேறிச் செல்லுங்கள். அச்சா.

பிரியாவிடை வேளையில் குழந்தைகள் அனைவருக்கும் அன்பும் நினைவுகளும் வழங்குகிறார்.
எங்கும் உள்ள அன்பான, ஒத்துழைக்கும் குழ்நதைகளுக்கு, தயவுசெய்து பாப்தாதாவிடமிருந்து விசேடமான அன்பு நிறைந்த நினைவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று, சதா தடைகளில் இருந்து விடுபட்டவர்களாவும் தடைகளை அழிப்பவர்களாகவும் இருந்து, உலகையும் தடைகளில் இருந்து விடுவிக்கும் பணியைச் செய்யும் குழந்தைகள் அனைவரையும் பாப்தாதா பாராட்டுகிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் சேவையில் எப்போதும் முன்னேற வேண்டும் என்ற மேன்மையான எண்ணம் உள்ளது. இந்த மேன்மையான எண்ணம், உங்களைச் சேவையில் சதா முன்னேறச் செய்கிறது. தொடர்ந்தும் முன்னேறச் செய்யும். இந்தச் சேவையுடன், சுய முன்னேற்றத்திற்கும் சேவையின் முன்னேற்றத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் தொடர்ந்து பாப்தாதாவின் இதயத்தில் இருந்தும் சகல ஆத்மாக்களிடமிருந்தும் நீங்கள் யாருக்குக் கருவிகள் ஆகுகிறீர்களோ, அவர்களிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். எனவே, சமநிலையைப் பேணுவதற்கான ஆசீர்வாதங்களை சதா பெற்றவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். ஒரே வேளையில் சுய முன்னேற்றத்துடன் சேவையில் முன்னேறுவதன் மூலம், உங்களால் இலகுவாக சதா வெற்றி சொரூபம் ஆகமுடியும். ஒவ்வொருவரும் உங்களின் பெயரால் தனித்தனியாக அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அச்சா. ஓம் சாந்தி.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா நிரம்பியுள்ள சந்தோஷப் பொக்கிஷக் களஞ்சியமாகி, அனைவருக்கும் சதா நல்ல செய்திகளைக் கொடுப்பீர்களாக.

நீங்கள் ஒரு சந்தோஷப் பொக்கிஷம் நிரம்பிய பொக்கிஷக் களஞ்சியமாக இருக்கும் ரூபத்தை உங்களின் முன்னால் சதா வைத்திருங்கள். நீங்கள் பெற்றுள்ள எண்ணற்ற, அழியாத பொக்கிஷங்களை உங்களின் விழிப்புணர்வில் கொண்டுவாருங்கள். இந்தப் பொக்கிஷங்களை உங்களின் விழிப்புணர்வில் கொண்டுவருவதன் மூலம், நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். எங்கு சந்தோஷம் உள்ளதோ, அங்கு துன்பங்கள் அனைத்தும் எல்லா வேளைக்கும் இல்லாமல் போய்விடும். பொக்கிஷங்களின் விழிப்புணர்வுடன் ஆத்மா சக்திசாலி ஆகி, வீணானவை அனைத்தையும் முடிக்கிறார். நிரம்பியிருக்கும் ஓர் ஆத்மா ஒருபோதும் எந்த வகையான குழப்பத்திற்கும் உள்ளாக மாட்டார். இத்தகைய ஆத்மா சந்தோஷமாக இருப்பதுடன், மற்றவர்களுக்கும் நல்ல செய்திகளையே கொடுப்பார்.

சுலோகம்:
தகுதிவாய்ந்தவராகவும் இயலுமை உடையவராகவும் ஆகுவதற்கு, கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுங்கள்.