02.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கடவுள் உங்களுடைய நண்பரும், இராவணன் உங்களுடைய எதிரியும் ஆவார்கள். எனவே, நீங்கள் கடவுளை நேசித்து, இராவணனை எரிக்கிறீர்கள்.

கேள்வி:
எக் குழந்தைகள் பிறரிடமிருந்து இயல்பாகவே ஆசீர்வாதங்களைப் பெறுகின்றார்கள்?

பதில்:
நினைவில் நிலைத்திருந்து தங்களைத் தூய்மையாக்குவதுடன், பிறரையும் தங்களைப் போல் ஆக்குகின்ற குழந்தைகளே தொடர்ந்தும் ஏனைய பலரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். அவர்கள் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். உங்களை மேன்மையானவர்கள் ஆக்குவதற்குத் தந்தை ஒரேயொரு ஸ்ரீமத்தையே உங்களுக்குக் கொடுக்கிறார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, சரீரதாரிகள் எவரையும் நினைவு செய்யாதீர்கள், ஆனால் என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்து விட்டது!

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஓம் சாந்தி என்பதன் அர்த்தத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஓம் என்றால் நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம் என்பதாகும். ஆத்மா கண்களுக்குத் தெரிவதில்லை. ஆத்மாவிலேயே நல்ல, தீய சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மா மனதையும், புத்தியையும் கொண்டுள்ளார். புத்தி சரீரத்தினுள் இருப்பதில்லை. ஆத்மாவே பிரதான விடயம். இச் சரீரம் என்னுடையது. எவராலும் ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஆத்மாவே சரீரத்தைப் பார்க்கிறார்; சரீரம் ஆத்மாவைப் பார்ப்பதில்லை. ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, அந்தச் சரீரம் உயிரற்றதாகுகிறது. ஆத்மாவைப் பார்க்க முடியாது, ஆனால் சரீரத்தைப் பார்க்க முடியும். அதுபோலவே, அனைவரும் ஓ தந்தையாகிய கடவுளே எனக் கூவியழைக்கின்ற, ஆத்மாக்களின் தந்தையையும் பார்க்க முடியாது. அவரை உணர்ந்து கொள்ளவோ அல்லது அறிந்துகொள்ளவோ முடியும். ஆத்மாக்களான நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் சரீரங்களில் பிரவேசிக்கும்பொழுது, சகோதரர்கள் என்றோ அல்லது சகோதர, சகோதரிகள் என்றோ கூறப்படுகின்றது. ஆத்மாக்கள் அனைவரும் உண்மையில் சகோதரர்களே. பரமாத்மாவாகிய பரம தந்தையே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாவார். பௌதீகச் சகோதர, சகோதரிகளால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியும். ஒரேயொருவரே ஆத்மாக்களின் தந்தை; அவரைப் பார்க்க முடியாது. தந்தை இப்பொழுது பழைய உலகைப் புதியதாக்க வந்துள்ளார். சத்தியயுகமே புதிய உலகமாக இருந்தது. கலியுகம் இப்பொழுது பழைய உலகமாகும், அது மாறவேண்டும்;. இப்பொழுது பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். ஒரு பழைய வீடானது இடிக்கப்பட்டு, புதியது கட்டப்படுவதைப் போலவே இப்பழைய உலகமும் அழிக்கப்பட வேண்டும். சத்தியயுகத்தைத் தொடர்ந்து திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பவை வந்து, பின்னர் நிச்சயமாகச் சத்தியயுகம் மீண்டும் வர வேண்டும்; உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டும். சத்திய யுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருக்கின்றது. அங்கே சூரிய, சந்திர வம்சங்கள் இருக்கின்றன் அவை இலக்ஷ்மி நாராயணனின் வம்சம் எனவும், இராமர் சீதையின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றன. இது இலகுவானது, இல்லையா? பின்னர் துவாபர, கலியுகங்களிலேயே ஏனைய சமயங்கள் வருகின்றன. தூய்மையானவர்களாக இருந்த தேவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினார்கள்; இதுவே இராவண இராச்சியம் எனப்படுகின்றது. மக்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனின் கொடும்பாவியைத் தொடர்ந்தும் எரித்தாலும், அவன் எரிந்து விடுவதில்லை. அவர்கள் அதனை மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் எரிக்கிறார்கள். அவனே அனைவரினதும் மிகப் பெரிய எதிரி, இதனாலேயே அதை எரிக்கின்ற வழக்கம் இருக்கின்றது. பாரதத்தின் முதன்மையான எதிரி யார்? (இராவணன்). கடவுளே சதா சந்தோஷத்தை அருள்பவராகிய முதன்மையான நண்பர். கடவுளே நண்பர் எனக் கூறப்படுகிறார். இதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை உள்ளது. எனவே கடவுள் நண்பரும், இராவணன் எதிரியும் ஆவார்கள். நண்பராகிய கடவுள் ஒருபொழுதும் எரிக்கப்படுவதில்லை. மற்றவரே எதிரியாவான். இதனாலேயே அவர்கள் பத்துத் தலைகள் உடைய இராவணனின் கொடும்பாவியைச் செய்து, அதனை ஒவ்வொரு வருடமும் எரிக்கிறார்கள். எமக்கு இராம இராச்சியம் வேண்டும் என்று காந்திஜியும் கூறுவதுண்டு. இராம இராச்சியத்தில் சந்தோஷமும், இராவண இராச்சியத்தில் துன்பமும் உள்ளன. இவை அனைத்தையும் இங்கிருந்து விளங்கப்படுத்துபவர் யார்? தூய்மையாக்குபவரான தந்தையே ஆவார். சிவன் பாபாவும், பிரம்மா தாதாவும் ஆவர். பாபா எப்பொழுதும் 'பாப்தாதா" என்றே கையொப்பம் இடுகின்றார். மக்களின் தந்தை (பிரஜாபிதா) பிரம்மா அனைவருக்கும் உரியவர். இவர் ஆதாம்" என்றும் அழைக்கப்படுகிறார். இவர் முப்பாட்டனார் என்றும் அழைக்கப்படுகின்றார். இவரே மனித உலகிலுள்ள மக்களின் தந்தையாவார். பிராமணர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் படைக்கப்படுகிறார்கள், பின்னர் அந்தப் பிராமணர்கள் தேவர்கள் ஆகுகின்றார்கள். தேவர்கள் பின்னர் சத்தியர்கள், வைசியர்கள், சூத்திரர்களாக ஆகுகின்றார்கள். இவரே மனித உலகின் மூதாதையரான, பிரஜாபிதா பிரம்மா என அழைக்கப்படுகின்றார். பிரஜாபிதா பிரம்மாவுக்குப் பல குழந்தைகள் உள்ளனர்; அவர்கள் தொடர்ந்தும் 'பாபா, பாபா" எனக் கூறுகிறார்கள். இவர் சரீரதாரி பாபா, சிவபாபாவோ அசரீரியான பாபா. புதிய மனித உலகம் பிரம்மாவால் படைக்கப்படுகிறது என நினைவுகூரப்படுகின்றது. இப்பொழுது அவை உங்கள் பழைய தோல்கள். இவ்வுலகம் இராவணனது தூய்மையற்ற இராச்சியம். இப்பொழுது இராவணனுடைய பழைய அசுர உலகம் அழிக்கப்படவுள்ளது. அதற்காகவே இந்த மகாபாரத யுத்தம் இருக்கின்றது. பின்னர் சத்திய யுகத்தில் எவருமே எதிரியான இராவணனை எரிக்க மாட்டார்கள். இராவணன் அங்கே இருக்க மாட்டான். இராவணனே துன்ப உலகை உருவாக்கியவன். அதிகளவு செல்வம் உடையவர்களும், பெரிய மாளிகைகளில் வாழ்பவர்களும் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள் என்றில்லை. ஒருவரிடம் மில்லியன்கள் இருந்தபொழுதிலும், அவை அனைத்தும் தூசாகப் போகின்றது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். புதிய உலகில் புதிய சுரங்கங்கள் வெளிப்படும். நீங்கள் அவற்றால் புதிய உலகில் மாளிகைகள் போன்றவற்றைக் கட்டுவீர்கள். இப் பழைய உலகம் இப்பொழுது முடிவடையப் போகின்றது. சற்கதியைப் பெறும்பொருட்டு, மக்கள் பக்தி செய்கிறார்கள். 'நாங்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகிவிட்டதால், வந்து எங்களை தூய்மையாக்குங்கள்!" என்று அவர்கள் கூறுகிறார்கள். விகாரம் நிறைந்தவர்களே தூய்மையற்றவர்கள் எனக் கூறப்படுகிறார்கள். சத்திய யுகத்தில் அனைவரும் விகாரமற்றவர்களாக, முற்றிலும் விகாரமற்றவர்களாக இருக்கிறார்கள். அங்கே குழந்தைகள் யோக சக்தியினால் பிறக்கின்றார்கள். அங்கே விகாரங்கள் இல்லை; அங்கே சரீர உணர்வோ, காமமோ அல்லது கோபமோ இருப்பதில்லை. ஐந்து விகாரங்களும் அங்கு இருப்பதில்லை, இதனாலேயே அவர்கள் அங்கு என்றுமே இராவணனை எரிப்பதில்லை. இங்கே இது இராவண இராச்சியம். தந்தை இப்பொழுது கூறுகிறார்: தூய்மையாகுங்கள்! இத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்படவுள்ளது. ஸ்ரீமத்துக்கு ஏற்ப தூய்மையாக இருப்பவர்களும், தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களும் தங்;களுடைய ஆஸ்தியாகிய உலக இராச்சியத்தைப் பெறுகிறார்கள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. இது இப்பொழுது இராவண இராச்சியமாகும். இது அழிக்கப்பட வேண்டும். இராமருடைய சத்திய யுகத்து இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். சத்தியயுகத்தில் மிகச் சிறிதளவு மனிதர்களே இருக்கிறார்கள். இலக்ஷ்மி நாராயணனுடைய இராச்சியம் இருக்கின்ற டெல்கியே அப்பொழுதும் தலைநகரமாக இருக்கும். சத்திய யுகத்தில் டெல்கி தேவதைகளின் பூமியாக இருந்தது. டெல்கியிலேயே சிம்மாசனம் இருந்தது. டெல்கி இராவண இராச்சியத்தின் தலைநகரமாக இருப்பதுடன், இராம இராச்சியத்தின் தலைநகரமாகவும் இருக்கிறது. எவ்வாறாயினும், இராம இராச்சியத்தில் வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருந்தன. அங்கே எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. தந்தை இப்பொழுது கூறுகிறார்: நீங்கள் உலக இராச்சியத்தை இழந்து விட்டீர்கள். நான் இப்பொழுது அதனை மீண்டும் ஒருமுறை உங்களுக்குத் திரும்பவும் கொடுக்கிறேன். எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்! நீங்கள் மேன்மையானவர்களாக விரும்பினால், சரீரதாரிகள் எவரையுமன்றி, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்;கள், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் என்னிடம் வருவீர்கள்; நீங்கள் எனது கழுத்து மாலையாகி, பின்னர் விஷ்ணுவின் கழுத்து மாலையாகுவீர்கள். மாலையிலுள்ள குஞ்சத்தில் (மலர்) நான் இருக்கின்றேன், பின்னர் இரட்டை மணிகளான பிரம்மாவும் சரஸ்வதியும் உள்ளனர். அவர்கள் பின்னர் சத்தியயுகத்தின் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி ஆகுகின்றார்கள். பின்னர் மாலையானது வரிசைக்கிரமமாகச் சிம்மாசனத்தில் அமர்பவர்களுக்கு உரியதாகுகின்றது. பிரம்மா, சரஸ்வதி, மற்றும் பிராமணர்களாகிய உங்கள் மூலமே, நான் இந்தப் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகிறேன். முயற்சி செய்பவர்களின் ஞாபகார்த்தங்களே உருவாக்கப்படுகின்றன. அது உருத்திரரின் மாலையும், இது விஷ்ணுவின் மாலையும் ஆகும். உருத்திர மாலை ஆத்மாக்களைக் கொண்டுள்ளது, பின்னர் விஷ்ணுவின் மாலை மனிதர்களை கொண்டுள்ளது. பிரம்மாந்தம் எனவும் அழைக்கப்படுகின்ற, அசரீரியான பரந்தாமமே ஆத்மாக்களின் வசிப்பிடம். ஆத்மாக்கள் முட்டை வடிவம் உடையவர்களல்ல் ஆத்மாக்கள் சின்னஞ்சிறிய புள்ளிகளைப் போன்றவர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவருமே அந்த இனிய வீட்டில் வசிப்பவர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அங்கே தந்தையுடன் வசிக்கின்றோம். அதுவே முக்திதாமம் ஆகும். மனிதர்கள் அனைவரும் முக்தி தாமத்துக்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் ஒருவராலும் வீடு திரும்ப முடியாதுள்ளது. ஒவ்வொருவரும் தனது பாகத்தை நடிப்பதற்காக வரவேண்டும். அதுவரை தந்தை தொடர்ந்தும் உங்களைத் தயார்ப்படுத்துகிறார். நீங்கள் தயாரானதும் இன்னமும் (மேலே) இருக்கின்ற ஆத்மாக்கள் கீழிறங்கி வருவார்கள். அப்பொழுது அனைத்தும் அழிக்கப்படும். நீங்கள் பின்னர் புதிய உலகத்துக்குச் சென்று ஆட்சிசெய்வீர்கள், பின்னர் சக்கரம் வரிசைக்கிரமமாகச் சுழலும் (சத்தியயுகம், திரேதாயுகம்...). இறுதியில் அந்த நாளும் வந்துவிட்டது என்ற பாடலை நீங்கள் செவிமடுத்தீர்கள். இப்பொழுது நரகவாசிகளாக உள்ள பாரதமக்கள் பின்னர் சுவர்க்கவாசிகள் ஆகுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எஞ்சியுள்ள ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்திற்குத் திரும்பிச் செல்வார்கள். நீங்கள் சிறிதளவை மாத்திரம் விளங்கப்படுத்த வேண்டும்: அல்பாவே பாபா, பீற்றாவே இராச்சியம். முதலாவது நபரே இராச்சியத்தைப் பெறுகிறார். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அதே இராச்சியத்தை ஸ்தாபிக்கிறேன். 84 பிறவிகளை எடுத்ததனால் நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இராவணனே உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்கியவன். அப்படியானால் உங்களை யார் தூய்மையாக்குவார்;? தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்ற, கடவுளே ஆவார். நீங்கள் எவ்வாறு தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்களாகவும், தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகவும் ஆகுகின்றீர்கள் என்ற முழு வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நிகழும். இந்த விநாசம் அதற்காகவே உள்ளது. பிரம்மாவின் வயது 100 வருடங்கள் எனச் சமயநூல்களில் கூறப்பட்டுள்ளது. தந்தை உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுப்பதற்காக அமர்ந்திருக்கின்ற இந்த பிரம்மாவும் தனது சரீரத்தை நீக்குவார். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மனிதர்களால் மனிதர்களைத் தூய்மையாக்க முடியாது. தேவர்கள் ஒருபொழுதும் விகாரத்தினால் பிறப்பதில்லை. அனைவரும் தொடர்ந்தும் மறுபிறவியை எடுத்தார்கள். உங்கள் பாக்கியம் உருவாக்கப்படும் வகையில் தந்தை அனைத்தையும் மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார். மனிதரின் பாக்கியத்தை விழித்தெழச் செய்வதற்காகவே தந்தை வருகிறார். அனைவரும் தூய்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் விரக்தியில் கதறி அழுதாலும், விநாசம் நிகழ்ந்தே தீரும். இதனாலேயே தந்தை கூறுகிறார்: விரக்தியில் கதறி அழுவதற்கு முன்பாகவே, உங்களது எல்லையற்ற தந்தையாகிய என்னிடமிருந்து உங்களது ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இவ்வுலகில் காண்பவை அனைத்தும் அழிக்கப்பட உள்ளது. இந்த நாடகம் பாரதத்தினது எழுச்சியையும், வீழ்ச்சியையும் பற்றியதாகும். உலக எழுச்சி உள்ளது. சுவர்க்கத்தை ஆட்சிபுரிபவர்கள் யார் என்பதைத் தந்தை மாத்திரமே இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். தேவர்களின் இராச்சியமே பாரதத்தின் எழுச்சியும், இராவண இராச்சியமே பாரதத்தின் வீழ்ச்சியும் ஆகும். இப்பொழுது புதிய உலகம் உருவாக்கப்படுகிறது. உங்கள் புதிய உலக ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுவதற்காகவே நீங்கள் அவருடன் கற்கிறீர்கள். இது மிக இலகுவானது! இது மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான கல்வி. என்ன சமயங்கள் வருகின்றன, அவை எப்பொழுது வருகின்றன என்பதை நீங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனைய சமயங்கள் அனைத்தும் துவாபரயுகத்திலேயே வர ஆரம்பிக்கின்றன. நீங்கள் முதலில் சந்தோஷத்தையும், பின்னர் துன்பத்தையும் அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் இச்சக்கரம் முழுவதையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். இதனைச் செய்வதனால் நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்யும் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அல்பாவையும், பீற்றாவையும் புரிந்துகொள்ள வேண்டும். விநாசம் நிகழவேண்டும். வெளிநாட்டிலிருந்து எவருமே இங்கு வர முடியாத வகையில் அதிகளவு குழப்பங்கள் நிகழும். இதனாலேயே 'பாரதமே மிக மேன்மையான தேசம்" எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இருக்கும் இடத்திலேயே அநாதரவாக விடப்படும் அளவிற்கு யுத்தம் அத்தனை தீவிரமானதாக இருக்கும். நீங்கள் ஜந்து முதல் ஆறு மில்லியன்கள் கொடுத்தாலும் உங்களால் எங்கும் செல்ல முடியாதிருக்கும். தந்தை அவதாரம் செய்கின்ற, பாரத தேசமே அதி மேன்மையானது. சிவனின் பிறந்தநாளும் இங்கேயே கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணரின் பெயர் புகுத்தப்பட்டதால் அனைத்துப் புகழும் இழக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவருக்கும்; விடுதலை அளிப்பவர் இங்கேயே அவதாரம் செய்கிறார். சிவனின் பிறந்த நாளும் இங்கேயே கொண்டாடப்படுகின்றது. தந்தையாகிய கடவுள் மாத்திரமே வந்து, அனைவரையும் விடுதலை செய்கிறார். எனவே நீங்கள் அத்தகைய தந்தைக்கு மட்டுமே மரியாதை செலுத்தி, அவரது பிறந்த தினத்தை மாத்திரமே கொண்டாட வேண்டும். தந்தை இங்கே பாரதத்திற்கு வந்து, அனைவரையும் தூய்மையாக்குகிறார். எனவே இதுவே அதிமகத்தான யாத்திரை ஸ்தலம். அவர் அனைவரையும் சீரழிவிலிருந்து விடுவித்து, சற்கதியை அருள்வது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எங்கள் பாபா இப்பொழுது எங்களுக்கு இந்த இரகசியத்தை, இச்சரீரத்தின் மூலம் விளங்கப்படுத்துகின்றார் என்பது ஆத்மாக்களாகிய எங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் சரீரங்களின் மூலம் செவிமடுக்கிறோம். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள், துரு தொடர்ந்தும் அகற்றப்படும். நீங்கள் தூய்மையாகித் தந்தையிடம் செல்வீர்கள். நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாக அவரை நினைவுசெய்கிறீர்களோ அவ்வளவுக்குத் தூய்மையாகுவீர்கள். நீங்கள் பிறரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கும்பொழுது, பலரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதுடன், உயர்ந்ததோர் அந்தஸ்தையும் கோருவீர்கள். இதனாலேயே உங்களால் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெற முடியும் என நினைவுகூரப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் தூய்மையாகுங்கள். ஒவ்வோர் அடியிலும் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உலக இராச்சியத்தைப் பெறுங்கள். தந்தையைப் போன்று, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகுங்கள்.

2. மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றும் இக்கல்வியைச் சதா தொடர்ந்தும் கற்றிடுங்கள். அனைவரையும் உங்களைச் சமமானவர்கள் ஆக்குவதற்குச் சேவை செய்து, அவர்களது ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல உரிமைகளையும் கொண்டுள்ள ஸ்திதி மூலம் தந்தையை உங்கள் சகபாடியாக்குவதால், சதா வெற்றியாளர்களாக இருப்பீர்களாக.

சகல உரிமைகளையும் கொண்டுள்ள ஸ்திதியைக் கொண்டிருப்பதே தந்தையை உங்கள் சகபாடியாக்குவதற்கான இலகு வழி ஆகும். சகல உரிமைகளையும் கொண்டுள்ள ஸ்திதியில் நீங்கள் ஸ்திரமாக இருக்கும்பொழுது, உங்கள் புத்தியானது வீணான அல்லது தூய்மையற்ற எண்ணங்களிலோ அல்லது ஏனைய பல விடயங்களின் இனிமையிலோ தளம்பலடைய மாட்டாது. உங்கள் புத்தியின் ஒருமைப்பாட்டின் மூலம் நீங்கள் முகங்கொடுக்கும் சக்தியையும், பிரித்தறியும் சக்தியையும், தீர்மானிக்கும் சக்தியையும் விருத்தி செய்து கொள்கிறீர்கள். இவை உங்களைப் பலவகையான மாயையின் தாக்குதல்களிலிருந்தும் இலகுவில் வெற்றியாளர்கள் ஆக்குகின்றன.

சுலோகம்:
ஒரு விநாடியில் சாராம்சத்திலிருந்து விரிவாக்கத்திற்கும், விரிவாக்கத்திலிருந்து சாராம்சத்திற்கும் செல்வதைப் பயிற்சி செய்பவரே, ஒரு இராஜயோகி ஆவார்.