02.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மரண மௌனத்திற்குள் (னநயன ளடைநnஉந) செல்வதற்குப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் புத்தி தந்தையை நோக்கியே இருக்கட்டும்;. அப்போது, நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுவதற்குத் தந்தை உங்களுக்கு சக்காஷ் (சக்திக்கான மின்னோட்டம்) கொடுப்பார்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் மூன்றாவது கண்ணாகிய ஞானத்தைப் பெறும்போது, எக் காட்சியைப் பெறுகின்றீர்கள்?

பதில்:
சத்தியயுக ஆரம்பம் முதல், கலியுக இறுதிவரை நீங்கள் நடித்த, உங்கள் பாகங்களின் வகைககளின் காட்சி உங்களுக்குக் கிடைத்துள்ளது. நீங்கள் முழு உலகையும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அறிவீர்கள். அறிந்திருத்தல் என்றால், ஒரு காட்சியைப் பெறுதல் என்று அர்த்தமாகும். நீங்கள் தெய்வீகக் குணங்களையுடைய தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், பின்னர் நீங்கள் அசுர குணமுடையவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதையும், இப்போது மீண்டும் ஒருமுறை தெய்வீகக் குணங்களையுடைய தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் புதிய வீடான, புதிய உலகிற்குச் செல்லவுள்ளீர்கள்.

ஓம் சாந்தி.
இங்கமர்ந்திருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை, நினைவு யாத்திரையில் இல்லை. அந்த ஒரேயொருவரே குழந்தைகளாகிய உங்களுக்கு உதவுவதற்காக, ஒரு சக்காஷைக் (ளயமயயளா) கொடுக்கின்றார். அதாவது, அவர் உங்கள் சரீரங்களை நீங்;கள் மறப்பதற்கு உங்களுக்கு உதவுகின்றார். உங்கள் சரீரங்களை மறப்பதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து இவ்வுதவியைப் பெறுகிறீர்கள். அவர் ஆத்மாக்களாகிய உங்களுக்குச் சக்காஷைக் கொடுக்கின்றார். ஏனெனில் அவர் ஆத்மாக்களை மாத்திரமே பார்க்கிறார். உங்கள் ஒவ்வொருவருடைய புத்தியும், இப்போது தந்தையுடன் உள்ளதுடன், தந்தையின் புத்தியும், திருஷ்டியும் குழந்தைகள் மீது உள்ளன. அதில் ஒரு வித்தியாசமுள்ளது. (ஒரு சில நிமிடங்கள் மரண மௌனம் நிலவியது). நீங்கள் இந்த மரண மௌன ஸ்திதியைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சரீரங்களிலிருந்து நீங்கி, பிரிந்திருக்க விரும்புகின்றீர்கள். எந்தளவுக்கு அதிகமாக நீங்கள் தொடர்ந்து நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக உங்களால் சரீரங்களை விட்டு நீங்க முடிகின்றது என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர்கள் பாம்பின் உதாரணத்தைத் தருகிறார்கள். தரப்பட்ட உதாரணங்களில், சில சிறப்புக்;கள் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் சரீரங்களிலிருந்து நீங்கி, வீட்டிற்குத் திரும்பிச் சென்று, பின்னர் மீண்டும் கீழே இறங்கி வருவீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். வேறு எவரும் இவ் விடயங்களை அறியார். வேறு எவரும் இந்த நாடகத்தை அறியார். நினைவில் இருப்பதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாது. அவ்வாறான விடயங்களை எவரும் உங்களுக்குக் கூறுவதில்லை. இப்போது இது, உங்களுடைய திரும்பிச் செல்லும் பயணம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீPர்கள். ஆத்மாவின் புத்தியின் யோகம், அந்தத் திசையில் ஈர்க்கப்பட்டுள்ளது. இப்போது நாடகம் முடிவடையவுள்ளது. இப்போது நாங்கள் வீடு செல்ல வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவரே தூய்மையாக்குபவர். கங்கை நீர், முக்தியை அருள்பவராகவோ, அல்லது வழிகாட்டியாகவோ இருக்க முடியாது. தந்தை ஒருவர் மாத்திரமே தூய்மையாக்குபவராகவும், வழிகாட்டியுமாக இருக்க முடியும். இவ் விடயங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளப்படுவதுடன், பின்னர் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். இது பக்தி மார்க்கமாகும். இதில் எவருக்கும் எவ்விதப் பயனுமில்லை. தண்ணீர் குளிப்பதற்கே, அதனால் ஒருபோதும் உங்களைத் தூய்மைப்படுத்த முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர்களின் பக்திக்குப் பலனாக அவர்கள் எதனையாவது பெறுகிறார்;கள் என்றில்லை. பக்தி மார்க்கத்தில், அவர்கள் அதற்கு அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவ்விடயங்கள் அனைத்தும் குருட்டு நம்பிக்கை என்று அழைக்கப்படுகின்றது! இவ்வாறு தொடர்ந்து குருட்டு நம்பிக்கையைக் கொண்டிருப்பதனால், மனிதர்கள் குருடனின் குருட்டுக் குழந்தைகள் என்ற பட்டத்தைப் பெறுகிறார்கள். இவை கடவுள்pன் வாசகங்கள். எவருக்குப் பார்வையுள்ளது, யார் குருடர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தந்தையிடமிருந்து அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையை இனங் கண்டுள்ளீர்கள், உங்களால் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி ஆகியவற்றையும், அதன் காலத்தையும் இனங்காணக்கூடியதாக உள்ளது. ஞானக்கடலின் ஒவ்வொரு விடயத்தையும் கடைந்து, பின்னர் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். பக்தி மார்க்கத்திற்கும் ஞானத்திற்குமிடையே வேறுபாடுள்ளது. இந்த ஞானம் தனித்துவமானது. இந்த ஞானம் பிரபல்யமானது. இது இராஜயோகக் கல்வி. தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். படைப்பவரான தந்தை, அமர்ந்திருந்து, தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கிறார். அவரே பரமாத்மா ஆவார். பரமாத்மா, கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஆங்கிலத்தில் அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். சோல் (ளழரட) என்றால் ஆத்மா ஆவார். வேறெந்த ஆத்மாவை விடவும் தந்தையின் ஆத்மா, பெரியதல்ல. தந்தையின் ஆத்மா, குழந்தைகளாகிய உங்களது ஆத்மாவைப் போன்றதே. குழந்தைகள் சிறியவர்களும், தந்தை பெரியவரும் என்றல்ல. இல்லை. இப் பரம ஞானத்தினால் நிறைந்துள்ள தந்தை மிகுந்த அன்புடன் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவே தனது பாகத்தை நடிக்க வேண்டும். அந்த ஒரேயொருவர் தனது பாகத்தை நடிப்பதற்கு, நிச்சயமாக ஒரு சரீரத்தை எடுக்க வேண்டும். ஆத்மாக்களின் வசிப்பிடம் அமைதி தாமமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள், பெரும் ஒளித்தத்துவத்தில் வசிக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்;கள் அறிவீர்கள். இந்துஸ்தான் என்ற இடத்தில் வாழ்பவர்கள், தங்களை இந்துக்கள் என்று அழைப்பதைப் போன்று, பிரம்ம தத்துவம் என்ற உலகில் இருந்து வருகின்ற ஆத்மாக்கள் பிரம்ம தத்துவமே கடவுள் என்று எண்ணுகிறார்கள். வீழ்ச்சிக்கான காரணங்களும், நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு முயற்சி செய்தாலும், எவராலும் வீடு திரும்ப முடியாது. நாடகம் ஒன்று முடிவடைந்ததும், நடிகர்கள் அனைவரும் மேடைக்கு ஒன்றாக வருகின்றார்கள் அதனை உருவாக்கியவரும், பிரதான நடிகர்கள் அனைவரும் ஒன்றாக நிற்கிறார்;கள். இந்த நாடகம், இப்போது முடிவடையவுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவ் விடயங்கள், எந்தச் சாதுக்களுக்கும், புனிதர்களுக்கும் தெரியாது. ஆத்மா பற்றிய இந்த ஞானம் எவரிடமுமில்லை. பரமாத்மா, தந்தை மாத்திரமே, இங்கு ஒரு தடவை வருகிறார். ஏனைய அனைவரும் தங்கள் பாகத்தை இங்கு நடிக்க வேண்டும். விரிவாக்கம் தொடர்ந்து இடம்பெறுகிறது. ஆத்மாக்கள் அனைவரும் எங்கிருந்து வருகிறார்கள்? ஆத்மாக்கள் வீடு திரும்ப முடியுமானால், அவ்வாறான ஒரு வழக்கம் இருந்திருக்கும். ஒருவர் வருவார், இன்னொருவர் செல்வார், அப்பொழுது அது மறுபிறவி எனக் கூறப்பட மாட்டாது. உண்மையில் மறுபிறவி என்பது ஆரம்பம் முதல் தொடர்ந்துள்ளது. இலக்ஷ்மியும், நாராயணனுமே முதலில் வருபவர்கள். அவர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் இறுதியை அடையும்போது, அவர்கள் சென்று, மீண்டும் முதலில் வருபவர்கள் ஆகுகின்றார்கள் என்பதையும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இதைப் பற்றிய எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஆத்மாக்களின் தந்தையே வந்து விளங்கப்படுத்துகிறார். அவர் எதனை விளங்கப்படுத்துகிறார்? அவர் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கிறார். பரமாத்மா யாரென்பது பற்றி உங்களுக்கு ஏதாவது முன்னர் தெரியுமா? நீங்கள் சிவாலயங்களுக்குச் சென்றீர்கள், இங்கு எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. சத்திய யுகத்தில் ஆலயங்களோ அல்லது வழிபாடு போன்றவையோ எதுவுமேயில்லை. அங்கு நீங்கள் பூஜிக்கத் தகுந்த தேவர்கள் ஆகுகிறீர்கள். அரைக் கல்பத்திற்குப் பின்னர், நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகுவதுடன், தேவர்கள் என்றும் அழைக்கப்பட மாட்டீர்கள். பின்னர் தந்தை வந்து, மீண்டும் உங்களைப் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். வேறு எவ் உலகிலும் இந்தப் புகழ் பாடப்படுவதில்லை. இராம இராச்சியம் என்ன என்பதையும், இராவண இராச்சியம் என்ன என்பதையும் இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இராம இராச்சியத்தின் ஆயுட்காலத்தை நீங்கள் மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். இது, நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு நாடகம். தந்தையே அதி மேலானவரும், ஞானம் நிறைந்தவருமாவார். அவர் மூலம் நாங்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள் ஆகுகிறோம். நாங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுகிறோம். அதுவும் மிக உயர்ந்ததே. தந்தை இப்போது எங்களுக்குக் கற்பிக்கிறார். ஆகவே நாங்கள் இதனையும், தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். தேவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதையும், இப்போது நீங்கள் என்னவாகியுள்ளீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். தேவர்களைப் போன்று நீங்கள் முற்றாக விகாரமற்றவர்களாக ஆகவேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்கள். இதை நிறைவேற்றுவதற்குத் தந்தையை நினைவுசெய்வதைத் தவிர, வேறெந்த வழியுமில்லை. எவ்வாறு இதனை நிறைவேற்றலாமென்று வேறு எவருக்காவது தெரிந்தால், எங்களுக்குக் கூறுங்கள்! பிரம்ம தத்துவத்தை விகாரமற்றது என்று கூறமுடியாது. இல்லை. ஆத்மாவே விகாரமற்றவர் ஆகுகின்றார். பிரம்ம தத்துவம், ஓர் ஆத்மாவாகவும் முடியாது. அது வசிப்பிடமாகும். ஒவ்வோர் ஆத்மாவிலும் புத்தி உள்ளது என்பதும், ஆத்மா தமோபிரதான் ஆகும்போது, புத்தி விவேகமற்றதாக ஆகுகின்றது என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே விவேகமானவர்களும், விவேகமற்றவர்களும் உள்ளனர். உங்கள் புத்தி முற்றாகத் சுத்தமாகுகின்றது. பின்னர் அவை அழுக்காகி விடுகின்றன. தூய்மைக்கும், தூய்மையற்றதுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. இப்போது. அவர்கள் எவ்வாறு தூய்மையாகலாம்? அவர்கள் கூவி அழைப்பது, இதுவேயாகும். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்போது சங்கம யுகம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குத் தந்தை மாத்திரமே ஒரு தடவை வருகிறார். அனைவரும் புதிய உலகிற்குச் செல்வார்கள் என்றில்லை. அங்கு ஒரு பாகமில்லாதவர்கள், அமைதிதாமத்தில் இருப்பார்கள். இதனாலேயே அது படங்களிலும் காட்டப்பட்டுள்ளது. அந்தப் படங்கள் போன்றவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றதென்பதை விளங்கப்படுத்தும் இப் படங்கள் ஞான மார்க்கத்திற்குரியவை. நீங்கள் எவ்வாறு 16 சுவர்க்கக் கலைகளிலிருந்து, பதினான்கிற்கும், 14 இலிருந்து 12க்கும், பின்னர், இப்போது ஒரு கலையுமே எஞ்சாது, கீழே இறங்கி வந்தீர்களென்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அனைவருமே வரிசைக்கிரமமாகவே உள்ளனர். நடிகர்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். சிலர் 1,000 சம்பளம் பெறுகின்றார்கள். சிலர் 1,500, சிலர் 500, சிலர் 100, சிலர் 150 என அதிகளவு வேறுபாடுள்ளது. எவ்வாறு நீங்கள் கற்கிறீர்கள் என்பதில் பகலுக்கும், இரவுக்குமிடையேயான வித்தியாசமுள்ளது. அந்தப் பாடசாலைகளில், சித்தியடையாது விட்டால், அவர்கள் மீண்டும் கற்கலாம். ஆனால் இங்கு மீண்டும் கற்பது என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுடைய அந்தஸ்து குறைக்கப்படுகிறது. உங்களால் ஒருபோதுமே மீண்டும் இந்த ஞானத்தைக் கற்க இயலாதிருக்கும். இக் கல்வி, ஒரு தடவை மாத்திரமே சாத்தியமாகும். தந்தையும் ஒரு தடவை மாத்திரமே வருகிறார். முதலில் ஓர் இராச்சியம் மாத்திரமே இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் இதனை விளங்கப்படுத்தும்போது, அவர்கள் இவ்விடயங்களை ஏற்றுக்கொள்வார்கள். கிறிஸ்தவர்கள், விஞ்ஞானத்திலும் மிகத் திறமையானவர்கள். அனைவரும் அவ் விடயங்களை அவர்களிடமிருந்து கற்றார்கள். அவர்களுடைய புத்தி தெய்வீகமானதாகவோ அல்லது கல் போன்றுமோ இருக்கவில்லை. இத் தருணத்தில் அவர்களுடைய புத்திகள் அற்புதங்களை நிகழ்த்துகின்றன. கிறிஸ்தவர்கள் மூலம் விஞ்ஞானம் அதிகளவு வளர்ந்துள்ளது. விஞ்ஞானம் சந்தோஷத்திற்கும் உரியது. பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் நாங்கள் அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் செல்வோம். வேறு எவ்வாறு மனித ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியும்? விஞ்ஞானம் மூலம் விநாசம் நடைபெறும். ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் சரீரங்களை நீக்கி வீடு திரும்புவார்கள். முக்தி இந்த விநாசத்தோடு கலந்துள்ளது. அரைக்கல்பமாக அனைவரும் முக்திக்கான முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது விஞ்ஞானத்தின் மூலமும், இயற்கை அனர்த்தங்கள் மூலமும் இப்போது இடம்பெறும். இந்த யுத்தமே, ஆத்மாக்களாகிய உங்களை முக்தி தாமத்தி;ற்குத் திரும்பச் செல்வதற்கான, கருவியாகும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். பலர் முக்தி தாமத்திற்குச் செல்வார்கள். ஹத்தயோகத்தைப் பயிற்சி செய்தும், நீங்கள் குருமார்களைப் பின்பற்றியும் எவ்வளவு முயற்சி செய்திருந்தாலும், உங்கள் எவராலும் முக்தி தாமத்திற்குச் செல்ல முடியாதிருந்தது. விஞ்ஞானத்தின் மூலம் பல குண்டுகள் போன்றவை தயாரிக்கப்பட்டுள்ளன. ஆகவே விநாசம் இடம்பெறும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். புதிய உலகில் மிகச் சில மக்களே இருப்பார்கள். ஏனையோர் அனைவரும் முக்தி தாமத்திற்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். உங்களின் கல்வியின் சக்தியுடன், நீங்கள் ஜீவன்முக்தி தாமத்திற்குச் செல்வீர்கள். ஸ்திரமானதும், ஆட்ட அசைக்க முடியாததும், உறுதியானதுமான ஓர் இராச்சியத்தை நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள். இங்குள்ள தேசங்கள் அனைத்தையும் பாருங்கள். அவை அனைத்தும் பிரிக்கப்பட்டுள்ளன! தந்தை உங்களை, ஸ்திரமானதும் ஆட்ட அசைக்க முடியாததுமான, உலக இராச்சியத்தின் அதிபதிகள் ஆக்குகிறார். எல்லையற்ற தந்தையின் ஆஸ்தி, எல்லையற்ற இராச்சியமாகும். யார், எப்போது இந்த ஆஸ்தியைக் கொடுத்தார்கள்? இது எவரது புத்தியிலும் புகுவதில்லை. நீங்கள் மாத்திரமே புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய உங்களிடம் ஞானம் என்ற மூன்றாவது கண் உள்ளது. ஆத்மாக்கள் ஞான சொரூபங்கள் ஆகுகிறார்கள். ஞானக் கடலாகிய, தந்தையின் மூலம் மாத்திரமே நீங்கள் இவ்வாறு ஆகலாம். தந்தை வந்து, படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தை உங்களுக்குத் தருகிறார். உண்மையில், இதற்கு ஒரு விநாடியே எடுக்கிறது: ஒரு விநாடியில் ஜீவன்முக்தி. ஏனைய அனைவரும் முக்தியைப் பெறுகிறார்கள். நாடகம் இவ்வாறு நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இராவணனின் பந்தத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அந்த மக்கள் பாரிய முயற்சி செய்கின்றனர். எப்பொழுது உலகிலும், பிரம்மாண்டத்திலும் அமைதி நிலவுமென்பதைக் குழந்தைகளாகிய நீங்;கள் மாத்திரமே புரிந்துகொள்கிறீர்கள். ஒளித் தத்துவத்தில் அமைதி உள்ளது என்றும், இங்கு இவ்வுலகில் அமைதியும், சந்தோஷமும் நிலவும் என்றும் கூறப்படுகிறது. இந்த உலகம், ஒளித் தத்துவத்திலிருந்து முற்றாக வேறுபட்டதாகும். ஒளித் தத்துவம் சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் அப்பாலுள்ளது. இந்த உலகிலுள்ள எவையும் அங்கில்லை. அது மௌன உலகம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு, மௌன உலகிற்குச் செல்கிறீர்கள். இதனாலேயே நீங்கள் அங்கு திரும்புவதற்கு உங்களைத் தயார்ப்படுத்துகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். வேறு எவருக்கும் இது தெரியாது. இதற்குத் தயார்ப்படுத்துவதற்கு, இப்போது நீங்கள் தூண்டப்படுகிறீர்கள். யுத்தம் நன்மை பயக்கும். அனைவருடைய கணக்கும் தீர்க்கப்பட்டுவிடும். அனைவரும் தூய்மையாகுவார்கள். யோகம் ஒரு தீயாகும். ஒரு தீயின் மூலம் அனைத்தும் தூய்மையடைகிறது. நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி என்பன தந்தைக்குத் தெரிவது போன்று, நடிகர்களாகிய உங்களுக்கும் நாடகத்தின் ஆரம்பம், மத்தி மற்றும் இறுதி பற்றித் தெரியும். இதனைப் புரிந்துகொள்ளுதல் என்றால் ஒரு காட்சியைக் (ஆழ்ந்த அறிவு) காண்பதாகும். ஞானம் என்ற உங்களுடைய மூன்றாவது கண் இப்போது திறந்துள்ளது. சத்திய யுகத்தின் ஆரம்பத்திலிருந்து, கலியுகத்தின் முடிவுவரை உலகிலுள்ள அனைத்து விடயங்களையும் நிச்சயமாக நீங்கள் இப்போது தெரிந்துகொண்டுள்ளீர்கள். வேறு எந்த மனிதருக்கும் இது தெரியாது. நீங்களே தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தவர்களும், நீங்களே அசுர குணங்களைக் கொண்டிருந்தவர்களும் என்பதைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். பின்னர், உங்களை அவ்வாறான தெய்வீகக் குணங்கள் உடையவர்கள் ஆக்குவதற்குத், தந்தை மீண்டும் ஒருதடவை வருகிறார். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காகத் தந்தை வருகிறார். தேவ குலத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே 84 பிறப்புக்களை முழுதாக எடுக்கின்றனர் என்பது உலகிலுள்ள வேறெவருக்கும் தெரியாது. அவர்கள் தூய்மையானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகுகிறார்கள். இது, வேறு எவரினதும் புத்தியில் இல்லை. அந்த உருவங்கள் அனைத்தும் உயிரற்றவை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர்களின் சரியான புகைப்படத்தை எவராலும் எடுக்க முடியாது. அவை இயற்கையான, அழகுடையனவாக இருந்தன. ஒரு தூய சரீரம், தூய தத்தவங்களினாலேயே உருவாக்கப்படுகிறது. இங்கு அவை தூய்மையற்றவை. இவ்வுலகில் பல்வேறு நிறத்துடனுள்ள மக்கள் போன்று சத்திய யுகத்தில் இருக்க மாட்டார்கள். கிருஷ்ணர் அவலட்சணமானவரும், அழகானவரும் என்று அழைக்கப்படுகிறார். சத்திய யுகத்தில் அவர் அழகானவராகவும், கலியுகத்தில் அவர் அவலட்சணமானவராகவும் உள்ளார். எவ்வாறு அவர் சத்தியயுகத்திலிருந்து கலியுகத்திற்குச் செல்கிறார்? முதலாவது இலக்க ஆத்மா தொடக்கம் நீங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கிறீர்கள். கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வந்தவுடன், அவருக்குக் கிருஷ்ணர் என்று பெயர் சூட்டப்படுகிறது. ஒரு பெயர் நிச்சயம் தேவை. கிருஷ்ணரின் ஆத்மா அழகானவராக இருந்து, பின்னர் அவலட்சணமானவர் ஆகினார். அதனாலேயே அவர் அவலட்சணமானவரும், அழகானவரும் என அழைக்கப்படுகிறார் என்று நீங்கள் கூறக்கூடும். இவருடைய ஜாதகத்தை நீங்கள் பெற்றுக்கொண்டவுடன், உங்களால் முழுச் சக்கரத்தினதும் சோதிடத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இது பல இரகசியங்கள் நிறைந்ததென்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள்;. இந்த இரகசியங்கள் வேறு எவருக்கும் தெரியாது. இப்பொழுது நீங்கள் புதிய உலகிற்கும், புதிய வீட்டிற்கும் செல்லவேண்டும். நன்றாகக் கற்பவர்கள், புதிய உலகிற்குச் செல்வார்கள். தந்தையே, எல்லையற்ற முழு உலகிற்கும் அதிபதி. அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். தந்தையே அதிபதி என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு கல்வியாகும். இந்தக் கல்வியில் எந்தச் சந்தேகமோ அல்லது கேள்வியோ இருக்க முடியாது. இங்கு நீங்கள் சமயநூல்களை விவாதிக்க வேண்டியதில்லை. இந்த ஆசிரியர் ஒருவரே அதிமேன்மையானவர். அவர் இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் மாத்திரமே சத்தியமானவர். எவ்வாறு உண்மையான நாராயணன் ஆகலாம் என்ற கதையை, அவர் கற்பித்தல் வடிவில் உங்களுக்குக் கூறுகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய நீண்டகாலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டு, மௌன உலகிற்குத் திரும்புவதற்கு உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நினைவுச் சக்தியின் மூலம் ஆத்மாவை முழுமையாகத் தூய்மையாக்குங்கள்.

2. ஞானக் கடலினது, ஞானத்தைப் பயிற்சி செய்யுங்கள். ஞானக்கடலைக் கடைந்து, நீங்களே தீர்மானங்களை எடுங்கள். உங்கள் விடுதலையடைந்த வாழ்க்கையில் ஒரு மேன்மையான அந்தஸ்தைப் பெறுவதற்கு, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதன் மூலம் விரைவாகச் செல்வதால், முதலில் வருகின்ற தீவிர முயற்சியாளர் ஆவீர்களாக.

அவ்யக்த பாகத்தில் வந்த ஆத்மாக்கள் இறுதியில் வருபவர்கள் விரைவாகச் செல்பவர்களும், விரைவாகச் செல்பவர்களே முதலில் வருபவர்களும் என்ற ஆசீர்வாதத்தைப் பெறுகின்றார்கள். எனவே நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து நீங்கள் பெற்றுள்ள ஆசீர்வாதங்களை ஒரு நடைமுறை ரீதியில் பயன்படுத்துங்கள். இந்த அவ்யக்த பராமரிப்பு இலகுவில் உங்களைச் சக்திவாய்ந்தவர்கள் ஆக்குவதால், நீங்கள் விரும்பியளவிற்கு உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். ஏனெனில் பாப்தாதாவும் கருவி ஆத்மாக்களும் முன்னேறிப் பறப்பதற்கான ஆசீர்வாதங்களைச் சதா அனைவருக்கும் கொடுப்பதால், நீங்கள் இலகுவில் முன்னேறிச் செல்வதற்கான பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள்.

சுலோகம்:
அசரீரியானவரும், சமமான சரீரதாரியும் எனும் மகா மந்திரத்தின் விழிப்புணர்வு மூலம் ஒரு சதா யோகி ஆகுங்கள்.