02.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, அமைதியே உங்கள் கழுத்து மாலையாகும். அதுவே சுயத்தின் ஆதி தர்மமும் ஆகும். ஆகவே, அமைதிக்காக அலைந்து திரியத் தேவையில்லை. உங்கள் ஆதி தர்மத்தில் உங்களை ஸ்திரமாக்குங்கள்.

கேள்வி:
எதனையாவது தூய்மையாக்குவதற்கு மக்கள் பயன்படுத்தும் வழிமுறை யாது? தந்தை உருவாக்கியுள்ள வழிமுறை யாது?

பதில்:
எதனையாவது தூய்மையாக்குவதற்கு, மக்கள் அதனைத் தீயில் இடுகிறார்கள். அவர்கள் ஒரு யாகம் செய்யும்பொழுது, தீயை வளர்க்கிறார்கள். இங்கும், தந்தை ஓர் உருத்திர யாகத்தை உருவாக்கியுள்ளார், ஆனால் இது ஞான யாகமாகும். இதில் அனைவருடைய ஆகுதிகளும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள், உங்கள் சரீரம் உட்பட, உங்களிடமுள்ள அனைத்தையும் அர்ப்பணிக்கின்றீர்கள். நீங்கள் யோகம் செய்ய வேண்டும். இதுவே யோக ஓட்டப் பந்தயம். இதனூடாக, நீங்கள் முதலில் உருத்திரரின் கழுத்து மாலையாகி, பின்னர் விஷ்ணுவின் கழுத்து மாலையில் கோர்க்கப்படுவீர்கள்.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
நீங்கள் யாருடைய புகழைக் கேட்டீர்கள்? அப்பாலுள்ள பரமதந்தை பரமாத்மாவான கடவுளின் புகழை ஆகும். சகல பக்தர்களும், ஆன்மீக முயற்சி செய்பவர்களும் அவரை நினைவுசெய்கிறார்கள். தூய்மையாக்குபவர் என்பதும் அவருடைய பெயர் ஆகும். பாரதம் தூய்மையாக இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தூய இல்லறப் பாதையே இலக்ஷ்மி நாராயணன் போன்றோரின் தர்மமாக இருந்தது. அது ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் என அழைக்கப்பட்டது. பாரதத்தில், அனைத்தும் இருந்தது: தூய்மை, அமைதி, சந்தோஷம், செழிப்பு என்பனவாகும். தூய்மை இல்லாதபொழுது, அமைதியோ அல்லது சந்தோஷமோ இருப்பதில்லை. மக்கள் தொடர்ந்தும் அமைதிக்காக அலைந்து திரிகிறார்கள்;; அவர்கள் தொடர்ந்தும் காடுகளில் அலைந்து திரிகிறார்கள். ஒரு நபரிடமேனும் அமைதி இருப்பதில்லை, ஏனெனில் அவர்கள் தந்தையையும் அறிந்துகொள்வதில்லை, தாங்கள் ஆத்மாக்கள் என்பதையும், தங்கள் சரீரங்கள் தங்களுக்குரியவை என்பதையும் புரிந்துகொள்வதுமில்லை. நீங்கள் செயல்களைச் செய்வதற்கு ஒரு சரீரம் தேவை. அமைதியே எனது ஆதிதர்மம். இவை சரீரத்தின் அங்கங்கள் ஆகும். தாங்கள் பரந்தாமமாகிய, சப்தத்திற்கு அப்பாலுள்ள தாம வாசிகள் என்பதை ஆத்மாக்கள் அறியார்கள். நாங்கள் இச்செயற்களத்தில்; எங்கள் பாகங்களை நடிப்பதற்குச் சரீரங்களின் ஆதாரத்தைப் பெறுகிறோம். அவர்கள் அமைதியைத் தங்கள் கழுத்து மாலையாகக் கொண்டிருப்பினும், வெளியே தடுமாறித் திரிகிறார்கள்! எவ்வாறு தாங்கள் மன அமைதியைக் கொண்டிருக்க முடியும் என அவர்கள் தொடர்ந்தும் வினவுகிறார்கள். ஓவ்வோர் ஆத்மாவும் ஒரு மனதையும், ஒரு புத்தியையும் கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறியார்கள். ஓவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவாகிய பரமதந்தையின் குழந்தை. அவரே அமைதிக்கடலும், நாங்கள் அவருடைய குழந்தைகளும் ஆவோம். முழு உலகமும் அமைதியற்றுள்ளது. அனைவரும் கூறுகிறார்கள்: அமைதி ஏற்படட்டும்! முழு உலகினதும் அதிபதி ஒரேயொருவரே, அவருக்கே மக்கள் ஓம் நமசிவாய எனக் கூறுகிறார்கள். அதிமேலான கடவுளாகிய சிவன் யார்? இதனை மனிதர் எவரும் அறியார். இருப்பினும் அவர்கள் அவரைப் பூஜிக்கிறார்கள். அவர்களில் சிலர் கூறுகிறார்கள்: சிவோஹம் (நானே சிவன்). சிவனே ஒரேயொரு தந்தையாவார். மக்கள் தங்களைச் சிவன் என அழைப்பது மகா பாவம் ஆகும். சிவனே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறார். பிரம்மாவோ, விஷ்ணுவோ, சங்கரரோ அல்லது எந்த மனிதரோ தூய்மையாக்குபவர் என அழைக்கப்பட முடியாது. ஒரேயொருவரே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். மனிதர்களால் மனிதர்களைத் தூய்மையாக்க முடியாது, ஏனெனில் அது முழு உலகையும் பற்றிய ஒரு கேள்வியாகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அது சத்திய யுகமாக இருந்தபொழுது, பாரதம் தூய்மையாக இருந்தது, அது இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது. ஆகவே, நீங்கள் முழு உலகையும் தூய்மையாக்குபவரை நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், இது தூய்மையற்ற உலகமாகும். அவர்கள் மகாத்மாக்களைப் பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால் உண்மையில் மகாத்மாக்கள் எவரும் இல்லை. அவர்கள் இவ்வுலகத்துக்கு அப்பாலுள்ள தந்தையைக்கூட அறியார்கள். பாரதத்தில் சிவனின் பிறந்தநாள் நினைவுகூரப்படுகிறது, ஆகவே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு அவர் நிச்சயமாக பாரதத்தில் வந்திருக்க வேண்டும். அவர் கூறுகிறார்: நான் கும்பம் (சங்கமம்) என அழைக்கப்படுகின்ற, சங்கம யுகத்தில் வருகிறேன். அது கடலினதும், நீராலான ஆறுகளினதும் சங்கமம் அல்ல. ஞானக்கடலான, தூய்மையாக்குபவராகிய தந்தை வந்து, ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையாக்கும்பொழுதே, சங்கமம் (கும்பம்) உள்ளது. பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, அங்கே ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சத்திய யுகத்தில் சூரிய-வம்ச இராச்சியம் இருந்தது, பின்னர் திரேதா யுகத்தில் சந்திர-வம்ச இராச்சியம் இருந்தது. இராமரே அரசர், மக்கள் அனைவரும் இராமருக்குரியவர்கள் என்று இது புகழப்படுகிறது. திரேதா யுகத்தின் புகழ் அதிகளவில் உள்ளது! ஆகவே, சத்திய யுகத்தின் புகழ் மேலும் அதிகமானதாக இருக்க வேண்டும். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அங்கே தூய, உயிர்வாழும் ஆத்மாக்கள் இருந்தார்கள். ஏனைய சமயங்களின் ஆத்மாக்கள் அனைவரும் சப்தத்திற்கு அப்பாலுள்ள தாமத்தில் இருந்தார்கள். ஓர் ஆத்மா என்றால் என்ன என்பதையோ, பரமாத்மா என்றால் என்ன என்பதையோ அம்மனிதர்களில் எவரும் அறியார். ஓர் ஆத்மா ஒரு சின்னஞ்சிறிய புள்ளி, அவரில் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. 8.4 மில்லியன் பிறவிகள் இருக்க முடியாது. நீங்கள் 8.4 மில்லியன் பிறவிகளை எடுத்தவாறு கல்பம் கல்பமாக, தொடர்ந்தும் சக்கரத்தைச் சுற்றிச் செல்ல முடியும் என்பது சாத்தியமல்ல. சக்கரம் 84 பிறவிகளுக்கு மாத்திரமே உரியது. அதுவும் அனைவருக்கும் உரியதல்ல. ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்பொழுது, இங்கே இறுதியில் உள்ளார்கள், பின்னர் அவர்கள் மீண்டும் ஆரம்பத்தில் வருவார்கள். தாமதித்து வருகின்ற ஆத்மாக்கள் அனைவரும் சப்தத்திற்கு அப்பாலுள்ள தாமத்தில் இருக்கிறார்கள். தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அவர் மாத்திரமே உலக சர்வசக்திவான் என அழைக்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு பிரம்மாவினூடாக வேதங்கள்;, சமயநூல்கள், கீதை ஆகிய அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறேன். அவர்கள் பக்தி மார்க்கத்தின் பௌதீகச் செயற்பாடுகளைப் பற்றிய சமய நூல்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளார்கள். எவ்வாறு நான் வந்து, யாகத்தை உருவாக்கினேன் என்பது சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. இது குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற, சுய இராச்சியத்துக்கான, உருத்திர ஞான யாகம் என அழைக்கப்படுகிறது. சிவனே உருத்திரர், அனைவரும் இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரம் உட்பட, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் மறந்து விடுங்கள். ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்யுங்கள். நான் ஒரு சந்நியாசி. நான் ஒரு கிறிஸ்தவன். இவை அனைத்தும் சரீர சமயங்கள் ஆகும். அவர்கள் அனைவரையும் துறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அசரீரியானவர் நிச்சயமாகவே ஒரு சரீரத்தில் பிரவேசிப்பார். அவர் கூறுகிறார்: நான் சடப்பொருளின் ஆதாரத்தைப் பெற வேண்டும். நான் வந்து, இச்சரீரத்தினூடாகப் புதிய உலகை ஸ்தாபிக்கிறேன். பழைய உலகின் விநாசம் முன்னிலையில் உள்ளது. மக்களின் தந்தையாகிய பிரம்மாவினூடான ஸ்தாபனை நினைவுகூரப்படுகிறது. சூட்சும உலகம் தேவதைகளின் உலகம் ஆகும். அங்கே தசையோ அல்லது எலும்புகளோ இல்லை. அங்கே சூட்சும சரீரங்களே உள்ளன, அனைவரும் ஆவிகளைப் போன்று, வெண்ணிறமாக உள்ளார்கள். ஒரு சரீரத்தைப் பெறாத ஆத்மாக்கள் அவ்வாறு அலைந்து திரிகிறார்கள். நீங்கள் ஒரு சரீரத்தின் நிழலைப் பார்க்க முடியும், ஆனால் உங்களால் அதனைப் பற்றிப் பிடிக்க முடியாது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள், ஏனெனில் இந்நினைவினூடாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நினைவுகூரப்படுகிறது: பெருமளவு காலம் கடந்துவிட்டது, குறுகிய காலமே எஞ்சியுள்ளது. இப்பொழுது மிகவும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. இயன்றளவுக்குத் தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்குக்;;கு இட்டுச் செல்லும். கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில வார்த்தைகள் சரியானவை. ஒரு மூடை மாவில் உள்ள ஒரு துளி உப்பு போன்ற ஒரு சில வார்த்தைகள் சரியானவை. எல்லாவற்றுக்கும் முதலில், கடவுள் அசரீரியானவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு அசரீரியான கடவுள் பேசுகிறார்? அவர் கூறுகிறார்: நான் பிரம்மாவின் சாதாரண சரீரத்தில் பிரவேசித்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள்! நான் ஒரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்கும், ஏனைய சமயங்கள் அனைத்தினதும் விநாசத்தைத் தூண்டுவதற்கும் வருகிறேன். இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர், சத்திய யுகத்தில், ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே இருந்தது. ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்துக் கொண்டு திரும்பிச் செல்கின்றார்கள். இது தீர்வுக் காலம் என அழைக்கப்படுகிறது. அனைவருடைய துன்பத்தின் கர்மக் கணக்குகளும் தீர்க்கப்படவுள்ளன. பாவம் செய்த காரணத்தினாலேயே துன்பம் பெறப்படுகிறது. பாவக் கணக்குகள் தீர்க்கப்பட்ட பின்னர், புண்ணியக் கணக்கு ஆரம்பமாகிறது. அனைத்தையும் தூய்மையாக்குவதற்குத் தீ உருவாக்கப்படுகிறது. ஒரு யாகம் உருவாக்கப்படும்பொழுது, தீ வளர்க்கப்படுகிறது. இது பௌதீகமான யாகம் அல்ல. இதுவே உருத்திர ஞான யாகமாகும். இது கிருஷ்ணரின் ஞான யாகம் என்று கூறப்படுவதில்லை. கிருஷ்ணர் ஒரு யாகத்தை உருவாக்கவில்லை. கிருஷ்ணர் ஓர் இளவரசராக இருந்தார். ஓர் அனர்த்த காலத்தின்போதே, யாகங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நேரத்தில், எங்கும் அனர்த்தங்களே உள்ளன. மக்கள் உருத்திர யாகங்களை வளர்க்கிறார்கள். அவர்கள் உருத்திர ஞான யாகத்தை வளர்ப்பதில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தையான உருத்திரர் மாத்திரமே வந்து, அதனை உருவாக்குகிறார். உருத்திர ஞான யாகத்தில் அனைவரும் அர்ப்பணிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. பாபா வந்துவிட்டார், யாகமும் உருவாக்கப்படுகிறது. இராச்சியம் ஸ்தாபிக்கப்படும்வரை, அனைவரும் தூய்மையாகும்வரை அது தொடரும். அனைவரும் உடனடியாகத் தூய்மையாகின்றார்கள் என்றில்லை. இறுதிவரை தொடர்ந்தும் யோகம் செய்யுங்கள். இது யோக ஓட்டப் பந்தயம் ஆகும். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு அதிகமாக நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக ஓடிச் சென்று, உருத்திரரின் கழுத்து மாலை ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆகுவீர்கள். முதலில் உருத்திரரின் மாலையும், பின்னர் விஷ்ணுவின் மாலையும் உள்ளன. முதலில், தந்தை அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார், பின்னர் அவர்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும், ஒரு சாதாரண பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் ஆகி, இராச்சியத்தை ஆட்சிசெய்கிறார்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதே அதன் அர்த்தமாகும். 5000 வருடங்களுக்கு முன்னர் கற்பித்ததைப் போன்றே, தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அவர் ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் அதனைக் கற்பிப்பதற்கு வந்துவிட்டார். மக்கள் சிவனின் பிறந்தநாளையும், சிவ ராத்திரியையும் கொண்டாடுகிறார்கள். இரவு என்றால் கலியுகத்துப் பழைய உலகின் இறுதியும், புதிய உலகின் ஆரம்பமும் என்று அர்த்தமாகும். சத்திய, திரேதா யுகங்கள் பகலும், துவாபர, கலியுகங்கள் இரவும் ஆகும். பிரம்மாவின் எல்லையற்ற பகலும், பின்னர் பிரம்மாவின் எல்லையற்ற இரவும் உள்ளன. கிருஷ்ணரின் பகலும், இரவும் நினைவு கூரப்படுவதில்லை. கிருஷ்ணரிடம் ஞானம் எதுவும் இல்லை. சிவபாபாவிடமிருந்தே பிரம்மா ஞானத்தைப் பெறுகிறார், பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் அதனை இவர் மூலம் பெறுகிறீர்கள். பிரம்மாவின் சரீரத்தினூடாக, சிவபாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதே அதன் அர்த்தமாகும். அவர் உங்களைத் திரிகாலதரிசி ஆக்குகிறார். மனித உலகில் ஒருவரேனும் திரிகாலதரிசியாக இருக்க முடியாது. ஒருவர் அவ்வாறு இருந்திருப்பின், அவர் அந்த ஞானத்தைக் கொடுத்திருப்பார். எவ்வாறு இவ்வுலகச் சக்கரம் சுழல்கிறது எனும் ஞானத்தை எவராலும் கொடுக்க முடியாது. ஒரேயொருவரே அனைவரதும் கடவுள். அனைவருமே கிருஷ்ணரைக் கடவுள் என நம்பமாட்டார்கள்; அவர் ஓர் இளவரசர். ஓர் இளவரசர் கடவுளாக இருப்பாரா? அவர் ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்தால், பின்னர் அதனை இழக்கவும் வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்கிவிட்டு, பின்னர் சென்று, சப்தத்திற்கு அப்பாலுள்ள தாமத்தில் வசிக்கிறேன். பின்னர் துன்பம் ஆரம்பமாகும்பொழுது, எனது பாகம் ஆரம்பமாகிறது. நான் உங்களைச் செவிமடுக்கிறேன். நான் கருணை நிறைந்தவர் என அழைக்கப்படுகிறேன். பக்தி முதலில் கலப்படமற்றதாக உள்ளது, அதாவது, அவர்கள் சிவனை மாத்திரமே வழிபடுகிறார்கள், பின்னர் அவர்கள் தேவர்களை வழிபட ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது பக்தி கலப்படமுடையதாகி விட்டது. எப்பொழுது வழிபாடு ஆரம்பித்தது என்பதை வழிபடுபவர்கள் கூட அறியார்கள். சிவனும், சோமநாதரும் ஒருவரே. சிவன் அசரீரியானவர். அவர்கள் ஏன் அவரை சோமநாதர் (அமிர்தத்தின் பிரபு) என அழைக்கிறார்கள்? ஏனெனில் தந்தை சோமநாதர் குழந்தைகளாகிய உங்களுக்கு அருந்துவதற்கு ஞான அமிர்தத்தைக் கொடுத்தார். அவர்கள் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். அவர் பபுல்நாத் (முட்களின் பிரபு) எனவும் அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் உங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுகிறார். தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவரைச் சர்வவியாபி என அழைப்பது அவரை அவதூறு செய்வதாகும். தந்தை கூறுகிறார்: சங்கம யுகத்தின்பொழுதே, ஒருமுறை நான் வருகிறேன். பக்தி முடிவுக்கு வரும்பொழுதே நான் வருகிறேன். நான் ஒருமுறை மாத்திரம் வருவதே நியதியாகும். தந்தை ஒரேயொருவரே, ஓர் அவதாரம் மாத்திரமே உள்ளது. நான் ஒருமுறை மாத்திரமே வந்து, உங்கள் அனைவரையும் தூய இராஜயோகிகள் ஆக்குகிறேன். உங்களுடையது இராஜயோகமும், ஆனால் சந்நியாசிகளினதோ ஹத்தயோகமும் ஆகும். அவர்களால் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. பாரதத்திற்கு ஆதாரமாக இருப்பதற்காகவே ஹத்தயோகிகள் அந்தச் சமயத்தைக் கொண்டுள்ளார்கள். தூய்மை தேவைப்படுகிறது. பாரதம் 100மூ தூய்மையாக இருந்தது. அது இப்பொழுது தூய்மையற்று உள்ளது. இதனாலேயே அவர்கள் கூவியழைக்கிறார்கள்: வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள். சத்திய யுகம் தூய மனிதர்களின் உலகமாகும். இப்பொழுது இல்லற தர்மம் தூய்மையற்றதாக உள்ளது. சத்திய யுகத்தில், இல்லற தர்மம் தூய்மையானதாக இருந்தது. அத்தூய இல்லற தர்மம் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப் படுகிறது. ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்பவர். மனிதர்களால் மனிதர்களுக்கு முக்தியையோ ஜீவன் முக்தியையோ அருள முடியாது. நீங்களே ஞானக் கடலாகிய, தந்தையின் குழந்தைகள். பிராமணர்களாகிய நீங்கள் அனைவரையும் ஓர் உண்மையான யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறீர்கள், ஆனால் ஏனைய அனைவரும் மக்களை ஒரு பொய்யான யாத்திரைக்கே அழைத்துச் செல்கிறார்கள். நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள். நீங்கள் எவ்விதமான வன்முறையையும் புரிவதில்லை: நீங்கள் சண்டையிடுவதுமில்லை, காமவாளை உபயோகிப்பதுமில்லை. காமத்தை வெல்வதற்கு முயற்சி தேவை. நீங்கள் விகாரங்களை வெல்ல வேண்டும். பிரம்மாகுமார், குமாரிகளாகிய நீங்கள், சிவபாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். நீங்கள் உங்கள் மத்தியில் சகோதர, சகோதரிகளாக உள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் அசரீரியான கடவுளின் குழந்தைகள், ஆகவே நீங்கள் சகோதரர்கள் ஆவீர்கள். பின்னர் நீங்கள் பிரம்மபாபாவின் குழந்தைகள் ஆதலால், நீங்கள் நிச்சயமாக விகாரமற்றவர்களாக வேண்டும். நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். இதுவே பல பிறவிகளின் இறுதியாகும். ஒரு தாமரையைப் போன்று தூய்மையாகுங்கள், அப்பொழுது நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். தந்தையால் நீங்கள் இப்பொழுது மிகவும் விவேகிகள் ஆக்கப்படுகிறீர்கள். உங்கள் புத்தியில் உலக ஞானம் உள்ளது. நீங்கள் இப்பொழுது சுயதரிதனச் சக்கரதாரிகள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய காட்சி ஒன்றைப் பெறுகிறீர்கள், அதாவது, ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகின்ற, பரமாத்மாவாகிய பரமதந்தையிடமிருந்து ஞானத்தைப் பெறுகிறீர்கள். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார், அவரே உயிர்வாழ்பவர். உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்கு அவர் இப்பொழுது வந்துள்ளார். ஒரு விதையானவர் மாத்திரமே உள்ளார். எவ்வாறு விதையானவரிலிருந்து விருட்சம் வெளிப்படுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இது ஒரு தலைகீழ் விருட்சம்; உச்சியிலேயே விதை உள்ளது. எல்லாவற்றுக்கும் முதலில், தேவ விருட்சம் வெளிப்படுகின்றது, பின்னர், இஸ்லாமியர்கள் பௌத்தர்கள் போன்றோர் வருகின்றனர், அது தொடர்ந்தும் வளர்கின்றது. நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். வேறு எவராலும் இதனை உங்களுக்குக் கொடுக்க முடியாது. நீங்கள் செவிமடுப்பவை அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. சத்திய யுக ஆரம்பத்தில் சமயநூல்கள் கிடையாது. இது 5000 வருடங்களுக்குரிய, அத்தகையதோர் இலகுவான கதையாகும், இல்லையா? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மிகக்குறுகிய காலமே எஞ்சியுள்ளது. பெருமளவு காலம் கடந்துவிட்டது, குறுகிய காலம் மாத்திரமே எஞ்சியுள்ளது. ஆகவே, உங்களுக்கு இன்னமும் எஞ்சியுள்ள காலத்தைத் தந்தையின் நினைவில் ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துங்கள். நீங்கள் கடந்த காலத்தில் செய்துள்ள உங்கள் பாவங்களின் கர்மக் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

2. உங்கள் அமைதி எனும் ஆதிதர்மத்தில் ஸ்திரமானவர்கள் ஆகுவதற்கு, நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மை இருக்கும் இடத்திலேயே அமைதி இருக்கின்றது. எனது ஆதிதர்மம் அமைதி. நான் அமைதிக் கடலான, தந்தையின் குழந்தை. இதனை அனுபவம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய பணிவு எனும் சிறப்பியல்பால் அனைவராலும் மதிக்கப்பட்டு, இலகுவில் வெற்றியடைவீர்களாக.

பணிவாக இருப்பதே அனைவரினதும் மரியாதையைப் பெறுவதற்கான இலகு வழியாகும். தங்களைப் பணிவு எனும் சிறப்பியல்பு மூலம் வழிநடத்துகின்ற ஆத்மாக்கள் இலகுவாக வெற்றி அடைகின்றார்கள். பணிவாக இருப்பது எனில், உங்களுடைய சுய மரியாதையைக் கொண்டிருப்பதாகும். பணிவாக இருப்பதெனில், தலை வணங்குதல் என்று அர்த்தமில்லை, ஆனால் உங்கள் சிறப்பியல்பாலும், அன்பாலும் அனைவரையும் உங்களுக்குத் தலைவணங்குமாறு செய்வதாகும். தற்சமயத்திற்கேற்ப, இதுவே சதா, இலகுவான வெற்றியடைவதற்கான பிரதான அடிப்படையாகும். ஒவ்வொரு செயலிலும், உறவுமுறையிலும், தொடர்பிலும் பணிவாக இருப்பவர்களே வெற்றி இரத்தினங்கள் ஆகுகின்றார்கள்.

சுலோகம்:
ஞானத்தின் சக்தியைக் கிரகியுங்கள், அப்பொழுது தடைகள் உங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக, தடைகள் வெற்றி கொள்ளப்படும்.