02.08.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    01.03.86     Om Shanti     Madhuban


ஒரு புனித அன்னத்தின் புத்தி, மனோபாவம், பார்வை மற்றும் வாய்.


இன்று, பாப்தாதா சகல புனித அன்னங்களினதும் ஒன்றுகூடலைப் பார்க்கிறார். இது சாதாரணமான ஒன்றுகூடல் இல்லை. ஆனால், ஆன்மீகப் புனித அன்னங்களின் ஒன்றுகூடல் ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்குப் புனித அன்னம் ஆகியிருக்கிறீர்கள் என ஒவ்வொரு புனித அன்னத்தையும் பாப்தாதா பார்க்கிறார். ஓர் அன்னத்தின் சிறப்பியல்புகளை நீங்கள் மிக நன்றாக அறிவீர்களா? அனைத்திற்கும் முதலில், ஓர் அன்னத்தின் புத்தி என்றால், ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் எப்போதும் மேன்மையான, தூய எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். புனித அன்னம் என்றால், ஒரு கல்லுக்கும் இரத்தினத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை மிகத் தெளிவாக வேறுபிரித்து, அதைக் கிரகிக்கக் கூடியவர் என்று அர்த்தம். முதலில், ஒவ்வோர் ஆத்மாவினதும் நோக்கத்தை வேறுபிரித்தறிதல். பின்னர் அதற்கேற்ப இசைந்து கொடுத்தல். புனித அன்னம் ஒருபோதும் எந்தவோர் ஆத்மாவிற்காகவும் தூய்மையற்ற அல்லது சாதாரணமான மனோபாவத்தைக் கொண்டிருக்க மாட்டார். நீங்கள் எப்போதும் தூய நோக்கங்களையும் தூய உணர்வுகளையும் வைத்திருக்க வேண்டும். அவர்களின் நோக்கங்களை அறிந்தாலும், நீங்கள் ஒருபோதும் எவரினதும் சாதாரணமான அல்லது வீணான சுபாவத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் தூய நோக்கங்களையும் தூய உணர்வுகளையும் சுபாவம் என்று அழைக்கிறீர்கள். அது வீணானதாக இருந்தால், அதை மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு இத்தகைய அன்னம் போன்ற புத்திகளைக் கொண்டவர் ஆகியுள்ளீர்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். அதேபோன்று, நீங்கள் எந்தளவிற்கு அன்னம்போன்ற மனோபாவத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் பார்க்கிறார். அதாவது, ஒவ்வோர் ஆத்மாவினதும் நன்மையற்ற விடயங்களைப் பார்க்கும்போது, ஒவ்வோர் ஆத்மாவையிட்டும் சதா மேன்மையான, நலம்விரும்பும் மனோபாவத்தைக் கொண்டிருப்பதுடன், அந்த நன்மையற்றதை மாற்றக்கூடியதாக இருப்பதாகும். நலம்விரும்பும் மனோபாவத்தை புனித அன்னத்தின் மனோபாவம் என்பார்கள். உங்களின் நலம்விரும்பும் மனோபாவத்தால், உங்களால் மற்றவர்களை மாற்ற முடியும். உங்களின் நலம்விரும்பும் மனோபாவத்தால், மற்றவர்களின் நன்மையற்ற மனோபாவங்களை மாற்றக்கூடியதாக இருப்பதே, ஒரு புனித அன்னத்தின் கடமை ஆகும். அதேபோன்று, உங்களின் பார்வையைப் பொறுத்தவரை, எப்போதும் அனைவருக்காகவும் ஆன்மீக, ஆத்ம உணர்வுப் பார்வையைக் கொண்டிருங்கள். இது புனித அன்னத்தின் பார்வை எனப்படுகிறது. அதேபோன்று, வார்த்தைகளைப் பொறுத்தவரை, தீய வார்த்தைகள் வேறுவிடயம் என உங்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. அது பிராமணர்களுக்கு மாறிவிட்டது. ஆனால், வீணான வார்த்தைகளைப் பேசுவதும் புனித அன்னத்தின் வாயைக் கொண்டிருத்தல் என அழைக்கமுடியாது. உங்களின் வாயும் ஒரு புனித அன்னத்தின் வாயாக இருக்க வேண்டும். ஒருவரின் வாயில் இருந்து ஒருபோதும் வீணான வார்த்தைகள் வெளிப்படாமல் இருந்தால், அது அன்னத்தின் வாயின் ஸ்திதி என்று அழைக்கப்படும். எனவே, புனித அன்னத்தின் புத்தி, மனோபாவம், பார்வை மற்றும் வாய். இவை தூயதாகும்போது, அதாவது, மேன்மையானதாகும்போது, ஒரு புனித அன்னத்தின் ஸ்திதியின் நடைமுறை ஆதிக்கம் புலப்படும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். எந்தளவிற்கு நீங்கள் சதா ஒரு புனித அன்னமாக நடக்கிறீர்கள், அசைகிறீர்கள்? ஏனெனில் இப்போது சுய முன்னேற்றத்திற்கு அதிகளவு நேரம் இல்லை. ஆகவே, உங்களைச் சோதித்துப் பார்த்து, மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தின் மாற்றம், நீங்கள் சத்திய யுகத்தின் உரிமையைக் கோருவதற்கு உதவிசெய்யும். சத்தியயுகம் நீண்ட காலத்திற்கு மாறியிருக்கும். பாப்தாதா இந்த சமிக்கையை உங்களுக்கு முன்னரும் கொடுத்துள்ளார். நீங்கள் அனைவரும் சுயத்தில் இரட்டைக் கீழ்க் கோடிட்ட கவனத்தைச் செலுத்துகிறீர்களா? இப்பொது குறுகிய காலத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் பெறுகின்ற மேன்மையான பேறுகளின் வெகுமதியானது, நீண்ட காலத்திற்கு நீங்கள் கவனம் செலுத்துவதன் மூலம் பெறுகின்ற வெகுமதிக்குச் சமமானது. இதனாலேயே, இந்தக் குறுகிய காலம் மிகவம் மேன்மையானது, அழகானது. இதற்கு முயற்சியும் தேவையில்லை. தந்தை எதையாவது கூறினார், நீங்கள் அதைக் கிரகித்தீர்கள். அதைக் கிரகிப்பதன் மூலம், அது இயல்பாகவே நடைமுறை ஆகுகிறது. புனித அன்னத்தின் கடமை கிரகிப்பதே ஆகும். எனவே, இது இத்தகைய புனித அன்னங்களின் ஒன்றுகூடல், இல்லையா? நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். எது வீணானது என்றும் எது சாதாரணமானது என்றும் நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். எதையாவது புரிந்து கொண்டபின்னர், நீங்கள் இயல்பாகவே அதை நடைமுறையில் போடுகிறீர்கள். எவ்வாறாயினும், சாதாரணமான மொழியில், இப்போது இது எனக்குப் புரிகிறது என நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, உங்களால் அதைச் செய்யாமல் இருக்க முடியாது. ஆகவே, அனைத்திற்கும் முதலில், எது சாதாரணம் என்பதையும் எது வீணானது என்பதையும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் சிலவேளைகளில் வீணானவற்றை அல்லது சாதாரணமானவற்றை மேன்மையானதாகக் கருதவில்லை, அல்லவா? இதனாலேயே, முதலாவதும் பிரதானமானதுமான விடயம் புனித அன்னத்தின் புத்தி ஆகும். இதனால், நீங்கள் இயல்பாகவே வேறுபிரித்தறியும் சக்தியை விருத்தி செய்கிறீர்கள். ஏதாவதொன்றைச் சரியா அல்லது தவறா என நீங்கள் இனங்காணாதபோது, காலமும் எண்ணங்களும் வீணாகிப் போகின்றன. நீங்கள் செய்யும் வீணான, தவறான விடயங்களைச் சரியென நீங்கள் கருதுகிறீர்கள். இவ்வாறு மேலதிக நேரம் வீணாகிப் போகிறது. அது வீணானது. ஆனால் நீங்கள் சக்திசாலிகள் என்றும் நீங்கள் நினைப்பதே சரியென்றும் நீங்கள் கூறுவதே சரியென்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். இதில் உங்களிடம் வேறுபிரித்தறியும் சக்தி இல்லாததால், மனதின் சக்தி, காலத்தின் சக்தி, வார்த்தைகளின் சக்தி அனைத்தும் இழக்கப்பட்டுவிடுகின்றன. அதன்பின்னர், ஏனைய மனிதர்களிடமிருந்து உதவியை எடுத்துக் கொள்ளும் சுமையும் அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன? ஏனெனில், நீங்கள் புனித அன்னத்தின் புத்தியைக் கொண்டவராக ஆகவில்லை. எனவே, பாப்தாதா மீண்டும் ஒருதடவை புனித அன்னங்கள் அனைவருக்கும் இந்த சமிக்கையைக் கொடுக்கிறார்: தவறைத் தவறாகப் பார்க்காதீர்கள். இவர் தவறுதான் செய்கிறார் என நினைக்காதீர்கள். ஆனால், எவ்வாறு பிழையானதைச் சரியாக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். இதுவே உபகார உணர்வுகளைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. உங்களின் மேன்மையான உணர்வுகளாலும் தூய ஆசிகளாலும், நீங்கள் உங்களின் வீணான சுபாவத்தையும் மற்றவர்களின் வீணான சுபாவத்தையும் மாற்றுவதில் வெற்றி அடைவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? அனைத்திற்கும் முதலில், உங்களை வெற்றி கொள்ளுங்கள். பின்னர் மற்றவர்களை வெற்றி கொள்ளுங்கள். அப்போது நீங்கள் இயற்கையையும் வெற்றி கொள்வீர்கள். இந்த மூன்றையும் வெற்றி கொள்ளுதல், உங்களை வெற்றி மாலையின் மணி ஆக்கும். சூழலும் அதிர்வலைகளும் பௌதீக சடப்பொருளும் அனைத்தும் இயற்கையில் அடங்குகின்றன. எனவே, நீங்கள் இந்த மூன்றையும் வெற்றி கொண்டுவிட்டீர்களா? இதன் அடிப்படையில், வெற்றி மாலையில் உங்களின் இலக்கம் என்னவென்பதை உங்களால் பார்க்க முடியும். இதனாலேயே, இது வெற்றி மாலை (வைஜயந்திமாலை) என்று அழைக்கப்படுகிறது. எனவே, நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களா? அச்சா.

இன்று, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களின் முறையாகும். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களும், மதுவனத்தைச் சேர்ந்த உங்களிடமிருந்து தங்க வேந்தவர்கள் ஆகுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஏனெனில், அனைவரையும் உங்களுக்கு முன்னால் வைப்பதன் மூலம், அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் சிறப்பியல்பு உங்களுக்கு உள்ளது. மற்றவர்களை உங்களுக்கு முன்னால் வைத்து, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதென்றால், ஒரு வேந்தர் ஆகுதல் என்று அர்த்தம். ஒரு வாய்ப்பை அதிகளவில் பயன்படுத்திக் கொள்பவர்களும், ஒரு வாய்ப்பை அளிப்பவர்களும் வேந்தர்கள் (சான்சிலர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். பாப்தாதா எப்போதும் ஒவ்வொரு குழந்தையினதும் சிறப்பியல்பைப் பார்க்கிறார். அதைப் பற்றிப் பேசுகிறார். அவுஸ்திரேலியாவில், குறிப்பாகப் பாண்டவர்கள் சேவை செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். பெரும்பாலான நிலையங்களைப் பாண்டவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். சக்திகள் பாண்டவர்களுக்கு வாய்ப்பை அளித்துள்ளார்கள். மற்றவர்களை முன்னால் வைப்பவர்கள், எப்போதும் தாங்கள் முன்னால் இருக்கிறார்கள். இதுவும் சக்திகளின் பெருந்தன்மையே ஆகும். எவ்வாறாயினும், பாண்டவர்களான நீங்கள் சதா உங்களைக் கருவிகளாகக் கருதியவண்ணம் சேவையில் முன்னேறுகிறீர்கள், இல்லையா? சேவை செய்யும்போது, கருவியாக உணர்வதே சேவையில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை ஆகும். பாப்தாதா மூன்று வார்த்தைகளைக் கூறுகிறார். இது இறுதியில் சாகார் பிரம்மாவினால் கூறப்பட்ட வார்த்தைகள் ஆகும் - அசரீரி நிலை, விகாரமற்ற நிலை, அகங்காரமற்ற நிலை. ஒரு கருவி ஆகுவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே இந்த மூன்று சிறப்பியல்புகளையும் விருத்தி செய்து கொள்கிறீர்கள். ஒரு கருவியாக இருக்கும் உணர்வு இல்லாவிட்டால், இந்த மூன்று சிறப்பியல்புகளில் எதையும் உங்களால் அனுபவம் செய்ய முடியாது. கருவியாக இருக்கும் உணர்வானது, இலகுவாக நான் மற்றும் எனது என்பவற்றின் சகல வகையான உணர்வுகளையும் முடித்துவிடுகிறது. நான் ஒரு கருவியாக இருக்கும்போது, நான் அல்லது எனது என்று எதுவும் கிடையாது. ஒருவரின் ஸ்திதியில் ஏற்படும் குழப்பம் இந்த ஒரு பலவீனத்தினாலேயே ஆகும். நீங்கள் சேவை செய்வதற்கும் அத்துடன் உங்களின் பறக்கும் ஸ்திதிக்கும் முயற்சி செய்ய வேண்டும். கருவியாக இருத்தல் என்றால், எப்போதும் உங்களைக் கருவியாக்கிய ஒரேயொருவரை நினைவு செய்தல் என்று அர்த்தம். எனவே, இந்தச் சிறப்பியல்பைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் சதா சேவையை விரிவாக்குவதில் முன்னேறுகிறீர்கள், இல்லையா? சேவையில் வளர்ச்சி அடைதல் வெற்றியின் அடையாளம் ஆகும். நீங்கள் இப்போது ஆட்ட, அசைக்க முடியாத ஸ்திதியில் மிகவும் அனுபவசாலி ஆகிவிட்டீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? அவுஸ்திரேலியா என்றால், மற்றவர்களிடம் இல்லாத மேலதிகமான ஏதாவதொன்றை வைத்திருப்பவர்கள் என்ற அர்த்தம். அவுஸ்திரேலியாவில் பல்வகையினர்- குஜராத்திகள் போன்றோர் கிடையாது. புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகிறது என்ற அதிகளவு பணியை நீங்கள் செய்துள்ளீர்கள். உங்களுக்குச் சமமானவர்களை நீங்கள் விழித்தெழச் செய்துள்ளீர்கள். குமார்களும் குமாரிகளும் மிக நல்ல நன்மையைப் பெற்றுள்ளார்கள். இந்த வாழ்க்கையில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த வாழ்க்கைக்காக மேன்மையான தீர்மானத்தை எடுக்க வேண்டும். உங்களின் சொந்த வாழ்க்கையை நீங்கள் மேன்மையானது ஆக்கினால், எல்லா வேளையும் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் தவறான ஏணியில் ஏறுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். ஒவ்வொரு விளக்கும் இன்னொன்றை எரியச் செய்வதையும், பல தீபங்கள் எரிவதையும், ஒரு தீபங்களின் மாலை உருவாக்கப்பட்டிருப்பதையும் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். உங்களிடம் நல்ல ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. உங்களைச் சேவையில் மும்முரமாக வைத்திருப்பதன் மூலம், நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

முதலில், ஒரு கருவியாக இருப்பதன் உணர்வைப் பற்றி உங்களுக்குக் கூறப்பட்டது. இரண்டாவதாக, சேவையில் கருவிகளாக இருப்பவர்களுக்கு, அவர்களின் சுய முன்னேற்றத்திற்கும் சேவையில் முன்னேறுவதற்கும் விசேடமான சுலோகம் ஒன்று உள்ளது. இது அவர்களின் பாதுகாப்பிற்கான வழிமுறையும் ஆகும். கருவி ஆத்மாக்களான நாங்கள் என்ன செய்கிறோமோ, எங்களைப் பார்க்கும் மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். இது ஏனெனில், சேவையில் கருவி ஆகுதல் என்றால், மேடையில் வருதல் என்று அர்த்தம். எதையாவது செய்து காட்டுபவர் ஒருவர் மேடைக்குச் செல்லும்போது, அதிகளவு கவனம் செலுத்துவதைப் போல, சேவைக்காகக் கருவி ஆகுதல் என்றால் மேடையில் ஒரு பாகத்தை நடித்தல் என்று அர்த்தம். அனைவரின் பார்வையும் மேடையின் மீதே இருக்கும். ஒருவர் கதாநாயக நடிகராக இருக்கும்போது, அனைவரின் பார்வையும் அதிகளவில் அவர் மீதே இருக்கும். ஆகவே, இந்த சுலோகம் பாதுகாப்பிற்கான வழிமுறை ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் இயல்பாகவே பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் ஒரு நிலையத்தில் இருந்தவண்ணமோ அல்லது வேறு எங்கேயாவது இருந்தவண்ணமோ சேவை செய்தாலும், நீங்கள் அனைவரும் சேவையாளர்களே. சிலர் வீடுகளில் வசித்தவண்ணம், சேவை செய்வதற்கான தமது வாய்ப்பைப் பெறுகிறார்கள். அதுவும் சேவை மேடையில் இருப்பதாகும். உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆனால் உங்களின் நேரத்தைச் சேவை செய்வதில் கழியுங்கள். சேவைக் கணக்கில் அதிகளவு சேமிக்கப்படுகிறது. நேர்மையான இதயங்களுடன் சேவை செய்பவர்கள், தமது கணக்குகளில் அதிகளவைச் சேமிக்கிறார்கள். பாப்தாதாவிடம் ஒவ்வொரு குழந்தையினதும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையான சேவையின் கணக்கு உள்ளது. அது இயல்பாகவே தொடர்ந்து சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு கணக்கையும் தனித்தனியாக வைக்க வேண்டியதில்லை. கணக்குகள் வைத்திருப்பவர்களிடம் பல பைல்கள் இருக்கும். தந்தையிடம் பௌதீகமான பைல்கள் எதுவும் கிடையாது. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையான ஒவ்வொருவரின் பதிவேடும் ஒரு விநாடியில் வெளிப்படும். இயல்பான சேமிப்பு நிகழ்கிறது. எவராலும் என்னைப் பார்க்க முடியவில்லை, எவராலும் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை என நினைக்காதீர்கள். ஒவ்வொருவரும் எத்தகையவர், அவர் என்ன செய்கிறார், என்ன ஸ்திதியில் இருந்தவண்ணம் அவர் அதைச் செய்கிறார் என்ற கணக்கு பாப்தாதாவிடம் உள்ளது. அனைத்தும் சேமிக்கப்படுகின்றன. அவரிடம் பைல் கிடையாது. ஆனால், அது இறுதியானது. அவுஸ்திரேலியாவிலுள்ள சக்திகள் தந்தைக்குச் சொந்தமாகுவதிலும், அவரை இனங்கண்டு கொள்வதிலும், தந்தையின் மீதுள்ள அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதிலும் மிக நல்ல தைரியத்தைக் காட்டியுள்ளார்கள். தளம்பலினால் ஏற்படும் தவறுகள், இடத்திற்கேற்பவும், தேசத்திற்கேற்பவும், உங்களின் கடந்த கால வாழ்க்கையின் சம்ஸ்காரங்களுக்கேற்பவும் இடம்பெறுகின்றன. நீங்கள் இதற்கு அப்பால் சென்று, அன்பெனும் பந்தனத்துடன் முன்னேறிச் செல்கிறீர்கள். இதனாலேயே, பாப்தாதா சக்திகளுக்கு அவர்களின் தைரியத்திற்காகப் பாராட்டுகிறார். ஒரேயொரு பலம், ஒரேயொரு ஆதாரம் என்பது உங்களை முன்னேறச் செய்கிறது. எனவே, சக்திகளின் தைரியமும் பாண்டவர்களின் சேவைக்கான உற்சாகமும் என்ற இறக்கைகள் பலம் வாய்ந்தவை ஆகியுள்ளன. சேவைக்களத்தில், பாண்டவர்களும் மகாவீரர்களாக முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் தளம்பல்களுக்கு அப்பால் செல்வதில் நன்றாக இருக்கிறார்கள். இது அனைவரின் ரூபம் ஆகும். பாண்டவர்கள் பெரியவர்களாகவும் பலம்வாய்ந்தவர்களாகவும் உயரமானவர்களாகவும் பரந்தவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் ஸ்திதி மேன்மையானது, பலம்வாய்ந்தது. இதனாலேயே, பாண்டவர்கள் உயரமானவர்களாகவும் துணிவானவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். அவுஸ்திரேலியர்களும் மகத்தான அளவில் கருணைநிறைந்தவர்கள். அவர்கள் தடுமாறித் திரியும் ஆத்மாக்களிடம் கருணைநிறைந்தவர்களாகி, சேவை செய்வதில் முன்னேறிச் செல்கிறார்கள். அவர்களால் சேவை செய்யாமல் வாழ முடியாது. முன்னேறிச் செல்லும் குழந்தைகளின் சிறப்பியல்பைப் பார்க்கையில் பாப்தாதா எப்போதும் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் குறிப்பாகப் பாக்கியசாலிகள். ஒவ்வொரு குழந்தையின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் காணும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொருவரும் மேன்மையான இலக்குடன் முன்னேறிச் செல்வதை அவர் பார்க்கிறார். அவர் தொடர்ந்தும் அவ்வாறே செய்வார். பாப்தாதா சதா சிறப்பியல்புகளை மட்டுமே பார்க்கிறார். ஒவ்வொருவரும் அடுத்தவரை விட அதிகமாக நேசிக்கப்படுகிறார். நீங்களும் ஒவ்வொருவரையும் இவ்வாறே பார்க்கிறீர்கள், இல்லையா? நீங்கள் பார்க்கும் எவரும் அடுத்தவரை விட அதிகம் நேசிக்கப்படுகிறார். ஏனெனில், 5000 வருடங்களுக்குப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். எனவே, அவர்கள் மிகவும் அன்பானவர்களாக உணரப்படுகிறார்கள். தந்தையை நேசிப்பதன் அடையாளம், நீங்கள் ஒவ்வொரு பிராமண ஆத்மாவையும் நேசிப்பீர்கள் என்பதே ஆகும். ஒவ்வொரு பிராமணரையும் நேசிப்பதெனில், தந்தையை நேசித்தல் என்று அர்த்தம். பிராமணர்கள் மட்டுமே மாலையில் உள்ள ஒருவரோடு ஒருவர் உறவுமுறைகளைப் பேணுவார்கள். தந்தை ஓய்வெடுத்து, இதை அவதானித்துக் கொண்டிருப்பார். எனவே, எப்போதும் தந்தையிடமிருந்து அன்பின் அடையாளத்தை அனுபவம் செய்யுங்கள். தந்தை அனைவரிடமும் அன்பு வைத்திருக்கிறார். எனவே, நீங்களும் அனைவரின் மீதும் அன்பு வைக்க வேண்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1. நீங்கள் அனைவரும் உங்களை விசேடமான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? நீங்கள் விசேடமான ஆத்மாக்கள். விசேடமான ஒரு பணிக்குக் கருவிகள் ஆவீர்கள். நீங்கள் உங்களின் சிறப்பியல்புகளைக் காட்ட வேண்டும். இது எப்போதும் உங்களின் விழிப்புணர்வில் இருக்க வேண்டும். விசேடமான விழிப்புணர்வானது எந்தவொரு சாதாரணமான விழிப்புணர்வையும் சக்திவாய்ந்தது ஆக்குகிறது. அது வீணானவற்றையும் முடித்துவிடுகிறது. ஆகவே, எப்போதும் விசேடம் என்ற இந்த வார்த்தையை நினைவு செய்யுங்கள். உங்களின் வார்த்தைகள் விசேடமானவை. நீங்கள் பார்க்கும் முறை விசேடமானது. உங்களின் சிந்தனை விசேடமானது. நீங்கள் செய்வதும் விசேடமானது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விசேடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே மாறுவீர்கள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் இலகுவாக சுய மாற்றத்தையும் உலக மாற்றத்தையும் ஏற்படுத்துவீர்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொடர்ந்து விசேடம் என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், இத்தகைய முழுமை நிலையை அடைகின்ற உங்களின் இலட்சியத்தை அல்லது இலக்கை அடைவீர்கள்.

2. நீங்கள் எப்போதும் தந்தையினதும் ஆஸ்தியினதும் உணர்வுடன் இருக்கிறீர்களா? மேன்மையான விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் மேன்மையான ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். உங்களின் ஸ்திதியின் அடிப்படை, உங்களின் விழிப்புணர்வாகும். உங்களின் விழிப்புணர்வு பலவீனமாக இருந்தால், உங்களின் ஸ்திதியும் பலவீனம் அடையும். உங்களின் விழிப்புணர்வு எப்போதும் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்தச் சக்திவாய்ந்த விழிப்புணர்வானது, நான் தந்தைக்குச் சொந்தமானவன், தந்தை எனக்குச் சொந்தமானவர் என்பதே ஆகும். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் ஸ்திதியானது சக்திவாய்ந்ததாக இருக்கும். நீங்கள் மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குவீர்கள். எனவே, எப்போதும் உங்களின் விழிப்புணர்விற்கு விசேடமான கவனம் செலுத்துங்கள். சதா சக்திவாய்ந்த விழிப்புணர்வும் சக்திவாய்ந்த ஸ்திதியும் இருக்க வேண்டும். அதன் மூலம் சக்திவாய்ந்த சேவை இயல்பாகவே இடம்பெறும். உங்களின் விழிப்புணர்வும் ஸ்திதியும் சேவையும் மூன்றும் சக்திநிறைந்ததாக இருக்க வேண்டும். நீங்கள் ஓர் ஆளியைப் போட்டதும், ஒளி வருகிறது. அந்த ஆளியை நிறுத்தியதும், இருள் சூழ்ந்துவிடுகிறது. அதேபோன்று, விழிப்புணர்வு என்பதும் ஓர் ஆளியே. உங்களின் விழிப்புணர்வெனும் ஆளி பலவீனம் ஆகியதும், உங்களின் ஸ்திதியும் பலவீனம் ஆகுகிறது. எப்போதும் உங்களின் விழிப்புணர்வெனும் ஆளியில் கவனம் செலுத்துங்கள். இதை நீங்கள் செய்யும்போது, உங்களுக்கும் அனைவருக்கும் நன்மை ஏற்படும். நீங்கள் புதிய பிறவி எடுத்துள்ளீர்கள். எனவே, புதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். பழைய விழிப்புணர்வின் அனைத்தும் இப்போது முடிவடைய வேண்டும். ஆகவே, இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் சதா வெற்றியை அனுபவம் செய்யுங்கள்.

3. நீங்கள் அனைவரும் உங்களைப் பாக்கியசாலிகளாகக் கருதுகிறீர்களா? ஆசீர்வாதங்களின் பூமிக்கு வருவதே மகத்தான பாக்கியம் ஆகும். நீங்கள் பெற்ற பாக்கியம், ஆசீர்வாதங்களின் பூமியை வந்தடைவதாகும். ஆனால் இந்தப் பாக்கியத்தை நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் மேன்மையானது ஆக்கிக் கொள்ள முடியும். மேன்மையான வழிகாட்டல்களே பேனா ஆகும். இதன் மூலம் உங்களின் பாக்கிய ரேகையை உங்களால் வரைந்து கொள்ள முடியும். எந்தளவிற்கு அதிகமாக உங்களின் பாக்கிய ரேகையை நீங்கள் மேன்மையானது ஆக்கிக் கொள்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். இந்த மேன்மையான நேரம் மட்டுமே, கல்பம் முழுவதிலும் உங்களின் பாக்கிய ரேகையை உங்களால் வரையக்கூடிய நேரம் ஆகும். நீங்கள் இத்தகைய இடத்தை இத்தகைய நேரத்தில் வந்தடைந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் சிறிதளவுடன் சந்தோஷப்படுபவர்கள் இல்லை. அருள்பவர் கொடுக்கும்போது, வாங்குபவர்கள் மட்டும் ஏன் களைப்படைய வேண்டும்? தந்தையை நினைவு செய்வது மட்டுமே உங்களை மேன்மையானவர்கள் ஆக்கும். தந்தையை நினைவு செய்தல் என்றால் தூய்மையானவர்கள் ஆகுதல் என்று அர்த்தம். பிறவி பிறவியாக உங்களுக்கு ஓர் உறவுமுறை உள்ளது. எனவே, நினைவு செய்வது கடினமா? அன்புடனும் ஓர் உறவுமுறையுடனும் பாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் யாரையாவது நினைவு செய்யும்போது, அவரை நினைக்காமல் இருப்பது என்பது சாத்தியமில்லை. உண்மையில், நீங்கள் அவரை மறக்க முயற்சித்தாலும், அப்போதும் அவரை நினைவு செய்வீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் நெற்றியில் திருப்தியின் பிரகாசத்தின் கணநேர தரிசனத்தைக் கொடுக்கும் காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவீர்களாக.

எப்போதும் திருப்தியாக இருப்பவர்களின் நெற்றிகளில் எப்போதும் திருப்தியின் பிரகாசம் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சந்தோஷமற்ற ஆத்மா எவரும் அவர்களைப் பார்த்தால், அந்த ஆத்மாவும் சந்தோஷம் அடைவார். அவரின் சந்தோஷமின்மையும் முடிந்துவிடும். திருப்தியின் சந்தோஷப் பொக்கிஷத்தை வைத்திருப்பவர்களிடம் அனைவரும் இயல்பாகவே கவரப்படுவார்கள். அவர்களின் சந்தோஷமான முகங்கள், அவர்களை அவ்வாறு செய்த ஒரேயொருவரின் அறிமுகத்தைக் கொடுக்கும் உயிருள்ள விளம்பரப்பலகைகளாக இருக்கும். எனவே, திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களைத் திருப்திப்படுத்தும் திருப்தி இரத்தினங்களாக ஆகுங்கள். அதன் மூலம் பலருக்குக் காட்சிகள் கிடைக்கும்.

சுலோகம்:
மற்றவர்களைக் காயப்படுத்துபவர்களின் கடமை காயப்படுத்துவதே. அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது உங்களின் கடமை ஆகும்.