02.09.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே ஆன்மீக வழிகாட்டிகள். நீங்கள் அனைவருக்கும் அமைதி தாமத்திற்கான, அதாவது, அமரத்துவ தாமத்திற்கான பாதையைக் காட்ட வேண்டும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கும் போதை என்ன? அத்துடன், அப்போதையின் அடிப்படையில் எந்த நம்பிக்கையான வார்த்தைகளை நீங்கள் பேசுகிறீர்கள்?

பதில்:
தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் பிறவிபிறவியாகத் தூய்மையாகுகின்றீர்கள் என்னும் போதை குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. எத்தனை தடைகள் வந்தாலும், சுவர்க்கம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும் என நீங்கள் நம்பிக்கையுடன் கூறுகிறீர்கள். புதிய உலகின் ஸ்தாபனையும், பழைய உலகின் விநாசமும் நிச்சயமாக இடம்பெறவுள்ளது. இது ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். இதைப் பற்றிய சந்தேகம் என்ற கேள்விக்கே இடமில்லை.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், இவ்வேளையில், ஆன்மீக வழிகாட்டிகள் ஆகிவிட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இவ்வாறு ஆகுவதுடன், ஏனையோரையும் அதேபோன்று ஆக்கவும் வேண்டும். இவ்விடயங்களை மிகவும் நன்றாகக் கிரகியுங்கள். மாயையின் புயல்கள் உங்களை இவ்விடயங்களை மறக்கச் செய்கின்றன. தினமும் காலையிலும், இரவிலும் நீங்கள் இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆன்மீகத் தந்தையினால் ஒரு விலைமதிப்பிட முடியாத வாழ்வுக்கென எங்களுக்கு இந்த விலைமதிப்பிட முடியாத இரத்தினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆன்மீகத் தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது முக்திதாமத்திற்கான பாதையைக் காட்டுகின்ற ஆன்மீக வழிகாட்டிகள். இதுவே அமரத்துவப் பூமிக்குச் செல்வதற்கான உண்மையான அமரத்துவக் கதையாகும். நீங்கள் அமரத்துவப் பூமிக்குச் செல்வதற்காகத் தூய்மையாகுகிறீர்கள். எவ்வாறு தூய்மையற்ற, சீரழிந்த ஆத்மாக்களால் அமரத்துவப் பூமிக்குச் செல்ல முடியும்? மக்கள் அமர்நாத்திற்;கு (அமரத்துவப் பிரபு) ஒரு யாத்திரை செல்கிறார்கள். சுவர்க்கம் அமரத்துவப் பிரபுவின் தாமம் எனவும் அழைக்கப்படுகிறது. அங்கு அமரத்துவப் பிரபு மாத்திரம் வசிக்க மாட்டார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் அமரத்துவப் பூமிக்குச் செல்கிறீர்கள். அமரத்துவ தாமமாகிய பரந்தாமம் (அமைதிதாமம்), ஆத்மாக்களுக்கு உரியதாகும். பின்னர் நீங்கள் அமரத்துவப் பூமிக்குச் சென்று, சரீரங்களை எடுக்கிறீர்கள். யார் உங்களை உங்கள் வசிப்பிடத்திற்கு அழைத்துச் செல்வது? பரமாத்மாவாகிய, பரமதந்தையே அங்கு ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். அந்த இடம் அமரத்துவ தாமம் எனவும் அழைக்கப்பட முடியும். எவ்வாறாயினும், அதற்கான சரியான பெயர் அமைதி தாமமாகும். அனைவரும் அங்கு செல்ல வேண்டும். நாடகத்தின் நியதி தவிர்க்கப்பட முடியாதது. இதை மிகவும் நன்றாக உங்கள் புத்தியில் பதித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் முதலில், உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். பரமாத்மாவாகிய பரமதந்தையும் ஓர் ஆத்மா ஆவார். அவர் பரமாத்மாவாகிய பரமதந்தை என்றே அழைக்கப்படுவதுடன்;, அவரே எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் மாத்திரமே ஞானக்கடலும், தூய்மைக்கடலும் ஆவார். குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையாக்குவதற்காக, அவர் இப்பொழுது உங்களுக்கு இந்த ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்வதால், உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். நினைவுசெய்தல் யோகம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் குழந்தைகள். ஆகவே, நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நினைவுசெய்வதால் மாத்திரமே, உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். நீங்கள் இந்த நச்சுப் பூமியிலிருந்து சிவனின் தாமத்திற்;குச் சென்று, பின்னர் விஷ்ணுவின் பூமிக்குச் செல்வீர்கள். இங்கு இருப்பதற்காக அன்றி, அங்கு செல்வதற்காகவே நாங்கள் இங்கு கற்கின்றோம். இங்கு அரசர்கள் ஆகுபவர்கள், செல்வத்தைத் தானம் செய்வதனாலேயே அவ்வாறு ஆகுகிறார்கள். சிலர் ஏழைகளை மிக நன்றாகப் பராமரிக்கிறார்கள். சிலர் வைத்தியசாலைகளைக் கட்டுகிறார்கள், மற்றும் சிலர் தர்மசாலைகள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள். ஏனையோர் செல்வத்தைத் தானம் செய்கிறார்கள். குறிப்பாக, சிந்துவில், மூல்சந்த் என்பவர் தானே சென்று ஏழைகளுக்குப் பணத்தைத் தானம் செய்வது வழக்கமாகும். அவரே ஏழைகளை மிகவும் நன்றாகப் பராமரிப்பது வழக்கம். அவ்வாறான பல தானம் செய்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அதிகாலை விழித்தெழுந்து, காலையில் தானம் செய்வதற்கு உணவையும் எடுத்துச் சென்று, அதை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கின்றார்கள். இந்நாட்களில், பெருமளவு ஏமாற்றுதல் உள்ளது. தகுதியானவர்களுக்கே தானங்கள் செய்யப்பட வேண்டும். தானங்கள் செய்கின்ற சிலருக்கு அத்தகைய விவேகமும் இருப்பதில்லை! வெளியே அமர்ந்திருந்து இரப்பவர்களுக்குத் தானம் செய்வது, ஓர் உண்மையான தானமல்ல. அது அவர்களுடைய வியாபாரமாகும். ஏழைகளுக்குத் தானம் செய்பவர்கள் ஒரு சிறந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். இப்பொழுது நீங்கள் அனைவரும் ஆன்மீக வழிகாட்டிகள். நீங்கள் ஒரு கண்காட்சி அல்லது ஓர் அருங்காட்சியகத்தைத் திறக்கும்பொழுது நீங்களே சுவர்க்கத்திற்கான வழிகாட்டிகள் அல்லது புதிய உலக இராச்சியத்திற்கான வழிகாட்டிகள் எனக் காட்டும் பெயரை எழுத வேண்டும். எவ்வாறாயினும், மனிதர்கள் எதையுமே புரிந்துகொள்ள மாட்டார்கள். இது ஒரு முட்காடாகும். சுவர்க்கமே தேவர்கள் வாழுகின்ற, மலர்த்தோட்டம். தந்தையை நினைவுசெய்வதனால், பிறவிபிறவியாக நீங்கள் தூய்மையாகுகிறீர்கள் என்னும் போதை குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும், நிச்சயமாகச் சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிய உலகின் ஸ்தாபனையும், பழைய உலகின் விநாசமும் நிச்சயமாக நடைபெறவுள்ளது. அது ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம், இதில் சந்தேகம் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுக்கு அதைப் பற்றிய சிறிதளவு சந்தேகமேனும் இருக்கக்கூடாது. அனைவரும் கூறுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! அவர்கள் ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்: வந்து எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள். ஐந்து விகாரங்களே துன்பத்தைக் கொண்டு வருகின்றன. அதுவே சந்தோஷ தாமமான, விகாரமற்ற உலகமாகும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். சுவர்க்கம் மேலே இருக்கிறது என மக்கள் எண்ணுகிறார்கள். முக்திதாமம் மேலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. இங்கு ஜீவன்முக்திக்காக அனைவரும் கீழிறங்கி வர வேண்டும் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இதை மிகவும் நன்றாகக் கிரகித்து, ஞானத்தை மாத்திரம் கடையுங்கள். வீட்டில் மாணவர்கள் தாங்கள் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டிய பரீட்சைத்தாளைப் பற்றியும், தாங்கள் செய்ய வேண்டிய ஏனைய விடயங்கள் பற்றியும் மாத்திரமே சிந்திக்கிறார்கள். ஆகவே, உங்கள் சொந்த நன்மைக்காகக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் ஆத்மாக்களைச் சதோபிரதானாக்க வேண்டும். நீங்கள் முக்திதாமத்துக்குச் செல்வதற்காகத் தூய்மையாக வேண்டும். பின்னர், ஞானத்தைக் கற்பதனால், நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். ஓர் ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண மனிதனிலிருந்து ஒரு சட்டநிபுணர் ஆகுகிறேன். இந்த ஆத்மாவாகிய நான், ஒரு சாதாரண மனிதனிலிருந்து ஓர் ஆளுநர் ஆகுகிறேன். ஆத்மாவே சரீரத்துடன் அவ்வாறு ஆகுகிறார். அவருடைய சரீரம் மரணிக்;கும்பொழுது, அந்த ஆத்மா மீண்டும் கற்க ஆரம்பிக்க வேண்டும். ஆத்மாக்களே உலக அதிபதிகள் ஆகுவதற்கு முயற்சி செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஆத்மாக்கள் என்பதை மிக நன்றாக நினைவுசெய்யுங்கள். தேவர்களுக்கு இதைக் கூறத் தேவையில்லை. அவர்கள் ஏற்கெனவே தூய்மையாக இருப்பதனால், அவர்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டியதில்லை; அவர்கள், தங்கள் வெகுமதியை அனுபவம் செய்கிறார்கள். தந்தையை நினைவுசெய்வதற்கு, அவர்கள் தூய்மையற்றவர்கள் அல்ல. ஆத்மாக்களாகிய நீங்களே தூய்மையற்றவர்கள். இதனாலேயே, நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவர்கள் அவரை நினைவுசெய்ய வேண்டியதில்லை. இது நாடகமாகும். இரு நாட்கள் ஒரேமாதிரி இருக்க மாட்டாது. இந்நாடகம் தொடர்ந்தும் நகர்கிறது. ஒவ்வொரு பாகமும் தொடர்ந்தும் நாள் முழுவதும் விநாடிக்கு விநாடி மாறுகிறது; அது தொடர்ந்தும் படமாக்கப்படுகிறது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: எதைப் பற்றிய இதய வழுவலையும் கொண்டிருக்க வேண்டாம்! இவை ஞான விடயங்கள். நீங்கள், உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ளலாம், ஆனால், உங்கள் எதிர்கால மேன்மையான அந்தஸ்திற்காகவும் முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் குடும்பத்துடன், உங்கள் இல்லறத்திலும் வாழ வேண்டும். குமாரிகள் ஓர் இல்லறத்தை ஆரம்பிக்கவில்லை. ஓர் இல்லறத்தவர் என்றால் ஒரு குடும்பத்;தையும், குழந்தைகள் போன்றோரையும் கொண்டிருப்பவர்;. தந்தை அரைக் குமாரிகள், குமாரிகள் ஆகிய அனைவருக்கும் கற்பிக்கின்றார்;. மக்கள் அரைக் குமாரிகள் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் அரைவாசிச் சரீரத்தை மாத்திரமா கொண்டிருக்கிறார்கள்? ஒரு குமாரி என்றால் தூய்மையாக இருப்பவர் எனவும், ஓர் அரைக்குமாரி என்றால் தூய்மையற்றவராகிய பின்னர் தூய்மை ஆகுபவர் எனவும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இங்கு உங்கள் ஞாபகார்த்தம் வைக்கப்பட்டுள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் அசரீரி உலகைப் பற்றி அறிந்த ஆத்மாக்கள் என்பதைப்; புரிந்துகொள்கிறீர்கள். எவ்வாறு சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் ஆட்சிசெய்யப்படுகின்றன எனவும், ஏன் சத்திரியர்களை அடையாளப்படுத்துவதற்கு வில்லும், அம்பும் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். யுத்தம் போன்றவற்றுக்கான கேள்வியே இல்லை. அசுரர்களுக்கான அல்லது ஏதாவது திருடுதல் போன்றவற்றுக்கான கேள்வியே இல்லை. சீதையைக் கடத்துகின்ற, அத்தகைய இராவணனும் இல்லை. ஆகவே, தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் சுவர்க்கத்திற்கும், முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான வழிகாட்டிகள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அம்மக்கள் பௌதீக வழிகாட்டிகள், ஆனால் நாங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். அவர்கள் கலியுகத்துப் பிராமணர்கள். நாங்கள் அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்குக் கற்கிறோம். நாங்கள் இப்பொழுது அதிமேன்மையான சங்கமயுகத்தில் இருக்கிறோம். பாபா தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் விளங்கப்படுத்துகிறார். இருந்தும், சிலர் சரீர உணர்வுடையவர்களாகி, மறந்து விடுகிறார்கள். பின்னர், தந்தையின் குழந்தையான, ஓர் ஆத்மாவாக இருக்கின்ற போதை அங்கு இருப்பதில்லை. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தொடர்ந்தும் நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் சரீர உணர்வும் துண்டிக்கப்படும். தொடர்ந்தும் உங்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்களையே சோதியுங்கள்: என்னுடைய சரீர உணர்வு துண்டிக்கப்பட்டு விட்டதா? நாங்கள் இப்பொழுது வீட்டிற்குச் செல்கின்றோம். பின்னர் நாங்கள் உலக அதிபதிகள் ஆகுவோம். எங்கள் பாகங்கள் கதாநாயக, கதாநாயகிப் பாகங்கள் ஆகும். கதாநாயகன், கதாநாயகி என்னும் பெயர் வெற்றியாளர் ஆகுபவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இவ்வேளையில் வெற்றியடைவதால், உங்களுக்குக் கதாநாயகன், கதாநாயகி என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்னர் உங்களுக்கு இப்பெயர் இருக்கவில்லை. தோற்கடிக்கப்படுபவர்கள் கதாநாயகர்கள் அல்லது கதாநாயகிகள் என அழைக்கப்படுவதில்லை. நீங்கள் இப்பொழுது கதாநாயகர்கள், கதாநாயகிகள் ஆகவுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் பாகங்கள் அதிமேன்மையானவை. சிப்பிகளுக்கும், வைரங்களுக்குமிடையில் பெருமளவு வேறுபாடுள்ளது. ஒருவர் மில்லியன்களை அல்லது பில்லியன்களைக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் அழியுவுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள், ஏனைய அனைவரும் கடனாளிகள் ஆகுகிறார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் கிரகிக்கப்பட வேண்டும். உங்கள் நம்பிக்கையைக் கொண்டிருங்கள். நீங்கள் இங்கு இருக்கும்பொழுது, உங்;கள் போதை உயர்கிறது. ஆயினும், நீங்கள் வெளியே சென்றவுடன், அது குறைவடைகிறது. நீங்கள் இங்கு கேட்கும் விடயங்கள் இங்கேயே விட்டுச் செல்லப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான கல்வியைத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்கள் (அலுவலக) வேலையின்பொழுது, நினைவில் நிலைத்திருப்பதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்க உங்களால் முடியும். இதுவும் உங்களுக்கான ஒரு வியாபாரமாகும். நீங்கள் விடுமுறை எடுத்துச் சென்று, பாபாவை நினைவுசெய்ய முடியும். இது பொய்களைக் கூறுவது என்றல்ல. நீங்கள் முழு நாளையும் அவ்வாறு வீணாக்கக்கூடாது. எங்கள் எதிர்காலத்திற்;கான சில எண்ணங்கள் எங்களுக்கு இருக்க வேண்டும். பல யுக்திகள் உள்ளன. தந்தையை நினைவுசெய்வதற்கு இயலுமானளவுக்கு நேரத்தை உருவாக்குங்கள். உங்கள் சரீரத்திற்கான ஜீவனோபாயத்திற்காக நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். எவ்வாறு உலக அதிபதிகள் ஆகுவது என நான் உங்களுக்கு மிகச்சிறந்த ஆலோசனையைக் கொடுக்கிறேன். குழந்தைகளாகிய நீங்களும், இந்த ஆலோசனையை ஏனைய அனைவருக்கும் கொடுப்பவர்கள். ஆலோசகர்கள் ஆலோசனையைக் கொடுக்கிறார்கள்; நீங்கள் ஆலோசகர்கள். இப்பிறவியில் முக்;தியும், ஜீவன்முக்தியும் அடைவதற்கான பாதையை நீங்கள் அனைவருக்கும் காட்டுகிறீர்கள். புனிதமாகவும், இராஜயோகியாகவும் இருங்கள் என நீங்கள் எழுதுவதைப் போன்று, மக்கள் சுலோகங்களை உருவாக்கும்பொழுது, அவர்கள் அவற்றை ஒரு சுவரில் தொங்க விடுகிறார்கள். எவ்வாறாயினும், அதன் மூலம் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். முக்தி தாமத்திற்கான ஆஸ்தியும் உள்ளது. நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என அழைக்கிறீர்கள். ஆகவே, நான் வந்து, தூய்மையாகுமாறு உங்களுக்கு ஆலோசனையைக் கொடுக்கிறேன். நீங்களும் ஆலோசகர்கள். தந்தை உங்களுக்கு ஆலோசனை வழங்கி, உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கும் வரை எவராலும் முக்திதாமத்திற்குச் செல்ல முடியாது. ஸ்ரீமத் என்றால் சிவபாபாவின் மேன்மையான வழிகாட்டல்கள். சிவபாபாவிடமிருந்து ஆத்மாக்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறார்கள். கூறப்பட்டுள்ளது: பாவாத்மா, புண்ணியாத்மா. பாவச் சரீரம்; எனக் கூறப்படுவதில்லை. ஆத்மாக்களே தங்கள் சரீரங்களின் மூலம் பாவம் செய்கின்றார்கள், இதனாலேயே பாவாத்மா எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு சரீரமின்றி ஓர் ஆத்மாவால் பாவம் செய்யவோ அல்லது புண்ணியம் செய்யவோ முடியாது. ஆகவே, இயன்றளவு ஞானக்கடலைக் கடையுங்கள்; உங்களுக்கு நேரம் தாராளமாக உள்ளது. ஓர் ஆசிரியருக்கோ அல்லது பேராசிரியருக்கோ இக்கல்வியை அவர் நன்மையடையக் கூடியவாறு, பெரும் சாதுரியத்துடன் உங்களால் கற்பிக்க முடியும். அந்தப் பௌதீகக் கல்வி மூலம் நீங்கள் எதை அடைவீர்கள்? நாங்கள் உங்களுக்கு இதைக் கற்பிக்கிறோம். மிகச் சொற்ப நாட்களே எஞ்சியுள்ளன, விநாசம் முன்னிலையி;ல் உள்ளது. மனிதர்களுக்கு எவ்வாறு பாதையைக் காண்பிப்பது என்பதையிட்டு, உங்களுக்குள் பெரும் உற்சாகம் இருக்க வேண்டும். ஒரு புதல்விக்கு ஒரு பரீட்சைத் தாள் கொடுக்கப்பட்டு அதில் வினவப்பட்டது: கீதையின் கடவுள் யார்? அவர் எழுதினார்: கீதையின் கடவுள் சிவன். அவர் சித்தியடையவில்லை. கீதையின் கடவுள் சிவன் எனக் கூறுவதால், தான் தந்தையின் புகழை எழுதுவதாக அவர் நம்பினார். அவரே ஞானக்கடலும், அன்புக்கடலும் ஆவார். கிருஷ்ணரின் ஆத்மாவும் ஞானத்தைப்; பெறுகிறார். இதையே அவர் எழுதியதால் அவர் சித்தியடையவில்லை. அவர் மேலும் அக்கல்வியைக் கற்கப் போவதில்லை எனவும், இந்த ஆன்மீகக் கல்வியில் ஈடுபடுவார் எனவும் அவர் தனது பெற்றோருக்குக் கூறினார். அப்புதல்வி முதற்தரமானவர்;. அதையே அவர் எழுதப் போவதாகவும், அவர் சித்தியடையப் போவதில்லை எனவும் அவர் முன்னதாகவே கூறினார். எவ்வாறாயினும், உண்மையே எழுதப்பட வேண்டும். நீங்கள் முன்னேறுகையில், அப்புதல்வி எழுதியதே உண்மை என அவர்கள் புரிந்துகொள்வார்கள். உங்கள் செல்வாக்கு பரவி, அவர்கள் கண்காட்சிகளுக்கு அல்லது அருங்காட்சியகத்துக்கு அழைக்கப்படும்பொழுது, அவர்கள் இனங்கண்டு கொள்வதுடன், அவர் சரியாகவே எழுதினார் என்பதும் அவர்களின் புத்தியில் பிரவேசிக்கும். இங்கு பலர் வருகிறார்கள். ஆகவே, இது புதியதொன்று என மக்கள் விரைவில் புரிந்துகொள்ளுமாறு என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த இடத்துக்குரியவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் அனைவருக்கும் ஆன்மீகப் பாதையைக் காட்டுகிறீர்கள். ஏழைகள் அதிகளவு வேதனையை அனுபவம் செய்கிறார்கள். அவர்களின் வேதனையை எவ்வாறு அகற்ற முடியும்? பெருமளவு முரண்பாடுள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி, ஒருவரையொருவர் கொல்கிறார்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார். அப்பாவித் தாய்மார்கள் புரிந்துணர்வின்றி உள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள்; கற்காதவர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் கற்காதது நல்லதேயாகும். இதுவரை கற்றுக் கொண்ட வேதங்கள், சமயநூல்கள் அனைத்தையும் நீங்கள் மறக்க வேண்டும். இப்பொழுது நான் உங்களுக்குக் கூறுவதைச் செவிமடுங்கள். நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: அசரீரியான, பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர எவராலும் சற்கதியை அருள முடியாது. எவ்வாறு ஆன்மீக ஞானமற்ற மக்களால் சற்கதியை அருள முடியும்? ஒரேயொருவரே ஞானக்கடலாகிய, சற்கதியை அருள்;பவர். மனிதர்கள் இதைக் கூறுவதில்லை. இவ்விடத்துக்குரியவர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். முக்கியஸ்தர் ஒருவர் வெளித்தோன்றினாலும், ஒலி பரவும். இந்தப் புகழும் உள்ளது: ஏழையாக இருந்த துளசிதாஸை எவரும் செவிமடுக்கவில்லை. பாபா உங்களுக்குச் சேவை செய்வதற்கான பல வழிகளைக் காட்டுகின்றார், குழந்தைகளாகிய நீங்கள் அவற்றைப் பயிற்சியில் இட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எதிர்காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்வதுடன், நினைவில் நிலைத்திருப்பதற்கான முழு முயற்சியையும் செய்யுங்கள். இந்நாடகம் தொடர்ந்தும், விநாடிக்கு விநாடி மாறுகிறது. ஆகவே, நாடகத்தின் காட்சிகளைப் பார்க்கும்பொழுது, இதய வழுவலைக் கொண்டிராதீர்கள்.

2. இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்று, அனைவருக்கும் கற்பியுங்கள். அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்துங்கள். எவ்வாறு அனைவருக்கும் தூய்மையாகுவதற்கான ஆலோசனையைக் கூறி, அவர்களுக்கு வீட்டுக்கான பாதையைக் காட்டுவது என்பதையிட்டு உங்களுக்குள் உற்சாகம் இருக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இரட்டைச் சேவை செய்வதால், அலௌகீகச் சக்தியின் காட்சிகளை அருள்கின்ற, ஓர் உலக சேவையாளர் ஆவீர்களாக.

தந்தையின் ரூபம் உலக சேவையாளராக இருப்பதைப் போன்று, அதேவிதமாக, தந்தையைப் போன்று நீங்களும் உலக சேவையாளர்கள் ஆவீர்கள். உங்கள் மனங்கள் மூலம் உலக மாற்றத்திற்கான சேவையைச் செய்வதில் மும்முரமாக இருக்கும்பொழுது, உங்கள் சரீரங்கள் மூலம் பௌதீகச் சேவையைச் செய்கின்றீர்கள். சரீரத்தின் மூலமும், மனம் மூலமும் செய்யப்படும் சேவை ஒரேநேரத்தில் இடம்பெறட்டும். தங்கள் சரீரங்கள் மூலமும், செயல்கள் மூலமும் ஒரேநேரத்தில் சேவை செய்பவர்களால் தங்களிடம் அலௌகீகச் சக்தி உள்ளதை ஏனையோர் அனுபவம் செய்யுமாறும், பார்க்குமாறும் செய்ய முடியும். ஆகவே இப்பயிற்சியை நிலையானதாகவும், இயல்பானதாகவும் ஆக்குங்கள். உங்கள் மனம் மூலம் சேவை செய்வதற்கு, குறிப்பாக, மன ஒருமைப்பாட்டுப் பயற்சியை அதிகரியுங்கள்.

சுலோகம்:
அனைவரிடமிருந்தும் தெய்வீகக் குணங்களைத் தேர்ந்தெடுத்தாலும், தந்தை பிரம்மாவையே பின்பற்றுங்கள்.