03.01.2019        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் அல்பாவையும், பீற்றாவையும், அதாவது, தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்தால், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்ந்திருக்கும். இது ஒரு விநாடிக்குரிய இலகுவான விடயமாகும்.

கேள்வி:
எக் குழந்தைகள் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறார்கள்? சந்தோஷ பாத ரசத்தைச் சதா உயர்வாக வைத்திருப்பதற்கான வழிமுறை என்ன?

பதில்:
சரீரமற்று இருப்பதைப் பயிற்சி செய்யும் குழந்தைகளும், தந்தை தங்களுக்குக் கூறுகின்ற அனைத்தையும் மிக நன்றாகக் கிரகித்து, அதனை ஏனையோரையும் கிரகிக்கத்; தூண்டுபவர்களும் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். உங்கள் சந்தோஷப் பாதரசம் சதா உயர்ந்திருப்பதற்கு அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தொடர்ந்தும் தானம் செய்யுங்கள். மேலும் பலருக்கு நன்மை செய்யுங்கள். இப்பொழுது, நீங்கள் சந்தோஷம், அமைதி என்பனவற்றின் சிகரத்திற்குச் செல்கிறீர்கள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.

ஓம்சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் யாருடைய நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு விநாடியில் எழுதச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பாப்தாதா கொண்டிருந்தார். இதை எழுதுவதற்கு நேரம் எடுக்காது. நீங்கள் ஒவ்வொருவரும் அதை ஒரு விநாடியில் எழுதி, வந்து, அதை பாபாவிடம் காட்டலாம். (அனைவரும் அதை எழுதி, பாபாவிற்குக் காட்டினார்கள். பின்னர் பாபாவும் அதனை எழுதினார். பாபா எழுதியதை வேறெவருமே எழுதவில்லை.) பாபா எழுதினார்: அல்பாவினதும், பீற்றாவினதும்;. அது மிகவும் இலகுவானது! அல்பா என்றால் பாபா, பீற்றா என்றால் இராச்சியம். பாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் உங்கள் இராச்சியத்தை அடைகிறீர்கள். வேறெதையும் அதிகமாக எழுத வேண்டியதில்லை. இதை எழுதுவதற்கு நீங்கள் இரண்டு நிமிடங்களை விட அதிகமாக எடுத்துக் கொண்டீர்கள். அல்பாவையும், பீற்றாவையும் எழுதுவது ஒரு விநாடிக்குரிய விடயமாகும். சந்நியாசிகளும் அல்பாவை மாத்திரமே நினைவு செய்கிறார்கள். நீங்கள் உங்கள் இராச்சியத்தையும் நினைவு செய்கிறீர்கள். நீங்கள் நினைவு செய்யும் பழக்கத்தைப் பதித்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் புத்தியில் இருக்கும் போது, உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்ந்துள்ளது. அல்பா என்றால் அவரே அதி உயர்ந்த சிகரமானவர் என்று அர்த்தமாகும். அதை விட உயர்ந்தது வேறு எதுவும் இல்லை. அவர் வசிப்பிடமும் அனைத்தையும் விட அதியுயர்வாக உள்ளது. ஒரு விநாடியில் முக்தியும், ஜீவன்முக்தியும் என்பதன் அர்த்தம் எவருக்கும் தெரியாது. அதற்கும் நிச்சயமாக ஓர் அர்த்தம் இருக்கவே வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் போது, அவர் இந்த மணித்தியாலம், நிமிடம், விநாடியில் பிறந்தார் என்பதை அவர்கள் எழுதுகிறார்கள். கடிகார முள் தொடர்ந்தும் நகர்கிறது. ஒரு விநாடியில் உங்களால் அல்பா, பீற்றா எனக் கூற முடியும். அதற்கு ஒரு விநாடி கூட எடுப்பதில்லை. அதைக் கூறவேண்டிய அவசியமில்லை; எனினும் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நல்ல ஸ்திதியைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் நினைவில் இருக்கும் போதே அது இடம்பெற முடியும். இங்கே அமர்ந்திருக்கும் போது, நீங்கள் தந்தையையும் இராச்சியத்தையும் நினைவு செய்ய வேண்டும். புத்தியினால் காணும் போது, அது தெய்வீகப் பார்வை என அழைக்கப்படுகிறது. ஆத்மாவும் பார்க்கின்றார். ஆத்மாவே தந்தையை நினைவு செய்கிறார். நீங்கள் தந்தையை நினைவு செய்யும் போது அதேவேளை இராச்சியத்தையும் நினைவு செய்கிறீர்கள். அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கின்றது? இங்கே, நீங்கள் நினைவிலே அமர்ந்திருக்கும் போது, ஆழமான சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்கள். பாபாவும் இங்கே இச் சந்தோஷத்தில் அமர்ந்திருக்கிறார். தந்தை இங்கிருக்கின்ற எதையும் நினைவு செய்வதில்லை. பாபா அங்கிருக்கும் (புதிய உலகின்) விடயங்களையே நினைவு செய்கிறார். அது பாபாவும் இராச்சியமும் உங்கள் வாசலில் நிற்பதைப் போல் உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்காக இராச்சியத்தைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் நினைவைக் கொண்டிருக்கவில்லை, இதனாலேயே உங்கள் சந்தோஷம் நிலைத்திருப்பதில்லை. அமர்ந்திருக்கும் போதும், உலாவித் திரியும் போதும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்களுடைய தந்தையாகிய என்னையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் வாழும் இடம் அதியுயர்வானது. உலகிற்கு இது தெரியாது. முக்தி அடைவதற்காக மக்கள் பெருமளவு பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் முக்திதாமம் எங்கே இருக்கிறது? ஓர் ஆத்மா ஒரு ரொக்கட்டைப் போன்றவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அம் மக்கள் சந்திரமண்டலத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் அதற்கு அப்பால் வெறும் வெளியே இருக்கிறது. நீங்கள் அந்த வெளிக்கும் அப்பால் செல்கிறீர்கள். சந்திரன் இவ்வுலகிலேயே உள்ளது. சூரிய சந்திரனுக்கு அப்பால், சத்தத்திற்கும் அப்பால் எனக் கூறப்படுகிறது. நீங்கள் உங்கள் சரீரங்களை நீங்கிச் செல்லவேண்டும். நீங்கள் இனிய மௌன வீட்டிலிருந்து இங்கே வருகிறீர்கள். வந்து செல்வதற்கு நேரம் எடுக்காது. அதுவே உங்களுடைய வீடு. இங்கே நீங்கள் எங்கு செல்வதற்கும் நேரம் எடுக்கிறது. ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீங்கிச் செல்லும் போது, அவர் ஒரு விநாடியில் வெகு தொலைவிற்குச் சென்று விடுகிறார். ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு நீங்கி இன்னொன்றினுள் பிரவேசிக்கிறார். எனவே நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். நீங்கள் அதி உயரமான சிகரத்துக்குச் செல்கிறீர்கள். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். அமைதியின் அதியுயர் சிகரமே அசரீரி உலகம். சந்தோஷத்தின் அதியுயர் சிகரமே சுவர்க்கம் ஆகும். அதியுயர்;ந்ததை ஒரு கோபுரம் என அழைக்கிறார்கள். உங்கள் வீடும் அதி உயர்ந்தது. உலக மக்கள் இவ்விடயங்களைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. அவர்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதற்கு எவருமே இல்லை. அதுவே அமைதிக் கோபுரம் என அழைக்கப்படுகிறது. உலகிலே அமைதி நிலவ வேண்டும் என மக்கள் தொடர்ந்து கூறியவாறு இருக்கிறார்கள். எவ்வாறாயினும், அதன் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது, அதாவது, அமைதி எங்கே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. இலக்ஷ்மியும் நாராயணனும் சந்தோஷக் கோபுரத்திலே இருக்கிறார்;கள். அங்கே பேராசையோ, தூண்டுதலோ இல்லை. அவர்களின் உணவும், பானமும், பேசும் விதம் போன்றவை அனைத்தும் இராஜரீகம் நிறைந்ததாகவே இருக்கும். அவர்கள் அதி உயர்ந்த சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் பெருமளவு முயற்சி செய்ததால் எவ்வளவு போற்றப்படுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் மாத்திரமல்ல: ஒரு முழு மாலையே உருவாக்கப்பட்டது. உண்மையில், ஒன்பது மணிகள் நினைவுகூரப்படுகின்றன. நிச்சயமாக, அவர்கள் மறைமுகமான முயற்சியைச் செய்திருக்க வேண்டும். நீங்கள் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யும் போது மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எவ்வாறாயினும், மாயை உங்களை நினைவில் நிலைத்திருப்பதற்கு அனுமதிப்பதில்லை. சிலவேளைகளில் காமமும், சிலவேளைகளில் கோபமும் பல புயல்களைக் கொண்டு வருகின்றன. நீங்கள் உங்கள் நாடித் துடிப்பை உணர வேண்டும். நாரதருக்கு அவருடைய முகத்தைக் கண்ணாடியில் பார்க்குமாறு கூறப்பட்டது. எனவே, இப்பொழுது உங்களுக்கு அந்த ஸ்திதி இல்லை. அது உருவாக்கப்பட வேண்டும். பாபா நிச்சயமாக உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் உங்களுக்குக் காட்டுவார். தொடர்ந்தும் உள்ளார முயற்சி செய்யுங்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது, நீங்கள் அந்த ஸ்திதியை அடைவீர்கள். நீங்கள் சரீரமற்றிருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். பாபா கூறினார்: என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் என்னை நினைவு செய்யாவிட்டால், பெருமளவு தண்டனை அனுபவம் செய்யப்படுவதுடன், அந்தஸ்தும் குறைவடையும். இவ்விடயங்கள் மிகவும் சூட்சுமமானவை. அவர்கள் விஞ்ஞானத்தினுள் மிக ஆழமாகச் செல்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் எவற்றை உருவாக்குகிறார்கள் எனப் பாருங்கள்! அந்தச் சம்ஸ்காரங்களும் தேவைப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் அங்கே சென்று அவ் விடயங்களை உருவாக்க முடியும். இவ்வுலகம் மாற வேண்டும். அவர்கள் இங்கிருந்து சென்று, தற்போதைய சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப அங்கே பிறவியைப் பெறுவார்கள். இராணுவத்தில் சண்டையிடுபவர்கள் தங்கள் புத்தியிலே போராடும் சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பார்கள். எனவே, அவர்கள் அச்சம்ஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். அவர்களால் சண்டையிடாமல் இருக்க முடியாது. ஓர் அதிகாரிக்கு முன்னால் எப்போதும் ஒரு வரிசை இருந்து கொண்டேயிருக்கும். அவர்கள் அனைவரையும் பதிவு செய்யும் போது, அவர்களிற்கு நோய்கள் எதுவும் இருக்கின்றனவா என்பதை அவர்கள் சோதிக்கிறார்கள். அவர்களுடைய கண்கள், காதுகள் போன்றவை அனைத்தும் நன்றாக இயங்குகின்றனவா என்பதை அவர்கள் சோதிக்கிறார்கள். ஓர் இராணுவத்தில் இருப்பதற்கு அவை அனைத்தும் நன்றாக இயங்க வேண்டும். இங்கும், யார் வெற்றி மாலையின் மணி ஆகுவார்கள் என்பது அவதானிக்கப்படுகிறது. நீங்கள் முயற்சி செய்து, உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டும். ஆத்மாக்கள் இங்கே சரீரமற்று வந்து, சரீரமற்றவர்களாகவே வீடு திரும்ப வேண்டும். அங்கே சரீரத்துடன் எவ்வித உறவுமுறையும் இல்லை. இப்பொழுது நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகவேண்டும். ஆத்மாக்கள் அங்கிருந்து வந்து இங்கே ஒரு சரீரத்தில் பிரவேசிக்கிறார்கள். தொடர்ந்தும் பல ஆத்மாக்கள் வருகிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்தப் பாகத்தை பெற்றுள்ளீர்கள். புதிய, தூய ஆத்மாக்கள் நிச்சயமாக முதலில் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். இதனாலேயே அவர்கள் புகழப்படுகிறார்கள். விருட்சம் பெரியது. மிகவும் பிரபல்யமானவர்கள் பலர் இருக்கிறார்கள். உங்கள் சொந்தச் சக்திக்கேற்ப, நீங்கள் அனைவரும் பெருமளவு சந்தோஷத்தில் இருப்பீர்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தூய்மையாகி, உங்கள்; கர்மாதீத ஸ்திதியில் திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் உங்கள் சொந்த நடத்தையைச் சோதிக்க வேண்டும். நான் எவருக்கேனும் துன்பம் கொடுக்கிறேனா? தந்தை மிக இனிமையானவர். அவரே அதிஅன்பிற்கினியவர். எனவே குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். தந்தை இங்கே இருக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை இங்கே ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என்பது மக்களுக்குத் தெரியாது. எவ்வாறாயினும், அவர்கள் தொடர்ந்தும் அவரைப் பிறவிபிறவியாக நினைவு செய்கிறார்கள். அவர்கள் ஒரு சிவாலயத்திற்குச் சென்று அவரைப் பெருமளவு வழிபடுகின்றார்கள். அவர்கள் அத்தகைய உயரமான சிகரத்தில் உள்ள பத்திரிநாதர் ஆலயத்திற்குச் செல்கிறார்கள். பல்வேறு மேலாக்கள் (அவருடைய பெயரிலே) இடம்பெறுகின்றன. ஏனெனில் அவர் மிக இனிமையானவர். கடவுளே அதிமேலானவர்; என அவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் அசரீரியானவரைத் தங்கள் புத்தியிலே வைத்திருக்கிறார்கள். எப்போதும் அசரீரியானவர் இருக்கிறார். அதன்பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. நீங்களும் சதோபிரதான் தேவர்களாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்த போது, பல மனிதர்கள் இருக்கவில்லை. பாரதத்திலே அவர்களுடைய இராச்சியம் மாத்திரமே இருக்கும். ஏனைய அனைவரும் அமைதி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். நீங்கள் இவை அனைத்தையும் தொடர்ந்தும் அவதானிக்கிறீர்கள். இதற்கு மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தி தேவைப்படுகிறது. அங்கே நீங்கள் மலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அங்கே விபத்துக்கள் போன்றன இருப்பதில்லை. அது சுவர்க்கத்தின் அற்புதம் ஆகும். சுவர்க்கத்தின் அற்புதம் இல்லாத போது, அது மாயையின் அற்புதம் ஆகுகின்றது. உலக மக்களால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். அது சந்தோஷக் கோபுரம், ஆனால் இதுவோ துன்பக் கோபுரம் ஆகும். ஒவ்வொரு நாளும் பலர் யுத்தத்திலே மரணமடைகின்றார்கள். எனவே அவர்கள் ஏதோவொரு இடத்திலே மறுபிறவி எடுக்கவே வேண்டும். கடவுளின் அந்தத்தை (முடிவை) உங்களால் அடைய முடியாது. என நினைவுகூரப்படுகிறது. கடவுள் ஒரு புள்ளியே. நீங்கள் எதன் முடிவை அடைய முடியும்? தந்தை கூறுகிறார்: இப்படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி எவருக்குமே தெரியாது. சாதுக்கள், புனிதர்களால் படைப்பவரினதோ, படைப்பினதோ முடிவை அடைய முடியாது. தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். இதுவே கல்வி எனப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே உலகச் சக்கரத்தின் இரகசியங்களை இப்பொழுது அறிந்து கொள்கிறீர்கள். அம்மக்கள் கூறுகிறார்கள்: எங்களுக்குத் தெரியாது அல்லது அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இப்பொழுது நீங்கள் காண்பவை அனைத்தும் அங்கே இருக்காது எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். சுவர்க்கமே சந்தோஷக் கோபுரம், ஆனால் இங்கே துன்பத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை. அனைவரும் மரணிக்கக்கூடிய வகையில் மரணம் திடீரென வரும். மரணத்தை அவதானிப்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல! இது துன்பச் சிகரம் எனவும், அது சந்தோஷச் சிகரம் எனவும் அழைக்கப்படுகிறது. வேறெந்த வார்த்தையும் இல்லை. உங்கள் மத்தியிலும், இதைப் பலர் செவிமடுத்த போதிலும், அவர்களால் இவற்றைக் கிரகிக்க முடியாதுள்ளது. உங்கள் புத்தி சத்தியயுகத்துக்கு உரியதாகும் போதே தாரணை இடம்பெற முடியும். தாரணை இல்லாவிடில், உங்களால் சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. அதிஉயர்ந்த தரத்தில் கற்பவர்களும் இருக்கிறார்கள். அதி தாழ்ந்த தரத்தில் கற்பவர்களும் இருக்கிறார்கள். இது அவர்கள் எவ்வாறு கற்கிறார்கள் என்பதில் இருக்கும் வேறுபாடாகும். எல்லையற்ற தந்தை அவர்களுக்கு எவ்வளவுதான் விளங்கப்படுத்தினாலும், அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை. நினைவு செய்யாது உங்களால் ஒருபோதும் தூய்மையாக முடியாது. தந்தை ஒரு காந்தம் போன்றவர். அவரே அதியுயர்ந்த சக்தியை உடையவர். அவர் ஒருபோதும் துருப்பிடித்தவர் ஆகுவதில்லை. ஏனையோர் அனைவரும் துருப்பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அதை அகற்றி நீங்கள் மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். வேறெவர் மீதும் எந்தப் பற்றும் இல்லாதிருக்கட்டும். செல்வந்தர்கள் நாள்முழுவதும் தங்கள் செல்வத்தைத் தங்கள் கண்களின் முன்னால் காண்கிறார்கள். ஏழைகளிடம் எதுவுமே இல்லை. ஆனால் அவர்கள் விவேகிகளாக இருந்தால், அவர்களால் கிரகிக்க முடியும். நினைவு செய்யாது எவ்வாறு குப்பை அகற்றப்பட முடியும்? நாங்கள் எவ்வாறு தூய்மையாக முடியும்? இங்கே நீங்கள் அதியுயர்ந்த சிகரத்துக்குச் செல்வதற்காக வந்துள்ளீர்கள். தந்தையின் கற்பித்தல்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் சந்தோஷத்தின் அதியுயர் சிகரத்துக்குச் செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதற்கு முயற்சி தேவை. தந்தை இங்கே உங்களைக் கோபுரத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். எனவே நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். இலக்ஷ்மியும், நாராயணனும் முதற்தரமானவர்களாக நினைவுகூரப்படுகிறார்கள். அவர்கள் கோபுரத்தின் அதி உச்சியில் இருக்க, ஏனையோர் அவர்களை விட கீழே இருப்பார்கள். புதிய உலகம் மாத்திரமே சந்தோஷக் கோபுரம் என அழைக்கப்படுகிறது. அங்கே அழுக்கானவை எதுவுமே இல்லை. இங்கே கட்டிடத்தைப் பழுதாக்கும் வகையில் இருக்கின்ற அத்தகைய தூசு அல்லது காற்று போன்றவை அங்கே இருக்காது. சுவர்க்கத்துக்குப் பெரும் புகழ் உள்ளது. அதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இலக்ஷ்மியும், நாராயணனும் மிக உயர்வானவர்கள். அவர்களை நீங்கள் கண்டதும், உங்கள் இதயம் சந்தோஷமடைகிறது. நீங்கள் மேலும் முன்னேறும் போது, பலர் தொடர்ந்தும் காட்சிகளைப் பெறுவார்கள். ஆரம்பத்திலே பல காட்சிகள் கொடுக்கப்பட்டன. பாபா பெரும் கோலாகலத்தைக் காட்டினார். நீங்கள் கிரீடம் போன்றவற்றை அணிந்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. உங்களால் அவ்விடயங்களை இங்கே காணமுடியாது. பாபா ஒரு வைர வியாபாரியாக இருந்தார். அக்காலத்திலே 50,000 ரூபாய்கள்; பெறுமதி வாய்ந்தனவாக இருந்த இரத்தினங்களை இப்போது 5 மில்லியன் ரூபாய்களுக்குக் கூட வாங்க முடியாது. நீங்கள் சுவர்க்கத்திற்காக முயற்சி செய்கிறீர்கள். அங்கே எல்லையற்ற சந்தோஷம் இருக்கிறது. தந்தை உங்களுக்குப் பெருமளவு கற்பிக்கிறார். ஆனால் குழந்தைகள் மத்தியிலே இன்னும் இரவிற்கும் பகலிற்கும் இடையிலான வேறுபாடு காணப்படுகிறது. அரசர்கள், அரசிகளுக்கும் பணிப்பெண்கள், சேவகர்களுக்கும் இடையிலே பெருமளவு வேறுபாடு உள்ளது. நன்றாகக் கற்று ஏனையோருக்குக் கற்பிப்பவர்கள் மறைந்திருக்க முடியாது. பாபா நான் இன்ன இடத்திற்குச் சேவை செய்வதற்காகச் செல்லப் போகின்றேன் என அவர்கள் உடனடியாகக் கூறுவார்கள். பெருமளவு சேவை செய்யப்பட வேண்டும். இக் காட்டை நீங்கள் ஓர் ஆலயமாக மாற்ற வேண்டும். நீங்கள் ஒரு துண்டுப் பாணை உண்டாலும் அல்லது உண்ணாமல் இருந்தாலும் நீங்கள் ஓடி ஓடிச் சேவை செய்ய வேண்டும். வியாபாரிகள் இதையே செய்கிறார்கள். நல்ல ஒரு வாடிக்கையாளர் வரும் போது அவர்கள் உண்டு முடித்தார்களோ, இல்லையோ உடனடியாக அவர்கள் ஓடிச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பணம் சம்பாதிப்பதிலே ஓர் ஆர்வம் இருக்கிறது. இங்கே, நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற செல்வத்தைப் பெறுகிறீர்கள்;;. இன்னும் சிறிது நேரமே எஞ்சியுள்ள போதிலும், எதைப் பற்றியும் எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் நீங்கள் நாளையே உங்கள் சரீரத்தை விட்டு நீங்கலாம். விநாசம் இடம்பெறவே வேண்டும். இரைக்குத் திண்டாட்டம், வேடனுக்குக் கொண்டாட்டம் என உங்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. உங்கள் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மேலும் பலருக்கு நன்மை செய்ய வேண்டும். இறுதியில், நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். நினைவில் நிலைத்திருப்பதனால், நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகும்பொழுது, தீடீரெனப் பறந்து விடுவீர்கள். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. சிலர் பெருமளவு சேவை செய்கிறார்கள். அவர்கள் அருங்காட்சியகத்தில் நாள் முழுவதும் விளங்கப்படுத்தியவாறு நிற்கிறார்கள். அவர்கள் இரவுபகலாகச் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அருங்காட்சியகங்கள் திறக்கப்படும். நூறாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். உங்களுக்கு நேரமே இருக்காது நீங்கள் இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களின் அதிகபட்ச எண்ணிக்கையான கடைகளை வைத்திருப்பீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1.ஞானத்தைக் கிரகிப்பதற்கு எல்லாவற்றிற்கும் முதலில் உங்கள் புத்தியைச் சத்திய யுகத்துக்கு உரியதாக்குங்கள். தந்தையின் நினைவைத் தவிர வேறெதிலும் பற்று வைக்காதீர்கள்.

2.கர்மாதீத ஸ்திதியை அடைந்து வீடு திரும்புவதற்குச் சரீரமற்றிருப்பதைப் பயி;ற்சி செய்யுங்கள். நீங்கள் எவருக்கேனும் துன்பத்தைக் கொடுக்கிறீர்களா என்பதைப் பார்ப்பதற்கு உங்கள் நடத்தையைப் பரிசோதியுங்கள். நான் தந்தையைப் போல் இனிமையானவர் ஆகிவிட்டேனா?

ஆசீர்வாதம்:
பிராமண வாழ்க்கை என்ற உங்கள் இயல்பான சுபாவத்தினால் கல்லையும் தண்ணீராக மாற்றுகின்ற மாஸ்டர் அன்புக்கடல்கள் ஆகுவீர்களாக.

உலகமக்கள் அன்பினால் கல்லையும் தண்ணீராக மாற்ற முடியும் எனக் கூறுகின்றார்கள். அவ்வாறாக, பிராமணர்களாகிய உங்கள் இயல்பான சுபாவம் மாஸ்டர் அன்புக்கடலாக இருப்பதாகும். உங்களிடம் வேறுபட்ட சுபாவங்களை மாற்றக் கூடிய அத்தகைய ஆத்ம உணர்வுடனான அன்பு சக்தியும் கடவுளின் அன்பும் உள்ளது. அன்புகடலானவர் அன்பின் சொரூபமாக இருக்கின்ற தனது அநாதியான சுபாவத்தினால் குழந்தைகளாகிய உங்களை தனக்குரியவர் ஆக்கிக் கொண்டார். அவ்வாறே, நீங்கள் மாஸ்டர் அன்புக்கடல் ஆகுவதனால், உலக ஆத்மாக்களுக்கு சுயநலமற்ற உண்மையான ஆன்மிக அன்பை கொடுக்கும் போது அவர்களின் சுபாவங்கள் மாற்றமடையும்.

சுலோகம்:
உங்கள் சிறப்பியல்புகளை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து அவற்றை சேவைக்காக பயன்படுத்தினால் நீங்கள் தொடர்ந்தும் பறக்கும் ஸ்திதியில் பறந்திடுவீர்கள்.

தந்தை பிரம்மாவிற்கு சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி.

அகநோக்கு ஸ்திதியில் நிலைத்திருந்து, அதன் பின்னர் புறநோக்கிற்குள் வருவதற்கு - இதனைப் பயிற்சி செய்வதற்கு, உங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் புறநோக்கு ஸ்திதியில் நிலைத்திருக்கும் போது, புறநோக்கு விடயங்கள் உங்களை தொந்தரவு செய்யாது, ஏனெனில் நீங்கள் சரீர உணர்விலிருந்து மிகவும் தொலைவில் இருப்பீர்கள்.