03.01.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    05.10.87     Om Shanti     Madhuban


பிராமண வாழ்க்கையின் சந்தோஷமும் திருப்தியும் மனநிறைவும்.


இன்று, பாப்தாதா தனது அதிகபட்ச அதியன்பிற்குரிய, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட பிராமணக் குழந்தைகளில், குறிப்பாக பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பினால் நிரம்பிய குழந்தைகளைப் பார்க்கிறார். இன்;று, அமிர்த வேளையில், பிராமணக் குலத்தின் அலங்காரங்களான குழந்தைகள் அனைவரிலும், திருப்தி உடைய விசேடமான ஆத்மாக்களை, எப்போதும் தங்களுடன் திருப்தியாக இருப்பதுடன், எப்போதும் தமது பார்வை, மனோபாவம், செயல்களினூடாகத் திருப்தியின் அனுபவத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பவர்களை பாப்தாதா தேர்ந்தெடுத்தார். எனவே, இன்று, தமது ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும், ஒன்றுகூடலில் தமது உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் தமது ஒவ்வொரு செயலிலும் பாப்தாதாவிடமிருந்து திருப்தி என்ற தங்க மலர்கள் தூவப்படுவதை சதா அனுபவம் செய்யும் இத்தகைய திருப்தி இரத்தினங்களின் மாலையை பாப்தாதா உருவாக்கினார். அவர்கள் சதா மற்றவர்களுக்கும் திருப்தியென்ற தங்க மலர்களைத் தூவுகிறார்கள். எங்கும் உள்ள ஆத்மாக்களில், இத்தகைய திருப்தி ஆத்மாக்கள் வெகு சிலர் மட்டுமே புலப்பட்டார்கள். தயாரிக்கப்பட்ட மாலை பெரியதல்ல. அது சிறியதொரு மாலை. திருப்தி இரத்தினங்களின் மாலையை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைந்தார். ஏனென்றால், இத்தகைய திருப்தி இரத்தினங்கள் மட்டுமே பாப்தாதாவின் கழுத்து மாலை ஆகுகிறார்கள். அவர்கள் இராச்சியத்திற்கான உரிமையைக் கோருவதுடன், பக்தர்கள் உருட்டுகின்ற மாலையின் மணிகளாகவும் ஆகுகிறார்கள்.

சிலவேளைகளில் திருப்தியாகவும், சிலவேளைகளில் சிறிதளவு அதிருப்தியான எண்ணத்தின் நிழலின் கீழ் வந்து, பின்னர் அதிலிருந்து அப்பால் விலகும் ஏனைய குழந்தைகளையும் பாப்தாதா பார்க்கிறார். அவர்கள் அதில் அகப்பட்டுக் கொள்வதில்லை. மூன்றாவது வகையான குழந்தைகள், சிலவேளைகளில் தமது எண்ணங்களில் அதிருப்தி அடைகிறார்கள். அவர்கள் சிலவேளைகளில் தங்களுடன் அதிருப்தி அடைகிறார்கள். சிலவேளைகளில் பிரதிகூலமான சூழ்நிலைகளால் அதிருப்தி அடைகிறார்கள். சிலவேளைகளில் தமது சொந்தத் தளம்பலால் அதிருப்தி அடைகிறார்கள். சிலவேளைகளில் பெரிய மற்றும் சிறிய சூழ்நிலைகளால் அதிருப்தி அடைகிறார்கள். அவர்கள் இந்தச் சக்கரத்தில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். பின்னர் அதிலிருந்து வெளியே வருகிறார்கள். பின்னர் மீண்டும் அதில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். பாபா இப்போதும் இத்தகைய மாலையைக் கண்டார். எனவே, மூன்று மாலைகள் தயாராகின. அனைவரும் இரத்தினங்களே. ஆனால், திருப்தி இரத்தினங்களின் பிரகாசம் எவ்வாறு இருக்கும் என்பதையும், ஏனைய இரண்டு வகையான இரத்தினங்களின் பிரகாசம் எவ்வாறிருக்கும் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். மூன்று மாலைகளையும் மீண்டும் மீண்டும் பார்க்கும்போது, தந்தை பிரம்மா மகிழ்ச்சி அடைந்தார். அதேவேளை, இரண்டாம் இலக்க மாலையின் இரத்தினங்களை, முதலாம் இலக்க மாலைக்குரியவர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்கிறார். இதயபூர்வமானமொரு சம்பாஷணை இடம்பெற்றது. ஏனென்றால், இரண்டாம் இலக்க மாலையிலுள்ள சில மணிகளுக்கு சிறிதளவு அதிருப்தியின் நிழலின் காரணத்தால், முதலாம் இலக்க மாலையில் வருவது தடுக்கப்பட்டுள்ளது. அவர்களை மாற்றி, எப்படியாவது முதலாம் இலக்க மாலைக்குள் கொண்டு வரவேண்டும். ஒவ்வொருவரின் நற்குணங்கள், சிறப்பியல்புகள், சேவையைத் தனக்கு முன்னால் வைத்திருப்பதன் மூலம், அவர் ஒரேயொரு விடயத்தையே மீண்டும் மீண்டும் கூறினார்: இவரை முதலாம் இலக்க மாலைக்குள் கொண்டு வருவோம். இவ்வாறாக பிரம்மாபாபா, 25 தொடக்கம் 30 பேர்களைப் பற்றி விசேடமாக இதயபூர்வமான சம்பாஷணை செய்தார். பிரம்மாபாபா கூறினார்: இந்த மணிகளையும் முதலாம் இலக்க மாலையில் சேர்ப்போம். எவ்வாறாயினும், அவர் புன்னகை செய்து, தந்தை நிச்சயமாக அவர்களை முதலாவது மாலையில் கொண்டு வருவார் எனக் கூறினார். இத்தகைய விசேடமான இரத்தினங்களும் இருந்தார்கள்.

இத்தகைய இதயபூர்வமான சம்பாஷணை நடக்கும்போது, அதிருப்திக்கான குறிப்பிட்ட காரணம் என்னவாக இருக்கும் என்பது வெளிப்பட்டது. சங்கமயுகத்தின் விசேட ஆசீர்வாதமே திருப்தியாக இருக்கும்போது, ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்ற ஆத்மாக்கள் ஏன் இரண்டாம் மாலையில் வருகிறார்கள்? சகல பேறுகளையும் வைத்திருப்பதே திருப்தியின் விதையாகும். ஏதாவது பௌதீகமான அல்லது சூட்சுமமான பேறு குறைவாக இருப்பதே அதிருப்தியின் விதையாகும். பிராமணர்களின் வாழக்கையில் அல்லது பொக்கிஷக் களஞ்சியத்தில் எதுவுமே குறைவில்லாமல் இருக்கும் என்பது பிராமணர்களைப் பற்றி நினைவுகூரப்படும்போது, ஏன் அதிருப்தி ஏற்படுகிறது? ஆசீர்வாதங்களை அருள்பவர் தான் கொடுக்கும் ஆசீர்வாதங்களில் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளாரா? அல்லது, அந்த ஆசீர்வாதங்கள் யாருக்கு வழங்கப்பட்டதோ, அவர்கள் எதை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் வேறுபாடு ஏற்படுகிறதா? என்ன நிகழ்கிறது? ஆசீர்வாதங்களை அருள்பவரின் பொக்கிஷக் களஞ்சியமும் அருள்பவரும் நிரம்பியே இருக்கிறார்கள். உங்களின் வம்சத்திற்கு 21 பிறவிகளுக்கு நிலைத்திருக்கும் வகையில் அது நிரம்பி உள்ளது. அதாவது, நீண்ட காலத்திற்கு பிகே ஆகியிருக்கும் மேன்மையான கருவி ஆத்மாக்களின் வம்சமும், பக்தர்களின் வம்சமும் இந்தப் பேறுகளின் அடிப்படையிலேயே தொடர்ந்து செயல்படுகிறார்கள். இத்தகைய மகத்தான பேறு இருக்கும்போது, ஏன் அதிருப்தி ஏற்பட வேண்டும்? அனைவரும் ஒரேயொருவரிடமிருந்து ஒரேவகையான எல்லையற்ற பொக்கிஷங்களை, ஒரே வேளையில், ஒரே வழிமுறையின் மூலம் பெற்றுள்ளார்கள். எவ்வாறாயினும், நீங்கள் பெற்ற பொக்கிஷங்களை எல்லா வேளையும் நீங்கள் பயன்படுத்துவதில்லை. அதாவது, நீங்கள் அவற்றை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பதில்லை. நீங்கள் அவற்றைப் பற்றிப் பேசும்போது மகிழ்ச்சி அடைகிறீர்கள். ஆனால், உங்களின் இதயத்தில் சந்தோஷப்படுவதில்லை. புத்திபூர்வமாக சந்தோஷம் இருக்கிறதே அன்றி, இதயத்தில் சந்தோஷம் இருப்பதில்லை. இதற்கான காரணம் என்ன? நீங்கள் பேறுகளின் பொக்கிஷங்களை, அந்த விழிப்புணர்வின் சொரூபமாகப் பயன்படுத்துவதில்லை. நீங்கள் அவற்றை அறிவீர்கள். ஆனால், அந்த விழிப்புணர்வின் சொரூபமாக நீங்கள் ஆகுவதில்லை. பேறு எல்லையற்றது. ஆனால், நீங்கள் சிலவேளைகளில் அதை எல்லைக்குட்பட்டதாக ஆக்கிவிடுகிறீர்கள். இந்தக் காரணத்தால், ஏதாவது எல்லைக்குட்பட்ட பேறுகளுக்கான உங்களின் ஆசை, எல்லையற்ற பேற்றின் பெறுபேறான சதா திருப்தியை அனுபவிக்க விடுவதில்லை. எல்லைக்குட்பட்ட பேறுகள் உங்களின் இதயத்தில் எல்லைகளைப் போட்டு விடுகின்றன. இதனாலேயே, நீங்கள் அதிருப்தியை அனுபவம் செய்கிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் சேவையில் எல்லைகளைக் கொண்டு வருகிறீர்கள். ஏனென்றால், எல்லைக்குட்பட்ட ஆசைகளின் பலன், நீங்கள் விரும்பிய பலனை உங்களால் அடைய முடியாமல் இருப்பதே ஆகும். எல்லைக்குட்பட்ட ஆசைகளின் பலன், தற்காலிக காலத்திற்கு மட்டுமே நிறைவை ஏற்படுத்தும். இதனாலேயே, சிலவேளைகளில் திருப்தி உள்ளது. ஏனைய வேளைகளில் அதிருப்தி காணப்படுகிறது. எல்லையற்ற போதையை அனுபவம் செய்வதற்கு எல்லைகள் உங்களை அனுமதிப்பதில்லை. ஆகவே, குறிப்பாக உங்களின் மனதில் திருப்தி உள்ளதா, அதாவது, உங்களுடனும் மற்றவர்களுடனும் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள்.

ஆத்மாக்களில் திருப்தியின் அடையாளம், அவர்கள் தமது மனங்களில், தமது இதயங்களில், அனைவருடனும், தந்தையுடனும் மற்றும் நாடகத்துடனும் திருப்தியாக இருப்பார்கள். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும், யாராவது ஆத்மாக்கள் தமது கர்மக்கணக்குகளைத் தீர்ப்பதற்காக அவர்களை எதிர்த்து வந்தாலும், அல்லது, சரீரத்திற்கு ஏதாவது பௌதீகமான கர்ம வேதனை ஏற்பட்டாலும், அவர்களின் மனங்களிலும் சரீரங்களிலும் மனநிறைவின் அலைகள் புலப்படும். எல்லைக்குட்பட்ட ஆசைகளில் இருந்து விடுபட்ட ஆத்மாக்கள் திருப்தியாக இருப்பதனால், அவர்கள் மனநிறைவின் பிரகாசத்துடன் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாகத் தென்படுவார்கள். மனநிறைவுடையவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருபோதும் கேள்விகள் கேட்க மாட்டார்கள். அவர்கள் மனநிறைவுடன் இருக்கும்போது, அவர்களுக்குள் எந்தவொரு கேள்வியும் இருக்காது. மனநிறைவு உடையவர்களின் அடையாளம், அவர்கள் எப்போதும் சுயநலமற்றவர்களாக இருப்பதுடன், அனைவரும் குற்றமற்றவர்கள் என எப்போதும் உணர்வார்கள். அவர்கள் யாரையும் குற்றம் சொல்ல மாட்டார்கள். இத்தகைய பாக்கியத்தைத் தமக்குக் கொடுத்து விட்டாரே என அவர்கள் பாக்கியத்தை அருள்பவரைக் குறை சொல்ல மாட்டார்கள். நாடகத்தில் தமது பாகங்கள் இப்படிப்பட்டதாக உள்ளதே என அவர்கள் நாடகத்தைக் குறைகூற மாட்டார்கள். எந்தவொரு நபரின் சுபாவமும் சம்ஸ்காரங்களும் இப்படி உள்ளதே என அவர்கள் எவரையும் குறைகூற மாட்டார்கள். சூழல் இவ்வாறு உள்ளதே என அவர்கள் இயற்கையைக் குறைகூற மாட்டார்கள். தமது சரீரங்கள் இவ்வாறு உள்ளதே என அவர்கள் தமது சரீரங்களைக் குறை சொல்ல மாட்டார்கள். மனநிறைவுடன் இருப்பதென்றால், சதா சுயநலமற்றவராக இருப்பதுடன், எவரையும் குறைகூறும் மனோபாவத்தில் இருந்தும் பார்வையில் இருந்தும் விடுபட்டிருத்தல் என்று அர்த்தம். எனவே, சங்கமயுகத்தின் சிறப்பியல்பு திருப்தியாகும். திருப்தியின் அடையாளம், மனநிறைவே. இதுவே பிராமண வாழ்க்கையின் விசேடமான பேறு ஆகும். உங்களுக்குள் திருப்தியும் மனநிறைவும் இல்லாவிட்டால், நீங்கள் பிராமண வாழ்க்கையின் நன்மையைப் பெற்றுக்கொள்ளவில்லை. பிராமண வாழ்க்கையின் சந்தோஷம், திருப்தியும் மனநிறைவுமே. நீங்கள் பிராமண வாழ்க்கையை வாழ்கிறீர்கள், ஆனால் அதன் சந்தோஷத்தை அனுபவம் செய்யவில்லை என்றால், நீங்கள் பெயரளவில் மட்டும் ஒரு பிராமணரா அல்லது பேறுகளின் சொரூபமாக இருக்கும் ஒரு பிராமணரா? எனவே, பாப்தாதா பிராமணக் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் நினைவூட்டுகிறார்: நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். அது மகத்தான பாக்கியமாகும். எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையின் ஆஸ்தியும் சொத்தும் திருப்தியே. பிராமண வாழ்க்கையின் தனித்துவ ஆளுமை, மனநிறைவே. இந்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்காமல் போவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு அதில் ஓர் உரிமை உள்ளது. அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவரும் உங்களுக்குத் திறந்த இதயத்துடன் பேறுகளின் பொக்கிஷங்களைக் கொடுக்கும்போது, அவர் ஏற்கனவே அவற்றை உங்களுக்குக் கொடுத்திருக்கும்போது, நீங்கள் உங்களின் சொத்தையும் தனித்துவ ஆளுமையையும் முழுமையாக அனுபவம் செய்ய வேண்டும். அத்துடன் மற்றவர்களும் அவற்றை அனுபவம் பெறச் செய்யுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுக் கொள்ள முடியும்: நான் எந்த இலக்க மாலையில் இருக்கிறேன்? நீங்கள் அனைவரும் ஒரு மாலையில் இருக்கிறீர்கள். ஆனால், எந்த இலக்க மாலையில் நீங்கள் இருக்கிறீர்கள்? அச்சா.

இன்று, இராஜஸ்தானினதும் உத்தரப் பிரதேசத்தினதும் முறையாகும். இராஜஸ்தான் என்றால் இராச்சியத்திற்கான (ஆளுகின்ற) சம்ஸ்காரங்களை உடையவர்கள், தமது ஒவ்வோர் எண்ணத்திலும் ரூபத்திலும் நடைமுறையில் ஆளுகின்ற சம்ஸ்காரங்களை உடையவர்கள், அதாவது, அவற்றை வெளிப்படுத்துபவர்கள் என்று அர்த்தம். இதுவே இராஜஸ்தான் வாசியாக இருத்தல் எனப்படுகிறது. நீங்கள் இத்தகையவர்கள், இல்லையா? நீங்கள் சிலவேளைகளில் பிரஜைகள் ஆகுவதில்லை, அல்லவா? நீங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டால், உங்களைப் பிரஜைகள் என்றே அழைப்பார்கள். நீங்கள் மாஸ்ரர் என்றால், நீங்கள் அரசர்கள் ஆவீர்கள். நீங்கள் சிலவேளைகளில் அரசராகவும் சிலவேளைகளில் பிரஜையாகவும் இருக்கக்கூடாது. இல்லை. எப்போதும் இயல்பாகவே உங்களின் விழிப்புணர்வில் ஆளும் சம்ஸ்காரங்களைக் கொண்டிருங்கள். இராஜஸ்தான் வாசிகளான இத்தகைய குழந்தைகளுக்கு ஒரு விசேடமான முக்கியத்துவம் உள்ளது. அனைவரும் எப்போதும் ஓர் அரசரை மேன்மையான பார்வையுடன் மதிப்பார்கள். அவர்கள் எப்போதும் அரசருக்கு ஓர் உயர்ந்த பதவியைக் கொடுப்பார்கள். அரசன் எப்போதும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். அவரின் பிரஜைகள் அவருக்குக் கீழேயே அமர்ந்திருப்பார்கள். எனவே, ஆளும் சம்ஸ்காரங்களைக் கொண்டுள்ள இராஜஸ்தானின் ஆத்மாக்களே, எப்போதும் உயர்ந்த ஸ்திதியின் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள். நீங்கள் இவ்வாறு ஆகிவிட்டீர்களா அல்லது இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு ஆகியுள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாக சம்பூரணம் ஆகவேண்டும். இராஜஸ்தானின் புகழ் எதிலும் குறைந்ததல்ல. இந்த ஸ்தாபனையின் தலைமையகம் இராஜஸ்தானிலேயே உள்ளது. எனவே, நீங்கள் மேன்மையானவர்கள், இல்லையா? நீங்கள் பெயரிலும் உயர்ந்தவர்கள். உங்களின் பணியிலும் உயர்ந்தவர்கள். இத்தகைய அரசர்களின் இடத்தைச் (இராஜஸ்தான்) சேர்ந்த குழந்தைகள் தமது வீட்டிற்கு வந்துள்ளார்கள். உங்களுக்குப் புரிகிறதா?

உத்தரப்பிரதேசம் குறிப்பாக ஒரு தூய்மையான இடமாக நினைவுகூரப்படுகிறது. அனைவரையும் தூய்மைப்படுத்தும் கங்கை நதியும் அங்கேயே உள்ளது. பக்தியைப் பொறுத்தவரை, கிருஷ்ணரின் இடமும் உத்தரப்பிரதேசத்திலேயே உள்ளது. அந்த இடத்திற்கு அதிகளவு புகழ் உள்ளது. யாராவது கிருஷ்ணரின் தெய்வீகச் செயல்களை அல்லது அவரின் பிறந்த இடத்தைப் பார்க்க விரும்பினால், அவர்கள் உத்தரப்பிரதேசத்திற்கே செல்வார்கள். எனவே, உத்தரப்பிரதேசத்தில் இருப்பவர்களின் சிறப்பியல்பானது, சதா தூய்மையாக இருந்து மற்றவர்களையும் தூய்மை ஆக்குவதாகும். தந்தை தூய்மையாக்குபவர் எனத் தந்தையின் புகழ் இருப்பதைப் போல், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் புகழும் தந்தையை ஒத்த புகழேயாகும். நீங்கள் தூய்மையாக்கும் ஆத்மாக்கள். பாக்கிய நட்சத்திரம் பிரகாசிக்கிறது. இத்தகைய அதிர்ஷ்டமான இடத்திற்கும் ஸ்திதிக்கும் புகழ் உள்ளது. எப்போதும் தூய்மை என்பதே உங்களின் ஸ்திதியின் புகழ் ஆகும். எனவே, நீங்கள் இந்த முறையில் உங்களைப் பாக்கியசாலிகளாகக் கருதுகிறீர்களா? நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்கள். உங்களின் பாக்கியத்தைப் பார்த்து, எப்போதும் மலர்ச்சியாக இருங்கள். நீங்களும் மலர்ச்சியாக இருங்கள். மற்றவர்களையும் தொடர்ந்து மலர்;ச்சியானவர்கள் ஆக்குங்கள். ஏனென்றால், மலர்ந்த முகம் இயல்பாகவே கவரும் முகமாக இருக்கும். இது பௌதீகமான நதியொன்று மனிதர்களைத் தன்னை நோக்கிக் கவர்வதைப் போன்றதாகும். யாத்திரீகர்கள் அங்கு செல்வதற்குத் தூண்டப்படுவார்கள். அவர்கள் எத்தனை கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், தூய்மை ஆகுகின்ற கவர்ச்சியால் அவர்கள் ஈர்க்கப்படுவார்கள். எனவே, மற்றவர்களைத் தூய்மையாக்கும் பணியின் ஞாபகார்த்தம் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. அதேபோல், மலர்;ச்சியானவர்களாகி, கவரும் ரூபம் ஆகுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

மூன்றாம் குழு இரட்டை வெளிநாட்டவர்களுக்குரியது: இரட்டை வெளிநாட்டவர்கள் என்றால், எப்போதும் வெளிநாட்டவரான தந்தையைக் கவர்பவர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், நீங்கள் சமமானவர்கள். தந்தை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார். நீங்களும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளீர்கள். உங்களுக்குச் சமமானவர்களிடம் அன்பு இருக்கும். பெற்றோரை விட நண்பர்களிடம் அதிக அன்பிருக்கும். எனவே, இரட்டை வெளிநாட்டவர்கள் தந்தையைப் போன்றவர்கள்: எப்போதும் சரீரங்களுக்கு அப்பாலும், சரீரங்களின் கவர்ச்சிக்கு அப்பாலும் இருப்பவர்கள். நீங்கள் வெளிநாட்டவர்கள், சரீரமற்றவர்கள், அவ்யக்தமானவர்கள். எனவே, தனக்குச் சமமாகவும் சரீரமற்றவர்களாகவும், அவ்யக்த ஸ்திதியையும் கொண்டிருக்கும் தனது குழந்தைகளைப் பார்த்துத் தந்தை மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் நன்றாக ஓடுகிறீர்கள். சேவை செய்வதிலும், முன்னேறுவதற்காகப் பல்வகையான வசதிகளையும் பல்வகை வழிமுறைகளையும் பயன்படுத்துவதிலும் நீங்கள் நன்றாக ஓடுகிறீர்கள். நீங்கள் வழிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். அத்துடன் முன்னேறுகிறீர்கள். இதனாலேயே, பாப்தாதா எங்கும் உள்ள இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அனைவருக்கும் சேவைக்காகப் பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அத்துடன், உங்கள் அனைவருக்கும் சுய முன்னேற்றத்தை உணரும்படி உங்களுக்கு நினைவூட்டுகிறார். எப்போதும் உங்களின் சுய முன்னேற்றம் என்ற பறக்கும் ஸ்திதியுடன் தொடர்ந்து பறந்து செல்லுங்கள். உங்களின் சொந்த சுய முன்னேற்றத்திற்கும் சேவையில் முன்னேற்றத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதன் மூலம், தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான உரிமை உங்களுக்கு எப்போதும் உள்ளது. உங்களுக்கு இந்த உரிமை எப்போதும் இருக்கும். அச்சா.

எஞ்சியிருக்கும் நாலாவது குழு, மதுவனவாசிகளுடையது. அவர்கள் எப்போதும் இங்கேயே இருக்கிறார்கள். இதயத்தில் இருப்பவர்கள் அடுக்களையிலும் இருக்கிறார்கள். அடுப்பருகில் இருப்பவர்கள் இதயத்தில் இருக்கிறார்கள். மதுவனமே, ஒழுங்குமுறையுடன் சரியான முறையில் அதிகபட்ச பிரம்மாபோஜன் தயாரிக்கப்படும் இடமாகும். மதுவனத்தில் இருப்பவர்கள், அதியன்பிற்குரிய, நீண்ட காலம் பிரிந்து இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள். சகல விழாக்களும் மதுவனத்திலேயே இடம்பெறுகின்றன. மதுவனத்தில் இருப்பவர்களே, பெரும்பாலான முரளிகளை நேரடியாகக் கேட்பவர்கள். எனவே, மதுவனவாசிகளே எப்போதும் மேன்மையான பாக்கியத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பவர்கள். நீங்கள் உங்களின் இதயபூர்வமாகச் சேவை செய்கிறீர்கள். இதனாலேயே, மதுவனவாசிகள் தொடர்ந்து பாப்தாதாவிடமிருந்தும் சகல பிராமணர்களிடமிருந்தும் அவர்களின் இதயபூர்வமாக ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். அச்சா.

எங்கும் இருந்து வந்துள்ள பாப்தாதாவின் விசேடமான திருப்தி இரத்தினங்கள் அனைவருக்கும், பாப்தாதாவிடமிருந்து விசேடமான அன்பும் நினைவுகளும் உரித்தாகட்டும். அத்துடன், பலமில்லியன் கணக்கானவர்களில் வெகுசில பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும், பிராமண வாழ்க்கையைப் பெற்றுள்ள, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட ஆத்மாக்களில் கையளவினருக்கும், பாப்தாதாவின் தூய எண்ணங்களை நிறைவேற்றும் ஆத்மாக்களுக்கும், சங்கமயுக பிராமண வாழ்க்கையின் சொத்திற்கான சம்பூரணமான உரிமையை அடையும் ஆத்மாக்களுக்கும், பாக்கியத்தை அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவருமான பாப்தாதாவிடமிருந்து அதிகளவு அன்பையும் நினைவுகளையும் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

தாதி ஜான்கியும் தாதி சந்திரமணியும் சேவைக்குச் செல்வதற்காக பாப்தாதாவிடமிருந்து விடை பெறுகிறார்கள்: நீங்கள் செல்கிறீர்களா அல்லது பாபாவை உங்களுக்குள் அமிழ்த்துகிறீர்களா? நீங்கள் செல்கிறீர்களோ அல்லது வருகிறீர்களோ, நீங்கள் எப்போதும் அமிழ்ந்துள்ளீர்கள். பாப்தாதா ஒருபோதும் விசேட குழந்தைகளை வேறாகப் பார்ப்பதில்லை. நீங்கள் சூட்சுமமான அல்லது பௌதீக ரூபத்தில் இருந்தாலும், எப்போதும் பாபாவுடனேயே இருக்கிறீர்கள். ஏனென்றால், மகாவீர் குழந்தைகள் மட்டுமே ஒவ்வொரு கணமும் தந்தையுடன் இருப்பதும், அவருடனேயே திரும்பிச் செல்வதும் என்ற சத்தியத்தை நிறைவேற்றுகிறார்கள். வெகு சிலரே இந்தச் சத்தியத்தை நிறைவேற்றுகிறார்கள். இதனாலேயே, இத்தகைய அதியன்பிற்குரிய மகாவீர் குழந்தைகள் எங்கே சென்றாலும், அவர்கள் தந்தையை அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள். தந்தை எப்போதும் அவர்களை சூட்சும வதனத்தில் தன்னுடன் வைத்திருப்பார். அவர் தனது சகவாசத்தை ஒவ்வோர் அடியிலும் வழங்குவார். ஆகவே, நீங்கள் என்ன சொல்வீர்கள்? நீங்கள் செல்கிறீர்களா அல்லது வருகிறீர்களா? இதனாலேயே, நீங்கள் செல்கிறீர்களா அல்லது பாபாவை உங்களுக்குள் அமிழ்த்துகிறீர்களா என பாபா கேட்கிறார். இந்த முறையில் எப்போதும் ஒன்றிணைந்திருப்பதன் மூலம், நீங்கள் சமமானவர்கள் ஆகுவதுடன் அமிழ்ந்து போகிறீர்கள். நீங்கள் வீட்டில் குறுகிய காலத்திற்கு ஓய்வெடுத்துத் தந்தையுடன் இருந்துவிட்டுப் பின்னர், இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். இதை மேலே இருந்து தந்தை பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால், நீங்கள் அவரின் சகவாசத்தின் அனுபவத்தைக் குறுகிய காலத்திற்குப் பெறுவீர்கள். அச்சா.

(பாபா, இன்று நீங்கள் அற்புதமானதொரு மாலையை உருவாக்கினீர்கள்). நீங்களும் ஒரு மாலையை உருவாக்குகிறீர்கள், இல்லையா? அந்த மாலை இன்னமும் சிறியதாகவே இருக்கிறது. பெரிய மாலை உருவாக்கப்படும். இப்போது சிறிதளவு மயங்கியிருப்பவர்கள், சிறிது காலத்தில் இயற்கையால் அல்லது காலத்தால் உணர்விற்கு வரச் செய்யப்படுவார்கள். அப்போது அந்த மாலை பெரியதாகும். அச்சா. நீங்கள் எங்கே சென்றாலும், ஏற்கனவே தந்தையின் ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுவிட்டீர்கள். உங்களின் ஒவ்வோர் அடியினூடாகவும் அனைவரும் தொடர்ந்து தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். நீங்கள் அவர்களைப் பார்த்தால், உங்களின் திருஷ்டியினூடாக அவர்கள் தந்தையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் பேசும்போது, உங்களின் வார்த்தைகளினூடாக அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள். அத்துடன் உங்களின் செயல்களினூடாகவும் அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும் அவர்களின் மீது ஆசீர்வாதங்களைப் பொழியப் போகிறீர்கள். இப்போது வருகின்ற ஆத்மாக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களும் மகாதானமும் தேவைப்படுகிறது. நீங்கள் செல்வதென்றால், அவர்களுக்குத் திறந்த இதயத்துடன் தந்தையின் ஆசீர்வாதங்களைக் கொடுத்தல் என்று அர்த்தம். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் புத்தியெனும் பாதங்களைப் பஞ்சபூதங்களின் எந்தவிதமான ஈர்ப்பிற்கும் அப்பால் வைத்திருக்கும் ஒரு தேவதை ஆகுவீர்களாக.

தேவதைகள் எப்போதும் ஒளியாலான சரீரத்துடனேயே காட்டப்படுவார்கள். ஒளியாலான சரீரத்தைக் கொண்டிருப்பவர்கள், தமது சரீரத்தின் உணர்விற்கு அப்பாற்பட்டிருப்பார்கள். அவர்களின் புத்தியெனும் பாதங்கள் பஞ்சபூதங்களின் எந்தவிதமான ஈர்ப்பிற்கும் அப்பாற்பட்டிருக்கும். அதாவது, அவர்கள் அப்பாற்பட்டிருப்பார்கள். மாயை அல்லது மாயையுடன் சம்பந்தப்பட்ட எதுவும் இத்தகைய தேவதைகளைத் தொட முடியாது. எவ்வாறாயினும், நீங்கள் ஒருபோதும் எவரிலும் தங்கியிருக்காத போது மட்டுமே இது சாத்தியமாகும். உங்களின் சரீரத்தில் ஓர் உரிமையுடன் செயல்படுங்கள். அத்துடன் மாயையின் மீதும் உரிமையுடையவராக இருங்கள். உங்களின் லௌகீக அல்லது அலௌகீக உறவுமுறைகளில் எந்தவிதமான தங்கியிருத்தலும் இருக்கக்கூடாது.

சுலோகம்:
சரீரங்களைப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், ஒளியாலான சரீரத்தைப் பார்த்து, ஒளி ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள்.