03.02.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     17.04.84     Om Shanti     Madhuban


பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளின் அடையாளங்கள்.


இன்று, பாக்கியத்தை அருள்பவரான தந்தை, தனது பாக்கியசாலிக் குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் பாக்கியசாலி ஆத்மா ஆவார். பிராமணர் ஆகுவதெனில் பாக்கியசாலி ஆகுதல் என்று அர்த்தம். இறைவனுக்குச் சொந்தமாக இருத்தல் என்றால் பாக்கியசாலி ஆகுதல் என்று அர்த்தம். அனைவரும் பாக்கியசாலிகளே. ஆனால், தந்தைக்குச் சொந்தமாகிய பின்னர், தந்தையிடமிருந்து வெவ்வேறு பொக்கிஷங்களை ஆஸ்தியாகப் பெற்ற பின்னர், நீங்கள் அந்த மேன்மையான ஆஸ்திக்கான உரிமையைப் பெறுவதில் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். சகல உரிமைகளையும் கொண்ட உங்களின் வாழ்க்கையில் பயன்படுத்துவதிலும் சதா நீங்கள் பெற்ற உரிமைகளை விரிவாக்கத்தை ஏற்படுத்துவதற்குச் சரியான வழிமுறையில் பயன்படுத்துவதிலும் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். சிலர் ஆயிரம் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகிறார்கள். சிலர் நூறாயிரம் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகிறார்கள். சிலர் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகிறார்கள். இது ஏனெனில், அதை நீங்கள் உங்களைச் சம்பூரணமாக்குவதற்குப் பயன்படுத்தினாலென்ன, அல்லது உங்களின் சம்பூரணத்துடன் ஏனைய ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதற்குப் பயன்படுத்தினாலென்ன, பொக்கிஷங்களைச் சரியான வழிமுறையில் பயன்படுத்துவதெனில் அவற்றை அதிகரித்தல் என்று அர்த்தம். அழியும் செல்வத்தை நீங்கள் பயன்படுத்தும்போது அவை அழிந்துவிடும். அழியாத செல்வமோ, நீங்கள் பயன்படுத்தும்போது, பலமில்லியன் மடங்கு அதிகரிக்கும். இதனாலேயே, அதைச் செலவழித்து அதிலிருந்து உண்ணுங்கள் என்றொரு கூற்று உள்ளது. எந்தளவிற்கு நீங்கள் அதைச் செலவழித்து அதிலிருந்து உண்கிறீர்களோ, அந்தளவிற்கு, சக்கரவர்த்திகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியான தந்தை உங்களைச் செழிப்பானவர் ஆக்குவார். இதனாலேயே, தாம் பெற்ற பாக்கியப் பொக்கிஷங்களைச் சேவைக்காகப் பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து முன்னேறுவார்கள். பலமில்லியன்மடங்கு பாக்கியசாலி என்றால், ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேமித்தல் என்று அர்த்தம். அத்துடன் பலமில்லியன் மடங்கு சேவையாளராக, உங்களின் ஒவ்வோர் எண்ணத்தையும் வார்த்தையையும் செயலையும் தொடர்பையும் சேவைக்காகப் பயன்படுத்துதல் என்று அர்த்தம். பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஒருவர் சதா பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருப்பார். அத்துடன் அநாதியாகவும் எப்போதும் மகாதானியாக இருப்பார். அவர் சதா மற்றவர்களுக்கு வழங்கும் அருள்பவராக இருப்பார். இத்தகைய ஆத்மாக்கள் நிகழ்ச்சிக்கேற்ப அல்லது வசதிகளுக்கேற்ப சேவையாளர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் சதா மகாதானிகளாகவே இருப்பார்கள். அவர்கள் வார்த்தைகள் மூலம் சேவை செய்யாதபோது, தமது எண்ணங்களாலும் செயல்களாலும் சேவை செய்வார்கள். தமது தொடர்புகளாலும் உறவுமுறைகளாலும் தமது முடிவற்ற, நிலையான பொக்கிஷங்களை ஏதாவதொரு வழிமுறையால் சேவை செய்யும் சதா சேவையாளர்களாக இருப்பார்கள். வெவ்வேறு வகையான சேவை முறைகள் காணப்படும். ஆனால், சேவை அலையானது சதா தொடரும். நீங்கள் சதா யோகிகளாக இருப்பதைப் போன்று, சதா சேவையாளர்களாகவும் ஆகுங்கள். சதா சேவையாளர் எப்போதும் சேவையின் மேன்மையான பழத்தை உண்பதுடன், தொடர்ந்து மற்றவர்களுக்கும் கொடுப்பார். அதாவது, அவர் எல்லா வேளையும் அந்தப் பழத்தை உண்பதனால், நடைமுறை சொரூபம் ஆகுவார்.

பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஆத்மாக்கள் எப்போதும் தாமரை மலர் ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள். அதாவது, அவர்கள் எப்போதும் தாமரை மலர் ஸ்திதியில் இருப்பார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட எவற்றின் கவர்ச்சிகளில் இருந்தும் எல்லைக்குட்பட்ட பழத்தை ஏற்றுக் கொள்வதில் இருந்தும் பற்றற்றவராக இருப்பார்கள். அதனால் அவர்கள் தந்தையாலும் பிராமணக் குடும்பத்தாலும் உலகத்தாலும் நேசிக்கப்படுவார்கள். இத்தகைய மேன்மையான சேவையாளர் ஆத்மாக்களுக்கு அனைவரும் தமது இதயபூர்வமான அன்புடன் சந்தோஷ மலர்களை அர்ப்பணிப்பார்கள். இத்தகைய சதா சேவை செய்கின்ற, பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவே அன்புமலர்களை அர்ப்பணிக்கிறார். பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஆத்மாக்கள், தமது பிரகாசிக்கும் பாக்கிய நட்சத்திரங்களால் ஏனைய ஆத்மாக்களைப் பாக்கியசாலிகள் ஆக்குவதற்கான ஒளியை அவர்களுக்குக் கொடுப்பார்கள். பாப்தாதா இத்தகைய பாக்கியசாலி ஆத்மாக்களைப் பார்த்தார். அவர்கள் தொலைவில் இருந்தாலென்ன அல்லது தனிப்பட்ட முறையில் பாபாவிற்கு முன்னால் இருந்தாலென்ன, அவர்கள் சதா தமது இதயத்தில் தந்தையை அமிழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனாலேயே, சமமாக இருப்பவர்கள் நெருக்கமாக இருப்பார்கள். இப்போது, நீங்கள் என்ன வகையான பாக்கியசாலி ஆத்மா என்பதை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களாலேயே உங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும், அல்லவா? மற்றவர்கள் உங்களைப் பற்றிக் கூறும்போது, நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளக்கூடும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விடக்கூடும். ஆனால், நீங்கள் என்ன வகையான ஆத்மா என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? எவ்வாறாயினும், பாப்தாதா கூறுகிறார்: குறைந்தபட்சம் நீங்கள் அபாக்கியசாலிகளில் இருந்து பாக்கியசாலிகள் ஆகியுள்ளீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் பல வகையான துன்பங்களில் இருந்தும் வேதனைகளில் இருந்தும் விடுபட்டவர் ஆகுவீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். ஒன்று சுவர்க்கத்திற்குச் செல்வது. மற்றையது, இராச்சியத்திற்கான உரிமையைக் கோருவது. நீங்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். ஆனால், எப்போது, எங்கே நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள் என்பதை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான பாப்தாதாவின் பட்டியலில் உங்களின் பெயர் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. உலகிலுள்ள ஏனைய அனைவரையும் விட இது மேலானது. எவ்வாறாயினும், இது அனைத்திலும் சிறப்பானது அல்ல. எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தப் பிராந்தியம் முதல் இலக்கத்தைக் கோரும்? ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு உள்ளது.

மகாராஷ்டிராவின் சிறப்பியல்பு என்ன? உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் மகத்தானவர்களே. ஆயினும், உங்களைப் பற்றி நினைவு செய்யப்படும் விசேடமான சிறப்பியல்பு என்ன? மகாராஷ்டிராவில் கணேஷ் அதிகளவில் பூஜிக்கப்படுகிறார். கணேஷை என்னவென்று அழைப்பார்கள்? விக்கினங்களை விநாசம் செய்பவர். மக்கள் பணியொன்றைச் செய்வதற்கு ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் கணேஷையே வணங்குவார்கள். எனவே, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஒவ்வொரு மகத்தான பணியிலும் ஸ்ரீ கணேஷை வெளிப்படச் செய்வீர்கள், அல்லவா? மகாராஷ்டிரா என்றால் சதா தடைகளை அழிப்பவர்களின் பிராந்தியம் என்று அர்த்தம். எனவே, எப்போதும் தடைகளை அழிப்பவர்களாகி, இந்த மகத்துவத்தை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்டுங்கள். மகாராஷ்டிராவில் எந்தவிதமான தடைகளும் இருக்கக்கூடாது. அனைவரும் தடைகளை அழிப்பவர்கள் ஆகவேண்டும். அது வரட்டும். வந்து, தொலைவில் இருந்தே உங்களை வணங்க வேண்டும். எனவே, இத்தகைய தடைகளை அழிப்பவர்களின் குழுவொன்றை நீங்கள் அழைத்து வந்துள்ளீர்கள், அல்லவா? மகாராஷ்டிரா சதா தனது இந்த மகத்துவத்தை உலகிற்குக் காட்ட வேண்டும். நீங்கள் தடைகளையிட்டுப் பயப்படுபவர்கள் இல்லையல்லவா? நீங்கள் மற்றவர்களுக்குச் சவால் விடுக்கும் தடைகளை அழிப்பவர்கள் ஆவீர்கள். எவ்வாறாயினும், மகாராஷ்டிரா அதிகளவு துணிவைக் காட்டுகிறது. அச்சா.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ன அற்புதங்களைக் காட்டுவீர்கள்? உத்தரப்பிரதேசத்தின் சிறப்பியல்பு என்ன? அங்கு பல யாத்திரைத்தலங்களும் பல நதிகளும் உள்ளன. ஜகத்குருமார் அனைவரும் அங்கேயே உள்ளனர். நான்கு மூலைகளிலும் நான்கு ஜகத்குருமார் இருக்கிறார்கள், அல்லவா? உத்தரப்பிரதேசத்தில் பல மகாமண்டலேஸ்வரர்களும் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹரியின் வாயில் (ஹரித்துவார்) விசேடமானது. எனவே, உத்தரப்பிரதேசத்தில் ஹரியின் (இறைவனின்) வாயிலைக் காட்டும் சேவையாளர்கள் பலர் இருக்க வேண்டும். அதாவது, இறைவனுக்கு நெருக்கமாகச் செல்வதற்கான வாயிலைக் காட்டுபவர்கள் பலர் இருக்க வேண்டும். உத்தரப்பிரதேசம் யாத்திரைத்தலமாக இருப்பதனால், அங்கு பல வழிகாட்டிகளும் இருக்கிறார்கள். அவர்கள் உண்டு, பருகி இருப்பவர்கள். ஆனால், ஆன்மீகச் சேவை வழிகாட்டிகளான நீங்களோ உண்மையான பாதையைக் காட்டுபவர்கள். தந்தையுடன் சந்திப்பைக் கொண்டாடுபவர்கள். அத்துடன் மற்றவர்களைத் தந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு வருபவர்கள். உத்தரப்பிரதேசத்தில் வழிகாட்டிகள் ஆகக்கூடிய இத்தகைய விசேடமான பாண்டவர்கள் இருக்கிறார்களா? பாண்டவர்கள் வழிகாட்டிகளாக இருப்பதை நடைமுறையில் உத்தரப்பிரதேசம் வெளிப்படுத்த வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?

மைசூரின் சிறப்பியல்பு என்ன? அங்கு சந்தனமரம் உள்ளது. அத்துடன் விசேடமான பூந்தோட்டங்களும் உள்ளன. எனவே, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக சதா ஆன்மீக ரோஜாக்களாகவும் நறுமணம் மிக்க சந்தனமரங்களாகவும் ஆகவேண்டும். சந்தனத்தினதும் ஆன்மீக ரோஜாக்களினதும் நறுமணத்தைப் பரப்பி, உலகையே ஒரு பூந்தோட்டம் ஆக்குங்கள். சந்தனத்தின் நறுமணத்தை உலகெங்கும் பரப்புங்கள். சந்தனத் திலகத்தை இட்டு, அனைவரையும் நறுமணம் மிக்கவர்களாகவும் குளிர்மையானவர்களாகவும் ஆக்குங்கள். சந்தனம் மிகவும் குளிர்மையானது. எனவே, அதிகபட்ச எண்ணிக்கையான ஆன்மீக ரோஜாக்கள் கர்நாடகாவில் இருந்து வெளிப்படுவார்கள், அல்லவா? நடைமுறை அத்தாட்சியைக் காட்டுதல் என்பதே இதன் அர்த்தம். இப்போது, அனைவரும் தமது சொந்தச் சிறப்பியல்பை நடைமுறை ரூபத்தில் காட்ட வேண்டும். முழுமையாக மலர்ந்துள்ள நறுமணம் மிக்க ஆன்மீக ரோஜாக்களை அதிகபட்ச எண்ணிக்கையில் கொண்டுவரவேண்டும். நீங்கள் அவர்களை அழைத்து வந்துள்ளீர்கள். உங்களில் சிலர் அவர்களை அழைத்து வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் ஒரு பூங்கொத்தைக் கொண்டுவரவில்லை. அச்சா.

பாபா வெளிநாடுகளின் புகழைப்பற்றி அதிகளவில் பேசியுள்ளார். வெளிநாட்டின் சிறப்பியல்பானது, நீங்கள் மிகவும் பற்றற்றவர்கள் ஆகுகிறீர்கள். அத்துடன் மிகவும் பற்றானவர்களும் ஆகுகிறீர்கள். வெளிநாட்டுக் குழந்தைகளின் அன்பான பற்றின்மையைப் பார்க்கும்போது, பாப்தாதா களிப்படைகிறார். அந்த வாழ்க்கை இப்போது கடந்தகாலம் ஆகிவிட்டது. நீங்கள் எந்தளவிற்கு அகப்பட்டிருந்தீர்களோ, அந்தளவிற்கு இப்போது பற்றற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, வெளிநாட்டவர்களின் பற்றற்ற தன்மையையும் அன்பையும் பாப்தாதா விரும்புகிறார். இதனாலேயே, பாப்தாதா விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். நீங்கள் உங்களின் சொந்தச் சிறப்பியல்பில் அமிழ்ந்துவிட்டீர்கள், அல்லவா? நீங்கள் பற்றற்றவர்களும் அன்பானவர்களும் அல்லவா? உங்களிடம் எந்தவிதப் பற்றும் இல்லையல்லவா? எவ்வாறாயினும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்கு விருந்தாளிகளாக வந்துள்ளார்கள். எனவே, விருந்தாளிகள் எப்போதும் முன்னாலேயே வைக்கப்படுவார்கள். இதனாலேயே, வெளிநாட்டவர்களைக் காணும்போது பாரத மக்கள் விசேடமான சந்தோஷத்தை அடைகிறார்கள். சிலர் விருந்தாளிகளாக வந்து, வீட்டுக்காரர்கள் ஆகுகிறார்கள். இது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் செயற்பாடாக எப்போதும் இருக்கிறது. அவர்கள் விருந்தாளிகளாக வந்து, விருந்தளிப்பவர்கள் ஆகுகிறார்கள். எவ்வாறாயினும் அவர்கள் பல தடைகளைத் தாண்டித் தந்தையிடம் வந்துள்ளார்கள். எனவே, நீங்கள் முதலில் என நீங்கள் கூறுவீர்கள், அல்லவா? பாரதம் அதற்கேயுரிய சிறப்பியல்பைக் கொண்டுள்ளது. வெளிநாடு அதற்கேயுரிய சிறப்பியல்பைக் கொண்டுள்ளது. அச்சா.

தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஆத்மாக்கள் அனைவருக்கும், ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு விநாடியும் 84 மணிகளுடன் உள்ள சதா பிரபல்யமான இறைவிகளுக்கும்.... எனவே, நீங்கள் 84 ஆம் ஆண்டில் மணிகளை அடிப்பீர்களா? அல்லது நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டுமா? வெளிநாட்டில், மக்கள் பயத்தில் வாழ்கிறார்கள். எப்போது மணிகள் அடிக்கும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள். வெளிநாடுகள் மணிகளை அடிக்குமா? அல்லது இந்தத் தேசம் மணிகளை அடிக்குமா? 84 என்றால் எங்கும் மணிகள் அடிக்கும் என்றே அர்த்தம். எந்தவொரு நிகழ்ச்சியின் முடிவிலும், அவர்கள் ஆரத்தி காட்டும்போது, மணிகளை மிகவும் சத்தமாக அடிப்பார்கள். அதன்பின்னர் விழா பூர்த்தியாகும். ஆரத்தி காட்டுவதெனில், அதுவே நிறைவு என்று அர்த்தம். எனவே, நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்?

தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சகல பலமில்லியன்மடங்கு பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் சதா சேவையாளர்களாக இருப்பவர்களுக்கும், சதா சகல பொக்கிஷங்களையும் பெருந்தன்மையான இதயத்துடன் வழங்கும் மாஸ்ரர் அருள்பவர்களுக்கும், தமது சம்பூரணத்தினால் மற்றவர்களையும் சம்பூரணம் ஆக்குபவர்களுக்கும், மேன்மையான பாக்கியத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கும், மேன்மையான அத்தாட்சியை சதா வழங்கும் தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பஞ்சாப்வாசிகளுக்கு:

தந்தை இங்கிருக்கிறார். எனவே, நீங்கள் எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை. என்ன நிகழ்ந்தாலும் அது நன்மைக்கே. நீங்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். நீங்கள் இந்துக்களோ அல்லது சீக்கியர்களோ கிடையாது. நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள். எனவே, நீங்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். பாகிஸ்தானிலும், நீங்கள் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என அவர்கள் கூறுவதுண்டு. உங்களுக்கு வேறு எதனுடனும் தொடர்பில்லை. இதனாலேயே, நீங்கள் வேறு எவருக்கும் அன்றி, இறைவனுக்குச் சொந்தமானவர்கள். என்ன நிகழ்ந்தாலும், நீங்கள் பயப்படுபவர்கள் இல்லை. எவ்வளவு பெரிய நெருப்பு எரிந்தாலும், பூனைக்குட்டிகள் பாதுகாப்பாகவே இருக்கும். எவ்வாறாயினும், யோகியுக்த் ஆனவர்கள் மட்டுமே பாதுகாப்பாக இருப்பார்கள். நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள் எனக் கூறிவிட்டு, வேறொருவரை நினைப்பதாக இருக்கக்கூடாது. இத்தகைய ஆத்மாக்கள் உதவியைப் பெற மாட்டார்கள். பயப்படாதீர்கள். பயப்படாமல் தொடர்ந்து முன்னேறுங்கள். நினைவு யாத்திரையில், நற்குணங்களைக் கிரகிப்பதில், கற்பதில் எனச் சகல பாடங்களிலும் முன்னேறுங்கள். நீங்கள் எந்தளவிற்கு முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்குத் தொடர்ந்து இலகுவாகப் பெறுவீர்கள்.

நீங்கள் அனைவரும் உங்களை இந்த உலக நாடகத்தில் விசேடமான நடிகர்களாகக் கருதுகிறீர்களா? சென்ற கல்பத்தின் உங்களின் படங்களை இப்போது உங்களால் பார்க்க முடிகிறதா? இதுவே பிராமண வாழ்க்கையின் அற்புதம் ஆகும். எப்போதும் இந்தச் சிறப்பியல்பை நினைவில் வைத்திருங்கள்: நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள், இப்போது என்னவாகி உள்ளீர்கள். நீங்கள் சிப்பிகளில் இருந்து வைரங்கள் போன்று பெறுமதி மிக்கவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் துன்ப உலகில் இருந்து சந்தோஷ உலகிற்குள் வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நாடகத்தின் கதாநாயக, கதாநாயகி நடிகர்கள் ஆவீர்கள். ஒவ்வொரு பிரம்மாகுமாரும் பிரம்மாகுமாரியும் தந்தையின் செய்தியை வழங்கும் தூதுவர் ஆவீர்கள். இறைவனின் செய்தியை வழங்கும் தூதுவர்கள் மிக மேன்மையானவர்கள். எனவே, நீங்கள் இந்தப் பணியை சதா செய்வதற்கே அவதரித்துள்ளீர்கள். இந்தச் செய்தியை வழங்குவதற்காகவே நீங்கள் மேலிருந்து கீழே வந்துள்ளீர்கள். இந்த விழிப்புணர்வு உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். உங்களின் இந்தத் தொழிலை எல்லா வேளையும் நினைவு செய்யுங்கள்: நீங்களே சந்தோஷச் சுரங்கத்தின் அதிபதிகள் ஆவீர்கள். இதுவே உங்களின் பட்டம் ஆகும்.

நீங்கள் உங்களை சதா மேன்மையான சங்கமயுக பிராமண ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? உண்மையான பிராமணர்கள், சதா உண்மையான தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுப்பார்கள். பிராமணப் பூசாரியின் கடமை, சமயக் கதைகளைக் கூறுதல். நீங்கள் சமயக் கதைகளைக் கூறுவதில்லை. ஆனால் நீங்கள் உண்மையான அறிமுகத்தையே கொடுக்கிறீர்கள். நீங்கள் உண்மையான தந்தையின் உண்மையான அறிமுகத்தை வழங்கும் பிராமண ஆத்மாக்கள் என்ற போதையை எப்போதும் கொண்டிருங்கள். பிராமணர்கள் தேவர்களை விட மிக மேன்மையானவர்கள். இதனாலேயே, அவர்கள் பிராமணர்களின் இடத்தை உச்சிக்குடுமியாகக் காட்டியுள்ளார்கள். உச்சிக்குடுமியைக் கொண்டிருக்கும் பிராமணர்கள், மேன்மையான ஸ்திதியில் இருப்பவர்களாகக் காட்டப்படுகிறார்கள். நீங்கள் உயரே இருக்கும்போது, கீழே உள்ள அனைத்தும் மிகச் சிறியதாகவே தென்படும். அப்போது எதுவும் பெரியதாகத் தோன்றாது. நீங்கள் மேலே அமர்ந்திருக்கும்போது, கீழே உள்ள அனைத்தும் மிகச் சிறியதாகவே தென்படும். ஒரு பிரச்சனை உங்களுக்குப் பெரியதாகத் தோன்றும்போது, அதற்கான காரணம், நீங்கள் கீழே இருந்தவண்ணம் அதைப் பார்ப்பதே ஆகும். நீங்கள் அதை மேலே இருந்து பார்த்தால், சிரமப்பட வேண்டியதில்லை. எனவே, நீங்கள் உச்சிக்குடுமியை உடைய பிராமணர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். இதனூடாகப் பெரிய பிரச்சனைகளும் ஒரு விநாடியில் சிறிதாகிவிடும். நீங்கள் பிரச்சனைகளை இட்டுப் பயப்படுபவர்கள் அல்ல. ஆனால், பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றை வெற்றி கொள்பவர்கள் ஆவீர்கள். அச்சா.

இன்று காலை (18ஃ04ஃ84) அமிர்தவேளையில், மதுவனத்தில் மாரடைப்பினால் ஒரு சகோதரர் தனது சரீரத்தை விட்டுப் பிரிந்தார். இவையே அந்த வேளையில் அவ்யக்த பாப்தாதா கூறிய மேன்மையான வாசகங்கள்.

நீங்கள் அனைவரும் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிக்கும் மேன்மையான ஆத்மாக்கள், அல்லவா? நாடகத்தில் எந்தவொரு காட்சியும் நன்மையானதே. எதுவும் புதியதல்ல! (அவரின் அண்ணியிடம் பேசுகிறார்) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பற்றற்ற பார்வையாளர் என்ற ஆசனத்தில் அமர்ந்தவண்ணம் ஒவ்வொரு காட்சியையும் அவதானிப்பதால் உங்களுக்கும் நன்மை உள்ளது. அந்த ஆத்மாவிற்கும் நன்மை உள்ளது. நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள், அல்லவா? நீங்கள் நினைவில் சக்தியின் ரூபம், அல்லவா? சக்தி எப்போதும் வெற்றியாளர் ஆவார். நீங்கள் உங்களின் பாகங்கள் அனைததையும் வெற்றியாளர் சக்தியாக நடிப்பவர். இதுவும் ஒரு பாகமே. உங்களின் பாகத்தை நடிக்கும்போது, வேறெந்த எண்ணங்களையும் ஏற்படுத்தாதீர்கள். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவருக்கேயுரிய பாகம் உள்ளது. இப்போது, அந்த ஆத்மாவிற்கு அமைதியினதும் சக்தியினதும் ஒத்துழைப்பைக் கொடுங்கள். அவர் தெய்வீகக் குடும்பத்தில் உள்ள பலரின் ஒத்துழைப்பைப் பெறுகிறார். எனவே, எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை. இது ஒரு மகத்தான யாத்திரைத்தலம் அல்லவா? அவர் ஒரு மகாத்மா. இது ஒரு மகத்தான யாத்திரைத்தலம். எப்போதும் இந்த மகத்துவத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் அனைவரும் நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள், அல்லவா? அந்த அதியன்பிற்குரிய குழந்தை தனது பழைய உடலுடன் இருந்த தனது கணக்கை முடித்து, அதை விட்டு, புதிய உடலின் ஆயத்தங்களுக்காகச் சென்றுவிட்டார். ஆகவே, அனைவரும் இப்போது அந்தப் பாக்கியசாலி ஆத்மாவிற்கு அமைதியினதும் சக்தியினதும் ஒத்துழைப்பைக் கொடுங்கள். இது விசேட சேவை ஆகும். ஏன்? அல்லது என்ன? என்ற கேள்விகளுக்குள் செல்லாதீர்கள். ஆனால் நீங்கள் சக்தி சொரூபமாக இருந்தவண்ணம் உலகிற்கு அமைதிக்கதிர்களைப் பரப்புங்கள். அவர் ஒரு மேன்மையான ஆத்மா. வருமானத்தைச் சம்பாதிக்கக்கூடிய ஓர் ஆத்மா. எனவே, எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை. உங்களுக்குப் புரிகிறதா?
 

ஆசீர்வாதம்:
உங்களின் தேவதை ரூபத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலமும் தந்தையின் பாதுகாப்புக் குடையை அனுபவம் செய்வதன் மூலமும் தடைகளை வென்றவர் ஆகுவீர்களாக.

நீங்கள் அமிர்தவேளையில் விழித்தெழுந்தவுடன், நான் ஒரு தேவதை என்பதை உங்களின் விழிப்புணர்வில் கொண்டுவாருங்கள். தந்தை பிரம்மா விரும்பும் இந்தப் பரிசை அவருக்குக் கொடுங்கள். பாப்தாதா தினமும் அமிர்தவேளையில் உங்களைத் தனது கரங்களால் அணைத்துக் கொள்வார். நீங்கள் அதீந்திரிய சுகத்தில் பாபாவின் கரங்களில் ஊஞ்சல் ஆடுவதை அனுபவம் செய்வீர்கள். தேவதை ரூபத்தின் விழிப்புணர்வைப் பேணுபவர்களுக்கு எந்தவொரு இக்கட்டான சூழ்நிலைகளோ அல்லது தடைகளோ வந்தாலும், தந்தை அவர்களுக்குப் பாதுகாப்புக் குடையாக இருப்பார். எனவே, தந்தையின் பாதுகாப்புக் குடையையும் அவரின் அன்பையும் அனுபவம் செய்வதன் மூலம் தடைகளை வென்றவர்கள் ஆகுங்கள்.

சுலோகம்:
சந்தோஷத்தின் சொரூபமாக இருக்கும் ஓர் ஆத்மா, தனது ஆதி ஸ்திதியால் இக்கட்டான சூழ்நிலைகளை வெற்றி கொள்வார். ஓம் சாந்தி