03.03.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     28.02.84     Om Shanti     Madhuban


புள்ளியினதும் துளியினதும் உட்கருத்து.


இன்று, கள்ளங்கபடமற்ற பிரபுவான தந்தை, தனது கள்ளங்கபடமற்ற குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்;துள்ளார். குந்தைகளினதும் தந்தையினதும் அவதார தினத்தைக் கொண்டாடுவதற்காக, அதாவது, தனித்துவமான ஆன்மீகப் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். கள்ளங்கபடமற்ற தந்தையால் கள்ளங்கபடமற்ற குழந்தைகள் அதிகளவில் நேசிக்கப்படுகிறார்கள். கள்ளங்கபடமற்ற தன்மை என்றால் சதா இலகுவான சுபாவத்தையும், உங்களின் மனதிலும் செயல்களிலும் தூய உணர்வுகளையும் நேர்மையையும் சுத்தத்தையும் கொண்டிருப்பதாகும். இத்தகைய கள்ளங்கபடமற்ற குழந்தைகள் கள்ளங்கபடமற்ற பிரபுவான தந்தையைத் தம்பால் ஈர்க்கின்றார்கள். கள்ளங்கபடமற்ற பிரபுவான தந்தை, இத்தகைய இலகு சுபாவத்தைக் கொண்டுள்ள கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் நற்குணங்களின் மாலையின் மணிகளை சதா உருட்டுகிறார். நீங்கள் அனைவரும் பல பிறவிகளாகத் தந்தையின் பெயரால் மாலையின் மணிகளை உருட்டினீர்கள். இப்போது சங்கமயுகத்தில், தந்தை குழந்தைகளான உங்களுக்கு அதன் பலனைக் கொடுக்கிறார். அவர் குழந்தைகளின் நற்குணங்கள் என்ற மாலையின் மணிகளை உருட்டுகிறார். கள்ளங்கபடமற்ற பிரபு சகல கள்ளங்கபடமற்ற குழந்தைகளையும் அதிகளவில் நேசிக்கிறார். நீங்கள் எந்தளவிற்கு ஞான சொரூபங்களாகவும், ஞானம்நிறைந்தவர்களாகவும் சக்திசாலிகளாகவும் இருக்கிறீர்களோ, அந்தளவிற்குக் கள்ளங்கபடமற்றவர்களாகவும் இருப்பீர்கள். இறைவனும் கள்ளங்கபடமற்ற தன்மையையே விரும்புகிறார். உங்களின் இந்த மேன்மையான பாக்கியத்தை நீங்கள் அறிவீர்கள், அல்லவா? நீங்கள் இறைவனையே கவர்ந்துள்ளீர்கள். அவரை உங்களுக்குச் சொந்தம் ஆக்கியுள்ளீர்கள்.

இன்றைய நாள், குறிப்பாகப் பக்தர்களும் குந்தைகளும் கொண்டாடும் நாள் ஆகும். பக்தர்கள் ஆயத்தங்களைச் செய்து அவரை அழைக்கிறார்கள். ஆனால், நீங்கள் தனிப்பட்ட முறையில் அவரின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். பக்தர்களின் தெய்வீகச் செயல்களைக் கண்டு தந்தை புன்னகை செய்கிறார். குழந்தைகளின் சந்திப்பிற்கான விளையாட்டுக்களைக் கண்டு அவர் களிப்படைகிறார். ஒருபுறம், அவரிடமிருந்து பிரிந்துள்ள (வியோகி) பக்த ஆத்மாக்கள். மறுபுறம், இலகு யோகிக் குழந்தைகளான நீங்கள். இருபாலாரும் தத்தமது அன்பின் பலனாக நேசிக்கப்படுகிறார்கள். பக்தர்களும் சளைத்தவர்கள் அல்ல. நாளை, உங்களின் விசேடமான, இஷ்;ட தேவர்களின் தேவதை ரூபத்தில் சுற்றி, அனைத்தையும் பாருங்கள். தந்தையுடன்கூடவே, விசேடமாக சாலிகிராம் குழந்தைகளும் பூஜிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் தந்தையுடன் சேர்த்துக் குழந்தைகளான உங்களையும் பூஜிப்பதைப் பாருங்கள். இப்போது, இறுதியிலும், உண்மையான அன்புடன் பக்தி செய்யும் கடும்பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது பக்தியின் அன்பின் பலனைத் தற்காலிகமான காலப்பகுதிக்கு அனுபவம் செய்கிறார்கள். பக்தர்களின் பக்தியின் விசேடமான அன்பிற்கான நாள் நாளையே ஆகும். உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் அனைவரும் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவீர்களா? அல்லது உங்களின் சொந்தப் பிறந்தநாளைக் கொண்டாடுவீர்களா? கல்பம் முழுவதும், தந்தையின் பிறந்தநாளும் அவரின் குழந்தைகளின் பிறந்தநாட்களும் ஒரே தினத்தில் வருதல் சாத்தியமா? சிலவேளைகளில் ஒரே நாளாக இருந்தாலும், ஒரே வருடமாக இருக்க முடியாது. தந்தையின் பிறந்தநாளுக்கும் குழந்தைகளின் பிறந்தநாளுக்கும் இடையே ஏதாவது வேறுபாடு காணப்படும். எவ்வாறாயினும், தந்தையினதும் குழந்தைகளினதும் அலௌகீகப் பிறந்தநாளோ ஒரே நாளில் வருகிறது. தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவதாக நீங்கள் கூறுவீர்கள். தந்தையோ தான் குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறுவார். ஆகவே,இது ஓர் அற்புதமான பிறந்தநாள், அல்லவா? நீங்கள் உங்களின் சொந்தப் பிறந்தநாளைக் கொண்டாடுவதுடன், தந்தையின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறீர்கள். பிறந்த நாட்களும் ஒரே நாளாக இருப்பதனால், கள்ளங்கபடமற்ற பிரபுவான தந்தை, குழந்தைகளான உங்களின் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை நினைத்துப் பாருங்கள். எனவே, இந்தளவிற்கு நீங்கள் கள்ளங்கபடமற்ற பிரபுவைக் கவர்ந்துள்ளீர்கள், அல்லவா? பக்தர்கள் தமது பக்தியின் போதையால் போதையடைகிறார்கள். ஆனால் நீங்களோ அனைத்தையும் அடைந்துவிட்ட சந்தோஷத்தைப் பேணுவதுடன் அவருடன் சேர்ந்து ஆடிப் பாடிக் கொண்டாடுகிறீர்கள். உருவாக்கப்பட்டுள்ள ஞாபகார்த்தத்தில் அதிகளவு உட்கருத்து உள்ளது.

அவர்களின் வழிபாட்டிலும், உருவங்களிலும் இரண்டு முக்கியமான சிறப்பியல்புகள் உள்ளன. ஒன்று, புள்ளியின் சிறப்பியல்பு. மற்றையது, ஒவ்வொரு துளியினதும் சிறப்பியல்பு. அவர்களின் வழிபாட்டு முறையில், அவர்கள் ஒவ்வொரு துளிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இந்த வேளையில், குழந்தைகளான நீங்கள் புள்ளி என்பதன் அர்த்தத்தில் ஸ்திரமாக இருக்கிறீர்கள். முழுமையான ஞானத்தினதும் சாரம், குறிப்பாகப் புள்ளி என்ற ஒரேயொரு வார்த்தையில் அடங்கியுள்ளது. தந்தை புள்ளி வடிவானவர். ஆத்மாக்களான நீங்கள் புள்ளிவடிவமானவர்கள். நாடகத்தின் ஞானத்தைக் கிரகிப்பதற்கு, எது நிகழ்ந்ததோ அது முடிந்துவிட்டது. அதாவது, நீங்கள் முற்றுப்புள்ளி இடுகிறீர்கள். பரமாத்மா, ஆத்மா, சடப்பொருள் என்ற மூன்றிலும் நீங்கள் நாடகத்தின் ஞானத்தை ஒரு விளையாட்டாக, உங்களின் நடைமுறை வாழ்க்கையில் ஒரு புள்ளியாக அனுபவம் செய்கிறீர்கள். இதனாலேயே, பக்தியிலும் ரூபத்தின் மத்தியிலுள்ள புள்ளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இரண்டாவது, புள்ளிகளின் முக்கியத்துவம் ஆகும். நீங்கள் அனைவரும் நினைவில் அமர்ந்திருந்து, மற்றவர்களையும் நினைவில் இருக்கச் செய்வதற்கு, நீங்கள் என்ன வழிமுறையைப் பயன்படுத்துகிறீர்கள்? எண்ணங்களின் துளிகள். நீங்கள் முதலாவது துளியான நான் ஓர் ஆத்மா என்பதைத் தெளிக்கிறீர்கள். இரண்டாவது துளி: நான் தந்தையின் குழந்தை. தூய எண்ணங்களின் துளிகளின் மூலம் நீங்கள் சந்திப்பின் வெற்றியை அனுபவம் செய்கிறீர்கள். எனவே, முதலாவது, தூய எண்ணங்களின் விழிப்புணர்வின் துளி ஆகும். இரண்டாவது, நீங்கள் இதயபூர்வமான சம்பாஷணையை மேற்கொள்ளும்போது, நீங்கள் தந்தையினதும் பேறுகளினதும் ஒவ்வொரு வகையான புகழினதும் தூய எண்ணங்களின் துளிகளைத் தெளிக்கிறீர்கள். நீங்கள் இவ்வாறானவர். நீங்கள் என்னை இவ்வாறு ஆக்கினீர்கள்! நீங்கள் இத்தகைய இனிமையான, குளிர்மையான துளிகளைத் தந்தையின்மீது தெளிக்கிறீர்கள். அதாவது, நீங்கள் இதயபூர்வமான சம்பாஷணை மேற்கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு கருத்தைக் கூறிவிட்டு, அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். நீங்கள் அனைத்தையும் ஒன்றாக நினைப்பதில்லை. மூன்றாவதாக, குழந்தைகள் அனைவரும் தமது சரீரங்கள், மனம், செல்வத்தின் ஒத்துழைப்பெனும் துளிகளைத் தெளிக்கிறார்கள். இதனாலேயே, நீங்கள் குறிப்பாக, துளித்துளியாக ஏரி நிரம்புகிறது எனக் கூறுகிறீர்கள். உலக மாற்றம் என்ற பெரிய பணிக்கு, சர்வசக்திவானின் எல்லையற்ற பணிக்கு நீங்கள் அனைவரும் வழங்கும் ஒத்துழைப்பானது, ஒத்துழைப்பின் துளிகள் என்று அழைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், அனைவரின் ஒத்துழைப்பெனும் துளியால் அது எல்லையற்ற ஒத்துழைப்பின் கடல் ஆகுகிறது. இதனாலேயே, அவர்கள் தமது வழிபாட்டில் துளிகளின் முக்கியத்துவத்தைக் காட்டியுள்ளார்கள்.

விரதம் ஒன்றிற்கு அவர்கள் விசேடமான வழிபாட்டு முறையைக் காட்டியுள்ளார்கள். அவர்கள் விரதம் இருக்கிறார்கள். தந்தையுடன் ஒத்துழைப்பதற்காக, நீங்கள் வீணான எண்ணங்கள் என்ற உணவை உண்ணாமல், ஒருபோதும் உங்களின் புத்தியில் தூய்மையற்ற அல்லது வீணான எண்ணங்களை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என விரதம் இருக்கிறீர்கள். நீங்கள் இந்த விரதத்தைப் பிடிக்கிறீர்கள். அதாவது, உங்களுக்கு இந்தத் திடசங்கற்பம் உள்ளது. ஆனால் பக்தர்களோ தூய்மையற்ற உணவை உண்ணாமல் விரதம் இருக்கிறார்கள். இத்துடன்கூடவே, நீங்கள் எல்லா வேளைக்கும் ஒளிவீசும் விளக்குகள் ஆகுகிறீர்கள். இதன் ஞாபகார்த்தமாக, அவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள். குழந்தைகளான உங்களின் அழியாத, ஆன்மீக, அகநோக்கு வழிமுறைகள், பக்தர்களால் பௌதீகமான புற வழிமுறைகளாகச் செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும், அவர்கள் குழந்தைகளான உங்கள் அனைவரையும் பிரதி செய்கிறார்கள். அவர்களுக்கு ரஜோபிரதான் புத்திகள் இருப்பதனால், தங்களுக்கு எது தொடுகிறதோ, அதிலிருந்து இத்தகைய வழிமுறைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். ரஜோகுணி முதலாம் இலக்கப் பக்தர்களைப் பொறுத்தவரை, பக்தியைப் பொறுத்தவரை, சதோகுணி பக்தர்களான, பிரம்மாவும் விசேட ஆத்மாக்களான நீங்கள் அனைவருமே இதில் கருவிகள் ஆகினீர்கள். எவ்வாறாயினும், முதலில், உங்களின் மனதில் அன்பு இருப்பதனாலும், மனதின் சக்தியாலும், முதலில் பக்தியானது மனதின் உணர்வுகளிலேயே ஆரம்பம் ஆகியது. பௌதீக வழிமுறைகள் படிப்படியாகப் பின்னரே ஆரம்பித்தன. எவ்வாறாயினும், தனது படைப்பான பக்த ஆத்மாக்களையும் அவர்களின் வழிமுறைகளையும் பார்க்கும்போது, படைப்பவரான தந்தை கூறுகிறார்: அந்த பக்தர்களின் புத்திகளின் தொடுகையின் அற்புதமே இது. தமது புத்திகளை இந்த வழிமுறைகளால் மும்முரமாக வைத்திருப்பதனால், அவர்கள் குறைந்தபட்சம் விகாரத்தில் ஈடுபடுவதில் இருந்து சிறிதளவில் பாதுகாக்கப்படுகிறார்கள். பக்தியிலும் தொடர்கின்ற, உங்களின் உண்மையான வெற்றிக்கான வழிமுறையைப் புரிந்து கொண்டீர்களா? இதுவே ஞாபகார்த்தத்தின் முக்கியத்துவம் ஆகும்.

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அதிகளவு பக்தியைக் கண்டதில்லை. எவ்வாறாயினும், அவர்கள் உங்கள் அனைவரினதும் பக்தர்கள் ஆவார்கள். குழந்தைகளான நீங்கள், பக்தர்களின் தெய்வீகச் செயல்களை, எவ்வாறு பக்தர்கள் இன்றும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களான உங்களை மனதில் நினைத்து வழிபடுகிறார்கள் என்பதை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? பக்தர்களின் அழைப்பை எப்போதாயினும் நீங்கள் கேட்டதுண்டா? பக்தர்களின்மீது நீங்கள் கருணை காட்டுகிறீர்களா? பக்தர்களைப் பற்றிய மிகத் தெளிவானதொரு புரிந்துணர்வு உங்களுக்கு இருக்கிறதல்லவா? பக்தர்கள் அழைக்கும்போது, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாவிடின், பக்தர்களின் நிலைமை என்னவாகும்? இதனாலேயே, பக்தர்கள் எத்தகையவர்கள், பக்தர்கள் யார், பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் யார் என்பதன் உட்கருத்தை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பூஜிக்கத்தகுதிவாய்ந்தவரினதும் பூஜிப்பவரினதும் அர்த்தத்தை நீங்கள் அறிவீர்கள், அல்லவா? அச்சா. பக்தர்கள் அழைப்பது உங்களுக்குக் கேட்கிறதா? பாண்டவர்களான உங்களுக்கும் இது கேட்கிறதா? அல்லது சக்திகளுக்கு மட்டும் இது கேட்கிறதா? சாலிகிராம்கள் பல உள்ளன. நூறாயிரக்கணக்கானவை உள்ளன. ஆனால் நூறாயிரக்கணக்கான தேவதேவியர் கிடையாது. ஆயிரக்கணக்கான ஆண்தெய்வங்களும் பெண்தெய்வங்களும் இருக்கக்கூடும். நூறாயிரக்கணக்கானவர்கள் கிடையாது. அச்சா, வேறொரு வேளையில் பாபா இதன் உட்கருத்தைப் பற்றிக் கூறுவார். ஆரம்பத்தில் வந்த சகல இரட்டை வெளிநாட்டவர்களும், ஆரம்பத்தில் உதாரணங்கள் ஆகியவர்களும், அவர்கள் சக்திகளோ அல்லது பாண்டவர்களோ, அவர்களிடம் சிறப்பியல்பு உள்ளது. அனைத்திற்கும் முதலில், தந்தையே அனைவரிலும் மகத்தான வெளிநாட்டவர் ஆவார். அதிகளவில் வெளிநாட்டில் இருப்பது யார்? தந்தையே அதிகளவில் அங்கு இருக்கிறார்.

இப்போது, நாளுக்கு நாள், நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, பக்தர்கள் அழைப்பதன் ஒலியையும் அவர்களின் உணர்வுகளையும் உங்களால் மிகத் தெளிவாக உணர முடியும். அவர்களின் விசேடமான இஷ்ட தெய்வங்கள் யார் என்பதையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும். சிறிது பலம்வாய்ந்தவர் ஆகுங்கள். அதன்பின்னர், தெய்வீகப் புத்தியின் தொடுகையால், அவை அனைத்தையும் தெய்வீகக் காட்சியைப் பார்ப்பது போன்று தெளிவாக உங்களால் காண முடியும். தற்சமயம் நீங்கள் அலங்கரிக்கப்படுகிறீர்கள். இதனாலேயே, வெளிப்படுத்துகை என்ற திரை திறக்கவில்லை. நீங்கள் அலங்கரிக்கப்பட்டு முடிந்ததும் திரை விலகும். அப்போது, உங்களால் உங்களையே பார்க்க முடியும். அப்போது, இன்ன இறைவி வந்துள்ளார், இன்ன தேவியும் வந்துள்ளார் என அனைவரின் உதடுகளில் இருந்தும் வெளிப்படும். அச்சா.

இலகுவான, இலேசான சுபாவங்களைக் கொண்டிருக்கும் கள்ளங்கபடமற்ற குழந்தைகளுக்கும், இலகுயோகிகளாக இருப்பதுடன் கள்ளங்கபடமற்ற பிரபுவான தந்தைக்குச் சொந்தமானவர்களுக்கும், தமது வாழ்க்கையில் சதா புள்ளியினதும் துளியினதும் உட்கருத்தைக் கிரகிக்கும் சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், தமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் திடசங்கற்பத்தின் விரதத்தைக் கடைப்பிடிக்கும் ஞானோதயம் பெற்ற ஆத்மாக்களுக்கும், பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், கள்ளங்கபடமற்ற பிரபுவும் ஆசீர்வாதங்களை அருள்பவரும் பாக்கியத்தை அருள்பவருமான தந்தையின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

கொடியை ஏற்றிய பின்னர் பாப்தாதாவின் இனிய வாசகங்கள்:

தந்தை கூறுகிறார்: குழந்தைகளின் கொடி எப்போதும் மகத்தானது. குழந்தைகள் இல்லாவிட்டால், தந்தையால் என்ன செய்ய முடியும்? தந்தையின் கொடி எப்போதும் மகத்தானது என நீங்கள் கூறுகிறீர்கள். (சிவாவின் கொடி எப்போதும் மகத்தானது என்ற பாடல் இசைக்கப்பட்டது) குழந்தைகளின் கொடி எப்போதும் மகத்தானது எனத் தந்தை கூறுகிறார். குழந்தைகள் அனைவரின் நெற்றியிலும் வெற்றிக் கொடி சதா ஏற்றப்பட்டுள்ளது. அனைவரின் கண்களிலும் நெற்றிகளிலும் வெற்றிக்கொடி பறக்கிறது. ஒரு கொடி மட்டும் ஏற்றப்படவில்லை. ஆனால், அழியாத வெற்றிக்கொடி அனைவரின் நெற்றிகளிலும் ஏற்றப்பட்டிருப்பதை பாப்தாதா பார்க்கிறார். தந்தையினதும் குழந்தைகளினதும் அற்புதமான பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்.

தந்தையினதும் குழந்தைகளினதும் அற்புதமான பிறந்தநாளுக்கான வாழ்த்துக்கள்:

எங்கும் உள்ள அதிகபட்ச அன்பான குழந்தைகளுக்கும், சேவை சகபாடிகளுக்கும், சதா தமது பாதங்களைத் தந்தையின் பாதச்சுவடுகளில் பதிப்பவர்களுக்கும் இந்த அலௌகீக பிராமண வாழ்க்கையின் பிறந்தநாளுக்கான வாழ்த்துக்கள். குழந்தைகள் அனைவரினதும் அன்பு, நினைவு, வாழ்த்துக்களுக்குப் பதிலாக, பாப்தாதா குழந்தைகள் அனைவரையும் தனது அன்பான கைகளால் மாலையிட்டு சதா வாழ்த்துகிறார். உலகிலுள்ள ஒவ்வோர் ஆத்மாவும் குழந்தைகளின் இந்த அலௌகீகப் பிறந்தநாளை ஒரு ஞாபகார்த்தமாகக் கொண்டாடுகிறார். ஏனெனில், ஆத்மாக்கள் அனைவரும் தந்தையிடமிருந்தும் பிராமண வாழ்க்கை வாழும் குழந்தைகளிடமிருந்தும் அதிக, அதிக, அதிகளவு சந்தோஷம், அமைதி, சுகம், சக்தியைப் பெற்றுள்ளார்கள். இந்த ஒத்துழைப்பால் அனைவரும் சிவனினதும் சாலிகிராம்களினதும் பிறந்தநாளான சிவஜெயந்தியைத் தமது இதயபூர்வமான மிகுந்த அன்புடன் கொண்டாடுகிறார்கள். இத்தகைய சாலிகிராம் குழந்தைகளுக்கு, தந்தை சிவனிடமிருந்தும் தந்தை பிரம்மாவிடமிருந்தும் சதா பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு எப்போதும் வாழ்த்துக்கள். நீங்கள் சரியான வழிமுறையைப் பயன்படுத்தி சதா முன்னேற்றம் அடைந்து, தொடர்ந்து வெற்றி பெறுவீர்களாக. அச்சா.

விடைபெறும் வேளையில்: காலை வணக்கம் என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் உங்களின் காலையோ இறைவனுடன் மலர்வதனால், அது இறை காலைவணக்கம் ஆகும். நீங்கள் இரவை இறைவனுடன் கழித்தீர்கள். இப்போது காலையையும் இறைவனுடன் கொண்டாடுகிறீர்கள். ஆகவே, எப்போதும் இறைவனையும் (புழன) நல்லதையும் (பழழன) நினைவில் வைத்திருங்கள். இறைவனை நினைப்பதனால் நீங்கள் நல்லவர் ஆகுகிறீர்கள். இறைவனின் நினைவு இல்லாவிட்டால், உங்களால் நல்லவர் ஆகமுடியாது. உங்கள் அனைவருக்கும் சதா இறைவாழ்க்கை உள்ளது. இதனாலேயே, உங்களின் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணமும் நல்லதே. எனவே, இது நல்ல காலை, நல்ல மாலை, நல்இரவு மட்டும் அல்ல. (பழழன அழசniபெஇ பழழன நஎநniபெஇ பழழன niபாவ). ஆனால் உங்களின் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு விநாடியும் நல்லதே. ஏனெனில் நீங்கள் இறைவனை நினைக்கிறீர்கள். உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதா? உங்களின் வாழ்க்கையே இப்போது நல்லது. ஏனெனில் உங்களின் வாழ்க்கை இறைவனுடன் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு செயலையும் தந்தையுடன் சேர்ந்து செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் தனித்து எதனையும் செய்வதில்லை, அல்லவா? நீங்கள் தந்தையுடனே சேர்ந்திருந்து உண்கிறீர்களா அல்லது தனியே இருந்தவண்ணம் உண்கிறீர்களா? இறைவனுக்கும் நல்லதற்கும் இடையிலுள்ள உறவுமுறையை எப்போதும் நினைவில் வைத்திருந்து, இதை உங்களின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா. அனைவருக்கும் அமிர்தவேளையில் பாப்தாதாவிடமிருந்து விசேடமான அமரத்துவமான அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் கருணைநிறைந்தவர் ஆகி, ஒரு மகாதானியாக சந்தோஷப் பொக்கிஷத்தைப் பெருந்தன்மையுடன் பகிர்ந்தளிப்பீர்களாக.

தற்காலிகமான சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு மக்கள் அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறார்கள். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உண்மையான சந்தோஷம் கிடைப்பதில்லை. தேவைப்படும் நேரத்தில், ஆத்மாக்களான நீங்கள் மகாதானிகளாகி, பெருந்தன்மையுடன் சந்தோஷத்தைத் தானம் செய்ய வேண்டும். இதற்கு, கருணை என்ற நற்குணத்தை வெளிப்படுத்துங்கள். உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் காட்சிகளை அருளுகின்றன. எனவே, நீங்களும் உயிர்வாழும் ரூபத்தில், கருணைநிறைந்தவராகித் தொடர்ந்து பகிர்ந்தளியுங்கள். ஏனெனில், அந்த ஆத்மாக்கள் வேறோர் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார்கள். இவர் ஒருபோதும் கூறுவதைக் கேட்கப்போவதில்லை என நினைக்காதீர்கள். நீங்கள் கருணைநிறைந்தவராகித் தொடர்ந்து வழங்குங்கள். உங்களின் நல்லாசிகள் நிச்சயமாகப் பலன் அளிக்கும்.

சுலோகம்:
யோக சக்தியால் தமது பௌதீகப் புலனங்கங்களைத் தமது கட்டளைகளுக்கேற்ப செயற்பட வைப்பவர்கள், சுய இராச்சிய அதிகாரிகளான சுய அதிபதிகள் ஆவார்கள்.