03.03.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கல்வியே உங்கள் வருமானமாகும். இந்தக் கல்வியே உங்கள் வருமானத்திற்கான மூலாதாரமாகும். இக்கல்வியின் மூலமே உங்களால் 21 பிறவிகளுக்கு ஒரு வருமானத்தைச் சேமிக்க முடியும்.

கேள்வி:
வியாழ சகுனங்களை அனுபவம் செய்கின்ற குழந்தைகளில் புலப்படும் அறிகுறிகள் எவை?

பதில்:
அவர்கள் ஸ்ரீமத்தில் முழுக்கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் மிக நன்றாகக் கற்கிறார்கள். அவர்கள் ஒருபொழுதும் சித்தியெய்தாமல் விடுவதில்லை. ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் தமது கல்வியில் சித்தியெய்துவதில்லை. அவர்களின் மீது இராகு சகுனங்கள் உள்ளன. இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது விருட்சத்தின் விதையாகிய, வியாழ சகுனங்கள் உள்ளன.

பாடல்:
எங்களை இந்தப் பாவ உலகிலிருந்து ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஓம் சாந்தி.
இது பாவாத்மாக்களின் அழைப்பு. நீங்கள் இனிமேலும் அழைக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில், நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். இவ் விடயங்கள் கிரகிக்கப்பட வேண்டியவை. ஒரு பாடசாலையில் கல்வி எவ்வாறு பொக்கிஷமாக இருக்கின்றதோ, அதேபோன்று இந்தக் கல்வியும் மிகவும் பெறுமதி வாய்ந்த பொக்கிஷமாகும். உங்கள் வாழ்க்கைக்கான வருமானத்தை நீங்கள் கற்றவற்றிலிருந்து உங்களால் சம்பாதிக்க முடியும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது மிகவும் உயர்ந்த வருமானமாகும். ஏனெனில் உங்களுடைய இலக்கும், இலட்சியமும் உங்கள் முன்னால் உள்ளன. உண்மையான சற்சங்கம் (சத்தியத்தின் சகவாசம்) ஒன்றே உள்ளது. ஏனைய அனைத்து சற்சங்கங்களும் பொய்யானவை. இந்தக் கல்பத்தில் ஒருமுறை மாத்திரமே நீங்கள் சத்தியத்தின் சகவாசத்தைக் கொண்டுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! என நீங்கள் கூவியழைத்தீர்கள். அவர்கள் இன்னமும் அழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், ஆனால் அவரோ உங்களின் முன்னால் இருக்கின்றார். துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இல்லாத புதிய உலகிற்காக நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் சுவர்க்கத்தில் ஓய்வும், சௌகரியமும் பெறுகிறீர்கள். நரகத்தில் எந்தவித ஓய்வும், சௌகரியமும் இல்லை. இது நச்சுக்கடல்; இது கலியுகமாகும். அனைவரும் சந்தோஷமற்று இருக்கின்றார்கள்; அனைவரும் விகாரத்தின் மூலம் பிறப்பெடுக்கின்றார்கள். இதனாலேயே ஆத்மாக்கள் பாபா, நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டோம் எனக் கூவியழைக்கின்றனர். அவர்கள் தூய்மையாகுவதற்காகக் கங்கையில் நீராடுகின்றார்கள். அச்சா, அவர்கள் ஒருமுறை நீராடியதுமே, தூய்மையாகியிருக்க வேண்டும். எனவே ஏன் அவர்கள் மீண்டும், மீண்டும் நீராடுகின்றார்கள்? தடுமாறித் திரிகையில், அவர்கள் ஏணியில் கீழிறங்கிப் பாவம் நிறைந்தவர்கள் ஆகுகின்றார்கள். தந்தை இங்கிருந்து 84 பிறவிகளின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை. நீங்கள் 84 பிறவிகள் (ஏணிப்படம்) பற்றிய மிக நல்ல படத்தை உருவாக்கியுள்ளீர்கள். கீதையிலும் கல்ப விருட்சத்தின் படம் இருக்கின்றது. எவ்வாறாயினும் கடவுள் எப்பொழுது கீதையை உரைத்தார் என்றோ அல்லது அவர் வந்தபொழுது என்ன செய்தார் என்றோ எவருக்கும் தெரியாது. ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தங்;களுடைய சொந்தச் சமயநூல்கள் பற்றித் தெரியும். ஆனால் பாரத மக்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் சங்கமயுகத்தில் மாத்திரமே, சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்காக வருகிறேன். நாடகத்தில் எந்தவித மாற்றமும் இருக்கமுடியாது. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை யாவும் மறுபடியும் அதேபோன்று இடம்பெற வேண்டும். ஒருமுறை இடம்பெற்று பின்னர் அது மாறுகின்றது என்றில்லை. நாடகச் சக்கரம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மிக நன்றாகப் பதிந்துள்ளது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்திலிருந்து ஒருபொழுதும் விடுபட முடியாது. இந்த உலகச் சக்கரம் ஒருபொழுதும் முடிவதில்லை என்பதே அதன் அர்த்தமாகும். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறுகின்றன.. இந்த 84 பிறவிச் சக்கரத்தின் ஏணிப்; படமும் அதி முக்கியமானது. திரிமூர்த்தி படமும், உலகச் சக்கரத்தின் படமும் முக்கியமானவை. அனைத்துமே சக்கரத்தில் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு யுகமும் 1250 வருடங்களைக் கொண்டது. இது குருடர்களுக்குக் கண்ணாடி போன்றது. இது 84 பிறவிகளின் ஜாதகத்தின் கண்ணாடியாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களின் சகுனங்களைப் பற்றிப் பேசுகின்றார். தந்தை எல்லையற்ற சகுனங்களை உங்களுக்குக் காட்டுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அழியாத வியாழ சகுனத்தின் பார்வையில் இருக்கின்றீர்கள். அனைத்தும் எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. சிலரின் மீது வியாழ சகுனங்களும்;, மற்றவர்கள் மீது சுக்கிர சகுனங்களும், ஏனையோர் மீது இராகு சகுனங்களும் உள்ளன. தோல்வியிருந்தால் அங்கே இராகு சகுனங்கள் இருக்கும். இங்கும் அதே விடயமே இடம்பெறுகின்றது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாவிடின், அழியாத இராகு சகுனங்கள் இருக்கின்றன. அழியாத நல்ல சகுனங்களும் உள்ளன. அத்துடன் அழியாத இராகுவின் தீய சகுனங்களும் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய நிலையம் வெகுதொலைவில் உள்ளது என்று சாக்குப்போக்கு கூறக்கூடாது. நீங்கள் நடந்து சென்று நிலையத்தை அடைவதற்கு ஆறு மணித்தியாலங்கள் எடுத்தாலும், நீங்கள் செல்லத்தான் வேண்டும். மக்கள் யாத்திரை செல்லும்பொழுது, அதிகளவு தடுமாறுகின்றார்கள். முன்னர் பலர் கால்நடையாகவே சென்றார்கள். சிலர் மாட்டு வண்டியில் கூட செல்வார்;கள். அது ஒரு நகரத்திற்குச் செல்வதற்கான கேள்வி. நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனைப் போல் ஆகுகின்ற, தந்தையினுடைய பல்கலைக்கழகம் மிகவும் மகத்துவமானது. இருந்தும் அவ்வாறான மேன்மையான கல்விக்குச் சிலர் தொலைவில் உள்ளது என்றோ, அல்லது தங்களுக்கு நேரம் இல்லை என்றோ கூறுகின்றார்கள். தந்தையால் என்ன கூறமுடியும்? அவ்வாறான குழந்தை தகுதியற்றவர். தந்தை உங்களை ஈடேற்றுவதற்கு வந்துள்ளார். நீங்கள் பின்னர் உங்களது சொந்த உண்மையையே அழிக்கின்றீர்கள். ஸ்ரீமத் கூறுகின்றது. தூய்மையாகி, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் ஒன்றாக வாழும்பொழுதும், விகாரத்தில் ஈடுபடக்கூடாது. உங்கள் மத்தியில் ஞான வாளும், யோகமும் இருக்க வேண்டும். நாங்கள் தூய உலகின் அதிபதிகளாக வேண்டும். தற்பொழுது, நாங்கள் தூய்மையற்ற உலகின் அதிபதிகள். அந்தத் தேவர்கள் இரட்டைக் கிரீடமுள்ளவர்களாக இருந்தார்கள். அரைக் கல்பத்தின் பின்னர் அவர்கள் தங்களுடைய ஒளிக்கிரீடத்தை இழந்தார்கள். தற்பொழுது எவரிடமும் ஒளிக்கிரீடம் இல்லை. மத ஸ்தாபகர்கள் இந்த ஒளிக்கிரீடத்துடன் காட்டப்பட்டுள்ளார்கள். ஏனெனில் அவர்கள் சரீரத்தினுள் அவதாரம் செய்த, தூய ஆத்மாக்கள் ஆவர். பாரதத்திலே இரட்டைக் கிரீடம் உள்ளவர்களும், ஒற்றைக் கிரீடம் உள்ளவர்களும் இருக்கின்றார்கள். இன்றும்கூட, ஒற்றைக்கிரீடம் உள்ளவர்கள் இரட்டைக் கிரீடடம் உள்ளவர்களின் சிலைகளின் முன்னால் தலைவணங்குகிறார்கள். ஏனெனில் அவர்கள் தூய சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்;தினிகளாகவும் இருந்தார்கள். சக்கரவர்த்திகள் அரசர்களிலும் பார்க்க மகத்தானவர்களாகவும், பெருமளவு சொத்துக்களைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள். சபையிலே, சக்கரவர்த்திகள் முன்வரிசையிலும், அரசர்கள் வரிசைக்கிரமமாக, அவர்களின் பின்னாலும் இருக்கின்றார்கள். அவர்களது சபை ஒழுங்குமுறையானதாகவும் பண்பானதாகவும் இருக்கும். இதுவும் இறைவனின் சபையாகும். இது இந்திரசபை என்றும் நினைவுகூரப்படுகின்றது. ஞானத்தின் மூலம் நீங்கள் தேவதைகள் ஆகுகின்றீர்கள். ஓர் அழகான நபர் தேவதை என்று அழைக்கப்படுகின்றார். இராதையும், கிருஷ்ணரும் இயற்கையழகு கொண்டவர்கள். இதனாலேயே அவர்கள் அழகானவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் காமச் சிதையில் அமரும்பொழுது, பல்வேறு பெயர்கள், ரூபங்கள் அனைத்திலும் அவலட்சணமானவர்கள் ஆகுகின்றார்கள். இவ்விடயங்கள் சமயநூல்;களில் குறிப்பிடப்படவில்லை. மூன்று விடயங்கள் உள்ளன: ஞானம், பக்தி, விருப்பமின்மை. ஞானமே அனைத்திலும் மேலானது. நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் உங்களுக்கு விருப்பமின்மை உள்ளது. இப்பொழுது முழுத் தமோபிரதான் உலகமும் அழியவுள்ளது. எனவே உங்களுக்கு அதில் விருப்பமின்மை உள்ளது. புதிய கட்டடம் கட்டப்படும்பொழுது, பழையதில் விருப்பமின்மை உள்ளது. அது எல்லைக்குட்பட்ட விடயம். ஆனால் இதுவோ எல்லையற்ற விடயமாகும். இப்பொழுது உங்களுடைய புத்தி புதிய உலகுடன் தொடர்புபட்டுள்ளது. இது நரகமாகிய, பழைய உலகமாகும். சத்திய, திரேதா யுகங்கள் சிவ பூமி என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்படுகின்றன. நீங்கள் இப்பொழுது இந்த விலைமாதர் இல்லத்தை வெறுக்கின்றீர்கள். பலர் அதனை வெறுப்பதில்லை. அவர்கள் திருமணம் செய்வதனால், சாக்கடைக்குள் வீழ்ந்து தங்களையே அழித்துக்கொள்ள விரும்புகின்றார்கள். மனிதர்கள் அனைவரும் நச்சாற்றில் மூழ்குகின்றார்கள். அவர்கள் அந்த அழுக்கில் இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் சந்தோஷமற்றவர்கள் ஆக்குகின்றனர். நீங்கள் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சை அருந்த வேண்டும்? எனக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் கூறுவனவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள். ஒரு விவேகமான ஆசிரியரால் சிலருடைய புத்தி எங்கேயாவது அலைபாயும்பொழுது உடனடியாகவே கூறமுடியும். வகுப்பின் நடுவிலே எவராவது கொட்டாவி விட்டாலோ அல்லது தூங்கி விழுந்தாலோ அவரது புத்தியானது வீட்டையோ அல்லது வியாபாரத்தையோ நோக்கி அலைபாய்கின்றது என்று புரிந்துகொள்ளப்படும். கொட்டாவி விடுவதும் களைப்படைதலின் அடையாளமாகும். மக்கள் தமது வியாபாரத்தில் வருமானம் சம்பாதிக்கும்பொழுது அதிகாலை ஒன்று அல்லது இரண்டு மணிவரை கொட்டாவி விடாமல் அமர்ந்திருக்கின்றனர். தந்தை அவ்வாறான பொக்கிஷங்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆகையினால் கொட்டாவி விடுதல் இழப்பின் அடையாளம். கடனாளிகள் ஆகியவர்கள் தொடர்ந்து அதிகக் கொட்டாவி விட்டு, தூங்கி விழுகின்றனர். நீங்கள் தொடர்ந்தும் பல்வேறு பொக்கிஷங்களுக்கு மேல் பொக்கிஷங்களைப் பெறுகின்றீர்கள். ஆகையினால் நீங்கள் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். கற்கின்ற நேரத்தில் எவராவது கொட்டாவி விட்டால், அவரின் புத்தியின் யோகம் எங்கேயோ அலைகின்றது என விவேகமான ஆசிரியரால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும்பொழுது உங்கள் வீட்டையோ அல்லது குழந்தைகளையோ நினைவுசெய்கின்றீர்கள். இங்கே நீங்கள் பத்தியில் இருக்கின்றீர்கள். வேறு எவரையுமே நினைவுசெய்யக்கூடாது. ஆறு நாட்களுக்கு பத்தியில் இருந்து விட்டு, பின்னர் எவரையாவது நினைவுசெய்து அவருக்குக் கடிதம் எழுதினால் அவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்று கூறப்படும். அவர்கள் மீண்டும் ஏழு நாட்களுக்கு ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் ஏழு நாட்களுக்கு பத்தியில் அமர்த்தப்படுகின்றீர்கள். அதனால், உங்களது அனைத்து நோய்களும் அகற்றப்பட முடியும். அரைக் கல்பமாக நீங்கள் அதிகம் நோய்வாய்ப்பட்டுள்ளீர்கள். எங்கேயாவது அமர்ந்திருக்கும்பொழுதே சிலர் அகாலமரணம் அடைகின்றார்கள். இது சத்தியயுகத்தில் ஒருபொழுதும் இடம்பெற மாட்டாது. இங்கே எப்பொழுதும் ஏதாவதொரு நோய் இருந்து கொண்டேயிருக்கும். அவர்கள் மரணிக்கின்றபொழுதும் அந்த நோயினால் அழுகிறார்;கள். சுவர்க்கத்தில் சிறிதளவு துன்பமும் இருக்க மாட்டாது. அங்கே சரியான நேரத்தில் அந்தச் சரீரத்தின் காலம் முடிவடைகின்றது என அவர்கள் புரிந்துகொள்கிறார்;கள். நான் இந்த சரீரத்தை விட்டு ஒரு குழந்தை ஆகுவேன். நீங்கள் அங்கே என்னவாக ஆகுவீர்கள் என்ற காட்சியை இங்கே காண்பீர்கள். பலர் இவ்வாறான காட்சிகளைக் கண்டுள்ளார்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் பிச்சைக்காரர்களில் இருந்து இளவரசர்களாக மாறுகின்றீர்கள் எனப் புரிந்துகொள்கின்றீர்கள். உங்களுடைய இலக்கும், இலட்சியமும் இராதை, கிருஷ்ணர் ஆகுவதேயன்றி இலக்ஷ்மி, நாராயணனாகுவது அல்ல. இராதையும், கிருஷ்ணரும் முழுமையாக 5000 வருடங்களினூடாகச் செல்கின்றார்கள். இலக்ஷ்மி, நாராயணனின் காலம் 20, 25 வருடங்கள் குறைவாகவே உள்ளன. இதனாலேயே கிருஷ்ணருக்கு அதிகப் புகழ் உள்ளது. இராதையும் கிருஷ்ணருமே இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றார்கள் என எவருக்கும் தெரியாது. இது ஒரு கல்வி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வொரு கிராமத்திலும் நிலையத்தைத் திறக்கின்றீர்கள். இது உங்கள் பல்கலைக்கழகம் இணைந்த வைத்தியசாலை. உங்களுக்கு இதற்கு 3 சதுர அடி நிலம் மாத்திரமே தேவை. இது ஓர் அற்புதமே! இது ஒருவரின் பாக்கியத்தில் இருந்தால், அவர் தனது அறையிலேயே ஒரு சற்சங்கம் நடத்துவார். இங்கே பல செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் செல்வம் தூசாக மாறிவிடும். நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு உங்களுடைய எதிர்கால ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். தந்தையே கூறுகின்றார்: இந்தப் பழைய உலகைப் பார்க்கும்பொழுதும், உங்கள் புத்தியின் யோகம் அங்கேயே இருக்க வேண்டும். அனைத்தையும்; செய்யும்பொழுதும் இதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் அனைத்தையும் கருத்திற் கொள்ளவேண்டும். நீங்கள் இப்பொழுது இதைப் பயிற்சி செய்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எப்பொழுதும் தூய்மையான செயல்களையே செய்யுங்கள்; தூய்மையற்ற செயல்களை ஒருபொழுதும் செய்யாதீர்கள். உங்களுக்கு ஏதாவது நோய் இருந்தால் சத்திரசிகிச்சை நிபுணர் இங்கமர்ந்திருக்கின்றார்; அவரிடம் ஆலோசனை பெறுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் சொந்த நோய் உள்ளது. நீங்கள் சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து நல்ல அறிவுரையைப் பெறுகின்றீர்கள். உங்களுடைய சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கலாம். நீங்கள் பாவச்செயல் எதையும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். உணவு எவ்வாறோ, அவ்வாறே மனமும் எனக் கூறப்பட்டுள்ளது. மாமிசத்தை வாங்குபவர்கள், அதை விற்பவர்கள் அல்லது மற்றவர்களுக்கு வழங்குபவர்கள் சுமையைச் சேர்த்துக் கொள்கின்றார்கள். தூய்மையாக்குபவரான, தந்தையிடமிருந்து எதையும் மறைக்காதீர்கள். சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து எதையும் மறைத்தீர்களாயின் அந்த நோய் அகற்றப்பட முடியாது. இவர் எல்லையற்ற அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர். உலகிலுள்ள மக்களுக்கு அவரைத் தெரியாது. நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஆனால் உங்கள் யோகத்தில் பெருமளவு குறைபாடுள்ளது. நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதே இல்லை. உங்களால் உடனடியாகவே உங்களை நினைவில் நிலைநிறுத்த முடிவதில்லை என பாபாவுக்குத் தெரியும்; அதுவும் வரிசைக்கிரமமானது. நீங்கள் நினைவு யாத்திரையை முடிக்கும்பொழுது, கர்மாதீத நிலையை அடைந்துவிட்டதாகக் கூறப்படும். பின்னர் யுத்தம் இடம்பெறும். அதுவரை ஏதாவதொன்று தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். யுத்தம் எந்த நேரமும் ஆரம்பிக்கலாம். பின்னர் அனைத்துமே முடிவுக்கு வரும். எவ்வாறாயினும், புதிய இராச்சியம் ஸ்தாபிக்கப்படும்வரை பெரிய யுத்தம் ஆரம்பிக்க மாட்டாது என மனச்சாட்சி கூறுகின்றது. சிறிய யுத்தங்கள் இருக்கும், அவை முடிவடைந்துவிடும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என எவருக்குமே தெரியாது. சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ புத்தியைக் கொண்ட மக்கள் இருக்கின்றார்கள். உங்களுக்குள் சதோபிரதான் புத்தியைக் கொண்டவர்கள் தொடர்ந்தும் மிக நல்ல நினைவைக் கொண்டிருக்கின்றார்கள். நூறாயிரக்கணக்கான பிராமணர்கள் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர்களில் சிலர் உண்மையான குழந்தைகள், ஏனையோர் மாற்றாந்தாய்க் குழந்தைகள். உண்மையானவர்கள் நல்ல சேவை செய்கின்றார்கள். அவர்கள் தாய், தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். ஆனால் மாற்றாந்தாய்க் குழந்தைகளோ இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். அவர்கள் சிலவேளைகளில் இராவணனின் வழிகாட்டல்களையும், சிலவேளைகளில் இராமரின் வழிகாட்டல்களையும் பின்பற்றித் தொடர்ந்தும் நொண்டிக் கொண்டிருக்கின்றார்கள். பாபா, எங்களை ஓய்வும் சௌகரியமும் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்ற பாடலைக் குழந்தைகளாகிய நீங்கள் செவிமடுத்தீர்கள். சுவர்க்கத்தில் மாத்திரமே ஓய்வும், சௌகரியமும் உள்ளன் அங்கே துன்பம் என்ற பெயரே இருக்கமாட்டாது. சுவர்க்கம் சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது கலியுகம். எனவே எவ்வாறு இங்கே சுவர்க்கம் இருக்க முடியும்? உங்களுடைய புத்தி இப்பொழுது சுத்தமாகுகின்றது. சீரழிந்த புத்தியைக் கொண்டவர்கள் சுத்தமான புத்தியைக் கொண்டவர்களின் முன்னால் தலை வணங்குகிறார்கள். தூய்மையாக இருப்பவர்களுக்கே மரியாதை வழங்கப்படுகின்றது. சந்நியாசிகள் தூய்மையாக இருக்கின்றார்கள். இதனாலேயே குடும்பத்தவர்கள் அவர்களுக்குத் தலை வணங்கிறார்கள். எவ்வாறாயினும், சந்நியாசிகள் விகாரத்தின் மூலமே பிறப்பெடுத்து சந்நியாசிகள் ஆகுகின்றார்கள். ஆனால் தேவர்களோ முற்றிலும் விகாரமற்றவர்கள். சந்நியாசிகளை முற்றிலும் விகாரமற்றவர்கள் என அழைக்க முடியாது. ஆகையால் குழந்தைகளே, உங்களுடைய சந்தோஷப் பாதரசம் உங்களினுள் உயர வேண்டும். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமாயின், கற்று பின்னர் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்ற, கோப, கோபியரைக்; கேளுங்கள். உங்களுடைய போதை இங்கே அதிகரிக்கின்றது. ஏனெனில் நீங்கள் பாபாவை நேரடியாகவே செவிமடுக்கின்றீர்கள். சிலருக்குப் போதை நிரந்தரமாகவே உயர்ந்திருக்கின்றது. ஏனையோருக்கு அது மறைந்து விடுகின்றது. ஏனெனில் அவர்கள் தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்குள் வருவதனால் அவர்களுடைய போதை ஸ்திரமாக இருப்பதில்லை. அவ்வாறான பலர் நிலையங்களுக்கு வருகின்றார்கள். அவர்களுக்குச் சிறிதளவு போதை இருக்கின்றது. பின்னர் அவர்கள் விருந்துகளுக்குச் சென்று மதுவருந்தி, புகைத்து தங்களுக்கான அனைத்தையும் முடித்துவிடுகின்றார்கள். தீய சகவாசத்தின் ஆதிக்கம் மிகவும் எதிர்மறையானது. அன்னங்களும், நாரைகளும் ஒன்றாக வாழ முடியாது. சில இடங்களில் கணவன் அன்னமாகவும், மனைவி நாரையாகவும் இருப்பதும், மற்றைய இடங்களில் மனைவி அன்னமாகி, கணவன் நாரையாக இருப்பதும் இருக்கின்றது. அவர்களில் ஒருவர் தூய்மையைப் பேண விரும்புவதாகக் கூறினால் அவர் அடிக்கப்படுகின்றார். சில வீடுகளில் அனைவரும் அன்னங்கள் ஆகுகின்றார்கள். பின்னர் முன்னேறிச் செல்கையில் அவர்கள் திரும்பவும் அன்னங்களிலிருந்து நாரைகளாக மாறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் உங்களைச் சந்தோஷத்தை அருள்பவர்களாக ஆக்க வேண்டும். உங்கள் குழந்தைகளையும் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆக்குங்கள். இது துன்ப பூமியாகும். இன்னமும் பல அனர்த்தங்கள் வர இருக்கின்றன. அந்த நேரத்தில் எத்தனை பேர் விரக்தியில் கதறி அழுகின்றார்கள் என நீங்கள் பார்ப்பீர்கள், ஏனெனில் தந்தை வந்த பின்னரும் அவர்கள் அவரிடமிருந்து ஆஸ்தியைக் கோரிக்கொள்ளவில்லை. பின்னர் அது மிகவும் தாமதம் ஆகிவிடும்! தந்தை அவர்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்க வருகின்றார். ஆனால் அவர்கள் பின்னர் அதனை இழந்து விடுகின்றார்கள். ஆகவே பாபா விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பாபாவுக்கு முன்னால் வரும்பொழுது, தாங்களும் புரிந்துகொண்டு பிறருக்கும் விளங்கப்படுத்தக்கூடிய பலமான, உறுதியானவர்களையே கொண்டுவர வேண்டும். பாபா, மக்கள் இலகுவாக வந்து ஒரு கணப் பார்வையைப் பெறக்கூடிய ஒருவர் அல்லர். சிவபாபாவை எங்கும் பார்க்க முடியாது. நீங்கள் ஆத்மாவாகிய உங்களைப் பார்த்திருக்கின்றீர்களா? நீங்கள் இலகுவாக அதைத் தெரிந்துகொள்வீர்கள்;;. அதேபோன்று நீங்கள் பரமாத்மாவையும் தெரிந்துகொள்ள வேண்டும். தெய்வீகப் பார்வையைக் கொண்டிருக்காத வரைக்கும், உங்களால் ஆத்மாவைப் பார்க்க முடியாது. இப்பொழுது தெய்வீகப் பார்வையைக் கொண்டிருப்பதால் நீங்கள் சத்திய யுகத்தைக் காண்கிறீர்கள். நீங்கள் பின்னர் நடைமுறையில் அங்கே செல்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுது, இந்தக் கலியுகம் அழிக்கப்படும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப் பழைய உலகைப் பார்க்கும்பொழுதும், உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடனும், புதிய உலகுடனுமே இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் புலனங்கங்கள் மூலம் எந்தவிதமான பாவச்செயல்களையும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். எப்பொழுதும் தூய செயல்களையே செய்யுங்கள். உங்களுக்குள்ளே ஏதாவது நோய் இருக்குமாயின், சத்திரசிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்.

2. தீய சகவாசத்தின் ஆதிக்கம் மிகவும் எதிர்மறையானது. இதற்கு எதிராக உங்களை எச்சரிக்கை செய்யுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆக்குங்கள். கற்காமலிருப்பதற்கு ஒருபொழுதும் சாக்குப்போக்கு கூறாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்;கள் உங்களிடமுள்ள அனைத்தையும் சேவைக்காக ஒரு மறைமுகமான தானியாகவும், ஒரு புண்ணியாத்மாவாகவும் அர்ப்பணிப்பீர்களாக.

நீங்கள் என்ன சேவையைச் செய்தாலும், அதைத் தொடர்;ந்தும் உலக நன்மைக்காக அர்ப்பணியுங்கள். பக்தி மார்க்கத்தில் மறைமுகமான புண்ணியாத்மாக்கள் தாங்கள் அனைவருக்கும் நன்மையளிப்பதற்காக அனைத்தையும் தானம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அதேபோன்று, உங்கள் ஒவ்வோர் எண்ணமும் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கட்டும். எதையும் உங்களுக்காகச் செய்கின்ற ஆசை எதனையும் ஒருபொழுதும் கொண்டிராதீர்கள். அனைவருக்கும் சேவை செய்யுங்கள். தடையாக ஆகுகின்ற எந்தச் சேவையும் உண்மையான சேவை என்று கூறப்படுவதில்லை. ஆகவே, எதனையும் உங்களுக்காகச் செய்வதைக் கைவிட்டு, ஓர் உண்மையான மறைமுகமான சேவகராகச் சேவை செய்து, தொடர்ந்தும் உலகிற்கு நன்மையளியுங்கள்.

சுலோகம்:
அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள், நீங்கள்; வரவுள்ள சிரமங்களை இலகுவானவையாக அனுபவம் செய்வீர்கள்.