03.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையுடன் மிகச்சரியான நினைவில் இருங்கள்;, உங்களின் முகங்கள் சதா பிரகாசமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.

கேள்வி:
நினைவில் இருப்பதற்கான வழி என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை?

பதில்:
நீங்கள் நினைவில் இருக்கும்போது, உங்கள் தொழில் போன்றவற்றிலுள்ள குழப்பங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து நீக்கி, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். சரீரமும், சரீர உறவுகளும் பெரிய வலையாகும். அவ்வலையை விழுங்கி, சரீர உணர்விற்கு அப்பாற் செல்லுங்கள். நீங்கள் மரணிக்கும்போது உலகமே உங்களுக்காக மரணித்து விடுகின்றது என்பதே இதன் அர்த்தமாகும். நீங்கள் மரணித்து வாழும்போது, உயிருடன் இருக்கும்போதே அனைத்தையும் மறந்து, தந்தையொருவரை மாத்திரமே நினைவு செய்கின்றீர்கள். இதுவே சரீரமற்ற ஸ்திதியாகும். இதன் மூலமாகவே ஆத்மாவிலுள்ள துரு அகற்றப்படும்.

பாடல்:
இரவுப் பயணியே, களைப்படையாதீர், விடியலுக்கான தூரம் தொலைவில் இல்லை!

ஓம் சாந்தி.
குழந்தைகள் நினைவு யாத்திரையில் அமர்ந்திருக்கின்றனர். இது கொண்டு நடாத்தப்படும் தியானம் அல்லது மௌனத்தில் அமர்ந்திருத்தல் எனவும் அழைக்கப்படுகின்றது. நீங்கள் வெறுமனே மௌனமாக அமர்ந்திருக்கவில்லை, நீங்கள் அத்துடன் எதையாவது செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் உங்களின் ஆதி தர்மத்தில் ஸ்திரமாக இருக்கின்றீர்கள், ஆனால் நீங்கள் யாத்திரையிலும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு இந்த யாத்திரையைக் கற்பிக்கின்ற தந்தை உங்களைத் தன்னுடன் திரும்ப வீட்டிற்கும் அழைத்துச் செல்கின்றார். அவர்கள் உங்களைத் தங்களுடன் அழைத்துச்செல்லும் லௌகீக பிராமணர்கள். நீங்களோ ஆன்மீக பிராமணர்கள். பிராமண குலம் அல்லது பிராமண ஜாதி எனக் கூறப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நினைவு யாத்திரையில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் அமர்ந்திருப்பவர்கள் தங்களின் குருவை நினைவு செய்வார்கள். குரு வந்து உரையாற்றுவார். அவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். இது நினைவு யாத்திரையாகும், இதன் மூலம் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் துரு அகற்றப்படுவதற்காக நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தையின் வழிகாட்டல்: என்னை நினைவு செய்வதால் துரு அகற்றப்படும், ஏனெனில் நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். எவரோ நினைவு செய்வதால் நான் வருகின்றேன் என்றில்லை. எனது வருகை நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, அது, தூய்மையற்ற உலகம் மாறி தூய உலகமாக மாறவேண்டியுள்ளபோதே ஆகும். அவர் வந்து, மீண்டும் ஒரு தடவை பிரம்மா மூலமாக, மறைந்துவிட்ட ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். பிரம்மா ஒரு விநாடியில் விஷ்ணுவாகின்றார் என இந்த பிரம்மாவையிட்டே கூறப்படுகின்றது. பின்னர் விஷ்ணு பிரம்மா ஆகுவதற்கு 5000 வருடங்கள் எடுக்கின்றன. இவ்விடயங்கள் உங்களின் புத்தியினால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சூத்திரர்களாக இருந்த நீங்கள் இப்பொழுது பிராமண குலத்திற்குள் வந்துவிட்டீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகும்போது, கலப்படத்தை அகற்றுவதற்காக, சிவபாபா பிரம்மா மூலம் நினைவு யாத்திரையை உங்களுக்குக் கற்பிக்கின்றார். படைப்பின் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். இதற்குக் காலம் எடுக்காது. இப்பொழுது உண்மையில் கலியுகம் ஆகும். இப்பொழுது கலியுகத்தின் ஆரம்பமே என அம்மக்கள் கூறுகின்றனர், ஆனால் தந்தையோ இப்பொழுது இது கலியுகத்தின் இறுதிக்காலம் எனக் கூறுகின்றார். அங்கு காரிருள் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு வேதங்களினதும், சமய நூல்களினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் காலையில் இங்கு அமர்ந்திருக்கும்போது, நினைவில் அமர்ந்திருக்க வேண்டும். இல்லாவிடில், மாயையின் புயல்கள் வந்து, உங்களின் புத்தி உங்கள் தொழில் போன்றவற்றிற்குத் திசைதிருப்பப்பட்டுவிடும். அக்குழப்பங்கள் அனைத்தும் வெளிப்புறமானவை. ஒரு சிலந்தி மிகப்பெரிய வலையை உருவாக்குகின்றது. பின்னர் அதைத் தானே விழுங்கிவிடுகின்றது. சரீரத்திற்கு, சிற்றப்பா, தாய்மாமன், குருமார் போன்ற பல சிக்கலான விடயங்கள் உள்ளன. கண்ணுக்குப் புலப்படுகின்ற எத்தனையோ வலைகள் உள்ளன. சரீரத்துடன் கூடவே அவையனைத்தும் விழுங்கப்பட வேண்டும். நீங்கள் சரீரமற்ற ஆத்மா ஆகவேண்டும். ஒருவர் தனது சரீரத்தை நீக்கியதும் அனைத்தையும் மறந்துவிடுகின்றார். நீங்கள் மரணிக்கும்போது, உலகமே உங்களுக்கு மரணித்துவிடுகின்றது. இவ்வுலகம் அழியப்போகின்றது என்ற ஞானம் உங்களின் புத்தியில் உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: தங்களின் வாயைத் திறக்க முடியாதவர்கள் (ஞானம் கொடுக்க முடியாதவர்கள்) இவர் (பிரம்மா) தந்தையை நினைவு செய்வது போன்று நினைவில் இருக்கவேண்டும். ஒரு மனைவி தனது கணவனை நினைவு செய்கின்றாள், ஏனெனில் கணவனே அவளது தெய்வம் என அவளுக்குக் கூறப்படுகின்றது. அதனாலேயே அவள் தனது புத்தியைத் தனது தந்தையிடமிருந்து நீக்கி, கணவனிடம் திசைதிருப்புகின்றாள். அவரே கணவன்மாருக்கெல்லாம் கணவன் ஆவார். அவரே மணவாளன். நீங்கள் அனைவரும் மணவாட்டிகள், நீங்கள் ஒரு கடவுளை நினைவுசெய்கின்றீர்கள். பக்தர்கள் அனைவரும் இராவணனின் சிறையில் உள்ளனர். எனவே, தந்தை நிச்சயமாக கருணை காட்டுகின்றார். தந்தை கருணை நிறைந்தவர். அவர் மாத்திரமே கருணை நிறைந்தவர் எனப்படுகின்றார். இந்நேரத்தில் பல்வேறு குருமார் உள்ளனர். சில கற்பித்தல்களை அல்லது வழிகாட்டல்களை வழங்குகின்ற எவரும் குரு என அழைக்கப்படுகின்றனர்! இங்கு, தந்தை உங்களுக்கு நடைமுறையில் இராஜயோகம் கற்பிக்கின்றார். இந்த இராஜ யோகத்தை எவ்வாறு கற்பிப்பதென பரமாத்மாவைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பரமாத்மா வந்து இராஜ யோகம் கற்பித்தார். அதன்பின்னர் என்ன நிகழ்ந்தது? எவருக்கும் தெரியாது. அவர்கள் கீதையிலிருந்து பல உதாரணங்களைக் கொடுக்கின்றனர். சிறுமிகள்கூட கீதையைப் போதிப்பதால் சிறிது புகழப்படுகின்றார்கள். கீதை இப்பொழுது மறைந்துவிட்டது. கீதைக்குப் பெரும் புகழ் உள்ளது. தந்தை கீதை ஞானத்தால் முழு உலகையும் புதுப்பிக்கின்றார். அவர் உங்களின் சரீரத்தை வாழ்க்கை விருட்சத்தைப் போன்று அநாதியானதாக்குகின்றார். அவர் சரீரத்தை அமரத்துவமானதாக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் நினைவில் இருக்கவேண்டும். நீங்கள் தந்தையை வரவழைக்கவில்லை. நீங்கள் தந்தையின் நினைவில் இருந்து முன்னேறுகின்றீர்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில் ஆர்வம் இருக்கவேண்டும். நான் சிவபாபாவின் நினைவிலேயே எனது உணவை உண்பேன். நான் சிவபாபாவுடனேயே உண்கின்றேன் என்பதே அதன் அர்த்தமாகும். நீங்கள் வேலை செய்யும்போதும் இதற்காக சற்று நேரம் ஒதுக்க முடியும். சிலர் பாபாவிற்கு எழுதுகின்றனர்;: நான் எனது நாற்காலியில் அமரும்போது, நினைவிற்காகவே அமர்கின்றேன். எனவே, அலுவலகர் ஒருவர் வந்து பார்க்கும்போது, நீங்கள் அமர்ந்திருக்கும்போதே காணாமல் போய்விட்டதை, அதாவது சரீரமற்றவர் ஆகிவிட்டதைக் காண்பார். சிலரின் கண்கள் திறந்திருக்கும், சிலரின் கண்கள் மூடியிருக்கும். சிலர் இவ்வாறு அமர்ந்திருக்கும்போது, எதையுமே கண்டுகொள்ளமாட்டார்கள், அவர்கள் முற்றாகத் தொலைந்து விட்டவர்கள் போன்றிருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு நிகழ்கின்றது. பாபா நூலை இழுக்கின்றார், இவர் களிப்புடன் அமர்ந்திருக்கின்றார். உங்களுக்கு என்ன நடந்தது என எவராவது கேட்டால், அவர் கூறுகின்றார்: நான் தந்தையின் நினைவில் அமர்ந்திருந்தேன். நீங்கள் பாபாவிடம் செல்லவேண்டும் என்பதை உங்களின் புத்தி அறிந்துகொள்கின்றது. தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்விற்கு வருவதால் நீங்கள் என்னிடம் வருவீர்கள். தூய்மையாகாமல் எவரும் அங்கு செல்ல முடியாது. எவ்வாறு நீங்கள் தூய்மையாகலாம்? தந்தையால் மாத்திரமே அதற்கான வழியை உங்களுக்குக் காண்பிக்க முடியும். மனிதர்களால் இதனை உங்களுக்குக் கூறமுடியாது. நீங்கள் சிறிதளவே புரிந்துகொண்டாலும், உங்களால் மற்றவர்களுக்கு நன்மைபயக்க முடியும். நீங்கள் மற்றவர்களுக்கு நன்மையளித்து, அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க நிச்சயமாக முயற்சி செய்யவேண்டும். பக்தி மார்க்கத்தில், மக்கள் தந்தையை நினைவுசெய்து, கூறுகின்றனர்: ஓ தந்தையாகிய கடவுளே! தந்தையாகிய கடவுளே, கருணை காட்டுங்கள்! கூவியழைப்பது ஒரு பழக்கமாகி விட்டதைப் போன்றுள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தன்னைப் போன்று உபகாரிகள் ஆக்குகின்றார். மாயை அனைவரையும் மிகவும் விவேகமற்றவர்கள் ஆக்கிவிட்டாள்! ஒரு பௌதீகத் தந்தை தனது பிள்ளையின் நடத்தை சரியில்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, அப்பிள்ளை விவேகமற்றவர் என்றும், தந்தையின் சொத்துக்களை ஒரு வருடத்திற்குள் வீணடித்துவிடுவார் என்றும் கூறுவார். எனவே, எல்லையற்ற தந்தையும் கூறுகின்றார்: பாருங்கள், நான் உங்களை என்னவாக ஆக்கினேன், இப்பொழுது உங்களின் நடத்தையைப் பாருங்கள்! இந்நாடகம் எவ்வளவு அற்புதமானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். பாரதம் அந்தளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டது! இது பாரதமக்களின் வீழ்ச்சியாகும். அவர்கள் தங்களைச் சீரழிந்தவர்களாகவோ, கலியுகத்தவர்களாகவோ, தமோபிரதானாகவோ கருதுவதில்லை. பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது, அங்கிருந்த மக்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தனர், அதே மனிதர்கள் இப்பொழுது நரகவாசிகளாக உள்ளனர். எவரிடமும் இந்த ஞானம் இல்லை. இந்த பாபாவும்கூட இதை அறிந்திருக்கவில்லை. இப்பொழுது புத்தியில் பிரகாசம் உள்ளது. 84 பிறவிகளை எடுக்கும்போது, நாங்கள் நிச்சயமாக ஏணியில் கீழிறங்கவே வேண்டும், ஏறுவதற்கான வழி கிடையாது. கீழிறங்கும்போது நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகவேண்டியிருந்தது. இவ்விடயம் எவரது புத்தியிலும் இல்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் இப்பொழுது பாரத மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்: சுவர்க்கவாசிகளாக இருந்த நீங்கள் இப்பொழுது நரகவாசிகள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். மக்கள் மறுபிறவியை நம்புகின்றார்கள், எனவே அவர்கள் நிச்சயமாக கீழிறங்கவே வேண்டும். நீங்கள் எத்தனை மறுபிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்பதையும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் தூய தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், பின்னர் இராவணன் உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்கிவிட்டான் என்பதையும் இப்பொழுது நீங்கள் உணர்கின்றீர்கள். உங்களைச் சூத்திரர்களிலிருந்து தேவர்களாக்குவதற்காக தந்தை உங்களுக்குக் கற்பிக்க வந்தாக வேண்டும். மக்கள் தந்தையை விடுதலையளிப்பவர் என்றும், வழிகாட்டி என்றும் அழைக்கின்றனராயினும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அனைவரும் இதைப் புரிந்துகொண்டு, நீங்கள் என்னவாக இருந்து, என்னவாகியுள்ளீர்கள் எனப் பார்க்கப்போகின்ற காலம் வெகு விரைவில் வரும். நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது எனப் பாருங்கள்! நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவீர்கள் என உங்களில் எவரும் கனவுகூடக் கண்டிருக்கமாட்டீர்கள். தந்தை உங்களுக்குப் பல பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துகின்றார்! நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து உங்களின் ஆஸ்தியைப் பெற விரும்பினால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! நினைவு யாத்திரையில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். கிறிஸ்தவப் பாதிரிமார் உலாச் செல்லும்போது, அவர்கள் ஆழமான மௌனத்தில் நடந்துசெல்வதை நீங்கள் அறிவீர்கள், அவர்கள் கிறிஸ்துவின் நினைவில் இருக்கின்றார்கள். அவர்கள் கிறிஸ்துவை நேசிக்கின்றார்கள். ஆன்மீக வழிகாட்டிகளாகிய நீங்கள் அதியன்பிற்கினிய பரம தந்தை, பரமாத்மா மீது அன்பான புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கு எடுக்கும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, முன்னைய கல்பத்தில் நிகழ்ந்தது போன்றே இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டல்களை வழங்குகின்றார். அப்படியிருந்தும், சில வேளைகளில் நீங்கள் ஸ்ரீமத்தையே பின்பற்றாத அளவிற்கு தீய சகுனங்கள் உள்ளன! ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதாலேயே வெற்றி கிடைக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்பிக்கை கொண்டிருக்கும்போதே வெற்றி கிடைக்கும். தந்தை கூறுகின்றார்: எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்! பிரம்மாவே வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார் என ஏன் நினைக்கின்றீர்கள்? எப்பொழுதும் சிவபாபாவே உங்களுக்கு ஆலோசனை வழங்குவதாகக் கருதுங்கள். இவர் சேவைக்கான வழிகாட்டல்களை மாத்திரமே வழங்குவார். சிலர் கேட்கின்றனர்: பாபா, நான் இத்தொழிலைச் செய்யவேண்டுமா? அத்தகைய விடயங்களுக்கு பாபா வழிகாட்டல்கள் கொடுப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கான பாதையை உங்களுக்குக் காண்பிக்கவே வந்துள்ளேன், அவ்விடயங்களுக்காக அல்ல! நீங்கள் என்னைக் கூவியழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! எனவே, நான் உங்களுக்குப் பாதையைக் காண்பிக்கின்றேன். அது மிக இலகுவானது. உங்களின் பெயர் மறைமுகமான சேனை என்பதாகும். மக்கள் ஆயுதங்கள், அம்புகள் போன்றவற்றைக் காண்பித்துள்ளனர். எவ்வாறாயினும், இதில் அம்புகள் போன்ற கேள்விக்கே இடமில்லை. அவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். தந்தை வந்து, உண்மையான பாதையை உங்களுக்குக் காண்பிக்கின்றார். அதன் மூலம் நீங்கள் அரைக் கல்பத்திற்கு சத்திய பூமிக்குச் செல்கின்றீர்கள். அங்கு வேறெந்த தேசங்களும் கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு இதை விளங்கப்படுத்தும்போது, அவர்கள் உங்களை நம்பாது, எவ்வாறு பாரதம் மாத்திரம் இருந்திருக்க முடியும் எனக் கேட்கின்றனர். கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அந்நேரத்தில் வேறெந்த சமயங்களும் இருக்கவில்லை. பின்னர் விருட்சம் தொடர்;ந்து வளர்ந்தது. நீங்கள் உங்களின் தந்தை, உங்களின் தர்மம், உங்களின் கர்;மம் ஆகியவற்றை மறந்துவிட்டீர்கள். அவ்வளவுதான். நீங்கள் உங்களை தேவ தர்மத்தவர்களாகக் கருதியிருந்தீர்களாயின், அழுக்கானவற்றை உண்டிருக்கமாட்டீர்கள். எவ்வாறாயினும், உங்களிடம் அந்த நற்பண்புகள் இல்லாமலிருந்ததால் நீங்கள் அவற்றை உண்டீர்கள். அதனாலேயே நீங்கள் உங்களை இந்துக்கள் என அழைத்தீர்கள். இல்லாவிடில், உங்களின் மூதாதையர்கள் தூய்மையானவர்கள் என்றும், நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்றும், உங்களின் சொந்த தர்மத்தையே மறந்துவிட்டீர்கள் என்றும் நீங்கள் வெட்கப்பட வேண்டும். இப்பொழுது நீங்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி மிகத் தெளிவாகப் புரிந்துகொள்கின்றீர்கள். ஏதாவது நிகழ்ந்தால், பாபா இன்னமும் அவ்விடயங்களை விளங்கப் படுத்தவில்லை என நீங்கள் கூறலாம், அவ்வளவே! இல்லாவிடில், அவர்கள் அநாவசியமாகக் குழப்பமடைவார்கள். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் இன்னமும் கற்றுக்கொண்டிருக்கின்றோம். இப்பொழுதே நாங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டால், விநாசம் நிகழ்ந்துவிடும். ஆனால் அவ்வாறில்லை! இன்னமும் காலம் இருக்கின்றது. நாங்கள் இன்னமும் கற்றுக்கொண்டிருக்கின்றோம். இறுதியில், நாங்கள் முழுமையாகத் தூய்மையாகுவோம். துரு தொடர்ந்தும் அகற்றப்படும், நீங்கள் தொடர்ந்தும் உங்களின் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக சதோபிரதான் ஆகுவீர்கள். தூய்மையற்ற உலகம் அழியப்போகின்றது என்பதை நீங்கள் காணலாம். இந்நாட்களில், கடவுள் நிச்சயமாக எங்கேயோ வந்துவிட்டார், ஆனால் மறைமுகமாக இருக்கின்றார் என மக்கள் கூறுகின்றனர். உண்மையில் இது விநாசத்திற்கான நேரமாகும். தந்தை மாத்திரமே விடுதலையளிப்பவரும், அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்ற வழிகாட்டியும் ஆவார். அனைவரும் நுளம்புக் கூட்டத்தைப் போன்று மரணிப்பார்கள். அனைவரும் ஒரேயளவில் நினைவுpல் அமர்ந்திருப்பதில்லை என்பதை நீங்களும் புரிந்துகொள்கின்றீர்கள். சிலர் மிகச் சரியான யோகத்தையும், சிலர் அரைமணி நேர யோகத்தையும், சிலர் 15 நிமிட யோகத்தையும் கொண்டிருக்கின்றனர். சிலர் ஒரு நிமிடமேனும் நினைவில் இருப்பதில்லை. தாங்கள் முழு நேரமும் நினைவில் இருப்பதாகக் கூறுபவர்கள் மிகவும் சந்தோஷமான, பிரகாசமான முகங்களைக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய குழந்தைகள் அதீந்திரிய சுகத்தை அனுபவிப்பார்கள். அவர்களின் புத்தி எங்கும் அலைபாயாது. அவர்கள் சந்தோஷத்தை உணர்வார்கள். அவர்களின் புத்தி கூறுகின்றது: நான் ஒரேயொரு அன்பிற்கினியவரின் நினைவில் இருந்தால் துரு அகற்றப்படும். பின்னர் இப்பழக்கம் நிலைத்துவிடுகின்றது. நினைவு யாத்திரை மூலம் நீங்கள் என்றும் ஆரோக்கியமானவராகவும், என்றும் செல்வந்தராகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் சக்கரத்தையும் நினைவுசெய்ய வேண்டும். நினைவில் இருப்பதே ஒரே முயற்சியாகும். சக்கரமும் உங்களின் புத்தியில் சுழல்கின்றது. நீங்கள் இப்பொழுது மாஸ்டர் விதைகள் ஆகுகின்றீர்கள். நினைவுடன்கூடவே, சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்றுங்கள். பாரத மக்களாகிய நீங்கள் கலங்கரை விளக்கங்கள். நீங்கள் அனைவருக்கும் வீட்டிற்கான பாதையைக் காண்பிக்கின்ற ஆன்மீக கலங்கரை விளக்கங்கள். அதுவும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் முக்திக்கும், ஜீவன் முக்திக்குமான பாதையைக் காண்பிக்கின்றீர்கள், இவ்வாறே நீங்கள் ஆன்மீக கலங்கரை விளக்கங்களாக இருக்கின்றீர்கள். உங்களின் சுயதரிசனச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்கள் பெயரை எழுத விரும்பினால், அதை விளங்கப்படுத்தவும் வேண்டும். பாபா தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அவருக்கு நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். அன்பிற்கினியவருடன் நேர் முன்னிலையில் அமர்ந்திருப்பவர்கள் மீதே ஞான மழை பொழிகின்றது. பாபாவிற்கு நேர் முன்னிலையில் இருந்து செவிமடுப்பதே மகா சந்தோஷமாகும். இரண்டாவது, ஒலிப்பதிவு நாடாவைச் செவிமடுப்பதாகும். மூன்றாவது முரளி ஆகும். சிவபாபா அனைத்தையும் பிரம்மா மூலம் விளங்கப்படுத்துகின்றார். இந்த பிரம்மாவும் அறிவார். இருந்தபோதிலும், நீங்கள் சிவபாபாவே அனைத்தையும் கூறுவதாகக் கருதவேண்டும். நீங்கள் இவ்வாறு சிந்திக்காவிட்டால், அதிக கீழ்ப்படிவின்மை உள்ளது. சிவபாபா கூறுவதெல்லாம் நன்மைபயப்பதாகும். அதில் ஏதாவது இழப்பு (நட்டம்) இருப்பதாகத் தென்பட்டாலும், அதுவும்கூட நன்மையாக (இலாபம்) மாறிவிடும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் ஒவ்வொரு வழிகாட்டலையும் பின்பற்றி முன்னேறுங்கள். தந்தையொருவர் மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். தந்தையின் நினைவிலிருந்தவாறு உணவைத் தயாரித்து உண்ணுங்கள்.

2. ஓர் ஆன்மீக கலங்கரை விளக்கமாகி, அனைவருக்கும் முக்திக்கும், ஜீவன் முக்திக்குமான பாதையைக் காண்பியுங்கள். நீங்கள் நிச்சயமாக தந்தையைப் போன்று உபகாரி ஆகவேண்டும்.

ஆசீர்வாதம்:
எல்லையற்ற ஆர்வமின்மை கொண்டிருந்து, ஒரேயொரு தந்தைக்குள் முழு உலகையும் அனுபவம் செய்வீர்களாக.

தந்தையை தமது உலகமாகக் கருதுபவர்களால் மாத்திரமே எல்லையற்ற ஆர்வமின்மையை கொண்டிருக்க முடியும். தந்தையை மாத்திரமே தமது உலகமாக கொண்டிருப்பவர்கள், தமது உலகில் மாத்திரமே இருப்பார்கள், அவர்கள் வேறு எவருடனும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவர்கள் இயல்பாகவே விலகி இருக்கின்றார்கள். மக்களும் சொத்துக்களும் உலகில் உள்ளடக்கப்படுகின்றன. தந்தையின் செல்வம் என்றால் எனது செல்வம் என்று அர்த்தமாகும். இந்த விழிப்புணர்வை பேணுவதால், நீங்கள் எல்லையற்ற ஆர்வமின்மையை கொண்டிருக்கின்றீர்கள். பிறரை பார்க்கின்ற போதிலும், நீங்கள் எவரையும் பார்க்க மாட்டீர்கள். அவர்கள் உங்களுக்குப் புலப்பட மாட்டார்கள்.

சுலோகம்:
ஒரு சக்திமிக்க ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, ஏகாந்தமாக இருப்பதிலும் களிப்படைவதிலும் சமநிலையை பேணுங்கள்.