03.05.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    06.01.86     Om Shanti     Madhuban


சங்கமயுகம் சேமிப்பதற்கான யுகம் ஆகும்.


இன்று, குழந்தைகள் அனைவரினதும் முக்காலங்களையும் அறிந்தவரான, திரிகாலதரிசியான பாப்தாதா, சகல குழந்தைகளினதும் சேமிப்புக்கணக்குகளைப் பார்க்கிறார். கல்பம் முழுவதிலும், இந்த சங்கமயுகம் மட்டுமே மேன்மையான கணக்கைச் சேமிப்பதற்கான காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒரு சிறிய யுகம். குறுகிய வாழ்க்கை. எவ்வாறாயினும், இந்த யுகத்தினதும் வாழ்க்கையினதும் சிறப்பியல்பு என்னவென்றால், இந்த வேளையில் எவராலும் தான் விரும்பிய அளவைச் சேமிக்க முடியும். இந்த நேரத்தின் மேன்மையான கணக்கிற்கேற்ப, நீங்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். பின்னர், பூஜிக்கத்தகுதிவாய்ந்தவரில் இருந்து நீங்கள் பூஜிப்பவராகவும் ஆகுகிறீர்கள். இந்த நேரத்தில் மட்டுமே நீங்கள் மேன்மையான செயல்கள், மேன்மையான ஞானம், மேன்மையான உறவுமுறைகள், மேன்மையான சக்திகள், மேன்மையான நற்குணங்கள் என்பவற்றின் மேன்மையான கணக்கைச் சேமிக்கிறீர்கள். துவாபர யுகத்தில் இருந்து, நீங்கள் எதையாவது செய்ததும், உடனடியாக அதற்கான பலனைப் பெறுகின்ற தற்காலிகமான கணக்கே உள்ளது. அது முடிவடைந்துவிடுகிறது. பக்திக்கான கணக்கு தற்காலிகமான காலத்திற்கே. ஏனெனில், நீங்கள் அதைச் சம்பாதித்து, உடனடியாக அதைப் பயன்படுத்தி விடுகிறீர்கள். உங்களின் அழியாத கணக்கில் சேமிப்பதற்கான நேரம் இதுவே ஆகும். அந்தக் கணக்குப் பிறவி பிறவியாகத் தொடரும். இதனாலேயே, இந்த மேன்மையான நேரம், அதி மங்களகரமான யுகம் என்றும் புண்ணியத்திற்கான யுகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இறைவனின் அவதாரத்திற்கான யுகம் என்று அழைக்கப்படுகிறது. இது தந்தையிடமிருந்து சக்திகளை நீங்கள் நேரடியாகப் பெறுகின்ற யுகம் என்று நினைவுகூரப்படுகிறது. இந்த யுகத்திலேயே, தந்தை பாக்கியத்தை அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் இருக்கும் பாகத்தை நடிக்கிறார். இதனாலேயே இந்த யுகம் ஆசீர்வாதங்களின் யுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யுகத்தில், அன்பின் காரணத்தினால், தந்தை கள்ளங்கபடமற்ற பொக்கிஷதாரியாகி, ஒன்றுக்குப் பதிலாக உங்களுக்குப் பலமில்லியன்களை வழங்குகிறார். இந்த நேரத்தில் மட்டுமே, ஒன்றுக்குப் பதிலாக பலமில்லியன்களைச் சேமிக்கும் விசேடமான பாக்கியத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஏனைய யுகங்களில், நீங்கள் செய்வது அல்லது கொடுப்பதற்கேற்ப பெறுகின்ற கணக்குகளே உள்ளன. இதில் வேறுபாடு உள்ளது. ஏனெனில், இந்த நேரத்தில், நீங்கள் நேரடியாக ஆஸ்தி மற்றும் ஆசீர்வாதங்கள் என்ற இரண்டு முறைகளில் பெறுவதற்குத் தந்தையே கருவி ஆகுகிறார். பக்தியின்போது, உங்களின் நம்பிக்கைக்கும் பக்திக்குமான பலனைப் பெற்றீர்கள். ஆனால் இங்கு, நீங்கள் ஆஸ்தியினதும் ஆசீர்வாதங்களினதும் பலனைப் பெறுகிறீர்கள். ஆகவே, நீங்கள் திரிகாலதரிசியாக இருந்து, இந்த நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவராகவும், பேறுகளை அறிந்தவராகவும் சேமிப்புக்கணக்கை அறிந்தவராகவும் ஒவ்வோர் அடியையும் தொடர்ந்து எடுத்து வைக்கிறீர்களா? சாதாரணமான நேரத்துடன் ஒப்பிடும்போது, இந்த நேரத்தின் ஒரு விநாடியும் எவ்வளவு மேன்மையானது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒரு விநாடியில் உங்களால் எவ்வளவைச் சம்பாதிக்க முடியும் என்பதையும் ஒரு விநாடியில் நீங்கள் எவ்வளவை இழப்பீர்கள் என்ற கணக்கை மிக நன்றாக அறிவீர்களா? அல்லது, நீங்கள் சாதாரணமான முறையில் எதையாவது சம்பாதித்து, எதையாவது இழக்கிறீர்களா? நீங்கள் இத்தகைய பெறுமதிமிக்க நேரத்தை வீணாக்கவில்லை, அல்லவா? நீங்கள் பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகள் ஆகியுள்ளீர்கள். ஆனால், அழியாத ஆஸ்திக்கான உரிமையையும் விசேடமான ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெற்றுள்ளீர்களா? இந்த நேரத்திற்கான உரிமையைப் பெற்றிருப்பவர்கள், பிறவி பிறவியாக உரிமையைப் பெறுவார்கள். இந்த நேரத்தில், ஏதாவது வகையான சுபாவம், சம்ஸ்காரம் அல்லது உறவுமுறையில் தங்கியிருக்கும் ஓர் ஆத்மா, பிறவி பிறவியாக ஒரு இராச்சிய உரிமை உடையவராக ஆகுவதற்குப் பதிலாக, ஒரு பிரஜையின் அந்தஸ்தையே பெறுவார். இத்தகைய ஆத்மாவிற்கு இராச்சிய உரிமை இல்லை. ஆனால், ஒரு பிரஜையின் அந்தஸ்திற்கான உரிமையையே பெறுவார். நீங்கள் இங்கு இராஜயோகிகள் ஆகுவதற்காகவே, இராச்சிய உரிமை உடையவர்கள் ஆகுவதற்காகவே வந்திருக்கிறீர்கள். எவ்வாறாயினும், அதற்குப் பதிலாக, தங்கியிருக்கும் சம்ஸ்காரத்தினால், நீங்கள் பாக்கியத்தை அருள்பவரின் குழந்தைகளாக இருந்தாலும், உங்களால் இராச்சியத்திற்கான உரிமையைப் பெற முடியாமல் போகிறது. ஆகவே, எந்தளவிற்கு நீங்கள் சுயத்தில் உரிமையுள்ளவர் ஆகியிருக்கிறீர்கள் என எப்போதும் சோதித்துப் பாருங்கள். சுயத்தின் மீது உரிமை இல்லாத ஒருவரால் எவ்வாறு உலக இராச்சியத்தைப் பெற முடியும்? இந்த நேரத்தில் சுய இராச்சிய அதிகாரி ஆகுவதன் மூலமே, உலக இராச்சிய உரிமையுள்ள ஒருவர் என்ற உயிர்வாழும் மாதிரியை உங்களால் தயாரிக்க முடியும். நீங்கள் எதையாவது கண்டுபிடிக்கும்போது, முதலில் அதன் மாதிரியைத் தயாரிப்பீர்கள், இல்லையா? ஆகவே, அனைத்திற்கும் முதலில், இந்த மாதிரியைப் பாருங்கள்.

சுய இராச்சிய அதிகாரியாக, தனக்கே அதிபதியாக இருத்தல் என்றால், உங்களின் பௌதீக உறுப்புக்களான உங்களின் பிரஜைகளுக்கு நீங்கள் அரசன் ஆகுதல் என்று அர்த்தம். பிரஜைகள் ஆட்சி செய்வார்களா அல்லது அரசன் ஆட்சி செய்வாரா? இதை உங்களால் அறிந்து கொள்ள முடியுமல்லவா? பிரஜைகள் ஆட்சி செய்தால், உங்களை ஓர் அரசன் என்று அழைக்க முடியாது. பிரஜைகளின் ஆட்சியில், அரசர்களின் வம்சம் அழிந்துவிடும். பௌதீக உறுப்புக்களில் ஏதாவது ஒன்று உங்களை ஏமாற்றினால், உங்களை சுயத்தின் அதிபதி என்று அழைக்க முடியாது. எப்போதும் ஒன்று அல்லது இரண்டு பலவீனங்கள் இருக்கும் என்றும், நீங்கள் இறுதியில் சம்பூரணம் ஆகுவீர்கள் என்றும் ஒருபோதும் நினைக்காதீர்கள். நீண்ட காலத்திற்கு இருக்கும் ஒரு பலவீனமும் இக்கட்டான வேளையில் உங்களை ஏமாற்றக்கூடும். நீண்ட காலத்திற்குத் தங்கியிருக்கும் சம்ஸ்காரம், உங்களை உரிமையுள்ளவர் ஆகுவதற்கு அனுமதிக்காது. ஆகவே, உரிமையுள்ளவர் ஆகுவதெனில், சுயத்தின் மீது உரிமையுள்ளவர் ஆகுதல் என்று அர்த்தம். இறுதியில் நீங்கள் சம்பூரணமாகுவீர்கள் என்ற எண்ணத்தினால் ஏமாற்றப்படாதீர்கள். நீண்ட காலத்திற்கு சுயத்தின் மீது உரிமையுள்ளவராக இருக்கும் சம்ஸ்காரமே நீண்ட காலத்திற்கு உலகில் உரிமையுள்ளவராக உங்களை ஆக்கும். குறுகிய காலத்திற்கு சுய அதிபதிகள் ஆகுபவர்கள், குறுகிய காலத்திற்கே உலக இராச்சியத்திற்கான உரிமையுள்ளவர்கள் ஆகுவார்கள். தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்ற தந்தையின் கட்டளைக்கேற்ப, தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள், இராச்சிய சிம்மாசனத்தின் உரிமையைப் பெறுவார்கள். தந்தைக்குச் சமமானவர் ஆகுவதெனில், தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருத்தல் என்று அர்த்தம். தந்தை பிரம்மா சம்பூரணமாகவும் சமமாகவும் ஆகியதைப் போல, நீங்களும் சம்பூரணமானவராகவும் சமமானவராகவும் ஆகவேண்டும். இராச்சிய சிம்மாசனத்தின் உரிமையைக் கோருங்கள். எந்த வகையான கவனக்குறைவினாலும் உங்களின் ஆஸ்திக்கும் உரிமைக்குமான உரிமையைப் பொறுத்தவரை எதையும் குறைவாகப் பெற்றுக் கொள்ளாதீர்கள். ஆகவே, உங்களின் சேமிப்புக் கணக்கைச் சோதித்துப் பாருங்கள். புதிய வருடம் இப்போதே தொடங்கியுள்ளது. இந்த நேரத்தின் உதவியுடனும் தந்தையின் ஆசீர்வாதங்களாலும் உங்களின் பழைய கணக்கைச் சோதித்து, உங்களின் புதிய கணக்கில் சேமியுங்கள். நீங்கள் சம்பாதித்து, அதை உடனடியாகப் பயன்படுத்தும் வகையான கணக்கை உருவாக்காதீர்கள். அமிர்தவேளையில், நீங்கள் யோகம் செய்து சேமிக்கிறீர்கள். வகுப்பு நேரத்தில், நீங்கள் படிப்பதன் மூலம் சேமிக்கிறீர்கள். நாள் முழுவதும், சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களின் ஆதிக்கத்தால், மாயையின் தாக்குதலால் அல்லது உங்களின் சொந்த சம்;ஸ்காரங்களின் ஆதிக்கத்தினால் போராடும்போது வெற்றியாளர் ஆகுவதற்காக நீங்கள் அதைப் பயன்படுத்தி விடுகிறீர்கள். எனவே, அதன் பெறுபேறு என்ன? நீங்கள் சம்பாதித்து, அதைப் பயன்படுத்திவிட்டீர்கள். எனவே, என்ன சேமிக்கப்பட்டது? ஆகவே, எப்போதும் உங்களின் சேமிப்புக் கணக்கைச் சோதித்து, அதைத் தொடர்ந்து அதிகரியுங்கள். அதேபோன்று, உங்களின் அட்டவணையிலும், வெறுமனே ஒரு ரிக் (√) போடாதீர்கள். நீங்கள் வகுப்பிற்கு வந்தீர்களா? ஆமாம். நீங்கள் யோகம் செய்தீர்களா? எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப உங்களின் யோகம் சக்திவாய்ந்ததாக இருந்ததா? உங்களின் நேரம் நன்றாகக் கழிந்ததா? நீங்கள் அதிகம் இரசித்தீர்கள். நிகழ்காலத்திற்காக எதையாவது உருவாக்கினீர்கள். ஆனால், நிகழ்காலத்துடன் கூடவே, நீங்கள் எதையாவது சேமித்தீர்களா? உங்களுக்குச் சக்திவாய்ந்த அனுபவம் ஏற்பட்டதா? நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்கள் என்பதை மட்டும் சோதித்துப் பார்க்காதீர்கள். எவரையாவது அவர்கள் எவ்வாறு முன்னேறுகிறார்கள் என நீங்கள் கேட்டால், அவர்கள் தாம் நன்றாக முன்னேறுவதாகவே கூறுவார்கள். எவ்வாறாயினும், நீங்கள் என்ன வேகத்தில் முன்னேறிச் செல்கிறீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் ஓர் எறும்பின் வேகத்திலா அல்லது ரொக்கெட்டின் வேகத்திலா செல்கிறீர்கள்? இந்த வருடம், அனைத்திலும் சக்திசாலி ஆகுவதற்கான உங்களின் வேகத்தையும் சதவீதத்தையும் சோதியுங்கள். என்ன சதவீதத்தில் நீங்கள் சேமிக்கிறீர்கள்? ஐந்து ரூபாயாக இருந்தாலும் நீங்கள் சேமித்ததாகவே சொல்வீர்கள். அது 500 ரூபாயாக இருந்தாலும் நீங்கள் சேமித்ததாகவே சொல்வீர்கள். எனவே, நீங்கள் சேமித்தீர்கள். ஆனால் எவ்வளவைச் சேமித்தீர்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்து கொண்டீர்களா?

நீங்கள் பொன் விழாவை நோக்கிச் செல்கிறீர்கள். இந்த முழு வருடமும் பொன்விழாவிற்குரிய வருடமே, இல்லையா? எனவே, நீங்கள் சத்தியயுகத்திற்குரியவர் ஆகிவிட்டீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். அதாவது, ஒவ்வொரு விடயத்திலும் நீங்கள் சதோபிரதான் ஸ்திதியை அடைந்துவிட்டீர்களா? அல்லது, வெள்ளி யுக ஸ்திதியான சதோவாக இருக்கிறீர்களா? உங்களின் முயற்சியும் சதோபிரதானாக, சத்தியயுகத்திற்குரியதாக இருக்க வேண்டும். உங்களின் சேவையும் சத்தியயுகத்திற்குரியதாக இருக்க வேண்டும். பழைய சம்ஸ்காரங்களின் சிறிதளவு கறையேனும் இருக்கக்கூடாது. தற்காலத்தில் அவர்கள் செய்யும் வெள்ளி, தங்கப் பூச்சு பூசுவதைப் போல் இருக்கக்கூடாது. வெளியே பார்க்கும்போது தங்கம் போல் இருக்கும். ஆனால் உள்ளே இருப்பது என்ன? அது கலப்படம் என்றே சொல்லப்படுகிறது. எனவே, சேவையில் அகங்காரம், அவமதித்தல் என்ற கறைகளைக் கலக்காதீர்கள். இது சத்தியயுக சேவை என்று அழைக்கப்படுகிறது. உங்களின் சுபாவத்தில் பொறாமை, பிடிவாதம், அல்லது உங்களைச் சரியென நிரூபித்தல் என்ற எந்தவிதமான உணர்வுகளும் இருக்கக்கூடாது. அது கறை ஆகும். அந்தக் கறைகளை முடித்து, பொன்யுக சுபாவங்களை உடையவர்கள் ஆகுங்கள். எப்போதும் ஹா ஜி என்ற சம்ஸ்காரங்களைக் கொண்டிருங்கள். காலத்திற்கும் சேவைக்கும் ஏற்ப நீங்கள் உங்களை வளைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் நிஜத்தங்கம் ஆகவேண்டும். நான் என்னை வளைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை தங்களை வளைத்தால் மட்டுமே, நீங்கள் உங்களை வளைத்துக் கொள்வீர்கள் என நீங்கள் நினைத்தால், அது பிடிவாதம் பிடித்தல் எனப்படுகிறது. அது நிஜத்தங்கம் இல்லை. அந்தக் கறையை இல்லாமல் செய்து, பொன்யுக சுபாவங்களைக் கொண்டவர்கள் ஆகுங்கள். உங்களின் உறவுமுறைகளிலும், எப்போதும் எல்லோருக்கும் நல்லாசிகளும் நன்மைசெய்யும் உணர்வுகளுமே இருக்க வேண்டும். அன்பும் ஒத்துழைப்பிற்குமான உணர்வுகள் இருக்க வேண்டும். ஒருவருக்கு என்ன வகையான நோக்கமோ அல்லது சுபாவமோ இருந்தாலும், உங்களின் உணர்வுகள் எப்போதும் மேன்மையானதாக இருக்க வேண்டும். இந்த விடயங்கள் அனைத்திலும் சுய மாற்றத்தை ஏற்படுத்துவதே பொன்விழாவைக் கொண்டாடுவதாகும். கறைகளை எரித்தல் என்றால் பொன்விழாவைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். உங்களுக்குப் புரிகிறதா? புது வருடத்தை பொன்விழா ஸ்திதியுடன் ஆரம்பியுங்கள். இது இலகுதானே? இதைக் கேட்கும்போது, நீங்கள் அனைவரும் இதையே செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால், ஏதாவது பிரச்சனை உங்களுக்கு முன்னால் வரும்போது, இது மிகவும் கஷ்டமான விடயம் என நீங்கள் நினைக்கிறீர்கள். பிரச்சனை வருகின்ற நேரமே, உங்களின் அதிபதியாக உங்களின் அதிகாரத்தைக் காட்ட வேண்டிய நேரம் ஆகும். தாக்குதல் இடம்பெறும்போதே நீங்கள் வெற்றியாளர் ஆகவேண்டும். பரீட்சை நேரத்திலேயே நீங்கள் முதலாம் இலக்கத்தைப் பெற வேண்டும். பிரச்சனைகளின் சொரூபம் ஆகாதீர்கள். ஆனால் தீர்வுகளின் சொரூபம் ஆகுங்கள். இந்த வருடம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? அப்போது மட்டுமே பொன்விழாவின் நிறைவு, சம்பூரணம் ஆகுவதற்கான பொன்விழா என்று அழைக்கப்படும். வேறு என்ன புதுமையை நீங்கள் ஏற்படுத்துவீர்கள்? குழந்தைகள் அனைவரினதும் எண்ணங்கள் பாப்தாதாவை வந்தடைகின்றன. நிகழ்ச்சியில் என்ன புதுமையை நீங்கள் ஏற்படுத்துவீர்கள்? பொன்னான எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்ற தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்களைத் தங்கமாக்கி, தங்க யுகத்தைக் கொண்டு வருவதற்கான பொன்னான எண்ணங்களும் பொன்னான அபிப்பிராயங்களும். இந்தத் தலைப்பையே நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள், இல்லையா? அச்சா. இன்று, சூட்சும வதனத்தில் இந்தத் தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அதைப் பற்றி வேறொரு வேளையில் பாபா உங்களுக்குக் கூறுவார். அச்சா.

ஆஸ்தியும் ஆசீர்வாதங்களும் என்ற இரட்டை உரிமையுள்ள சகல பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும், சதா சுய அதிபதிகளாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், பொன்யுக ஸ்திதியில் எப்போதும் தங்களை ஸ்திரப்படுத்தும் நிஜத்தங்கமான குழந்தைகளுக்கும், சுய மாற்றத்திற்கான ஆழமான அன்புடன் உலக மாற்றத்தை நோக்கி முன்னேறும் விசேடமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஒரு மீட்டிங்கிற்காக வந்துள்ள மருத்துவர்களை அவ்யக்த பாப்தாதா சந்திக்கிறார்.

உங்களின் ஊக்கத்தினாலும் உற்சாகத்தினாலும் ஆத்மாக்கள் அனைவரையும் சதா சந்தோஷமாக்கும் சேவையில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள், அல்லவா? ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சந்தோஷத்தைக் கொடுப்பதே மருத்துவர்களின் விசேடமான கடமை ஆகும். முதல் மருந்து சந்தோஷமே. சந்தோஷம் அரைவாசி நோயைக் குணப்படுத்தி விடுகிறது. எனவே, ஆன்மீக மருத்துவர்கள் என்றால் சந்தோஷ மருந்தைக் கொடுப்பவர்கள் என்று அர்த்தம். எனவே, நீங்கள் அத்தகைய மருத்துவர்கள், அல்லவா? ஓர் ஆத்மா ஒரு தடவையேனும் சந்தோஷத்தின் பிரகாசத்தை அனுபவம் செய்தால், அந்த ஆத்மா சதா சந்தோஷப் பிரகாசத்துடன் தொடர்ந்து பறப்பார். எனவே, நீங்கள் அனைவரையும் இலேசாகவும் ஒளியாகவும் ஆக்கி, அவர்களைப் பறக்கச் செய்யும் மருத்துவர்களா? அந்த மருத்துவர்கள் அவர்களைப் படுக்கையில் இருந்த எழச் செய்வார்கள். படுக்கையில் இருக்கும் நோயாளிகளை எழச் செய்து, அவர்களை நடக்கச் செய்ய அவர்களால் முடியும். நீங்கள் அவர்களைப் பழைய உலகில் இருந்து அப்பால் எடுத்துச் சென்று, புதிய உலகில் இருத்துகிறீர்கள். நீங்கள் இத்தகைய திட்டங்களைச் செய்தீர்களா? நீங்கள் ஆன்மீகக் கருவிகளைப் பயன்படுத்துவற்கான திட்டங்களைச் செய்தீர்களா? ஊசிமருந்து என்ன? மாத்திரைகள் எவை? இரத்தம் ஏற்றுதல் என்றால் என்ன? நீங்கள் இந்த ஆன்மீக வசதிகளை உருவாக்கியுள்ளீர்கள். யாராவது ஒருவருக்கு இரத்தம் தேவையாக இருந்தால், நீங்கள் அவருக்கு என்ன ஆன்மீக இரத்தத்தை ஏற்றுவீர்கள்? இரு இருதய நோயாளிக்கு என்ன மருந்தைக் கொடுப்பீர்கள்? இதய நோயாளி என்றால் மனவிரக்திக்குள்ளான நோயாளி என்று அர்த்தம். எனவே, உங்களுக்கு ஆன்மீக விடயங்கள் தேவை. அவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் விஞ்ஞானத்தின் வசதிகளால் கண்டுபிடிக்கப்பட்டவை. மௌனத்தின் வசதிகளால், நீங்கள் எல்லா வேளைக்கும் அவர்களை நோயில் இரு;நது விடுபடச் செய்கிறீர்கள். அவர்களிடம் வெவ்வேறு கருவிகளின் பட்டியல்கள் உள்ளன. அதேபோன்று, உங்களிடமும் நீண்டதொரு பட்டியல் இருக்க வேண்டும். நீங்கள் ஆத்மாக்களை என்றும் ஆரோக்கியமானவர்கள் ஆக்குவதற்கான நல்ல வசதிகளைக் கொண்டிருக்க வேண்டிய மருத்துவர்கள் ஆவீர்கள். நீங்கள் இதை உங்களின் தொழிலாக ஆக்கியுள்ளீர்களா? மருத்துவர்களான நீங்கள் அனைவரும் எல்லோரையும் என்றும் ஆரோக்கியமானவர்களாகவும் என்றும் செல்வந்தர்களாகவும் ஆக்குவதற்கான இடம் என்ற பலகையை உங்களின் இடங்களில் வைத்திருக்கிறீர்களா? அவர்கள் தமது தொழில்களைக் குறிக்கும் பலகைகளை மாட்டியிருப்பதைப் போல், இவ்வாறு எழுதிப் போடுங்கள். மக்கள் அதைப் பார்த்ததும், அது என்னவென்பதை அவர்கள் புரிந்து, உள்ளே வந்து பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது கவர்ச்சியான பலகையாக இருக்க வேண்டும். அதில் எழுதியுள்ள கருப்பொருள், எவரும் அறிமுகத்தைப் பெறுவதற்காக உள்ளே வருகின்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். நீங்கள் அவரை அழைக்கத் தேவையில்லாமல், அவர்களே தமது விருப்பத்திற்கு மாறாக உள்ளே வருவதற்காகக் கவரப்படும் வகையில் அந்தப் பலகை இருக்க வேண்டும். அவர்களோ, இன்னார், எம்பிபிஎஸ் என எழுதுகிறார்கள். ஆனால் நீங்களோ, இந்த இடம் தமக்கு அத்தியாவசியம் என மக்கள் உணரும் வகையில் உங்களின் ஆன்மீகத் தொழிலை எழுதிய பெயர்ப்பலகையை வைக்க வேண்டும். நீங்கள் இத்தகைய ஆன்மீகப் பட்டத்தை உருவாக்கிவிட்டீர்களா? அல்லது உங்களின் லௌகீகப் பட்டங்களை மட்டுமே எழுதுகிறீர்களா?

(சேவைக்கான மேன்மையான வசதிகள் எவை?) அதிவிரைவான சேவை செய்வதற்கான வழிமுறை, சக்திவாய்ந்த எண்ணங்களுடன் செய்யும் சேவை ஆகும். சக்திவாய்ந்த எண்ணங்களும் வார்த்தைகளும் செயல்களும் இருக்க வேண்டும். இவை மூன்றும் ஒரே வேளையில் செயற்பட வேண்டும். இது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். நீங்கள் வார்த்தைகளைப் பேசும்போது, சக்திவாய்ந்த எண்ணங்களின் சதவீதம் குறைந்தால் அல்லது அதேயளவாக இருந்தால், இது வார்த்தைகளின் சக்தியில் வேறுபாட்டை உருவாக்கும். எவ்வாறாயினும், இவை மூன்றும் ஒரே வேளையில் நிகழ வேண்டும். ஒரு நோயாளிக்கு, ஒருவர் அவருக்கு சத்திரசிகிச்சை செய்யும்போது, இன்னொருவர் அதேவேளை அவரின் நாடித்துடிப்பையும் பரிசோதிப்பார். அனைத்தும் ஒரே வேளையில் நிகழும். சத்திரசிகிச்சை செய்பவர் தனது சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க, நாடித்துடிப்பைப் பரிசோதிப்பவர் அதைப் பின்னர் செய்தால் என்ன நிகழும்? பல பணிகள் ஒரே நேரத்தில் செய்யப்படுகின்றன. அதேபோன்று, சேவைக்கான ஆன்மீகக் கருவிகளும் ஒரே நேரத்தில் செயற்பட வேண்டும். நீங்கள் சேவைக்கான திட்டங்களைச் செய்திருக்கிறீர்கள். அது மிகவும் நல்லதே. எவ்வாறாயினும், அனைவரும், ஆமாம், இந்த ஆன்மீக மருத்துவர் எங்களை எல்லா நேரத்திற்கும் ஆரோக்கியமாக ஆக்குவார் எனப் புரிந்து கொள்ளும்படியாக ஒரு கருவியைக் கண்டுபிடியுங்கள். அச்சா.

பாப்தாதா குழுக்களுடன் பேசுகிறார்:

பல தடவைகள் வெற்றியாளர்கள் ஆகுபவர்களின் அடையாளங்கள் எவை? அனைத்தும் மிகவும் இலகுவாகவும் இலேசாகவும் இருப்பதை அவர்கள் உணர்வார்கள். கல்பம் கல்பமாக வெற்றியாளர்கள் ஆகாதவர்கள், அற்பமான பணியையும் கஷ்டமானதாகவே உணர்வார்கள். அவர்களுக்கு அது இலகுவானதாக இருக்காது. எவ்வாறாயினும், மற்றவர்களோ எந்தவொரு பணியை ஆரம்பிப்பதற்கு முன்னரும், அந்தப் பணி ஏற்கனவே நிறைவேறி விட்டது என்று உணர்வார்கள். அது நிகழுமா இல்லையா என அவர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள். அது ஏற்கனவே நிறைவேறி விட்டது என அவர்கள் எப்போதும் உணர்வார்கள். தாம் எப்போதும் வெற்றி பெறுகிறோம் என்றும் தாம் வெற்றி அடைவோம் என்றும் அவர்கள் அறிவார்கள். அவர்களின் புத்திகளில் இத்தகைய நம்பிக்கை இருக்கும். அவர்கள் எதையும் புதியது என்று நினைக்க மாட்டார்கள். அனைத்தும் மிகவும் பழையவை என்றே உணர்வார்கள். இந்த விழிப்புணர்வுடன் அவர்கள் தொடர்ந்து இயங்குவார்கள்.

இலேசாகவும் ஒளியாகவும் (டபிள் லைற்) இருப்பவர்களின் அடையாளங்கள் எவை? இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் ஆத்மாக்கள், எப்போதும் இலகுவாகவும் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வார்கள். அவர்கள் சில வேளைகளில் நிற்பதாகவும் சிலவேளைகளில் பறப்பதாகவும் இருக்க மாட்டார்கள். சதா பறக்கும் ஸ்திதியில் இருக்கும் ஆத்மாக்கள் மட்டுமே, இரட்டைக் கிரீடத்தின் உரிமையைப் பெறத்தக்க இலேசான, ஒளியான ஆத்மாக்கள் ஆவார்கள். இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் ஆத்மாக்கள் இயல்பாகவே அதியுயர்ந்த ஸ்திதியை அனுபவம் செய்வார்கள். எந்தவொரு சந்தர்ப்பம் வரும்போதும், நீங்கள் இலேசானவரும் ஒளியானவரும் என்பதை நினைவில் வைத்திருங்கள். குழந்தைகள் ஆகுவதென்றால் நீங்கள் இலேசானவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் எந்தவிதமான சுமைகளையும் சுமக்க முடியாது. அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் அருள்பவராகி, தந்தை பிரம்மாவைப் போல், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.

தந்தை பிரம்மாவைப் போல், மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகுவதற்கு, மூன்று விடயங்களில் இருந்து பொறாமை, வெறுப்பு, விமர்சித்தல் - விடுபட்டிருங்கள். அனைவருக்காகவும் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். அத்துடன் தூய, சாதகமான எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். ஏனெனில், தமக்குள் பொறாமைத் தீயைக் கொண்டிருப்பவர்கள், தங்களை எரிப்பதுடன் மற்றவர்களுக்கும் துக்கத்தைக் கொடுப்பார்கள். வெறுப்பு உடையவர்கள், தாங்களும் விழுவதுடன் மற்றவர்களையும் விழச் செய்வார்கள். மற்றவர்களை நகைச்சுவையாகவேனும் விமர்சிப்பவர்கள், மற்றவர்களின் தைரியத்தை இழக்கச் செய்வதுடன், அவர்களை சோகத்திற்கு உள்ளாக்குகிறார்கள். ஆகவே, இந்த மூன்றில் இருந்தும் விடுபடுங்கள். தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். அருள்பவரின் குழந்தையாக, மாஸ்ரர் அருள்பவர் ஆகுங்கள்.

சுலோகம்:
தமது மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் மீது முழுமையான அதிகாரம் கொண்டவர்களே சுய அதிபதிகளான, சுய இராச்சிய அதிகாரிகள் ஆவார்கள்.