03.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையைப் போன்று இனிமையானவர்கள் ஆகவேண்டும். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். ஒருபொழுதும் கோபப்படாதீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஆழமான கர்ம தத்துவத்தை அறிந்துகொண்டதனால், எப்பாவச் செயல்களைச் செய்யக்கூடாது?

பதில்:
இன்றுவரை, தானங்கள் செய்வதைப் புண்ணியச் செயல்கள் என்றே நீங்கள் எண்ணியிருந்தீர்கள், ஆனால், நீங்கள் தானம் செய்வதிலும் சிலவேளைகளில் பாவம் சேர்க்கப்படுகின்றது என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். ஏனெனில், நீங்கள் பணத்தைப் பாவம் செய்வதற்குப் பயன்படுத்துபவருக்குத் தானமாகக் கொடுப்பின், அது நிச்சயமாக உங்கள் ஸ்திதியைப் பாதிக்கும். எனவே, புரிந்துணர்வுடன் தானம் செய்யுங்கள்.

பாடல்:
எங்களை இப்பாவ உலகிலிருந்து அப்பால் ஓய்வும், சௌகரியமும் நிறைந்த ஓர் உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்!

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பாபாவிற்கு முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: ஓ உயிர்வாழும் ஆத்மாக்களே, நீங்கள் செவிமடுக்கிறீர்களா? அவர் ஆத்மாக்களுடன் பேசுகிறார். எங்கள் எல்லையற்ற தந்தை எங்களைத் துன்பத்தின் குறிப்பே இல்லாத இடத்திற்குத் தன்னுடன் அழைத்துச்செல்கிறார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். பாடலில் கூறப்படுகின்றது: எங்களை இப்பாவ உலகிலிருந்து அப்பால் ஒரு தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். தூய்மையற்ற உலகம் எது என்பதை உலகம் அறியாது. இக்காலத்தில் மக்களிடம் காமமும், கோபமும் மிகவும் பலம் வாய்ந்தவையாக இருப்பதைப் பாருங்கள். கோபத்தின் ஆதிக்கத்தினால் அவர்கள் கூறுகிறார்கள்: நான் அவர்களின் நாட்டை அழிப்பேன். மக்கள் கூறுகிறார்கள்: ஓ கடவுளே, இது பழைய உலகம் என்பதால், எங்களை இந்தக் காரிருளிலிருந்து, பேரொளியினுள் அழைத்துச் செல்லுங்கள். கலியுகம் பழைய யுகம் எனவும், சத்திய யுகம் புதிய யுகம் எனவும் அழைக்கப்படுகின்றன. தந்தையைத் தவிர வேறெவராலும் புதிய யுகத்தை உருவாக்க முடியாது. எங்கள் இனிய பாபா இப்பொழுது எங்களைத் துன்ப பூமியிலிருந்து, சந்தோஷ பூமிக்கு அழைத்துச் செல்கிறார். பாபா, உங்களைத் தவிர வேறெவராலும் எங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. பாபா மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார், இருப்பினும், அது மக்களின் புத்தியில் புகுவதில்லை. இந்நேரத்தில் நீங்கள் பாபாவின் மேன்மையான வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நாங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறோம். நீங்கள் இங்கே மேன்மையானவர்கள் ஆகினால், மேன்மையான உலகில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இது இராவணனின் சீரழிந்த உலகமாகும். உங்கள் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றுதல் மன்மத் எனப்படுகிறது. தந்தை கூறுகிறார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். அசுர கட்டளைகள் உங்களை மீண்டும் மீண்டும் நரகத்தினுள் தள்ளுகின்றன. கோபப்படுவதும் அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதே ஆகும். பாபா கூறுகிறார்: ஒருவரோடொருவர் கோபப்படாதீர்கள். ஒருவரோடொருவர் அன்பாகப் பழகுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குரிய ஆலோசனையைப் பெற வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் ஏன் பாவம் செய்கிறீர்கள்? நீங்கள் செய்பவை யாவும் புண்ணியமாக இருக்க வேண்டும். உங்கள் செலவுகளைக் குறையுங்கள். நீங்கள் யாத்திரைத் தலங்களுக்குத் தடுமாறித் திரிவதிலும், சந்நியாசிகளிடம் அலைந்து திரிவதிலும் பௌதீகச் சடங்குகள் செய்வதிலும் அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றீர்கள். பாபா உங்களை அவை அனைத்திலிருந்தும் விடுவிக்கின்றார். மக்கள் அதிகளவு ஆடம்பரத்துடன் திருமண வைபவங்களை நடாத்துகிறார்கள். முதலில், அவர்கள் கடன்படுகின்றார்கள், இரண்டாவதாக அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். தூய்மையற்றவர்களாக விரும்புபவர்கள் சென்று அவ்வாறு ஆகலாம், ஆனால் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தூய்மையாக விரும்புபவர்களை அவ்வாறு செய்வதிலிருந்து எவரும் ஏன் தடுக்க வேண்டும்? உங்கள் நண்பர்களும், உறவினர்களும் உங்களுடன் சண்டையிட்டால் அதை நீங்கள் சகித்துக்கொள்ள வேண்டும். மீராவும் அனைத்தையும் சகித்துக் கொண்டாள். உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, உங்களைத் தேவ, தேவியர் அந்தஸ்தைப் பெறச் செய்வதற்காக, எல்லையற்ற தந்தை வந்துள்ளார். இலக்ஷ்மியும் நாராயணனும் தேவி, தேவர் என அழைக்கப்படுகிறார்கள். கலியுக இறுதியில் அனைவரும் தூய்மையற்றவர்களாகவே உள்ளனர், எனவே அவர்களை மாற்றியவர் யார்? எவ்வாறு பாபா வந்து, இராம இராச்சியம் என்று அர்;த்தப்படுகின்ற, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். நாங்கள் இங்கே சூரிய, சந்திர வம்ச அந்தஸ்தைப் பெற வந்துள்ளோம். சூரிய வம்சத்திற்குச் செல்லத் தகுதியானவர்களாகவுள்ள குழந்தைகள் மிகவும் நன்றாகக் கற்பார்கள். தந்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறார்: முயற்சி செய்து, தாய் தந்தையைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவர்களின் வாரிசுகள் ஆகக்கூடியவாறு முயற்சி செய்யுங்கள். நீங்கள் மம்மாவையும், பாபாவையும் பற்றிப் பேசுவதால், எதிர்கால சிம்மாசனங்களில் அமரத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுங்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை விடவும் முன்னணியில் செல்லும் வகையில் மிக நன்றாகக் கற்றிடுங்கள். தங்கள் தந்தையர்களை விடவும் உயர்வானவர்கள் ஆகுகின்ற பல குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகிறேன். நான் அவ்வாறு ஆகுவதில்லை. தந்தை மிகவும் இனிமையானவர்! அவருடைய ஸ்ரீமத் மிகவும் பிரபல்யமானது. நீங்கள் மேன்மையான தேவர்களாக இருந்தீர்கள், பின்னர் 84 பிறவிகள் எடுப்பதால், இப்பொழுது தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள். இது வெற்றி, தோல்வி பற்றிய நாடகமாகும். மாயையால் தோற்கடிக்கப்படுபவர்கள் அனைத்தாலும் தோற்கடிக்கப்படுகிறார்கள், மாயையை வெற்றி கொள்பவர்கள் அனைத்தையும் வெற்றி கொள்கிறார்கள். நீங்கள் உங்களுடைய மனதை வெல்ல விரும்புகிறீர்கள் எனக் கூறுவது தவறாகும். உங்கள் மனதால் சிந்திப்பதை நிறுத்த முடியாது. உங்கள் மனம் எண்ணங்களை உருவாக்கும். நீங்கள் எந்த எண்ணமுமே இல்லாதிருக்க விரும்பக்கூடும், ஆனால் அது எவ்வளவு நேரத்திற்கு? நீங்கள் செயல்களைச் செய்தாக வேண்டும். இல்லறத்தில் இருப்பதோ அல்லது அச்செயல்களைச் செய்வதோ கூடாது என அம்மக்கள் நினைக்கிறார்கள். ஹத்தயோகி சந்நியாசிகளுக்கு அவர்களுக்குரிய சொந்தப் பாகங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு துறவறப் பாதைக்கான அவர்களின் சொந்த தர்மம் இருக்கிறது. வேறு எந்தச் சமயத்திலுமே அவர்கள் தமது வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து காடுகளுக்குச் செல்வதில்லை. எவரேனும் ஒருவர் தனது வீட்டையும், குடும்பத்தையும் விட்டுச் சென்றாராயின், அதற்குக் காரணம் அவர் சந்நியாசிகள் அவ்வாறு செய்வதைப் பார்த்திருப்பதே ஆகும். பாபா உங்களை உங்கள் குடும்பத்தின் மீது விருப்பமின்மையைக் கொண்டிருக்கத் தூண்டுவதில்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் வீட்டில் வாழலாம், ஆனால் தூய்மையாகுங்கள். தொடர்ந்தும் பழைய உலகை மறவுங்கள். நான் உங்களுக்காகவே புதிய உலகைப் படைக்கிறேன். அவர்களுக்காகவே தான் ஒரு புதிய உலகை உருவாக்குவதாக சந்நியாசிகளிடம் சங்கராச்சாரியார் கூறுவதில்லை. தற்காலிக சந்தோஷத்தைப் பெறச்செய்யும் அவர்களின் துறவறம் எல்லைக்குட்பட்டது. தூய்மையற்றவர்கள் சென்று, அவர்களுக்குத் தலைவணங்குகிறார்கள். அவர்கள் தூய்மைக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் எனப் பாருங்கள். இந்நாட்களில் அவர்கள் எத்தனை பல பெரிய தொடர்மாடிகளைக் கட்டுகிறார்கள் எனப் பாருங்கள்! மக்கள் தானம் செய்கின்றனர், ஆனால் அதில் எந்தப் புண்ணியமும் இல்லை. கடவுளின் பெயரில் தாங்கள் செய்பவை அனைத்தும் புண்ணியமே என்று அவர்கள் எண்;ணுகிறார்கள். தந்தை கேட்கின்றார்: எனது பெயரிலான எப்பணிக்கு அந்தத் தானம் பயன்படுத்தப்படுகின்றது? பாவம் செய்யாதவர்களுக்கே தானம் கொடுக்கப்பட வேண்டும். உங்கள் தானத்தின் மூலம் அவர்;கள் பாவம் செய்தால், அது உங்களைப் பாதிக்கும், எனெனில் நீங்களே அந்தப் பணத்தைக் கொடுத்தீர்கள். தூய்மையற்றவர்களுக்குக் கொடுப்பதால் நீங்கள் முற்றிலும் ஏழைகளாகி விட்டீர்கள். பணம் அனைத்தும் வீணாக்கப்பட்டு விட்டது. ஒருவேளை நீங்கள் தற்காலிகமான சந்தோஷத்தைப் பெறக்கூடும், ஆனால் அதுவும் நாடகத்தில் உள்ளது. தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், இப்பொழுது நீங்கள் தூய்மையாகுகிறீர்கள். அங்கே உங்களிடம் பெருமளவு பணம் இருக்கும். அங்கே எவருமே தூய்மையற்றவர்களாக இருக்க மாட்டார்கள். இவ்விடயங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நீங்கள் கடவுளின் குழந்தைகள். உங்களில் பெருமளவு இராஜரீகம் இருக்க வேண்டும். தங்கள் குருவை அவமதிப்பவர்களால் தங்களுடைய இலக்கை அடைய முடியாது எனக் கூறப்படுகிறது. அங்கே தந்தை, ஆசிரியர், குரு ஆகிய மூவரும் வெவ்வேறானவர்கள். இங்கோ தந்தை, ஆசிரியர், குரு ஆகிய மூவரும் ஒருவரே. நீங்கள் தவறான செயல்கள் எதையேனும் செய்தால், மூவரையுமே அவமதிக்கிறீர்கள். உண்மையான தந்தையினதும், உண்மையான ஆசிரியரினதும்;, உண்மையான குருவினதும் (சற்குரு) வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால் மாத்திரமே, நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். உங்கள் சரீரம் துறக்கப்பட வேண்டும், எனவே அதை ஏன் இறை, ஆன்மீக சேவைக்குப் பயன்படுத்தி, தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறக்கூடாது? தந்தை கூறுகிறார்: நான் அதை உங்களிடமிருந்து எடுத்தால், அதை வைத்து நான் என்ன செய்வேன்? நான் உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தை வழங்குகின்றேன். நான் அங்கிருக்கும் மாளிகைகளிலும் வாழ்வதில்லை, இங்கிருக்கும் மாளிகைகளிலும் வாழ்வதில்லை. அவர்கள் பாடுகிறார்கள்: ஓ மகாதேவரே, எங்கள் புத்தியை நிரப்புங்கள்! எவ்வாறாயினும் எப்பொழுது, எவ்வாறு அவர் அனைவரினதும் புத்திகளையும் நிரப்புகிறார் என்பது எவருக்குமே தெரியாது. அவர் உங்கள் புத்திகளை நிரப்பியுள்ளார், எனவே நிச்சயமாக அவர் உயிருள்ள வடிவத்திலே இருந்திருக்க வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கு மிகவும் சந்தோஷமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுகிறீர்கள். அத்தகைய தந்தையின் வழிகாட்டல்களை ஒவ்வோர் அடியிலும் பின்பற்றுங்கள். இலக்கு மிக உயர்ந்தது. ஒருவர் தன்னால் அவற்றைப் பின்பற்ற முடியாதுள்ளது எனக் கூறினால், பாபா கூறுவார்: அப்படியாயின், நீங்கள் ஏன் பாபா எனக் கூறுகிறீர்கள்? ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், பெருமளவு தண்டனையைப் பெறுவதோடு, அந்தஸ்தும் அழிக்கப்படும். நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அதில் கூறப்படுகிறது: சந்தோஷமும், அமைதியும் நிறைந்த உலகிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். தந்தையால் மாத்திரமே அதை உங்களுக்குக் கொடுக்க முடியும். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றாது விட்டால், உங்களுக்கே ஓர் இழப்பை ஏற்படுத்துகிறீர்கள். இங்கே செலவைப் பற்றிய கேள்விக்கு இடமில்லை. குருவிற்கு தேங்காய், இனிப்புவகை போன்றவற்றைக் கொண்டுவருமாறோ அல்லது பாடசாலைக் கட்டணம் போன்றவற்றைச் செலுத்துமாறோ உங்களுக்குக் கூறப்படுவதில்லை. அவ்வாறு எதுவுமே இல்லை. நீங்கள் உங்களுடன் பணத்தை வைத்திருக்கலாம், ஆனால் இந்த ஞானத்தைக் கற்றிடுங்கள். உங்கள் எதிர்காலத்;தைச் சீர்திருத்துவதில் எந்த இழப்பும் இல்லை. இங்கே தலைவணங்குவது பற்றிக்கூட உங்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. அரைக் கல்பமாகப் பணம் கொடுத்தும், தலைவணங்கியும் வந்ததால், நீங்கள் ஏழைகளாகி விட்டீர்கள். இப்பொழுது தந்தை உங்களைச் சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கிருந்து அவர் உங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அனுப்புவார். இப்பொழுது புதிய யுகமும், புதிய உலகமும் வரப்போகின்றன. சத்திய யுகமே புதிய யுகம் எனப்படுகின்றது. பின்னர் கலைகள் தொடர்ந்தும் குறைவடையும். இப்பொழுது தந்தை உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். நாரதரின் உதாரணமும் உள்ளது. உங்களுக்குள் தீய ஆவிகள் ஏதாவது இருந்தால், உங்களால் இலக்ஷ்மியைத் திருமணம் செய்ய முடியாது. குழந்தைகளே, நீங்கள் உங்கள் இல்லறத்தைப் பராமரிப்பதுடன், சேவையும் செய்யவேண்டும். அவர்கள் அதிகளவில் துன்புறுத்தப் பட்டதால், ஆரம்பத்தில் ஓடிவந்தார்கள். பல அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டனர், ஆனால் அவர்கள் அந்தத் துன்புறுத்தலைப் பொருட்படுத்தவில்லை. பத்தியிலே (சூளை) சிலர் மிகவும் உறுதியானவர்கள் ஆகினார்கள், பலவீனமானவர்கள் சிலர் சென்றுவிட்டனர். நாடகத்தின் நியதி அவ்வாறு உருவாக்கப் பட்டுள்ளது. என்னவெல்லாம் இடம்பெற்றனவோ, அவை இடம்பெறவே வேண்டும், அவை மீண்டும் இடம்பெறும். அவர்கள் உங்களை இன்னமும் அவதூறு செய்வார்கள். பரமாத்மா பரமதந்தை சிவனே அதிகளவில் அவதூறு செய்யப்பட்டுள்ளார். கடவுள் சர்வவியாபகர் என்றும், அவர் பூனைகள், நாய்கள், மீன், முதலைகள் போன்றவற்றிலும் இருக்கிறார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்;: என்னை இகழ்பவர்களையும் நான் ஈடேற்றுகிறேன். நான் உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகிறேன். ஸ்ரீ கிருஷ்ணர் சுவர்க்கத்தின் இளவரசனாக இருந்தார். அவரை ஒரு பாம்பு தீண்டியதால் அவர் நீல நிறமாகியதாக அவர்கள் கூறுகிறார்கள். அங்கே அவரை எவ்வாறு ஒரு பாம்பு தீண்ட முடியும்? கிருஷ்ண பூமிக்குக் கம்சன் போன்றோர் எவ்வாறு வந்தார்கள்? அவை யாவும் கட்டுக்கதைகளே. அது பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயமாகும், அவற்றின் மூலம் நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்தீர்கள். பாபா உங்களை அழகிய மலர்கள் ஆக்குகிறார். சிலர் மிகப் பெரிய முட்கள் ஆவர். அவர்கள் தந்தையான கடவுளைப் பற்றிப் பேசுகிறார்களாயினும், அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அவரே தந்தை என்பதை அவர்கள் அறிவார்கள், ஆனால், அவரிடமிருந்து தாங்கள் என்ன ஆஸ்தியைப் பெறுவார்கள் என்பதை அவர்கள் அறியார்கள். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைத் தர வந்துள்ளேன். ஒருவர் உங்களுடைய லௌகீகத் தந்தையும், இரண்டாமவர் மக்களின் தந்தையான அலௌகீகத் தந்தை பிரம்மாவும், மூன்றாமவர் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையான சிவனும் ஆவார்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று தந்தையர் உள்ளனர். நீங்கள் பிரம்மா மூலம் உங்கள் பாட்டனாரின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். எனவே நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். அப்பொழுதே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் வெகுமதியைப் பெறுவீர்கள். அங்கே நீங்கள் மக்களின் தந்தையான பிரம்மாவையோ, சிவனையோ அறிய மாட்டீர்கள். அங்கே நீங்கள் உங்களின் லௌகீகத் தந்தையை மாத்திரமே அறிவீர்கள். சத்திய யுகத்தில் உங்களுக்கு ஒரு தந்தை மாத்திரமே இருக்கின்றார். பக்தி மார்க்கத்தில், உங்களுக்கு லௌகீகத் தந்தையும், அப்பாலுள்ள ஒரேயொருவரும் என இரு தந்தையர் உள்ளனர். இப்பொழுது சங்கம யுகத்தில் உங்களுக்கு மூன்று தந்தையர் உள்ளனர். வேறெவராலும் இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு கணம் உங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், மறுகணம் நீங்கள் சந்தேகப்படுவதாகவும் இருக்கக்கூடாது. அது, ஒரு கணத்தில் பிறந்து, மறுகணமே மரணிப்பதைப் போன்றதாகும். நீங்கள் மரணிக்கும்பொழுது, ஆஸ்தி முடிவடைந்து விடுகிறது. அத்தகைய தந்தையை ஒருபொழுதும் நீங்கிச் செல்லாதீர்கள்! நீங்கள் எந்தளவிற்குத் தந்தையைச் சதா நினைவுசெய்து, சேவை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். தந்தையும் விளங்கப்படுத்துகிறார்: எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள், நீங்கள் பாதுகாக்கப் படுவீர்கள். இல்லாவிட்டால் பெருமளவு தண்டனையைப் பெற வேண்டும். நீங்கள் செய்துள்ள பாவங்கள் அனைத்தினதும், நீங்கள் பின்பற்றாத ஸ்ரீமத்தினதும் காட்சிகள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களை ஒரு சூட்சும சரீரத்தை எடுக்கச் செய்தே தண்டனை வழங்கப்படும். நீங்கள் கருப்பைச் சிறையினுள் இருக்கும்பொழுதும் உங்களுக்குக் காட்சிகள் கொடுக்கப்படுகின்றன: இவையே நீங்கள் செய்துள்ள பாவங்கள், எனவே இதுவே அவற்றிற்கான தண்டனை. விருட்சம் தொடர்ந்தும் வளரும். இந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்கள், மற்றைய சமயங்களுக்கு மாறிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் வெளிப்படுவார்கள். ஏனைய அனைவரும் தத்தமது பிரிவுகளுக்குச் செல்வார்கள். வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. விருட்சம் எவ்வாறு வளர்கின்றது எனப் பாருங்கள்! சிறிய கிளைகள் தொடர்ந்தும் தோன்றும். இனிய பாபா எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே அவர் விடுதலையளிப்பவர் என அழைக்கப்படுகிறார்;. அவரே துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர். அவர் எங்கள் வழிகாட்டியாகி, எங்களைச் சந்தோஷ பூமிக்கு அழைத்துச் செல்கிறார். அவர் கூறுகிறார்: 5000 வருடங்களுக்கு முன்னரும் நான் உங்களைச் சந்தோஷ உறவுமுறைக்குள் அனுப்பி வைத்தேன். பின்னர் நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள். இப்பொழுது தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். ஸ்ரீ கிருஷ்ணரை அனைவரும் நேசிக்கிறார்கள். அவர்கள் கிருஷ்ணரை நேசிக்கின்ற அளவிற்கு இலக்ஷ்மி, நாராயணனை நேசிப்பதில்லை. இராதையும், கிருஷ்ணருமே இலக்ஷ்மி நாராயணன் ஆகுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியாது. எவருக்கும் இது தெரியாது. இராதையும் கிருஷ்ணரும் வெவ்வேறு இராச்சியங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் திருமணத்தின் பின்னரே அவர்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் கிருஷ்ணரைத் துவாபர யுகத்தில் சித்தரித்துள்ளனர். கிருஷ்ணரைத் தூய்மையாக்குபவர் என எவரும் கூற முடியாது. ஒழுங்காகக் கற்காமல் எவராலும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் நடத்தை மிகவும் இராஜரீகமாக இருக்கட்டும். மிகக் குறைவாகவும், மிக இனிமையாகவும் பேசுங்கள். தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு, ஒவ்வோர் அடியிலும் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.

2. பெருமளவு கவனத்துடன் மிக நன்றாகக் கற்றிடுங்கள். தாயையும், தந்தையையும் பின்பற்றி, சிம்மாசனத்திலே அமர்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுங்கள்; ஒரு வாரிசு ஆகுங்கள். கோபத்தின் ஆதிக்கத்திற்குள் வருவதனால், துன்பம் கொடுக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சாதாரண செயல்களைச் செய்யும்பொழுதும், உங்களுடைய மேன்மையான உணர்வையும், ஸ்திதியையும் வெளிப்படுத்துகின்ற, அதிமேன்மையான சேவகராக இருப்பீர்களாக.

ஓர் உண்மையான வைரத்தைத் தூசு எந்தளவிற்கு மூடினாலும், அது நிச்சயமாகத் தனது பிரகாசத்தை வெளிப்படுத்தும். அதேபோன்று, உங்கள் வாழ்வும் ஒரு வைரம் போன்றது: சூழல் எவ்வாறிருந்தாலும், ஒன்றுகூடல் எவ்வாறிருந்தாலும், உங்கள் பிரகாசம், அதாவது, உங்கள் பிரகாசமும், போதையும் அனைவராலும் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சாதாரண வேலையைச் செய்யலாம், ஆனால் உங்களைப் பார்ப்பவர்கள் நீங்கள் ஒரு சாதாரண நபரல்ல, ஒரு சேவகராக இருந்தாலும், நீங்கள் அதிமேன்மையானவர் என்பதை உணரும் வகையில் உங்கள் உணர்வும், உங்கள் ஸ்திதியும் மிகவும் மேன்மையானவையாக இருக்கட்டும்,

சுலோகம்:
தனது எண்ணங்களில் கூட எவர் மீதும் சிறிதளவு பற்றையும் கொண்டிராதவரே ஓர் உண்மையான இராஜரிஷி ஆவார்.