03.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, இது இடுகாட்டையும் (கபரிஸ்தான்), தேவதைகளின் உலகையும் (பரிஸ்தான்) பற்றிய ஒரு நாடகமாகும். இப்பொழுது இது இடுகாடாக இருக்கிறது, பின்னர் அது தேவதைகளின் உலகமாக ஆகுகிறது. உங்களுடைய இதயம் இந்த இடுகாட்டின் மீது பற்றை வைத்திருக்கக்கூடாது.

கேள்வி:
எந்தவொரு விடயத்தைத் தெரிந்துகொள்வதால், மனிதர்;களால் தம்மிடமிருக்கும் சந்தேகங்களை அகற்ற முடியும்?

பதில்:
தந்தை யார் என்பதையும், அவர் எவ்வாறு வருகிறார் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வதால் அவர்களின் சந்தேகங்கள் அனைத்தும் அகற்றப்படும். தந்தையை அறிந்து கொள்ளும் வரைக்கும் அவர்களின் சந்தேகங்கள் முடிவடையாது. புத்தியில் நம்பிக்கை உடையவர்கள் ஆகுவதால் அவர்கள் வெற்றி மாலையில் கோர்க்கப்படுவார்கள். எவ்வாறாயினும், ஒரு விநாடியிலேயே அனைத்து விடயங்களிலும் அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.

பாடல்:
ஆகாய சிம்மாசனத்தை விட்டு கீழிறங்கி இப்பூமிக்கு வாருங்கள்

ஓம் சாந்தி.
பாபா இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். இவரே எல்லையற்ற ஆன்மீகத் தந்தை ஆவார். ஆத்மாக்கள் அனைவருமே நிச்சயமாக தங்கள் வடிவத்தை மாற்றுகிறார்கள். அசரீரி உருவிலிருந்து சரீரியாகித் தங்கள் பாகத்தை நடிப்பதற்காக அவர்கள் கர்மஷேத்திரத்திற்கு வருகிறார்கள். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் எங்கள் வடிவத்தை மாற்றுவதைப் போல உங்கள் வடிவத்தையும் மாற்றுங்கள். ஞானத்தைக் கொடுப்பதற்காக அவர் நிச்சயமாக ஒரு பௌதீக வடிவத்தை ஏற்பார். அவர் நிச்சயமாக ஒரு மனித வடிவத்தையே எடுக்கிறார். நீங்களும் அசரீரியானவர்கள் என்பதும், பின்னர் சரீரதாரிகள் ஆகுகின்றீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது நிச்சயமாக இவ்வாறானதே. அது அசரீரி உலகமாகும். உங்களுடைய 84 பிறவிகளையும் பற்றி உங்களுக்குத் தெரியாது என்பதை பாபா இங்கே அமர்ந்திருந்து பேசுகின்றார். நான் இவரினுள் பிரவேசித்து அவருக்கு விளங்கப்படுத்துகிறேன். அவருமே முன்பு தெரிந்திருக்கவில்லை. கிருஷ்ணர் சத்தியயுக இளவரசர் ஆவார். ஆனால் இவரோ (சிவபாபா) தூய்மையற்ற உலகினுள் ஒரு தூய்மையற்ற சரீரத்தினுள் வரவேண்டியுள்ளது. கிருஷ்ணர் அழகானவர். எனவே அவர் எவ்வாறு அழகற்றவர் ஆனார்? எவருக்குமே இது தெரியாது. அவரை ஒரு பாம்பு தீண்டியதாக அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அது ஐந்து விகாரங்களுக்கான ஒரு விடயமாகும். காமச்சிதையில் அமர்வதால் நீங்கள் அழகற்றவர் ஆகுகிறீர்கள். கிருஷ்ணர், சியாம்சுந்தர் (அழகற்றவரும், அழகானவரும்) என அழைக்கப்படுகின்றார். எனக்கு அழகற்றவராகுவதற்கோ, அழகானவராகுவதற்கோ ஒரு சரீரம் இல்லை. நான் எப்பொழுதுமே தூய்மையானவன். நான் ஒவ்வொரு சக்கரத்தின் சங்கமத்திலும், கலியுக முடிவிலும், சத்தியயுக ஆரம்பத்திலும் வருகிறேன். சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்காக நான் வரவேண்டியுள்ளது. சத்தியயுகமே சந்தோஷ உலகமாகும். கலியுகம் துன்ப உலகமாகும். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவருமே தூய்மையற்றவர்கள். சக்கரவர்த்தினியும், சக்கரவர்த்தியுமான இலக்ஷ்மி, நாராயணனது அரசாங்கம் ஊழல் நிறைந்தது என நீங்கள் கூறமாட்டீர்கள். இங்கே அனைவருமே தூய்மையற்றவர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. அங்கே ஒரேயொரு தர்மமே இருந்தது. அனைவரும் முழுமையாகத் தூய்மையானவர்களும், மேன்மையானவர்களுமாக இருந்தனர். சீரழிந்தவர்கள் மேன்மையானவர்களை வழிபடுகிறார்கள். சந்நியாசிகள் தூய்மையாகும்பொழுது, தூய்மையற்றவர்கள் அவர்களை தலைவணங்குகிறார்கள். இல்லறத்தவர்கள் சந்நியாசிகளைப் பின்பற்றுவதில்லை. ஆனால், அவர்கள் கூறுகிறார்கள்: நான் இன்ன சந்நியாசியைப் பின்பற்றுபவர். ஆயினும், அவர்கள் அவரை உண்மையாகவே பின்பற்றினாலே, அவர்களைப் பின்பற்றுபவர்கள் எனக் கூறலாம். நீங்களும் ஒரு சந்நியாசி ஆகும்பொழுது, பின்பற்றுபவர் எனப்படுவீர்கள். இல்லறத்தவர்கள் அவர்களை பின்பற்றுபவர்கள் ஆகுகிறார்கள். ஆனால், அவர்கள் தூய்மையாக இருப்பதும்; இல்லை, சந்நியாசிகள் இல்லறத்தவர்களுக்கு இதனை விளங்கப்படுத்துவதுமில்லை. தாங்கள் உண்மையில் சந்நியாசிகளைப் பின்பற்றுதில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. இங்கே நீங்கள் தந்தையையும், தாயையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். கூறப்பட்டுள்ளது: தாயையும், தந்தையையும் பின்பற்றுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை, சரீரதாரிகளிடமிருந்து துண்டித்துவிட்டு, தந்தையாகிய என்னுடன் தொடர்புபடுத்துவீர்களேயானால் நீங்கள் முதலில் என்னிடம் வந்து பின்னர் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் சகல துறைகளிலும் வல்லவர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்கும், இறுதியிலிருந்து ஆரம்பம் வரைக்கும் உள்ள சகலகலா வல்லவன் பாகத்தை நீங்கள் நடிக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். மற்றைய சமயத்தவர்கள் ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்குமான பாகத்தை நடிப்பதில்லை. ஒரேயொரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மமே உள்ளது. ஆரம்பத்தில் சூரிய வம்சம் இருந்தது. சகல பாகங்களையும் நடிப்பதுடன் 84 பிறவிகளுக்கான சக்கரத்தையும் சுற்றி வருபவர்கள் நீங்களே என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பின்னர் வருபவர்களுக்கு சகல பாகங்களையும் நடிக்கும் பாகம் இருக்க முடியாது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. தந்தையைத் தவிர வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. முதலில் தேவதர்மமே இருக்கிறது. அரைக்கல்பத்திற்கு சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் உள்ளன. இச்சங்கமயுகமானது மிகவும் குறுகியது. இது சங்கமம் எனவும், 'கும்ப்' (சந்திப்பு) எனவும் அழைக்கப்படுகிறது. அனைவருமே அவரை நினைவு செய்கிறார்கள்: ஓ, பரமாத்மாவாகிய பரமதந்தையே, வந்து, தூய்மையற்றவர்களாகிய எங்களைத் தூய்மையாக்குங்கள். தந்தையைச் சந்திப்பதற்காக மக்கள் பெருமளவு அலைகிறார்கள். அவர்கள் யாகங்களை உருவாக்கி, தபஸ்யா செய்து, தான தர்மங்கள் முதலியவற்றைச் செய்கிறார்கள். ஆனால், அதில் எந்த நன்மையுமே இல்லை. நீங்கள் இப்பொழுது அலைந்து திரிவதிலிருந்து விடுபட்டுள்ளீர்கள். அவை பக்தி மார்க்கத்திற்குரிய சம்பிரதாயங்கள் ஆகும். இவை ஞானப்பாதைக்குரிய சம்பிரதாயங்கள் ஆகும். பக்தி மார்க்கம் அரைக்கல்பத்திற்குத் தொடர்கிறது. இது ஞானப்பாதையாகும். இந்நேரத்தில் நீங்கள் பழைய உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டுமென்று கூறப்படுகிறது. ஆதலால் உங்கள் விருப்பமின்மை எல்லையற்றது. ஏனெனில், முழு உலகுமே இடுகாடாகப் போகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது இது இடுகாடாக உள்ளது. பின்னர் அது தேவதைகளின் உலகம் ஆகும். இது கப்ரிஸ்தான், பரிஸ்தான் பற்றிய ஒரு நாடகமாகும். அனைவராலும் நினைவு கூரப்படுகிறது: பாபா தேவதைகளின் உலகை உருவாக்குகிறார். எவரும் இராவணனை நினைவு செய்வதில்லை. முதலாவது பிரதான விடயத்தைப் பற்றிப் புரிந்து கொள்வதால் அவர்களின் சந்தேகங்கள் அனைத்துமே முடிவடைகின்றன. அவர்கள் தந்தையை இனங்கண்டுகொள்ளும் வரைக்கும் அவர்கள் புத்தியில் சந்தேகங்களைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். புத்தியில் சந்தேகம் உள்ளவர்களே விநாசத்திற்கு வழிகாட்டப்படுகின்றார்கள். உண்மையாகவே பாபா ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். அவர் மாத்திரமே ஓர் எல்லையற்ற ஆஸ்தியை கொடுக்கின்றார் நம்பிக்கை மூலமே நீங்கள் வெற்றி மாலையில் கோர்க்கப்பட முடியும். ஒரு விநாடியில், ஒவ்வொரு வார்த்தையிலும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். பாபா என நீங்கள் கூறுவதனால் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அசரீரியானவரே தந்தை என அழைக்கப்படுகிறார். உண்மையில், காந்திஜியும் 'பாபுஜீ" (தந்தை) என அழைக்கப்பட்டார். எவ்வாறாயினும், இங்கே உங்களுக்கு உலக பாபுஜீ தேவைப்படுகிறார். அவரே உலகத் தந்தையான கடவுள் ஆவார். உலகத் தந்தையான கடவுள் மிகவும் மகத்தானவராக இருக்க வேண்டும். அவரிடமிருந்தே நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். விஷ்ணுவின் இராச்சியம் பிரம்மா மூலம் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். பின்னர் சந்திர வம்சத்தவர்கள், அதாவது சத்திரிய வம்சத்தவர்களாகி, பின்னர் சூத்திர வம்சத்தவர்கள் ஆகியுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்களே இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். பாபா கூறுகிறார்;: எனது இந்த ஞான யாகத்தில் பல தடைகள் உருவாக்கப்படும். இதுவே உருத்திரனின் ஞானயாகம் ஆகும். இந்த ஞானத்திலிருந்தே விநாசத்திற்கான நெருப்பு ஏற்றப்படுகிறது. இப் பழைய உலகம் முழுவதுமே அதில் அழிக்கப்பட்டு, ஒரேயொரு தேவதர்மமே உருவாக்கப்படும். பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி, உங்களுக்கு உண்மையை கூறுகின்றார். அவர் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகுகின்ற சத்திய நாராயணனின் கதையை உங்களுக்குக் கூறுகிறார். நீங்கள் இப்பொழுது இக்கதையைச் செவிமடுக்கிறீர்கள். அது ஆரம்பத்திலிருந்து தொடரவில்லை. நீங்கள் 84 பிறவிகளையும் முடித்துவிட்டீர்கள் என்றும், மீண்டும் ஒருமுறை புதிய உலகில் உங்கள் இராச்சியம் இருக்கும் எனவும் பாபா இப்பொழுது உங்களுக்குக் கூறுகிறார். இதுவே இராஜயோக ஞானம் ஆகும். பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே பாரதத்தின் புராதன யோகம் என அழைக்கப்படுகின்ற இலகு இராஜயோக ஞானத்தைக் கொண்டுள்ளார். கலியுகம் நிச்சயமாக சத்தியயுகமாக மாற்றப்பட்டது. விநாசமும் ஆரம்பித்தது, அது ஏவுகணைகளுக்கான ஒரு விடயமாகும். சத்திய, திரேதா யுகங்களில் யுத்தங்கள் இடம்பெறவில்லை, பின்னரே அது ஆரம்பித்தது. இதுவே ஏவுகணைகளுடன் இடம்பெறுகின்ற இறுதி யுத்தமாகும். முன்னர் வாள்களையே பயன்படுத்தினார்கள். பின்னர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினார்கள். பின்னர் பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது குண்டுகள் உள்ளன. வேறு எவ்வாறு முழு உலகுமே அழிக்கப்படும்? அவற்றுடன் இயற்கை அனர்த்தங்களும் உள்ளன. மாரி மழை, பஞ்சம் முதலானவையும் இயற்கை அனர்த்தங்களே. பூமி அதிர்ச்சியும் இயற்கை அனர்த்தமே. அவற்றையிட்டு எவராலும் எதுவுமே செய்ய முடியாது. சிலர் காப்புறுதி செய்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கு அதனைச் செலுத்துவதற்கு யார் இருப்பார்கள்? அனைவருமே மரணித்துவிடுவார்கள். எவருமே எதனையும் பெறப்போவதில்லை. நீங்கள் இப்பொழுது தந்தையுடன் உங்களைக் காப்புறுதி செய்துகொள்ளுங்கள். அவர்கள் குறுகிய காலத்திற்கே அனைத்தையும் காப்புறுதி செய்கிறார்கள். ஆனால், அதன் பலனை அரைக் கல்பத்திற்குப் பெறுகிறார்கள்;;. நீங்கள் இங்கே நேரடியாகக் காப்புறுதி செய்கிறீர்கள். அனைத்தையும் காப்புறுதி செய்பவர்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவார்கள். பாபா தன் சொந்த உதாரணத்தைக் காட்டுகிறார். அவர் அனைத்தையுமே கொடுத்தார். அவர் அனைத்தையுமே தந்தையுடன் காப்புறுதி செய்தார். அதன் மூலம் முழு இராச்சியத்தையும் பெற்றார். எவ்வாறாயினும் எஞ்சிய உலகம் அழிக்கப்படும். இது மரண பூமியாகும். சிலரது செல்வம் சேற்றில் புதைக்கப்படும். ஏனையோரின் சொத்;துக்களை அரசாங்கம் எடுக்கும். எங்காவது தீப்பற்றினால், அல்லது அனர்த்தங்கள் நிகழ்ந்தால், கள்வர் சென்று பலவற்றைக் களவெடுப்பார்கள். இப்பொழுது இது இறுதிக்காலம் ஆகும். இதனாலேயே நீங்கள் தந்தையை நினைவு செய்வதுடன் உதவியையும் கொடுக்க வேண்டும். இந்நேரத்தில் அனைவருமே தூய்மையற்றவர்கள். எனவே, எவராலுமே ஒரு தூய உலகை ஸ்தாபிக்க முடியாது. இது தந்தையின் பணியாகும். அவர்கள் தந்தையைக் கூவியழைக்கிறார்கள்;: அசரீரி உலகிலிருந்து வாருங்கள்! வந்து ஒரு உருவத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். பாபா கூறுகிறார்: நான் சரீர உலகிற்குள் வந்து ஒரு உருவத்தை எடுக்கின்றேன். ஆனால், நான் எப்பொழுதுமே இவரினுள் இருப்பதில்லை: நாள் முழுவதும் அதனை ஓட்ட முடியாது! அவர்கள் எருதை ஓட்டுவதாகக் காட்டியுள்ளார்கள். அத்துடன் ஒரு அதிர்ஷ்டமான மனித இரதத்தையும் காட்டியுள்ளனர். இப்பொழுது இது சரியா, அல்லது அது சரியா? அவர்கள் ஒரு மாட்டுத் தொழுவத்தையும், பசுவின் வாயையும் காட்டியுள்ளனர். அவர் எருதை ஓட்டியதாகவும், பசுவின் வாய் மூலம் ஞானத்தைக் கொடுத்ததாகவும் காட்டியுள்ளனர். இதுவே ஞான அமிர்த வெளித் தோன்றல் ஆகும். இதற்கு ஓர் அர்த்தம் உள்ளது. 'கௌமுக்" ஆலயமும் உள்ளது. பலர் இவ்வாலயத்தைப் பார்வையிடச் செல்கிறார்கள். பசுவின் வாயிலிருந்து அமிர்தம் வழிகிறது என்று நம்புவதால், அதனைப் பருகச் செல்ல வேண்டும் என்கிறார்கள். அதனை அடைவதற்கு 700 படிகள் உள்ளன. உண்மையில் இவரே மகத்தான 'கௌமுக்". அங்கே எதுவுமே இல்லாத பொழுதிலும் அமர்நாத்திற்குச் செல்வதற்கு அவர்கள் பெரும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அனைவரும்; ஏமாற்றுக்காரர்கள். சங்கர் பார்வதிக்குக் கதை கூறியதாக அவர்கள் காட்டியுள்ளனர். அவர் அமர்ந்து கதை கூறுவதற்கு பார்வதி அவ்வளவு சீரழிந்தவரா? மக்கள் ஆலயங்களைக் கட்டுவதற்குப் பெருமளவு பணத்தைச் செலவு செய்கின்றனர். பாபா கூறுகின்றார்: நீங்கள் உங்களிடமிருந்த பெருமளவு பணத்தைச் செலவழித்து அனைத்தையும் இழந்தும் விட்டீர்கள். நீங்கள் முன்னொரு காலத்தில் கடனற்றவர்களாக இருந்தீர்கள். இப்;பொழுது கடனாளிகள் ஆகியுள்ளீர்கள். எவ்வாறாயினும், உங்களை மீண்டும் கடனற்றவர்கள் ஆக்குவதற்காகவே நான் வருகின்றேன். பாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காகவே நீங்கள் வந்துள்ளீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிகிறது. பாபா இப்பொழுது இந்த ஆஸ்தியை உங்களுக்குத் தருகிறார். பாரதமே பரமாத்மாவாகிய பரமதந்தையின் பிறப்பிடமாகும். எனவே, இதுவே மிகச் சிறந்த யாத்திரைத் ஸ்தலமாகும். பாபா வந்து தூய்மையற்றவர்கள் அனைவரையும் தூய்மையாக்குகிறார். பாபாவின் பெயர் கீதையில் இருந்திருந்தால் அனைவருமே இங்கே வந்து, மலர்கள் வைத்துப் பூஜிப்பார்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள முடியாது. பாரதமே மிகச் சிறந்த யாத்திரைத் ஸ்தலமாகும். ஆனால் இது எவருக்குமே தெரியாது. அல்லாவிடில், தந்தையின் புகழ் எல்லையற்றது போலவே பாரதத்தின் புகழும் உள்ளது. பாரதமே சுவர்க்கமும், நரகமும் ஆகின்றது. சுவர்க்கத்தின் புகழ் எல்லையற்றது போலவே நரகத்தின் இகழ்வும் எல்லையற்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சத்திய உலகிற்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தந்தையிடமிருந்து உங்களது எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காகவே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். பாபா கூறுகின்றார்: மன்;மனாபவ. உங்கள் புத்தியின் யோகத்தை ஏனையோரிடமிருந்து அகற்றிவிட்டு சதா என்;னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நினைவின் மூலமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். இந்த ஞானத்தின் மூலம் உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அனைவரும் ஜீவன்முக்தி எனும் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். இராஜயோகத்தைக் கற்றவர்களே சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறார்கள். அனைவரும் ஜீவன் முக்தியைப் பெறுவார்கள். அவர் அனைவரையும் மீண்டும் அழைத்துச் செல்வார். பாபா கூறுகிறார்: நானே மகாகாலன் (மரணத்திற்கெல்லாம் மரணம்). மகாகாலனுக்கு ஆலயம் ஒன்றும் உள்ளது. பாபா விளங்கப்படுத்துகிறார்: இறுதியில் வெளிப்படுத்தப்படுதல் இடம்பெறும்பொழுது எல்லையற்ற தந்தையே உண்மையில் உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எவரேனும் ஒரு கதையைக் (சமய ஒன்றுகூடலில்) கூறி 'கீதையின் கடவுள் சிவனேயன்றி, கிருஷ்ணர் அல்ல" எனக் கூறும்பொழுது, அவர் பிரம்மகுமாரிகளினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளார் என அனைவரும் கூறுவார்கள். அவர்களுக்கான காலம் இன்னும் வரவில்லை என்பதையே இது குறிக்கின்றது. அவர்கள் பின்னர் புரிந்து கொள்வார்கள். அவர்கள் அனைத்தையும் இப்பொழுதே நம்பினார்களேயானால் அவர்களது முழு வியாபாரமும் முடிவடைந்து விடும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஏனைய அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டு, தாயையும் தந்;தையையும் முழுமையாகப் பின்பற்றுங்கள். உங்கள் புத்தியானது இப்பழைய உலகின்;;மீது முழுமையான விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அதனை மறந்துவிட வேண்டும்;;.

2. இப்பொழுது இது இறுதிக்காலமாகும், அனைத்துமே அழிக்கப்படவுள்ளது. ஆதலால் அதற்கு முன்னர் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் காப்புறுதி செய்துவிட்டு, எதிர்கால இராச்சியத்திற்கான உங்கள் முழு உரிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
மேன்மையான பாக்கியத்தை உடையவர்களாகி, சதா பிராமண வாழ்வின் சந்தோஷ போசாக்கை உண்டு, பிறருக்கும் பரிமாறுவீர்களாக.

நாங்கள் குழந்தைகளும் உலக அதிபதியின் மாஸ்டர்களும் (அதிபதிகள்) ஆவோம். சதா இந்த இறை போதையையும் சந்தோஷத்தையும் கொண்டிருங்கள். ஆஹா எனது மேன்மையான பாக்கியமே! இது எனது விதியாகும். இந்த சந்தோஷ ஊஞ்சலில் சதா ஆடிக் கொண்டிருங்கள். நான் சதா பாக்கியசாலி என்பதால், நான் சதா சந்தோஷ போசாக்கை உண்டு பிறருக்கும் பரிமாறுகின்றேன். நீங்கள் பிறருக்கு சந்தோஷம் என்ற மகாதானத்தை வழங்கி, அவர்களையும் பாக்கியசாலிகள் ஆக்குகிறீர்கள். சந்தோஷம் உங்கள் வாழ்க்கையாகும். சந்தோஷமாக இருப்பது வாழ்வதற்காகும். இதுவே பிராமண வாழ்வின் மேன்மையான ஆசீர்வாதமாகும்.

சுலோகம்:
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சகித்தால், நீங்கள் தொடர்ந்தும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மாதேஸ்வரிஜியின் மிகப்பெறுமதியான மேன்மையான வாசகங்கள்

1. இந்த இறை ஞானம் எங்களுடைய புத்தியில் இருந்தோ, எங்கள் சொந்த புரிந்துணர்வில் இருந்தோ, எங்கள் கற்பனையில் இருந்தோ, எங்கள் எண்ணங்களில் இருந்தோ வெளிபட்டது அல்ல. ஆனால் இந்த ஞானத்தை இவ் உலகைப் படைத்தவரிடமிருந்து கேட்டோம். இத்துடன், நாங்கள் நடைமுறையில் அனுபவம் செய்ததையும், எங்கள் சொந்த உணர்விற்குள் எடுத்துக் கொண்டதையும் உங்களிடம் கூறுகின்றோம். எங்களுடைய சொந்த உணர்வாக மட்டுமாக இருந்தால், அது எங்களுக்காக மட்டுமே வேலை செய்யும், ஆனால் நாங்கள் இதனை கடவுளிடமிருந்து கேட்டுள்ளோம், இதனை எங்களுடைய உணர்வில் அனுபவம் செய்திருக்கின்றோம், அத்துடன் அதனை கிரகிக்கின்றோம். நாங்கள் எதனை கிரகித்தாலும்;, அது நிச்சயமாக எங்களுடைய உணர்விலும் அனுபவத்திலும் இருந்தாலே அதனை எங்களுக்கு சொந்தமானது என கருத முடியும். நாங்கள் இதனை அவரினூடாக அறிந்தோம். அவ்வாறாயின் கடவுளின் படைப்பு என்ன? யார் கடவுள்? அது எங்களுடைய சொந்த எண்ணங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அவ்வாறாயின், அது எங்கள் மனதிலேயே தோன்றும். இது எனது எண்ணம், இதனாலேயே கிரகிக்க தகுதியான பிரதான கருத்தை நான் கடவுளிடமிருந்து பெற்றிருக்கின்றேன். பிரதானமானது யோகம் செய்வதாகும். ஆனால் யோகத்திற்கு முன்னால், எங்களுக்கு ஞானம் இருக்க வேண்டும். யோகத்திற்கு முதலில் ஞானம் தேவை என ஏன் கூறப்படுகின்றது? அனைத்திற்கு முதலில், சிந்தியுங்கள், அதன் பின்னர் புரிந்து கொள்ளுங்கள், அதன் பின்னர் யோகம் செய்யுங்கள். புரிந்துணர்தல் முதலில் தேவை என எப்பொழுதும் கூறப்படுகின்றது. இல்லாவிடின் எங்கள் செயல்கள் பிழையாக இருக்கும். ஆகையாலேயே முதலில் ஞானம் அவசியமாகும். ஞானம் மிக உயர்வான ஸ்திதியாகும், அதனை புரிந்து கொள்வதற்கு புத்தி தேவையாகும், ஏனெனில் அதியுயர்வான தந்தையே எங்களுக்கு அதனைக் கற்பிக்கின்றார்.

2. இந்த இறை ஞானமானது ஒருபுறம் துண்டித்துக் கொள்வதற்கும் மறுபுறம் தொடர்புபடுத்திக் கொள்வதற்கும் ஆகும். எங்களை கடவுளுடன் நாங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் தூய உறவுமுறையை கொண்டிருப்பதால், நாங்கள் ஞான ஏணியில் ஏறி முன்னேற்றம் அடைவோம். ஏனெனில், இந்த நேரத்தில் ஆத்மாக்கள் கர்ம பந்தனத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்றார்கள். ஆரம்பத்தில், ஆத்மாக்கள் கர்ம பந்தனங்களில் இருந்து விடுபட்டிருந்தார்கள். பின்னர், அவர்கள் கர்ம பந்தனத்திற்குள் வந்தார்கள். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை அவர்கள் தமது கர்ம பந்தனங்களில் இருந்து விடுபட வேண்டும். இப்பொழுது, எங்களுக்கு எந்த கர்மபந்தனங்களும் இருக்கக்கூடாது. நாங்கள் எவ்வாறு செயல்களை செய்கின்றோம் என்பது எங்கள் சொந்த கைகளிலேயே உள்ளது. அதாவது எங்கள் சொந்த செயல்களை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும், அப்பொழுதே நாங்கள் எந்த கர்மபந்தனத்தாலும் கட்;டுண்டு விடுவதில்லை. இதுவே ஜீவன்முக்தி எனப்படுகின்றது. இல்லாவிடின், கர்மபந்தனத்தில் இருப்பதாலும் சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருப்பதாலும், எக்காலத்திலும் ஜீவன்முக்தி இருக்க முடியாது. இப்பொழுது ஆத்மாக்களிடம் சகல சக்திகளும் அற்றுப் போயுள்ளன. அதனால் தமது கட்டுப்பாட்டை மீறி செயல்கள் செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும், ஆத்மாக்கள் செயல்களைச் செய்ய வேண்டும். ஆத்மாக்கள் சக்தியையும் பெற வேண்டும். கர்மபந்தனங்கள் எதுவும் இல்லாததொரு ஸ்திதிக்குள் ஆத்மாக்கள் வரவேண்டும். இல்லாவிடின், மனிதர்கள் இன்ப துன்ப தாக்கத்திற்குள் சிக்கிக் கொள்வார்கள். ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களை இழுக்கும். ஆத்மாக்கள் எந்தக் கர்ம பந்தனத்திலிருந்தும் விடுவித்துக் கொள்ள சக்திகளை விருத்தி செய்கின்றார்கள். இதுவே பெறுபேறாகும். இவ் விடயங்களை கிரகிப்பதால், அனைத்தும் இலகுவாகும். இதுவே இவ்வகுப்பிற்கான காரணமாகும். நாங்கள் வேதங்களையும் சமயநூல்களையும் கற்று பட்டம் பெற வேண்டியதில்லை. ஆனால் எங்கள் வாழ்வை உருவாக்கிக் கொள்வதற்கு நாங்கள் இந்த இறை ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு நாங்கள் கடவுளிடமிருந்து சக்தியை பெற வேண்டும்.