03.09.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவு செய்வதன் மூலம் சதோபிரதான் ஆகுவதுடன், கற்பதன் மூலம், நீங்கள் ஒரு வருமானத்தையும் சேமித்துக் கொள்ள வேண்டும். கற்கும் நேரத்தில், உங்கள் புத்தி அங்கும் இங்கும் அலைபாயக்கூடாது.

கேள்வி:
இரட்டை வன்முறையற்ற, அறியப்படாத போராளிகளுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள வெற்றி என்ன? ஏன்?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் மாயையை வெற்றி கொள்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். உங்கள் இராச்சியத்தை இராவணனிடம் இருந்து நிச்சயமாக மீண்டும் கைப்பற்றுவதே உங்கள் இலக்காகும். இந்த யுக்தி நாடகத்திலே உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் வெற்றி உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் கடவுளை, நேரடியாக உங்களுடன் வைத்திருக்கின்றீர்கள். நீங்கள் யோக சக்தியின் மூலம் வெற்றி அடைகின்றீர்கள். மன்மனாபவ என்னும் மகாமந்திரத்தின் மூலம் நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவதுடன் அரைச்சக்கரத்திற்கு அதனை ஆட்சியும் செய்கின்றீர்கள்.

பாடல்:
ஓ மனிதனே, உங்கள் முகத்தை உங்கள் இதயக் கண்ணாடியில் பாருங்கள்!

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இங்கு பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கின்ற போது, உண்மையில் உங்கள் ஆசிரியர் சரீரதாரி அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஞானக்கடலாகிய பாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரும் எங்கள் தந்தையே என்ற உறுதியான நம்பிக்கையை நீங்கள் கொண்டுள்ளீர்கள். நீங்கள் கற்கும்போது, கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்திருக்கும் போது, அவர்கள் தங்கள் ஆசிரியரை நினைவு செய்வார்களேயன்றி, தங்கள் தந்தையை அல்ல, பாபாவும் உங்கள் ஆசிரியர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் எப்பெயரிலும் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது. ஆத்மாக்கள் தந்தையைச் செவிமடுக்கின்றீர்கள் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சத்தியயுகத்திலோ அல்லது கலியுகத்திலோ இவ்வாறு இல்லை. இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றீர்கள். இந்நேரத்தில் எங்கள் தந்தையே ஆசிரியராகவும் இருக்கின்றார், ஏனெனில் அவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் இரண்டு வேலைகளையும் செய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் சிவபாபாவுடன் கற்கின்றீர்கள். இது ஒரு கல்வியாகும். இது யோகமும் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்களே கற்கின்றீர்கள், பரமாத்மா உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் நேர்முன்னிலையில் அமர்ந்திருக்கும் போது, அதில் மேலும் அதிக நன்மையுள்ளது. பல குழந்தைகள் மிக நன்றாக நினைவில் நிலைத்திருக்கின்றார்கள். நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்போது, அது தூய்மையின் சக்தியைப் பெறுவது போன்றிருக்கும். சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என உங்களுக்குத் தெரியும். இதுவே உங்கள் யோகமும் வருமானமும் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாக வேண்டும். நீங்கள் சதோபிரதானாக ஆகிக்கொண்டிருப்பதுடன், செல்வத்தையும் பெறுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாக உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். உங்கள் புத்தி வேறு எங்கும் அலைபாயக்கூடாது. இங்கு நீங்கள் அமர்ந்திருக்கின்ற போதும் சிவபாபா எங்களுக்குக் கற்பிப்பதற்காக ஓர் ஆசிரியராக வருகின்றார் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அவரே ஞானம் நிறைந்தவரும் எங்களுக்குக் கற்பிப்பவரும் ஆவார். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நாங்களே சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களும், கலங்கரை விளக்கங்களும் ஆவோம். நாங்கள் ஒரு கண்ணில் அமைதிதாமத்தையும், மறுகண்ணில் ஜீவன்முக்தி தாமத்தையும் கொண்டுள்ளோம். இதில் கண்கள் என்ற கேள்வியல்ல் நீங்கள் ஆத்மா என்ற மூன்றாவது கண்ணைப் பற்றிப் பேசுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது செவிமடுக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு நீங்கும் போது, இந்தச் சம்ஸ்காரங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்திற்கு வந்ததிலிருந்து, நீங்கள் பிரிந்திருந்தீர்கள், அதாவது நீங்கள் தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் தந்தையைப் போன்று யோகிகள் ஆகுகின்றீர்கள். கடவுள் (ஈஸ்வரர்) உங்களுக்கு யோகத்தைக் கற்பிப்பதனால் அவர் யோகேஸ்வரர் என அழைக்கின்றார். நீங்கள் யோகேஸ்வரரின் குழந்தைகள். அவர் யோகம் செய்ய வேண்டியதில்லை. அந்த ஓரேயொருவரே உங்களுக்கு யோகம் கற்பிக்கின்றவரான பரமாத்மாவான, பரமதந்தையாவார். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு யோகேஸ்வரர் அல்லது யோகேஸ்வரி ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் இராஜ இராஜேஸ்வரி (இளவரசர், இளவரசிகள்) ஆகுவீர்கள் அந்த ஒரேயொருவரே உங்களுக்கு யோகம் கற்பிக்கின்றவரான கடவுள் ஆவார். அவரும் இதனைக் கற்கவில்லை. ஆனால் அவர் இதனைக் கற்பிக்கின்றார். கிருஷ்ணரின் ஆத்மா தனது இறுதிப்பிறவியில் யோகத்தைக் கற்று, பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் ஆகினார். மக்களும் கிருஷ்ணரை யோகேஸ்வரர் என அழைக்கின்றார்கள்;, ஏனெனில் இந்நேரத்தில் அவரின் ஆத்மாவும் கற்கின்றார். அவர் யோகேஸ்வரருடன் யோகம் கற்று, கிருஷ்ணர் அந்தஸ்தைப் பெறுகின்றார். அவர் தந்தையினால் பிரம்மா எனப் பெயரிடப்படுகின்றார். முதலில் அவருக்கு லௌகீகப் பெயர் இருந்தது, பின்னர் அவர் மரணித்து வாழ்ந்தார். ஆத்மாவே தந்தைக்கு உரியவர் ஆக வேண்டும். நீங்கள் தந்தைக்கு உரியவர் ஆகும்போது, நீங்கள் மரணித்து வாழ்கின்றீர்கள் என்றே அர்த்தம் ஆகும். நீங்களும் தந்தையுடன் யோகம் கற்கின்றீர்கள். நீங்கள் இந்தச் சம்ஸ்காரங்களை உங்களுடன் அமைதிதாமத்திற்கு எடுத்துச் செல்கிறீர்கள். பின்னர் உங்கள் வெகுமதியின் புதிய பாகங்கள் வெளித்தோன்றும். அங்கு நீங்கள் இவ்விடயங்களை நினைவுசெய்ய மாட்டீர்கள். இந்நேரத்திலேயே தந்தை உங்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். உங்கள் பாகம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. அது பின்னர் மறுபடியும் புதிதாக ஆரம்பிக்கும் தந்தை வருவதற்கான ஓர் எண்ணத்தைக் கொண்டுள்ளார் என்பதால், தந்தையும் கூறுகின்றார்: நான் வந்ததும் பேச ஆரம்பிக்கின்றேன். அங்கு நான் எப்பொழுதும் அமைதியில் இருப்பேன். பின்னர் நாடகத்திற்கு ஏற்ப அவருடைய பாகம் ஆரம்பிக்கின்றது. அவர் வரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்ததால் அவர் இங்கு வந்து தனது பாகத்தை நடிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் ஒரு சக்கரத்திற்கு முன் செய்ததைப் போன்று உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இதனைச் செவிமடுக்கின்றீர்கள். நாளுக்கு நாள், தொடர்ந்தும் வளர்ச்சி இடம்பெறும். பெரிய இராஜரீகமான மண்டபங்களும் உங்களுக்குக் கிடைக்கின்ற ஒரு நாள் வரும். அங்கு பிரபல்யமான மக்களும் வருவார்கள். அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்து உங்களைச் செவிமடுப்பார்கள். நாளுக்கு நாள், செல்வந்தர்கள் தொடர்ந்தும் வறியவர்களாக ஆகுவதனால் அவர்களுடைய முதுகு வயிற்றுடன் ஒட்டிவிடுகின்றது! அத்தகைய அனர்த்தங்களும் ஏற்படும். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயல்நிலங்கள் போன்றவையும் பெருவெள்ளத்தில் மூழ்கிவிடும். நிச்சயமாக அங்கு இயற்கை அனர்த்தங்களும் உள்ளன. விநாசம் இடம்பெறவே வேண்டும். அவை இயற்கை அனர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன. நிச்சயமாக விநாசம் இடம்பெற வேண்டும் எனப் புத்தி கூறுகின்றது. மறுபக்கத்தில் அவர்களுடைய குண்டுகள் தயாராகிவிட்டன இயற்கை அனர்த்தங்களும் இங்கே இருக்கும். இதனை எதிர்கொள்வதற்கு உங்களுக்குப் பெரும் தைரியம் தேவையாகும். அங்கதனின் உதாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. எவருமே அவரை அசைக்க முடியவில்லை. நான் ஓர் ஆத்மா என்ற ஸ்திதியை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ளவேண்டும்; அப்போது சரீர உணர்வுகள் அனைத்தும் தொடர்ந்து துண்டிக்கப்பட்டு விடும். சத்தியயுகத்தில் காலம் வரும்போது நீங்கள் இயல்பாகவே உங்கள் சரீரத்தை விட்டு நீங்கி, ஒரு குழந்தை ஆகுவீர்கள் என்ற ஒரு காட்சியைக் காண்பீர்கள். அவர்கள் தங்கள் சரீரத்தை நீக்கிவிட்டு, ஒரு புதிய சரீரத்தினுள் பிரவேசிப்பர். அங்கு தண்டனை போன்றவை இல்லை. நாளுக்கு நாள், நீங்கள் நெருங்கி வருவீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னுள் பதியப்பட்டுள்ள பாகம் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படும். நான் அதனைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்தும் கூறுவேன். பின்னர் தந்தையின் பாகம் முடிவடையும்; உங்கள் பாகங்களும் முடிவடையும். அப்போது உங்கள் சத்தியயுகத்தின் பாகம் ஆரம்பமாகும். இப்பொழுது நீங்கள் உங்கள் இராச்சியத்தைப் பெறவேண்டும். இந்த நாடகம் மிகவும் கவனத்துடனும் விவேகத்துடனும் உருவாக்கப்பட்டது. நீங்கள் மாயையை வெற்றி கொள்கின்றீர்கள், அதற்குக் காலம் எடுக்கும். ஒருபுறம் அம்மக்கள் தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாகவும், இதுவே சந்தோஷ தாமம் எனவும் எண்ணுகிறார்கள். மறுபுறம் அவர்கள் பாரதத்தின் நிலையைப் பற்றிப் பாடுகின்றார்கள்! அது மேலும் அதிகளவில் தமோபிரதானாகி விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாடகத்திற்கு ஏற்ப அது தொடர்ந்தும் பெரும் வேகத்துடன் தமோபிரதான் ஆகுகிறது. இப்பொழுது நீங்கள் சதோபிரதான் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது நெருங்கி வருகிறீர்கள். இறுதியில் நிச்சயமாக வெற்றி உங்களுடையதே. விரக்திக் கூக்குரலின் பின், அங்கு வெற்றி முழக்கம் இருக்கும். நெய்யாறு பாயும். நெய் விலைக்கு வாங்க வேண்டும் என்றில்லை. உங்கள் அனைவரிடமும் முதற்தரமான பசுக்கள் இருக்கும். நீங்கள் இப்பொழுது மிக மேன்மையானவராக ஆகுகின்றீர்கள்! உலக வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறும் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை வந்து உலகின் வரலாற்றை மீண்டும் மீண்டும் கூறுகின்றார். இதனாலேயே பாபா உங்களை எழுதும்படி கூறுகின்றார். வந்து எவ்வாறு உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது இது கலியுகம் என்பதால், சத்தியயுகம் நிச்சயமாக மீண்டும் வரும் என விவேகமான குழந்தைகள் கூறுவார்கள். உலகச் சக்கரம் நூறாயிரம் வருடங்கள் எனச் சிலர் கூறுகின்றார்கள். எவ்வாறு அது மீண்டும் இடம்பெற முடியும் என வினவுகிறார்கள். இங்கு சூரிய, சந்திர வம்சங்களின் வரலாறு இல்லை. இச்சக்கரம் இறுதிவரை மீண்டும் எவ்வாறு இடம் பெறுகிறது என அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இராச்சியம் மீண்டும் வரும் என அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இராம இராச்சியத்தையும் தெரியாது. இப்பொழுது உங்களுடன் தந்தை இருக்கின்றார். சர்வசக்திவானான கடவுளைத் தங்கள் பக்கம் நேரடியாக வைத்திருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தந்தை உங்களை வன்முறையில் ஈடுபடச் செய்வாரா? ஒருவரைக் கொல்வது வன்செயல் ஆகும். மாபெரும் வன்செயல் காமவாளைப் பயன்படுத்துவதாகும். நீங்கள் இப்பொழுது இரட்டை அகிம்சாவாதிகள் ஆகுகின்றீர்கள். அங்கு வன்முறையற்ற அதிமேன்மையான தேவதர்மம் இருக்கின்றது. அங்கு அவர்கள் சண்டையிடுவதோ அல்லது விகாரத்தில் ஈடுபடுவதோ இல்லை. இப்பொழுது நீங்கள் யோகசக்தியைக் கொண்டிருந்தாலும் எவருமே இதனைப் புரிந்து கொள்ளாததால், சமயநூல்களில் அவர்கள் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் மத்தியில் யுத்தம் இடம்பெற்றது என எழுதியுள்ளார்கள். எவருமே வன்முறையற்ற என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொண்டீர்கள். மறைமுகமான போர்வீரர்களாகிய நீங்கள் அறியப்படாதவர்கள். ஆனால் புகழ் பெற்றவர்கள். எவராவது உங்களை போர்வீரர்கள் எனக் கருதுவார்களா? அனைவரும் உங்களிடமிருந்து மன்மனாபவ என்ற செய்தியைப் பெறுவார்கள். இது மகாமந்திரமாகும். இவ்விடயங்களை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இவ்விடயங்கள் சத்தியயுகத்திலும், திரேதாயுகத்திலும் இருப்பதில்லை. இந்த மந்திரத்தின் மூலம் உங்கள் இராச்சியத்தைப் பெற்றுக் கொண்டதும், அதன்பின்னர் அதற்கான தேவை இல்லை. நீங்கள் சக்கரத்தைச் சுற்றிய பின்னர், இங்கு எவ்வாறு வந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு மகாமந்திரத்தைக் கொடுக்கிறார். நீங்கள் பின்னர் அரைச்சக்கரத்திற்கு ஆட்சிசெய்வீர்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, ஏனையோரையும் அவற்றைக் கிரகிக்கத் தூண்ட வேண்டும். பாபா உங்களுக்குக் கூறும் அறிவுரை: நீங்கள்; அட்டவணையை வைத்திருக்கும்போது, நீங்கள் அதிகளவு மகிழ்ச்சியடைவீர்கள். ஒரு பதிவேட்டில் நல்லது, மிகவும் நல்லது, மிக மிக நல்லது என்பன இருக்கும். சிலர் நன்றாகக் கற்பதையும், ஏனையோர் கவனம் செலுத்துவதே இல்லை என்பதையும் நீங்கள் உணர்கின்றீர்கள். ஆகவே அவர்கள் சித்தியடைவதில்லை. இங்கே, இக்கல்வி எல்லையற்றது. தந்தையே ஆசிரியரும், குருவும் ஆவார். மூவரும் ஒருமித்தே உள்ளார்கள். இத் தந்தை மாத்திரமே மரணித்து வாழுங்கள்! என்று கூறுகின்றார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள்! தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் தந்தையாவேன். நான் பிரம்மாவின் மூலம் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். அவரே இடையிலுள்ள முகவர் ஆகுகின்றார். நீங்கள் அவருடன் யோகம் செய்யக்கூடாது. உங்கள் புத்தி இப்பொழுது கணவருக்கெல்லாம் கணவரான, மணவாளனாகிய சிவனுடன் இணைக்கப்பட வேண்டும். அவர், இவர் மூலமாக உங்களைத் தனக்குரியவராக ஆக்கியுள்ளார். அவர் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள். ஆத்மாவாகிய நான் இப்பொழுது எனது பாகத்தைப் (pயசவ) பூர்த்திசெய்து விட்டேன், நான் தந்தையுடன் வீட்டிற்கு மீண்டும் செல்ல வேண்டும். முழு உலகும் இப்பொழுது தமோபிரதானாகி உள்ளது. ஐந்து தத்துவங்களும் கூட தமோபிரதானாக உள்ளன. அங்கே அனைத்தும் புதிதாகவே இருக்கும். ஆனால் இங்கோ வைரங்கள் அல்லது இரத்தினங்கள் போன்ற எதுவுமே இல்லை. அவை எங்கிருந்து சத்தியயுகத்திற்கு வந்தன? இப்பொழுதுள்ள சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன. பின்னர் மீண்டும் அவை நிரம்பும். அவர்கள் சுரங்கங்களைத் தோண்டி அவற்றை வெளியில் கொண்டுவருவார்கள். அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். அனைத்தும் அங்கு புதிதாக இருக்கும். அவ்வாறல்லவா? ஒளி போன்றவை இயல்பானதாகும். விஞ்ஞானிகள் தொடர்ந்து இங்கு கண்டுபிடிக்கும் அனைத்தும் அங்கு பயனளிக்கும். இவை அனைத்தும் பின்னர் அங்கு பயன்படும். ஹெலிகொப்டர்கள் உங்களுக்காகக் காத்திருக்கும். ஆளியை முடுக்கியதுமே, அவை பறக்கத் தொடங்கும். எவ்விதச் சிரமமும் இருக்க மாட்டாது. அங்கு எதிலும் கோளாறு ஏற்பட மாட்டாது. இயந்திரங்கள் போன்றவை என்றுமே பழுதடைவதில்லை. அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு ஒரு விநாடியில் பாடசாலைக்கோ அல்லது சுற்றுலாவோ செல்ல முடியும். பிரiஐகளுக்கானது தரம் குறைவானதாக இருக்கும். அங்கு உங்களுக்குச் சகலவகையான சந்தோஷமும் உள்ளது. அங்கு அகாலமரணம் எதுவும் இருக்க முடியாது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்! மாயை அதிக ஆற்றல் உடையவள். இதுவே மாயையின் இறுதிப் பகட்டு ஆகும். எத்தனை பேர் யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் எனப் பாருங்கள். யுத்தம் என்றுமே முடிவடையாது. இந்தப் பெரிய உலகம் முழுவதற்கும், ஒரு சுவர்க்கத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. கங்கையே தூய்மையாக்குபவர் என நீங்கள் அங்கு கூறமாட்டீர்கள். பக்தி மார்க்கத்தில் உள்ள எவையும் அங்கு இருக்க மாட்டாது. இங்கு நகரங்கள் முழுவதிலும் உள்ள குப்பைகள் எல்லாம் கங்கைக்குள் எவ்வாறு செல்கின்றன எனப் பாருங்கள். மும்பாயில் உள்ள குப்பைகள் அனைத்தும் கடலினுள் சென்றடைகின்றன. நீங்கள் பக்தி மார்க்கத்தில் பெரிய ஆலயங்களைக் கட்டீனீர்கள். அங்கு வைரங்களினதும், இரத்தினங்களினதும்; சந்தோஷம் உள்ளது. முக்கால் வாசிக் காலம் சந்தோஷமும் கால்வாசி காலம் துன்பமும் உள்ளது. அது அரைவாசியாக இருந்திருந்தால் அங்கு சந்தோஷம் இருக்கமாட்டாது. பக்திமார்க்கத்திலும் நீங்கள் சந்தோஷமாகவே இருந்தீர்கள். பின்னர் அவர்கள் ஆலயங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்க வந்தார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சத்தியயுகத்தில் மிகவும் செல்வந்தராக இருந்தீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் பெருஞ் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் இலக்கும், இலட்;;சியமும் உங்கள் முன் உள்ளது. தாய், தந்தையருக்கு அது உறுதியானதாகும். சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு எதுவுமில்லை என நினைவுகூரப்படுகின்றது. யோக சக்தியினால் உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கின்றது. இப்பொழுது ஆத்மா எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்து, அத்தகையதொரு பெரிய பாகத்தை நடிக்கின்றார் என்று தன்னைப் பற்றிய காட்சியைக் காண்கின்றார். நடிகர்களாகிய ஆத்மாக்கள் அனைவரும் கீழிறங்கி வரும்போது தந்தை அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். சிவனின் ஊர்வலம் நினைவு கூரப்படுகின்றது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இவை அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதற்கேற்பவே சந்தோஷமாக இருப்பீர்கள். நாளுக்கு நாள், நீங்கள் இதனை உணர்வீர்கள், ஏனெனில் தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இவரும் தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். பிரம்மாவிற்கு எதனையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே கேள்விகளைக் கேட்கின்றீர்கள். இவர் செவிமடுப்பது மாத்திரமே. தந்தை பதிலளிக்கிறார், இவரும் செவிமடுக்கிறார். இவரின் செயற்பாடுகள் மிகவும் அற்புதமானவை. இவரும் நினைவில் நிலைத்திருக்கின்றார். பின்னர் அவர் அதனைப் பற்றிக் குழந்தைகளிடம் பேசுகின்றார். பாபா எனக்கு ஊட்டுகின்றார். நான் எனது இரதத்தை அவருக்குக் கொடுக்கின்றேன். அவர் என்மீது சவாரி செய்கிறார், எனவே ஏன் அவர் எனக்கு உணவு ஊட்டக்ககூடாது? இவர் ஒரு மனிதக் குதிரை ஆகும். நான் சிவபாபாவின் இரதம். இதனை நினைவு செய்வதால் நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய முடியும். நினைவு செய்வதனால், நன்மை உண்டு. சமையலறையில் நீங்கள் உணவு தயாரிக்கும் போது அதனை சிவபாபாவின் குழந்தைகளுக்கே தயாரிக்கின்றீர்கள் என்றும், நீங்களும் சிவபாபாவின் குழந்தையே என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறாக நினைவு செய்வதில் நன்மை உள்ளது. கர்மாதீத ஸ்திதியை அடைவதனாலும், நினைவில் நிலைத்திருப்பதனாலும் சேவை செய்வதனாலும் அதி உயர்ந்த அந்தஸ்து பெறப்படுகின்றது. அந்த பாபாவும் அதிகச் சேவை செய்கின்றார், அல்லவா? அந்த ஒரேயொருவரின் சேவை எல்லையற்றது. ஆனால் நீங்கள் எல்லைக்குட்பட்ட சேவையேசெய்கிறீர்கள். சேவையின் மூலமே இவர் தனது அந்தஸ்தைப் பெற்றார். சிவபாபா கூறுகின்றார்: இதைச்செய்யுங்கள். அவர் இவருக்கும் அறிவுரை கூறுகின்றார். குழந்தைகளில் சிலர் புயல்களை அனுபவம் செய்கிறார்கள். நீங்கள் நினைவு செய்யாவிட்டால், உங்கள் பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்துவது மிகச்சிரமமாகும். நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் படகு அக்கரைக்குச் செல்கிறது. ஒன்றைக் கூறும் போது, அதனைக் கூறுவது சிவபாபாவா அல்லது பிரம்மபாபாவா என்பதைப் புரிந்துகொள்வது கடினமாகும். இதற்கு மிகவும் தெளிவான புத்தி தேவையாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்நேரத்தில் முற்றிலும் மரணித்து வாழுங்கள். நன்றாகக் கற்பதுடன் உங்கள் அட்டவணையையும், பதிவேட்டையும் பேணுங்கள். நினைவில் நிலைத்திருந்து, உங்கள் ஸ்திதியைக் கர்மாதீதம் ஆக்குங்கள்.

2. விநாசத்தின் இறுதிக் காட்சிகளைக் காண்பதற்கு, நீங்கள் தைரியசாலிகளாக இருக்க வேண்டும். நான் ஓர் ஆத்மா என்பதைப் பயிற்சி செய்யும்போது, சரீர உணர்வு தொடர்ந்தும் துண்டிக்கப்படுகின்றது.

ஆசீர்வாதம்:
உங்கள் புத்தியில் முழுமையான நம்பிக்கையை கொண்டிருப்பதனால், எத்தகைய பயங்கரமான பிரச்சினைகளையும் சாந்தமடையச் செய்வீர்களாக.

தந்தையின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதைப் போன்றே, உங்களின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதுடன் நாடகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருங்கள். உங்களுக்குள்ளேயே, பலவீனமான எண்ணங்கள் எழுமாயின், அவை பலவீனமான சம்ஸ்காரங்களை உருவாக்கும். ஆகையால், வீணான எண்ணங்கள் என்ற பலவீனமான கிருமிகள் உங்களுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள். அதே நேரத்தில், நீங்கள் பார்க்கின்ற நாடக காட்சிகளில், அது தளம்பலான காட்சிகளாயினும் அதில் நன்மையை அனுபவம் செய்யுங்கள். சூழல் உங்களை அசைப்பதாக இருப்பினும், பிரச்சினைகள் பயங்கரமாக இருப்பினும், உங்கள் புத்தியில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதன் மூலம் எப்பொழுதும் வெற்றியாளர் ஆகினால், பயங்கரமான பிரச்சினைகள் சாந்தமடையும்.

சுலோகம்:
தந்தையையும் சேவையையும் நேசிப்பவர்கள் இயல்பாகவே குடும்பத்திடமிருந்து அன்பைப் பெறுவார்கள்.