03.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, 84 மோட்டார்களுக்குள் சென்ற பின்னர், ஆத்மாவின் மின்கலம் சக்தியிழந்துள்ளது. அதற்கு இப்பொழுது நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதன் மூலம், முழுமையாகச் சக்தியூட்டுங்கள்.

கேள்வி:
பாபா, எக்குழந்தைகளை மிகமிகப் பாக்கியசாலிகளாகக் கருதுகின்றார்?

பதில்:
எந்தச்சிக்கல்களும் இல்லாத, பந்தனத்திலிருந்து விடுபட்டிருக்கும் அக் குழந்தைகளுக்கு பாபா கூறுகின்றார்: நீங்கள் மிக மிகப் பாக்கியசாலிக் குழந்தைகள்;. நினைவில் நிலைத்திருப்பதனால், உங்கள் மின்கலங்களை உங்களால் முழுமையாகச் சக்தியூட்ட முடியும். நீங்கள் யோகமின்றி, ஞானத்தைக் கூறினால், அம்பினால் இலக்கைத் தாக்க முடியாது. நீங்கள் பேசுபவற்றை, நீங்கள் பயிற்சி செய்யாமல், எவ்வளவு திறமையாக உங்கள் அனுபவத்தை நீங்கள் கூறினாலும், உங்கள் மனச்சாட்சி தொடர்ந்தும் உங்களை உறுத்தும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தையின் பெயர் என்ன? சிவபாபா. அவர் எல்லையற்ற தந்தையாகிய கடவுள் ஆவார். ஒரு மனிதரை எல்லையற்ற தந்தை என்றோ, அல்லது ஈஸ்வர் என்றோ, அல்லது கடவுள் என்றோ ஒருபொழுதுமே அழைக்க முடியாது. சிவன் என்னும் பெயர் பலருக்கு இருந்தாலும், அவர்கள் அனைவரும் சரீரதாரிகள்;. இதனாலேயே அவர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். பல பிறவிகளின் இறுதிப்பிறவியில் உள்ள ஒருவரின் சரீரத்தில் நான் பிரவேசித்துள்ளேன்;. நீங்கள் ஏன் இவரைக் கடவுள் என அழைக்கிறீர்கள் எனப் பலரும் வினவுகிறார்கள். பௌதீக அல்லது சூட்சும சரீரதாரியைக் கடவுள் என அழைக்க முடியாது எனத் தந்தை ஆரம்பத்திலிருந்து விளங்கப்படுத்தியுள்ளார். சூட்சும சரீரதாரிகள் சூட்சும வதனவாசிகள் ஆவர்; அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பரமதந்தையாகிய கடவுளே அதிமேலானவர்;. அவருடைய பெயர் அதிமேலானதும், அவருடைய வசிப்பிடம் அதிமேலானதும் ஆகும். தந்தை அங்கே ஆத்மாக்கள் அனைவருடனும் வசிக்கிறார். அவர் இருக்குமிடமும் அதி மேலானதாகும். உண்மையில், அவர் அமர்வதற்கென ஓர் இடமியில்லை. நட்சத்திரங்கள் எங்காவது அமர்கின்றனவா? அவை நிற்கின்றன, இல்லையா? ஆத்மாக்களாகிய நீங்களும் உங்கள் சொந்த சக்தியினுடன் அங்கு நிற்கிறீர்கள். அத்தகைய சக்தியைப் பெற்றதனால் ஆத்மாக்களாகிய நீங்களும் அங்கு சென்று, நிற்;கிறீர்கள். தந்தையின் பெயர் சர்வசக்திவான், அவரிடமிருந்தே நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். மோட்டார் வாகனத்தில் மின்கலம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதால், அம்மின்கலத்தைக் கொண்டு அந்த வாகனம் தொழிற்படுவதைப் போன்றே, ஆத்மாக்களாகிய நீங்களும் அவரை நினைவு செய்யும் போது, உங்கள் மின்கலங்களும் சக்தியூட்டப்படும். மின்கலம் மின்சக்;தியினால் சக்தியூட்டப்படும் போது, வாகனம் தொழிற்படுகின்றது. பின்னர் மின்கலம் படிப்படியாக சக்தியை இழக்கின்றது. பின்னர் மின்கலத்திற்கு மீண்டும் சக்தியூட்ட வேண்டுமாயின், அதனைப் பிரதான மின்சக்தியுடன் இணைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த மின்கலம் மீண்டும் வாகனத்தில் பொருத்தப்படுகின்றது. அவை எல்லைக்குட்பட்ட விடயங்களாகும். இங்கு, இது எல்லையற்றதொரு விடயமாகும். உங்கள் மின்கலம் 5000 வருடங்களுக்கு நீடிக்கிறது. பின்னர், காலம் கடந்து செல்லும்போது நாளடைவில் அது பலவீனமடைகிறது. அது முற்றிலும் சக்தியிழந்துவிடவில்லை என உங்களால் கூறமுடியும், ஒரு மின்சூளின் ஒளி குறைவடைவதைப் போன்று சிறிதளவு சக்தி எஞ்சியுள்ளது. ஆத்மாவே, இச்சரீரத்தின் மின்கலம் ஆவார். இதுவும் மந்தமடைகின்றது. இந்த மின்கலம் ஒரு சரீரத்தை விட்டு நீங்கி, இரண்டாவது, மூன்றாவது மோட்டாருக்குள் செல்கிறார். ஆத்மா, 84 மோட்டார்களுக்குள் செல்கிறார். ஆகவே, தந்தை கூறுகிறார்: அத்தகைய மந்த புத்தியுடையவர்களாகவும், கல்லுப்புத்தி உடையவர்களாகவும் நீங்கள் ஆகிவிட்டீர்கள்! இப்பொழுது உங்கள் மின்கலங்களுக்கு மீண்டும் சக்தியூட்டுங்கள். தந்தையை நினைவு செய்யாமல் ஆத்மாக்களால் தூய்மையாக முடியாது. ஒரேயொரு சர்வசக்திவான் தந்தையுடன் மாத்திரமே நீங்கள் யோகம் செய்ய வேண்டும். தந்தையே உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கிறார் அதாவது அவர் எவ்வாறிருப்பார் என்றும், உங்கள் ஆத்மாவின் மின்கலம் எவ்வாறு மந்தமாகுகிறது என்றும் கூறுகிறார். உங்கள் மின்கலம் சதோபிரதானாகவும், முதற்தரமானதாகவும் ஆகுவதற்காக என்னை நினைவு செய்யுங்கள் என நான் இப்பொழுது உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றேன். ஆத்மா தூய்மையாகும் பொழுது, அது 24 கரட் (தங்கமாக) ஆகுகிறது. தற்பொழுது, உங்களுக்குள் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. உங்கள் வலிமை முற்றிலும் முடிவடைந்து விட்டது. அந்த அழகு இப்பொழுது இல்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, யோகத்தில் நிலைத்திருந்து தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். இல்லாவிட்டால், மின்கலம் சக்தியூட்டப்படமாட்டாது. உங்களால் யோகம் செய்யவும் முடியாது. ஒரு சேவலைப் போன்று ஞானத்தைக் கொடுக்கின்ற பலரும் இருக்கிறார்கள். அவர்கள் ஞானத்தைக் கூறினாலும், அவர்களுக்கு அந்த ஸ்திதி இருப்பதில்லை. இங்கு, அவர்கள் தங்கள் அனுபவத்தை மிகவும் திறமையாக கூறுகிறார்கள். அவர்களின் மனச்சாட்சி, உள்ளுர அவர்களை உறுத்துகின்றது, ஏனெனில் அவர்களின் ஸ்திதி, அவர்கள் பேசுவதற்கு ஏற்ப சமமான ஸ்திதி அவர்களிடம் இல்லை. சில யோகிக் குழந்தைகளும் இருக்கிறார்கள். தந்தை குழந்தைகளைப் பெருமளவு புகழ்கிறார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் மகா பாக்கியசாலிகள். உங்களுக்கு அதிகளவு சிக்கல்கள் இருப்பதில்லை. பல குழந்தைகளை உள்ளவர்களுக்கும் பெருமளவு பந்தனம் உள்ளது. பாபாவுக்குப் பல குழந்தைகள் உள்ளார்கள். அவர் அனைவரிலும் கவனம் செலுத்த வேண்டும். பாபாவும் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். அன்பிற்கினியவரின் நினைவு மிகவும் உறுதியானதாக வேண்டும். பக்தி மார்க்கத்தில், நீங்கள் தந்தையை அதிகளவு நினைவுசெய்தீர்கள்: ஓ கடவுளே! அந்த ஒரேயொருவரையே நீங்கள் முதலில் வழிபட்டீர்கள். முதலில், அசரீரியான கடவுளே வழிபடப்படுகிறார். நீங்கள் அந்நேரத்தில் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுகிறீர்கள் என்றில்லை. ஆத்ம உணர்வுடையவர்கள் எவரையும் வழிபடுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: பக்தி ஆரம்பமாகும்பொழுது, முதலில் ஒரேயொரு தந்தையையே வழிபடுகின்றார்கள். சிவனை மாத்திரமே வழிபடுகின்றார்கள். அரசரும், அரசியும் எவ்வாறோ பிரஜைகளும் அவ்வாறே இருப்பார்கள். கடவுளே அதிமேன்மையானவர் ஆவார். அவர் மாத்திரமே நினைவுசெய்யப்பட வேண்டும். அவருக்குக் கீழேயுள்ள பிரம்மா, விஷ்ணு, சங்கரர் போன்றவர்கள் அனைவரும் நினைவுசெய்யப்பட வேண்டியதில்லை. அதிமேன்மையான தந்தை மாத்திரமே நினைவுசெய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், நாடகத்தின் பாகத்திற்N;கற்ப நீங்கள் கீழிறங்கி வரவேண்டும். நீங்கள் எவ்வாறு கீழிறங்குகின்றீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஆரம்பத்திலிருந்து இறுதிவரைக்கும், உச்சியிலிருந்து அடிவரைக்கும் உள்ள அனைத்து விடயங்களையும் தந்தை விளங்கப்படுத்துகிறார். பக்தியும் முதலில் சதோபிரதானாக இருந்து, பின்னர் அது சதோ, இரஜோ, தமோ ஆகுகின்றது. நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுகிறீர்கள். இதற்கே முயற்சி தேவையாகும். நீங்கள் தூய்மையாக வேண்டும். மாயை உங்களை ஏமாற்றவில்லை எனப் பார்ப்பதற்கு உங்களைச் சோதியுங்கள். நான் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கிறேனா? நான் பாவம் செய்வதற்கான எண்ணங்கள் எதையாவது கொண்டிருக்கிறேனா? பிரஜாபிதா பிரம்மா நினைவு செய்யப்படுவதால். அவருடைய குழந்தைகள் சகோதர, சகோதரிகளான பிராமணர்களாக இருக்க வேண்டும். லௌகீகப் பிராமணர்களும் தங்களைப் பிரம்மாவின் குழந்தைகளாகக் கருதுகிறார்கள். பிராமணர்களாகிய நீங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் ஆவீர்கள். ஆகவே, நீங்கள் ஏன் விகாரப் பார்வையைக் கொண்டிருக்கிறீர்கள்? லௌகீகப் பிராமணர்களுக்கு நீங்கள் மிகச் சிறந்த திருஷ்டியைக் கொடுக்க முடியும். பிரம்மாவின் குழந்தைகள் இப்பொழுது பிராமணர்கள் ஆகிப் பின்னர் தேவர்கள் ஆகுகிறார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை வந்து பிராமண தர்மத்தையும், தேவ தர்மத்தையும் ஸ்தாபிக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. இது புரிந்துகொள்ளப்பட வேண்டியதொன்றாகும். பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகிவிட்டீர்கள். ஆகவே, அங்கு தீய பார்வையின் ஈர்ப்பு இருக்கக் கூடாது. நீங்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இவர் என்னுடைய இனிமையான சகோதரி ஆவார். அங்கு அந்த அன்பு இருக்க வேண்டும். இரத்த உறவில் இருக்கின்ற அன்பு, ஆன்மீக அன்பாக மாற்றப்பட வேண்டும். இது இலகு நினைவு என அழைக்கப்பட்டாலும், இதற்குப் பெருமளவு முயற்சி தேவையாகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுக்கு விகாரப் பார்வை இருக்கக்கூடாது. உங்கள் கண்கள் உங்களைப் பெருமளவிற்கு ஏமாற்றுகின்றன, அவை மாற்றப்பட வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார்.. நான் ஓர் ஆத்மா. இந்நேரத்தில், நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள். சகோதர, சகோதரிகளாகிய நாங்கள் தத்தெடுக்கப்பட்டோம். நாங்கள் எங்களை பிரம்மா குமார்கள், குமாரிகள் என அழைக்கிறோம். அப்பொழுது அங்கு நடத்தையில் ஒரு வித்தியாசம் இருக்கும். வகுப்பறையில் அனைவரையும் வினவ வேண்டியது ஓர் ஆசிரியரின் கடமையாகும்: உங்கள் பார்வை சகோதர, சகோதரிகளுக்குரியதாக உள்ளது என எண்ணுகிறீர்களா அல்லது அங்கு ஏதாவது விஷமத்தனம் உள்ளதா? ஒருவர் உண்மையான தந்தையின் முன்னிலையில் உண்மையைப் பேசாது, பொய்களைக் கூறினால், பெருமளவு தண்டனை அனுபவம் செய்யப்படும். ஒரு நீதிமன்றத்தில் தாங்கள் சத்தியமான, கடவுளின் முன்னிலையில் சத்தியத்தைப் பேசுவோம் என அவர்கள் ஒரு சத்தியப்பிரமாணத்தை செய்ய வேண்டும். சத்தியமான குழந்தையின் தந்தையும் சத்தியமானவராகவே இருப்பார். தந்தையே சத்தியம் ஆவார். அவர் சத்தியத்தை மாத்திரம் பேசுகிறார். ஏனைய அனைத்தும் பொய்கள் ஆகும். அவர்கள் தங்களை ஸ்ரீ ஸ்ரீ 108 என அழைக்கிறார்கள். உண்மையில், அந்த மாலையின் மணிகளே உருட்டப்படுகின்றன. தாங்கள் ஏன் மாலையின் மணிகளை உருட்டுகிறோம் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். கிறிஸ்தவர்களுக்கும் ஒரு மாலை உள்ளது பௌத்தர்களுக்கும் ஒரு மாலை உள்ளது. அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய வழிகளில் தங்கள் மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைப் பெற்றுவிட்டீர்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: 108க்குரிய மாலையின் உச்சியிலுள்ள குஞ்சம் அசரீரியான ஒரேயொருவரை அடையாளப்படுத்துகின்றது. அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். அவரை நினைவுசெய்வதால், நாங்கள் சுவர்க்கத்தின் அரசிகள் அதாவது, நாங்கள் சக்கரவர்த்தினிகள் ஆகுகிறோம். ஒரு சாதாரண பெண்ணிலிருந்து அல்லது ஆணிலிருந்து இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவது என்றால், சூரிய வம்சத்தின் பெறுமதிமிக்க (பட்டாடைக் குரிய) அரசர்களும், அரசிகளும் ஆகுவதாகும். பின்னர், அவர்களே குறைந்த பெறுமதி உடையவர்கள் (பருத்தி ஆடைக்குரியவர்கள்;) ஆகுகிறார்கள். ஆகவே, அத்தகைய கருத்துக்களை உங்கள் புத்தியில் வைத்திருப்பதனால், நீங்கள் அவற்றை ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியும். பின்னர் உங்கள் பெயர்; போற்றப்படும். ஒரு பெண்சிங்கம் போன்று பேசுங்கள். நீங்களே சிவசக்தி சேனை ஆவீர்கள். பலவிதமான சேனைகள் உள்ளன. ஏனைய இடங்களுக்குச் சென்று அவர்கள் அனைவருக்கும் என்ன கற்பிக்கிறார்கள் எனப் பாருங்கள். நூறாயிரக் கணக்காண மக்கள் அங்கு செல்கிறார்கள். குற்றப் பார்வை உங்களைப் பெருமளவுக்கு ஏமாற்றுகின்றன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் உங்கள் ஸ்திதியைப் பற்றிப் பேச வேண்டும். எவ்வாறு நீங்கள் வீட்டில் வசிக்கிறீர்கள், அது எவ்வாறு உங்கள் ஸ்திதியைப் பாதிக்கிறது என உங்கள் சொந்த அனுபவத்தைக் கூறுங்கள். ஒரு தினக் குறிப்பேட்டை வைத்திருங்கள்: நான் இந்த ஸ்திதியை எவ்வளவு நேரத்துக்குப் பேணுகிறேன்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: மாயை மிகவும் சக்திவாய்ந்தவளாகி சக்திவாய்ந்தவர்களுடன் சண்டையிடுகிறாள். இது ஒரு யுத்தகளம், இல்லையா? மாயை மிகவும் சக்திவாய்ந்தவள்;. மாயை என்றால் பஞ்ச விகாரங்கள் ஆகும். பணம் என்றால் செல்வம் என்றே அழைக்கப்படுகிறது. பெருமளவு செல்வம் உடையவர்களே, பெரும்பாலும் அஜாமிலைப் போன்று (மகாபாவி) ஆகுபவர்கள்;. தந்தை கூறுகிறார்: அனைத்திற்கும் முதலில், நீங்கள் விலைமாதர்களையும் பாதுகாக்க வேண்டும். பின்னர் அவர்கள் தங்களுடைய சொந்தச் சங்கத்தை உருவாக்குவார்கள். நாங்கள் தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியைக் கோர விரும்புகிறோம். தந்தை கூறுகிறார்: உங்களைச் சிவனின் தாமத்தின் (சிவாலயம்) அதிபதிகளாக்குவதற்கு நான் வந்துள்ளேன். இது உங்கள் இறுதிப்பிறவி ஆகும். விலைமாதர்களுக்குக் கூறுங்கள்: பாரதம் தனது கௌரவத்தை இழப்பதற்கு நீங்களே காரணமாகியுள்ளீர்கள். தந்தை இப்பொழுது உங்களைச் சிவனின் தாமத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். ஸ்ரீமத்துக்கேற்ப நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். நீங்கள் இப்பொழுது உலக அதிபதிகளாகி, நாங்கள் செய்வதைப் போன்று, பாரதத்தின் பெயரைப் புகழடையச் செய்ய வேண்டும். தந்தையை நினைவுசெய்வதால், நாங்களும் தூய்மையாகுகிறோம். ஒரு பிறவிக்கு நீங்கள் அந்தத் தீய வியாபாரம் செய்வதை நிறுத்த வேண்டும். கருணை கொண்டிருங்கள், உங்கள் பெயர் அதிகளவு போற்றப்படும். மக்கள் பின்னர் கூறுவார்கள்: அவர்கள் செய்யும் தீய வியாபாரத்தை நிறுத்திவிடுமளவிற்;கு உங்களுக்கு அத்தகைய சக்தி உள்ளது. அனைவருக்கும் ஒரு சங்கம் உள்ளது. நீங்களும் உங்கள் சொந்தச் சங்கத்தை உருவாக்கி, உங்களுக்கு வேண்டியதை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். ஆகவே, இப்பொழுது தீய வியாபாரம் செய்து, பாரதத்தின் பெயரை அவதூறு செய்பவர்களுக்குச் சேவை செய்யுங்கள். உங்கள் தொழிற்சங்கமும் மிகவும் பலம்வாய்ந்ததாக இருக்க வேண்டும். உங்களில் 10 தொடக்கம் 12 பேர்வரை சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். மிகச் சிறந்த தாய்மார்கள் இருக்க வேண்டும். ஒரு புதிய தம்பதியினர் வந்தால், அவர்களிடம்; கூறுங்கள்: நாங்கள் தூய்மையாக இருக்கிறோம். தூய்மையாகுவதால் மாத்திரமே, நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஆகவே, நீங்கள் ஏன் தூய்மையாக இருக்கக் கூடாது? உங்களின் முழுக் குழுவுமே சென்று விளங்கப்படுத்த வேண்டும். பெருமளவு பணிவுடன் கூறுங்கள்: நாங்கள் பரமாத்மாவாகிய, பரமதந்தையின் செய்தியை உங்களுக்குக் கொடுப்பதற்கு வந்துள்ளோம். விநாசம் இப்பொழுது நேர்முன்னிலையில் உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் அனைவரையும் ஈடேற்றுவதற்கே வந்துள்ளேன். இந்த ஒரு பிறவியில் நீங்கள் விகாரத்தில் ஈடுபடக்கூடாது. அவர்களிடம் கூறுங்கள்: பிரம்மா குமார்களும், குமாரிகளுமாகிய நாங்கள் எங்கள் சொந்த சரீரம், மனம், செல்வத்தின் மூலம் பாரதத்துக்குச் சேவை செய்கிறோம். நாங்கள் தானம் கேட்பதில்லை. நாங்கள் கடவுளின் குழந்தைகள்;. அத்தகைய திட்டங்களை உருவாக்குங்கள். உங்களால் உதவ முடியாது என்றில்லை. நீங்கள் புகழப்படும்வகையில், அத்தகைய வேலையைச் செய்யுங்கள். உங்களுக்கு உதவ ஆயிரம் பேர் தோன்றுவார்கள். உங்கள் சொந்த ஒன்றுகூடலை உருவாக்குங்கள். பிரதானமானவர்களைத் தெரிவுசெய்யுங்கள். ஆய்வு அரங்குகளை நடாத்துங்கள். குழந்தைகளைப் பராமரிக்கின்ற பலர் வெளிப்படுவார்கள். இறைசேவையில் மும்முரமாக இருங்கள். நீங்கள் விரைவில்; சென்று சேவை செய்யக் கூடியவாறு உங்களுக்கு அத்தகையதொரு பரந்த இதயம் இருக்க வேண்டும். ஒருபுறத்தில் இச்சேவையைச் செய்யுங்கள், மறுபுறத்தில் கீதையின் சேவையைச் செய்யுங்கள். இவ்விடயங்களை ஒன்றிணைந்து ஒரு குழுவாக எடுத்துச் செல்லுங்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுவதற்கு நீங்கள் கற்கிறீர்கள். ஆகவே, இங்கு குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் மத்தியில் எந்த முரண்பாடுகளையும் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் தந்தையிடமிருந்து எதையாவது மறைத்துக் கொண்டு, அவரிடம் உண்மையைக் கூறாமல்விட்டால், நீங்கள் உங்களுக்கே ஓர் இழப்பை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் நூறு மடங்குகள் அதிக தண்டனையைச் சேமிப்பீர்கள். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாங்களே இனிய தந்தையின் குழந்தைகளாவோம். நாங்கள் இனிய சகோதர, சகோதரிகளாக ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும். விகாரப் பார்வை எதனையும் என்றுமே கொண்டிருக்காதீர்கள். உங்கள் பார்வையில் ஏதாவது விஷமத்தனம் இருப்பின், ஆன்மீக சத்திரசிகிச்சை நிபுணரிடம் உண்மையைக் கூறுங்கள்.

2. உங்கள் மத்தியில் ஒருபோதும் எந்த முரண்பாடான அபிப்பிராயத்தையும் கொண்டிருக்காதீர்கள். பரந்த இதயத்துடனும், பெரும் பணிவுடனும் உங்கள் சரீரம், மனம், செல்வத்தின் மூலம் சேவை செய்வதுடன், அனைவருக்கும் தந்தையின் செய்தியையும் கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
மாயை உட்புகாதவராகி, உங்கள் மேன்மையான வாழ்வினூடாக கடவுளின் ஞானத்தின் நடைமுறை அத்தாட்சியை வழங்குவீர்களாக.

உங்களை ஒரு நடைமுறை அத்தாட்சியாகக் கருதுவதன் மூலம், கடவுளின் ஞானத்தை நிரூபித்தால் நீங்கள் மாயை உட்புகாதவர் ஆகுகிறீர்கள். உங்கள் மேன்மையான தூய வாழ்வே நடைமுறை அத்தாட்சியாகும். இல்லறத்தில் வாழும் போதும், அப்பால் உள்ள மனோபாவத்தில் வாழ்வதும், சரீரங்கள், பௌதீக உலக உறவினர்கள் என்ற விழி;ப்புணர்விற்கு அப்பால் இருப்பதுமே சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கும் மிகப் பெரிய விடயமாகும். பழைய சரீரத்தின் கண்களினூடாக, பழைய உலக விடயங்களை பார்த்தும் பார்க்காதிருந்தால், நீங்கள் முற்றாக தூய வாழ்வு வாழ்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இதுவே கடவுளை வெளிப்படுத்துவதற்கான இலகுவான வழி என்பதுடன் மாயை உட்புகாதவர் ஆகுவதாகும்.

சுலோகம்:
கவனம் செலுத்துதல் எனும் காவலாளிகள் சரியாக இயங்கும் போது அதீந்திரிய சுகம் என்ற பொக்கிஷத்தை உங்களால் இழக்க முடியாது.