03.11.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     2.03.85     Om Shanti     Madhuban


தற்போதைய இறை பிறப்பு, விலைமதிப்பற்ற பிறப்பாகும்.


இன்று, இரத்தின வியாபாரியான தந்தை தனது விலைமதிப்பற்ற இரத்தினங்களைப் பார்க்கிறார். இது விலைமதிப்பற்ற அலௌகீக இரத்தினங்களின் சபை ஆகும். தற்சமயம் உலகிலுள்ள சொத்துக்கள் அனைத்தையும் நீங்கள் சேகரித்தாலும் அல்லது உலகிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தையும் சேகரித்தாலும், அவற்றுடன் ஒப்பிடும்போது, ஒவ்வோர் இறை இரத்தினமும் அதிகளவு பெறுமதி வாய்ந்தவர். இரத்தினங்களான உங்களின் முன்னால், உலகிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் எதுவுமே இல்லை. நீங்கள் அத்தகைய விலைமதிப்பற்ற இரத்தினங்கள் ஆவீர்கள். விலைமதிப்பற்ற இரத்தினங்களான உங்களைச் சங்கமயுகத்தைத் தவிர கல்பத்தின் வேறெந்த வேளையிலும் காண முடியாது. சத்தியயுக தேவாத்மாக்களின் பாகங்கள், சங்கமயுகத்தின் விலைமதிப்பற்ற இறை இரத்தினங்களின் பாகங்களின் பின்னால் இரண்டாவது இடத்திலேயே வருகின்றன. தற்சமயம், நீங்கள் இறைவனின் குழந்தைகள். ஆனால் சத்தியயுகத்தில் நீங்கள் தேவர்களின் குழந்தைகள். இறைவனின் பெயர், புகழ், பிறப்பு, செயல்கள் என்பவை அனைத்திலும் அதிமேன்மையானவையாக இருப்பதைப் போன்று, இறை இரத்தினங்களின் அல்லது இறைவனின் குழந்தைகளின் மதிப்பு அதிமேன்மையானது. இந்த மேன்மையான புகழினதும் மேன்மையான பெறுமதியினதும் ஞாபகார்த்தம், இன்றும் ஒன்பது இரத்தினங்களின் வடிவில் நினைவுகூரப்பட்டு, வழிபடப்படுகின்றன. ஒன்பது இரத்தினங்களும் பல்வகைத் தடைகளை அழிப்பவையாக நினைவுகூரப்படுகின்றன. அவர்கள் எதிர்நோக்கும் தடைக்கேற்ப, ஒரு மோதிரத்தைச் செய்து அணிந்து கொள்கிறார்கள். அல்லது, ஒரு பதக்கத்தில் வைத்து அணிந்து கொள்கிறார்கள். அல்லது அந்தக் குறிப்பிட்ட இரத்தினத்தை ஏதாவதொரு அணிகலனில் பதித்துத் தமது வீடுகளில் வைக்கிறார்கள். இப்போதும், உங்களின் கடைசிப் பிறவியிலும், தடைகளை அழிப்பவரின் ரூபத்தில் உங்களின் ஞாபகார்த்தத்தை உங்களால் காண முடிகிறது. நீங்கள் நிச்சயமாக வரிசைக்கிரமம் ஆனவர்கள். வரிசைக்கிரமமாக இருந்தாலும், நீங்கள் அனைவரும் விலைமதிப்பற்றவர்கள். அத்துடன் தடைகளை அழிப்பவர்கள். இன்றும், ஏனைய ஆத்மாக்கள் இரத்தினங்களான உங்களுக்கு உங்களின் மேன்மையான ரூபங்களில் மரியாதை கொடுக்கிறார்கள். அவர்கள் மிகுந்த அன்புடனும் சுத்தமாகவும் உங்களின் விக்கிரகங்களைக் கவனமாகப் பராமரிக்கிறார்கள். ஏனெனில், நீங்கள் அனைவரும் உங்களை அந்தளவிற்குத் தகுதிவாய்ந்தவர்களாகக் கருதாவிட்டாலும், தந்தை ஆத்மாக்களான உங்கள் அனைவரையும் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கி, தனக்குரியவர்கள் ஆக்கியுள்ளார். நீங்கள் என்னுடையவர். நான் உங்களுடையவன் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இறைவனின் பார்வை படும் ஓர் ஆத்மா நிச்சயமாக அந்த இறை பார்வையால் விலைமதிப்பற்றவர் ஆகுகிறார். கடவுளின் திருஷ்டியால், இத்தகைய ஆத்மா நிச்சயமாக இறைபடைப்பான ஆன்மீக உலகில் மேன்மையான ஆத்மா ஆகுகிறார். நீங்கள் தெய்வீகப் பிரபுவின் (பரஸ்நாத் - இரசவாதி) சகவாசத்தில் வரும்போது, நிச்சயமாக அந்தக் கல்லால் (பரஸ் - இரசவாதக் கல்) நிறமூட்டப்படுகிறீர்கள். ஆகவே, இறை அன்பெனும் திருஷ்டியை நீங்கள் பெறுவதனால், கல்பம் முழுவதும் உங்களின் ஞாபகார்த்தம் நிலைத்திருக்கிறது. அது உயிர்வாழும் தேவர்களின் ரூபத்தில் அல்லது அரைக்கல்பத்திற்கு உயிரற்ற விக்கிரகங்களின் வடிவில் அல்லது பல்வகையான ஞாபகார்த்தங்களின் வடிவில் அல்லது இரத்தினங்களான உங்களின் என்ன வகையான ஞாபகார்த்த ரூபங்களிலும் நட்சத்திரங்களின் வடிவிலும் உங்களின் ஞாபகார்த்தம் உள்ளன. உங்களின் ஞாபகார்த்தம் எந்த வடிவில் இருந்தாலும், நீங்கள் கல்பம் முழுவதும் அனைவராலும் நேசிக்கப்படுகிறீர்கள். ஏனெனில், அழியாத அன்புக்கடலின் அன்பான திருஷ்டி உங்களைக் கல்பம் முழுவதற்கும் அன்பு பெறுவதற்கான உரிமையுள்ளவர் ஆக்குகிறது. இதனாலேயே, பக்தர்கள் ஒரு கணம் அல்லது அரைக்கணமேனும் தரிசனம் பெறுதவற்காகத் தவிக்கிறார்கள். அந்த ஒரு கணநேர தரிசனத்தால் அப்பால் செல்ல முடியும் என நினைக்கிறார்கள். இதனாலேயே, இந்த வேளையில் பெறப்படும் அன்பான திருஷ்டி உங்களை அழியாத அன்பிற்குத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகிறது. உங்களிடம் இயல்பாகவே அழியாத பேறு உள்ளது. அவர் உங்களை அன்புடன் நினைக்கிறார். அன்பாக வைத்திருக்கிறார். அன்புடன் உங்களைப் பார்க்கிறார்.

இரண்டாவதாக, சுத்தம், அதாவது, தூய்மை. இந்த வேளையில், நீங்கள் பிறப்புரிமையாகத் தூய்மையைத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். உங்களின் ஆதி தர்மம் தூய்மை, அதாவது, சுத்தம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே, நீங்கள் தூய்மையைக் கடைப்பிடிப்பதனால், உங்களுக்கு எங்கெல்லாம் ஞாபகார்த்தம் உள்ளதோ, அங்கு தூய்மையும் சுத்தமும் தொடர்ந்து ஒரு ஞாபகார்த்தமாகத் திகழ்கின்றன. அரைக்கல்பத்திற்குத் தூய பராமரிப்பும் தூய உலகமும் இருந்தன. எனவே, அரைக்கல்பத்திற்கு நீங்கள் தூய்மையினூடாகப் பிறந்தீர்கள். தூய்மையால் பராமரிக்கப்பட்டீர்கள். அரைக்கல்பத்திற்கு, நீங்கள் தூய்மையால் வழிபடப்படுகிறீர்கள்.

மூன்றாவதாக, அவர் தனது இதயபூர்வமான அதிகளவு அன்புடன் உங்களைப் பராமரிக்கிறார். உங்களை மேன்மையானவர்களாகவும் விலைமதிப்பற்றவர்களாகவும் கருதி உங்களைப் பராமரிக்கிறார். இது ஏனெனில், இந்த வேளையில், இறைவனே தாயும் தந்தையுமான ரூபத்தில் குழந்தைகளான உங்களைப் பார்த்துக் கொள்கிறார். அதாவது, உங்களைப் பராமரிக்கிறார். உங்களின் பராமரிப்பு அழியாதது என்பதாலும், நீங்கள் அழியாத அன்புடன் பார்த்துக் கொள்ளப்படுவதாலும், கல்பம் முழுவதும் நீங்கள் மகத்தான இராஜரீகத்துடனும் அன்புடனும் மரியாதையுடனும் பார்த்துக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் அநாதியாக இத்தகைய அன்புடனும் சுத்தத்துடனும் தூய்மையுடனும் கனிவுடனும் பார்த்துக் கொள்ளப்படுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். எனவே, நீங்கள் எத்தனை பெறுமதிமிக்கவர்கள் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? ஒவ்வோர் இரத்தினத்திற்கும் அதிகளவு மதிப்பு உள்ளது! எனவே,இன்று, இரத்தின வியாபாரியான தந்தை ஒவ்வோர் இரத்தினத்தினதும் மதிப்பைப் பார்த்தார். உலகின் எண்ணற்ற ஆத்மாக்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். ஆனால் பஞ்ச பாண்டவர்களான நீங்கள் அந்த எண்ணற்றவர்களை விட அதி சக்திசாலிகள். அந்த எண்ணற்றவர்கள் உங்களில் ஒருவருக்கேனும் சமமானவர்கள் இல்லை. நீங்கள் அத்தகைய சக்திசாலிகள். ஆகவே, நீங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். உங்களின் மதிப்பை நீங்கள் அறிவீர்களா? அல்லது, சிலவேளைகளில் நீங்கள் உங்களையே மறந்துவிடுகிறீர்களா? உங்களையே நீங்கள் மறக்கும்போது, விரக்தி அடைகிறீர்கள். உங்களையே நீங்கள் மறக்காதீர்கள். உங்களை விலைமதிப்பற்றவராகக் கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். ஆனால், சின்னஞ்சிறிய தவறையேனும் செய்யாதீர்கள். நீங்கள் விலைமதிப்பற்றவர். ஆனால் நீங்கள் தந்தையின் சகவாசத்தினாலேயே விலைமதிப்பற்றவர்கள் ஆகினீர்கள். நீங்கள் தந்தையை மறந்து, உங்களைப் பற்றி மட்டும் நினைத்தால், அது தவறானது. உங்களை உருவாக்கிய ஒரேயொருவரை மறக்காதீர்கள். நீங்கள் இவ்வாறு ஆகியுள்ளீர்கள். ஆனால், உங்களை உருவாக்கிய ஒரேயொருவரால் நீங்கள் இவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். இதுவே அதைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறை ஆகும். நீங்கள் வழிமுறையை மறந்தால், அந்தப் புரிந்துணர்வு விவேகமற்ற தன்மையாக மாறிவிடுகிறது. அப்போது, நான் என்ற உணர்வே இருக்கும். வழிமுறையை மறப்பதனால், நீங்கள் வெற்றியை அனுபவம் செய்வதில்லை. ஆகவே, சரியான வழிமுறையில் உங்களை விலைமதிப்பற்றவராக அறிந்து, உலகின் மூதாதையர்கள் ஆகுங்கள். நீங்கள் எதுவும் இல்லை என நினைத்து மனவிரக்தி அடையாதீர்கள். நான் எதுவுமே இல்லை என்றும் நினைக்காதீர்கள். நான் மட்டுமே அனைத்தும் என்றும் நினைக்காதீர்கள். இரண்டும் தவறானவை. நான் அத்தகையவன். ஆனால், என்னை உருவாக்கிய ஒரேயொருவர் அவ்வாறு என்னை ஆக்கியுள்ளார்;. நீங்கள் தந்தையை நீக்கினால், அது பாவம் ஆகிவிடும். தந்தை இருந்தால், பாவம் இல்லை. தந்தையின் பெயர் எங்குள்ளதோ, அங்கு பாவத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. பாவம் இருக்கும்போது, அங்கு தந்தையின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. எனவே, உங்களின் மதிப்பை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?

நீங்கள் இறைவனின் திருஷ்டிக்குத் தகுதிவாய்ந்தவர் ஆகியுள்ளீர்கள். இது சாதாரணமான விடயம் அல்ல. நீங்கள் பராமரிப்புக்குத் தகுதிவாய்ந்தவர் ஆகியுள்ளீர்கள். நீங்கள் அழியாத தூய்மையின் பிறப்புரிமையின் உரிமையைக் கோரியுள்ளீர்கள். இதனாலேயே, உங்களின் பிறப்புரிமையைப் பெறுதல் கஷ்டம் இல்லை. அது இலகுவாகப் பெறப்படுகிறது. உங்களுக்கு உரிமையுள்ள குழந்தைகளாக இருக்கும் அனுபவம் உள்ளது. அதனால் தூய்மையைக் கடைப்பிடித்தல் உங்களுக்குச் சிரமமாக இருப்பதில்லை. தூய்மை சிரமம் என நினைப்பவர்கள், அதிகளவில் தளம்புவார்கள். தூய்மை சுயதர்மம் ஆகும். அது உங்களின் பிறப்புரிமை. அதனால் அது எப்போதும் இலகுவாகவே இருக்கும். உலக மக்கள் ஏன் ஓடுகிறார்கள்? அவர்களுக்குத் தூய்மை கஷ்டமாக உள்ளது. இந்த உரிமை இல்லாத அந்த ஆத்மாக்களுக்கு இது நிச்சயமாகக் கஷ்டமாகவே இருக்கும். உரிமையுள்ள ஆத்மாக்கள் வந்தவுடனேயே, தூய்மை தந்தையிடமிருந்து பெறப்படும் தமது உரிமை என்றும் அதனால் நிச்சயமாகத் தாம் தூய்மை அடைய வேண்டும் என்றும் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் இதயங்கள் சதா தூய்மையை நோக்கியே கவரப்படும். தொடர்ந்து முன்னேறும்போது, அவர்களின் எண்ணங்களில் அல்லது கனவுகளில் ஏதாவது பரீட்சையின் ரூபத்தில் மாயை வந்தால், உரிமையுள்ள ஆத்மாக்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதனால், அவர்கள் பயப்பட மாட்டார்கள். ஆனால், ஞான சக்தியால் அவர்கள் தமது எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள். ஓர் எண்ணத்தினால் அவர்கள் பல எண்ணங்களை உருவாக்க மாட்டார்கள். அவர்கள் ஏதாவதொன்றின் சுவடை அதன் சந்ததியின் ரூபமாக மாற்ற மாட்டார்கள். என்ன நிகழ்ந்தது? இது நிகழ்ந்தது.... இதுவே சந்ததி ஆகும். கேள்விகளைக் கேட்பதனால், நீங்கள் ஒரு வரிசையை உருவாக்குகிறீர்கள் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இந்த முறையில் நீங்கள் சந்ததியை உருவாக்குகிறீர்கள். ஏதாவதொன்று வருகிறது. பின்னர் நல்லதற்காகச் சென்று விடுகிறது. அது உங்களைச் சோதிப்பதற்கே வருகிறது. நீங்கள் அதில் சித்தி அடைந்ததும் அது முடிந்துவிடுகிறது. மாயை ஏன் வந்தாள்? அவள் எங்கிருந்து வந்தாள்? அவள் இங்கிருந்து வந்தாள். அவள் அங்கிருந்து வந்தாள். அவள் வந்திருக்கக்கூடாது. அவள் ஏன் வந்தாள்? இந்த சந்ததி இருக்கக்கூடாது. ஓகே. அவள் வந்தாள். எனவே, அவளை அமரச் செய்யாதீர்கள்! அவளை விரட்டி விடுங்கள்! அவள் ஏன் வந்தாள்? என நீங்கள் நினைத்தால், அவள் அங்கேயே அமர்ந்துவிடுவாள். அவள் உங்களை முன்னேறச் செய்வதற்கும், உங்களைப் பரீட்சிப்பதற்குமே வந்தாள். வகுப்பில் உங்களை முன்னேற்றுவதற்காகவும் உங்களை அனுபவசாலி ஆக்குவதற்குமே அவள் வந்தாள். அவள் ஏன் வந்தாள்? அவள் இவ்வாறு வந்தாள். அவள் அவ்வாறு வந்தாள். இவ்வாறு நினைக்காதீர்கள். மாயைக்கு இத்தகைய வடிவமும் இருக்கிறதா?அது சிவப்பாக உள்ளது. அது பச்சையாக உள்ளது. அது மஞ்சளாக உள்ளது! என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் இந்த விரிவாக்கத்திற்குள் செல்வீர்கள். இத்தகைய விரிவாக்கத்திற்குள் செல்லாதீர்கள். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? அதை வெற்றி கொள்ளுங்கள். திறமைச் சித்தி எய்துங்கள். உங்களிடம் ஆயுதமாக ஞான சக்தி உள்ளது. நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். நீங்கள் திரிகாலதரிசிகள். திரிவேணிகள் (மூன்று நதிகளின் சங்கமம்). உங்களுக்கு என்ன குறை? விரைவாகப் பயப்படாதீர்கள்! ஓர் எறும்பு வந்தாலும் நீங்கள் பயப்படுகிறீர்கள். நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்கள். சிந்திப்பது என்றால் மாயைக்கு விருந்தோம்புவதைப் போன்றதே. அவள் பின்னர் அங்கேயே தனது வீடாக ஆக்கிக் கொள்கிறாள். வீதியால் நடந்து செல்லும்போது, அழுக்கான எதையாவது கண்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அங்கேயே நின்று, யார் இதை இங்கு போட்டது? என்ன நிகழ்ந்தது? இது இங்கு இருக்கக்கூடாது என்று சிந்திப்பீர்களா? நீங்கள் இவ்வாறு சிந்திப்பீர்களா? அல்லது அப்பால் நகர்ந்து, முன்னால் செல்வீர்களா? வீணான எண்ணங்களின் சந்ததியை உருவாக்க அனுமதிக்காதீர்கள். ஆரம்பத்திலேயே அதன் ரூபத்தை முடித்துவிடுங்கள். முதலில், அது ஒரு விநாடிக்குரிய விடயம். அதற்கு மணித்தியாலங்கள், நாட்கள் அல்லது மாதங்கள் கூடத் தேவைப்படும் அளவிற்கு நீங்கள் அதை விரிவாக்குகிறீர்கள். ஒரு மாதத்தின் பின்னர் என்ன நிகழ்ந்தது எனக் கேட்டால், அது ஒரு விநாடிக்குரிய விடயம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆகவே, பயப்படாதீர்கள். ஆழத்திற்குள் செல்லுங்கள்: ஞானத்தின் ஆழத்திற்குள் செல்லுங்கள். சூழ்நிலைகளின் ஆழத்திற்குள் அல்ல. இத்தகைய மேன்மையான, விலைமதிப்பற்ற இரத்தினங்கள் சிறிய தூசுத் துணிக்கைகளுடன் விளையாடுவதை பாப்தாதா பார்க்கும்போது, இரத்தினங்களுடன் விளையாட வேண்டிய இந்த இரத்தினங்கள் தூசுத் துணிக்கைகளுடன் விளையாடுகிறார்களே என நினைக்கிறார்! நீங்கள் இரத்தினங்கள். எனவே, நீங்களும் இரத்தினங்களுடனேயே விளையாட வேண்டும்.

பாப்தாதா இத்தகைய அன்பான பிரியத்துடன் உங்களைப் பராமரிக்கிறார். அவ்வாறிருக்கும்போது, நீங்கள் தூசுத் துணிக்கைகளுடன் விளையாடுவதை எவ்வாறு அவரால் சகித்துக் கொள்ள முடியும்? நீங்கள் அழுக்காகிய பின்னர், இப்போது எங்களைச் சுத்தம் செய்யுங்கள், எங்களைச் சுத்தம் செய்யுங்கள்! எனக் கூறுகிறீர்கள். நீங்கள் பயப்படுகிறீர்கள். நான் இப்போது என்ன செய்வது? நான் இதை எவ்வாறு செய்வது? நீங்கள் ஏன் சேற்றுடன் விளையாடுகிறீர்கள்? அதிலும், நிலத்தில் சிறிதளவு சேறே உள்ளது. எனவே, எப்போதும் உங்களின் சொந்த மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். அச்சா.

கல்பம் முழுவதும் விலைமதிப்பற்றவர்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், இறையன்பிற்குத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், இறைவனின் பராமரிப்பிற்குத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், தூய்மையின் பிறப்புரிமை என்ற உரிமையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும், தந்தையுடன் ஒன்றாக இருக்கும் வழிமுறையால் எப்போதும் வெற்றி அடையும் ஆத்மாக்களுக்கும், விலைமதிப்பற்ற இரத்தினங்களாகி, எப்போதும் இரத்தினங்களுடன் விளையாடும் இராஜரீகக் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1)நீங்கள் எப்போதும் உங்களைத் தந்தையின் கண்களில் அமிழ்ந்திருப்பவராக, கண்களில் அமிழ்ந்திருக்கும் மிகவும் இலேசான புள்ளிகளாகக் கருதுகிறீர்களா? எனவே, நீங்கள் சதா புள்ளிகள். நீங்கள் தந்தையின் கண்களில் எப்போதும் அமிழ்ந்திருக்கும் புள்ளிகள் ஆகுகிறீர்கள். பாப்தாதா உங்களின் கண்களில் அமிழ்ந்துள்ளார். நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் கண்களில் அமிழ்ந்துள்ளீர்கள். பாப்தாதாவை மட்டும் உங்களின் கண்களில் நீங்கள் வைத்திருக்கும்போது, உங்களால் வேறு எதையும் பார்க்க முடியாதிருக்கும். எனவே, நான் எப்போதும் ஒரு புள்ளி என்ற விழிப்புணர்வுடன் சதா இலேசாகவும் ஒளியாகவும் இருங்கள். புள்ளிக்கு எந்தவிதமான சுமையும் இல்லை. இந்த உணர்வின் வடிவம் உங்களைச் சதா தொடர்ந்து முன்னேறச் செய்கிறது. நீங்கள் கண்ணின் மத்தியில் பார்க்கும்போது, ஒரு புள்ளி (கண்மணி) மட்டுமே தென்படுகிறது. கண்மணியே பார்க்கிறது. அந்தப் புள்ளி இல்லாவிட்டால், உங்களுக்குக் கண்கள் இருந்தாலும், உங்களால் பார்க்க முடியாது. எனவே, எப்போதும் இந்த ரூபத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். இப்போதும் எதிர்காலத்திலும் குழந்தைகளின் பாக்கியத்தைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். உங்களின் எதிர்காலப் பாக்கியத்தை உருவாக்குவதற்கான பேனா நிகழ்காலமே ஆகும். உங்களின் நிகழ்காலத்தை மேன்மையாக்குவதற்கான வழிமுறை, எப்போதும் மூத்தவர்களிடமிருந்து சமிக்ஞைகளைப் பெற்று, உங்களை மாற்றிக் கொள்வதாகும். இந்த விசேடமான நற்குணத்தால், உங்களின் நிகழ்காலமும் எதிர்காலப் பாக்கியமும் மேன்மை அடையும்.

2) உங்கள் ஒவ்வொருவரின் நெற்றிகளிலும் பாக்கிய நட்சத்திரம் பிரகாசிக்கிறது, அல்லவா? அது எப்போதும் பிரகாசிக்கிறதா? அது சிலவேளைகளில் விட்டு விட்டு எரிவதில்லை, அல்லவா? என்றும் எரிகின்ற ஒளியான தந்தையுடன் கூடவே, நீங்களும் என்றும் எரிகின்ற நட்சத்திரங்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? காற்று சிலவேளைகளில் தீபத்தை அல்லது நட்சத்திரத்தைத் தளம்பச் செய்யவில்லை, அல்லவா? எங்கு தந்தையின் நினைவு உள்ளதோ, அங்கு அந்த நட்சத்திரம் அநாதியாக ஒளிரும். அது தளம்பாது. ஒரு விளக்கு விட்டு விட்டு எரியும்போது, அதை அணைத்துவிடுவார்கள். ஏனெனில், எவரும் அதை விரும்புவதில்லை. எனவே, இங்கும் சதா பிரகாசிக்கும் நட்சத்திரங்கள். நீங்கள் சதா ஞான சூரியனான தந்தையிடமிருந்து ஒளியைப் பெற்று, மற்றவர்களுக்கு ஒளியை வழங்குகிறீர்கள். சேவை செய்வதற்கான ஊக்கமும் உற்சாகமும் எப்போதும் உங்களிடம் உள்ளன. நீங்கள் அனைவரும் மேன்மையான ஆத்மாக்கள். மேன்மையான தந்தையின் மேன்மையான ஆத்மாக்கள்.

நினைவு சக்தியால் வெற்றி இலகுவாகப் பெறப்படும். எந்தளவிற்கு உங்களிடம் நினைவும் சேவையும் ஒன்றாக உள்ளனவோ, அந்தளவிற்கு நினைவினதும் சேவையினதும் சமநிலையானது, இயல்பாகவே நீங்கள் சதா வெற்றி அடைவதற்கான ஆசீர்வாதங்களைப் பெறச் செய்யும். ஆகவே, சக்திவாய்ந்த நினைவெனும் சூழலை உருவாக்குவதன் மூலம், சக்திவாய்ந்த ஆத்மாக்கள் வெளிப்படுகிறார்கள். நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். லௌகீகத் தொழில் பெயரளவிலேயே உள்ளது. ஆனால், உண்மையான அன்பு, தந்தைக்கும் சேவைக்குமானது. லௌகீகத் தொழிலும் சேவைக்காகவே ஆகும். அது உங்களின் பற்றினால் செய்யப்படுவதில்லை. நீங்கள் வழிகாட்டல்களுக்கேற்பவே அதைச் செய்கிறீர்கள். இதனாலேயே, இத்தகைய குழந்தைகளுடன் தந்தையின் அன்புக் கரம் உள்ளது. சதா சந்தோஷமாக ஆடிப்பாடுங்கள். இதுவே சேவை செய்வதற்கான வழிமுறை ஆகும். உங்களின் சந்தோஷத்தை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்களும் சந்தோஷப்படுவார்கள். இந்தச் சேவையே நிகழும். பாப்தாதா தொடர்ந்து குழந்தைகளான உங்களுக்குக் கூறுகிறார்: எந்தளவிற்கு நீங்கள் மகாதானிகள் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் பொக்கிஷங்கள் தொடர்ந்து அதிகரிக்கும். மகாதானிகள் ஆகி, உங்களின் பொக்கிஷங்களை அதிகரியுங்கள். மகாதானிகளாகி, அதிகளவில் தானம் செய்யுங்கள். இவ்வாறு கொடுத்தல் உண்மையில் பெறுதலே ஆகும். நீங்கள் நல்லதைப் பெறும்போது, உங்களால் மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது.

உங்களின் பாக்கியத்தைப் பார்க்கும்போது, எப்போதும் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் இத்தகைய மகத்தான பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள்! வீட்டில் இருந்தவண்ணம் நீங்கள் கடவுளைக் கண்டீர்கள்! இதை விட மகத்தான பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்? இந்தப் பாக்கியத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, சந்தோஷமாக இருங்கள்! அப்போது துன்பமும் அமைதியின்மையும் எல்லா வேளைக்கும் முடிந்துவிடும். நீங்கள் சந்தோஷ சொரூபங்களாகவும் அமைதி சொரூபங்களாகவும் ஆகுவீர்கள். கடவுளால் பாக்கியத்தை உருவாக்கியவர்கள், அதிமேன்மையானவர்கள். எனவே, சதா உங்களுக்குள் ஊக்கத்தையும் புதிய உற்சாகத்தையும் அனுபவம் செய்து, தொடர்ந்து முன்னேறுங்கள். ஏனெனில், சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் புதிய ஊக்கமும் புதிய உற்சாகமும் கொண்டது.

நீங்கள் இப்போதிருப்பதைப் போன்று தொடர்ந்து முன்னேறுவதில் சந்தோஷப்படாதீர்கள். சதா உங்களை முன்னேறச்செய்யும் புதிய ஊக்கத்தையும் புதிய உற்சாகத்தையும் எப்போதும் கொண்டிருங்கள். ஒவ்வொரு நாளும் புதியது. உங்களிலும் சேவையிலும் ஏதாவதொரு வகையான புதுமையை எப்போதும் நீங்கள் நிச்சயமாக வைத்திருக்க வேண்டும். எந்தளவிற்கு உங்களிடம் ஊக்கமும் உற்சாகமும் உள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் தொடர்ந்து புதிய தொடுகைகளைப் பெறுவீர்கள். நீங்கள் எப்போதும் ஏனைய விடயங்களில் மும்முரமாக இருந்தால், உங்களால் புதிய தொடுகைகளைப் பெற முடியாது. கடையுங்கள். நீங்கள் புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள்.

பந்தனத்தில் இருப்பவர்களுக்கு அன்பையும் நினைவையும் கொடுக்கும்போது:
பந்தனத்தில் இருப்பவர்களின் நினைவு எப்போதும் தந்தையை வந்தடைகிறது. பந்தனத்தில் இருப்பவர்களின் யோகத்தை, அதாவது, அவர்களின் நினைவிற்கான அன்பை தீயைப் போன்றதாக ஆக்கும்படி பாப்தாதா எப்போதும் அவர்களுக்குக் கூறுகிறார். அன்பு ஒரு அக்கினி போன்று ஆகும்போது, அனைத்தும் அந்த நெருப்பில் எரிந்து போகின்றன. அந்த பந்தனங்களும் அன்பெனும் அக்கினியில் முடிந்துவிடுகின்றன. நீங்களும் விடுதலை பெற்ற ஆத்மா ஆகி, நீங்கள் உருவாக்கும் எண்ணங்களில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அன்பானவர்கள். அன்புள்ளவர்களின் நினைவு பாபாவை வந்தடைகிறது. அன்பிற்குப் பிரதிபலனாக, நீங்கள் அன்பைப் பெறுகிறீர்கள். ஆனால், உங்களின் நினைவும் இப்போது சக்திவாய்ந்த (பலமான) நெருப்பைப் போன்று ஆகவேண்டும். அப்போது, நீங்கள் தனிப்பட்ட முறையில் இங்கு வருகின்ற நாள் வரும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எப்போதும் ஆன்மீக ஸ்திதியில் இருந்து, மற்றவர்களை ஆத்மாக்களாகப் பார்க்கும் ஆன்மீக ரோஜா ஆகுவீர்களாக.

ஆன்மீக ரோஜா என்பவர் எப்போதும் ஆன்மீக நறுமணத்தைக் கொண்டிருப்பார். ஆன்மீக நறுமணத்தைக் கொண்டிருப்பவர்கள் எங்கு நோக்கினாலும் அல்லது யாரைப் பார்த்தாலும், அவர்கள் சரீரத்தை அன்றி, ஆத்மாவை மட்டுமே பார்ப்பார்கள். எனவே, எப்போதும் நீங்கள் ஆன்மீக ஸ்திதியில் இருந்தவண்ணம் மற்றவர்களை ஆத்மாக்களாகப் பாருங்கள். தந்தை எவ்வாறு அதிமேலானவரோ, அவ்வாறே அவரின் பூந்தோட்டமும் அதிமேலானது. குழந்தைகளான நீங்களே அந்தப் பூந்தோட்டத்தின் விசேட அலங்காரங்கள், ஆன்மீக ரோஜாக்கள் ஆவீர்கள். உங்களின் ஆன்மீக நறுமணம் ஆத்மாக்கள் பலருக்கும் நன்மை செய்யும்.

சுலோகம்:
ஒழுக்கக்கோட்பாடுகளை மீறுவதன் மூலம், நீங்கள் எவருக்காவது சந்தோஷத்தைக் கொடுத்தால், அது உங்களின் துன்பக் கணக்கிலேயே சேமிக்கப்படும்.