03.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் மாத்திரமே உண்மையான, தனித்துவமான மந்திரவாதிகள் ஆவீர்கள். நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற மாயாஜாலத்தைச் செய்ய வேண்டும்.

கேள்வி:
சிறந்த முயற்சி செய்யும் மாணவர்களின் அறிகுறிகள் யாவை?

பதில்:
அவர்கள் திறமைச்சித்தி எய்துகின்ற, அதாவது, வெற்றிமாலையில் வருவதற்கான இலக்கினைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்களது புத்தியில் ஒரேயொரு தந்தையின் நினைவை மாத்திரமே கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமது புத்தியின் யோகத்தைத் தங்கள் சொந்தச் சரீரங்கள் உட்பட, சகல சரீர உறவுகளிடமிருந்தும், துண்டித்து, ஒரேயொருவரிடம் மாத்திரம் அன்பு செலுத்துகின்றார்கள். அத்தகைய முயற்சியாளர்கள் மாத்திரமே மாலையின் மணிகள் ஆகுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மந்திரவாதிகள் ஆகியுள்ளீர்கள். ஆகவே தந்தையும் மந்திரவாதி என்றழைக்கப்படுகிறார். மனிதர்களைத் தேவர்களாக மாற்றக்கூடிய வேறு மந்திரவாதிகள் எவரும் கிடையாது. இது மாயாஜாலம், அல்லவா? நீங்கள் அத்தகைய பெரும் வருமானத்தைச் சம்பாதிக்கும் பாதையைக் காட்டுகிறீர்கள். பாடசாலை ஆசிரியர்கள் எவ்வாறு ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பது என உங்களுக்குக் காட்டுகிறார்கள். இந்தக் கல்வியும் ஒரு வருமானமேயாகும். பக்தி மார்க்கத்தில் உள்ள கதைகளையும், சமயநூல்களையும் கல்வி என்றழைக்க முடியாது. அவற்றில் ஒரு வருமானம் இல்லை; அங்கு செலவு மட்டுமே ஏற்படுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் பக்தி மார்க்கத்தில், படங்களைச் செய்வதற்கும், ஆலயங்களைக் கட்டுவதற்கும், வழிபடுவதற்கும் அதிகளவைச் செலவழித்தீர்;கள். ஓர் ஆசிரியர் குறைந்தபட்சம் உங்களை ஓர் வருமானத்தைச் சம்பாதிக்கவாவது வைக்கின்றார்; அங்கு ஜீவனோபாயம் இருக்கின்றது. குழந்தைகளாகிய உங்களுடைய கல்வி மிக மேன்மையானது. நீங்கள் அனைவரும் கற்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மனிதர்களைத் தேவர்கள் ஆக்குகிறீர்கள். ஏனைய கல்விகள் மூலம் உங்களால் சட்டத்தரணிகள் போன்றவர்கள் ஆகமுடியும். அது ஒரு பிறவிக்கே ஆகும். பகலிற்கும் இரவிற்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. இதனாலேயே, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய போதையைக் கொண்டிருக்க வேண்டும். இது மறைமுகமான போதையாகும். இது எல்லையற்ற தந்தையின் அற்புதமாகும். இது அத்தகைய ஆன்மீக மாயாஜாலமாகும்! நீங்கள் பரமாத்மாவை நினைவுசெய்வதன் மூலம் சதோபிரதான் ஆகவேண்டும். உங்களை ஓர் எருதாகக் கருதிக்கொள்ளுங்கள் என ஒருவரிடம் ஒரு சந்நியாசி கூறினார். பின்னர் அந்த நபர் சென்று ஓர் அறையில் அமர்ந்து, தன்னை எருதாகக் கருதினார். நான் ஓர் எருது, எவ்வாறு என்னால் இங்கிருந்து வெளியேற முடியும்? என அவர் பின்னர் கூறினார். தந்தை கூறுகிறார்: நீங்கள் தூய்மையான ஆத்மாக்களாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்;கள். இந்த ஞானத்தைச் செவிமடுப்பதன் மூலம், நீங்கள் மனிதரிலிருந்து நாராயணனாக மாறுகிறீர்கள். அதாவது, மனிதனிலிருந்து தேவராக மாறுகிறீர்கள். தேவ இராச்சியம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இப்பொழுது பாரதத்தில் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். தந்தை கேட்கிறார்: நான் உங்களுக்கு வழங்கும் ஸ்ரீமத் சரியானதா அல்லது சமயநூல்களின் வழிகாட்டல்கள் சரியானவையா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்;கள்! கீதையானது, சகல சமயநூல்களினதும் இரத்தினமான, ஸ்ரீமத் பகவத் கீதை எனப்படுகிறது. அது குறிப்பாக எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது, கடவுள் என அழைக்கப்படுபவர் யார்? அது அசரீரியான சிவனே என நீங்கள் அனைவரும் நிச்சயமாகக் கூறுவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அவருடைய குழந்தைகளான, சகோதரர்கள் ஆவோம். அவரே ஒரேயொரு தந்தை ஆவார். தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் காதலிகள். நீங்கள் அதியன்பிற்கினியவரான என்னை நினைவுசெய்கிறீர்கள், ஏனெனில் நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தேன். அதனூடாக நீங்கள் நடைமுறையில் மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறினீர்கள். தாங்;கள் சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுப்பதாக அம்மக்கள்; கூறுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் மனிதர்களிலிருந்து நாராயணனாக ஆகமுடியும் என்பதை அவர்கள் நம்புவதில்லை. தந்தை ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது ஞானக் கண்ணை வழங்குகிறார், அதனூடாக நீங்கள் ஆத்மாவை அறிந்துகொள்கிறீர்;கள். சரீரம் இன்றி ஆத்மாவால்; பேச முடியாது. ஆத்மாக்களின் வசிப்பிடம் நிர்வாணா தாமம் என்றழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்ய வேண்டும். உங்களுடைய புத்திகளிலிருந்து துன்ப தாமத்தை நீக்குங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது எது சரி, எது பிழை என்ற புரிந்துணர்வினைப் பெற்றுள்ளீர்கள். செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் அர்த்தமும் இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறார், குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். வேறு எந்த மனிதர்களுக்கும் தந்தையைத் தெரியாது. தந்தை கூறுகிறார்: இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இராவண இராச்சியத்தில் அனைவரது செயல்களும் பாவகரமானவை. சத்திய யுகத்தில், சகல செயல்களும் நடுநிலையானவை. அங்கு குழந்தைகள் எவரும் பிறக்க மாட்டார்களா? எனச் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: அது விகாரமற்ற உலகம் என்றழைக்கப்படுகிறது. எனவே, ஐந்து விகாரங்களும் எங்கிருந்து வர முடியும்? இது மிகவும் எளிமையான விடயமாகும். தந்தை இங்கிருந்து அதனை விளங்கப்படுத்துகிறார். எனவே, இதனை மிக விரைவாகச் சரியெனப் புரிந்துகொள்பவர்கள் மிகவும் உஷாரானவர்கள் ஆகுகிறார்கள். இதனைப் புரிந்துகொள்ளாதவர்கள் மேலும் முன்னேறும்பொழுதே, உஷாராகுவார்கள். விட்டிற் பூச்சிகள் சுவாலையை நோக்கி வந்து, அதனை விட்டு நீங்கிப் பின் மீண்டும் திரும்பி வருகின்றன. அந்த ஒரேயொருவரே சுவாலை ஆவார். அனைவரும் சுவாலையில் எரியப் போகிறார்கள். இது ஒரு விளக்கம் மாத்திரமேயாகும், சுவாலை இருப்பதில்லை. அது ஒரு பொதுவான விடயமாகும். பல விட்டிற்பூச்சிகள் சுவாலையில் எரிந்து போகின்றன. தீபாவளியின்பொழுது, பல சிறிய பூச்சிகள் வெளிப்பட்டு எரிந்து போகின்றன் அவை பிறந்து இறந்து விடுகின்றன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவர்கள் இறுதியில் வந்து பிறந்து, மீண்டும் இறந்து விடுகிறார்கள்; அவர்கள் பூச்சிகள் போன்றிருக்கிறார்கள். தந்தை உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியை வழங்குவதற்கு வந்துள்ளார். எனவே, நீங்கள் திறமைச்சித்தி எய்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நல்ல மாணவர்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். இந்த மாலை திறமைச்சித்தி எய்துபவர்களுக்கு உரியது. இயன்றவரை தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். விநாச வேளையில் அன்பான புத்தியைக் கொண்டிராதவர்கள் உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. உங்களால் இதனை விளங்கப்படுத்த முடியும். எங்கள் புத்திகள் தந்தை மீது அன்பு கொண்டவை. நாங்கள் தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்வதில்லை. தந்தை கூறுகிறார்: உங்களுடைய சரீரங்கள், மற்றும் சகல சரீர உறவுமுறைகளையும் துறந்து, சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னைப் பெருமளவு நினைவுசெய்து, ஓ துன்பத்தை நீக்குபவரே! சந்தோஷத்தை அருள்பவரே! எனக் கூறினீர்கள். எனவே, தந்தை நிச்சயமாகச் சந்தோஷத்தை அருள்பவர். சுவர்க்கம் சந்தோஷதாமம் என அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளேன். நான் வந்து, காமச்சிதையில் அமர்ந்ததனால் எரிந்து போய்விட்ட குழந்தைகளின் மீது ஞான மழையைப் பொழிகின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு யோகம் கற்பிக்கிறேன். தந்தையை நினைவு செய்யுங்கள், உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தேவதைகளின் தாமத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்களும் மந்திரவாதிகள் ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய உண்மையான மந்திரவித்தையையிட்டுப் போதை கொள்ள வேண்டும். சில மந்திரவாதிகள் மிகவும் நல்லவர்களும், திறமைசாலிகளும் ஆவர்; அவர்களால் பல பொருட்களைத் தோன்றச் செய்ய முடியும். எவ்வாறாயினும், இந்த மாயாஜாலம் தனித்துவமானது. வேறு எவராலுமன்றி, ஒரேயொருவராலேயே அதனைக் கற்பிக்க முடியும். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இந்தக் கற்பித்தல்கள் புதிய உலகிற்கானதாகும். அது புதிய உலகமான, சத்தியயுகம் என்றழைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். எவருக்கும் இந்த அதி மேன்மையான சங்கம யுகத்தைப் பற்றித் தெரியாது. நீங்கள் அத்தகைய மேன்மையான மனிதர்கள் ஆகுகிறீர்கள். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். பிராமண ஆசிரியர்களான நீங்கள் வகுப்பை நடாத்தும்பொழுது, முதலில் அனைவரையும் எச்சரிப்பது உங்களுடைய கடமையாகும். அவர்களுக்குக் கூறுங்கள்: சகோதர, சகோதரிகளே, இங்கு உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு அமர்ந்திருங்கள். இந்த ஆத்மாவாகிய நான், இந்த அங்கங்களினூடாகச் செவிமடுக்கிறேன். தந்தை உங்களுக்கு 84 பிறவிகளின் இரகசியங்களையும் விளங்கப்படுத்தியுள்ளார். எந்த மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள்? அனைவரும் அவற்றை எடுப்பதில்லை. எவரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் தாங்கள் செவிமடுக்கின்ற அனைத்திற்கும், அது உண்மை! எனக் கூறுகிறார்கள். அனுமான் காற்றிலிருந்து தோன்றியதாக யாராவதொருவர் கூறினால், அது உண்மை! என அவர்கள் கூறுகின்றனர். அதன்பின்னர், அவர்கள் மற்றவர்களுக்குத் தொடர்ந்தும் அத்தகைய கதைகளைக் கூறும்பொழுது, அதைச் செவிமடுப்பவர்களும் அது உண்மை! அது உண்மை! எனக் கூறுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எது சரி, எது பிழை எனப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்ற, ஞானக் கண்ணை இப்பொழுது பெற்றுள்ளீர்கள். அதனால், நீங்கள் சரியான செயல்களை மாத்திரமே செய்ய வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அந்தத் தந்தையே சகல ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள்! உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள்! ஒவ்வொரு ஆத்மாவிலும் சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாக்கள் தங்கள் சம்ஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் யாராவதொருவரின் பெயர் போற்றப்படும்பொழுது, அவர் தனது முன்னைய பிறவியில் அத்தகைய செயல்களைச் செய்துள்ளார் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. யாராவதொருவர் தனது முன்னைய பிறவியில் கல்லூரி ஒன்றைக் கட்டியிருந்தால், தனது தற்போதைய பிறவியில் நல்ல கல்வியைப் பெற்றுக்கொள்வார். செயல்களின் அந்தக் கர்மக் கணக்கு உள்ளது. சத்தியயுகத்தில், பாவச் செயல்கள் பற்றிய கேள்வி எதுவும் கிடையாது. நீங்கள் நிச்சயமாக அங்கு செயல்களைச் செய்கிறீர்கள்; நீங்கள் அங்கு ஆட்சிசெய்து, உண்கிறீர்கள், ஆனால் நீங்கள் எந்தவிதமான தவறான செயல்களையும் அங்கு செய்வதில்லை. அது இராம இராச்சியம் என்றழைக்கப்படுகிறது. இது இராவண இராச்சியமாகும். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். அது புதிய உலகமாகும். பழைய உலகில் தேவர்களின் நிழல் கூடப் படிய முடியாது. நீங்கள் இங்கு இலக்ஷ்மியின் விக்கிரகத்தை வைத்தால், அதன் நிழல் காணப்படும், ஆனால் உயிர்வாழும் இலக்ஷ்மியின் நிழல் இருக்காது. அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீர்ச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது; உங்களுடைய இந்தச் சக்கரமும் தொடர்ந்தும் சுழல்கிறது. இந்த விடயங்கள் உதாரணங்களை உபயோகித்து விளங்கப்படுத்தப்படுகின்றன. தூய்மையே சிறந்த விடயமாகும். குமாரி ஒருவர் தூய்மையானவராக இருப்பதனால், அனைவரும் அவருக்குத் தலைவணங்குகிறார்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். உங்களில் பெரும்பாலானோர் குமாரிகள், இதனாலேயே, அம்புகள் குமாரிகளால் எய்யப்பட்டன என நினைவுகூரப்படுகிறது. அந்த அம்புகள் ஞான அம்புகளாகும். நீங்கள் இங்கமர்ந்திருந்து அவர்களுக்குப் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துகிறீர்;கள். சற்குருவான தந்தை ஒரேயொருவரே. அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். மன்மனாபவ! எனக் கடவுள் கூறுகிறார். இதுவும் ஒரு மந்திரமே. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது. இந்த முயற்சி மறைமுகமானது. ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். அவர்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிந்திருந்திருக்கிறார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். முதலில் பிரிந்தவர்களே அவரை முதலில் சந்திப்பவர்கள். இதனாலேயே, அதியன்பிற்கினிய, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளே எனத் தந்தை கூறுகிறார். நீங்கள் எப்பொழுது பூஜிப்பதை ஆரம்பித்தீர்கள் என்பதைத் தந்தை அறிவார். அது அரைக்கு அரைவாசிக் காலமாகும்: அரைக்கல்பத்திற்கு ஞானம் இருக்கின்றது, அரைக்கல்பத்திற்கு வழிபாடு இருக்கின்றது. இரவும், பகலும் இருக்கின்றன. 24 மணித்தியாலத்தில், 12 மணித்தியாலங்கள் முற்பகல் என்றும், 12 மணித்தியாலங்கள்; பிற்பகல் என்றும் குறிக்கப்படுகின்றன. சக்கரமும் அரைக்கு அரைவாசி ஆகும்: பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் உள்ளன. ஆகவே, அவர்கள் ஏன் கலியுகத்திற்கு அவ்வளவு நீண்ட காலப்பகுதியை வழங்கியுள்ளார்கள்? எது சரி, எது பிழை என்பதை இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. கடவுள் வந்து பக்திக்கான பலனை வழங்குகிறார். அவர் பக்தர்களின் பாதுகாவலர் என்றழைக்கப்படுகிறார். நீங்கள் மேற்கொண்டு முன்னேறுகையில், சந்நியாசிகளுடன் அமர்ந்திருந்து, அவர்களுக்குப் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துவீர்கள். நீங்கள் கொடுக்கின்ற படிவத்தினை அவர்கள் நிரப்ப மாட்டார்கள். அவர்கள் தங்கள் தாய், தந்தையின் பெயரை எழுத மாட்டார்கள். சிலர் இவ்வாறு செய்யலாம். பாபா அவர்களிடம் சென்று, அவர்கள் ஏன் அனைத்தையும் துறந்தார்கள் எனக் கேட்பதுண்டு. அவர்கள் விகாரங்களையும், அத்துடன் தங்களது இல்லறத்தையும் துறந்துள்ளார்கள். நீங்கள் இப்பொழுது பழைய உலகம் முழுவதையும் துறக்கின்றீர்கள். உங்களுக்குப் புதிய உலகின் காட்சிகள் வழங்கப்படுகின்றன. அது விகாரமற்ற உலகமாகும். தந்தையான, சுவர்க்கக் கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் பூந்தோட்டத்தை உருவாக்குகிறார். அவர் முட்களை மலர்களாக மாற்றுகிறார். முதலாம் இலக்க முள் காம வாளாகும். நீங்கள் காமத்தை வாளென்றும், கோபத்தைத் தீய ஆவி என்றும் அழைப்பீர்கள். தேவர்கள் இரட்டை அகிம்சாவாதிகள். விகாரம் நிறைந்த மனிதர்கள் அனைவரும் விகாரமற்ற தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் தலைவணங்குகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு கற்பதற்கே வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் செல்வது பொதுவான விடயமாகும். கடவுள் சர்வவியாபி என அவர்கள் கூறுகின்றனர். (லௌகீகத்) தந்தை ஒருவர் எப்பொழுதாவது சர்வவியாபி ஆகமுடியுமா? குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கிறீர்கள். தந்தை வந்து பழைய உலகைப் புதிய சுவர்க்க உலகமாக ஆக்குகிறார். சிலர் நரகத்தை நரகமாகவே கருதுவதில்லை. செல்வந்தர்கள் இவ்வாறு நினைக்கிறார்கள்: சுவர்க்கம் எதனைத் தரப்போகிறது? எங்களிடம் செல்வம், மாளிகைகள், விமானங்கள் போன்றவை உள்ளன. எங்களிடம் அனைத்தும் உள்ளன் எங்களுக்கு இங்கேயே சுவர்க்கம் உள்ளது. சேரிகளில் வசிப்பவர்களுக்கு இது நரகமாகும். பாரதம் மிகவும் ஏழ்மை நிறைந்தாகவும், வறுமையாற் பீடிக்கப்பட்டதாகவும் உள்ளது. வரலாறு மீண்டும் நிகழ வேண்டும். தந்தை உங்களை மீண்டும் இரட்டைக் கிரீடதாரிகள் ஆக்குகிறார் என்ற போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தை அறிவீர்கள். சத்தியயுகம், திரேதாயுகத்தின் கதையை பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். பின்னர், சக்கரத்தின் மத்தியில் இருந்து நீங்கள் கீழிறங்க ஆரம்பிக்கிறீர்கள். கீழிறங்கும் பாதையே பாவப் பாதையாகும். தந்தை இப்பொழுது மீண்டும் வந்துள்ளார். நீங்கள் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகளாகக் கருதுகிறீர்கள். நீங்கள் சக்கரத்தைச் சுழற்றி யாராவதொருவரின் கழுத்தை வெட்டுகிறீர்கள் என்பதல்ல. அவர்கள் கிருஷ்ணர் சக்கரத்தைச் சுழற்றுவதாகச் சித்தரித்துள்ளார்கள், அவர் அசுரர்களை அதனால் அழித்ததாக அவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி பிராமணர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்களிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. அங்கு தேவர்களுக்கு இந்த ஞானம் இருக்காது. அங்கு, அவர்கள் சற்கதியினைப் பெற்றுள்ளார்கள், இதனாலேயே அது பகல் என்று கூறப்படுகிறது. இரவிலேயே கஷ்டம் ஏற்படுகின்றது. மக்கள் தமது பக்தியில் காட்சியொன்றைப் பெறுவதற்காக அதிகளவு ஹத்தயோகம் செய்கிறார்கள். தீவிரமாகப் பக்தி செய்பவர்கள் தமது உயிர்களையே பலி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அப்பொழுது மாத்திரமே அவர்களுக்கு ஒரு காட்சி அருளப்பட்டது. நாடகத்திற்கேற்ப, அவர்களின் விருப்பங்கள் தற்காலிகமான காலப்பகுதிக்கு நிறைவேற்றப்படுகின்றன. எவ்வாறாயினும், கடவுள் எதனையும் செய்வதில்லை. பக்தியின் பாகம் அரைக்கல்பமாகத் தொடர்கிறது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பாபா உங்களை இரட்டைக் கிரீடதாரிகள் ஆக்குகிறார் என்ற ஆன்மீகப் போதையைப் பேணுங்கள். நாங்கள் சுயதரிசன சக்கரதாரிப் பிராமணர்கள். உங்கள் புத்தியில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்திற்கான ஞானத்துடன் தொடர்ந்தும் முன்னேறுங்கள்.

2. திறமைச்சித்தி எய்துவதற்கு, தந்தை மீது உண்மையான அன்பு வைத்திருங்கள். தந்தையை நினைவுசெய்கின்ற மறைமுகமான முயற்சியைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் அனுபவ சொரூபமாகி, உங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தினதும் அனுபவம் மூலம் தந்தையை வெளிப்படுத்துவீர்களாக.

நீங்கள் தந்தைக்கு இருப்பதாகப் பாடுகின்ற தெய்வீகக் குணங்கள் அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர் ஆகுங்கள். தந்தை பேரானந்தக் கடல் ஆதலால், பேரானந்தக் கடலின் அலைகளில் முன்னேறுங்கள். உங்களுடன் தொடர்பில் வருபவர்களுக்குப் பேரானந்தம், அன்பு, சந்தோஷம், அனைத்துத் தெய்வீகக் குணங்கள் ஆகியவற்றின் அனுபவங்களைக் கொடுங்கள். இவ்விதமாக, தெய்வீகக் குணங்கள் அனைத்தினதும் சொரூபம் ஆகுவதால், உங்கள் மூலம் தந்தையின் ரூபம் வெளிப்படுத்தப்படும், ஏனெனில் மகத்தான ஆத்மாக்களான உங்களால் மாத்திரமே உங்கள் அனுபவங்களின் சொரூபங்களினால் பரமாத்மாவை வெளிப்படுத்த முடியும்.

சுலோகம்:
சாக்குப்போக்குகளைத் தீர்வுகளாக மாற்றி, அமங்களமான விடயங்களையும் மங்களகரமானவையாகக் கருதுங்கள்.