03.11.23 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞானத்தினதும் யோகத்தினதும் சக்தியால் சூழலைத் தூய்மையாக்குங்கள். சுயதரிசனச் சக்கரத்தால் மாயையை வெற்றிகொள்ளுங்கள்.
பாடல்:
ஆத்மா ஒருபோதும் ஒளியுடன் இரண்டறக் கலப்பதில்லை என்பதை நிரூபிக்கும் கருத்து எது?பதில்:
ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதே இடம்பெறுகிறது எனக் கூறப்படுகின்றது. எனவே, ஆத்மா ஒருவர் நிச்சயமாகத் தன் பாகத்தை மீண்டும் மீண்டும் நடிக்கின்றார். ஒளியானது ஒளியுடன் இரண்டறக் கலக்கின்றது என்று கூறுவீர்களானால், பாகமும் முடிவிற்கு வந்துவிடும். அந்த வகையில், நாடகம் அநாதியானது என்று கூறுவது தவறாகிவிடும். ஆத்மா பழைய ஆடையொன்றை நீக்கி, புதியதை எடுக்கிறார். அவர் எதனுடனும் இரண்டறக் கலப்பதில்லை.பாடல்:
ஓ தூரதேசப் பயணியே!ஓம் சாந்தி.
யோகியாகவும் ஞானியாகவும் இருப்பதுடன் இப்பாடலின் அர்த்தத்தை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தக்கூடியவர்களாக இருக்கும் குழந்தைகள் இதன் அர்த்தத்தை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் அனைவரும் மயானத்தில் புதையுண்டு இருக்கிறார்கள். தங்கள் தீபச்சுடர் அணைக்கப்பட்டவர்களும் தமோபிரதானாக இருப்பவர்களும் மயானத்தில் புதையுண்டு இருப்பதாகக் கூறப்படுகிறார்கள். ஸ்தாபனையை மேற்கொண்டு பிறவி, பிறவியாகப் பராமரிப்புக்குக் கருவிகளாக இருந்தவர்கள் இப்பொழுது தங்கள் பிறவிகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்துவிட்டார்கள். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எந்தெந்த மதங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன என்று நீங்கள் கணக்கிட்டுப் பார்க்கலாம். எல்லைக்குட்பட்ட நாடகங்களில், அதன் தயாரிப்பாளர், இயக்குனர், பிரதான நடிகர் ஆகியோருக்கு மதிப்பு இருக்கிறது. அவர்களுக்குப் பல பரிசுகளும் கிடைக்கின்றன. அவர்கள் தங்கள் சிறப்புகளைக் காட்டுகிறார்கள். ஞானமும் யோகமுமே உங்கள் சிறப்புகளாகும். மரணம் தங்களுக்குச் சற்று முன்னால் நின்று கொண்டிருக்கின்றதென்றோ அல்லது இந்த நாடகத்தில் தாங்கள் எத்தனை பிறவிகள் எடுக்கிறார்களென்றோ அல்லது தாங்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்றோ மனிதர்களுக்குத் தெரியாது. நானும் நீங்களும் எல்லாப் பிறவிகளினதும் விபரங்களையும் அறிந்துகொள்ள முடியாது. இருந்த போதும், இந்த நேரத்தில் நாங்கள் எதிர்காலத்திற்காக முயற்சி மேற்கொள்கின்றோம். நீங்கள் தேவர்களாகுவீர்களாயினும், அதில் என்ன அந்தஸ்தை அடைவீர்கள்? அதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணரும் 84 பிறவிகள் எடுத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் நிச்சயமாக அரசன், அரசியாக ஆகுவார்கள். அவர்களது முகச்சாயல்கள் பற்றி உங்களுக்குத் தெரியும். பாபா உங்களுக்கு நடைமுறை ரீதியாகவே காட்சிகளைக் காட்டுகிறார். பக்தி மார்க்கத்திலும் மக்கள் காட்சிகள் பெறுகிறார்கள். யாரை அவர்கள் தியானிக்கின்றார்களோ அவர்களது காட்சியைப் பெறுகிறார்கள். நீலநிறக் கிருஷ்ணரைப் பார்த்துத் தியானிப்பார்களாக இருந்தால், அதுவே அவர்கள் காணும் காட்சியாகவும் இருக்கும். ஆனாலும், கிருஷ்ணர் அவ்வாறானவர் அல்ல. மக்களுக்கு இவற்றைப் பற்றிய ஞானம் எதுவும் இல்லை. இப்போது நீங்கள் இங்கே நடைமுறை ரூபத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் அவரைச் சூட்சுமலோகத்திலும் சுவர்க்கத்திலும் காண்கிறீர்கள். உங்களிடம் ஆத்மாவையும் கடவுளையும் பற்றிய ஞானம் உள்ளது. மக்களுக்கு ஆத்மாவின் காட்சிகள் மட்டுமே கிடைக்கின்றன. உங்களுக்கோ நீங்கள் பெறும் காட்சிகள் எல்லாவற்றின் ஞானமும் இருக்கின்றது. வெளியேயுள்ளவர்களுக்கு ஆத்மாவின் காட்சி கிடைத்தாலும் அவர்களுக்கு அதைப் பற்றிய ஞானம் இல்லை. ஆத்மாவே பரமாத்மா என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆத்மா உண்மையாகவே ஒரு நட்சத்திரமாவார். அவர்களில் பலர் தென்படுகின்றார்கள். எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை ஆத்மாக்களும் இருக்கிறார்கள். ஒருவருடைய சரீரம் இந்தக் கண்களுக்குப் புலப்படும். ஆனால், ஆத்மாவை தெய்வீகக் காட்சியாலேயே காணலாம். மனிதர்களுக்குப் பல்வேறு முகச்சாயல்களும் இருக்கின்றன. ஆனால், ஆத்மாக்கள் பல்வேறுபட்ட வடிவமுடையவர்கள் அல்ல. அனைவரும் ஒரே மாதிரியானவர்களே. ஒவ்வொரு ஆத்மாவினதும் பாகங்களே வேறுபட்டிருக்கின்றன. மனிதர்கள் உருவத்தில் பெரிதாகவோ சிறிதாகவோ இருப்பார்கள். ஆனால் ஆத்மாக்கள் அளவில் பெரியவர்களோ அல்லது சிறியவர்களோ அல்லர். ஆத்மாக்கள் ஒரேயளவானவர்களே. ஆத்மா ஒளியுடன் இரண்டறக் கலப்பதாக இருந்தால், அவர் எவ்வாறு தன் பாகத்தை நடிப்பார்? ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளதே இடம்பெறுகின்றது என்று நினைவுகூரப்படுகின்றது. இந்த அநாதியான உலக நாடகம் தொடர்ந்து சுழல்கின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு இது தெரியும். ஆத்மாக்கள் நுளம்புகள் போல் வீடு திரும்புகிறார்கள். நுளம்புகளை இந்தக் கண்களால் காணலாம். ஆத்மாக்களைத் தெய்வீகக் காட்சியில் அன்றி வேறு வகையில் காண முடியாது. சத்தியயுகத்தில் ஆத்மாக்களின் காட்சியைக் காணவேண்டிய அவசியமே இல்லை. அங்கே ஆத்மாவாகிய நீங்கள் ஒரு பழைய சரீரத்தை விடுத்துப் புதியதொன்றை எடுக்கவேண்டும் என்று புரிந்துகொள்கிறீர்கள். அவர்களுக்குக் கடவுளைப் பற்றித் தெரிவதேயில்லை. கடவுளைப் பற்றி அறிந்து கொள்வார்களானால், உலகச் சக்கரத்தைப் பற்றியும் அறிந்துகொள்வார்கள். என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள் என்று பாடலில் கூறப்படுகின்றது. இறுதி நேரத்தில் அவர்கள் பெரிதும் மனம் வருந்துவார்கள். எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக எத்தனையோ பல வழிகள் கண்டறியப்படுகின்றன. எல்லோரும் அமைதியைப் பற்றிப் பேகிறார்கள். ஆனால், யாருமே அமைதி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. உங்களுக்கு அமைதியை அடைவது எப்படியென்று தெரியும். உரல் ஒன்றில் கடுகு விதைகள் உலக்கையால் நொறுக்கப்படுவது போல், எல்லோருடைய சரீரங்களும் விநாசத்தில் அழிந்துபோகும். ஆத்மாக்கள் நொறுக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வீடு திரும்புவார்கள். ஆத்மாக்கள் நுளம்புகளைப் போல் ஓடோடிச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. பரமாத்மாக்கள் எல்லோரும் ஓடோடிச் செல்வார்கள் என்பதல்ல. மக்களுக்கு எதுவுமே விளங்குவதில்லை. ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. தாங்கள் எல்லோரும் சகோதரர்கள் என்றும் அதனால் தாங்கள் சகோதரர்களைப் போல் வாழவேண்டும் என்றும் கூறுகிறார்கள். சத்தியயுகத்தில் சகல சகோதர, சகோதரியர் பாலும் தேனும் போல் வாழ்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அங்கே உவர்நீர் என்பதற்கே இடமில்லை. இங்கேயோ, ஒரு கணம் பாலும் தேனும் போல் இருப்பார்கள், மறுகணம் உவர்நீர் போல ஆகிவிடுவார்கள். ஒருபுறம் சீனர்களும் இந்துக்களும் சகோதரர்கள் என்று கூறுவார்கள். மறுபுறம் கொடும்பாவிகள் செய்து தொடர்ந்தும் எரிக்கின்றார்கள். லௌகீக சகோதரர்களின் நிலையைக் கூடப் பாருங்கள்! அவர்களுக்கு ஆன்மீக உறவுமுறைகள் பற்றியே தெரியாது. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: உங்களை நீங்கள் ஆத்மா என்றே கருதிக்கொள்ள வேண்டும். நீங்கள் சரீர உணர்வில் அகப்பட்டுவிடக் கூடாது. சிலர் சரீர உணர்வில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரம் உட்பட சரீர உறவுகள் அனைத்தையும் நீங்கள் துறந்துவிட வேண்டும். இந்தக் கட்டடம் போன்றவற்றையெல்லாம் மறந்துவிடுங்கள். ஆதியில், நீங்கள் பரந்தாமவாசிகள். உங்கள் பாகத்தை நடிப்பதற்காக எங்கிருந்து வந்தீர்களோ அங்கே இப்போது நீங்கள் திரும்பிச் செல்லவேண்டும். அதன் பின், உங்களை நான் சந்தோஷ உலகிற்கு அனுப்பி வைப்பேன். எனவே, தந்தை கூறுகிறார்: நீங்கள் தகுதி வாய்ந்தவர்களாக வேண்டும். கடவுள் ஒரு இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். கிறிஸ்துவுக்கு இராச்சியம் இருக்கவில்லை. பிற்காலத்தில் நூறாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இருந்தபோதே, அவர்கள் தங்கள் இராச்சியத்தை உருவாக்கியிருப்பார்கள். இங்கே, சத்தியயுக இராச்சியம் உடனடியாக உருவாக்கப்படுகின்றது. இது மிக இலகுவான விடயம். உண்மையாகவே கடவுள் வந்து ஸ்தாபனையை மேற்கொண்டார். கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி எல்லாவற்றையும் குழப்பமாக்கி விட்டார்கள். கீதையில் புராதன இராஜயோகமும் ஞானமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை மறைந்துவிடுகின்றன. ஆங்கில வார்த்தைகள் நல்லவை. பாபாவுக்கு ஆங்கிலம் தெரியாதென்று நீ;ங்கள் கூறுவீர்கள். பாபா கூறுகிறார்: நான் இங்கேயிருந்து எவ்வளவுக்குத் தான் எல்லா மொழிகளிலும் பேசிக்கொண்டிருக்க முடியும்? பிரதான மொழி ஹிந்தியாகும். அதனால், நான் முரளியை ஹிந்தியில் பேசுகிறேன். நான் தத்தெடுத்திருக்கும் சரீரத்துக்குரியவரும் ஹிந்தியே பேசுகிறார். அதனால், அவர் பேசும் அதே மொழியையே நானும் பேசுகிறேன். நான் வேறெந்த ஒரு மொழியிலும் உங்களுக்குக் கற்பிக்க மாட்டேன். நான் பிரெஞ்சு மொழியில் பேசினால், இவர் எப்படிப் புரிந்துகொள்வார்? இவரைப் (பிரம்மாவை) பற்றியதே முக்கிய விடயமாகும். இவரே முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நான் வேறு எவருடைய சரீரத்தையும் எடுக்கப் போவதில்லை. என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் என்று பாடலில் கூறப்படுகின்றது. யாருக்குமே தந்தையைப் பற்றியோ அல்லது அவரது வீட்டைப் பற்றியோ தெரியாது. அவர்கள் தொடர்ந்தும் பொய்களையே கூறுகிறார்கள். எல்லோருடைய அபிப்பிராயங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இதனாலேயே நூல் சிக்கிக் கொண்டிருக்கின்றது. தந்தை எவ்வாறு இங்கிருக்கிறார் என்று சற்றுப் பாருங்கள்! இவை யாருடைய பாதங்கள்? (சிவபாபாவின் பாதங்கள்). அவை என் பாதங்கள். நான் அவற்றைக் கடனாகக் கொடுத்திருக்கிறேன். சிவபாபா தற்காலிகமாகவே அவற்றைப் பயன்படுத்துகின்றார். இல்லாவிட்டால் அவை என் பாதங்களேயாகும். சிவாலயத்தில் அவர்கள் பாதங்களைக் காட்டுவதில்லை. கிருஷ்ணருடைய பாதங்களைக் காட்டுகிறார்கள். சிவனே அதிமேலானவர். எனவே, எங்கிருந்து அவருக்குப் பாதங்கள் வரமுடியும்? ஆம், சிவபாபா அவற்றைக் கடனாகப் பெற்றிருக்கிறார். ஆனால், அவை பிரம்மாவின் பாதங்கள். ஆலயங்களில் அவர்கள் எருதொன்றைக் காட்டியிருக்கிறார்கள். எவ்வாறு அவர் ஒரு எருதை ஓட்ட முடியும்? சிவபாபா எவ்வாறு எருதின் மீதேறி அமர்வார்? சாலிகிராம் ஆத்மா மனித சரீரத்தை (சாரதியாக) செலுத்துகின்றார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு எடுத்துரைத்த ஞானம் மறைந்துவிட்டது. அது வெறுமனே ஒரு மூட்டை மாவில் ஒரு துளி உப்புக் கலந்திருப்பது போலவே எஞ்சியிருக்கின்றது. எவருமே அதனைப் புரிந்துகொள்ள முடியாது. நானே வந்து உங்களுக்கு அதன் சாராம்சத்தை எடுத்துரைக்கிறேன். நான் உங்களுக்கு ஸ்ரீமத் கொடுத்து, உலகச் சக்கரத்தின் இரகசியங்களை விளங்கப்படுத்தினேன். பின்னர் அவர்கள் சுயதரிசனச் சக்கரத்தைத் தேவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். அவர்களிடம் ஞானம் ஏதும் இல்லை. இவையெல்லாம் ஞானம் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆகும். மாயையின் தலையைத் துண்டிக்கக்;கூடிய உலகச் சக்கரம் பற்றிய ஞானத்தை ஆத்மாக்கள் பெற்றுக்கொள்கின்றனர். அசுரர்களை நோக்கி சுயதரிசனச் சக்கரம் வீசப்படுவதாகக் காட்டியிருக்கிறார்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தால் மாயையை வெற்றிகொள்கின்றீர்கள். ஒரு காலத்தில் நடந்த விடயங்களை இன்னொரு காலத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள். உங்கள் மத்தியிலும், வெகு சிலராலேயே இந்த விடயங்களை உட்கிரகித்து, மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க முடிகின்றது. ஞானம் மேன்மையானது. அதற்குக் காலம் எடுக்கின்றது. இறுதியில், உங்களுக்குள் ஞானத்தின் சக்தியும் யோகத்தின் சக்தியுமே இருக்கும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய புத்தி தொடர்ந்து மென்மையாகுகிறது. நீங்கள் சூழலைத் தூய்மையாக்குகின்றீர்கள். இந்த ஞானம் மிகவும் மறைமுகமானது. அஜாமிலைப் போன்ற பாவிகளும் ஈடேற்றப்பட்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் யாருமே அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாக்கள் ஒளியுடன் அல்லது கடலுடன் இரண்டறக் கலந்துவிட்டார்கள் என்றும், பஞ்ச பாண்டவர்கள் மலையிலே உருகிப்போனார்கள் என்றும், பிரளயம் இடம்பெற்றது என்றும் நம்புகின்றார்கள். ஒருபுறம் அவர்கள் இராஜயோகம் கற்றதாகவும் பின்னர் பிரளயத்தையும் காட்டியிருக்கிறார்கள். அதன் பின்னர், அரசமர இலையில் கிருஷ்ணர் பெருவிரலைச் சூப்பியவாறு மிதந்து வருவதாகவும் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு அதன் அர்த்தம் விளங்குவதும் இல்லை. அது கர்;ப்ப மாளிகையாகும். குழந்தையொன்று தன் பெருவிரலைச் சுவைத்துக் கொண்டிருக்கும். ஒரு இடத்து விடயங்களை இன்னோரிடத்திற்குக் கொண்டு சென்று விட்;டார்கள். உண்மை தான், உண்மை தான் என்று மக்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். யாருக்குமே சத்தியயுகத்தைப் பற்றித் தெரியாது. இல்லாதது எதுவும் பொய்யானதென்றே கூறப்படுகின்றது. உதாரணமாக, கடவுளுக்குப் பெயரோ உருவமோ இல்லையென்று கூறுகிறார்கள். ஆனால், தொடர்ந்து அவரை வழிபடுகின்றார்கள். எனவே, கடவுள் மிக, மிக சூட்சுமமானவர். அவரைப் போல் சூட்சும (நுண்ணிய) வடிவம் கொண்டவர்கள் வேறு யாருமே இல்லை. அவர் மிகச் சின்னஞ்சிறிய புள்ளியே ஆவார். அவர் அவ்வளவு சூட்சுமமாக இருப்பதாலேயே யாருக்கும் அவரைத் தெரியாதிருக்கின்றது. ஆகாயமும் சூட்சுமமானது என்று கூறப்படுகின்ற போதிலும் அது வெட்டவெளியென்றும் அழைக்கப்படுகின்றது. பஞ்ச பூதங்கள் இருக்கின்றன. அவர் வந்து பஞ்ச பூதங்களாலான சரீரமொன்றில் பிரவேசிக்கின்றார். அவர் மிகவும் சூட்சுமமானவர். அவர் மிக மிகச் சின்னஞ்சிறிய புள்ளி வடிவானவர். நட்சத்திரமொன்று மிகவும் சின்னஞ்சிறியது. நட்சத்திரமாக இருக்கும் கடவுள் வந்து, இவருக்கு அருகில் இருக்கும்போதே அவரால் பேச முடியும். இவை மிகவும் சூட்சுமமான விடயங்கள். மேலோட்டமான புத்தி கொண்டவர்களால் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. தந்தை மிக நல்ல விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். நாடகத்திற்கேற்ப அவர் என்ன பாகத்தைச் சென்ற கல்பத்தில் நடித்தாரோ அதை இப்போதும் நடிக்கின்றார். பாபா ஒவ்வொரு நாளும் வந்து எங்களுக்குப் புதிய கருத்துகளைக் கூறுகிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எனவே, அந்த ஞானமும் புதியதல்லவா? எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் கற்கவேண்டும். ஒரு மாணவன் ஒவ்வொரு நாளும் வகுப்புக்குச் செல்லாத போது, அன்றைய வகுப்பில் என்ன நடந்தது என்று தன் நண்பனைக் கேட்டுத் தெரிந்துகொள்வான். இங்கே சிலர் கற்பதை முழுமையாகவே நிறுத்தி விடுகிறார்கள். அவ்வளவு தான்! தங்களுக்குத் தங்கள் அழிவற்ற ஞானத்தின் ஆஸ்தி வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஓ, நீ;ங்கள் கற்காவிட்டால் உங்கள் நிலை என்ன ஆகும்? தந்தையிடமிருந்து என்ன ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள்? அவ்வளவு தான். அவர்களது பாக்கியத்தில் இது இல்லை. இங்கே இது பௌதீகமான சொத்தைப் பற்றியதல்ல. நீ;ங்கள் தந்தையிடமிருந்து ஞானப் பொக்கிஷங்களைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அந்தச் சொத்தெல்லாம் அழிந்துபோகப் போகின்றது. யாருமே அவற்றைப் பற்றிய போதையில் இருக்க முடியாது. தந்தையிடமிருந்து மட்டுமே நீ;ங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். உங்களிடம் பல மில்லியன் பெறுமதிவாய்ந்த சொத்து இருந்தாலும், அவையெல்லாம் தூசாகப் போகின்றது. அவையெல்லாமே தற்காலத்தையே குறிக்கின்றன. சிலரது செல்வம் நிலத்தின் கீழ்ப் புதைக்கப்படும், சிலரது செல்வம் எரிந்துபோகும் என்று கூறப்படுகின்றது. இந்த நேரத்து விடயங்கள் பின்பு, இறுதி வரைக்கும் இடம்பெறுகின்றன. இப்போது விநாசம் இடம்பெற வேண்டும். விநாசத்தின் பின் ஸ்தாபனை இடம்பெறும். இப்போது ஸ்தாபனை இடம்பெறுகின்றது. அது எங்கள் இராச்சியம். நீங்கள் யாருக்காகவும் எதுவுமே செய்யவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் உங்களுக்காகவே செய்கின்றீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள் அதிபதிகளாகுவார்கள். நீங்கள் புதிய பூமியில் புதிய பாரதத்தின் அதிபதிகளாகுவீர்கள். நீங்கள் புதிய உலகத்தில் அதாவது சத்தியயுகத்தில் அதிபதிகளாக இருந்தீர்கள். இப்போது இது பழைய உலகம். நீங்களோ புதிய உலகத்துக்காக முயற்சி செய்யுமாறு தூண்டப்படுகிறீர்கள். இவை புரி;ந்துகொள்வதற்கு மிக நல்ல விடயங்கள். இது ஆத்மா, பரமாத்மா பற்றிய ஞானமாகும். அதாவது சுயத்தை அல்லது தன்னை உணரும் ஞானமாகும். சுயத்தின் தந்தையாக இருப்பவர் யார்? தந்தை கூறுகிறார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகிறேன். இப்போது நீங்கள் தந்தை மூலம் தந்தையை உணர்ந்திருக்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்ட எனது குழந்தைகள். உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காக ஒரு சக்கர காலத்தின் பின்னர் மீண்டும் வந்து என்னை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். அதனால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், இல்லையா? இல்லாவிட்டால் நீங்கள் பெரிதும் மனம் வருந்த நேரிடுவதோடு, அளவற்ற தண்டனையும் பெறவேண்டி வரும். குழந்தைகளாகி விட்டுத் தவறான செயல்களைச் செய்பவர்களைப் பற்றிப் பேசவே வேண்டாம். நாடகத்தில் பாபாவுக்கு எப்படியொரு பாகம் இருக்கிறதென்று பாருங்கள். அவர் எல்லாவற்றையுமே கையளித்து விட்டார். அதன் பின் பாபா கூறினார்: நான் எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு அதற்குப் பலன் தருவேன். முன்பு நீங்கள் மறைமுகமாகக் கொடுப்பதுண்டு என்பதால், நானும் எதிர்வரும் ஒரு பிறவிக்கு மட்டுமே அதன் பலனைத் தந்தேன். இப்போது நீங்கள் நேரடியாகக் கொடுக்கின்றீர்கள். அதனால், 21 பிறவிக்கு அவற்றை நான் உங்களுக்குக் காப்புறுதி செய்கின்றேன். நேரடியாகக் கொடுப்பதற்கும் மறைமுகமாகக் கொடுப்பதற்கும் அளவற்ற வேறுபாடு உள்ளது. அவர்கள் துவாபர, கலியுகங்களுக்காக கடவுளிடம் காப்புறுதி செய்து கொள்கிறார்கள். நீ;ங்களோ சத்திய, திரேதா யுகங்களுக்காகக் காப்புறுதி செய்து கொள்கின்றீர்கள். நேரடியானதாக இருப்பதால், 21 பிறவிகளுக்குப் பலனைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, வரிசைக்கிரமமாக, நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவிடமிருந்து அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அநாதியான தந்தையிடமிருந்து அழிவற்ற ஞான இரத்தினங்கள் எனும் பொக்கிஷத்தைப் பெற்றுப் பாக்கியசாலி ஆகுங்கள். புதிய ஞானத்தையும் புதிய கல்வியையும் ஒவ்வொரு நாளும் கற்றிடுங்கள். சூழலைத் தூய்மையாக்கும் சேவையைச் செய்யுங்கள்.2. உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு உங்களுடைய அனைத்தையும் காப்புறுதி செய்துகொள்ளுங்கள். தந்தைக்குரியவராகிய பின்னர், தவறான செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
சுய முன்னேற்றத்திற்காக, சரியான மூக்குக்கண்ணாடியை அணிவதன் மூலம் கவனயீனத்தில் இருந்து விடுபட்டு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பீர்களாக.தலைக்கணத்துடக் தம்மை சோதிக்கின்ற குழந்தைகள் கவனயீனம் என்ற மூக்குக்கண்ணாடியை அணிகிறார்கள். அவர்களால் தாம் செய்பவையை மட்டுமே பார்க்க முடியும், அது அதிகமாக உள்ளது, ~~நான் இவரைவிட அல்லது அவரை விட சிறந்தவர், மிகவும் பிரபல்யமான ஆத்மாக்களிடம்கூட சில பலவீனம் உள்ளது||. நேர்மையான இதயத்துடன் தம்மை சோதிப்பவர்கள் சரியான மூக்குக்கண்ணாடியை அணிகிறார்கள். அவர்கள் தம்மையும் தந்தையையும் மட்டுமே பார்க்கிறார்கள், அவர்கள் ஒரு விநாயையோ அல்லது மூன்றாம் நபர் என்ன செய்கிறார் என்பதையோ பார்ப்பதில்லை. அவர்கள் தாம் மாற்றமடைய வேண்டும் என்ற அக்கறையை மாத்திரமே கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
சுலோகம்:
எல்லைக்கு உட்பட்டவை அனைத்தையும் முடித்தால், உங்களால் எல்லையற்ற சுயராச்சியத்தின் போதையை கொண்டிருக்க முடியும்.