03.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானம், யோகத்துடன் உங்கள் நடத்தையும் மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். நீங்கள் தீய ஆவிகளை அகற்றுகின்ற மாந்திரீகர்கள் என்பதால் உங்களுக்குள் எந்தத் தீய ஆவிகளும் இல்லாதிருக்கட்டும்.

கேள்வி:
தகுதிவாய்ந்த, கீழ்ப்படிவான குழந்தைகள் எவ்வாறான போதையை நிரந்தரமாக அனுபவம் செய்வார்கள்?

பதில்:
இரட்டைக் கிரீடமுடைய அதிபதிகள் ஆகுகின்ற எங்கள் ஆஸ்தியை பாபாவிடமிருந்து நாங்கள் பெறுகின்றோம். தகுதிவாய்ந்த, கீழ்ப்படிவான குழந்தைகள் மாத்திரமே இந்தப் போதையை நிரந்தரமாக அனுபவம் செய்வார்கள். எவ்வாறாயினும் தீய ஆவியான காமம் அல்லது கோபம் உங்களுக்குள் இருந்தால் இந்தப் போதை இருக்கமாட்டாது. அத்தகைய குழந்தைகளுக்குத் தந்தை மீது மதிப்பும் இருக்கமாட்டாது. இதனாலேயே முதன் முதலில் நீங்கள் தீய ஆவிகளை விரட்டிவிட்டு, உங்கள் ஸ்திதியை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.

பாடல்:
காற் சலங்கை ஒலியுடன், என் மனக் கதவிற்கு வந்தவர் யாரோ?

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அதுவும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமானதாகும். ஏனெனில் பரமாத்மாவாகிய, பரமதந்தைக்கு பௌதீக வடிவமோ அல்லது சூட்சும வடிவமோ இல்லை. தேவர்களும் சூட்சுமமானவர்கள். அவர்களில் மூவர் உள்ளனர். அவர்களிலும் பார்க்க மிகவும் சூட்சுமமானவர்; கடவுள். இப்பொழுது யார் கூறுகின்றார்கள்: ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே? ஆத்மாக்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை கடவுள் என அழைக்கப்படுகிறார். ஓர் ஆத்மா தனது பௌதீகத் தந்தையைப் பரமதந்தை என அழைக்கமுடியாது. பரமாத்மாவாகிய பரலோகப் பரமதந்தையை நீங்கள் நினைவு செய்வதையே ஆத்ம உணர்வில் இருத்தல் என அழைக்கப்படுகின்றது. சரீர உறவுமுறையுள்ள தந்தையையும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள். மற்றையவர் ஆத்மாவுடன் உறவுமுறையுள்ள பாபா ஆவார். அவர் இப்பொழுது இங்கு வந்துள்ளார். ஆத்மா புத்தியைக் கொண்டுள்ளதால் அவர் புத்தியின் மூலம் அறிந்து கொள்கிறார். ஆகவே பரமாத்மாவாகிய பரமதந்தை நிச்சயமாக பரலோகத் தந்தை ஆவார். அவரே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். பாபா இப்பொழுது தனது கேள்விக்கொத்தைத் தயாரித்துள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்கு அதன் மூலம் விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். பத்திரங்கள் நிரப்பப்படுவது போன்று, நீங்கள் அவர்களையும் கேள்விக்கொத்தை நிரப்பச் செய்யலாம். நிச்சயமாக இக் கேள்விகளைக் கேட்பவர் ஞானம் நிறைந்தவராக இருப்பதுடன், ஓர் ஆசிரியராகவும் இருக்கவேண்டும். ஆத்மாவே ஒரு சரீரத்தை எடுத்து, அங்கங்கள் மூலம் விளங்கப்படுத்துகிறார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இலகுவில் விளங்கப்படுத்தும்வகையில் கேள்விக்கொத்து உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஞானத்தைக் கொடுக்கின்ற குழந்தைகளின் ஸ்திதியும் மிகவும் சிறந்ததாக இருக்கவேண்டும். உங்களில் சிலருக்கு மிகச் சிறந்த ஞானம் இருந்தாலும், உங்கள் யோகமும் சிறந்ததாக இருக்க வேண்டும். அத்துடன் மிகச் சிறந்த நடத்தையும் தேவைப்படுகிறது. காமம், கோபம், பேராசை, அகங்காரம், பற்று ஆகிய தீய ஆவிகள் இல்லாதவர்களுடைய நடத்தை தெய்வீகமானதாக இருக்கும். அவை மிகப் பெரிய தீய ஆவிகளாகும். குழந்தைகளாகிய உங்களுக்குள் எவ்விதத் தீய ஆவிகளும் இருக்கக்கூடாது. நாங்கள் தீய ஆவிகளை அகற்றும் மாந்திரீகர்கள். அலைந்து திரியும் தூய்மையற்ற ஆத்மாக்களை பேய்கள் என அழைக்கின்றார்கள். அந்தப் பேய்களை அகற்றுகின்ற மாந்திரீகர்கள் மிகவும் புத்திசாலிகள். பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் ஐந்து விகாரங்களான தீய ஆவிகளை அகற்ற முடியாது. ஒரேயொருவர் மாத்திரமே அனைவரிலுமுள்ள தீய ஆவிகளை அகற்றுபவர். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். இராவணனிடமிருந்து உங்களை விடுவிப்பவரும் ஒரேயொருவரே ஆவார். அவை மிகப் பெரிய தீய ஆவிகளாகும். கூறப்பட்டுள்ளது: இவரிடம் காமம் என்ற தீய ஆவி உள்ளது. இவரிடம் பற்று, தூய்மையற்ற அகங்காரம் ஆகிய தீய ஆவிகள் உள்ளன. பரமாத்மாவான பரமதந்தை ஒரேயொருவரே அனைவரையும் அத்தீய ஆவிகளிலிருந்து விடுவிக்கக்கூடிய விடுதலை அளிப்பவர் ஆவார். இந் நேரத்தில் அதிக சக்தி வாய்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆங்கில மொழியிலுள்ள சொற்களும் மிகச் சிறந்தவையாகும். அரசன் எவராக இருந்தாலும், அவர் தனது சொந்த மொழியையே உபயோகிப்பார். எவருக்கும் தேவர்களின் மொழி தெரியாது. எனது புத்திரிகள் சென்று, திரும்பிவந்து அனைத்தையும் கூறுவார்கள் (அவர்கள் திரான்ஸில் கண்டார்கள்). அவர்கள் இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு திரான்ஸில் இருப்பது வழக்கம். அவர் அங்கு காண்பதை அதே மொழியில் கூறக்கூடிய ஒரு திறமைசாலி திரான்ஸ்-தூதுவர் இருக்கவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்தின் கதையை அனைவருக்கும் கூறவேண்டும். சதோபிரதானாக இருந்த பாரதம், இப்பொழுது தமோபிரதானாகிவிட்டது: பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களில் இருந்து பூஜிப்பவர்களாகி விட்டார்கள். பாரதத்தில் தேவர்களின் பல ரூபங்கள் உள்ளன. மக்கள் மூட நம்பிக்கையுடன் அவற்றை வணங்குகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவர்களின் சுயசரிதை தெரியாது. நாங்கள் அனைவரும் நடிகர்கள். எனவே நாடகத்தின் இயக்குனர்கள் போன்றவர்களை நாங்கள் அறிந்திருக்கவேண்டும். இதனாலேயே கேள்விக்கொத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பாப்பாண்டவருக்கு எழுத வேண்டும்:விநாசத்துக்கான அந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்தவேண்டும் என்று நீங்;கள் உங்கள் சீடர்களுக்குச் கூறுகின்றீர்கள். ஆனால் ஏன் அவர்கள் அனைவரும் நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பதில்லை? நீங்களே அனவரினதும் குரு, நீங்களே அதிகளவில் புகழப்படுகின்றீர்கள். ஆனால் ஏன் அவர்கள் அனைவரும் நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பதி;ல்லை? உங்களுக்கு இதற்கான காரணம் தெரியாது. எனவே அவர்கள் ஏன் உங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை என்று நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம். அவர்கள் கடவுளின் வழிகாட்டல்களுக்கு ஏற்பவே அனைத்தையும் உற்பத்தி செய்கின்றார்கள். ஆதாம், ஏவாள் மூலமே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. கடவுள் ஞானம் நிறைந்தவர். அவர் மறைமுகமானவர். நிச்சயமாக அவரது சேனைகள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவார்கள். இவ்வாறாக நீங்கள் விளங்கப்படுத்தவேண்டும். எவ்வாறாயினும் குழந்தைகளிடம் அத்தகைய பரந்த, எல்லையற்ற புத்தி இல்லை. ஆகவே திருகாணியால் இறுக்கப்பட வேண்டும். ஓர் இயந்திரம் குளிர்ந்தவுடன், அதனைச் சூடாக்குதற்கு மேலும் நிலக்கரி போடப்படும். இவை ஞானமாகிய நிலக்கரியாகும். பரமாத்மாவாகிய பரமதந்தையே அனைவரிலும் மேலானவர். அனைவரும் வந்து அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். பாப்பாண்டவர் சக்தி நிறைந்தவரென்று அனைவரும் கருதுகிறார்கள். பாப்பாண்டவருக்கு மரியாதை செலுத்துவது போன்று மக்கள் வேறு எவருக்கும் மரியாதை செலுத்துவதில்லை. அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவர் மறைமுகமானவர். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அவரை அறிந்துள்ளதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள். எவ்வாறாயினும், அத்தகையதொரு தந்தைக்கு அவருடைய குழந்தைகள் மதிப்புக் கொடுப்பதை மாயை அனுமதிப்பதில்லை. மாயை அவ்வாறானவள். நீங்கள் வெளியே சென்றதும், பாபா உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என்று நீங்கள் கொண்டிருந்த உங்களின்; போதை இல்லாமல் போய்விடுகிறது. இரட்டைக் கிரீடம் அணிந்தவர்கள் ஆகுகின்ற எங்கள் ஆஸ்தியை நாங்கள் ஏன் கோரக்கூடாது? இதுவே தகுதிவாய்ந்த, கீழ்ப்படிவான குழந்தைகளின் போதையாகும், எவ்வாறாயினும் பல குழந்தைகளுக்கு காமம், கோபம் பேராசை என்ற தீய ஆவிகள் உள்ளன. பாபா முரளியைப் பேசும்போது, நீங்கள் உங்களுக்குள் உணர்வீர்கள்:எனக்குள் காமத்தின் ஆதிக்கம் இன்னும் சிறிதளவில் உள்ளது. ஒரு பக்கம் உறுதியானதாக இருந்தால் எதுவுமே நடக்காது. சில சமயங்களில் மனைவி உறுதியாக இருப்பாள். சில சமயங்களில் கணவன் உறுதியாக இருப்பார். சகலவிதமான செய்திகளும் பாபாவிற்குக் கிடைக்கிறது. சிலர் நேர்மையான இதயத்துடன் எழுதுவார்கள். அதிகளவு நேர்மையும், தூய்மையும் அகத்திலும் புறத்திலும் இருக்கவேண்டும். சிலர் புறத்தில் நேர்மையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அகத்தில் போலியாக இருப்பார்கள். பலர் புயல்களை அனுபவம் செய்வார்கள். அவர்கள் எழுதுகிறார்கள்:பாபா, இன்று நான் காமம் என்ற புயலை அனுபவம் செய்தேன். ஆனால் நான் காப்பாற்றப்பட்;டேன்;. அவர்கள் எழுதாவிட்டால் முதலாவதாக தண்டனை அனுபவம் செய்யப்படும். இரண்டாவதாக அந்தப் பழக்கம் அதிகரிக்கப்படும். இறுதியில் அவர்கள் வீழ்ச்சியடைவார்கள். பாபாவுக்குக் குழந்தைகள் மீது இந்த நம்பிக்கை உள்ளது. சில தீய சகுனங்கள் இருந்தாலும் அவை அகற்றப்படலாம். குழந்தைகளிற் பலர் இன்று மிக நன்றாக முன்னேறுகிறார்கள். ஆனால் நாளை அவர்கள் மயங்கிவிடுவார்கள் அல்லது அவர்களின் தொண்டை அடைத்துவிடும். நிச்சயமாக அவர்கள் ஏதாவதொன்றில் கீழ்ப்படிவின்றி இருக்கிறார்கள். நீங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மையாக இருக்கவேண்டும். அப்பொழுதே உங்களால் சத்திய உலகின் அதிபதிகள் ஆகமுடியும். நீங்கள் பொய் கூறினால் நோய் அதிகரித்து பாதிப்பை விளைவிக்கும். குழந்தைகளாகிய நீங்கள் கேள்விக்கொத்தை மிகவும் சாதுரியமாக எழுதவேண்டும்:பரமாத்மாவாகிய பரமதந்தையுடனான உங்கள் உறவுமுறை என்ன? அவர் தந்தை என்பதால் சர்வ வியாபி என்ற கேள்விக்கு இடமில்லை. அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், தூய்மையாக்குபவரும்,கீதையின் கடவுளும் ஆவார். எனவே அவரே நிச்சயமாக ஒரு நேரத்தில் வந்து ஞானத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அது சரியாயின், உங்களுக்கு அவரின் சுயசரிதை தெரியுமா? உங்களுக்கு அது தெரியாவிட்டால் உங்களால் அவரின் ஆஸ்தியைப் பெற முடியாது. நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள். இரண்டாவது கேள்வியைக் கேளுங்கள்: உங்களுக்கு பிரஜாபிதா பிரம்மாவையும், அவரின் வாய்வழித் தோன்றல்களையும் தெரியுமா? சரஸ்வதி என்று அழைக்கப்படுபவரே ஞானத்தின் கடவுளாகும். ஞானதேவி என்று அவர் அழைக்கப்படுகின்றார். இவர் ஜகதாம்பா. ஆகவே நிச்சயமாக அவருக்குக் குழந்தைகளும், தந்தையும் இருக்கவேண்டும். அந்த ஒரேயொருவரே ஞானத்தைக் கொடுப்பவர். ஆகவே பிரஜாபிதாவும், ஜகதாம்பாவும் யார்? அவர் செல்வத்தின் கடவுள் என்றும் அழைக்கப்படுகின்றார். அந்நேரத்தில் அவர் ஞானத்தின் கடவுள் அல்ல. இந்த பிரம்மாவும், சரஸ்வதியும் பின்னர் அரசனும், அரசியும் ஆகுவார்கள். ஆகவே அவர்களின் குழந்தைகளும் நிச்சயமாக சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். இப்பொழுது இது சந்திப்பு, சங்கமமாகும். கும்பமேளாவி;ல் என்ன நடக்கின்றது என்று பாருங்கள!; பக்தி மார்க்கத்திலுள்ள கருத்தும், இங்குள்ள அதன் கருத்திற்கும், இரவுக்கும் பகலுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் உள்ளது. அது ஆற்றினதும், கடலினதும் சங்கமமாகும். இது ஞானக் கடலிலிருந்து தோன்றிய மனித கங்கைகளின் மேளா ஆகும். இக்கேள்வியையும் நீங்கள் கேட்கலாம்: உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக்குபவர் யார்? இது அறிந்திருக்க வேண்டிய விடயமாகும் என்பதனாலேயே உங்களை நாங்கள் கேட்கிறோம். இந்தத் தாய் தந்தையிடமிருந்து ஞானத்தைப் பெறுவதன் மூலம் நீங்;கள் அரசர்களாகவும், அரசிகளாகவும்; ஆகலாம். கடவுள் சர்வ வியாபி என்று கூறுவதன் மூலம் உங்கள் வாய் இனிமையாகின்றதா? நீங்கள் பக்தியின் பலனான ஞானத்தை இப்பொழுது பெறுகின்றீர்கள். கடவுள் இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார்,என்பதால் இப்பொழுது நீங்கள் அலைந்து திரிவதை நிறுத்திவிட்டீர்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுவீர்களாக! ஆத்மாக்கள் ஞானத்தைப் பெற்றுள்ளாhகள்;. இப்பொழுது ஆத்மா கூறுகிறார்:நாங்கள் இப்பொழுது பாபாவிடம் வீட்டிற்குத் திரும்பவேண்டும். பின்னர் வெகுமதி உள்ளது. இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்த விடயங்கள்; புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்தக் கேள்விக்கொத்து மிகவும் நல்லது. அது ஒவ்வொருவரின் பையிலும் இருக்கவேண்டும். சேவை செய்யக்கூடிய குழந்தைகள் மாத்திரமே இவற்றைப் பற்றி நினைப்பார்கள். குழந்தைகளாகிய உங்களுக்காக பாபா அதிக முயற்சி செய்யவேண்டியுள்ளது. பாபா கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் எதிர்காலத்தை மேன்மையானதாக்குங்கள். இல்லாவிட்டால் உங்கள் அந்தஸ்து கல்பம் கல்பமாகக் குறைவடைந்துவிடும். இந்த பாபாவும், மம்மாவும் சக்கரவர்த்தியும், சக்கரவாத்;தினியும் ஆகுகிறார்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். எவ்வாறாயினும் சுயத்தில் நம்பிக்கை இருக்கவேண்டும். ஓர் அரசனுக்கும் அதிக சக்தி இருக்கும். அங்கு சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அரசர்கள் ஆகுபவர்கள்;;, கடவுளின் பெயரில் தான தர்மங்களைச் செய்ததன் மூலம் அவ்வாறு ஆகுகின்றார்கள். பிரஜைகள் அனைவரும் அhசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வார்கள். இப்பொழுது பாரத மக்களுக்கு அரசர்கள் இல்லை. அங்கு மக்களே மக்களை ஆட்சி செய்கிறார்கள். அதனால் அவர்கள் பலவீனமாக உள்ளார்கள். பல குழந்தைகள் புயலை அனுபவம் செய்வது பாபாவிற்குத் தெரியும். ஆனால் அவர்கள் இந்தச் செய்திகளை பாபாவிற்குக் கொடுப்பதில்லை. நீங்கள் பாபாவிற்கு எழுதவேண்டும்: நான் இவ்வாறான புயலை அனுபவம் செய்தேன். ஆகவே தயவுசெய்து எனக்கு ஆலோசனை கொடுங்கள்! உங்கள் சூழ்நிலைக்கேற்ப பாபா உங்களுக்கு ஆலோசனை கொடுப்பார். நீங்கள் எழுதுவதுமில்லை. உங்கள் சகபாடியும் . பாபா, இதுவே எனது சகபாடியின் நிலைஎன்று கூறுவதுமில்லை. பாபாவிற்கு செய்திகளைக் கொடுக்கவேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு: 11 ஜனவரி 1969

எல்லையற்ற தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களைத் தனக்கு உரியவர்கள் ஆக்கி, ஓர் இராஜ அந்தஸ்திற்கான கற்பித்தல்களை உங்களுக்குக் கொடுத்து, உங்களைத் தூய்மையானவர்களாகவும் ஆக்குகின்றார். தந்தை உங்களுக்குத் தன்னைப் பற்றியும் தனது ஆஸ்தியைப் பற்றிய அறிமுகத்தையும் இலகுவான முறையில் கொடுக்கிறார். உங்களால் அதனைச் சுயமாகப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் நிச்சயமாக எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவீர்கள். மிகச் சிறந்த புத்தியைக் கொண்டவர்களே தந்தை என்ன ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வார்கள். அவர் வீடு, கல்வி,; சுவர்க்க இராச்சியம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தூய தேவ சமுதாயத்தவர்களே இராச்சியத்தினுள் வருவார்கள். தாங்களும் கற்று மற்றவர்களுக்கும் கற்பிப்பவர்கள் அதற்கேற்ப ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். பல குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகளாகவும், சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாகவும் ஆக்குகிறார். இவர் இராச்சியத்தின் அதிபதி ஆவார். ஆகவே எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தை உருவாக்குபவரும், அவருடைய குழந்தைகளாகிய நாங்கள் அவரிடமிருந்து சுவர்க்க இராச்சியத்தை பெறுவோம். அரசனும் அரசியும் எவ்வாறோ அவ்வாறே பிரஜைகளும் ஆவார்கள். நீங்கள் எவ்வளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ அதற்கேற்ப, நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் முயற்சியிலேயே உங்கள் வெகுமதி தங்கியுள்ளது. நீங்கள் எந்த முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்ப, நீங்கள் இராச்சியத்தைப் பெறுவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்தீர்களானால் நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகி, தூய தங்கம் ஆகுவீர்கள். நீங்களும் ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். இங்கு மக்கள் தாங்களே பாரதத்தின் அதிபதிகள் என்று கூறுகிறார்கள். நீங்கள் அனைவரும் அதிபதிகள் ஆகுவீர்கள். ஆனால் நீங்கள் எந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள்? நீங்கள் கற்றபின் சுவர்க்கத்தில் எந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள்? நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் கற்கிறீர்கள். பின்னர் நீங்கள் சத்திய யுகத்தில் ஆட்சிசெய்வீர்கள். தந்தை உங்களுக்கு யோகத்தையும், கல்வியையும் கற்பிக்கிறார். நாங்கள் இராஜ யோகம் கற்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நாங்கள் தூய்மையானவர்களாகவும் ஆகுகின்றோம். அப்பொழுது எங்கள் மறு பிறவி இராவண இராச்சியத்தில் இருக்க மாட்டாது. ஆனால் இராம இராச்சியத்திலேயே இருக்கும். நாங்கள் இப்பொழுது கற்கின்றோம் --- மன்மனாபவ, மத்யாஜிபவ. இப்பொழுது இது கலியுகத்தின் முடிவாகும். பின் சத்திய யுகம், அதாவது சுவர்க்கம் நிச்சயமாக வரும். தந்தை சங்கம யுகத்திலேயே வந்து எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுவதற்காக, எல்லையற்ற கல்வியுள்ள இந்த எல்லையற்ற பாடசாலையைத் திறக்கின்றார். நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். புதிய உலகம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இதையிட்டு நீங்கள் போதை அடைகின்றீர்கள், இல்லையா? உண்மையில் பழைய உலகிற்குப் பின் புதிய உலகம் இருக்கும். குழந்தைகள் இதனை நினைவு செய்கிறார்கள்! எங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவதற்காக பரமாத்மாவாகிய பரமாதந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்கள் அனைவரினதும் இதயத்தில் உள்ளது. கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவு செய்யவேண்டும். நாங்கள் சுவர்க்கத்தின் அதி மேலான அரசர்களும் அரசிகளுமாக ஆகுகின்றோம். நாங்கள் இராஜ யோகத்தின் மூலம் இராச்சியத்தைப் பெறுகிறோம். அங்கே தூய்மை, அமைதி, சந்தோஷம் என்ற அனைத்தும் உள்ளது. சிவபாபா இப்பொழுது இந்த பாபாவினுள் பிரவேசித்துள்ளார். அவரே அதி மேலானவர். ஆத்மா அந்த அனுபவத்தைத் தன்னுடன் கொண்டு செல்கின்றார். அவர் அங்கு சென்று அமர்ந்திருக்கும் விதம் இராஜரீகமானதாக இருக்கும். மாணவர்கள் அனைவருக்கும் தனித் தனியான ஆசனங்கள் இருக்கும். ஒரு மாணவர் இன்னொரு மாணவரின் இடத்தில் அமர மாட்டார். இரண்டு ஆத்மாக்கள் ஒரே பாகத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: ஆத்மாக்கள் தங்களுக்குள் பதியப்பட்டுள்ள ஒரு பதிவைக் கொண்டுள்ளார்கள். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப எங்களது முயற்சிகள் தொடரும். சிலர் அரசர்களாகவும், ஏனையோர் அரசிகளாகவும் ஆகுவார்கள். முடிவில் முயற்சியின் முடிவுகள் அறிவிக்கப்படும். அப்பொழுது மாலை கோர்க்கப்படும். ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுபவர்கள் நிச்சயமாக அறிந்து கொள்வார்கள். ஒருவர் மரணித்தால், அந்த ஆத்மா சென்று அவரின் கர்மாவிற்கு ஏற்ப இன்னொரு சரீரத்தை எடுப்பார் என்று நீங்கள் கூறலாம். சிறந்த செயல்களைச் செய்தவர்கள் யோக சக்தியின் மூலம் சிறந்த பிறப்பை எடுப்பார்கள். ஒருவர் முயற்சி செய்யாவிடின், அவர் குறைந்த அந்தஸ்தையே பெறுவார். இவ்வாறு சிந்திப்பதன் மூலம் சந்தோஷத்தை அனுபவம் செய்யலாம். மகாராத்தி எவ்வாறோ, அவ்வாறே அவர்களின் புகழும். ஓவ்வொருவரும் ஞானத்தைப் பேசும் முறை ஒரேமாதிரியாக இருக்க மாட்டாது. ஒவ்வொருவரும் ஞானத்தைப் பேசும் விதம் வேறானதாகும். இந் நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் கர்மாவில் அக்கறை செலுத்துகிறீர்கள். தந்தையும் தாயும் எதனைச் செய்கின்றார்களோ குழந்தைகளும் அதனைக் கற்கின்றனர். நீங்கள் இப்பொழுது மேன்மையான செயல்களைச் செய்கின்றீர்கள். நீங்கள் செய்யும் சேவையிலிருந்து இதனை ஒருவர் புரிந்துகொள்ளலாம். மகாராத்திகள் செய்யும் முயற்சிகள் மறைக்கப்பட்டிருப்பதில்லை. உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு யார் முயற்சி செய்கின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். சகல குழந்தைகளுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் மன்மனாபவ என்ற பாடத்துடன் அதனுடைய கருத்தையும் பெற்றுள்ளீர்கள். ஞானம் நிறைந்த தந்தையே வந்து உங்களுக்குக் கீதையின் ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஆகவே அவர் நிச்சயமாக உங்களுக்குச் சரியான ஞானத்தைக் கொடுப்பார். பின்னர் நீங்கள் செவிமடுத்தவற்றை எந்தளவிற்கு நீங்கள் நடைமுறையில் தொடர்ந்து செய்கின்றீர்கள் என்பது நீங்கள் எந்தளவுpற்கு கிரகிக்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. அது சிரமமில்லை. நீங்கள் தந்தையை நினைவு செய்வதுடன், சக்கரத்தையும் அறிந்திருக்கவேண்டும். இது உங்கள் இறுதிப் பிறவிக்கான கல்வியாகும். நீங்கள் சித்தியடைந்த பின்னர் சத்திய யுகத்தின் புதிய உலகிற்குச் செல்வீர்கள். நினைவுகூரப்படுகின்றது: நம்பிக்கையில் வெற்றியுண்டு. ஆகவே குழ்நதைகளாகிய நீங்;கள் உங்கள் அன்பான புத்தியின் மூலம் கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைப் புரிந்துள்ளீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்றும், நீங்கள் இதனைக் கிரகிக்கின்றீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் கற்கிறார். அவர் ஒரு தொழிலைச் செய்கிறார். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். அப்பொழுது மாயையான இராவணன் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிக்கிறான். மாயையையிட்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது மேலும் உங்கள் செல்வாக்கு பரவும். அப்பொழுது சந்தோஷ பாதரசமும் அதிகரிக்கும். நீங்கள் ஒரு புதிய பிறவியை எடுக்கும்பொழுது இதனை நீங்கள் மிகத் தெளிவாகக் காட்டுவீர்;கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும். மாலை வந்தனங்களும்.

தாரணைக்கான சாராம்சம்:

1. அகமும், புறமும் நேர்மையானவர்களாகவும், சுத்தமானவர்களாகவும் இருங்கள். நேர்மையான இதயத்துடன் தந்தைக்கு உங்கள் செய்திகளைக் கொடுங்கள். எதனையும் மறைக்காதீர்கள்.

2. இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். சரீரமற்றவர்களாக இருப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள். மௌனமாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
எனது என்பதன் அனைத்து வகையின் உணர்வையும் துறந்து ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகச் சேவை செய்வதனால் எப்பொழுதும் ஒரு திருப்பதியான ஆத்மாவாக இருப்பீர்களாக.

உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து சேவை செய்யும்போது நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளரும் சேவகரும் என எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். சேவை செய்யும்போது எனது என்ற உணர்வு சிறிதளவேனும் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் திருப்தியாக இருப்பீர்கள். எனது என்ற உணர்வு இருக்கும் போது நீங்கள் விரக்தியடைந்து, எனது மகன் இதைச்செய்தார் என எண்ணுவீர்கள். எனவே எனது என்ற உணர்வு இருக்குமிடத்தில் நீங்கள் விரக்தியடைவிர்கள். ஆனால் அனைத்துமே உங்களுடையது எனும்போது நீங்கள் நீந்துவதற்கு ஆரம்பிப்பீர்கள். உங்களுடையது என்று கூறுவது உங்கள் சுயமரியாதையைப் பேணுவதாகும். எனுது, எனது எனக்கூறுவது அகங்காரத்தைக் கொண்டிருப்பதாகும்.

சுலோகம்:
உங்கள் புத்தி எப்பொழுதும் தந்தையினதும் ஸ்ரீமத்தினதும் விழிப்புணர்வைக் கொண்டிருக்கட்டும். அப்பொழுது இதயத்தை அர்ப்பணித்த ஓர் ஆத்மா என நீங்கள் அழைக்கப்படுவீர்;கள்.