03.12.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் இசைத் தட்டுப்பாடல்கள் உயிர்கொடுக்கும் (சஞ்சீவி) மூலிகையைப் போன்றன. இப்பாடல்களை இசைப்பதனால், உங்கள் வாடியுள்ள (தாழ்வு உணர்வுகள்) உணர்வுகள் அனைத்தும் அகற்றப்படும்.

கேள்வி:
உங்கள் ஸ்திதி ஏன் சீரழிகின்றது? உங்கள் ஸ்திதியைச் சிறந்ததாக வைத்திருப்பதற்கு நீங்கள் என்ன வழிமுறையைப் பயன்படுத்த வேண்டும்?

பதில்:
1) நீங்கள் ஞான நடனத்தை ஆடுவதற்குப் பதிலாக, வம்பளத்தலில் உங்கள் நேரத்தை வீணாக்குகின்றீர்கள். இதனாலேயே உங்கள் ஸ்திதி சீர்குலைகின்றது. 2) நீங்கள் மற்றவர்களைச் சந்தோஷமற்றவர்களாக்கும்பொழுது, உங்கள் ஸ்திதி பாதிக்கப்படுகின்றது. நீங்கள் மிக இனிமையானவர்களாக இருந்து, நினைவில் நிலைத்திருப்பதில் முழுமையான கவனத்தைச் செலுத்தும் பொழுது உங்கள் ஸ்திதி சிறந்ததாக அமையும். இரவில் உறங்கச் செல்லும் முன்னர், குறைந்தபட்சம் அரை மணித்தியாலமாவது நினைவில் நிலைத்திருங்கள். பின்னர், நீங்கள் காலையில் விழித்தெழும்பொழுது, மீண்டும் நினைவில் அமர்ந்திருங்கள். இது உங்கள் ஸ்திதியைச் சிறந்ததாக வைத்துக் கொள்ளும்.

பாடல்:
அதிகாலை அமிர்தவேளையிலே எனது மனக்கதவிற்கு வந்துள்ளவர் யார்?

ஓம் சாந்தி.
பாபா இந்த இசைத் தட்டைக் குழந்தைகளாகிய உங்களுக்காகவே உருவாக்கியுள்ளார். இதன் அர்த்தத்தை, குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். வீடுகளிலே நீங்கள் இத்தகைய சிறந்த இசைத் தட்டுக்களை வைத்திருக்க வேண்டும் என பாபா பல தடவைகள் உங்களுக்குக் கூறியிருக்கின்றார். பின்னர், நீங்கள் வாடிப்போகும்பொழுது, அந்தப் பதிவு நாடாக்களை நீங்கள் மீண்டும் இசைக்க முடியும், அவற்றின் அர்த்தம் உங்கள் புத்தியில் உடனடியாகவே புகுவதனால் நீங்கள் வாடிப் போக மாட்டீர்கள். இந்த இப் பதிவுகள் உயிர்கொடுக்கும் மூலிகையைப் போன்றன. பாபா வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், ஆனால் நீங்கள் அவற்றை நடைமுறையில் இட வேண்டும். எனது, உங்களது, அனைவரதும் மனதினுள் வந்தவர் யார்? என்று பாடலில் கூறுபவர் யார்? வந்தவர் யார்? இப்பொழுது வந்து ஞான நடனத்தை ஆடுகின்ற அந்த ஒரேயொருவரே ஆவார். கோபியர்கள் கிருஷ்ணரை ஆடச் செய்தார்கள் எனக் கூறப்படுகின்றது, ஆனால் அது அவ்வாறு இருக்கவில்லை. பாபா இப்பொழுது கூறுகின்றார்: ஓ சாலிகிராம் குழந்தைகளே! அவர் இதனை அனைவருக்கும் கூறுகின்றார். பாடசாலை என்றால், கல்வி புகட்டுதல் நடைபெறுகின்ற, ஒரு கற்கும் இடமாகும். இதுவும் ஒரு பாடசாலையே. நீங்கள் யாரை உங்கள் இதயத்தில் வைத்;துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த விடயங்கள் வேறு எந்தவொரு மனிதரின் புத்தியிலும் இல்லை. இந்த நேரத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்கள்; வேறு எவருமே அவரை நினைவுசெய்வதில்லை. தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு நாளும் என்னை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்களால் ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்க முடியும். நான் உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்களுக்கேற்ப நீங்கள் என்னை நினைவுசெய்வதில்லை. என்னை நினைவுசெய்வதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. நீங்கள் எனது வழிகாட்டல்களைச் சொற்ப அளவே பின்பற்றுகின்றீர்கள், ஆனால் நீங்கள் மாயையின் வழிகாட்டல்களைப் பெருமளவு பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் இரவு உறங்கச் செல்லும் முன்னர் அரை மணித்தியாலமேனும் பாபாவின் நினைவில் இருக்க வேண்டும் எனப் பல தடவைகள் உங்களுக்கு நான் கூறியிருக்கின்றேன். நீங்கள் ஒரு தம்பதியினராக இருப்பின், நீங்கள் ஒன்றாக அமரலாம் அல்லது வெவ்வேறாகவும் அமரலாம், ஆனால் ஒரேயொரு தந்தையை மாத்திரம் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். எவ்வாறாயிலும், நீங்கள் ஒவ்வொருவரும் அவரை மிக அரிதாகவே நினைவுசெய்கின்றீர்கள்; மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். பாபாவின் கட்டளைகளை நீங்கள் பின்பற்றாதுவிடின் எவ்வாறு உங்களால் ஓர் அந்தஸ்தைப் பெற முடியும்? நீங்கள் பாபாவைப் பெருமளவில் நினைவுசெய்ய வேண்டும். சிவபாபா, நீங்களே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. அனைவரும் உங்களிடம் இருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறவுள்ளார்கள். எந்த முயற்சியையும் செய்யாதவர்களும் ஓர் ஆஸ்தியைப் பெறுவார்கள்; அனைவருமே பிரம்மாந்தத்தின் அதிபதியாகுவார்கள். நாடகத்திற்கு ஏற்ப, அவர்கள் எதனையும் செய்யாவிடினும், ஆத்மாக்கள் அனைவரும் நிர்வாணா உலகிற்குச் செல்வார்கள். எவ்வாறாயினும், அரைக்கல்பமாகப் பக்தி செய்பவர்களும் நான் வழிகாட்டியாக வரும்வரை வீட்;டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. எவருமே வீட்டிற்கான பாதையைக் கண்டு கொள்ளவில்லை. எவராவது அதனைப் பார்த்தார்களாயின், மற்றவர்கள் ஒரு நுளம்புக் கூட்டத்தைப் போல் பின்தொடர்வார்கள். அசரீரியான உலகம் என்றால் என்ன என்பது எவருக்குமே தெரியாது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது, இது மீண்டும் நடைபெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு கர்மயோகியாக இருந்து, தொடர்ந்தும் உங்கள் வியாபாரத்தைப் பகலில் செய்ய வேண்டும்; நீங்கள் சமைக்கவும், உங்கள் வீட்டு வேலைகள் போன்றவற்றைச் செய்யவும் வேண்டும். உண்மையில் செயலைத் துறத்தல் என்பதைப் பற்றிப் பேசுவது தவறானதாகும். எவராலும் செயல்களைச் செய்யாமல் வாழ முடியாது. அவர்கள் தமக்கு கர்மத்தைத் துறந்தவர்கள் என்ற பெயரைக் கொடுப்பது பொய்யானது. நாள் முழுவதும் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச்; செய்யுங்கள், அத்துடன், தந்தையைக் காலையிலும் இரவிலும் மிக நன்றாக நினைவுசெய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு உரியவரான அந்த ஒரேயொருவரை நீங்கள் நினைவுசெய்வீர்களேயானால், உதவியைப் பெறுவீர்கள். இல்லாவிடின், நீங்கள் உதவியைப் பெற மாட்டீர்கள். தாம் இப்பொழுது தந்தைக்குரியவர்களாக வேண்டும் என்பதைக் கேள்விப்படும்பொழுது, செல்வந்தர்களின் இதயங்கள் சுருங்குகின்றன. ஆகவே, அவர்கள் ஓர் அந்தஸ்;தைப் பெற மாட்டார்கள். அவரை நினைவுசெய்வது மிக இலகுவானது. அவரே எங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவுமாவார். அவர் எவ்வாறு உலக வரலாறு, புவியியல் அனைத்தும் மீண்டும் நடைபெறுகின்றது என்ற இரகசியங்களை எங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் தந்தையை நினைவுசெய்வதுடன், சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்ற வேண்டும். தந்தை மாத்திரமே அனைவரையும் வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் இத்தகைய எண்ணங்களையே கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர், இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் சுழற்ற வேண்டும். பின்னர் நீங்கள் அதிகாலையில் எழுந்ததும், இந்த இதே ஞானத்தை நினைவுசெய்வீர்கள். முதலில் நாங்கள் பிராமணர்கள், பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுகின்றோம், பின்னர் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், பின்னர் சூத்திரர்களாகவும் ஆகுகின்;றோம். பாபா வந்த பின்னர் நாங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாறுவோம். பாபாவே திரிமூர்த்தி, திரிகாலதரிசி மற்றும் திரிநேத்திரியும் ஆவார். அவர் எங்கள் புத்தியின் பூட்டையும் திறக்கின்றார். நாங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது கண்ணாகிய ஞானத்தைப் பெறுகின்றோம். அத்தகைய தந்தையாக வேறெவராலும் இருக்க முடியாது. தந்தை படைப்பைப் படைக்கின்றார், ஆகவே அவர் எங்கள் தாயாகவும் இருக்கின்றார். அவர் ஜெகதாம்பாளை (உலகத் தாய்) அனைவரையும் பராமரிப்பதற்கான தாயாக ஆக்குகின்றார். தந்தை இந்தச் சரீரத்தினுள் பிரவேசித்;து, பிரம்மாவின் வடிவில் குழந்தைகளாகிய எங்களுடன் விளையாடுகின்றார். அவர் எங்களை உலாவுவதற்கும் அழைத்துச் செல்கின்றார். நாம் பாபாவை நினைவுசெய்கின்றோம். அவர் வந்து இவரின் இரதத்தினுள் பிரவேசிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். பாப்தாதா எங்களுடன் விளையாடுகின்றார் என நீங்கள் கூறுகின்றீர்கள். எங்களுடன் விளையாடும்பொழுதும் நினைவில் இருப்பதற்கு பாபா முயற்சி செய்கின்றார். பாபா கூறுகின்றார்: நான் இவரின் மூலம் உங்களுடன் விளையாடுகின்றேன். இவரே உயிருள்ளவர். நீங்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அந்தத் தந்தைக்கு உங்களை அர்ப்பணிக்கவும் வேண்டும். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் உங்களை அவருக்கு அர்ப்பணிப்பீர்கள் என்று கூறுவதுண்டு. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இந்த ஒரு பிறவிக்கு என்னை உங்கள் வாரிசாக ஆக்குங்கள், நான் உங்களுக்கு உங்கள் 21 பிறவிகளுக்கான இராச்சிய பாக்கியத்தைக் கொடுப்பேன். ஆந்த ஒரேயொருவர் உங்களுக்குக் கொடுக்கின்ற கட்டளைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவர் எதைப் பார்க்கின்றாரோ, அதற்கேற்பவே வழிகாட்டல்களைக் கொடுப்பார். நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றும்பொழுது, உங்கள் பற்றுக்கள் அனைத்தும் முடிவிற்கு வருகின்றன. எவ்வாறாயினும், சில குழந்தைகள் பயப்படுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் உங்களை எனக்கு அர்ப்பணிப்பதில்லை, ஆகவே, நான் எவ்வாறு உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்க முடியும்? நான் உங்கள் பணத்தை எடுத்துக் கொள்வதில்லை. பாபா கூறுகின்றார்: அச்சா, உங்களிடம் பணம் ஏதாயினும் இருப்பின், அதனை இலக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். பாபா தொடர்ந்தும் உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார். பாபாவிடம் இருக்கும் அனைத்தும் குழந்தைகளான உங்களுக்கேயாகும். அவர் குழந்தைகளாகிய உங்களிடமிருந்து எதனையும் பெறுவதில்லை. அவர் உங்கள் பற்று முடிவடையும் வகையில், உங்களுக்குத் தந்திரமாக விளங்கப்படுத்துகின்றார். பற்று என்பது மிகவும் உறுதியான விகாரமாகும். பாபா கூறுகின்றார்: நீங்கள் ஏன் குரங்குகளைப் போல் அவர்களில் பற்றைக் கொண்டிருக்கின்றீர்கள்? அவ்வாறாயின், ஒவ்வொரு வீட்டிலும் எவ்வாறு ஓர் ஆலயம் இருக்க முடியும்? நான் உங்களை உங்கள் குரங்கு வாழ்க்கையில் இருந்து விடுவித்து, உங்களை ஓர் ஆலயத்தில் இருக்கின்ற பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றேன். நீங்கள் ஏன் அந்த அழுக்கானவற்றில் பற்றைக் கொண்டிருக்கின்றீர்கள்? எவ்வாறு அனைத்தையும் பராமரிப்பது என்பதைப் பற்றிய வழிகாட்டல்களை பாபா கொடுக்கின்றார். அப்படியிருந்தும், அது உங்கள் புத்தியில் பதிவதில்லை. அவை அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். பாபாவுடன் எவ்வாறு அமிர்தவேளையில் பேச வேண்டும் என்பதைப் பற்றிய ஆலோசனையையும் பாபா உங்களுக்குக் கூறுகின்றார். பாபா, நீங்களே எங்கள் எல்லையற்ற தந்தையும், ஆசிரியரும் ஆவீர்கள். உங்களால் மாத்திரமே எங்களுக்கு உலகின் எல்லையற்ற வரலாற்றினையும், புவியியலையும் கூற முடியும். உலகில் இருக்கின்ற வேறு எவருக்குமே இலக்ஷ்மி நாராயணனின் 84 பிறவிகளின் கதை தெரியாது. ஜெகதாம்பாளும் தாய் என்றே அழைக்கப்படுகின்றார். அவர் யார்? அவரால் சத்தியயுகத்தில் இருக்க முடியாது. அங்கிருக்கும் சக்கரவர்த்தினியும் சக்கரவர்த்தியுமாகவே இலக்ஷ்மியும் நாராயணனும் இருக்கின்றார்கள். அவர்களுக்கென சொந்தக் குழந்தை உள்ளார், பின்னர் அவர் சிம்மாசனத்தில் அமர்வார். அவ்வாறு சிம்மாசனத்தில் அமரும் வகையில், எவ்வாறு நாங்கள் அவர்களின் குழந்தையாகலாம்? ஜெகதாம்பாள் ஒரு பிராமணர் என்பது இப்பொழுது எங்களுக்குத் தெரியும். அவரே பிரம்மாவின் மகளாகிய, சரஸ்வதியாவார். மக்களுக்கு இந்த இரகசியம் தெரியாது. பாபாவை இரவில் நினைவுசெய்யும் கோட்பாடு மிகவும் சிறந்தது. இதனை நீங்கள் உங்கள் கோட்பாடாக்கும்பொழுது உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்வதுடன், எந்தவொரு கஷ்டத்தையும் அனுபவம் செய்ய மாட்டீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகளான, சகோதர, சகோதரிகள் எனக் கூறுகின்றீர்கள். அவ்வாறாயின், நீங்கள் எந்தவிதமான தீய பார்வையைக் கொண்டிருப்பதுவும் குற்றச் செயலைச் செய்வதாகும். சதோ, ரஜோ, தமோ வகையான போதைகள் இருக்கின்றன. உங்கள் போதையானது தமோகுணியாக இருப்பின், நீங்கள் மரணித்து விடுவீர்கள். குறுகிய நேரத்திற்காகவாவது பாபாவின் நினைவை உங்கள் ஒழுக்கமாகக் கொண்டு, பின்னர் சென்று பாபாவின் சேவையைச் செய்யுங்கள். இதனைச் செய்வதனால், நீங்கள் மாயையின் புயல்கள் எதனையும் அனுபவம் செய்ய மாட்டீர்கள். உங்கள் போதை நாள் முழுவதும் நிலைத்திருப்பதுடன், நீங்கள் ஸ்திதியும் சீரானதாகும். உங்கள் யோக ரேகையும்; தெளிவாகும். அத்தகைய இசைத்;தட்டுக்கள் மிகவும் சிறந்தவை. நீங்கள் அத்தகைய இசைத்தட்டுக்களைத் தொடர்ந்தும் செவிமடுக்கும்பொழுது, நடனமாட ஆரம்பிப்பதுடன், புத்துணர்ச்சியும் அடைவீர்கள். மிகச்சிறந்த நான்கு அல்லது ஜந்து இசைத்தட்டுக்கள் இருக்கின்றன. இந்தச் சேவையைச் செய்வதில் ஏழைகள் மிகவும் மும்முரமாக இருக்கும்பொழுது, அவர்கள் மாளிகைகளைப் பெற்றுக் கொள்வார்கள். உங்களால் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்து அனைத்தையும் பெறமுடியும். பாபா சேவைசெய்யும் தனது குழந்தைகளுக்கு ஏன் எதனையும் கொடுக்காது விடுவார்? சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் எப்பொழுதும் நிறைந்தே இருக்கின்றது. இசைக்கப்பட்ட அந்தப் பாடலில் நடனம் எனக் குறிப்பிடப்பட்டது ஞான நடனமாகும். பாபா வந்து கோபிகள், கோபிகைகளாகிய உங்களை ஞான நடனம் ஆடும்படி செய்கின்றார். நீங்கள் எங்கிருந்தாலும், தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது உங்கள் ஸ்திதியானது மிகவும் சிறந்ததாக இருக்கும். பாபா இந்த ஞானம், யோகம் என்ற போதையில் நிலைத்திருப்பதனால் அதனையே குழந்தைகளாகிய உங்களுக்கும் கற்பிக்கின்றார். ஆகவே, நீங்கள் இந்தப் போதையில் சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். இல்லாவிடின் நீங்கள் வம்பளப்;பதனால், உங்கள் ஸ்திதி பாழாகுகின்றது. அதிகாலையிலே விழித்தெழுவது மிகவும் சிறந்ததாகும். பாபாவின் நினைவில் அமர்ந்திருக்கும்பொழுது, பாபாவுடன் மிகவும் இனிமையான முறையில் பேசுங்கள். சொற்பொழிவுகளை ஆற்றுபவர்களும் ஞானத்தைக் கடைந்து, குறிப்பிட்ட கருத்துக்களை விளங்கப்படுத்தும் வழியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பல குழந்தைகள், தாம் தமது வேலையை விட்டு விலக விரும்புவதாக பாபாவிடம் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், பாபா கூறுகின்றார்: முதலில் நீங்கள் செய்கின்ற சேவையின் அத்தாட்சி எதனையேனும்; கொடுங்கள். நினைவினைக் கொண்டிருப்பதற்கு பாபா மிகச்சிறந்த வழிமுறைகளை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆனால் பல மில்லியன் கணக்கானானோரில், ஒரு கைப்பிடியளவினரே தங்களில் அப் பழக்கத்தைப் பதித்துக் கொள்கின்றார்கள். உங்களில் எவரும் அரிதாகவே நினைவில் நிலைத்திருக்கின்றார்கள். குமாரிகளாகிய நீங்கள் மிகப் பிரபல்யமானவர்கள். அனைவரும் குமாரிகளின் பாதங்களில் வீழ்கின்றார்கள். நீங்களே பாரதத்தை 21 பிறவிகளுக்குச் சுய இராச்சியத்தைப் பெறுமாறு செய்கின்றீர்கள். உங்கள் ஞாபகார்த்தமாக ஓர் ஆலயமும் இருக்கின்றது. பிரம்மாகுமார், குமாரிகள் என்ற பெயரானது மிகவும் பிரபல்யமாகி விட்டது. குமாரியானவர் 21 சந்ததிகளை ஈடேற்றுபவர். ஆகவே, நீங்கள் அதன் அர்த்தத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் படச்சுருள் 5000 வருடங்களுக்குச் சுற்றுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கடந்து செல்வது அனைத்தும் நாடகத்தில் உள்ளது. ஏதாவது தவறு நடந்தாலும் அதுவும் நாடகத்தின் ஒரு பாகமே. எவ்வாறாயினும், நீங்கள் உங்கள் பதிவேட்டைச் சீராக்க வேண்டும், எதிர்காலத்தில் அது மீண்டும் பாழாகுவதை அனுமதிக்கக்கூடாது. இதற்குப் பெருமளவு முயற்சி தேவை, அப்பொழுதே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும். நீங்கள் பாபாவிற்கு உரியவர்களாகிய பின்னர், பாபா உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுப்பார். அவர் இந்த ஆஸ்தியை மாற்றாந் தாய்க் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. உதவி செய்வது அவரது கடமை. விவேகமானவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் உதவி செய்வார்கள். பாபா உங்களுக்கு எவ்வளவு உதவிசெய்கின்றார் எனப் பாருங்கள்! நீங்கள் தைரியசாலிகளாக இருக்கும்பொழுது தந்தையிடமிருந்து உதவியைப் பெறுகின்றீர்கள். மாயையை வெல்வதற்கும் உங்களுக்குச் சக்தி தேவை. ஒரேயொரு ஆன்மீகத் தந்தையை நினைவுசெய்யுங்கள். ஏனைய அனைவரிடமிருந்தும் உங்கள் பற்றைத் துண்டித்து, ஒரேயொருவருடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அனைவரிடமிருந்தும் உங்கள் பற்றினை அகற்றி ஒரேயொருவருடன் மாத்திரம் இணைத்துக் கொள்ளுங்கள். பாபாவே ஞானக் கடல். அவர் கூறுகின்றார்: நான் இவரினுள் பிரவேசித்துப் பேசுகின்றேன். உங்கள் தந்தை, ஆசிரியர் மற்றும் குரு என்றோ, மற்றும் பிரம்மா, விஷ்ணு சங்கரரைப் படைப்பவர் என்றோ வேறெவருமே உரிமை கோர முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இப்பொழுது இந்த விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பழைய குப்பைகள் மீதுள்ள உங்கள் பற்று அனைத்தையும் அகற்றுங்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி உங்கள் பற்றை முடித்துவிடுங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழுங்கள்.

2. இந்த இறுதிப் பிறவியிலே, கடவுளை உங்கள் வாரிசாக்கி, அவரிடம் உங்களை அர்ப்பணித்தால் மாத்திரமே நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள். தந்தையை நினைவுசெய்து சேவை செய்யுங்கள். உங்கள் போதையைப் பேணுவதுடன் உங்கள் பதிவேடு என்றுமே சீர்குலையாத வகையில் அதில் கவனம் செலுத்துங்கள்.


ஆசீர்வாதம்:
நீங்கள் கடவுள் மீதான உங்கள் அன்பு மூலம் உங்களையும், உலகையும் தடைகளிலிருந்து விடுவிக்கின்ற, ஒரு தபஸ்யா சொரூபம் ஆவீர்களாக.

ஒரேயொரு கடவுள் மீது அன்பு கொண்டிருப்பதே தபஸ்யா ஆகும். இந்தத் தபஸ்யா சக்தியே சதாகாலத்திற்கும் ஒருவரையும், உலகையும் தடைகளிலிருந்து விடுவிக்கின்றது. தடைகளிலிருந்து விடுபட்டிருப்பதும், பிறரைத் தடைகளிலிருந்து விடுவிப்பதுமே பல வகையான தடைகளிலிருந்தும் சகல ஆத்மாக்களையும் விடுவிக்கின்ற உங்கள் உண்மையான சேவையாகும். தங்களின் தபஸ்யாவின் அடிப்படையிலேயே அத்தகைய சேவாதாரிக் குழந்தைகள் ஜீவன்முக்தியைக் கொண்டிருப்பதற்கும், இதனைப் பிறருக்கும் கொடுப்பதற்குக் கருவிகள் ஆகுவதற்குமான ஆசீர்வாதத்தைத் தந்தையிடமிருந்து கோருகின்றார்கள்.

சுலோகம்:
எங்கும் பரந்துள்ள அன்பை ஒன்றுசேர்த்து, ஒரேயொரு தந்தை மீது அன்பைக் கொண்டிருங்கள். அப்பொழுது நீங்கள் கடின வேலை செய்வதிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.