04.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் நினைவிலிருந்து, சதா மலர்ச்சியாக இருங்கள். தந்தையின் நினைவில் இருப்பவர்கள் மிகவும் களிப்பூட்டுபவர்களாகவும், இனிமையானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் சந்தோஷமாக இருந்து சேவை செய்வார்கள்.

கேள்வி:
ஞானத்தின் போதையைக் கொண்டிருப்பதுடன், எதனைச் சோதித்துப் பார்ப்பதும் மிக மிக அத்தியாவசியமானதாகும்?

பதில்:
ஞானத்தின் போதையைக் கொண்டிருப்பதுடன், எந்தளவிற்கு நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக ஆகியுள்ளீர்கள் என்பதனையும் சோதித்துப் பாருங்கள். ஞானம் மிக இலகுவானது. ஆனால் யோகத்திலேயே மாயை தடைகளை உருவாக்குகிறாள். வீட்டில் குடும்பத்துடன் வாழும்போதும் நீங்கள் கவர்ச்சியிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். மாயை என்ற எலி தொடர்ந்தும் உள்ளேயிருந்து உங்களைக் கடித்துக்கொண்டிருக்க நீங்கள் அதனை அறியாதவர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பாபாவின் மீது ஆழமான அன்பைக் கொண்டிருக்கின்றீர்களா எனப் பார்ப்பதற்கு, தொடர்ந்தும் உங்களது நாடித்துடிப்பைச் சோதித்துப் பாருங்கள். எவ்வளவு நேரத்திற்கு நீங்கள் நினைவில் இருக்கின்றீர்கள்?

பாடல்:
விட்டில் பூச்சி ஏன் தானாக எரிந்துவிடுவதில்லை?

ஓம்சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். தந்தையின் பிரகாசம் உங்கள்மீது படுவதால் நீங்கள் அழகானவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே, உங்களை அவலட்சணமானவரிலிருந்து அழகானவராக்குகின்ற அத்தகைய தந்தைக்கு உரியவராக நீங்கள் ஏன் ஆகக்கூடாது? நீங்கள் அவலட்சணமானவர்களில் இருந்து அழகானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இது ஒருவர் மாத்திரம் இவ்வாறு ஆகுவதைப் பற்றிய கேள்வியல்ல. அம்மக்கள் கிருஷ்ணரை சியாம்-சுந்தர் எனக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் அதற்கேற்ற வகையில் அவரது படங்களையும் உருவாக்குகின்றனர். சில படங்களில் அவர் சிவந்த மேனியாகவும்(வெள்ளை-கயசை), சிலவற்றில் கருநீல நிறத்தவராகவும் இருக்கின்றார். இது எவ்வாறு சாத்தியம் என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. சத்தியயுக இளவரசராகிய கிருஷ்ணர் அவலட்சணமானவராக இருக்கமுடியாது. கிருஷ்ணரைப் போன்று ஒரு குழந்தை அல்லது கணவன் கிடைக்க வேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். எனவே அவர் எவ்வாறு நீலநிறத்தையுடையவராக இருக்கமுடியும்? மக்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் கிருஷ்ணரை நீலநிறத்தையுடையவராகக் காட்டியிருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும். அவர்கள் கிருஷ்ணர் பாம்பின்மீது நடனமாடுவதாகக் காட்டியுள்ளனர். ஆனால் அவ்வாறு எதுவுமே இருக்கமுடியாது. சமய நூல்களில் அவ்வாறான விடயங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதனால் அவர்கள் அவ்வாறு பேசுகின்றார்கள். உண்மையில் அவ்வாறு எதுவும் இல்லை. நாராயணன் பாம்புப் படுக்கையில் அமர்ந்திருப்பதாக அவர்கள் காட்டியுள்ளனர். பாம்புப் படுக்கை என எதுவுமே கிடையாது. ஒரு பாம்பிற்கு ஆயிரம் வாய்கள் இருக்க முடியுமா? அவர்கள் அமர்ந்திருந்து உருவாக்கியுள்ள படங்களின் வகைகளைப் பாருங்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவையெதிலும் எதுவுமே கிடையாது. அவையனைத்தும் பக்தி மார்க்கப் படங்களாகும். எவ்வாறாயினும், அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. நாடகம் ஆரம்பம் முதல் இன்றுவரை எவ்வளவு காலத்திற்கு இடம்பெற்றிருக்கின்றதோ அவ்வளவும் மீண்டும் மீண்டும் இடம்பெற வேண்டும். பக்தி மார்க்கத்தில் மக்கள் என்ன செய்கின்றார்கள் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. அவர்கள் பெருமளவு பணத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் பல்வேறு வகையான படங்களை உருவாக்குகின்றார்கள். முன்னர், அவையனைத்தையும் நீங்கள் பார்க்கும்போது, ஒருபோதும் வியப்படைந்திருக்கமாட்டீர்கள். இப்பொழுது தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளதால், அவை உண்மையிலேயே பக்தி மார்க்கத்திற்குரிய விடயங்கள் என்பது உங்கள் புத்தியில் புகுகிறது. பக்தி மார்க்கத்தில் இடம்பெறுபவை அனைத்தும் நிச்சயமாக மீண்டும் இடம்பெறும். உங்களைத் தவிர வேறெவராலும் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. ஆரம்பத்திலிருந்து நாடகத்திலே எவையெல்லாம் நிச்சயிக்கப்பட்டுள்ளனவோ அவையனைத்தும் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எண்ணற்ற சமயங்களின் அழிவு இடம்பெற்று, ஒரேயொரு தர்மத்தின் ஸ்தாபனை இடம்பெறும். அதில் பெருமளவு நன்மை உள்ளது. இப்பொழுது நீங்கள் பிரார்த்தனைகள் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. மக்கள் அவையனைத்தையும் கடவுளிடமிருந்து பலனைப் பெறுவதற்காகச் செய்கின்றார்கள். ஜீவன் முக்தியே பலனாகும். எனவே இவையனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே மக்களின் ஆட்சி இடம்பெறுகிறது. கீதையில், 'ஓ பாரத மக்களே, கௌரவர்களே, பாண்டவர்களே நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?" எனக் கூறப்பட்டுள்ளது. உண்மையில் யாதவர்களே ஏவுகணைகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் தங்களது சொந்த குலத்தையே அழித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாவார்கள். நீங்கள் செய்திகள் போன்றவற்றைச் செவிமடுப்பதில்லை. அதைச் செவிமடுப்பவர்களால் மிக நன்றாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. நாளுக்கு நாள், அவர்கள் மத்தியில் பெருமளவு முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களேயாயினும் அவர்கள் மத்தியில் பெருமளவு முரண்பாடுகள் உள்ளன. வீட்டில் இருந்தவாறே அவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வார்கள். நீங்கள் இராஜயோகம் கற்கின்றீர்கள். எனவே பழைய உலகம் நிச்சயமாக இராச்சியத்திற்காகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும். பின்னர் புதிய உலகிலே அனைத்தும் புதியதாக இருக்கும். அங்கிருக்கும் பஞ்ச தத்துவங்கள்கூட சதோபிரதானாக இருக்கும். பெருக்கெடுத்து, சேதத்தை ஏற்படுத்தும் சக்தி கடலுக்கு இருக்காது. தற்போது, பஞ்ச தத்துவங்களும் பெருமளவு சேதத்தை ஏற்படுத்துகின்றன. பின்னர் அத்தத்துவங்கள் அனைத்தும் உங்கள் சேவகர்களாகிவிடும். எனவே அங்கே துன்பம் என்ற கேள்விகே இடமிருக்காது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் ஆகும். சத்தியயுகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களும் ஆரம்பத்தில் சுவர்க்கம் இருந்ததாகக் கூறுகிறார்கள். பாரதம் அழிவற்ற பூமியாகும். அவர்களுக்கு, தங்களுக்கு விடுதலையளிப்பவர் தந்தையே என்பதும், அவர் பாரதத்திலேயே வருகிறார் என்பதும் தெரியாது. அவர்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. பாரதத்தில் சிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் சிவபாபா நிச்சயமாக பாரதத்திற்கு வந்தே சுவர்க்கத்தை ஸ்தாபித்திருக்க வேண்டும் என்பதையும், இப்பொழுதும் அவர் அதனையே மீண்டும் செய்கிறார் என்பதையும் நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்துகிறீர்கள். பிரஜைகளாக ஆகப்போகின்றவர்களின் புத்தியினுள் இவை எதுவுமே பதியாது. இராச்சியத்திற்குச் சொந்தமானவர்கள் தாம் உண்மையில் சிவபாபாவின் குழந்தைகளே என்பதைப் புரிந்துகொள்வார்கள். பிரஜாபிதா பிரம்மாவும் இருக்கிறார். பாபாவே விடுதலையளிப்பவரும், ஞானக்கடலும் ஆவார். பிரம்மாவை அவ்வாறு அழைக்க முடியாது. பிரம்மாவும்கூட அவராலேயே விடுதலையாக்கப்படுகிறார். அனைவரும் தமோபிரதானாக உள்ளதால், ஒரேயொரு தந்தையே அனைவரையும் விடுதலையாக்குகிறார். அவ்வாறாக ஞானக்கடலைக் கடைதல் அகத்தில் இடம்பெறவேண்டும். மக்களால் விரைவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நாங்கள் ஞானத்தைக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் வரிசைக்கிரமமானவர்கள். இது ஞானமாகும். இதை நீங்கள் ஒவ்வொரு நாளும் கற்கவேண்டும். பயம் காரணமாகக் கற்காதிருத்தல் தவறாகும். அது உங்கள் கர்ம பந்தனம் எனக் கூறப்படும். எவ்வாறு பலர் விடுதலையாகி இங்கே வந்தனரென்பதையும், பின்னர் எவ்வாறு சிலர் சென்றுவிட்டனர் என்பதையும் பாருங்கள். சிந்தி புதல்விகள் பலர் வந்தார்கள், பின்னர் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர்கள் எதிரிகளாகிவிட்டனர். ஆரம்பத்திலே, அவர்கள் ஞானத்தைப் பெருமளவு விரும்பினார்கள். நீங்கள் அனைவரும் கடவுளிடமிருந்து ஒரு பரிசைப் பெற்றுள்ளதாக அவர்கள் கருதினார்கள். இப்பொழுதும்கூட இங்கு ஒரு சக்தி இருப்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் கடவுளே அவதரித்துள்ளார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்நாட்களிலே பலரும் மந்திர சக்தியைக் கொண்டுள்ளனர். அவர்கள் கீதையை எடுத்து, தொடர்ந்து உபதேசிக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: அந்தப் புத்தகங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. நானே ஞானக்கடல். பக்தி மார்க்கத்தில் என்னையே அனைவரும் நினைவு செய்கிறார்கள். நாடக நியதிப்படி இது நாடகத்திலே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காட்சிகளையும் பெறுகிறார்கள். அவர் பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களையும் மகிழ்விக்கிறார். ஞானத்தை எடுக்காத மக்களுக்கு பக்தி நல்லதே, ஏனெனில் குறைந்தபட்சம் அவர்களால் தங்களைச் சீர்படுத்திக்கொள்ளவாவது முடிகிறது.. அவர்கள் களவு போன்றவற்றைச் செய்யமாட்டார்கள். கடவுளின் பக்திப்பாடல்களைப் பாடுபவர்களுக்கு (பக்தி செய்பவர்களுக்கு) எவரும் எந்தத் தீங்கும் செய்யமாட்டர்கள். அவர்கள் பக்தர்களாகவே இருப்பார்கள். இன்றைய நாட்களில் ஒருவர் பக்தராக இருந்தாலும்கூட, அவரும் கடனாளி ஆகலாம். நீங்கள் சிவபாபாவின் குழந்தையாகிவிட்டதால், கடனாளி ஆகமாட்டீர்கள் என்றில்லை. கடந்தகாலச் செயல்கள் காரணமாகச் சிலர் கடனாளிகள் ஆகுகின்றனர். சிலர் ஞானத்திற்கு வந்த பின்னரும்கூட கடனாளிகள் ஆகுகின்றனர். எனினும், அதற்கும் ஞானத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள். ஸ்ரீமத்திற்கேற்ப உங்களைச் சேவையில் ஈடுபடுத்தினால் அதற்கான பலனை நீங்கள் பெறுவீர்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் அனைத்தையும் அங்கு இடமாற்றம் செய்ய வேண்டும். நாங்கள் எங்களது மூட்டை முடிச்சுக்கள் உட்பட அனைத்தையும் இடமாற்றம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் பாபா பெருமளவு மகிழ்ச்சியாக இருந்தார். அவர் அங்கிருந்து வந்ததும்; ஒரு பாடலை இயற்றினார்: முதலாமவர் அல்லாவையும், இரண்டாமவர் ஓர் இராச்சியத்தையும் கண்டறிந்தார். அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் காட்சியையும், நான்கு கரங்களுடன் கூடிய விஷ்ணுவின் காட்சியையும் கண்டதுடன் தான் துவாரகையின் சக்கரவர்த்தியாகுவார் என்பதையும் புரிந்துகொண்டார். அவர் பெருமளவு போதையை அனுபவம் செய்வதுண்டு. அழியப்போகின்ற இப்பணத்தைக்; கொண்டு நான் என்னதான் செய்யப்போகின்றேன்? எனவே குழந்தைகளாகிய நீங்களும் அந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பாபா எங்களுக்கு சுவர்க்க இராச்சிய உரிமையைக் கொடுக்கின்றார். எவ்வாறாயினும், குழந்தைகள் அந்தளவு முயற்சியைச் செய்வதில்லை. முன்னேறிச் செல்லும்போது அவர்கள் வீழ்ந்துவிடுகிறார்கள். பாபாவை அழைக்கும் மிகவும் நல்ல குழந்தைகள் ஒருபோதும் பாபாவை நினைவுசெய்வதில்லை. 'பாபா, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். உங்களுடைய நினைவின் போதையிலே நான் இருக்கிறேன்." எனக் கூறும் கடிதங்களை பாபா பெறவேண்டும். ஒருபோதும் பாபாவை நினைவுசெய்யாத குழந்தைகள் பலர் இருக்கின்றார்கள். நினைவு யாத்திரை மூலமே உங்கள் சந்தோஷம் அதிகரிக்கும். ஞானத்தால் நீங்கள் எவ்வளவுதான் போதை கொண்டிருந்தாலும் சரீர உணர்வு இன்னமும் பெருமளவில் இருக்கிறது. ஆத்ம உணர்வு ஸ்திதி எங்கே? ஞானம் மிக இலகுவானது. யோகத்திலேயே மாயை தடைகளை உருவாக்குகிறாள். வீட்டில் வாழும்போது, நீங்கள் கவர்ச்சியிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். மாயை உங்களைச் சுட்டு வீழ்த்துவதாக இருக்கக்கூடாது. மாயை உங்களை எலியைப் போன்று கடிக்கிறாள். இரத்தம் பெருக ஆரம்பித்தாலும்கூட அதை நீங்கள் அறியாதிருக்கும் வகையிலேயே எலி உங்களைக் கடிக்கிறது. தாங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்போது எவ்வளவு சேதம் ஏற்படுகிறது என்பதைக் குழந்தைகள் அறியாதிருக்கிறார்கள். உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியாது. தந்தையிடமிருந்து நீங்கள் உங்கள் முழு ஆஸ்தியையும் பெறவேண்டும். மம்மா, பாபாவைப் போன்று நீங்களும் சிம்மாசனத்திலே அமரவேண்டும். தந்தையே உங்களது இதயத்தை வெற்றிகொள்கின்றார். தில்வாலா ஆலயத்தில் முழுமையான ஞாபகார்த்தம் உள்ளது. அதற்குள்ளே மகாராத்திகள் யானைமீது அமர்ந்திருக்கின்றார்கள். உங்கள் மத்தியிலும், யானைப்படையினரும், குதிரைப்படையினரும், காலாற்படையினரும் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த நாடித்துடிப்பைப் சோதித்துப் பார்க்க வேண்டும். அதை பாபா ஏன் சோதிக்க வேண்டும்? நீங்கள் பாபாவை நினைவு செய்து, பாபாவைப் போல் சேவை செய்கிறீர்களா என்பதைப் பார்ப்பதற்கு, உங்களைச்; சோதித்துப் பார்க்கவேண்டும். நான் பாபாவுடன் யோகம் செய்கின்றேனா? இரவில் விழித்திருந்து பாபாவை நினைவுசெய்கின்றேனா? நான் பலருக்குச் சேவை செய்கின்றேனா? நீங்கள் உங்கள் அட்டவணையை வைத்திருக்க வேண்டும். உள்ளார எவ்வளவு ஆழமாக நான் தந்தையை நினைவு செய்கின்றேன்? சிலர் தாங்கள் சதா தந்தையை நினைவு செய்வதாக நினைக்கின்றார்கள். ஆனால் அது சாத்தியமல்ல. சிலர் தாங்கள் பாபாவின் குழந்தைகளாகிவிட்டோம், அதுவே போதும்! என நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் நீங்கள் உங்களை ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபாவின் நினைவின்றி நீங்கள் எதையாவது செய்வீர்களாயின், நீங்கள் பாபாவை நினைவு செய்வதில்லை என்பதையே அது குறிக்கின்றது. நீங்கள் எப்பொழுதும் பாபாவின் நினைவினால் மலர்ச்சியாக இருக்கவேண்டும். நினைவில் நிலைத்திருப்பவர்கள் எப்போதும் களிப்பூட்டுபவர்களாகவும், மலர்ச்சியானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் ஏனையோருக்கும் பெருமளவு சந்தோஷத்துடன், களிப்பூட்டும் வகையில் விளங்கப்படுத்துவார்கள். சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் வெகு சிலரே இருக்கின்றார்கள். படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துதல் மிகவும் சுலபமானது. இவரே அதிமேலான கடவுள், பின்னர் அவருடைய படைப்புக்கள், அதாவது சகோதரர்களாகிய ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் உள்ளோம். இதுவே சகோதரத்துவம் ஆகும். அம்மக்கள் தந்தைத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். முதலில், நீங்கள் சிவபாபாவின் படத்தை விளங்கப்படுத்த வேண்டும். இவரே சகல ஆத்மாக்களினதும் தந்தையான அசரீரியான பரமதந்தை, பரமாத்மா ஆவார். ஆத்மாக்களாகிய நாம் அசரீரியானவர்கள். நாம் நெற்றியின் மத்தியிலே வசிக்கிறோம். சிவபாபாவும் ஒரு நட்சத்திரமேயாவார். ஆனால் ஒரு நட்சத்திரத்தை எவ்வாறு வழிபட முடியும்? இதனாலேயே அவர்கள் ஒரு பெரிய உருவத்தை உருவாக்கினார்கள். எவ்வாறாயினும், ஓர் ஆத்மா 8.4 மில்லியன் பிறவிகளை எடுப்பதில்லை. ஆத்மாக்கள் முதலில் சரீரமற்றவர்களாகவே வந்து, பின்னர் ஒரு சரீரத்தை எடுத்து, தங்களது பாகங்களை நடிக்கின்றனர். சதோபிரதான் ஆத்மாக்கள் மறுபிறவிகள் எடுத்து, கலியுகத்திற்கு வருகின்றார்கள். தாமதமாக வருபவர்கள் 84 பிறவிகளையும் எடுப்பதில்லை. எல்லோராலும் 84 பிறவிகளை எடுக்க முடியாது. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தைத் துறந்து, இன்னொன்றை எடுக்கின்றார். அவருடைய பெயர், உருவம், நேரம், இடம் அனைத்தும் மாற்றமடைகிறது. அத்தகைய சொற்பொழிவுகளை நீங்கள் வழங்க வேண்டும்;. அவர்கள் சுய-புரிந்துணர்வைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் எவரால் உங்களுக்கு அதைக் கொடுக்க முடியும்? ஆத்மாவே பரமாத்மா எனக் கூறுதல் சுயபுரிந்துணர்வா? இது புதிய ஞானமாகும். ஞானக்கடலான தந்தையே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்பவரும் ஆவார். அவர் இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவரைப் பெருமளவில் புகழுங்கள்! நீங்கள் அவருடைய புகழைக் கேட்டீர்கள். நீங்கள் ஆத்மாவின் அறிமுகத்தைக் கேட்டீர்கள். இனி நாங்கள் உங்களுக்குக் கடவுளின் அறிமுகத்தைக் கொடுப்போம். அவரே சகல ஆத்மாக்களினதும் தந்தை என அழைக்கப்படுகின்றார். அவர் சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்க முடியாது. பரமதந்தை, பரமாத்மா என்றால் பரமாத்மாவேதான். ஆத்மா என்றால் ஆத்மாவேதான். கடவுள் அப்பால் வசிக்கிறார். அவர் ஒருபோதும் மறுபிறவி எடுப்பதில்லை. இதனாலேயே அவர் எப்போதும் பரமதந்தை என அழைக்கப்படுகின்றார். மிகவும் சின்னஞ்சிறிய ஆத்மாவினுள் ஒரு பாகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறார். அவருடைய பெயர் எப்பொழுதும் சிவபாபா என்பதாகும். அவர் உருத்திர பாபா அல்லர். பக்தி மார்க்கத்திலே அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் அவரை நினைவு செய்து. 'ஓ தூய்மையாக்குபரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள் எனக் கூறுகிறார்கள். எனவே நிச்சயமாக அவர் வந்தாக வேண்டும். ஒரேயொரு தர்மமான ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படவேண்டியுள்ளபோதே அவர் வருகிறார். இப்போது கலியுகமாகும். இங்கே பல மனிதர்கள் இருக்கிறார்கள். சத்தியயுகத்திலே மிகச் சில மனிதர்களே இருப்பார்கள். பிரம்மா மூலமாக ஸ்தாபனையும், சங்கரர் மூலமாக விநாசமும். இடம்பெறுவதாக நினைவு கூரப்படுகிறது. கீதை மூலமாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது. அதிலேயே அவர்கள் ஒரு தவறு செய்து, கிருஷ்ணரின் பெயரைப் புகுத்திவிட்டார்கள். தந்தை கூறுகிறார்: அவர் (கிருஷ்ணர்) மறுபிறவிகள் எடுக்கிறார், ஆனால் நான் மறுபிறவிகளுக்கு அப்பாற்பட்டவர். எனவே பரமதந்தை பரமாத்மா என்பவர் அசரீரியான சிவனா, அல்லது ஸ்ரீ கிருஷ்ணரா என்பதை இப்பொழுது நீங்கள் தீர்மானியுங்கள். கீதையின் கடவுள் யார்? ஒரேயொருவரே கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர்கள் இவ்விடயங்களை நம்பாவிட்டால், அவர்கள் உங்கள் தர்மத்தைச் சேர்ந்தவர்களல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சத்தியயுகத்திற்குச் செல்லவுள்ளவர்கள் விரைவில் இவ்விடயங்களை நம்புவதுடன், முயற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். இதுவே பிரதான விடயமாகும். இதில் உங்களுக்கு வெற்றி இருக்கிறது, ஆனால் ஆத்ம உணர்வு ஸ்திதி எங்கே? நீங்கள் எவரோ ஒருவரது பெயரிலோ அல்லது உருவத்திலோ சிக்கிக் கொள்கிறீர்கள். 'அப்பால் உள்ள பிரம்ம தத்துவத்தில் வாழ்கின்ற பரமாத்மாவைப் பற்றியே அவர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள். எனவே நீங்கள் ஏன் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டும்?" என பக்தி மார்க்கத்தில் அவர்கள் பாடுவதுண்டு. பெருமளவு தைரியம் தேவைப்படுகின்றது. சொற்பொழிவு ஆற்றுபவர்கள் ஆத்மாவைப் பற்றிய ஞானத்தைப் பெருமளவு போதையுடன் கொடுக்கவேண்டும். பின்னர் அவர்கள் பரமாத்மா எனப்படுபவர் யார் என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும். அன்புக்கடல், ஞானக்கடல்..... என்பதெல்லாம் தந்தையின் புகழ்களாகும். உண்மையில் இது குழந்தைகளாகிய உங்களுடைய புகழும் ஆகும். ஒருவருடன் கோபப்படுதல் என்றால், சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்தல் எனப் பொருள்படும். பாபா மிகவும் இனிமையானவர். ஏதாவதொன்றைச் செய்யுமாறு கேட்கப்படும்போது, 'முடியாது" எனக் கூறும் குழந்தைகளால் கிருஷ்ணரைப் போன்று ஆகமுடியாது. நீங்கள் மிக இனிமையானவர்கள் ஆகவேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார். 

 

தாரணைக்கான சாராம்சம்:

1. உங்கள் மூட்டை முடிச்சுக்கள் அனைத்தையும் இடமாற்றம் செய்து, மிகவும் போதையுடையவர்களாகவும், சந்தோஷமுடையவர்களாகவும் இருங்கள். மம்மாவையும், பாபாவையும் போன்று சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள். இதயபூர்வமாக ஆழமான நினைவில் இருங்கள்.

2. எவருக்கேனும் பயந்து ஒருபோதும் கற்பதை நிறுத்தாதீர்கள். நினைவினால் உங்கள் கர்ம பந்தனத்தை இலேசானதாக்குங்கள். ஒருபோதும் கோபப்படவோ அல்லது சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்கவோ வேண்டாம். எந்த வகையான சேவையாயினும் செய்யக் கேட்கப்படும் போதும், முடியாது என ஒருபோதும் கூறாதீர்கள்.


ஆசீர்வாதம்:
பிராமண வாழ்க்கையின் உடமையையும், ஆளுமையையும் அனுபவம் செய்து பிறரையும் அனுபவம் செய்ய வைக்கும் ஒரு விசேட ஆத்மா ஆகுவீர்களாக.

நீங்கள் பிராமணர்கள் ஆகுவது, உங்கள் பெரும் பாக்கியம் என பாப்தாதா பிராமண குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் நினைவூட்டுகின்றார். எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையின் ஆஸ்தியும் உடமையும் திருப்தி ஆகும், பிராமண வாழ்க்கையின் ஆளுமை சந்தோஷம் ஆகும். இந்த அனுபவத்தை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். உங்களுக்கு உரிமை உள்ளது. அருள்பவரும், ஆசீர்வாதங்களை அருள்பவரும் திறந்த இதயத்துடன் உங்களுக்கு பேறுகளின் பொக்கிஷங்களை வழங்குவதால் அவற்றை அனுபவம் செய்வதுடன் அதனை பிறரையும் அனுபவம் செய்யச் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் விசேட ஆத்மாக்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
இறுதி கணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதை விடுத்து, உங்கள் இறுதி ஸ்திதியைப் பற்றி நினைவுசெய்யுங்கள்.


தந்தை பிரம்மாவிற்கு சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி.

சேவைக்கான நடைமுறை பலனை காட்டுவதற்கு, தந்தை பிரம்மா தனது ஆன்மிக ஸ்திதியின் மூலம் சேவை செய்ததைப் போன்று குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் ஆன்மிக ஸ்திதியை வெளிப்படுத்த வேண்டும். ஆத்மா ரூஃ (ஆவி) என்றும் சாராம்சம் என்றும் கூறப்படுகின்றது. நீங்கள் இரண்டாகவும் ஆகுவீர்கள். தெய்வீகக் குணங்களின் கவர்ச்சியும் அதாவது, சாராம்சமான ஆவியும், ஆத்ம உணர்வின் வடிவமும் தென்படும்.