04.01.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் ஒவ்வொரு அடியிலும் பின்பற்றுங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே செவிமடுங்கள். நீங்கள் மாயையினால் தாக்கப்பட மாட்டீர்கள்.

கேள்வி:
ஒரு மேன்மையான அந்தஸ்தைக் கோருவதற்கான அடிப்படை என்ன?

பதில்:
மேன்மையான அந்தஸ்தைக் கோருவதற்கு தந்தையின் வழிகாட்டல்கள் ஒவ்வொன்றையும் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். தந்தையிடமிருந்து குழந்தைகளாகிய நீங்கள் வழிகாட்டல்களைப் பெற்றவுடன் மேலும் சிந்திக்காது அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

பாடல்:
உங்களைக் கண்டு கொண்டதால், நாங்கள் முழு உலகையும் கண்டு கொண்டோம்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகளாகிய நீங்கள் பக்தி மார்க்கத்திலே பாடப்படுகின்ற பாடலைக் கேட்;டீர்கள். தந்தை அதன் அர்த்தத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோருகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். அந்த இராச்சியத்தை எங்களிடமிருந்து எவரும் அபகரிக்க முடியாது. பலர் பாரத இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள். முஸ்லிம்கள் அதைக் கைப்பற்றினார்கள், பிரித்தானியரும் அதைக் கைப்பற்றினார்கள். உண்மையில் இராவணனே முதலில் அதை அபகரித்தான். ஏனெனில் அவர்கள் அசுர கட்டளைகளைப் பின்பற்றினார்கள். தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள், தீயதைப் பேசாதீர்கள் என்ற குரங்குகளின் வடிவத்தில் ஏதோ முக்கியத்துவம் இருக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒரு பக்கத்தில், தந்தையை அறியாத இராவணனின் அசுர சமுதாயம் உள்ளது. மறுபக்கத்தில் குழந்தைகளாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். முன்னர், நீங்கள் இதையும் புரிந்து கொள்ளவில்லை. தந்தை இவரைப் பற்றி பேசுகின்றார், ஏனெனில் அவரும் அதிகளவு பக்தி செய்துள்ளார். இது அவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். இவர் முதலில் தூய்மையாக இருந்தார். அவர் இப்பொழுது தூய்மையற்றவராகி விட்டார். நான் அவரை அறிவேன். நீங்கள் இப்பொழுது வேறு எவரையும் செவிமடுப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றேன். ஆம், நீங்கள் உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து வரும் போதே, நான் அவர்களுடனும் சிறிதளவு பேசுகின்றேன். முதலாவது விடயம் தூய்மையாகுவதாகும். அப்பொழுது மாத்திரமே உங்களுடைய புத்தியால் எதனையும் கிரகிக்க முடியும். இங்கே உள்ள சட்டங்கள் மிகவும் கடுமையானவை. முன்னர் உங்களுக்கு ஏழு நாட்களுக்கு பத்தியில் இருக்க வேண்டும் என்றும், வேறு எவரையும் நினைவுசெய்யாமல் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நீங்கள் எவருக்கும் ஒரு கடிதமும் எழுத முடியாது. நீங்கள் எங்கே வசித்தாலும் நாள் முழுவதும் பத்தியில் நிலைத்திருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் பத்தியின் போது கற்று, பின்னர் வெளியே செல்கின்றீர்கள். சிலர் இந்த ஞானத்தால் ஆச்சரியம் அடைகின்றார்கள், அவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்து மற்றவர்களுக்கும் அதைக் கூறி பின்னர் மாயை வந்ததும் ஓடி விடுகின்றார்கள். இந்த இலக்கு அதி உயர்ந்தது. அவர்கள் தந்தையை செவிமடுப்பதில்லை. அவர் கூறுகின்றார்: நீங்கள் ஓய்வு ஸ்திதியில் இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் ஒன்றமில்லாததற்கு மற்றவர்களில் சிக்கிக் கொள்கிறீர்கள்? இந்த ஆன்மிகக் கல்வியில் உங்களை ஈடுபடுத்துங்கள். நீங்கள் முற்றாகவே வேறு எவரையும் நினைவுசெய்யக் கூடாது. நீங்கள் மரணிக்கின்ற பொழுது, இந்த உலகமே உங்களுக்கு மரணிக்கின்றது, அப்பொழுது மாத்திரமே உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாறுவதே உங்களது முயற்சியாகும். நீங்கள் ஒவ்வொரு அடியிலும் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இதற்கும் தைரியம் தேவை. இது அதைப் பற்றிப் பேசுகின்ற விடயமல்ல. பற்று எனும் இழையும் குறைந்தது அல்ல. நீங்கள் பற்றுக்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும். என்னுடையவர் ஒரு சிவபாபா மாத்திரமே அன்றி, வேறு எவருமல்ல! நான் பாபாவிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஒருபோதும் நஞ்சைக் கொடுக்க மாட்டேன். நீங்கள் கடவுளிடம் வருகின்ற போது, மாயை உங்களைத் தனியே விடமாட்டாள். அவள் உங்களை வீழ்த்துவதற்குப் பெருமளவு முயற்சி செய்வாள். நீங்கள் ஒரு பிரத்தியேகமான மருந்தை எடுக்கின்ற போது, அனைத்து வியாதிகளும் முதலில் வெளியாகும் என மூலிகை வைத்தியர்களும் கூறுகின்றார்கள். நீங்கள் அது பற்றிப் பயப்படக்கூடாது. இங்கும் அதே போன்றதாகும். மாயை உங்களைப் பெருமளவு தொந்தரவு செய்து உங்களுடைய ஓய்வு நிலையிலும் விகாரமான எண்ணங்களைக் கொண்டு வருவாள், அப்பொழுது பற்று அதிகரிக்கும். இவை அனைத்தும் நடக்கும் என பாபா முன்னரே உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் வாழும் வரை, மாயையின் குத்துச் சண்டை தொடரும், மாயையும் மிகவும் பலமானவள் ஆகி, உங்களை விட்டு விடமாட்டாள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விகாரமான எண்ணங்களை உங்களுக்குக் கொண்டு வரவேண்டாம் என நான் மாயையிடம் கூற மாட்டேன். பலர் எழுதுகின்றார்கள்: பாபா, கருணை காட்டுங்கள்! நான் அவ்விதமாக எவர் மீதும் கருணை காட்டுவதில்லை. இங்கு நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நான் கருணை காட்டியிருந்தால், அனைவரும் சக்கரவர்த்திகள் ஆகுவார்கள். இது நாடகத்தில் இல்லை. அனைத்துச் சமயங்களைச் சேர்ந்தவர்களும் வருகின்றார்கள். ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்ட அனைவரும் வெளிப்படுவார்கள். மரக்கன்று நாட்டப்படுகின்றது. இதற்குப் பெருமளவு முயற்சி எடுக்கின்றது. புதியவர்கள் வருகின்ற போது, அவர்களிடம் தந்தையை நினைவுசெய்யுமாறு கூறுங்கள். கடவுள் சிவன் பேசுகின்றார், கிருஷ்ணர் கடவுள் அல்ல. அவர் 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி வருகின்றார். எண்ணற்ற அபிப்பிராயங்களும் கதைகளும் உள்ளன. நீங்கள் இதை உங்களின் புத்தியில் மிக நன்றாகப் பதியச் செய்ய வேண்டும். நீங்கள் தூய்மையற்றவர்களாக இருந்தீர்கள். தந்தை இப்பொழுது நீங்கள் எவ்வாறு தூய்மையாகலாம் எனக் கூறுகின்றார். ஒரு கல்பத்திற்கு முன்னரும் அவர் உங்களுக்குக் கூறினார்: சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து மரணித்து வாழுங்கள்! ஒரேயொரு தந்தையாகிய என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! நான் அனைவருக்கும் சற்கதி அருள வந்திருக்கின்றேன். பாரதமக்கள் மாத்திரமே மேன்மையானவர்கள் ஆகுகின்றார்கள். பின்னர் அவர்கள் 84 பிறவிகள் எடுத்துக் கீழே வருகின்றார்கள். பாரத மக்களாகிய நீங்கள் இத் தேவர்களை வழிபடுகின்றீர்கள் என அவர்களிடம் கூறுங்கள். அவர்கள் யார்? அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தவர்கள், இல்லையா? இப்பொழுது அவர்கள் எங்கே? 84 பிறவிகள் எடுத்தவர்கள் யார்? சத்தியயுகத்தில் இந்தத் தேவர்களே இருந்தார்கள். இந்த மகாபாரதயுத்தத்தில் ஒவ்வொருவரும் இப்பொழுது அழிக்கப்பட இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் இப்பொழுது தூய்மையற்றும் தமோபிரதானாகவும் உள்ளனர். இவரின் பல பிறவிகளின் இறுதியில் நான் வந்து இவரினுள் பிரவேசிக்கின்றேன். அவர் முழுமையான பக்தராக இருந்தார். அவர் நாராயணனை வழிபடும் வழக்கமுடையவர். நான் அவரினுள் பிரவேசித்து அவரை நாராயணன் ஆக்குகிறேன். இப்பொழுது நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். இந்தத் தேவ இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஒரு மணிமாலை உருவாக்கப்படுகின்றது. உச்சியில், அசரீரியான மலரும் பின்னர் இரட்டை மணிகளும் இருக்கின்றன. உலகத் தந்தை பிரம்மாவும் உலகத் தாய் சரஸ்வதியும் சிவபாபாவிற்கு நேரடியாகக் கீழே இருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது இந்த முயற்சியை செய்வதன் மூலம், விஷ்ணுபூமியின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பாரத மக்கள் கூறுகின்றார்கள்: பாரதம் எங்களுக்கே உரியது. நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் இராச்சியத்தை ஆட்சி செய்யும் போது, வேறு எந்தச் சமயங்களும் இருக்க மாட்;டாது. இது எனது இராச்சியம் என நீங்கள் கூற மாட்டீர்கள். அங்கே வேறு எந்த இராச்சியமும் இருக்க மாட்டாது. இங்கே பல இருக்கின்றன. அவர்கள் எங்களுடையது உங்களுடையது எனக் கூறுகின்றார்கள். இந்த விடயங்கள் அங்கே இருக்கமாட்டாது. ஆகையால், தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஏனைய அனைத்தையும் துறந்து சதா என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களுக்கு முன்னால் தியானத்தை நடாத்தி உங்களுக்கு திருஷ்டி கொடுப்பதற்கு ஒருவர் விசேடமாக அமர வேண்டும் என்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நடக்கும் போதும், உலாவித்திரியும் போதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். நாள் முழுவதும் நான் எவ்வளவு நேரம் நினைவில் நிலைத்திருந்தேன்? நான் காலையில் எழுந்த பின்னர் எவ்வளவு நேரம் தந்தையுடன் உரையாடினேன்? இன்று நான் பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேனா? இவ்விதமாக உங்களுக்காக முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்களுடைய புத்தியில் ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். எனவே அதை மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள்! காமமே கொடிய எதிரி என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. அவர்கள் இங்கே இரண்டு முதல் நான்கு வருடங்களுக்கு இருந்த விட்டு, பின்னர் மாயை பலத்த வலிமையுடன் அறையும் போது, வீழ்ந்து விடுகின்றார்கள். பின்னர் அவர்கள் எழுதுகின்றார்கள்: பாபா, நான் எனது முகத்தை அவலட்சணமாக ஆக்கிக் கொண்டேன்! தங்களது முகங்களை அவலட்சணமாக்கிக் கொண்டவர்கள் 12 மாதங்களுக்கு இங்கே வரக்கூடாது என பாபா பதிலளிக்கின்றார். நீங்கள் தந்தைக்குச் சத்தியம் செய்துள்ள போதும் விகாரத்தில் வீழ்கின்றீர்கள். என்னிடம் வரவேண்டாம்! இலக்கு அதியுயர்ந்தது. தந்தை தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கவே வந்துள்ளார். பல குழந்தைகள் திருமணம் செய்தும் தூய்மையாக வாழ்கின்றார்கள். ஆம், ஒரு பெண் தாக்கப்பட்டால், அவரின் பாதுகாப்பிற்காக ஒரு தூய திருமண ஏற்பாடு செய்யப்படுகின்றது. இதிலும் மாயை அவர்களை மூக்கால் பற்றிப் பிடிப்பதால், அவர்கள் தோற்கடிக்கப்படுகின்றார்கள். பெண்களும் பெருமளவில் தோற்கடிக்கப்படுகின்றார்கள்! தந்தை கூறுகின்றார்: நீங்கள் சூர்ப்பனகைகள் (அரக்கி) அந்தப் பெயர்கள் அனைத்தும் இந்த நேரத்திற்கு உரியவையாகும். பாபா விகாரமானவர்களை இங்கே இருக்க அனுமதிப்பதில்லை. நீங்கள் ஒவ்வொரு அடியிலும் தந்தையிடமிருந்து ஆலோசனை பெற வேண்டும். உங்களை நீங்கள் அர்ப்பணிக்கும் போது, தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஒரு நம்பிக்கை பொறுப்பாளர் ஆகி, தொடர்ந்தும் பாபாவின் ஆலோசனையை பின்பற்றுங்கள். நீங்கள் உங்கள் அட்டவணையை பாபாவிற்குக் காட்டினால் மாத்திரமே அவரால் உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும். இவ்விடயங்கள் பெருமளவில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் போக் படைக்கலாம், ஆனால் நான் அதை உண்பதில்லை, நான் தானியாவேன். அச்சா.

இரவு வகுப்பு: 15.06.68
பலவீனமான இதயங்களைக் கொண்டவர்கள் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கின்ற போது, அவர்களுடைய இதயங்களின் பலவீனமும் மீட்டப்படுகின்றது. இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் தண்டவாளத்தில் உறுதியாக இருக்குமாறு செய்யப்பட்டிருக்கிறீர்கள். நினைவில் மூலம் மாத்திரமே அதிகபட்ச நன்மையுள்ளது. நினைவின் மூலம் மாத்திரமே உங்கள் ஆயுட்காலம் நீடிக்கின்றது. குழந்தைகள் நாடகத்தைப் புரிந்து கொண்டால் அவர்கள் வேறு எந்த எண்ணத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் நாடகத்தில் நீங்கள் ஞானத்தைக் கற்று அதனைக் கற்பிக்கின்றீர்கள். பின்னர் இந்தப் பாகம் முடிந்து விடும். தந்தையினுடைய பாகமோ அல்லது எங்களது பாகங்களோ இருக்க மாட்டாது. அவரது அருள்கின்ற பாகமோ அல்லது எங்களது பெறுகின்ற பாகமோ இருக்க மாட்டாது. எனவே இரண்டும் ஒன்றாகிவிடும். எங்களது பாகங்கள் பின்னர் புதிய உலகிலும் பாபாவின் பாகம் மௌன தாமத்திலும் இடம்பெறும். எங்கள் பாகங்களின் பதிவுச்சுருள் பதிவுசெய்யப்படுகின்றது. எங்கள் பாகங்கள் எங்களது வெகுமதிக்கும் பாபாவின் பாகம் மௌன தாமத்திற்கும் உரியது. கொடுக்கின்ற பாகங்களும் எடுக்கின்ற பாகங்களும் பதியப்படுகின்றன. நாடகம் இப்பொழுது பூர்;த்தியடைகின்றது. பின்னர் நாங்கள் சென்று எங்களுடைய இராச்சியத்த ஆட்சிசெய்வோம். அந்தப் பாகம் பின்னர் மாற்றமடையும். ஞானம் முடிவடைந்து நாங்கள் அவ்வாறு ஆகுவோம். பாகம் முடிவடையும் பொழுது, எந்த வித்தியாசமும் இருக்க மாட்டாது. தந்தையினதும் குழந்தைகளினதும் பாகங்களும் இருக்க மாட்டாது. இவரும் முழுமையாக ஞானத்தை எடுக்கின்றார். அந்த ஒரேயொருவரிடமும் எதுவும் எஞ்சியிருக்காது. கொடுப்பவரிடமும் எதுவும் எஞ்சியிருக்காது. பெறுபவரிடமும் எதுவும் குறைவாக இருக்காது. எனவே இருவரும் சமமானவர்கள் ஆகுகின்றார்கள். இதற்கு உங்களுக்கு ஞானக்கடலைக் கடைகின்ற புத்தி தேவையாகும். விசேடமான முயற்சி நினைவு யாத்திரைக்கானதாகும். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். அதைக் கூறுகின்ற பொழுது அது ஒரு பெரிய விடயமாக ஆகுகின்றது. ஆனால் அது புத்தியில் இருக்கும் போது மிகவும் சூட்சுமமாக உள்ளது. சிவபாபாவின் உருவம் என்ன என்பதை உள்ளுர நீங்கள் அறிவீர்கள். அதை விளங்கப்படுத்தும் போது, அது பெரிய வடிவமாகின்றது.. பக்திமார்க்கத்தில் அவர்கள் பெரிய லிங்கங்களை உருவாக்குகின்றார்கள். ஆத்மா ஒரு சின்னஞ்சிறிய புள்ளியாவார். இது ஓர் அற்புதமாகும்! நீங்கள் எப்பொழுது முடிவை அடைவீர்கள்? இறுதியில் அவர்கள் முடிவற்றது எனக் கூறுகின்றார்கள். ஓர் ஆத்மாவிலேயே முழப்பாகமும் பதியப்பட்டுள்ளது என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். இது ஓர் அற்புதமாகும். நீங்கள்; முடிவை அடைய முடியாது. நீங்கள் உலகச் சக்கரத்தின் முடிவை அடைய முடியும். படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். பாபா ஞானம் நிறைந்தவர் பின்னர் நாங்களும் முழுமையடையும் போது, நாங்கள் பெறுவதற்கு மேலதிகமாக எதுவும் இருக்க மாட்டாது. தந்தை இவரினுள் பிரவேசிதது எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஒரு புள்ளியாவார். ஆத்மாவினதோ அல்லது கடவுளினதோ காட்சியை காண்பதன் மூலம் அந்தளவு சந்தோஷம் இருக்க மாட்டாது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் அப்பொழுது மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை கூறுகின்றார்: என்னில் இருக்கின்ற ஞானம் முடிவடையும் அது உங்களிலும் முடிவடையும். நீங்கள் ஞானத்தை எடுத்து மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அனைத்தையும் எடுக்கின்றீர்கள். இருந்த போதும், தந்தை தந்தையே. ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாக்களாகவே இருப்பீர்கள். நீங்கள் தந்தையாக ஆக மாட்டீர்கள். இது ஞானமாகும். தந்தை தந்தையே குழந்தைகளும் குழந்தைகளே ஆவார்கள். இது ஞானக்கடலைக் கடைந்து அதன் ஆழத்திற்குச் செல்கின்ற கேள்வியாகும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும் எனவும் நீங்கள் அறிவீர்கள். அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். ஆத்மாக்கள் மாத்திரமே எஞ்சியிருப்பார்கள். முழு உலகமுமே முடிவடைய உள்ளது. நீங்கள் இதில் பயமற்றவர்கள் ஆக இருக்க வேண்டும். நீங்கள் பயமற்றவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். சரீர உணர்வு இருக்கக்கூடாது. நீங்கள் அந்த ஸ்திதியை அடைய வேண்டும். தந்தை உங்களைத் தனக்குச் சமனாக ஆக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் தொடர்ந்தும் மற்றவர்களை உங்களுக்குச் சமனாக ஆக்குகின்றீர்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்கின்ற அவ்வாறான முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். உங்களுக்கு இன்னமும் நேரம் இருக்கின்றது. நீங்கள் இதை மிக நன்றாக ஒத்திகை பார்க்க வேண்டும். நீங்கள் இதைப் பயிற்சி செய்யவில்லையெனின், நின்று விடுவீர்கள். உங்களுடைய கால்கள் ஆட ஆரம்பித்து சடுதியான மாரடைப்பும் ஏற்படும். ஒரு தமோபிரதான் சரீரத்திற்கு மாரடைப்பு ஏற்பட நீண்டநேரம் எடுக்காது. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தொடர்ந்தும் சரீரமற்றவர்களாகித் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கிறீர்களோ அந்தளவிற்கு அதிகமாகத் தொடர்ந்தும் நெருக்கமாக வருவீர்கள். யோகம் செய்பவர்கள் மாத்திரமே பயமற்றவர்களாக இருக்க முடியும். நீங்கள் யோகத்தின் மூலம் சக்தியையும் ஞானத்தின் மூலம் செல்வத்தையும் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குச் சக்தி தேவை. எனவே சக்தியை பெறுவதற்கு தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். பாபா அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர். அவர் ஒருபோதும் நோயாளியாக முடியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் அழிவற்ற மருந்தை உங்களுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். எவருமே எப்பொழுதுமே நோய்வாய்ப்படாத சஞ்சீவி மூலிகையை நான் கொடுக்கின்றேன். தூய்மையாக்குகின்ற தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையாகுவீர்கள். தேவர்கள் எப்பொழுதும் நோயிலிருந்து விடுபட்டவர்களும் தூய்மையானவர்களும் ஆவார்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுடைய ஆஸ்தியை கோருகின்றீர்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கொண்டிருக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது வந்துள்ளதைப் போன்று எண்ணிக்கையற்ற தடவைகள் வந்திருக்கின்றார். பாபா எதையெல்லாம் கற்பித்து விளங்கப்படுத்தகின்றாரோ, அதுவே இராஜயோகம் ஆகும். கீதை போன்றவை பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். தந்தை இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானப் பாதையைக் காட்டியுள்ளார். தந்தை உங்களைக் கீழான நிலையிலிருந்து மேலே எடுத்ததன் மூலம் ஈடேற்றுகின்றார். தங்களுடைய புத்தியில் உறுதியான நம்பிக்கைக் கொண்டவர்கள் மாலையின் மணிகள் ஆகுகின்றார்கள். நீங்கள் பக்தி செய்ததனால், கீழே வந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை இப்பொழுது வந்து உங்களை ஓர் உண்மையான வருமானத்தை ஈட்டுவதற்குத் தூண்டுகின்றார். பரலோகத தந்தை செய்வதைப் போன்று ஒரு லௌகீகத் தந்தை அவ்வாறான வருமானத்தை சம்பாதிக்க உங்களைத் தூண்டுவதில்லை. அச்சா. குழந்தைகளுக்கு இரவு வந்தனங்களும் நமஸ்தேயும்.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயை மிகவும் பலசாலியாகி உங்களின் முன்னே வருவாள். அவளையிட்டுப் பயப்படாதீர்கள். மாயையை வென்றவர் ஆகுங்கள். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றி உங்கள் மீது கருணை கொள்ளுங்கள்.

2. உங்களுடைய உண்மையான அட்டவணையைத் தந்தைக்கு காட்டுங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழுங்கள். நடக்கும் பொழுதும், உலாவித்திரியும் போதும் நினைவில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் சொந்த வடிவினூடாக, உங்கள் பக்தர்களுக்கு உங்கள் ஒளிகிரீடத்தின் காட்;சியை அருளி, ஓர் இஷ்ட தெய்வம் ஆகுவீர்களாக.

நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகி, தூய்மைக்கான சத்தியத்தை செய்யும் போது, அதற்கு பிரதியுபகாரமாக ஒளிக் கிரீடத்தைப பெறுகிறீர்கள். இந்த ஒளிக்கிரீடத்துடன் ஒப்பிடும் போது, இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் எதுவுமே இல்லை. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையை எந்தளவிற்கு நீங்கள் கிரகிக்கிறீர்களோ அந்தளவிற்கு ஒளிக்கிரீடம் தெளிவாகத் தெரியும். அப்பொழுது உங்கள் பக்தர்களின் முன்னிலையில் நீங்கள் இஷ்ட தெய்வங்களாக வெளிப்படுவீர்கள்.

சுலோகம்:
எப்பொழுதம் பாப்தாதாவின் பாதுகாப்பு குடையின் கீழ் இருந்தால், நீங்கள் தடைகளை அழிப்பவர் ஆகுவீர்கள்.