04.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அகநோக்குடையவராகி, உங்களுக்கு நன்மை செய்வதைப் பற்றிச் சிந்தியுங்கள். சுற்றுலாச் செல்லும்போது, ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, ஞானக்கடலைக் கடையுங்கள். நான் எப்போதும் முகமலர்ச்சியுடன் இருக்கின்றேனா?" என உங்களிடமே வினவுங்கள்.

கேள்வி:
கருணை நிறைந்த தந்தையின் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் மீது எவ்விடயத்தில் கருணை காட்ட வேண்டும்?

பதில்:
தனது குழந்தைகள் முட்களிலிருந்து மலர்களாக வேண்டும் என்று தந்தை கருணை கொண்டிருப்பதுடன், குழந்தைகளாகிய உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்காக அதிக முயற்சி செய்வது போன்று, குழந்தைகளாகிய நீங்களும் உங்கள்மீது கருணை கொண்டிருக்க வேண்டும். 'ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களை மலர்கள் ஆக்குங்கள்" என நாங்கள் பாபாவைக் கூவி அழைத்தோம். இப்பொழுது அவர் வந்துவிட்டார் என்பதால் நாங்கள் மலர்கள் ஆகமாட்டோமா? நீங்கள் உங்கள்மீது கருணை கொண்டிருப்பீர்களாயின், நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பதுடன், தந்தை உங்களுக்கு கூறுபவை அனைத்தையும் கிரகிப்பீர்கள்.


ஓம் சாந்தி.
அந்த ஒரேயொருவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். எனவே தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: நீங்கள் இங்கே வரும்போது, இலக்ஷ்மி, நாராயணனின் படத்தையும், ஏணிப் படத்தையும் பார்ப்பதுண்டா? அவை இரண்டையும் நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இலக்கையும், குறிக்கோளையும் நீங்கள் பார்க்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு தேவர்களாகி, பின்னர் இந்த ஏணியிலே தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள் என்ற முழுச் சக்கரமும் உங்கள் புத்தியினுள் புகுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் மாணவர்கள். உங்கள் இலக்கும், குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளது. எவராவது வரும்போது, இதுவே உங்கள் இலக்கும், குறிக்கோளும் என அவருக்கு விளங்கப்படுத்துங்கள். இக்கல்வி மூலம் நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். பின்னர் நீங்கள் 84 பிறவிகள் எனும் ஏணியில் கீழிறங்குகிறீர்கள். அது மீண்டும் இடம்பெற வேண்டும். ஞானம் மிக இலகுவானது, இருந்தபோதிலும், மக்கள் முன்னேறிச் செல்லும்போது ஏன் தோல்வியடைகிறார்கள்? உலகக் கல்வியுடன் ஒப்பிடும்போது, இந்த இறை கல்வி மிக இலகுவானது. உங்கள் இலக்கும், குறிக்கோளும் 84 பிறவிச் சக்கரமும் உங்கள் முன்னால் உள்ளது. இப்படங்கள் இரண்டும் வரவேற்பறையிலும் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். சேவை செய்வதற்குத் தேவையான பொருட்களும் உங்களுக்கு அவசியமாகும். முழு ஞானமும்; இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாங்கள் இம்முயற்சியை இந்நேரத்தில் செய்கின்றோம். நாங்கள் சதோபிரதான் ஆகுவதற்கு அதிக முயற்சி செய்யவேண்டும். நீங்கள் அகநோக்குடையவராகி ஞானக்கடலைக் கடைய வேண்டும். நாங்கள் சுற்றுலா செல்லும்போது, இதுவே உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். பாபாவிற்கு இது வரிசைக்கிரமமாகவே உள்ளது என்பது தெரியும். சிலர் இதனை நன்றாகப் புரிந்துகொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள் தமது சொந்த நன்மைக்காக முயற்சி செய்வார்கள். இன்ன இன்னார் நன்றாகக் கற்கின்றார் என்பதை ஒவ்வொரு மாணவரும் புரிந்து கொண்டிருக்கின்றார். நீங்கள் கற்காதிருந்தால், உங்களுக்கு இழப்பையே ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் ஓரளவிற்காவது தகுதியானவர் ஆகவேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையின் மாணவர்கள். இந்த பிரம்மாவும் கற்கின்றார். அந்த இலக்ஷ்மி நாராயணன் - அந்தஸ்தையும், ஏணியானது 84 பிறவிகளின் சக்கரத்தையும் குறிக்கிறது. அது முதலாம் இலக்க பிறப்பாகும். இதுவோ இறுதி இலக்க பிறப்பாகும். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். மக்கள் உள்ளே வரும்போது, உங்கள் இலக்கினதும் குறிக்கோளினதும் ஏணியினதும் படங்களை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் வந்து இதன் முன்னிலையில் அமர்ந்தால் நீங்கள் இதனை நினைவு செய்வீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. முழுச் சக்கரத்தினதும் முழு ஞானமும் உங்களுக்கு உள்ளதால் நீங்கள் மிகவும் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். உங்களிடம் வினவுங்கள்: என்னால் ஏன் அந்த ஸ்திதியைப் பேண முடியவில்லை? முகமலர்ச்சியுடன் இருக்க முடியாதிருப்பதற்கான காரணம் என்ன? இப்படங்களை உருவாக்கியவர்களின் புத்;தியில் அதுவே தமது எதிர்கால அந்தஸ்து என்பதும், அதுவே தமது இலக்கும் இலட்சியமும் என்பதும், அதுவே 84 பிறவிகளின் சக்கரம் என்பதும் இருக்கும். இது இலகு இராஜயோகம் என்பது நினைவுகூரப்படுகிறது. பாபா தொடர்ந்தும் நாளாந்தம் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதால், நீங்கள் நிச்சயமாக சுவர்க்க ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முழுச் சக்கரத்தின் இரகசியமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருப்பதால், நீங்கள் நிச்சயமாக அவற்றை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் பிறருடன் நாகரீகமாகப் பேசவேண்டும். உங்கள் நடத்தையும் மிக நன்றாக இருக்கவேண்டும். நீங்கள் உலாவித் திரியும்போதும், உங்கள் வேலைகளைச் செய்யும்போதும், நீங்கள் தந்தையிடம் கற்பதற்காக வந்துள்ளீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்கவேண்டும். இந்த ஞானத்தை நீங்கள் உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும். கல்வி இலகுவானது. மாணவர்கள் நன்றாகக் கற்காவிட்டால், தனது வகுப்பில் அதிகளவு மந்த புத்தியுடையவர்கள் உள்ளார்கள் என்பதால் தனக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், பரிசும் கிடைக்காது என்று ஆசிரியர் எண்ணுவார். அரசாங்கமும் அவருக்கு எதனையும் கொடுக்கமாட்டாது. இதுவும் ஒரு பாடசாலையாகும். இங்கே பரிசு போன்றவை கிடைக்கும் என்பதற்கான கேள்விக்கு இடமில்லை. இருப்பினும் நீங்கள் முயற்சி செய்வதற்குத் தூண்டப்படுகின்றீர்கள். நீங்கள் உங்கள் நடத்தையைச் சீராக்கிக்கொள்வதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். அத்துடன் நீங்கள் நற்பழக்க வழக்கங்கள் கொண்டவராகவும் இருக்கவேண்டும். தந்தை உங்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளார். ஆனால் உங்களால் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியாதுள்ளது. நீங்கள் எங்காவது செல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கப்பட்டாலும் நீங்கள் அங்கு செல்வதில்லை. நீங்கள் அங்கு வெப்பமாக உள்ளது என்றோ அல்லது அங்கு குளிராக உள்ளது என்றோ கூறுகின்றீர்கள். இதனைத் தந்தையே கூறுகின்றார் என்பதை நீங்கள் இனங்காண்பதில்லை. இந்த சாதாரண இரதம் மாத்திரமே உங்கள் புத்தியில் உள்ளது. அந்தத் தந்தை முற்றாக உங்கள் புத்திக்குள் வருவதில்லை. அனைவருமே பேரரசர்களைக் கண்டு பயப்படுகின்றார்கள். அவர்களுக்கு அதிகளவு அதிகாரம் உள்ளது. இங்கு தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். படைப்பவரான என்னையோ அல்லது படைப்பின் ஆரம்பம் மத்தி இறுதியையோ எவருக்கும் தெரியாது. பல மக்கள் உள்ளனர். அவர்கள் பேசுவதைப் பாருங்கள்! கடவுள் யார் என்பதையேனும் அவர்கள் அறியாதுள்ளனர். இது ஓர் அற்புதமே ஆகும். தந்தை கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்து, எனது அறிமுகத்தையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் உங்களுக்குக் கூறுகின்றேன். இந்த 84 பிறவிகளின் ஏணி மிகவும் தெளிவானதாகும். தந்தை கூறுகிறார்: நானே உங்களை அவ்வாறு ஆக்கினேன், இப்பொழுது மீண்டும் உங்களை அவ்வாறு ஆக்குகின்றேன். உங்களுக்கு தெய்வீகப் புத்தி இருந்தது. அவ்வாறாயின் உங்களைக் கல்லுப் புத்தி உடையவர் ஆக்கியது யார்? அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியத்தில் நீங்கள் தொடர்ந்தும் வீழ்ந்தீர்கள். நீங்கள் இப்பொழுது நிச்சயமாக தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும். தந்தையே சத்தியமானவர் என்று உள்ளுணர்வும் கூறுகிறது. அவர் நிச்சயமாக உங்களுக்கு உண்மையை மாத்திரமே கூறுவார். இந்த பிரம்மாவும் கற்கின்றார். நீங்களும் கற்கின்றீர்கள். அவர் கூறுகிறார்: நானும் ஒரு மாணவன் என்பதால் நான் கல்வியில் கவனம் செலுத்துகின்றேன். நான் இன்னமும் மிகச்சரியான கர்மாதீத ஸ்திதியை அடையவில்லை. ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் தருகின்ற அத்தகையதோர் கல்வியில் யார்தான் கவனம் செலுத்தமாட்டார்கள்? அனைவரும் கூறுவார்கள்: நாங்கள் நிச்சயமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறவேண்டும். நாங்கள் தந்தையின் குழந்தைகள் என்பதால் நாங்கள் நிச்சயமாக அதிபதிகள் ஆகுவோம். எவ்வாறாயினும் கல்வியில் எப்பொழுதும் ஏற்றத் தாழ்வு இருக்கவே செய்யும். நீங்கள் இப்பொழுது ஞானத்தின் சரியான சாராம்சத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். ஆரம்பத்தில், பழைய ஞானம் மாத்திரமே இருந்தது. நாளடைவில், நீங்கள் தொடர்ந்தும் புரிந்துகொண்டீர்கள். இப்பொழுது உண்மையில் ஞானத்தைப் பெற்றுக் கொள்கினநீ;றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தையும் கூறுகின்றார்: இன்று, நான் உங்களுக்கு அனைத்திலும் மிகவும் ஆழமான விடயங்களைக் கூறுகின்றேன். எவராலும் உடனடியாக ஜீவன்முக்தியைப் பெற்றுக்கொள்ள முடியாது. அவர்களால் முழு ஞானத்தையும் பெற முடியாது. முன்னர், உங்களிடம் இந்த ஏணிப்படம் இருக்கவில்லை. உண்மையில் நீங்கள் அவ்வாறே சக்கரத்தைச் சுற்றி வருகின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். பாபா ஆத்மாக்களாகிய எங்களுக்கு முழுச் சக்கரத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை கூறுகிறார்: உங்கள் தர்மமானது அதிகளவு சந்தோஷத்தைக் கொடுப்பதாகும். தந்தை தானே வந்து உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகிறார். மரணம் சற்று முன்னிலையில் இருக்கும் இவ்வேளையே, மற்றவர்களுக்கான சந்தோஷ காலமாகும். முன்னர் ஆகாய விமானம், மின்சாரம் போன்றவை இருக்கவில்லை. இப்பொழுது அவர்களுக்கு இதுவே சுவர்க்கம் போலுள்ளது. அவர்கள் பல பெரிய மாளிகைகளைக் கட்டுகின்றார்கள். இப்பொழுது அதிகளவு சந்தோஷம் உள்ளதாக அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களால் இலண்டனுக்கு மிகவும் விரைவாகச் செல்லக்கூடியதாக உள்ளது. அவர்கள் இதனையே சுவர்க்கம் என்று கருதுகிறார்கள். சத்தியயுகமே சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது என எவரேனும் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். கலியுகத்தை சுவர்க்கம் என அழைக்க முடியாது. ஒருவர் நரகத்தில் தனது சரீரத்தை நீக்கினால், அவர் நிச்சயமாக நரகத்திலேயே மறுபிறப்பெடுக்கின்றார். முன்னர், நீங்களும் இவ்விடயங்களைப் புரிந்து கொண்டிருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் அவற்றைப் புரிந்துகொள்கின்றீர்கள். இராவண இராச்சியம் ஆரம்பமாகும்போது, நாங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்து, பின்னர் அனைத்து விகாரங்களையும் கொண்டிருக்கின்றோம். இப்பொழுது நீங்கள் முழு ஞானத்தையும் பெற்றிருப்பதால், உங்கள் நடத்தை போன்றவை மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். சத்தியயுகத்தில் இருந்ததை விடவும் இப்பொழுது நீங்கள் அதிக பெறுமதி வாய்ந்தவர்கள். ஞானக்கடலான தந்தை இப்பொழுது இந்நேரத்தில் உங்களுக்கு முழுஞானத்தையும் கொடுக்கின்றார். எந்த மனிதராலும் ஞானத்தையும் பக்தியையும் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் அவ்விரண்டையும் கலந்துவிட்டார்கள். அவர்கள் சமயநூல்களை வாசிப்பதை ஞானம் என்றும், வழிபாட்டை பக்தி என்றும் நினைக்கின்றார்கள். எனவே தந்தை உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்கு அதிக முயற்சி செய்கின்றார். நீங்கள் பாபாவை வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாகவும் மலர்களாகவும் ஆக்குமாறு கூவியழைப்பதால், குழந்தைகளாகிய நீங்களும் கருணை உணர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை இப்போது வந்துவிட்டார், எனவே நீங்கள் உங்கள்மீது கருணை கொள்ள வேண்டும். எங்களால் அத்தகைய மலர்களாக ஆகமுடியாதா? எங்களால் ஏன் இன்னமும் பாபாவின் இதய சிம்மாசனத்தில் ஏறமுடியவில்லை? நீங்கள் கவனம் செலுத்துவதில்லை. தந்தை மிகவும் கருணை நிறைந்தவர். தூய்மையற்ற உலகினுள் வந்து உங்களைத் தூய்மைப்படுத்துமாறு நீங்கள் தந்தையைக் கூவியழைத்தீர்கள். எனவே, தந்தை கருணை காட்டுவதைப் போன்றே, குழந்தைகளாகிய நீங்களும் கருணை காட்டவேண்டும். இல்லையேல், சற்குருவை அவமரியாதை செய்தவர்களால் உயர்ந்தோர் அந்தஸ்தைப் பெறமுடியாது. சற்குரு யார் என எவரும் கனவு கண்டிருக்கவும் மாட்டார்கள். தமது குரு தம்மைச் சபித்துவிட்டால் தமக்கு இழப்பு ஏற்படும் என மக்கள் நம்புகிறார்கள். அவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது, அது குருவின் ஆசீர்வாதமே என அவர்கள் நம்புகிறார்கள். அது தற்காலிக சந்தோஷத்திற்கான விடயமாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது உங்கள் மீது கருணை காட்டுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள், உங்களால் கிரகிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆத்மாவே அனைத்தையும் செய்கிறார். நானும் ஆத்மாக்களாகிய உங்களுக்கே கற்பிக்கிறேன். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். இதை உறுதியாக்குவதுடன், தந்தையையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிட்டால், பாவங்கள் எவ்வாறு அழிக்கப்பட முடியும்? பக்தி மார்க்கத்திலும், 'ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்!" என மக்கள் அவரை நினைவு செய்தார்கள். தந்தையே விடுதலையாக்குபவரும், வழிகாட்டியும் ஆவார். இதுவும் அவருடைய மறைமுகமான புகழே ஆகும். தந்தை வந்து உங்களுக்கு அனைத்தையும் கூறுகிறார்: பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள். நான் வரும்போது, எனக்குரிய நேரத்திலேயே நான் நிச்சயமாக வரவேண்டும். நான் விரும்பும்போதெல்லாம் என்னால் வரமுடியும் என்றில்லை. நாடகத்திலே நான் எப்போது வரவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டுள்ளதோ, அப்போதே நான் வருகிறேன். எவ்வாறாயினும், எனக்கு அத்தகைய எண்ணங்கள் இருப்பதில்லை. தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார். இவரும் அவரிடமே கற்கிறார். அந்த ஒரேயொருவர் ஒருபோதும் தவறு செய்வதுமில்லை, எவருக்கும் துன்பம் விளைவிப்பதுமில்லை. ஆசிரியர்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே. உண்மையான தந்தை உங்களுக்கு உண்மையைக் கற்பிக்கிறார். சத்தியமானவரின் குழந்தைகளும், சத்தியமானவர்களே. பின்னர் பொய்யானவரின் குழந்தைகள் ஆகுவதால், நீங்கள் அரைக் கல்பமாக பொய்யானவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் உண்மையான தந்தையையும் மறந்துவிடுகிறீர்கள். முதலில், இது சத்தியயுகத்து புது உலகமா, அல்லது பழைய உலகமா என வினவுங்கள். அப்பொழுது மக்கள் நீங்கள் மிக நல்ல கேள்விகளைக் கேட்கிறீர்கள் என நினைப்பார்கள். இந்நேரத்திலே, ஒவ்வொருவரிலும் ஐந்து விகாரங்களும் இருக்கின்றன. ஐந்து விகாரங்களும் அங்கே இருப்பதில்லை. இது புரிந்துகொள்வதற்கு மிக இலகுவான விடயமாகும். எவ்வாறாயினும், இதை உங்களில் சிலர் புரிந்துகொள்ளாவிட்டால், உங்களால் எவ்வாறு கண்காட்சிகளில் விளங்கப்படுத்த முடியும்? சேவை செய்வதற்குப் பதிலாக, அவச்சேவை செய்து விட்டு நீங்கள் திரும்பி வருவீர்கள். வெளியே சென்று சேவை செய்வதென்பது உங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்வதைப் போன்றதல்ல! பெருமளவு புரிந்துணர்வு தேவைப்படுகிறது. பாபா ஒவ்வொருவரின் நடவடிக்கைகளிலிருந்தும் புரிந்துகொள்கிறார். தந்தை என்றால் தந்தைதான், பின்னர் தந்தை கூறுவார்: இதுவும் நாடகத்தி;ல் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எவராவது வரும்போது, ஒரு பிரம்மகுமாரி விளங்கப்படுத்துவது சிறந்தது. இதன் பெயரே பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் ஆகும். பிரம்ம குமாரிகள் என்ற பெயரே போற்றப்படும். இந்நேரத்தில், அனைவரும் ஐந்து விகாரங்களில் முழுமையாக சிக்குண்டுள்;ளார்கள். அவர்களுக்குச் சென்று விளங்கப்படுத்துவது மிகவும் கடினமானது. அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. ஞானம் நல்லது என அவர்கள் வெறுமனே கூறுவார்கள். ஆனால் அவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. தொடர்ந்தும் தடைகளுக்கு மேல் தடைகள் வருகின்றன. அதற்கு, நீங்கள் அந்த யுக்திகளையும் உருவாக்க வேண்டும். பாதுகாப்பிற்கு காவல்துறையினரை வைத்திருப்பதுடன், படங்களைக் காப்புறுதி செய்தும் வைத்திருங்கள். இது யாகம், எனவே நிச்சயமாக இதிலே தடைகள் இருக்கும். அதற்குள் பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்படப் போகிறது. வேறு எதற்காக அது யாகம் என அழைக்கப்படுகிறது? யாகத்தினுள் அனைத்தும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். இது உருத்திரனின் ஞான யாகம் என அழைக்கப்படுகிறது. ஞானம் கல்வி என்றும் அழைக்கப்படுகிறது. இது பாடசாலையும் (கல்வி கற்குமிடம்), யாகமும் ஆகும். நீங்கள் பாடசாலையில் கற்று தேவர்கள் ஆகுகிறீர்கள். பின்னர் யாகத்தினுள் அனைத்தும் அர்ப்பணிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இதைப் பயிற்சி செய்பவர்களாலேயே விளங்கப்படுத்தக்கூடியதாக இருக்கும். ஒருவருக்கு இந்தப் பயிற்சி இல்லாவிட்டால், அவரால் எதை விளங்கப்படுத்த முடியும்? உலக மக்களுக்கு, இது ஒரு தற்காலிக சுவர்க்கமாகும். உங்களுக்கோ அரைக்கல்பத்திற்கு சுவர்க்கம் இருக்கும். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, வியப்படைகிறீர்கள். இப்பொழுது இராவண இராச்சியம் முடிவடைந்து, இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. இதில் யுத்தத்தைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. மக்கள் இந்த ஏணிப் படத்தைக் காணும்போது, அவர்கள் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியதையிட்டு, மிகவும் வியப்படைகிறார்கள். இந்த பிரம்மாவும் தந்தையிடமிருந்தே கற்றிருக்கிறார், எனவே அவர் ஏனையோருக்கு அதைத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். புதல்விகளும் விளங்கப்படுத்துகிறார்கள். ஏனையோருக்கு விளங்கப்படுத்துபவர்கள் நிச்சயமாக அதிக பலனைப் பெறுவார்கள். கற்காதவர்கள், கற்றவர்களின் முன்னால் தலைவணங்க வேண்டும். தந்தை உங்களுக்கு தினமும் விளங்கப்படுத்துகிறார்: உங்களுக்கு நீங்களே நன்மை செய்யுங்கள். இப்படங்களை நீங்கள் உங்களுக்கு முன்னால் வைத்திருக்கும்போது, போதை நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். இதனாலேயே பாபா இப்படங்களை உங்கள் அறைகளில் தொங்கவிட்டுள்ளார். இலக்கும், குறிக்கோளும் மிக இலகுவானவை. இதற்கு மிக நல்ல பண்புகள் தேவைப்படுகிறது. உங்கள் இதயம் சுத்தமாக இருக்கும்போது, உங்கள் ஆசைகள் நிறைவேறும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் எல்லையற்ற தந்தையின் மாணவர்கள் என்பதுடன், கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதால், நீங்கள் நன்றாகக் கற்று தந்தையின் பெயரைப் போற்றச்செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை எப்போதும் கொண்டிருங்கள். உங்கள் நடத்தை மிகவும் இராஜரீகமானதாக இருக்கட்டும்.

2. தந்தையைப் போன்று கருணை நிறைந்தவர்களாகி, உங்களை முட்களிலிருந்து மலர்களாக்கி, ஏனையோரையும் மலர்கள் ஆக்குங்கள். அகநோக்குடையவராகி, உங்களுக்கும், ஏனையோருக்கும் நன்மை செய்வதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

ஆசீர்வாதம்:
விகாரங்களாகிய விஷப்பாம்பை உங்கள் கழுத்து மாலையாக்கி சங்கரரைப் போன்று தபஸ்யா சொரூபம் ஆகுவீர்களாக.

ஜந்து விகாரங்களும் மக்களுக்கு ஒரு விஷப் பாம்பைப் போன்றதாகும். ஆனால் பாம்பானது யோகத்தைப் பரிசோதனை செய்கின்ற யோகி ஆத்மாக்களாகிய உங்கள் கழுத்;துமாலை ஆகுகிறது. பிராமணர்களாகிய உங்களினதும், தந்தை பிரம்மாவினதும் சரீரமற்ற வடிவத்தின் ஞாபகார்த்தம் சங்கரரின் தபஸ்வி வடிவத்தில் இன்னமும் வழிபடப்படுகின்றது. இரண்டாவதாக இந்தப் பாம்பானது நீங்கள் சந்தோஷ நடனமாடுவதற்கு ஒரு மேடை ஆகுகின்றது. இந்த ஆன்மீக ஸ்திதி ஒரு பௌதீக மேடையின் வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே நீங்கள் விகாரங்களின்மீது அத்தகைய வெற்றி கொள்ளும்போது நீங்கள் யோகத்தைப் பரிசோதனை செய்யும் ஓர் ஆத்மா எனவும், தபஸ்யா சொருபம் எனவும் அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
இனிமையான அமைதி நிறைந்த சுபாவத்தைக் கொண்டிருப்பவர்கள் கோபமென்ற தீய ஆவியினால் தாக்கப்பட முடியாது.