04.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
சாராம்;சம்: இனிய குழந்தைகளே, இது இப்பொழுது கணக்குகளைத் தீர்க்கும் நேரம். இராவணன் சகலரையும் இடுகாட்டில் புதைத்துவிட்டான். உங்கள் மீது அமிர்தத்தைப் பொழிந்து உங்களைத் தன்னுடன் திரும்பி அழைத்துச் செல்வதற்காகவே தந்தை வந்துள்ளார்.

கேள்வி:
சிவபாபா ஏன் பொக்கிஷக் களஞ்சியத்தின் கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகிறார்?

பதில்:
கள்ளங்கபடமற்ற பிரபுவான சிவன் வரும் பொழுது, தெய்வீகக் குணங்கள் அற்றவர்கள், கல்லுப் புத்தியுள்ளவர்கள், கூனல் விழுந்தவர்கள் அனைவருக்கும் அவர் நன்மை செய்து அவர்களை உலக அதிபதிகள் ஆக்குவதாலேயே அவ்வாறு அழைக்கப்படுகிறார். அவர் தூய்மையற்ற உலகிற்கு வந்து, தூய்மையற்ற சரீரம் ஒன்றிற்குள் பிரவேசிக்கின்றார். அவர் மிகவும் கள்ளங்கபடமற்றவர்!. இனிய குழந்தைகளே, அமிர்தத்தைப் பருகி, விகாரங்கள் எனும் விஷத்தை விட்டுவிடுங்கள்" என்பதே கள்ளங்கபடமற்ற பிரபுவின் வழிகாட்டல் ஆகும்.

பாடல்:
தொலை தூர வாசியானவர் அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலைக் கேட்டீர்கள். அதாவது ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களின் செவிகள் எனும் பௌதீகப் புலனங்கத்தின் மூலம் பாடலைக் கேட்டீர்;கள். பயணி தூர தேசத்திலிருந்து வருகிறார். நீங்களும் பயணிகளே. இங்குள்ள மனித ஆத்மாக்கள் அனைவரும் பயணிகளே. ஆத்மாக்களுக்கு வீடு இருப்பதில்லை. ஆத்மாக்கள் அசரீரியானவர்கள். அசரீரியான ஆத்மாக்கள், அசரீரியான உலகில் வசிக்கிறார்கள். அதுவே அசரீரியான ஆத்மாக்களின் வீடு என்றோ, நாடு என்றோ, அல்;லது உலகம் என்றோ அழைக்கப்படுகிறது. இது மனித ஆத்மாக்களின் நாடு எனப்படுகிறது. அதுவே ஆத்மாக்களின் நாடாகும். ஆத்மாக்கள் இங்கு வந்து சரீரம் ஒன்றினுள் பிரவேசிக்கும் போது, அவர்கள் அசரீரி நிலையிலிருந்து சரீர நிலைக்கு வருகிறார்கள். ஆத்மாக்கள் உருவமற்றவர்கள் என்பதல்ல. அவர்களுக்கு நிச்சயமாக பெயரும் உருவமும் உள்ளன. அத்தனை சிறிய ஆத்மா சரீரத்தின் மூலம் அத்தனை பெரியதொரு பாகத்தை நடிக்கிறார். ஆத்மாக்கள் அனைவரும் அத்தகைய ஒரு மிகப்பெரிய பாகத்தின் பதிவைத் தமக்குள் கொண்டுள்ளனர். பதிவு ஒன்று ஒரு தடவை பதிவு செய்யப்பட்டு விட்டால், உங்களுக்கு எத்தனை தரம் வேண்டுமோ, அத்தனை தரம் அது திரும்பத் திரும்ப ஒரே விதமாக நிகழ்கிறது. இச்சரீரத்தில் உள்ள ஆத்மாவும் எண்பத்து நான்கு பிறவிகளைக் கொண்ட பாகத்தின் பதிவைத் தமக்குள் கொண்டுள்ளனர். எவ்வாறு தந்தை அசரீரியானவரோ அவ்வாறே ஆத்மாக்களாகிய நீங்களும் அசரீரியானவர்கள். ஆத்மா பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் எனச் சமயநூல்களில் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்ட எதுவுமே இல்லை. வானம் ஒரு வெளியாகும். இருந்தும் அது 'வானம்" எனும் பெயரைக் கொண்டுள்ளது. பெயரில்லாத எதுவுமே இல்லை. 'பரமதந்தை, பரமாத்மா" என மனிதர்கள் கூறுகிறார்கள். ஆத்மாக்கள் தூர தேசத்தில் வசிப்பவர்கள். இச்சரீர உலகம் இருவரினால் ஆட்சி செய்யப்படுகிறது. இராம, இராவண இராச்சியங்கள் உள்ளன. அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியமும், மற்றறைய அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியமும் நிலவுகிறது. தந்தை தனது குழந்தைகளுக்காகத் துன்ப இராச்சியத்தை உருவாக்க மாட்டார். இல்லையா? கடவுளே இன்பத்தையும், துன்பத்தையும் அளிப்பவரென அவர்கள் கூறுகிறார்கள். பாபா விளங்கப்படுத்துகிறார்: நான் ஒருபொழுதும் குழந்தைகளுக்குத் துன்பம் கொடுப்பதில்லை. எனது பெயரே துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவர் என்பதாகும். மனிதர்களால் இத் தவறு செய்யப்பட்டுள்ளது. கடவுள் ஒருபொழுதும் துன்பம் கொடுப்பதில்லை. இந்நேரத்தில் இது துன்ப பூமியாகவுள்ளது. அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியம் உள்ளது. அதில் துன்பம் மாத்திரமே இருக்கிறது. சந்தோஷத்தின் சுவடேனும் இருப்பதில்லை. எவ்வாறாயினும், சந்தோஷ பூமியில் துன்பம் எதுவும் இருப்பதில்லை. தந்தை சுவர்க்கத்தை உருவாக்குகிறார். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இதனைப்; புதிய உலகம் என்று எவருமே அழைக்க மாட்டார்கள். புதிய உலகத்தின் பெயர் சத்தியயுகம். அது பின்னர் பழையதாகும் பொழுது கலியுகமென அழைக்கப்படுகிறது. ஒரு புதிய பொருள் அழகாகக் காட்சியளிக்கிறது. பழைய பொருளோ அழகற்றதாகக் காட்சியளிக்கிறது. பின்னர் பழைய பொருட்கள் அழிக்கப்படுகின்றன. மனிதர்கள் விஷத்தைச் சந்தோஷமெனக் கருதுகிறார்கள். 'நாங்கள் ஏன் அமிர்தத்தைத் துறந்து, அதற்குப் பதிலாக விஷத்தைக் குடிக்க வேண்டும்" என்பது நினைவு கூரப்படுகிறது. பின்னர் கூறப்படுகிறது: உங்களால் அனைவருமே நன்மையடைகிறார்கள். நீங்கள் வரும் பொழுது நீங்கள் செய்வதெல்லாம் நன்மையையே ஏற்படுத்துகின்றது. அல்லாவிட்டால், மனிதர்கள் இந்த இராவண இராச்சியத்தில் தொடர்ந்தும் தீய செயல்களையே செய்து கொண்டிருப்பார்கள். 'குருநானாக்" வந்து ஐநூறு வருடங்கள் ஆகிவிட்டன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் எப்பொழுது மீண்டும் வருவார்? அவரது ஆத்மா ஒளியுடன் இரண்டறக் கலந்து விட்டது என அவர்கள் கூறுகிறார்கள். ஆதலால் எவ்வாறு அவரால் திரும்பி வரமுடியும்? குருநானக் 4500 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வருவார் என நீங்;கள் அவர்களிடம் கூறுங்கள். உங்களுடைய புத்தியிலே முழு உலகினது வரலாறும் புவியியலும் தொடர்ந்து சுழல்கிறது. இந்நேரத்தில் அனைவருமே தமோபிரதானாக இருக்கிறார்கள். இதுவே கணக்குகளைத் தீர்க்கும் நேரமாகும். மனிதர்கள் அனைவரும் ஏறத்தாழ இறந்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆத்மாவினது ஒளியும் அணைந்து விட்டது. தந்தை வந்து அனைவரையும் விழித்தெழச் செய்கிறார். காமச்சிதையில் அமிழ்;ந்ததினால் எரியுண்ட குழந்தைகளின் மீது தந்தை அமர்தத்தைப் பொழிந்து, அவர்களை விழித்தெழச் செய்து, பின்னர் தன்னுடன் அவர்களைத் திருப்பி அழைத்துச் செல்வார். மாயை அதாவது இராவணன் உங்களை காமச்சிதையில் அமரச் செய்வதுடன் உங்களை இடுகாட்டில் புதைத்தும் விட்டான். எல்லோருமே உறங்குகிறார்கள். தந்தை இப்பொழுது உங்களை ஞான அமிர்தத்தைப் பருகச் செய்கிறார். ஞான அமிர்தத்திற்கும், அந்தத் தண்ணீருக்குமிடையில் பெரும் வேறுபாடுள்ளது. சீக்கியர்கள் முக்கிய தினங்களின் போது, வாவியைச் சுத்தப்படுத்திச் சேற்றைப் பெரும் ஆடம்பரத்துடனும் வெளிப் பகட்டுடனும்; அகற்றுகிறார்கள். அதனாலேயே அது அம்ரித்சர் - அமிர்த வாவி என அழைக்கப்படுகிறது. குருநானக்கும் தந்தையைப் புகழ்ந்தார். 'அவர் ஒருவரே எப்பொழுதும் சத்தியத்தைப் பேசுபவர்" என குருநானக்கே கூறியுள்ளார். சத்திய நாராயணன் ஆகுகின்ற கதை ஒன்று இருக்கின்றது. இல்லையா? பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் அமரத்துவக் கதை, மூன்றாம் கண்ணைப் பற்றிய கதை போன்ற எத்தனையோ பல கதைகளைக் கேட்கிறார்கள்! சங்கரர் பார்வதிக்கு ஒரு கதை சொன்னார் என அவர்கள் கூறுகிறார்கள். அவரோ சூட்சும உலகில் வாழ்பவர். அங்கு அவர் என்ன கதையைக் கூறமுடியும்? தந்தை இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். உண்மையில் அமரத்துவக் கதையை உங்களுக்குக் கூறி, உங்களை அமரத்துவ பூமிக்கு அழைத்துச் செல்வதற்காகவே நான் வந்துள்ளேன். நான் உங்களை மரண பூமியிலிருந்து, அமரத்துவ பூமிக்கு அழைத்துச் செல்கிறேன். அமரத்துவக் கதையைப் பார்வதிக்கும் கூறவேண்டி நேரிடுமளவிற்கு, பார்வதி சூட்சும உலகில் என்ன தவறைச் செய்திருப்பார்? அவர்கள் சமயநூல்களில் பல கதைகளை எழுதியுள்ளார்கள். சத்திய நாராயணன் ஆகுகின்ற கதை உண்மைக் கதையல்ல. சத்திய நாராயணன் ஆகுகின்ற கதையை நீங்கள் பல தடவைகள் செவிமடுத்திருப்பீர்கள். அது எவரையாவது சத்திய நாராயணன் ஆக்குகிறதா? அதற்குப் பதிலாக அவர்கள் தொடர்ந்தும் கீழே இறங்குகிறார்கள். நாங்கள் ஒரு ஆணிலிருந்து நாராயணனாகவும், ஒரு பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் ஆகுகின்றோம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இதுவே அமரத்துவ பூமிக்குச் செல்வதற்கான சத்திய நாராயணன் ஆகுவதற்கான உண்மையான, மூன்றாம் கண்ணைப் பற்றிய உண்மைக் கதையாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்;வொருவரும் ஞானம் என்னும் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். பாபா விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் அழகாகாவும், பூஜிக்கப்படத் தகுதியுடையவர்களாகவும் இருந்தீர்கள். 84 பிறவிகளை எடுக்கும் போது, நீங்கள் பூஜிப்பவர்களாகிவிட்டீர்கள். அதனாலேயே, 'பூஜிக்கப்படத் தகுதியானவர்களும் நீங்களே, பூஜிப்பவர்கள் ஆகுபவர்களும் நீங்களே" என நினைவுகூரப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் எப்பொழுதும் பூஜிக்கப்படத் தகுதி வாய்ந்தவர். நான் வந்து, உங்களைப் பூஜிப்பவர்களிலிருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக மாற்றுகின்றேன். இதுவே தூய்மையற்ற உலகம். சத்திய யுகத்தில் மனிதர்கள் தூய்மையாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாவும் இருக்கிறார்கள். தற்பொழுது மனிதர்கள் அனைவரும் தூய்மையற்ற பூஜிப்பவர்களாக இருக்கிறார்கள். சந்நியாசிகளும், புனிதர்களும் 'ஓ தூய்மையாக்குபவரான சீதையின் இராமா!" எனப் பாடி வருகிறார்கள். இவ்வார்த்தைகள் சரியானவை. அனைவருமே மணவாட்டிகளான சீதைகள். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ இராமா! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! பக்தி செய்யும் ஆத்மாக்கள் அனைவரும் கூவி அழைக்கிறார்கள்: ஓ இராமா! காந்தி கீதையை வாசித்து முடிக்கும் பொழுது, 'ஓ தூய்மையாக்குபவரான சீதா, இராமா!" எனக் கூறுவார். கீதையை உபதேசித்தவர் கிருஷ்ணர் அல்ல என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். 'கடவுள் சர்வவியாபி அல்லர் என்னும் அபிப்பிராயத்தைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள்" என பாபா கூறுகிறார். கீதையின் கடவுள் சிவனே அன்றி கிருஷ்ணர் அல்லர். கீதையின் கடவுள் என யாரை அழைக்க வேண்டுமென முதலில் வினவுங்கள். யாரைக் கடவுளென அழைக்க வேண்டும்? அசரீரியானவரையா, அல்லது சரீரிமுடையவரையா? கிருஷ்ணர் சரீரமுடையவர். சிவன் அசரீரியானவர். அவர் இச்சரீரத்தைக் கடனாக மாத்திரமே எடுக்கிறார். அவர் தாயின் கருப்பை மூலமாகப் பிறப்பதில்லை. சிவனுக்கென ஒரு சொந்தமான சரீரம் இல்லை. இங்கு இந்த மனித உலகிலேயே பௌதீகச் சரீரங்கள் உள்ளன. தந்தை வந்து, சத்திய நாராயணன் ஆகுகின்ற உண்மைக் கதையைக் கூறுகின்றார். தூய்மையாக்குபவர், அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவர், அனைவரையும் விடுதலை செய்பவர் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். என்றெல்லாம் தந்தை புகழப்படுகிறார். நல்லது. எங்கே சந்தோஷம் நிலவும்? அது இங்கே இருக்க முடியாது. நீங்கள் அடுத்த பிறவியிலேயே, அதாவது சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டு, இப்பழைய உலகம்; அழிக்கப்படும் பொழுதே சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். நல்லது. நீங்கள் எதிலிருந்து விடுதலை செய்யப்படுகிறீர்கள்? இராவணனின் துன்பத்திலிருந்து ஆகும். இதுவே துன்ப பூமி. நல்லது. அவர் உங்கள் வழிகாட்டியாகவும் ஆகுகின்றார். இச்சரீரங்கள் இங்கேயே அழிக்கப்பட, ஆத்மாக்கள் மீண்டும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மணவாளன் முதலில் செல்ல, மணவாட்டிகள் அவரைப் பின் தொடர்கிறார்கள். அவரே அமரத்துவமான, அற்புதமான மணவாளன். அவரே அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவித்து, அவர்களைத் தூய்மையாக்கித் தன்னுடன் வீட்டுக்குத் மீண்டும் அழைத்துச் செல்கிறார். திருமண ஊர்வலத்தில் கணவன் முன்னே நடக்க, அவரது மனைவியாகிய மணவாட்டி பின்தொடர்கிறார். அவர்களைத் தொடர்ந்து திருமண ஊர்வலத்தில் ஏனையோர் செல்கின்றனர். உங்கள் மாலை இப்பொழுது இவ்வாறேயுள்ளது. உச்சியிலேயுள்ள குஞ்சம் சிவபாபாவைக் குறிப்பதுடன், அது வணங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரட்டை மணிகளான பிரம்மாவும், சரஸ்வதியுமுள்ளனர். தொடர்ந்து பாபாவின் உதவியாளர் ஆகுகின்ற மணிகளாகிய நீங்கள் இருக்கிறீர்கள். மலரான சிவபாபாவை நினைவு செய்வதாலேயே நீங்கள் சூரிய வம்சத்தினராகவும், விஷ்ணுவின் மாலையில் இடம் பெறுபவர்களாகவும் ஆகுகின்றீர்கள் சரஸ்வதியும் பிரம்மாவுமே இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றனர். இலக்ஷ்மியும் நாராயணனும், சரஸ்வதியும் பிரம்மாவுமாகுகின்றனர். அவர்கள் முயற்சி செய்ததனாலேயே பூஜிக்கப்படத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றனர். ஒரு மாலை எதனைக் குறிக்கின்றது என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஒரு மாலையை உருட்டிய வண்ணமே இருக்கிறார்கள். 16,108 மணிகளாலான மாலையும் உள்ளது. அது பெரிய ஆலயங்களில் வைக்கப்படுகிறது. அனைவரும் மாலையை வெவ்வேறு இடங்களிலிருந்து உருட்டுகிறார்கள். முன்னர் பாபா பம்பாயிலுள்ள இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திற்குச் செல்லும்பொழுது, அவர் மணிமாலையை உருட்டி, இராமரின் பெயரையும் உச்சரிப்பார், ஏனெனில் தந்iதையாகிய ஒருவரே (இராமர்) குஞ்சம் (மலர்) ஆகுகிறார். அந்த மலரே இராமரென அழைக்கப்படுகிறது, மக்கள் மணிமாலைகளை வழிபடுகின்றார்கள். அவர்களிடம் ஞானம் இல்லை. குருமாரும் கையில் ஒரு மணிமாலையை உருட்டுவதுண்டு. அவர்கள் உருட்டுவது யாருடைய மணியெனக் கேளுங்கள். அவர்களுக்குத் தெரியாது. கிறிஸ்துவின் நினைவாகத் தாம் உருட்டுவதாகக் கூறுவார்கள். கிறிஸ்துவின் ஆத்மா எங்குள்ளார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அந்த கிறிஸ்து ஆத்மா இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டாரென்பது உங்களுக்குத் தெரியும். நீங்களும் தமோபிரதான் பிச்சைக்காரர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் பிச்சைக்காரர்களிலிருந்து இளவரசர்கள் ஆகுகிறீர்கள். பாரதம் ஓர் இளவரசனாக இருந்தது. இப்பொழுது பிச்சைக்காரன் ஆகிவிட்டது. அது மீண்டும் ஒருமுறை இளவரசன் ஆகும். தந்தை உங்களை இவ்வாறு ஆக்குகிறார். நீங்கள் மனிதர்களிலிருந்து இளவரசர்கள் ஆகுகிறீர்கள். இளவரசர்களும் இளவரசிகளும் சென்று கற்கும் இளவரசர் கல்லூரி இருந்தது. இங்கு கற்பதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்குச் சுவர்க்கத்தில் இளவரசர்கள், இளவரசிகள் ஆகுகிறீர்கள். இந்த ஸ்ரீ கிருஷ்ணர் ஓர் இளவரசர். அவரது 84 பிறவிகளின் கதையும் எழுதப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கே இந்த விடயங்கள் புரிகின்றன. கடவுள் பேசுகிறார்! அவரே அனைவரதும் தந்தையாவார். நீங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையாகிய கடவுளைச் செவிமடுக்கிறீர்கள். அது சத்திய பூமி என்று அழைக்கப்படுகிறது. இது பொய்ம்மையின் பூமி என்று அழைக்கப்படுகிறது. தந்தையே சத்திய பூமியை ஸ்தாபிக்கிறார். இராவணன் பொய்ம்மையின் பூமியை ஸ்தாபிக்கிறார். அவர்கள் இராவணனின் வடிவத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. தாங்கள் கொலை செய்தாலும் மீண்டும் உயிர்த்து வாழ்கின்ற இராவணன் யார் என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை. உண்மையில் ஆண், பெண் இருபாலாரதும் 5 விகாரங்களே இராவணன் எனக் கூறப்படுகிறது. அவர்கள் இராவணனைக் கொல்கிறார்கள். இராவணனைக் கொன்ற பின்னர், தங்கத்தை (மரங்களிலுள்ள மஞ்சள் நிற ஒட்டுண்ணிப் பூக்கள்) திருடுகிறார்கள். இது முட்களின் காடு என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பம்பாயில் முட்களின் பிரபுவிற்கு (பபுல்நாத்) ஓர் ஆலயம் உள்ளது. தந்தை வந்து முட்களை மலர்கள் ஆக்குகிறார். அனைவரும் காமம் என்னும் விகாரத்தினால் ஒருவரையொருவர் குத்துவதனால் இது முட்காடு எனப்படுகிறது. சத்தியயுகம் அல்லாவின் தோட்டம் எனப்படுகிறது. அதே மலர்கள் பின்னர் முட்கள் ஆகுகின்றன. அந்த முட்கள் மீண்டும் மலர்கள் ஆகுகின்றன. நீங்கள் இப்பொழுது 5 விகாரங்களையும் வெற்றி கொள்கிறீர்கள். இராவணனின் இந்த இராச்சியம் நிச்சயம் அழிக்கப்பட வேண்டும். முடிவில் பிரதானமான போர் நடைபெறும். உண்மையான தசேரா நிகழ உள்ளது. இராவணனின் இராச்சியம் அழிக்கப்பட்டதும் நீங்கள் லங்காவைக் களவாடுவீர்கள். உங்களுக்குத் தங்கத்தாலான மாளிகைகள் கிடைக்கும். நீங்கள் இப்பொழுது இராவணனை வென்று சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். பாபா, சிவா என்றழைக்கப்படுகிறார். அவர் உங்களுக்கு முழு இராச்சியத்தையும் தருவதனால், பொக்கிஷக் களஞ்சியத்தின் அப்பாவிப் பிரபு எனவும் அழைக்கப்படுகிறார். தெய்வீகக் குணங்கள் இல்லாதவர்கள், கல்லுப்புத்தி உள்ளவர்கள், கூனிகள் ஆகிய அனைவரையும் தந்தை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அவர் அந்தளவுக்கு ஓர் அப்பாவி! அவர் இந்தத் தூய்மையற்ற உலகில் வந்து ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கிறார். சுவர்க்கத்துக்குச் செல்வதற்குத் தகுதியற்றவர்கள் நஞ்சு அருந்துவதை நிறுத்த மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்களுடைய இந்த இறுதிப்பிறவியில் தூய்மையாகுங்கள். இந்த விகாரங்கள் காரணமாக நீங்கள் ஆரம்பத்திலிருந்தே மத்தி ஊடாக இறுதிவரை துன்பத்தை அனுபவம் செய்து வந்துள்ளீர்கள். உங்களுடைய இந்த ஒரு பிறவியில் நஞ்சு அருந்துவதை நிறுத்த முடியாதா? நான் உங்களுக்கு ஞானாமிர்தம் கொடுத்து உங்களை அமரத்துவமானவர் ஆக்குகிறேன். அவ்வவாறிருந்தும் நீங்கள் தூய்மையடைவதில்லை. உங்களால் நஞ்சு, சிகரெட், மதுபானம் ஆகியவற்றைத் தவிர்க்க முடியாதுள்ளது. எல்லையற்ற தந்தையாகிய நான் உங்களிடம் கூறுகிறேன்: குழந்தைகளே, இந்த ஒரு பிறவிக்குத் தூய்மை ஆகுங்கள், நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவேன். பழைய உலகை அழித்து, புதிய உலகை ஸ்தாபித்தல் அத்தந்தை ஒருவரின் பணியே. தந்தை முழு உலகையும் துன்பத்திலிருந்து விடுவித்து அனைவரையும் அமைதி தாமத்துக்கும் சந்தோஷ தாமத்துக்கும் அழைத்துச் செல்வதற்காக வந்துவிட்டார். இப்பொழுது அனைத்துச் சமயங்களும் அழிக்கப்படவுள்ளன. ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிறது. கிரந்தத்தில் கூட (சீக்கிய சமயநூல்) பரமாத்மாவாகிய பரமதந்தையை அமரத்துவ ரூபமென்றே கூறுகிறார்கள். தந்தை, மரணத்தின் மரணமான, மரணத்தின் பிரபு ஆவார். அந்த மரணமானது ஓரிருவரையே கொண்டு போகும். ஆனால் நான் ஆத்மாக்கள் அனைவரையும் திருப்பிக் கொண்டு செல்வதனால், மரணத்தின் பிரபு என்று அழைக்ககப்படுகிறேன். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களை இந்தளவுக்கு விவேகமானவர்கள் ஆக்குகிறார்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இக்கடைசிப் பிறப்பில் விஷம் அருந்துவதைத் துறவுங்கள். அமிர்தத்தைப் பருகுவதுடன், மற்றவர்களையும் அமிர்தத்தைப் பருகச் செய்யுங்கள்! நீங்கள் தூய்மையாக வேண்டும். முட்களை மலர்களாக்கும் சேவையை செய்யுங்கள்.

2. விஷ்ணுவின் கழுத்து மாலையில் ஒரு மணியாகுவதற்குத் தந்தையின் நினைவில் இருங்கள். முழுமையாக ஒத்துழைத்து, தந்தையைப் போல் துன்பத்தை அகற்றுபவர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நாடகக் கேடயத்தை உங்கள் முன்னால் வைத்து, சந்தோஷம் என்ற போஷாக்கை உண்பதன் மூலம் சதா சக்திமிக்கவர்கள் ஆக இருப்பீர்களாக.

சந்தோஷம் என்ற உணவு ஆத்மாக்களை சக்திசாலிகள் ஆக்குகின்றது. கூறப்படுகின்றது: சந்தோஷத்தைப் போன்றதொரு போஷாக்கு எதுவும் இல்லை. இதற்கு, நாடக் கேடயத்தை மிக நன்றாக பயன்படுத்துங்கள். நீங்கள் சதா நாடகத்தின் விழிப்புணர்வில் இருந்தால், நீங்கள் ஒருபோதும் வாடவோ அல்லது உங்கள் சந்தோஷம் மறையவோ மாட்டாது, ஏனெனில் இந்த நாடகம் நன்மைக்கானது. ஆகையால், எந்த ஒரு நன்மையற்ற காட்சியிலும், ஒரு நன்மை அமிழ்ந்துள்ளது. இதனை புரிந்து கொள்வதனால் நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.

சுலோகம்:
பிறரை பார்க்கின்ற, பிறரைப் பற்றி சிந்திக்கின்ற தூசியிலிருந்து தொலைவில் இருப்பவர்களே உண்மையான பெருமதிமிக்க வைரங்கள் ஆவார்கள்.