04.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, முழு உலகிலும் உங்களைப் போன்று பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகளான வேறு எந்த மாணவர்களும் இருக்க மாட்டார்கள். ஞானக்கடலாகிய தந்தையே உங்களுக்குக் கற்பிப்பதற்கு உங்கள் ஆசிரியராக இங்கு வருகின்றார்.

கேள்வி:
உங்கள் பற்றின் இழைகளைத் துண்டிப்பதற்கு, நீங்கள் சதா எதில் ஆர்வமாக இருக்க வேண்டும்;?

பதில்:
நீ;ங்கள் சேவை செய்வதில் ஆர்வமுள்ளவராக இருந்தால், உங்கள் பற்றின் இழைகளைத் துண்டிக்க முடியும். இந்தக் கண்களினால் நீங்கள் பார்க்கின்ற அனைத்தும் அழியக்கூடியவை என்பதை உங்கள் புத்தியில் சதா நினைவு செய்யுங்கள். அதைப் பார்த்தும் பார்க்காதீர்கள். தந்தையின் ஸ்ரீமத்: தீயதைப் பார்க்காதீர்கள்!. தீயதைக் கேட்காதீர்கள்;!

ஓம் சாந்தி.
இனிய சாலிகிராம்களாகிய உங்களுடன், அதாவது, ஆன்மீகக் குழந்தைகளாகிய

உங்களுடன் கடவுள் சிவன் பேசுகின்றார். நீங்கள் சத்தியயுகத்தின் ஆதி சனாதன தூய தேவிதேவதா தர்மத்திற்குரியவர்களாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எனவே நீங்கள் அந்தத் தர்மத்திற்குரியவராக இருந்தீர்கள் என்பதை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தில் பலர் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அதைத் தேவ தர்மம் என்று அழைப்பதற்குப் பதிலாக, அவர்கள் இந்து சமயம் என்று பெயரிட்டுள்ளார்கள். ஆதிசனாதன தர்மத்திற்குரியவர்கள் யார் என்பதையும், மறுபிறவி எடுப்பதனால் நீங்கள் இவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். கடவுள் இங்கமர்ந்திருந்து இதை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்துகின்றார். கடவுள் ஒரு சரீரதாரி அல்லர். ஏனைய அனைவரும் தங்கள் சொந்த சரீரங்களைக் கொண்டிருக்கின்றார்கள். சிவபாபா சரீரமற்ற ஒரேயொருவராகவே அறியப்படுகின்றார். அவர் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. ஏனைய அனைவரும் தங்கள் சொந்த சரீரங்களைக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, இவ்விதமாக ஒருவர் தன்னைச் சரீரமற்றவராக அனுபவம் செய்வது மிகவும் இனிமையானதாகும். நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? இப்பொழுது நீங்கள் என்னவாகிக் கொண்டிருக்கின்றீர்கள்? இந்நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இந்தத் தேவ தர்மம் தூய இல்லறப் பாதையாக இருந்தது. அது இப்பொழுது ஒரு தூய இல்லறப் பாதையாக இல்லை. நீங்கள் இப்பொழுது ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறவீர்கள். இந்து என்;ற பெயர் அண்மைக் காலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. ஆதி சனாதன இந்து தர்மம் போன்றவை எதுவும் இல்லை. ஆதிதேவிதேவதா தர்மத்திற்கு சமயத்தைச் சேர்ந்தவர்;கள் என்பதை எழுதுமாறு அவர்களுக்குக் கூறுங்கள்: தூய ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்திற்கா அல்லது இந்துசமயத்திற்கா. அவர்கள் வந்து 84 பிறவிகளைப் பற்றிப் புரிந்துகொள்வார்கள். இந்த ஞானம் மிகவும் இலகுவானதாகும். சக்கரம் நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கு நீடிக்கும் என்று கூறியதால், மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகுவதும், நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ள ஒரு பாகமாகும். தேவிதேவதா தர்மத்திற்குரியவர்களாக இருந்தவர்கள், 84 பிறவிகளை எடுக்கையில் மிகவும் அழுக்கானவர்கள் ஆகியுள்ளார்கள். முதலில், பாரதம் மிகவும் மேன்மையானதாக இருந்தது. நீங்கள் பாரதத்தின் புகழைப் பாட வேண்டும். இப்பொழுது அவர்கள் நிச்சயமாகத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதுடன் பழையதிலிருந்து புதியதாக ஆக வேண்டும். மேலும் நீங்கள் முன்னேறுகையில், நீங்கள் அவர்களுக்குக் கூறுவது என்ன என்பதை மக்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: உங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து தந்தையையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் நாள் முழுவதும் சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். பொதுவாக முழு உலகிலும் குறிப்பாகப் பாரதம் முழுவதும், உங்களைப் போன்று பல மில்லியன்மடங்கு பாக்கியசாலியானவர்கள் வேறு எவருமே இல்லை. நீங்கள் ஆதியில் இருந்தது போன்று, ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தேர்ந்தெடுக்கப்;பட்ட அதே நபர்களே, வெளித்தோன்றுகின்றார்கள். இதைப் பற்றி நீங்கள் குழப்பமடையக் கூடாது. கண்காட்சிகளில், சிறிதளவு ஞானத்தைக் கேட்பவர்களும், ஒரு பிரஜை ஆகுவார். ஏனெனில், இந்த அழியாத ஞானச்செல்வம் என்றுமே அழிக்கப்பட முடியாததாகும். நாளுக்கு நாள், இந்நிறுவனம் மேன்; மேலும் சக்திவாய்ந்ததாக ஆகும். பின்னர், எண்ணற்ற மக்கள் உங்களிடம் வருவார்கள். ஒரு தர்மம் படிப்படியாக ஸ்தாபிக்கப்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து ஒரு முக்கிய நபர் வரும்பொழுது, அவருடைய முகத்தைப் பார்ப்பதற்காக எண்ணற்ற மக்கள் செல்வார்கள். இங்கு அவ்வாறல்ல. இவ்வுலகில்; உள்ள அனைத்தும் அழியப் போகின்றன. நீங்கள் அதைப் பார்க்கக் கூடாது. தீயதைப் பார்க்காதீர்கள்அக்குப்பை அனைத்தும் எரிக்கப்பட உள்ளது. மனிதர்கள் உட்பட, நீங்கள் பார்க்கின்ற அனைத்துமே கலியுகத்துக்குரியன என்பதை நீங்கள் உணர்ந்து கொள்கின்றீர்கள். நீங்கள் சங்கமயுகத்துப் பிராமணர்கள்;. இச்சங்கமயுகத்தை வேறு எவரும் அறிய மாட்டார்கள். இது சங்கமயுகம் என்பதையும் நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதையும் நினைவு செய்யுங்கள். நீங்களும் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இந்தக் காமவிகாரம் ஆரம்பமாகிய காலத்திலிருந்து, மத்தியினூடாக, அதன் இறுதிவரை துன்பத்தையே விளைவிக்கின்றது. எனவே, அதனை வெற்றிகொள்ளுங்கள். சிலர் நஞ்சிற்காகப் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: காமமே உங்கள் மிகக் கொடிய எதிரியாகும். நீங்கள் அதை வெற்றிகொள்ள வேண்டும். இப்பொழுது உலகில் அநேக மனிதர்கள் இந்நேரத்தில் உள்ளார்கள். எவ்வளவு காலத்திற்கு, நீங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தொடர்ந்து விளங்கப்படுத்த வேண்டும்? நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்தும்பொழுது, இன்னொருவர் இது மந்திரவித்தை என்று கூறுவார். பின்பு அவர்கள் கற்பதை நிறுத்துகின்றார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்குரியவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். தேவிதேவதா தர்மமே ஆதிசனாதன தர்மம் ஆகும். எவ்வாறு இலக்ஷ்மி நாராயணன் தங்கள் அந்தஸ்தைக் கோரினார்கள் என்றும், எவ்வாறு அவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறினார்கள் என்றும் நீங்கள் விளங்கப்படுத்துங்கள். நிச்சயமாக அது அவர்களின் இறுதிப்(முன்னைய) பிறவியின் போது, அவர்கள் தங்கள் 84 பிறவிகளையும் பூர்த்திசெய்த பின்னரே அவ்வாறு ஆகினார்கள். சேவை செய்வதில் ஆர்வமாக உள்ளவர்கள் அதில் ஈடுபட்டிருப்பார்கள். உங்கள் பற்று போன்றவை அனைத்திலிருந்தும் அகற்றப்படும். இந்தக் கண்களால் பார்ப்பவையெல்லாம் மறக்கப்பட வேண்டும்; நீங்கள் அதைப் பார்க்காதது போன்று இருக்க வேண்டும். தீயதைப் பார்க்காதீர்கள்! மக்கள் இதனைக் குரங்குகளின் வடிவங்களில் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எதனையுமே புரிந்துகொள்வதில்லை. குழந்தைகள் அதிக முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்தி அவர்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கியதற்கு பாபா அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றார். அவர்கள் என்ன செய்கின்றாரகள்; என்பதற்கான பெறுபேற்றைக் காட்டக்;கூடியவர்களே, ஒரு பரிசைப் பெறுகிறார்கள். எவ்வளவு பரிசுகளை பாபா உங்களுக்குக் கொடுக்கப் போகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். முதற்பரிசு சூரியவம்ச இராச்சியமும் இரண்டாம் பரிசு சந்திரவம்ச இராச்சியமும் ஆகும். அனைத்தும் வரிசைக்கிரமமானவையே. பக்திமார்க்கத்தில் பல சமயநூல்கள் எழுதப்பட்டுள்ளன. இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அச்சமயநூல்களைக் கற்பதாலோ அல்லது யாகங்களை உருவாக்குவதாலோ அல்லது தவம் போன்றவற்றைச் செய்வதாலோ எவரும் என்னைச் சந்திக்க முடியாது. நாளுக்கு நாள், ஆத்மாக்கள் மேலும் பாவம் நிறைந்தவர்களாக ஆகுகின்றார்கள். எவராலும் ஒரு தூய, புண்ணியாத்மாவாக ஆக முடியாது. தந்தையே வந்து உங்களைப் புண்ணியாத்மாக்களாக ஆக்குகின்றார். எல்லைக்குட்பட்ட தான தர்மங்களும், பின்னர் எல்லையற்ற தான தர்மங்களும் உள்ளன. பக்திமார்க்கத்திலுள்ள மக்கள் கடவுளின் பெயரில் மறைமுகமாகத் தான தர்மங்களைச் செய்து புண்ணியங்களைச் செய்தாலும், கடவுள் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்பொழுது உங்களுக்கு அவரைத் தெரியும். நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதிலிருந்து, உங்களை சிவபாபா முற்றாக மாற்றிவிட்டார் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். கடவுள் ஒரேயொருவரே, இருந்தும் அவர்கள் அவரைச் சர்வவியாபி என்று அழைக்கின்றார்கள்! எனவே, அவர்கள் செய்தவற்றை நீங்கள் அம்மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் உங்களிடம் வந்து சிறிது நேரத்திற்குச் செவிமடுக்கின்றார்கள். பின்னர் அவர்கள் செவிமடுத்த அனைத்து விடயங்களையும் அங்கேயே விட்டு வெளியே செல்கின்றார்கள். இங்கே அவர்கள் செவிமடுத்தவையெல்லாம் இங்கேயே இருக்கின்றன் அவர்கள் அனைத்தையும் மறந்துவிடுகின்றார்கள். இந்த ஞானம் மிகவும் சிறந்தது என்றும், அவர்கள் மீண்டும் வருவார்கள் என்றும் அவர்கள் உங்களுக்குக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்களுடைய பற்றின் இழைகளை அவர்களால் துண்டிக்க இயலாதிருக்கின்றது. அரசர் மோஹ்ஜீத்தின் கதை (பற்றை வென்றவர்) மிகவும் சிறந்ததாகும். இலக்ஷ்மியும் நாராயணனுமே முதற்தர அரசர் மோஹ்ஜீத் ஆவர். அது ஓர் அற்புதமே, எவ்வாறாயினும், அந்த மக்கள் எவ்விடயத்தையும் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஏணியில் கீழிறங்கி இராவண இராச்சியத்திற்குள் வருகையில், அவர்கள் முழுமையாகக் கீழே வீழ்கின்றார்கள். மேலேயும் கீழேயும் ஏறி இறங்குகின்ற ஒரு விளையாட்டைக் குழந்தைகள் விளையாடுகின்றார்கள். உங்கள் விளையாட்டும் மிக இலகுவானதாகும். தந்தை கூறுகின்றார்: இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகியுங்கள். தீய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். தந்தை கூறுகின்றார்: நானே விதையும், சத்தியமும், உணர்வுள்ளவரும், பேரானந்த சொரூபமும், ஞானக்கடலும் ஆவேன். ஞானக்கடல் மேலே ஆசனத்தில் அமர்ந்து இருப்பாரா? அவர் நிச்சயமாக ஞானத்தைக் கொடுப்பதற்கு ஒரு குறித்த நேரத்தில் வர வேண்டும். அந்த ஞானம் என்னவென்பது எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளேன், எனவே நீங்கள் ஒழுங்காகக் கற்க வேண்டும். நீங்கள் இக்கல்வியை ஒரு நாளேனும் தவறவிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் நீங்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு சிறந்த கருத்தைக் கண்டுகொள்வீர்கள். நீங்கள் முரளியைக் கற்காதுவிடின், நிச்சயமாக நீங்கள் சில கருத்துக்களைத் தவறவிடுவீர்கள். எண்ணற்ற கருத்துக்கள் உள்ளன. அவர்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்திற்;கு உரியவர்கள் என்பதைப் பாரத மக்களுக்கும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இப்பொழுது பல சமயங்கள் உள்ளன. வரலாறு மீண்டும் இடம்பெற வேண்டும். ஜீனிக்கு ஏணியில் மேலும் கீழும் செல்வதற்கு உத்தரவிடப்பட்டதைப் போன்றே, இதுவும் மேலேறுவதற்கும் கீழிறங்குவதற்குமான உங்கள் ஏணியாகும். நீங்கள் அனைவரும் ஜீனிகள், இல்லையா? நீங்கள் ஏணியில் மேலேறிப் பின்னர் 84 பிறவிகளினூடாகக் கீழிறங்குகின்றீர்கள். பல மனிதர்கள் உள்ளனர், ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் வியப்படைய வேண்டும்! நீங்கள் இப்பொழுது இந்த எல்லையற்ற நாடகத்தின் முழு அறிமுகத்தையும் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு மாத்திரம் முழு உலக நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியும். வேறு எந்த மனிதரும் இதை அறிய மாட்டார்கள். சத்தியயுகத்தில் இருக்கின்ற எவரும் மொழியைப் பயன்படுத்துவதில்லை. இங்கு, அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் அவதூறு செய்கின்றார்கள். இது முழுமையான ஆழ்நரகமாகிய நச்சாறு ஆகும். இங்குள்ள அனைவரும் ஆழ்நரகத்தில் இருக்கின்றார்கள். அங்கு, அரசனையும் அரசியையும் போன்றே, பிரஜைகளும் இருப்பார்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை யார் உருவாக்கினார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும்பொழுதே, இறுதியிலேயே நீங்கள் வெற்றி அடைவீர்கள். இது வேறு எவரும் அறியாத பிரதான விடயமாகும். தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். அவர்கள் இதை இறுதியிலேயே புரிந்து கொள்வார்கள். எவ்வாறாயினும், அப்பொழுது அது மிகவும் தாமதமாகிவிடும். இப்பொழுது நீங்கள் மூன்றாவது கண்ணைப் பெறுகின்றீர்கள். உங்களுடைய இனிய இல்லத்தையும் உங்களுடைய இனிய இராச்சியத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் செல்ல வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நடித்த பாகம் எதுவானாலும்; உங்கள் புத்தியில் புகுகின்றது. பிராமணர்களாகிய உங்களைத் தவிர, அனைவரும் ஏறத்தாழ மரணித்துவிட்டனர். பிராமணர்களாகிய நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே தேவர்கள் ஆகுகிறீர்கள். இந்த ஒரு சமயமே இப்பொழுது உருவாக்கப்படுகின்றது. உங்கள் புத்தியும் எவ்வாறு ஏனைய சமயங்கள் உருவாக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்கின்றன. ஒரேயொரு தந்தை மாத்திரமே இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தந்தையை மீண்டும் மீண்டும் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச்; செய்யலாம், ஆனால் தூய்மையாக இருங்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஒரு தூய்மையான தர்மமாக இருந்தது. இப்பொழுது மீண்டும் தூய்மை ஆகுங்கள். நடக்கும்பொழுதும் உலாவித்திரியும் பொழுதும் உங்களுடைய தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகும்பொழுது, நீங்கள் பலத்தைப் பெறுவீர்கள். நீங்கள் இந்நினைவு யாத்திரையில் செல்லும்வரை, உங்களால் அதிமேலான அந்தஸ்தைக் கோர முடியாது. உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்பொழுதே உங்கள் சதோபிரதான் ஸ்திதியை உங்களால் அடைய முடியும். இது யோகத்தீ ஆகும். இவ்வார்த்தைகள் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. சந்நியாசிகள் யோகத்திற்காகப் பெரும் பிரயத்தனம் செய்;கின்றார்கள். அவர்கள் வெளிநாட்டிலிருந்து மக்கள் வருவதற்கான தூண்டுதலைக் கொடுத்து, அவர்களுக்கு யோகம் கற்பிக்க முயற்சி செய்கின்றார்கள்;. நீங்கள் எதைக் கூறுகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்குக் குறைந்தபட்சம் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். பரமாத்மாவாகிய கடவுள் ஒரேயொருவரே ஆவார். அவர் வந்து அனைவரையும் பரம் ஆக்குகின்றார். இவ்விடயங்களை செய்தித்தாளில் அச்சிடும் அந்த நாளும் வரும். அவர்கள் கூறுவார்கள்: அது உண்மை; வேறு எவராலும் அன்றி, பரமாத்மாவாகிய பரமதந்தையாலேயே இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும். நீங்கள் அத்தகைய விடயங்களைப் பெரிய எழுத்துக்களில் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சூரியவம்ச இராச்சியத்தின் பரிசைக் கோருவதற்கு, முதலில் பாப்தாதாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்த சேவையின் பெறுபேறுகளை நிச்சயமாக நீங்கள்; காட்ட வேண்டும். உங்களுடைய பற்றின் இழைகள் அனைத்தையும் துண்டியங்கள்.

2. சரீரமற்ற ஒரேயொரு ஞானக்கடலான தந்தையே உங்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பதற்கு வந்துள்ளாhர். ஆகவே, நீங்கள் தினமும் கற்க வேண்டும். நீங்கள் இக்கல்வியை ஒருநாளேனும் தவறவிடக்கூடாது. தந்தையைப் போன்று சரீரமற்றவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
பக்தர்கள் பௌதீக விடயங்களுக்கான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் நீங்களோ உங்கள் பலவீனமான மனோபாவத்தை எல்லாவேளைக்கும் முடித்து விடுவதற்கான விரதத்தை மேற்கொள்கிறீர்கள். ஏனெனில் நல்லதோ கெட்டதோ உங்கள் மனோ பாவத்திலேயே முதலில் கிரகிக்கப்படுகிறது. பின்னர் அது உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் வெளிப்படும். உங்கள் தூய மனோபாவத்தினூடாக வரும் மேன்மையான வார்த்தைகளினாலும் மேன்மையான செயல்களினாலும் உலக மாற்றம் எனும் பெரிய பணி நிறைவேற்றப்பட முடியும். மேன்மையான மனோபாவத்திற்கான விரதத்தைக் கொண்டிருப்பதே உண்மையான சிவராத்திரியைக் கொண்டாடுவதாகும்.

சுலோகம்:
தங்கள் இதயத்தில் சந்தோஷ சூரியோதத்தை எப்பொழுதும் கொண்டிருப்பவர்களால் சந்தோஷ இதயத்துடன் எப்பொழுதும் இருக்க முடியும்.


மாதேஸ்வரியின் பெறுமதிமிக்க வாசகங்கள்:

கண்கள் இல்லாதவர்களுக்கும் ஞானக்கண்கள் இல்லாதவர்களுக்கும் கடவுள் பாதையைக் காட்டுகின்றார்.

அன்பான கடவுளே குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். மக்கள் குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். என்ற பாடலைப் பாடும் போது அதன் அர்த்தமானது ஒரேயொரு கடவுளே இருக்கிறார். அவரால் மாத்திரமே பாதையைக் காட்டமுடியும். இதனாலேயே மக்கள் கடவுளை அழைக்கிறார்கள். பாதையைக் காட்டுமாறு அவர்கள் கடவுளைக் கேட்கும்போது அவர்கள் நிச்சயமாக மனிதர்களுக்கு மாத்திரமே பாதையைக் காட்டுமாறு கேட்கிறார்கள், எனவே அசரீரியான கடவுள் பௌதீக வடிவில் வந்தாலே, அவரால் நடைமுறை ரீதியில் பாதையைக் காட்ட முடியும். இங்கு வராமல் அவரால் பாதையைக் காட்ட முடியாது. கூறுகிறார்கள்: குழப்பமடைந்துள்ள மக்களுக்குப் பாதை காண்பிக்கப்பவேண்டும்.இதனாலேயே அவர்கள் கூறுகிறார்கள்;: குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். அக்கரைக்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். அதாவது அவர் ஜந்து தத்துவங்களுக்கு அப்பால் எங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்கிறார். அதாவது அவர் எங்களை ஜந்து தத்துவங்களுக்கு அப்பால் ஆறாவது தத்துவத்திற்கு அழைத்துச் செல்கிறார். அதாவது மகா தத்துவமாகிய நிலையான ஒளிக்கு அழைத்துச் செல்கிறார். எனவே கடவுள் அக்கரையில் இருந்து இக்கரைக்கு வரும்போதே அவரால் எங்களை அக்கரைககு எடுத்துச் செல்ல முடியும். எனவே கடவுள் தனது உலகில் இருந்து வரவேண்டும். இதனாலேயே கடவுள் படகோட்டி என அழைக்கப்படுகிறார். அவர் ஒருவரே படகுகளாகிய எங்களை அக்கரைக்கு எடுத்துச்செல்கிறார். தன்னுடன் யோகம் செய்பவர்களையே தன்னுடன் எடுத்துச் செல்வார். எஞ்சி இருப்பவர்கள் தர்மராஜிடம் இருந்து தண்டனையை அனுபவம் செய்து பின்னர் விடுவிக்கப்படுவார்கள். கடவுளே எங்களை முட்களிலிருந்து அதாவது துன்ப உலகிலிருந்து மலர்கள் நிறைந்த உலகின் நிழலுக்கு அதாவது சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்கிறார். முட்கள் நிறைந்த உலகிலிருந்து மலர்களின் நிழலுக்கு அழைத்துச் செல்லுங்கள். இது கடவுளுக்கே பாடப்படுகிறது. மக்கள் சந்தோஷமற்றிருக்கும் போது கடவுளை நினைவு செய்கிறார்கள். கடவுளே முட்கள் நிறைந்த இந்த உலகிலிருந்து நிழலுக்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக இன்னொரு உலகம் இருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும். இது முட்கள் நிறைந்த உலகம். இதனாலேயே அவர்கள் துன்பத்தையும் அமைதியின்மையையும் அனுபவம் செய்கிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். பின்னர் அவர்கள் மலர்கள் நிறைந்த உலகை நினைவு செய்கிறார்கள். நிச்சயமாக அத்தகைய உலகம் இருந்திருக்க வேண்டும். ஆத்மா இந்த சம்ஸ்காரங்களால் நிறைந்துள்ளது. துன்பமும் அமைதியின்மையும் எங்கள் கர்மபந்தனங்களின் கர்மக்கணக்குகள் என்பதை நாம் அறி;வோம். அரசன் முதல் ஆண்டிவரை ஒவ்வொரு மனிதனும் இந்தக் கணக்குகளினால் முற்றிலும் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதனாலேயே கடவுள் கூறுகின்றார். இவ்வுலகம் கலியுகம், இவ்வுலகம் கர்மபந்தனங்களால் நிறைந்துள்ளது. ஆனால் இதற்கு முன்னர் சத்திய யுகம் இருந்தது. அது மலர்கள் நிறைந்த உலகம் எனவும் அழைக்கப்பட்டது. அது தேவர்களின் இராச்சியம்;. அது கர்மபந்தனங்களிலிருந்து விடுபட்டது. அத்துடன ஜீவன் முக்தியும் அடைந்திருந்தது. இப்பொழுது அவ்வாறல்ல. நாங்கள் ஜீவன் முக்தி என்று கூறும்போது எங்கள் சரீரத்திலிருந்து நாங்கள் விடுபட்டிருந்தோம் என்பதல்ல. சரீரத்தில் இருக்கும்போதும் அவர்களிடம் துன்பம் இருக்கவில்லை. அதாவது அங்கே கர்ம பந்தனத்தின் குழப்பம் இருக்கவில்லை. பிறப்பெடுத்ததிலிருந்து மரணிக்கும்வரை அவர்களிடம் சந்தோஷமே இருந்தது. ஆரம்ப முதல் மத்தியுpனூடாக இறுதிவரை அவர்களிடம் சந்தோஷமே இருந்தது. எனவே ஜீவன் முக்தி என்பது அவர்கள் வாழும்போதே கர்மாதீத நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். இப்பொழுது இந்த முழு உலகமும் ஜந்து விகாரங்களில் முற்றிலும் சிக்கி உள்ளது. அதாவது ஜந்து விகாரங்களும் எங்கும் நிறைந்திருக்கிறது. என்பதாகும். எவ்வாறாயினும் இந்த ஜந்து தீய ஆவிகளையும் வெற்றி கொள்வதற்கான சக்தி மனிதர்களிடம் இல்லை. இதனாலேயே கடவுளே வந்து இந்த ஜந்து ஆவிகளிலிருந்தும் விடுவித்து, எங்கள் எதிர்கால வெகுமதியான தேவ அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுகின்றார்.