04.03.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த நேரத்தில் உங்களுடைய இந்த வாழ்க்கையானது அதிகளவு பெறுமதி வாய்ந்தது. ஏனெனில் நீங்கள் எல்லைக்குட்பட்டவற்றிலிருந்து வெளியேறி எல்லையற்றதற்குள் சென்றுள்ளீர்கள். நீங்களே இந்த உலகிற்கு நன்மை பயப்பவர்கள் என உங்களுக்குத் தெரியும்.

கேள்வி:
எம் முயற்சியைச் செய்வதனால், நீங்கள் தந்தையின் ஆஸ்திக்கான உரிமையைக் கோருகின்றீர்கள்?

பதில்:
சதா சகோதரத்துவப் பார்வையைப் பேணி, ஆண், பெண் என்ற உணர்வுகள் அனைத்தையும் அகற்றும்பொழுது மாத்திரமே உங்களால் தந்தையின் ஆஸ்திக்கான முழு உரிமையையும் கோர முடியும். எவ்வாறாயினும், ஆண், பெண் என்ற பார்வையையும், உணர்வையும் அகற்றுவது மிகவும் சிரமமானதாகும். இதற்கு நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்வது அவசியம். நீங்கள் தந்தையின் குழந்தையாகும்பொழுது, ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஒரு தந்தையின் நினைவைக் கொண்டிருந்து சதோபிரதான் ஆகுபவர்களால்; மாத்திரமே முக்தியும், ஜீவன்முக்தியும் என்ற ஆஸ்தியைக் கோரமுடியும்.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது.

ஓம் சாந்தி.
ஓம் என்றால் நான் ஓர் ஆத்மா, இது என்னுடைய சரீரம் என்று அர்த்தம் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு இப்பொழுது இந்த நாடகத்தையும், உலகச் சக்கரத்தையும், இந்த உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொண்டிருக்கின்ற தந்தையையும் தெரியும். உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொண்டிருப்பவரைப் படைப்பவர் என நீங்கள் அழைக்கின்றீர்கள். படைப்பவரையோ அல்லது அவரது படைப்பையோ வேறு எவருக்குமே தெரியாது. தங்களுடைய ஞானம் பற்றிய பெருமையைக் கொண்ட மிகப்பெரிய கல்விமான்களும், பண்டிதர்களும் இருந்தபொழுதிலும், அவர்களுக்கு இதில் எதுவுமே தெரியாது. அவர்கள் ஞானம், பக்தி, விருப்பமின்மை பற்றிப் பேசுகின்றார்கள். இப்பொழுது இந்த மூன்று விடயங்களும் இருக்கின்றன, ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. சந்நியாசிகள் தங்;கள் குடும்பத்தில் விருப்பமின்மையைக் கொண்டுள்ளார்கள். உயர்ந்த அல்லது தாழ்ந்த அந்தஸ்தைக் கொண்டிருப்பது பற்றி அவர்களும் பொறாமைப்படுகின்றார்கள். அவர்கள் உயர் குலத்துக்குச் சொந்தமான ஒருவர் பற்றியும், நடுத்தர குலத்திற்குச் சொந்தமான வேறொருவர் பற்றியும் அனாவசியமாக மிகைப்படுத்துகின்றார்கள். கும்ப மேலாக்களில் கூட யாருடைய இரதம் முதலில் செல்ல வேண்டும் என்பது பற்றிப் பெருமளவு வாக்குவாதம் செய்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். பின்னர் பொலிசார் வந்து அவர்களைப் பிரிக்க வேண்டும். இதுவும் சரீர உணர்வு, இல்லையா? உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வுடையவர்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வைத்; துறந்து உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்களே தூய்மையற்றவர்களாகி, அவர்களில் கலப்படம் கலக்கப்படுகின்றது. ஆத்மாக்களே சதோபிரதானாகவும், தமோபிரதானாகவும் ஆகுகின்றார்கள். ஆத்மா எவ்வாறோ, அவ்வாறே அவர் பெறுகின்ற சரீரமுமாகும். கிருஷ்ணரின் ஆத்மா அழகானவர், எனவே அவரது சரீரமும், மிகவும் அழகானது. அவரது சரீரம் பெருமளவு கவர்ச்சியானது. ஒரு தூய ஆத்மா அந்தக் கவர்ச்சியைக் கொண்டுள்ளார். கிருஷ்ணரின் புகழ்ச்சி போன்று இலக்ஷ்மி, நாராயணனுக்குப் பெருமளவு புகழ்ச்சி இருப்பதில்லை. ஏனெனில் கிருஷ்ணர் சிறிய தூய்மையான குழந்தை. இங்கும்கூட ஒரு குழந்தையும் மகாத்மாவும் சமமானவர்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். இருந்தபொழுதிலும் மகாத்மாக்கள் வாழ்க்கையை அனுபவம் செய்த பின்னரே விகாரத்தைத் துறக்கின்றனர். அவர்கள் அதற்கு விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் குழந்தைகள் எவ்வாறாயினும், தூய்மையானவர்கள். அவர்கள் மேன்மையான, மகத்துவமான ஆத்மாக்களாகக் கருதப்படுகின்றார்கள். ஆகையினால், துறவறப் பாதைக்குரிய சந்நியாசிகளும், சிலவகையான ஆதாரத்தைக் கொடுக்கின்றார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஒரு கட்டடம் அரைவாசி பழையதாகும்பொழுது அது எப்படி புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றதோ, அதேபோன்று, சந்நியாசிகளும் தங்களுடைய தூய்மையினால் பாரதத்தைப் புனர்நிர்மாணம் செய்து, பாரதத்தை நிலைக்கச் செய்கின்றார்கள். பாரதத்தைப் போன்று எந்த ஒரு நாடும் தூய்மையாகவும், செல்வம் மிக்கதாகவும் இருந்ததில்லை. தந்தை இப்பொழுது படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் உங்களுக்கு நினைவூட்டுகிறார், ஏனெனில் அவரே தந்தையும், ஆசிரியரும், குருவுமாவார். கீதையிலே கடவுள் கிருஷ்ணர் பேசியதாக எழுதப்பட்டுள்ளது. நீங்கள் அவரை பாபா என்றோ, அல்லது தூய்மையாக்குபவர் என்றோ அழைக்க முடியுமா? மக்கள் தூய்மையாக்குபவரை அழைக்கின்றபொழுது, கிருஷ்ணரை நினைவுசெய்வதில்லை; அவர்கள் கடவுளையே நினைவு செய்கின்றார்கள். பின்னர் அவர்கள் தூய்மையாக்குபவர் சீதையின் இராமரென்றும், இராகவ குலத்தைச் சேர்ந்த இராமர் என்றும், கூறுகின்றார்கள். எனவே அதிகளவு குழப்பம் இருக்கின்றது! தந்தை கூறுகின்றார்: நான் வந்து வேதங்களினதும், சமயநூல்;களினதும் சாராம்சத்தை மிகச்சரியாகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றேன். அவர் விளங்கப்படுத்திய முதலாவதும் பிரதானமானதுமான விடயம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் அனைவரும் சகோதரர்கள். பின்னர் பிரம்மாவின் குழந்தைகளாகும்பொழுது, நீங்கள் புத்திரர்களும் புத்திரிகளுமாவீர்கள். ஆகையால் நீங்கள் சகோதர, சகோதரிகள். இதை உங்களின் புத்தியில் வைத்திருங்கள். ஆதியில் ஆத்மாக்கள் சகோதரர்கள். பின்னர் நீங்கள் சரீரங்களில் பிரவேசிக்கும்பொழுது நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். இதைப் புரிந்துகொள்ளும் புத்திகூட மக்களுக்கு இல்லை. அவர் ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை, எனவே நாங்கள் சகோதரர்கள். அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? குழந்தைகளே ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். தந்தை ஆஸ்தியைப் பெற முடியாது. குழந்தைகள் தங்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்றார்கள். பிரம்மாவும் சிவபாபாவின் குழந்தையாவார். அவரும் அந்த ஒருவரிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றார். நீங்கள் அவருடைய பேரக்குழந்தைகள் ஆகுகின்றீர்கள். உங்களுக்கும் அந்த உரிமை இருக்கின்றது. ஆத்மாக்கள் என்ற ரீதியில் நீங்கள் அனைவரும் புத்திரர்கள். பின்னர் நீங்கள் சரீரங்களில் பிரவேசிக்கும்பொழுது, சகோதர, சகோதரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள், வேறு எந்த உறவுமுறையுமில்லை. சதா சகோதரத்துவப் பார்வை இருக்க வேண்டும். ஆண், பெண் என்ற அனைத்து உணர்வுகளையும் அகற்றி விடுங்கள். ஆண், பெண் இருவரும் ஓ தந்தையாகிய கடவுளே! என்று கூறுகின்றபொழுது அவர்கள் சகோதர, சகோதரிகள் என்றே அர்த்தமாகும். சங்கமயுகத்தில் தந்தை வந்து படைப்பை உருவாக்குகின்றபொழுது, நீங்கள் சகோதர, சகோதரிகளாவீர்கள். எவ்வாறாயினும் ஆண், பெண் என்ற பார்வையை அகற்றுவது மிகவும் கடினமானது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகவேண்டும். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகுகின்றபொழுதே, இந்த ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகும்வரை, முக்திக்கோ அல்லது ஜீவன்முக்திக்கோ செல்ல முடியாது. சந்நியாசிகள் போன்றவர்கள் உங்களுக்கு இந்த வழிமுறையைக் காட்டுவதில்லை. உங்களை ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள் என அவர்கள் ஒருபொழுதும் கூறுவதில்லை. தந்தையே, பரமாத்மாவான பரமதந்தையான பரம்பொருள் என அழைக்கப்படுகின்றார். அனைவரும் ஆத்மாக்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் அவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, நான் குழந்தைகளாகிய உங்களிடம் வந்துள்ளேன். எவ்வாறாயினும், உங்களுடன் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய் தேவை. இந்நாட்களில் கௌமுக் (பசுவின்வாய்) எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கௌமுக்கிலிருந்து அமிர்தம் வெளியாகுவதாகக் கூறுகின்றார்கள். உண்மையில் ஞானமே அமிர்தம் என அழைக்கப்படுகின்றது. ஞானாமிர்தம் வாயிலிருந்தே வெளியாகுகின்றது; இதில் தண்ணீர் பற்றிய கேள்வியில்லை. இவர் (பிரம்மா) தாய்ப்பசு ஆவார். பாபா இவரினுள் பிரவேசித்துள்ளார். தந்தை இவர் மூலம் உங்களைத் தனக்குச் சொந்தமாக்கியுள்ளார். ஞானம் அவரின் மூலமே வெளியாகுகின்றது. அவர்கள் கல்லிலே ஒரு பசுவின் சிலையைச் செதுக்கி, தண்ணீர் பாயக்கூடிய ஒரு வாயை உருவாக்குகின்றார்கள். அது பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயமாகும். உங்களுக்கு விடயங்கள் சரியாகத் தெரியும். குமாரிகளாகிய நீங்களே பீஷ்மபிதா மீது அம்பை எய்தவர்கள். நீங்கள் பிரம்ம குமாரர்கள், குமாரிகள் ஆவீர்கள், குமாரிகள் நிச்சயமாக எவருக்காவது சொந்தமாக வேண்டும். எனவே அதர் குமாரர்கள், குமாரிகள் இருவருக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் எல்லாமே உங்கள் நடைமுறை ஞாபகார்த்தமே, இல்லையா? தந்தை இப்பொழுது இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பிரம்மகுமாரர்கள், பிரம்மகுமாரிகள் ஆகியபின்னர் எந்தவிதமான குற்றமான தாக்குதல்கள் எதுவும் இருக்கக்கூடாது. இருந்தால்; தீவிரமான தண்டனை இருக்கும். நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது, நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதை மறக்கின்றீர்கள். அவர் ஒரு பிரம்மகுமார் அல்லது பிரம்மகுமாரி, நீங்களும் ஒரு பிரம்மகுமார் அல்லது குமாரி, எனவே விகாரமான பார்வை இருக்கக்கூடாது. எவ்வாறாயினும், அசுர சமூகத்திற்குரிய மனிதர்களால் விகாரமில்லாது இருக்க முடியாது. எனவே அவர்கள் தடைகளை உருவாக்குகின்றார்கள். பிரம்மகுமாரர்கள், குமாரிகள் ஆகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும்: நீங்கள் தூய்மையாக வேண்டும். இந்த விகாரமான, மரணபூமியில் இது உங்களது கடைசிப் பிறவியாகும். எவருக்குமே இது தெரியாது. அமரத்துவமான பூமியில் விகாரங்கள் எதுவுமில்லை. அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள், சதோபிரதானானவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இங்குள்ள மக்களோ தமோபிரதானான முற்றிலும் விகாரமுள்ளவர்கள். தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் எனவும், தாங்கள் விகாரமான பாவிகள் எனவும் அவர்கள் பாடுகின்றார்கள். அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களைப் பூஜிக்கின்றார்கள். பாரத மக்களாகிய நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தற்பொழுது பக்தி பெருமளவு தாக்கத்தைக் கொண்டுள்ளது; அது பெரும் ஆதிக்கத்தையும் கொண்டுள்ளது. பக்தர்கள் கடவுளை நினைவுசெய்து வந்து, எங்களுடைய பக்தியின் பலனைத் தாருங்கள் என்று கூறுகின்றார்கள். பக்தி செய்ததனால், அவர்களின் நிலைமை என்னவாகியுள்ளது? நான்கு பிரதானமான சமயநூல்கள் இருக்கின்றன எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஒன்று தேவதர்மம், அதில் பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள், மூன்று சாராரும் அடங்குகின்றனர், தந்தை பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். பிராமணர்களாகிய நீங்கள் சங்கமயுகத்து உச்சிக்குடுமிகள். இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகுகின்றீர்;கள். பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். அந்தப் பிராமணர்கள் விகாரத்தில் ஈடுபடுபவர்கள். அவர்கள் வந்து பிராமணர்களாகிய உங்களுக்குத் தலை வணங்கி நமஸ்தே கூறுகின்றார்கள். அவர்கள் பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும் வந்தனங்கள் என்று கூறுகின்றார்கள். ஏனெனில் நீங்களே பிரம்மாவின் குழந்தைகள் என்றும், தாங்கள் பிரம்மாவின் குழந்தைகள் அல்ல என்றும் அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். அனைவரும் உங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுது நீங்கள் பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். பின்னர் நீங்கள் தேவகுமாரர்களும், குமாரிகளும் ஆகுவீர்கள். தற்பொழுது உங்கள் இந்த வாழ்க்கை மிகவும் பெறுமதி வாய்ந்தது. ஏனெனில் நீங்கள் உலகத் தாயாக நினைவுகூரப்படுகின்றீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்டவற்றிலிருந்து வெளியே வந்து எல்லையற்றதற்குள் சென்றுள்ளீர்கள். நீங்களே இந்த உலகிற்கு நன்மைபயப்பவர்கள் என உங்களுக்குத் தெரியும். ஆகையினால், நீங்கள் ஒவ்வொருவரும் உலகத்தாய் அல்லது உலகத்தந்தை ஆவீர்கள். மக்கள் இந்த நரகத்தில் மிகவும் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆன்மீகமாகச் சேவை செய்ய வந்துள்ளோம். நாங்கள் நிச்சயமாக அவர்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவோம். நீங்கள் ஒரு சேனை. இதுவும் போர்க்களம் என அழைக்கப்படுகின்றது. யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர்; அவர்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் போராட்டம் உங்களுடைய சகோதர, சகோதரிகளுடனல்ல, அது இராவணனுடனேயாகும். நீங்கள் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு அவர்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்காக விளங்கப்படுத்துகிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களுடைய சொந்தச் சரீரம் உட்பட, சரீர உறவினர்கள் அனைவரையும் நீங்கள் துறக்கவேண்டும். இது பழைய உலகம். அவர்கள் தண்ணீர் இல்லாததனால் அத்தகைய, பெரிய அணைக்கட்டுகளையும், கால்வாய்;களையும் கட்டுகின்றார்கள். சனத்தொகை பெருமளவு அதிகரித்துள்ளது. சத்தியயுகத்தில் உங்களில் வெகுசிலரே இருக்கிறீர்கள். ஆறுகளில் பெருமளவு தண்ணீர் இருக்கிறது. அங்கே பெருமளவு உணவும் இருக்கின்றது. இப்பொழுது கோடிக்கணக்கான மக்கள் இங்கே பூமியில் இருக்கின்றார்கள். ஆரம்பத்தில், முழுப்பூமியிலுமே 900,000 இல் இருந்து ஒரு மில்லியன் மக்கள் இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் வேறு எந்த நிலங்களும் இருக்க மாட்டாது. உங்களில் வெகுசிலரே அங்கு வசிக்கின்றீர்கள். நீங்கள் வேறு எங்குமே செல்ல வேண்டிய தேவை இருக்காது. அங்கே சதா வசந்த காலமே உள்ளது. தத்துவங்களும் உங்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க மாட்டாது; அவையும் ஒழுங்காகவே இருக்கின்றன. அங்கே துன்பம் என்ற குறிப்பே கிடையாது. அதுவே சுவர்க்கமாகும். இப்பொழுது இது ஆழ்நரகமாகும். அது கல்பத்தின் நடுப்பகுதியிலேயே ஆரம்பமாகுகின்றது. தேவர்கள் பாவப்பாதையில் வீழ்கின்றபொழுது, இராவண இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. நாங்கள் இரட்டைக்கிரீடங்களுடன் பூஜிக்கத்தக்கவராக ஆகுகின்றோம் எனவும், பின்னர் ஒற்றைக் கிரீடங்கள் உடையவராக ஆகுகின்N;றாம் எனவும் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். அந்த ஒளிக்கிரீடம் சத்திய யுகத்தின் தூய்மையின் அடையாளமாகும். தேவர்கள் அனைவரும் தூய்மையானவர்கள். இங்கு எவருமே தூய்மையானவர்களல்ல. அனைவருமே தொடர்ந்து பாவத்தின் மூலம் பிறப்பெடுக்கின்றார்கள். அதனாலேயே இது சீரழிந்த உலகம் என அழைக்கப்படுகின்றது. சத்தியயுகமே மேன்மையான உலகமாகும். விகாரமே சீரழிவு என அழைக்கப்படுகின்றது. சத்தியயுகத்தில் தூய இல்லறப்பாதை இருந்தது என்றும், அது இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது எனவும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது உலகம் தூய்மையாகவும், மேன்மையாகவும் ஆகுகின்றது. உலகச்சக்கரம் தொடர்ந்து சுழலும், இல்லையா? பரமாத்மா பரமதந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார் கடவுள் தூண்டுதலைக் கொடுக்கின்றார் என மக்கள் கூறுகின்றார்கள். தூண்டுதல் என்றால் எண்ணங்கள் ஆகும். இங்கே எந்தத் தூண்டுதல் என்ற கேள்வியுமில்லை. அவரே கூறுகின்றார். நான் ஒரு சரீரத்தின் ஆதாரத்தை எடுக்க வேண்டியுள்ளது. ஒரு வாயில்லாது எவ்வாறு நான் உங்களுக்கு கற்பித்தல்களைக் கொடுக்க முடியும்? தூண்டுதல் மூலம் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்க முடியுமா? கடவுள் தூண்டுதல் மூலம் எதையும் செய்வதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். கல்வி தூண்டுதல் மூலம் இடம்பெற முடியாது. உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியத்தைத் தந்தையைத் தவிர வேறெவராலும் கூறமுடியாது. அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. சிலர் அவர் இலிங்க வடிவமானவர் என்றும், மற்றவர்கள் அவர் அநாதியான ஒளியானவர் என்றும் கூறுகின்றார்கள். சிலர் பிரம்ம தத்துவமே கடவுள் எனக் கூறுகின்றார்கள் பிரம்மஞானிகளும், தத்துவஞானிகளும் (பிரம்ம தத்துவத்தின் ஞானத்தைக் கொண்டவர்கள்) இருக்கின்றார்கள். அவர்கள் சமயநூல்களில் 8;.4 மில்லியன் ஜீவராசிகள் பற்றிக் காட்டியுள்ளார்கள். 8.4 மில்லியன் பிறவிகளாக இருந்திருந்தால் சக்கரத்தின் கால எல்லை மிக நீண்டதாக இருந்திருக்கும். மிகச்சரியான கணக்கு இருக்கமுடியாது. சத்தியயுகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: முழு உலகச் சக்கரமும் 5000 வருடங்களாகும். 8.4 மில்லியன் பிறவிகள் எடுப்பதற்கு உங்களுக்கு நீண்டகாலம் தேவைப்படும்! அந்த அனைத்துச் சமயநூல்களும் பக்தி மார்க்கத்திற்குரியவை. தந்தை கூறுகின்றார்: நான் வந்து அனைத்துச் சமயநூல்களினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றேன். அவை அனைத்தும் பக்திமார்க்கத்திற்கு உரியவை. அதன்மூலம் எவருமே என்னை அடைய முடியாது. நான் வரும்பொழுது மாத்திரமே அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எங்களைத் தூய்மையாக்கி, தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என நீங்கள் என்னைக் கூவி அழைத்தீர்கள். எனவே பின்னர் ஏன் அவர்கள் என்னைத் தேடித் தடுமாறித் திரிகின்றார்கள்? அவர்கள் மலைகளின் மேலே, தூர இடங்களுக்கெல்லாம் செல்கின்றார்கள். இந்நாட்களில் பல கோயில்கள் வெறுமையாக உள்ளன. ஏனெனில் அங்கே எவருமே வருவதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது அதிமேலான தந்தையின் வாழ்க்கை வரலாறு தெரியும். ஒரு தந்தை 60 வயதையடையும் பொழுது, அனைத்தையும் அவரது குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு, ஓய்வுக்கு சென்றுவிடுவார். அந்த வழக்கமும் இந்த நேரத்திலிருந்தே வந்தது. அனைத்து விழாக்களும் இந்த நேரத்தையே குறிக்கின்றன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என உங்களுக்குத் தெரியும். இரவுக்குப் பின்னர் பகல் இருக்கின்றது. இப்பொழுது காரிருள் இருக்கின்றது. ஞான சூரியன் உதிக்கும்பொழுது அறியாமை இருள் அகற்றப்படும் என பாடப்பட்டுள்ளது. இப்பொழுது உங்களுக்கு தந்தையைப் பற்றியும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியும். தந்தை எவ்வாறு ஞானம் நிறைந்தவராக இருக்கின்றாரோ, அவ்வாறே நீங்களும் மாஸ்டர் ஞானம் நிறைந்தவராக ஆகியுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற சந்தோஷம் எனும் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் உங்களுடைய லௌகீகத் தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தியையே பெறுகின்றீர்கள். அதன்மூலம் தற்காலிகச் சந்தோஷம் கிடைக்கின்றது. சந்தோஷம் காக்கையின் எச்சம் போன்றது எனச் சந்நியாசிகள் கூறுகின்றார்கள். அவர்களால் சந்தோஷத்துக்கான முயற்சியைச் செய்வதற்கு இங்கே வரமுடியாது. அவர்கள் ஹத்தயோகிகள், நீங்கள் இராஐயோகிகள். உங்களுடைய யோகம் தந்தையுடனாகும். ஆனால் அவர்களுடைய யோகம் தத்துவங்களுடன் ஆகும். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மையாகுவதற்கு, ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உங்கள் பார்வையை உறுதியாக்குங்கள். பின்னர் தந்தை பிரம்மாவின் குழந்தைகளாக ஆகும்பொழுது நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். ஆத்மாக்கள், சரீரங்கள்; இரண்டுமே தூய்மையாக்கப்பட்டு, சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும். சரீர உணர்வைத் துறவுங்கள்.

2. மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகி, அனைவருக்கும் படைப்பவரையும் படைப்பையும் பற்றிய ஞானத்தைக் கொடுப்பதால், அவர்களைக் காரிருளிலிருந்து அகற்றுங்கள். நரகவாசிகளாக இருக்கும் மக்களுக்கு ஆன்மீகச் சேவை செய்து, அவர்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்கு உரியவராகும் ஒரு திடசங்கற்ப எண்ணத்தின் மூலம் அமரத்துவமானவராகவும், அழிவற்றவராகவும் ஆகுவீர்களாக.

வேறெவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவராகுகின்ற திடசங்கற்ப எண்ணத்தைப் கொண்டுள்ள குழந்தைகளின் ஸ்திதியானது இயல்பாகவும் இலகுவாகவும் நிலையானதாகவும் ஸ்திரமானதாகவும் ஆகுகின்றது. அவர்களுக்கு இந்த திடசங்கற்பம் இருக்கும்பொழுது, சகல உறவுமுறைகள் எனும் அழிவற்ற இழையானது உருவாக்கப்பட்டு, சதா அமரத்துவமானவராகவும், அழிவற்றவராகவும் ஆகுகின்ற ஆசீர்வாதத்தைப் பெறுகின்றார்கள். இந்தத் திடசங்கற்ப எண்ணத்தைக் கொண்டிருப்பதால், தங்கள் முயற்சிகளுக்காக அவர்கள் ஒரு விசேட உயர்த்தியையும் பெறுகின்றார்கள். ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருப்பவர்கள் இயல்பாகவே பேறுகள் அனைத்தையும் பெறுகின்றார்கள்.

சுலோகம்:
நீங்கள் சிந்திப்பது, பேசுவது, செய்வது அனைத்தும் சமமாகட்டும், அப்பொழுது நீங்கள் ஒரு அதிமேன்மையான முயற்சியாளர் என அழைக்கப்படுவீர்கள்.