04.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், தூய்மையாகுங்கள், அப்பொழுது நீங்கள் தர்மராஐpன் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். வைரத்தைப் போலாகுவதற்கு, ஞானம் என்னும் அமிர்தத்தைப் பருகி, நஞ்சைத் துறவுங்கள்.

கேள்வி:
எதன் அடிப்படையில் சத்தியயுக அந்தஸ்து அமைந்துள்ளது?

பதில்:
அது தூய்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. நினைவில் நிலைத்திருங்கள், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகுவீர்கள். தூய்மையாகுவதன் மூலமே நீங்கள் சற்கதியடைவீர்கள். தூய்மையாகாதவர்கள் தண்டனையை அனுபவம் செய்து, தங்கள் சொந்தச் சமயத்துக்குத் திரும்புவார்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழலாம், ஆனால் சரீரதாரிகள் எவரையும் நினைவுசெய்யாதீர்கள். தூய்மையாக இருங்கள், அப்பொழுது நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

பாடல்:
உங்களைக் கண்டு கொண்டதால், நாங்கள் அனைத்தையும் கண்டுகொண்டோம். பூமி, ஆகாயம் அனைத்தும் எங்களுக்குரியதே.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். வேறு எவருமே கடவுள் என அழைக்கப்பட முடியாது. ஒரேயொரு அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையே சிவபாபா என அழைக்கப்படுகின்றார். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாவார். முதலில், நாங்கள் நிச்சயமாகச் சிவபாபாவின் குழந்தைகள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். துன்ப நேரத்தில், மக்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ பரமாத்மாவே, எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களில் கருணை கொள்ளுங்கள்! தங்;களுடைய ஆத்மாக்களே பரமாத்மாவை நினைவு செய்கின்றார்கள் என்பதையேனும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர் ஆத்மாக்களாகிய எங்களுடைய தந்தையாவார். இந்நேரத்தில், உலகம் தூய்மையற்ற ஆத்மாக்களினால் நிறைந்துள்ளது. அவர்கள் பாடுகின்றார்கள்: நாங்கள் சீரழிந்த பாவிகள், ஆனால் நீங்களோ முற்றிலும் விகாரமற்றவர்கள். இருப்பினும் அவர்கள்; தங்களை அவ்வாறு கருதுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: கடவுளே ஒரேயொரு தந்தை என நீங்கள் கூறுவதால், அது உங்கள் அனைவரையும் சகோதரர்கள் ஆக்குகின்றது. பின்னர் சரீரங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் சகோதரர்களும், சகோதரிகளும் ஆவீர்கள். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகளும், பிரஐhபிதா பிரம்மாவின்; குழந்தைகளும் ஆவீர்கள். அவர் உங்களுடைய எல்லையற்ற தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். அவர் கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குவதில்லை. நான் உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளேன், ஆனால் நீங்கள் என்னுடைய வழிகாட்டல்களை பின்பற்றும்பொழுதே அது நிகழ முடியும். இங்கே மனிதர்கள் அனைவரும் இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுகின்றார்கள். தற்பொழுது அனைவரிலும் ஐந்து விகாரங்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது விகாரமற்றவர்கள் ஆகுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! எவ்வாறாயினும், அவர்கள் விகாரங்களைத் துறப்பதில்லை, எனவே அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதில்லை. அனைவரும் அஜாமிலைப் போல் பாவிகள் ஆகியுள்ளனர். இது துன்பக் குடிலான, இராவணனின் சமுதாயம், அனைவரும் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். தந்தை வந்து, இராம இராச்சியத்தை உருவாக்குகின்றார். எனவே, இதுவே உண்மையான போர்க்களம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். கீதையில் கடவுள் கூறுகின்றார்: காமமே மிகக்கொடிய எதிரி. அதை வெற்றி கொள்ளுங்கள். எவ்வாறாயினும், அவர்கள் அதனை வெற்றி கொள்வதில்லை. இப்பொழுது தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் அங்கங்களினால் செவிமடுத்து, பின்னர் அதனை மற்றவர்களுக்கும்; கூறுகின்றீர்கள். ஆத்மாவே நடிக்கின்றார். நான் ஓர் ஆத்மா, நான் ஒரு சரீரத்தைத் ஏற்று ஒரு பாகத்தை நடிக்கின்றேன். எனினும் மனிதர்கள் ஆத்ம உணர்வில் இருப்பதற்குப் பதிலாகச் சரீPர உணர்வுடையவர்கள் ஆகியுள்ளனர். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். சத்திய யுகத்தில், நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்;களாக இருக்கின்றீர்கள்; எனினும் உங்களுக்குப் பரமாத்மாவைத் தெரியாது. இங்கு நீங்கள் சரீர உணர்வில் இருக்கின்றீர்கள், ஆனாலும் உங்களுக்குப் பரமாத்மாவைத் தெரியாது. இதனாலேயே நீங்கள் சீரழிந்தவர்களாகி விட்டீர்கள். சீரழிவு என்றால் என்ன என்பதையேனும் மக்கள் புரிந்துகொள்வதில்லை. பெருமளவு செல்வத்தைக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் அனைவரும் ஏழைகள் ஆகுவார்கள், ஏனெனில் விநாசம் இடம்பெறவுள்ளது. விநாசம் இடம்பெறுவதும் நல்லதே; அப்பொழுது நாங்கள் முக்தி தாமத்திற்குச் செல்வோம். ஆகவே இதனையிட்டு நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் மரணிப்பதற்கு ஆயத்தங்கள் செய்கின்றீர்கள். மனிதர்கள் மரணிப்பதற்குப் பயப்படுகின்றார்கள். தந்தை உங்களை வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். தூய்மையற்றவர்கள் தொடர்ந்தும் தூய்மையற்ற உலகில் மறுபிறவிகளை எடுக்கிறார்கள். அவர்களில் எவருமே சுவர்க்கவாசிகள் அல்ல. தந்தை கூறுகின்றார்: தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். தூய்மையாகாமல், உங்களால் தூய உலகிற்குச் செல்ல முடியாது. தூய்மையின் காரணமாகவே அப்பாவிகள் அடிக்கப்படுகின்றார்கள். அவர்கள் நஞ்சை அமிர்தம் எனக் கருதுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஞான அமிர்தத்தின் மூலம் உங்களை வைரங்கள் போலாக்குகின்றேன். எனவே ஏன் நீங்கள் நஞ்சை அருந்தி, பெறுமதியற்ற சிப்பிகளைப் போலாகுகின்றீர்கள்? அரைக் கல்பமாக நீங்கள் நஞ்சைப் பருகி வந்தீர்கள். இப்பொழுது எனது அறிவுறுத்தலுக்குக் கீழ்ப்படியுங்கள்! இல்லாவிட்டால் தர்மராஜிடமிருந்து தண்டனை கிடைக்கும். ஒரு லௌகீகத் தந்தையும் கூறுகின்றார்: குழந்தைகளே, குடும்பத்தின் பெயருக்கு அவதூறை ஏற்படுத்தும் அத்தகைய செயல்களைச் செய்யாதீர்கள். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தூய்மையாகுங்கள். நீ;ங்கள் காமச் சிதையில் அமர்ந்தால், இப்பொழுது இருப்பதை விடவும் மேலும் அவலட்சணமானவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுது நீங்கள் ஞானச் சிதையில் அமர்த்தப்பட்டு, அழகானவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். காமச் சிதையில் அமர்வதனால் உங்களால் சுவர்க்கத்தைக் காண முடியாதிருக்கும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! தந்தை குழந்தைகளுடன் மாத்திரம் பேசுகின்றார். தந்தை சுவர்க்க ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்கு வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். கலியுகம் முடிவடையவுள்ளது. தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மாத்திரமே சற்கதி இருக்கும். அவர்கள் தூய்மையாகாது விட்டால், தண்டனையை அனுபவம் செய்து, தங்கள் சொந்தச் சமயத்திற்குத் திரும்புவார்கள். பாரதவாசிகளே சுவர்க்கவாசிகளாக இருந்தார்;கள். அவர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களாகி விட்டார்கள். அவர்களுக்குச் சுவர்க்கத்தைப் பற்றியேனும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றாது, அதற்குப் பதிலாக, மற்றவர்களுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றி விகாரத்தில் ஈடுபட்டால், மரணிக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் சுவர்க்கத்திற்கு இறுதியில் சென்றாலும், நீங்கள் கோருகின்ற அந்தஸ்து மிகவும் தாழ்ந்ததாகவே இருக்கும். இப்பொழுது செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஏழைகள் ஆகுவார்கள். இங்கே ஏழையாக இருப்பவர்கள் அங்கே செல்வந்தர்கள் ஆகுவார்கள். தந்தையே ஏழைகளின் பிரபு. அனைத்துமே தூய்மையில் தங்கியுள்ளது. தந்தையுடன் யோகம் செய்வதால், நீங்கள் தூய்மையாகுவீர்கள். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். நான் உங்களை உங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் துறக்கச் செய்வதில்லை. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் இருங்கள், ஆனால் விகாரத்தில் ஈடுபடாதீர்கள். அத்துடன் சரீரதாரிகள் எவரையும் நினைவுசெய்யாதீர்கள். இந்நேரத்தில் அனைவருமே தூய்மையற்றவர்கள், ஆனால் சத்திய யுகத்தில் தூய தேவர்கள் இருந்தார்கள். இப்பொழுது அவர்களும் தூய்மையற்றவர்களாகி விட்டனர். இப்பொழுது நீங்கள் மறுபிறவியை எடுப்பதனால், உங்கள் இறுதிப் பிறவியை அடைந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் பார்வதிகள். இப்பொழுது அமரத்துவப் பிரபுவாகிய, தந்தை உங்களை அமரத்துவ உலகின் அதிபதிகள் ஆக்குவதற்கு, உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். ஆகவே இப்பொழுது அமரத்துவப் பிரபுவாகிய, தந்தையை நினைவுசெய்யுங்கள். நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சிவனோ, சங்கரரோ அல்லது பார்வதியோ மலையில் அமர்ந்திருக்கின்றார்கள் என்றில்லை. இவை அனைத்தும் பக்தி; மார்க்கத்தின் தடுமாற்றங்களாகும். அரைச் சக்கரமாக நீங்கள் பெருமளவு தடுமாறினீர்கள். இப்பொழுது பாபா கூறுகின்றார்: நான் உங்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்புவேன். சத்திய யுகத்தில் சந்தோஷத்தைத் தவிர எதுவும்; இல்லை; நீங்கள் தடுமாறுவதுமில்லை, வீழ்வதுமில்லை. தூய்மையாக இருப்பதே முக்கிய விடயமாகும். பெருமளவு வன்முறை இங்கு நிகழும்;பொழுது, பாவக் கலசம் நிறைந்து, விநாசம் இடம்பெறும். இப்பொழுது ஒரு பிறவிக்குத் தூய்மையாகுங்கள், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும் இது ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மாத்திரமே பொருந்துகின்றது. முன்னைய சக்கரத்தில் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்கள், இப்பொழுதும் அதனைப் பின்பற்ற மாட்டார்கள், அத்துடன் ஓர் அந்தஸ்தையும் கோர மாட்டார்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். உங்கள் மத்தியில் நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். எவ்வாறாயினும் தந்தைக்குச் சொந்தமான பின்னர் நீங்கள் வீழ்ந்தால், ஆழ்நரகத்திற்குச் செல்வதுடன், இன்னமும் அதிகளவுக்குப் பாவாத்மா ஆகுவீர்கள். இது கடவுளின் அரசாங்கமாகும். எனது வழிகாட்டல்களைப் பின்பற்றி, நீங்கள் தூய்மையாகாது விட்டால், தர்மராஜிடமிருந்து மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும். பிறவிபிறவியாக என்னென்ன பாவங்களை நீங்கள் செய்துள்ளீPர்களோ, அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவம் செய்ய வேண்டும், இந்த முறையில் கணக்குகள் தீர்க்கப்படும். நீங்கள் உங்கள் பாவங்களை யோக சக்தியினால் அழிக்க வேண்டும் அல்லது மிகக் கடுமையான தண்டனை இருக்கும். பல பிரம்மாகுமார்களும், குமாரிகளும் இருக்கின்றார்கள், அவர்கள் அனைவரும் தூய்மையாக இருக்கின்றரர்கள். அவர்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார்கள். நீங்கள் சிவசக்தி, பாண்டவ சேனையினர்; கோப, கோபியர் இருபாலாரும் இதனுள் அடங்குகின்றனர். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும், இறைவியும் இறைவனும் என அழைக்கப்படுகிறார்கள். கடவுள் நிச்சயமாக ஓர் ஆஸ்தியை அவர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். கடவுளே வந்து, உங்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். சத்திய யுகத்தில், அரசர், அரசி, பிரஜைகள் இருந்தனர், அவர்கள் அனைவருமே மேன்மையானவர்களாக இருந்தார்கள். இப்பொழுது இது இராவண இராச்சியமாகும். இராம இராச்சியத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமானால், தூய்மையாகி, இராமருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றியதால், நீங்கள் சீரழிந்தவர்களாகி விட்டீர்கள். நினைவுகூரப்படுகிறது: சிலரது செல்வம் நிலத்திற்கடியில் புதைக்கப்படும், மற்றவர்களுடையது கொள்ளையிடப்படும். மக்கள் தங்கத்தை நிலத்துக்கடியிலோ, சுவர்களிலோ மறைத்து வைக்கின்றார்கள். அவர்கள் திடீரென மரணித்தால், அனைத்தும் அங்கேயே இருக்கின்றது. விநாசம் இடம்பெற வேண்டும். பூமியதிர்ச்சி போன்றவை நிகழும்பொழுது, அந்நேரத்தில் பல திருடர்கள் தோன்றுகிறார்கள். பிரபுவும் அதிபதியுமான தந்தை, இப்பொழுது உங்களைத் தனக்குரியவர்கள் ஆக்குவதற்கும், உலகின் அதிபதிகள் ஆக்குவதற்கும் வந்துள்ளார்;. இந்நாட்களில், ஓய்வு ஸ்திதியில் உள்ள மக்களும் விகாரமின்றி வாழ முடியாதுள்ளனர். அவர்கள் முற்றிலும் தமோபிரதானாகி விட்டார்கள்; அவர்கள் தந்தையை இனங்கண்டு கொள்வதும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளேன். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால், மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும். நான் உங்களைத் தூய்மையாக்குவதற்கும், தூய உலகினை ஸ்தாபிப்பதற்கும் வந்துள்ளேன். பின்னர் நீங்கள் தூய்மையற்றவர்களாகித் தடைகளை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்தைப் படைப்பதில் தடைகளை ஏற்படுத்துவதால், மிகக் கடுமையான தண்டனை இருக்கும். நான் உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்கு வந்துள்ளேன். நீங்கள் விகாரத்தைத் துறக்காவிட்டால், தர்மராஜிடமிருந்து பெருமளவு தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். பின்னர் நீங்கள் விரக்தியில் கதறி அழுவீர்கள். இது இந்திர சபையாகும். ஞான தேவதைகளின் கதையும் உள்ளது. ஒரு தூய்மையற்ற நபர் இந்த ஒன்றுகூடலுக்கு அழைத்து வரப்பட்;டபொழுது, அந்த அதிர்வு உணரப்பட்;டது. இங்கே ஒன்றுகூடலில் தூய்மையற்ற எவரும் அமர்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தூய்மைக்கான சத்தியத்தைச் செய்யாமல், எவரும் இங்கமர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இல்லாவிட்டால், அத்தகையவரை அழைத்து வருபவரும் குற்றம் சாட்டப்படுவார்;. தந்தை அனைத்தையும் அறிவார். ஆகவே உங்களில் எவராவது அத்தகைய நபர்களை அழைத்து வந்தால், அவர் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். சிவபாபாவை நினைவுசெய்வதனால், ஆத்மாக்கள் சுத்தமானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகுகின்றார்கள், சூழலும் மௌனம் நிறைந்ததாகுகின்றது. தந்தை இங்கமர்ந்திருந்து, தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கின்றார்: நான் உங்கள் தந்தை. நான் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போன்று, உங்களை மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆக்குவதற்கு வந்துள்ளேன். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சந்தோஷம் எனும் உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. யோக சக்தியினால், உங்கள் பாவக் கணக்குகளைத் தீருங்கள், ஆத்மாவைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் ஆக்கி, சூழலையும் அமைதி நிறைந்ததாக்குங்கள்.

2. தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, முழுமையாகத் தூய்மையாகுவதற்குச் சத்தியம் செய்யுங்கள். விகாரங்களின் செல்வாக்கிற்கு உள்ளாகுவதால், சுவர்க்கத்தை உருவாக்குவதற்கு ஒரு தடையாக ஆகாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய மனதினதும், புத்தியினதும் சுத்தம் மூலம் மிகச்சரியான தீர்மானங்களை எடுத்து, வெற்றி நிறைந்தவர்கள் ஆகுவீர்களாக.

உங்கள் புத்தி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும்பொழுது, எந்தப் பணியிலும் உங்களால் வெற்றியடைய முடியும். எவ்வாறாயினும், உங்கள் மனமும், புத்தியும் சுத்தமாக இருக்கும்பொழுதும், அவற்றில் குப்பைகள் இல்லாதபொழுதுமே தீர்மானிக்கும் சக்தி தொழிற்படுகின்றது. இதனாலேயே நீங்கள் யோகத் தீயில் குப்பைகள் எதனையும் எரித்து, உங்கள் புத்தியைச் சுத்தமாக்க வேண்டும். எவ்விதமான பலவீனமும் குப்பையே. சிறிதளவு வீணான எண்ணமும் குப்பையே ஆகும். இந்தக் குப்பை எரிக்கப்படும்பொழுதே, உங்களால் பின்னர் கவலையற்றவர்களாக இருக்க முடியும். பின்னர், ஒரு சுத்தமான புத்தியைக் கொண்டிருப்பதால், நீங்கள் ஒவ்வொரு பணியிலும் வெற்றியடைவீர்கள்.

சுலோகம்:
உங்களில் தூய, மேன்மையான எண்ணங்கள் சதா வெளிப்படும்பொழுது, வீணானவை அனைத்தும் இயல்பாகவே அமிழ்ந்து விடும். ஓம் சாந்தி

மாதேஷ்வரிஜியின் இனிய, மேன்மையான வாசகங்கள்.

கலியுகத்து உலகம் ஏன் சாராம்சம் (சக்தி) எதுவுமற்ற உலகம் என அழைக்கப்படுகிறது? ஏனெனில் இவ்வுலகில் சாராம்சம் (சக்தி) இல்லை; இது சந்தோஷத்தையோ, அமைதியையோ அல்லது தூய்மையையோ கொண்டிருக்கவில்லை. ஒருகாலத்தில் இவ்வுலகில் சந்தோஷமும், அமைதியும், தூய்மையும் இருந்தன, ஆனால் அவை இப்பொழுது இல்லை, ஏனெனில் அனைவரிலும் ஐந்து தீய ஆவிகள் உள்ளன. இதனாலேயே இவ்வுலகம் பயத்தின் கடல், அதாவது, கர்ம பந்தனத்தின் கடல் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுலகிலுள்ள அனைவரும் சந்தோஷமற்றுள்ளதுடன், கடவுளைக் கூவியழைக்கின்றார்கள்: ஓ கடவுளே, இந்தக் கடலிலிருந்து எங்களை அப்பால் அழைத்துச் செல்லுங்கள். பயமற்ற ஓர் உலகம் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அந்தப் பயமற்ற உலகிற்கே அவர்கள் செல்ல விரும்புகின்றனர் என்பதையுமே இது காட்டுகின்றது. இதனாலேயே இவ்வுலகம் பாவ உலகம் என அழைக்கப்படுகின்றது, இதனையே அவர்கள் கடந்து, புண்ணியாத்மாக்களின் உலகைச் சென்றடைய விரும்புகின்றனர். எனவே இரு உலகங்கள் உள்ளன: சாராம்சம் உள்ள சத்திய யுகத்து உலகமும், மற்றையது சாராம்சமற்ற கலியுகத்து உலகமும் ஆகும். இப்பூமியிலேயே இரு உலகங்களும் உள்ளன.

மக்கள் கூறுகின்றார்கள்: ஓ கடவுளே, எங்களை இந்தக் கடலிற்கு அப்பால் அக்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள். அக்கரை என்பதன் அர்த்தம் என்ன? பிறப்பு, இறப்புச் சக்கரத்திற்குள் பிரவேசிக்காதிருப்பதே, அதாவது, விடுதலை அடைவதே அக்கரை என்பதன் அர்த்தம் என்று மக்கள் எண்ணுகின்றார்கள். மக்கள் இதனைக் கூறுகின்றார்கள், ஆனால் கடவுள் கூறுகின்றார்: குழந்தைகளே, துன்பத்திற்கும், அமைதியின்மைக்கும் அப்பாற்பட்ட, உண்மையிலேயே சந்தோஷமும், அமைதியும் உள்ள அந்த உலகிற்கு நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன். நீங்கள் சந்தோஷத்தை விரும்புவதால், அது நிச்சயமாக இந்த வாழ்க்கையில் இருக்க வேண்டும். அது தேவர்கள் எப்பொழுதும் சந்தோஷ வாழ்வைக் கொண்டிருந்த, தேவர்களின் உலகான, சத்திய யுகத்து வைகுந்தமாக இருந்தது. அத்தேவர்கள் அமரத்துவமானவர்கள் எனக் கூறப்பட்டார்கள். அமரத்துவமானவர்கள் என்பதிலும் அர்த்தம் எதுவும் இல்லை. தேவர்களின் ஆயுட்காலம் அவர்கள் என்றுமே மரணிக்காத வகையில் மிகவும் நீண்டதாக இருந்தது என்றில்லை. அது அவ்வாறில்லை என்பதால் அப்படிக் கூறுவதும் தவறாகும். அவர்களின் ஆயுட்காலம் சத்திய, திரேதா யுகங்களினூடாக நீடிக்கவில்லை. சத்திய, திரேதா யுகங்களில் தேவர்கள் பல பிறவிகளை எடுத்தார்கள். அவர்கள் 21 பிறவிகளுக்கு இராச்சியத்தை மிகவும் நன்றாக ஆட்சி செய்தார்கள், பின்னர் துவாபர யுகத்திலிருந்து கலியுக இறுதி வரை அவர்கள் 63 பிறவிகளை எடுத்தார்கள். மொத்தமாக, அவர்கள் ஏறும் ஸ்திதியில் 21 பிறவிகளையும், இறங்கும் ஸ்திதியில் 63 பிறவிகளையும் எடுத்தார்கள். மொத்தமாக, மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். மனிதர்கள் 8.4 மில்லியன் உயிரினங்களினூடாகச் செல்கின்றார்கள் என்று நம்புவது தவறாகும். மனிதர்களால் சந்தோஷம், துன்பம் இரண்டிற்கும் உரிய பாகங்களை மனிதர்களாக இருந்தே அனுபவம் செய்ய முடியும்பொழுது, மிருக வர்க்கத்தினுள் சென்று எதனையும் அனுபவம் செய்ய வேண்டிய அவசியம் என்ன உள்ளது? மொத்தமாக, 8.4 மில்லியன் மிருகங்கள், பறவைகள் போன்ற வகைகள் இருக்க முடியும், ஏனெனில் பல்வேறு வகையான படைப்புக்கள் உள்ளன. மனிதர்கள் மனிதர்களாக இருந்தே தங்கள் பாவங்களையும், புண்ணியங்களையும் செய்கின்றனர், ஆனால் மிருகங்களோ அனைத்தையும் தங்கள் வர்க்கத்திலேயே அனுபவம் செய்கின்றன. மனிதர்களாலும் மிருக வர்க்கத்தினுள் செல்ல முடியாது, மிருகங்களாலும் மனித வர்க்கத்தினுள் செல்ல முடியாது. மனிதர்கள் அனைத்தையும் தங்கள் சொந்த வர்க்கத்திலேயே அனுபவம் செய்ய வேண்டும். இதனாலேயே அவர்கள் சந்தோஷத்தையும், துன்பத்தையும் தங்கள் மனித வாழ்க்கைகளில் அனுபவம் செய்கின்றார்கள். அதேபோன்று, மிருகங்களும் தங்கள் சந்தோஷத்தையும், துன்பத்தையும் தங்கள் சொந்த வர்க்கத்தில் அனுபவம் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், எந்தச் செயல்களால் தாங்கள் வேதனைப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அவற்றிற்குப் புத்திகள் கிடையாது. மனிதர்கள் தங்கள் வேதனையை உணர்கின்றார்கள், ஏனெனில் மனிதர்கள் புத்திசாலிகள், ஆனால் மனிதர்கள் 8.4 மில்லியன் உயிரினங்களை அனுபவம் செய்கின்றார்கள் என்றில்லை. நீங்கள் பிழையான செயல்களைச் செய்தால், மிருகங்களின் இராச்சியத்தில் பிறவி எடுப்பீர்கள் என்பது பயத்தை உருவாக்குவதற்கே கூறப்பட்டுள்ளது. நாங்கள் சங்கம யுகத்தின் இந்நேரத்தில் எங்கள் வாழ்வுகளை மாற்றி, பாவாத்மாக்களிலிருந்து புண்ணியாத்மாக்களாக மாறுகின்றோம். அச்சா.