04.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் மேன்மையானவர்களாக வேண்டுமானால், ஒவ்வொருநாளும் உங்கள் அட்டவணையிலே எந்த பௌதீகப் புலன்களும் உங்களை ஏமாற்றவில்லை என்பதைப் பாருங்கள். கண்கள் மிகவும் ஏமாற்றக் கூடியவை. ஆகையினால் அவைபற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

கேள்வி:
அனைத்திலும் மோசமான பழக்கம் என்ன? அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை என்ன?

பதில்:
உங்கள் சுவையரும்புகளை திருப்திப்படுத்துவதே மிக மோசமான பழக்கமாகும். உங்களிற் சிலர் சுவையானவற்றைப் பார்க்கும்போது இரகசியமாக அதை உண்கின்றீர்கள். சிலவற்றை மறைப்பது என்றால் திருடுவது என்பதாகும். மாயை திருடுகின்ற ரூபத்திலே பலரையும் அவர்களது மூக்கிலும், காதுகளிலும் பிடித்;து இழுக்கிறாள். உங்களின் புத்தியானது எவற்றினாலும் ஈர்க்கப்படும்போது, இப் பழக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி உங்களைத் தண்டித்துக் கொள்வதாகும். உங்களுடைய தீயபழக்கங்களை அகற்றுவதற்கு, நீங்கள் உங்களை அதிகளவில் தண்டிக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
நீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா? நீங்கள் அனைத்தையும் உங்களிடமே கேட்கவேண்டும். நான் இங்கே ஆத்ம உணர்வில் நிலைத்திருந்து தந்தையை நினைவு செய்கின்றேனா? சிவசக்தி பாண்டவசேனை நினைவு கூரப்படுகின்றது. சிவபாபாவின் சேனைகளான நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். அப் பௌதீகமான சேனையில் இளமையானவாகள் மாத்திரமே இருக்கின்றனர், அங்கே வயதானவர்களோ, குழந்தைகளோ இருப்பதில்லை. இந்த சேனையில் இளையவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்ற அனைவரும்; உள்ளனர். அனைவரும் இங்கே அமர்ந்திருக்கின்றனர். இது மாயையை வெற்றி கொள்கின்ற சேனையாகும். நீங்கள் ஒவ்வொருவரும் மாயையை வெற்றி கொண்டு, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோர வேண்டும். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் புலனங்கங்கள் அதிகளவில் உங்களை ஏமாற்றுகின்றன. எந்தப் புலனங்கம் உங்களை இன்று ஏமாற்றியது என உங்கள் அட்டவணையில் எழுதுங்கள். இன்று நான் இன்னார், இன்னாரப் பார்த்து அவளைத் தொட விரும்பினேன். கண்களே அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புலனங்கத்தையும் சோதியுங்கள். எந்தப் புலனங்கம் அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது? இதை அடிப்படையாகக் கொண்ட சூர்தாஸின் (தன்னையே குருடாக்கிக் கொண்டவர்) உதாரணம் உள்ளது. நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்ற முடியும். மாயை நல்ல குழந்தைகளையும் ஏமாற்றுகின்றாள். அவர்கள நல்ல சேவையை செய்தபோதிலும், அவர்களின் கண்கள் அவர்களை அதிகளவில் ஏமாற்றுகின்றது. நீங்கள் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவைகளே உங்கள் எதிரிகளாகும். அவை உங்கள் அந்தஸ்தையே அழிவடையச் செய்கின்றன. விவேகமான குழந்தைகள் இதை மிக நன்றாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சட்டைப் பையில் ஒரு டயறியை வைத்திருங்கள். பக்தி மார்க்கத்தில் அவர்களின் புத்தி தவறான வழியில் செல்லும்போது, அவர்கள் தங்களையே கிள்ளிக்கொள்வார்கள். நீங்களும் உங்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் புலன்கள் உங்களை ஏமாற்றவில்லையே என்பதைச் சோதித்துக் கொள்ளுங்கள். அவை ஏமாற்றினால் அப்பாற் சென்று விடுங்கள். அந்த நபரைப் பார்த்துக்கொண்டு அங்கே நிற்காதீர்கள். ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையில் அதிகளவு குழப்பங்கள்(தீயபார்வை) உள்ளன. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தவுடன் அங்கே விகாரமான பார்வையுள்ளது. இதனாலேயே சந்நியாசிகள் தங்கள் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கின்றார்கள். சில சந்நியாசிகள் பெண்களுக்குத் தமது முதுகைக் காட்டியவாறு அமர்ந்துள்ளனர். அந்த சந்நியாசிகள் எதனைப் பெறுகின்றார்கள்? இவர்கள் ஒன்று அல்லது இரண்டு மில்லியன்களையோ அல்லது ஒரு பில்லினையோ சேகரிக்கின்றனர். அவர்கள் மரணித்ததும் அனைத்துமே முடிந்துவிடுகிறது. பின்னர் அவர்கள் அடுத்த பிறவியில் மீண்டும் பணத்தைச் சேகரிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறுகின்ற அனைத்தும் அழியாத ஆஸ்தியாகின்றது. அங்கே செல்வத்துக்கான பேராசை இருக்கமாட்டாது. உங்கள் தலையில் அடித்துக் கொள்ளுமளவிற்கு அங்கே உங்களுக்கு எந்தக் குறையுமிருக்க மாட்டாது. கலியுக இறுதிக்கும், சத்தியயுக ஆரம்பத்துக்குமிடையில், பகலுக்கும் இரவுக்குமிடையிலான வேறுபாடுள்ளது. அங்கே எல்லையற்ற சந்தோஷமுள்ளது, இங்கே எதுவுமேயில்லை. பாபா எப்போதும் சங்கமம் என்ற வார்த்தையுடன் அதிமேன்மையான என்ற வார்த்தையையும் நிச்சயமாகச் சேர்த்து எழுதுங்கள் என சதா கூறுகின்றார். நீங்கள் வார்த்தைகளைத் தெளிவாகப் பேசவேண்டும், ஏனெனில் அது விளங்கப்படுத்துவதற்கு இலகுவாகும். மனிதர்கள் தேவர்களாக மாற்றப்பட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அவர் நிச்சயமாக அவர்களை தேவர்களாக மாற்றுவதற்கு, நரகவாசிகளைச் சுவர்க்க வாசிகளாக மாற்றுவதற்கு சங்கமயுகத்திலேயே வரவேண்டும். மனிதர்கள் காரிருளில் உள்ளனர். சுவர்க்கம் என்றால் என்ன என்று அவர்கள் அறியமாட்டார்கள். ஏனைய மதத்தவர்களால் சுவர்க்கத்தைப் பார்க்கவும் முடியாது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் தர்மம் ஒன்றே அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. அந்த இடம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. ஆயினும் தாங்களும் சுவர்க்கத்துக்குச் செல்லலாம் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. எவருமே இதை அறியமாட்டார்கள். பாரத மக்களும் இதை மறந்து விட்டார்கள். நூறாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னர் சுவர்க்கம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாக கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். இலஷ்மியும், நாராயணனும் தேவியும் தேவரும் என அழைக்கப் படுகின்றனர். கடவுளே நிச்சயமாக தேவ, தேவியரை உருவாக்குகின்றார், எனவே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் அட்டவணையை ஒவ்வொரு நாளும் சோதியுங்கள். எந்தப் புலனங்கம் உங்களை ஏமாற்றியது? நாக்கும் குறைந்ததல்ல. உங்களிற் சிலர் நல்லவற்றைக் காணும்போது, அதை இரகசியமாக உண்கின்றீர்கள். நீங்கள் அதைப் பாவம் எனப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அது திருடுவது ஆகும், சிவபாபாவின் யக்ஞத்தில் இருந்து திருடுவது மிகவும் தீயதாகும். ஒரு வைக்கோலைத் திருடுபவர், ஆயிரத்தையும் திருடுகின்ற பழக்கத்தைக் கொண்டிருப்பார். மாயை பலரை அவர்களின் மூக்கினால் பிடிக்கின்றாள். இந்தத் தீய பழக்கங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் உங்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் தீயபழக்கங்களைக் கொண்டிருக்கும்வரை, உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. சுவர்க்கத்துக்குச் செல்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆயினும் ஒரு அரசன் அல்லது அரசியாக ஆகுவதற்கும் ஒரு பிரiஐயாக ஆகுவதற்குமிடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. எனவே தந்தை கூறுகின்றார்: உங்கள் புலனங்கங்கள் மீது கவனம் செலுத்துங்கள்;. எந்தப் புலனங்கம் உங்களை ஏமாற்றுகின்றது? ஒரு அட்டவணையை வைத்திருங்கள், ஏனெனில் இதுவும் ஒரு வியாபாரமேயாகும். தந்தை விளங்கப் படுத்துகின்றார்: என்னுடன் வியாபாரம் செய்ய விரும்பினால், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தந்தை வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், ஆனால் மாயை உங்கள் வழியில் தடைகளை ஏற்படுத்துகின்றாள். அவள் உங்களை ஸ்ரீமத்தைப் பின்பற்ற அனுமதிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தவறு செய்கின்றபோது, அதற்காக அதிகளவு வருந்த வேண்டியதுடன், ஒருபோதும் உயர்ந்த அந்தஸ்தையும் கோரமுடியாது என்பதையும் மறக்க வேண்டாம். இந்நேரத்தில் நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆகுவோம் எனச் சந்தோஷமாகக் கூறுகின்றீர்கள். ஆயினும் நீங்கள் தொடர்ந்தும் உங்களையே வினவவேண்டும்: எனது புலனங்கங்கள் என்னை ஏமாற்றுகின்றனவா? முன்னேறிச் செல்வதற்காகத் தந்தை உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் நடைமுறையிலிடுங்கள். நாள் முழுவதற்குமான அட்டவணையைப் பாருங்கள். பல தவறுகள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றது. சிலநேரங்களில் நீங்கள் சிலர் மீது இரக்கப்பட்டு, அவருக்கு உணவோ அல்லது பரிசுப்பொருட்கள் போன்றவற்றையோ கொடுக்க விரும்புகின்றீர்கள். அதில் அதிகளவு நேரம் வீணாக்கப்படுகின்றது. மாலையின் ஒரு மணியாகுவதற்கு அதிகளவு முயற்சி எடுக்கின்றது. எட்டு மணிகளே பிரதானமானவர்களாவர். ஒன்பது இரத்தினங்கள் பற்றியே பேசப்படுகின்றது. பாபாவும், பின்னர் எட்டு மணிகளுமுள்ளனர். மத்தியில் இருக்கும் இரத்தினமே பாபாவைக் குறிக்கின்றது. மக்கள் தீயசகுனங்களை அனுபவம் செய்யும்போது, அவர்கள் ஒன்பது இரத்தினங்கள் பதித்த மோதிரத்தை அணியும் படி கேட்கப்படுகின்றார்கள். பல முயற்சியாளர்கள் மத்தியில், எட்டுப்பேரே திறமை சித்தியடைகின்றார்கள். எட்டு இரத்தினங்கள் பற்றி அதிகளவு புகழ் உள்ளது. நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்போது புலனங்கங்கள் உங்களை ஏமாற்றுகின்றன. பக்தி மார்க்கத்திலும் அவர்களுக்கு இவ் அக்கறை உள்ள அதாவது தமது தலை மீது பல பாவச்சுமைகள் உள்ளன. அவர்கள் தானம் செய்வதாலோ அல்லது புண்ணியம் செய்வதாலோ அவர்களது பாவங்கள் அழிக்கப் படலாம் என உணர்கின்றனர். சத்தியயுகத்தில் கவலைப்படுவதற்கு எதுவுமேயில்லை, ஏனெனில் அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை. இங்கே நடப்பவையே அங்கும் நடந்திருந்தால், சுவர்க்கத்துக்கும், நரகத்துக்குமிடையில் எந்த வித்தியாசமும் இருக்கமாட்டாது. அத்தகைய உயர்ந்த அந்தஸ்தை எவ்வாறு கோருவது எனக் கடவுள் இங்கே அமர்ந்திருந்து கற்பிக்கின்றார். உங்களால் பாபாவை நினைவு செய்ய முடியாதுவிடின், அப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரை நினைவு செய்யுங்கள். பின்னர் எங்களுடைய பாபாவே சற்குருவுமாவார் என நீங்கள் நினைவு செய்யமுடியும். அசுரவழிகாட்டல்களைப் பின்பற்றியதால், மனிதர்கள் தந்தையை அதிகளவு அவமரியாதை செய்துள்ளனர். தந்தை இப்பொழுது அனைவரையும் ஈடேற்றுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் அனைவரையும் ஈடேற்றவேண்டும். எவரைப் பற்றிய அவமரியாதையையும், எவர் மீதும் தூய்மையற்ற பார்வையையும் கொண்டிருக்கக்; கூடாது. இல்லையெனில் உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துவீர்கள். அந்த அதிர்வுகள் பின்னர் மற்றவர்களையும் பாதிக்கும். தந்தை கூறுகின்றார்: இலக்கு அதி உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் உங்கள் அட்டவணையைப் பாருங்கள்: நான் ஏதாவது பாவச்செயல்களை செய்துள்ளேனா? இது பாவச்செயல்கள் நிறைந்த உலகமாகும், பாவச் செயல்கள் செய்வதற்கான காலகட்டமாகும். பாவச் செயல்களை வெற்றிகொண்ட தேவர்களின் காலகட்டத்தை எவருமே அறியமாட்டார்கள். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாவத்தை வென்றவர்களின் சகாப்தம் தொடங்கியது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பின்னர் விகாரங்களின் சகாப்தம் தொடங்கியது. இங்குள்ள அரசர்களும் தொடர்ந்தும் பாவச்செயல்களைச் செய்கின்றனர். இதனாலேயே நான் உங்களுக்கு நடுநிலைச்செயல், பாவச்செயல், கர்மதத்துவம் பற்றி விளங்கப்படுத்துகின்றேன் எனத் தந்தை கூறுகின்றார். இராவண இராச்சியத்தில் உங்கள் செயல்கள் பாவகரமானவையாகும். சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவையாகும். அங்கே பாவங்கள் செய்யப்படுவதில்லை, அங்கே விகாரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது 3வது கண்ணாகிய ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையினால் திரிநேற்றியாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளீர்கள். எந்த மனிதராலும் உங்களை இவ்வாறு ஆக்கமுடியாது. தந்தையே உங்களை இவ்வாறு ஆக்குகின்றார். முதலில் நீங்கள் ஆஸ்திகர்களாகி, பின்னர் திரநேற்றிகளாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆகின்றீர்கள். முழுநாடகத்தின் இரகசியமும் உங்கள் புத்தியிலுள்ளது. அசரீரிஉலகம், சூட்சுமஉலகம், 84பிறவிகளின் சக்கரம் அனைத்தும் உங்கள் புத்தியிலே உள்ளது. பின்னர் அனைத்து மதங்களும் வருகின்றன. அவை தொடர்ந்தும் விரிவாக்கம் அடைகின்றன. அந்த மதஸ்தாபகர்களை குருமார் என அழைக்கமுடியாது. ஒரேயொரு சற்குருவே அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். ஏனைய அனைவரும் சற்கதி அருள வருவதில்லை, அவர்கள் மதங்களின் ஸ்தாபகர்களாவர். கிறிஸ்துவை நினைவு செய்வதன் மூலம் எவருமே சற்கதி அடைவதில்லை. எவருடைய பாவங்களும் அழிக்கப்படுவதுமில்லை. அவர்கள் அனைவரும் பக்தியின் வரிசையிலுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே ஞானவரிசையிலுள்ளீர்கள். நீங்கள் வழிகாட்டிகளாவீர்கள். நீங்கள் அனைவருக்கும் அமைதிதாமத்துக்கும், சந்தோஷதாமத்துக்குமான பாதையைக் காட்டுகின்றீர்கள். தந்தையே விடுதலையாக்குபவரும், வழிகாட்டியுமாவார். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படமுடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் பாவங்களை அழிப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள். ஆகையால் ஒருபுறம் நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள், மறுபுறம் நீங்கள் எந்தப் பாவகரமான செயல்களும் செய்வதில்லை என்பதில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சி செய்கையில், நீங்கள் பாவச் செயல்கள் செய்தால் நூறுவீதம் தண்டனை இருக்கும். முடிந்தளவிற்கு எந்தப்பாவச் செயல்களும் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் பாவம் செய்வது பழக்கப்படுவதுடன்;, உங்கள் பெயரும் அவமதிக்கப்படும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் தெரிந்து கொள்ளும்போது, எந்தப் பாவச்செயல்களையும் செய்யக்கூடாது. ஒரு சிறிய பொருளோ அல்லது பெரிய பொருளோ திருடப்பட்டாலும் அதில் பாவம் செய்யப்படுகின்றது. இந்தக் கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. தந்தை குழந்தைகளின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்து கொள்கின்றார். இவர் எனது மனைவி என்ற எண்ணம் ஒருபோதும் இருக்கக்கூடாது. நாங்கள் பிரம்மகுமாரர்கள், குமாரிகள். நாங்கள் சிவபாபாவின் பேரக்குழந்தைகள். நாங்கள் பாபாவுக்குச் சத்தியம் செய்து ஒரு ராக்கியைக் கட்டியுள்ளோம். ஆகையால் எமது கண்கள் ஏன் எங்களை ஏமாற்றுகின்றன? நினைவுசக்தியினால் எந்தப் புலன்களின் ஏமாற்றப்படுவதிலிருந்தும் விடுவிக்கப்படமுடியும். இதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன், உங்கள் அட்டவணையையும் எழுதுங்கள். நான் தந்தையிடமிருந்து முழுஆஸ்தியையும் நிச்சயமாகக் கோருவதுடன், ஆசிரியருடன் முழுமையாகக் கற்பேன் எனக் கணவனும், மனைவியும் இவ்வாறு தங்களிடையே பேசிக்கொள்ள வேண்டும். இந்த எல்லையற்ற ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற அவ்வாறான ஆசிரியரை நீங்கள் ஒருபோதும் எங்குமே கண்டுகொள்ள முடியாது. இலஷ்மி, நாராயணனிடமே இந்த ஞானம் இல்லாதபோது, அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால், எவ்வாறு இந்த ஞானத்தைக் கொண்டிருக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: நீங்கள் மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டிருப்பதுடன், அதை நீங்கள் சங்கமயுகத்திலேயே கொண்டிருக்கின்றீர்கள். என்ன செய்யவேண்டும், எவ்வாறு அதைச் செய்யவேண்டுமென பாபா அதிளவில் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார், ஆனால் நீங்கள் இங்கிருந்து எழுந்ததும் அனைத்தும் முடிவடைகின்றது. சிவபாபாவே உங்களுக்குக் கூறுகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. எப்பொழுதும் சிவபாபாவே உங்களுடன் பேசுகின்றார் எனக் கருதுங்கள். இவரின் படத்தையும் வைத்திருக்க வேண்டாம். இந்த ரதம் கடனாகவே எடுக்கப்பட்டுள்ளது. இவரும் ஒரு முயற்சியாளரேயாவார். அவர் கூறுகின்றார்: நானும் பாபாவிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றேன். இவரும் உங்களைப் போன்றே மாணவ வாழ்க்கையை மேற்கொள்கின்றார். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது புகழப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது பூஐpக்கத்தகுந்த தேவர்களாக ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த விடயங்களை விளங்கபபடுத்த முடியாது. சிலரது பாக்கியத்தில் இது இல்லையெனில், சிவபாபா எவ்வாறு வந்து கற்பிக்கின்றார் என அவர் சந்தேகத்தைக் கொண்டிருப்பார். நான் இதை நம்பவில்லை எனக் கூறுவார்.. அவர் இதை நம்பவில்லையெனில் எவ்வாறு சிவபாபாவை நினைவு செய்ய முடியும்? அவ்வாறாயின், அவரது பாவங்களும் அழிக்கப் படமாட்டாது. வரிசைக்கிரமமான ஒரு இராச்சியம் உருவாக்கப்படுகின்றது. பணிப்பெண்களும், வேலையாட்களும் தேவைப்படுகின்றனர். அரசர்களுக்கு சீதனத்தின் ஒரு பங்காக பணிப்பெண்களும் கொடுக்கப்படுகின்றன. மக்கள் இங்கே பலபணிப்பெண்களையும், வேலைக்காரர்களையும் கொண்டுள்ளனர். எனவே நீங்கள் சத்தியயுகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என கற்பனைசெய்து பாருங்கள். நீங்கள் பணிப்பெண்களாகவோ, அல்லது வேலைக்காரர்களாகவோ ஆகுகின்ற தளர்வான முயற்சியைக் செய்யக் கூடாது. நீங்கள் இப்பொழுது மரணிக்கநேரிட்டால் என்ன அந்தஸ்தைக்கோருவேன் என பாபாவிடம் வினவினால், உங்களுடைய சொந்த அட்டவணையை பார்க்குமாறு உங்களுக்கு பாபா உடனடியாகவே கூறுவார். இறுதியில் நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். இது ஓர் உண்மையான வருமானமாகும். மக்கள் இரவுபகலாக ஏனைய வருமானங்களை சம்பாதிப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். பங்குத்தரர்கள் ஒரு கையால் உணவருந்திக்கொண்டு, மறு கையினால் தொலைபேசியூடாக தங்கள் வியாபாரத்தை செய்கின்றனர். இப்பொழுது என்னிடம்கூறுங்கள், எவ்வாறு அத்தகைய நபர் ஞானமார்க்கத்தைப் பின்பற்றமுடியும்? எனக்கு நேமில்லை என்றே அவர் கூறுவார். ஆஹா! நீங்கள் இங்கே உண்மையான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். தந்தையை இலகுவாக நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். மக்கள் விசேஷமான எட்டு தேவதைகள் போன்றோரை நினைவு செய்கிறார்கள் அவர்களை நினைவு செய்வதனால் எதனையும் அடையமுடியாது. பாபா மீண்டும். மீண்டும் தொடர்ந்தும் ஒவ்வொரு விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். அவர் இந்த ஒரு குறித்த விடயத்தை விளங்கப்படுத்தவில்லை என நீங்கள் எவருமே கூறமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் செய்தியை அனைவருக்கும் கொடுக்கவேண்டும். நீங்கள் ஆகாய விமானங்களிலிருந்து துண்டுப்பிரசுரங்களையும் போட முயற்சி செய்யவேண்டும். சிவபாபா இதனையே கூறுகின்றார் என துண்டுபிரசுரங்களில் எழுதுங்கள். பிரம்மாவும், சிவபாபாவின் குழந்தையாவார். இவர் பிரஜாபிதாவாக இருப்பதால் இவரும் தந்தையே அத்துடன் அவரும் தந்தையே ஆவார். சிவபாபா எனக்கூறும்போது பல குழந்தைகள் அன்புக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் இன்னமும் அவரைக்காணவில்லை. எனவே பாபா எப்போது வந்து உங்களைச் சந்திப்பது? என அவர்கள் எழுதுகின்றனர். பாபா இந்த பந்நதனத்திலிருந்து என்னை விடுவியுங்கள். பலர் பாபாவின் காட்சிகளையும் பின்னர் ஒரு இளவரசரின் காட்சிகளையும் கண்டார்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது பலர் காட்சிகளைக் காண்பார்கள். ஆனால் நீங்களும் முயற்சி செய்யவேண்டும். ஒருவர் மரணிக்கின்றபோது, கடவுளை நினைவு செய்யுமாறு அவருக்குக் கூறப்படுகின்றது. இறுதியில் அனைவரும் எவ்வாறு அதிகளவு முயற்சி செய்வார்கள் என நீங்கள் பார்ப்பீர்கள். அவர்கள் அவரை நினைவு செய்யத் தொடங்குவார்கள். தந்தை உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்: குழந்தைகளே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் முயற்சி செய்யுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து உங்கள் பாவங்களை அழியுங்கள். அப்பொழுதே நீங்கள் தாமதித்து வந்திருந்தாலும் முன்னால் செல்ல முடியும். புகைவண்டி தாமதிக்கும் போது, அதனால் இழந்த நேரத்தை பின்னர் எவ்வாறு ஈடுசெய்கின்றதோ, அவ்வாறே இங்கேயும் இழந்த நேரத்தை ஈடுசெய்ய உங்களுக்கு நேரம் உள்ளது. இங்கே வந்து உங்கள் வருமானத்தை சம்பாதிப்பதில் உங்களை ஈடுபடுத்துங்கள். உங்களுக்கு நன்மை பயப்பதற்கு என்ன செய்யவேண்டுமெனத் தந்தை அறிவுரை வழங்குகின்றார். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஆகாய விமானத்திலிருந்து துண்டுப்பிரசுரங்களைப் போடுங்கள். அதனால் நீங்கள் சரியான செய்தியையே கொடுக்கின்றீர்கள் என மக்கள் புரிந்துகொள்வார்கள். பாரதம் பாரியதேசமாகும். அனைவருமே நிச்சயமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது எவராலும் பாபா இதுபற்றி நான் எதனையும் அறிந்து கொள்ளவில்லை எனக் கூறமுடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விவேகமானவராகி, உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றவில்லையா என்பதை சோதியுங்கள். உங்கள் புலனங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி தவறான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். நினைவு சக்தியினால் புலனங்களின் ஏமாற்றுதலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்.

2. இந்த உண்மையான வருமானத்தை சம்பாதிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் தாமதித்து வந்திருந்தாலும் முயற்சி செய்வதன் மூலம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும். இதுவே உங்கள் பாவங்களை அழிப்பதற்கான நேரமாகும். ஆகையால் எந்தப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருப்பதன் மூலம், குளிரூட்டப்பட்ட பயணச்சீட்டை பெறுவதற்கான உரிமையை கோருவீர்களாக.

இங்கே ஒவ்வொரு சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருப்பவர்களே குளிரூட்டப்பட்ட பயணச்சீட்டைப் பெறுகிறார்கள். எத்தகைய ஒரு சூழ்நிலையாயினும், என்ன பிரச்சினை வந்தாலும், ஒரு விநாடியில் எதனையும் தாண்டிச் செல்வதற்கான சான்றிதழை நீங்கள் பெற வேண்டும். அந்த பயணச்சீட்டிற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதைப் போன்றே, இங்கே, சதா வெற்றியாளர் ஆகுதல் என்ற பணத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதனைக் கொண்டே நீங்கள் பயணச்சீட்டை பெற முடியும். இந்தப் பணத்தை ஈட்டுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்கத் தேவையில்லை. ஆனால், எந்த நேரமும் தந்தையுடனேயே இருந்தால், நீங்கள் அளவற்ற வருமானத்தை தொடர்ந்தும் சேர்ப்பீர்கள்.

சுலோகம்:
சூழ்நிலை எதுவாயினும், அதனை விட்டுவிடுங்கள், ஆனால் ஒருபோதும் உங்கள் சந்தோஷத்தை விட்டுவிடாதீர்கள்.