04.09.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது இவ்வுலகம் ஒரு நம்பிக்கையற்ற விடயமாக உள்ளது. அனைவரும் மரணிக்கவுள்ளார்கள், இதனாலேயே அதனுடனான உங்கள் பற்று முடிவடைய வேண்டும். சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்!

கேள்வி:
சேவைக்கான உற்சாகத்தைக் கொண்டிராமைக்;கான காரணம் என்ன?

பதில்:
1.) உங்கள் நடத்தை நன்றாக இல்லாமலும், நீங்கள் தந்தையை நினைவுசெய்யாமலும் இருப்பின், உங்களால் சேவைக்கான உற்சாகத்தைக் கொண்டிருக்க முடியாது. நீ;ங்கள் தொடர்ந்தும் ஏதோவொரு தவறான செயலைச் செய்வதனால், சேவை செய்ய இயலாதுள்ளது. 2.) தந்தையின் முதலாவது வழிகாட்டல்: நீங்கள் மரணிக்கும்பொழுது, உங்களுக்கு உலகமே மரணிக்கிறது. நீங்கள் இவ்வழிகாட்டலைப் பயிற்சியில் இடுவதில்லை. புத்தியானது சரீரத்திலும், சரீர உறவினர்களிலும் சிக்கிக் கொண்டுள்ள காரணத்தினால், உங்களால் சேவை செய்ய இயலாதுள்ளது.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
நீங்கள் பக்திமார்க்கத்தின் பாடலைக் கேட்டீர்கள். மக்கள் ஓம் நமசிவாய எனக் கூறுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் சிவனின் பெயரைக் கூறுகிறார்கள். அவர்கள் தினமும் சிவாலயத்துக்குச் சென்று, ஒவ்வொரு வருடமும் உள்ள விழாக்களையெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதிமேன்மையான புண்ணிய மாதமும் (லீப் மாதம்), அதிமேன்மையான புண்ணிய வருடமும் உள்ளன. அவர்கள் தினமும் தொடர்ந்தும் ஓம் நமசிவாய எனக் கூறுகிறார்கள். பலர் சிவனை வழிபடுபவர்கள் ஆவர். சிவனே அதிமேன்மையான, கடவுளாகிய படைப்பவர் ஆவார். அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனே தூய்மையாக்குபவர் எனக் கூறுகிறார்கள். அவர்கள் அவரைத் தினமும் பூஜிக்கிறார்கள். இதுவே அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆகவுள்ள யுகமாகிய சங்கமயுகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரு லௌகீகக் கல்வியிலிருந்து மக்கள் ஏதோவோர் அந்தஸ்தைக் கோருகிறார்கள். எவ்வாறு இலக்ஷ்மியும் நாராயணனும் தங்கள் அந்தஸ்தைக் கோரினார்கள்? எவ்வாறு அவர்கள் உலக அதிபதிகள் ஆகினார்கள்? எவரும் இதனை அறியார். அவர்கள் ஓம் நமசிவாய, நீங்களே தாயும் தந்தையும் எனக் கூறுகிறார்கள். அவர்கள் தினமும் இப்புகழைப் பாடுகிறார்கள், ஆனால் அவர் எப்பொழுது வந்து, தாயும் தந்தையுமாகி, எங்களுக்கு எங்களுடைய ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதில்லை. உலக மக்கள் எதனையும் அறியார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்திமார்க்கத்தில் அவர்கள் அதிகளவுக்குத் தடுமாறித் திரிகிறார்கள். அமர்நாத்துக்கு பல்வேறு குழுக்களில் மக்கள் செல்கிறார்கள். அவர்கள் அதிகளவுக்குத் தடுமாறித் திரிகிறார்கள்! நீங்கள் அவர்களுக்கு இதனைக் கூறியிருப்பின், அவர்கள் குழப்பம் அடைவார்கள். உங்களில் மிகச்சில குழந்தைகளுக்கே உள்ளுர இச்சந்தோஷம் உள்ளது. பாபா, உங்களை இனங்கண்ட கணத்திலிருந்து என்னுடைய சந்தோஷத்துக்கு எல்லையேயில்லை என அவர்கள் தொடர்ந்தும் எழுதுகிறார்கள். சிரமங்கள் உள்ளபொழுதும், நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் என்பதை நீங்கள் ஒருபொழுதும் மறக்கக் கூடாது. நீங்கள் சிவபாபாவை அடைந்து விட்டீர்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் என்பதனால், உங்கள் சந்தோஷத்துக்கு எல்லை இருக்கக் கூடாது. மாயை உங்களைத் திரும்பத் திரும்ப மறக்கச் செய்கிறாள். உங்களுக்கு நம்பிக்கை உள்ளது எனவும், நீங்கள் பாபாவை அறிவீர்கள் எனவும் நீங்கள் எழுதினாலும், நீங்கள் முன்னேறும்பொழுது பின்தங்கிவிடுகிறீர்கள். சிலர் ஆறு தொடக்கம் எட்டு மாதங்களுக்கு அல்லது இரண்டு தொடக்கம் மூன்று வருடங்களுக்கு வருகை தராதபொழுது, அவர்களின் புத்தியில் முழு நம்பிக்கை இல்லை என்பதையும், அவர்கள் முழுமையாகப் போதையடையவில்லை என்பதையும் பாபா புரிந்துகொள்கிறார். அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைத் தருகின்ற அத்தகையதோர் எல்லையற்ற தந்தை ஆவார். உங்களுக்கு இந்நம்பிக்கை இருந்திருப்பின், அப்பொழுது உங்களுக்குப் பெருமளவு சந்தோஷமும், போதையும் இருந்திருக்கும். ஓர் அரசர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும்பொழுது, அரசர் தன்னைத் தத்தெடுக்க விரும்புகிறார் எனவும், தன்னை அவருடைய வாரிசாக்க விரும்புகிறார் எனவும் ஒரு பேச்சு இருப்பதை அக்குழந்தை அறியும்பொழுது, அக்குழந்தை அதிகளவு சந்தோஷம் அடைவார். அவர் உணர்வார்: நான் அரசரின் குழந்தையாக ஆகப்போகின்றேன். அல்லது ஒரு செல்வந்த நபரினால் ஓர் ஏழைக் குழந்தை தத்தெடுக்கப்பட்டால், அவர் அதிகளவு சந்தோஷத்தை உணர்கிறார். தான் இன்னாரினால் தத்தெடுக்கப்படப் போவதை அவர் உணர்ந்துகொள்ளும்பொழுது, ஏழையாக இருக்கின்ற அவரின் உணர்வு மறைந்து விடுகிறது. அது ஒரு பிறவிக்கான விடயமாகும். இங்கு, குழந்தைகளாகிய உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைக் கோருகின்ற சந்தோஷம் உள்ளது. எல்லையற்ற தந்தையை நினைவுசெய்து, ஏனையோருக்கும் பாதையைக் காண்பியுங்கள்: தூய்மையாக்குபவராகிய சிவபாபா வந்துவிட்டார். அவர் உங்களுடைய தந்தை என அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நான் உங்களுடைய எல்யைற்ற தந்தை என மனிதர்களால் கூற முடியாது. தந்தை மாத்திரமே தான் 5000 வருடங்களுக்கு முன்னரும் வந்தார் என்பதை விளங்கப்படுத்துகிறார். அவர் அதே வார்த்தைகளைக் கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். தூய்மையாக்குபவராகிய தந்தையான என்னை நினைவுசெய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வேறு வழி கிடையாது. ஒரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். கிருஷ்ணர் கடவுள் என அழைக்கப்பட முடியாது. தூய்மையாக்குபவரே கீதையின் கடவுள், அவர் பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவர் ஆவார். நீங்கள் மகக்ளை எழுத வைக்க வேண்டிய முதலாவது விடயம் இதுவேயாகும். இது முக்கிய பிரமுகர்களினால் எழுதப்பட்டுள்ளதை மற்றவர்கள் பார்க்கும்பொழுது, இது சரியானதே என அவர்கள் உணர்வார்கள். இது ஒரு சாதாரண நபரினால் எழுதப்பட்டுள்ளதை அவர்கள் பார்த்தால், பிரம்மகுமாரிகள் அவரில் ஒரு மந்திரவித்தையைப் பிரயோகித்து விட்டார்கள் எனவும், இதனாலேயே அவர் அதனை எழுதினார் எனவும் அவர்கள் கூறுவார்கள். ஒரு முக்கிய பிரமுகரினால் அது எழுதப்பட்டிருப்பின், அவர்கள் அதனைக் கூறுவதில்லை. நீங்கள் எதனையாவது கூறும்பொழுது, உங்களுக்குச் சிறிய செல்வாக்கே உள்ளது எனவும், கடவுள் வந்து விட்டார் எனக் கூறிப் பெரிய விடயங்களைப் பேசுகிறீர்கள் என அவர்கள் கூறுவார்கள். கடவுள் வந்துவிட்டார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் வெறுமனே கூறக்கூடாது. எவரும் அதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள், சிலர் உங்களைப் பார்த்துச் சிரிக்கவும் செய்வார்கள். இரு தந்தையர்கள் உள்ளார்கள் என விளங்கப்படுத்துங்கள். எல்லாவற்றுக்கும் முதலில், உடனடியாக அவர்களுக்குக் கடவுள் வந்து விட்டார் என நேரடியாகக் கூற வேண்டாம்., ஏனெனில், இந்நாட்களில், தங்களைக் கடவுள் என அழைக்கின்ற பலர் உலகில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தங்களைக் கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு இரு தந்தையர்களின் இரகசியத்தைச் சாதுரியமாக விளங்கப்படுத்துங்கள். ஒருவர் எல்லைக்குட்பட்ட தந்தையும், மற்றவர் எல்லையற்ற தந்தையும் ஆவார். தந்தையின் பெயர் சிவன் ஆகும். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார், ஆகவே நிச்சயமாக அவர் தனது குழந்தைகளுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்க வேண்டும். மக்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கெர்ணடாடுகிறார்கள். அவர் வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். ஆகவே, நரகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். அதன் அடையாளமே மகாபாரத யுத்தம் ஆகும். கடவுள் வந்து விட்டார் என நீங்கள் வெறுமனே கூறும்பொழுது, எவரும் எதனையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் தொடர்ந்தும் முரசுகளை அடிக்கிறீர்கள். இதனைப் போன்று தவறான வழியில் சேவை செய்வதனால், சேவை மேலும் அதிகம் பின்தங்கிவிடுகிறது. ஒருபுறத்தில், கடவுள் வந்துவிட்டார் எனவும், அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார் எனவும் நீங்கள் கூறுகிறீர்கள், பின்னர் நீங்கள் சென்று திருமணம் செய்கிறீர்கள்! உங்களுக்கு என்ன நடந்தது? கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என நீங்கள் கூறினீர்கள் என மக்கள் அப்பொழுது வினவுவார்கள். நாங்கள் கேட்டதையே நாங்கள் உங்களுக்குக் கூறினோம் என அவர்கள் அப்பொழுது பதிலளிப்பார்கள். என்னுடைய சொந்தக் குழந்தைகளிடமிருந்தே பல்வேறு தடைகள் வருகின்றன. உதாரணமாக, இந்துக்கள் தங்களைத் தாங்களே அறைந்து கொண்டார்கள். உண்மையில், அவர்கள் தேவ தர்மத்துக்கு உரியவர்கள், ஆனால் அவர்கள் தாங்கள் இந்துக்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் இவ்விதமாகத் தங்களைத் தாங்களே அறைந்து கொண்டார்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தபொழுது, உங்களுக்கு ஒரு மேன்மையான தர்மம் இருந்ததுடன் மேன்மையான செயல்களையும் செய்தீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நீங்கள் உங்கள் தர்மத்திலும், செயல்களிலும் சீரழிந்தவர்கள் ஆகினீர்கள். நாங்களே மாயையின் அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதனால், எங்கள் சொந்த தர்மத்தை அவதூறு செய்ய ஆரம்பிப்பவர்கள் ஆவோம். இதனாலேயே பாபா கூறினார்: அது அசுர சமுதாயம் ஆகும். இதுவே நான் அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்ற தெய்வீக சமுதாயம் ஆகும்.. இப்பொழுது கலியுகமாகும். இந்த ஞானத்தைச் செவிமடுப்பவர்களே அசுரர்களிலிருந்து தேவர்கள் ஆகுகிறார்கள். இந்த ஞானம் தேவர்களாக ஆகுவதற்கானதாகும். ஐந்து விகாரங்களை வெல்வதனால், நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் மத்தியில் எந்த யுத்தமும் இருக்கவில்லை. அவர்கள் இத்தவறைச் செய்தார்கள், ஆனால் கடவுளைத் தங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டவர்களே வெற்றியாளர்கள் ஆகினார்கள் என அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் அதில் கிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில், உங்கள் யுத்தம் மாயையுடனேயே உள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குப் பல்வேறு விடயங்களை விளங்கப்படுத்துகிறார், ஆனால் சிலர் எதனையும் முற்றாகவே புரிந்துகொள்ளாத அளவுக்கு மிகவும் தமோபிரதானாக உள்ளார்கள். அவர்களால் தந்தையை நினைவுசெய்ய இயலாதுள்ளது. தங்கள் புத்தி தமோபிரதானாக உள்ளது எனவும், ஆகவே தங்களால் தந்தையை நினைவுசெய்ய இயலாதுள்ளது எனவும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் தவறான செயல்களைச் செய்கிறார்கள். மிகச்சிறந்த குழந்தைகள் கூடத் தந்தையை முற்றாகவே நினைவுசெய்வதில்லை. அவர்கள் முற்றாகவே தங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதில்லை! இதனாலேயே சேவைக்கான உற்சாகம் இருப்பதில்லை. தந்தை கூறுகிறார்: சரீரத்தையும், சரீர உறவினர்கள் அனைவரையும் கொல்லுங்கள்! அதாவது, அவர்கள் அனைவரையும் மறந்து விடுங்கள்! உண்மையில், கொல்லுதல் என்னும் வார்த்தை கூறப்படுவதில்லை. கூறப்பட்டுள்ளது: நீங்கள் மரணிக்கும்பொழுது, உங்களுக்கு உலகமே மரணிக்கிறது. தந்தை இங்கமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகிறார். உங்கள் புத்தியிலிருந்து அவர்களை அகற்றுங்கள். இப்பொழுது நீங்கள் எனக்குரியவர்கள், அவர்கள் அனைவரையும் மறந்துவிடுங்கள். ஒரு தந்தையை நினைவுசெய்யுங்கள். ஒருவர் தனது நோயின் பொருட்டு, ஒரு நம்பிக்கையற்றவராக இருப்பின், அவர் தனது பற்று அனைத்தையும் துண்டிக்க வேண்டும். அப்பொழுது அவருக்கு இராமரை (கடவுள்) நினைவுசெய்யுமாறு கூறப்படுகிறது. தந்தையும் கூறுகிறார்: இவ்வுலகம் முழுமையாகவே ஒரு நம்பிக்கையற்ற விடயமாகும். உலகம் அழிக்கப்படவுள்ளது. அனைவரும் மரணிக்கவுள்ளார்கள், இதனாலேயே நீங்கள் அதனுடனான உங்கள் பற்றை அகற்ற வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் இராம நாமத்தைச் செபிக்கிறார்கள். இங்கு, அது ஒருவரைப் பற்றிய கேள்வியல்ல முழு உலகமும் அழிக்கப்படவுள்ளது. இதனாலேயே நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தையே கொடுக்கிறேன்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! அவர் தொடர்ந்தும் உங்களுக்குப் பல்வேறு வித்தியாசமான வழிகளில் விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது புண்ணிய மாதம் வந்துவிட்டது, ஆகவே நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்ற, அதிமங்களகரமான யுகத்தைப் பற்றி அவர் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதில் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும். உங்களால் தெய்வீகக் குணங்கள் நன்றாகக் கிரகிக்கப்பட வேண்டும். நீங்கள் எப்பாவச் செயல்களையும் செய்யக் கூடாது. எதையாவது அனுமதியின்றி எடுப்பது அல்லது எதனையாவது அனுமதியின்றி உண்பது என்பனவும் ஒரு மறைமுகமான பாவம் ஆகும். சட்டங்கள் கடுமையானவை ஆகும். ஒருவர் ஒரு பாவத்தைச் செய்து அதனை பாபாவுக்குக் கூறாமல் விட்டால், அப்பாவம் தொடர்ந்தும் அதிகரிக்கும். இங்கு, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் புண்ணியாத்மாக்களாக ஆகவேண்டும். நான் புண்ணியாத்மாக்களை நேசிக்கிறேன், பாவாத்மாக்களை விரும்புவதில்லை. பக்தி மார்க்கத்திலும், சிறந்த செயல்களைச் செய்வதனால், அவர்கள் சிறந்த பலனைப் பெறுகிறார்கள் என்பதனை அவர்கள் அறிவார்கள். இதனாலேயே அவர்கள் தானமளித்துப் புண்ணியம் செய்வது போன்ற சிறந்த செயல்களைச் செய்கிறார்கள். இது ஒரு நாடகமாகும், இருப்பினும், அவர்கள் கடவுள் சிறந்த செயல்களின் சிறந்த பலனைத் தருகிறார் எனக் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் அமர்ந்திருந்து அவ்வியாபாரத்தைச் செய்வதில்லை. அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்துக்கேற்ப, தந்தை நிச்சயமாக வரவேண்டும். தந்தை கூறுகிறார்: நான் வந்து அனைவருக்கும் பாதையைக் காண்பிக்க வேண்டும். இதில் கருணை என்பதற்கான கேள்வியே கிடையாது. பாபா, எங்களுக்;கு உங்கள் ஆசீர்வாதங்கள் இருந்தால், நாங்கள் உங்களை ஒருபொழுதும் மறக்க மாட்டோம் எனச் சிலர் எழுதுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதோ அல்லது அவ்விதமாகக் கருணை கொள்வதோ கிடையாது. இவ்விடயங்கள் பக்தி மார்க்கத்துக்கு உரியவையாகும். உங்களில் கருணை கொள்ளுங்கள்! தந்தையை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பக்தி மார்;க்கத்தின் விடயங்கள் ஞான மார்க்கத்தில் தொடர்வதில்லை. ஞான மார்க்கம் ஒரு கல்வியாகும். ஓர் ஆசிரியர் எவர் மீதும் கருணை கொள்ள மாட்டார். ஒவ்வொருவரும் கற்க வேண்டும். தந்தை ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். ஆகவே, நீங்கள் அதனைப் பின்பற்ற வேண்டும், இல்லையா? எவ்வாறாயினும், உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதன் காரணமாக, நீங்கள் எச்சேவையையும் செய்வதில்லை. குழந்தைகள் முழுமையாகவே புண்ணியாத்மாக்களாக ஆகவேண்டும். சிறிதளவு பாவம் கூடச் செய்யப்படக்கூடாது. தாங்கள் செய்துள்ள பாவங்களைப் பற்றிச் சில குழந்தைகள் பேசுவதில்லை. தந்தை கூறுகிறார்: அவர்கள் ஒருபொழுதும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர மாட்டார்கள். நினைவுகூரப்பட்டுள்ளது: மேலேறுபவர்கள் சுவர்க்கத்தின் இனிமையைச் சுவைப்பார்கள். அந்தஸ்து மிகவும் உயர்ந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வீழ்ந்தால், உங்களால் முற்றாகப் பயனில்லை. தூய்மையின்மையின் அகங்காரமே முதலாவது இலக்கமாகும். காமம், கோபம், பற்றும் குறைந்தவை அல்ல. பேராசையும், பற்றும் முழுமையாகவே அனைத்தையும் அழிக்கின்றன. உங்களுக்கு உங்கள் குழந்தைகள் மீது பற்று இருக்கும்பொழுது, நீங்கள் தொடர்ந்தும் அவர்களை நினைவுசெய்கிறீர்கள். ஆத்மா கூறுகிறார்: என்னுடையவர் ஒரு சிவபாபாவே அன்றி, எவருமல்லர். வேறு எவரும் நினைவுசெய்யப்படாதளவுக்கு அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள். அவ்விடயங்கள் அனைத்தும் முடிவடைய வேண்டும். விநாசம் நேர்முன்னிலையில் உள்ளது. அதன்பின்னர், உங்களால் உங்கள் ஆஸ்தியைக் கோர இயலாதிருக்கும். நீங்கள் ஏன் இவ்வுலகில் பற்று வைக்க வேண்டும்? இவ்விதமாக உங்களுடன் பேசுங்கள். உங்கள் புத்தியிலிருந்து முழு உலகையும் அகற்றுங்கள். அவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. அனைத்தையும் முடித்துவிடுமாறு அத்தகைய புயல்கள் வரும். எங்கேயாவது தீப்பற்றி, அங்கு கடுமையான காற்றும் இருப்பின், அனைத்தும் மிக விரைவில் அழிக்கப்படும். அரை மணித்தியாலத்தில், 100 தொடக்கம் 150 குடிசைகள் அழிக்கப்படுகின்றன. வைக்கோற்போர் தீ மூட்டப்படவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு எவ்வாறு இம்மனிதர்கள் அனைவரும் மரணிப்பார்கள்? சிறந்த நடத்தையை உடைய சிறந்த குழந்தைகள் சிறந்த சேவையைச் செய்வார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் போதை இருக்க வேண்டும். இறுதியில் நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுது, உங்களுக்கு முழுப் போதையும் இருக்கும். எவ்வாறாயினும், அதுவரை, நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும். மக்கள் பலரும் பெனாரஸில் உள்ள சிவாலயத்துக்குச் செல்கிறார்கள், ஏனெனில் அவர் அதிமேலான கடவுள் ஆவார். அங்கு அவர்கள் பெருமளவுக்குச் சிவனைப் பூஜிக்கிறார்கள். உங்களை அங்கு சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்துமாறு பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் கூறுகிறார்: கடவுள் சிவனே, இலக்ஷ்மி நாராயணனுக்கு இந்த ஆஸ்தியைக் கொடுக்கிறார். அவர்கள் சங்கமயுகத்திலேயே அவரிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெற்றார்கள். நீங்கள் இதனை அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, நீங்கள் பிரம்மாவையும் சரஸ்வதிiயும் பற்றிய விளக்கத்தையும் உள்ளடக்க வேண்டும். எவ்வாறு அவர்கள் தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் எனப் படங்களைப் பயன்படுத்தி உங்களால் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்த முடியும். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் பக்திமார்க்கம் இருக்கவில்லை. பக்தி அநாதியாகத் தொடர்ந்து வருகிறது என அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது போதையடையுமாறு அதிகளவு ஞானத்தைப் பெற்று விட்டீர்கள்: 21 பிறவிகளுக்கான எங்கள் இராச்சிய பாக்கியத்தை எங்களுக்குக் கொடுப்பதற்குக் கடவுள் கற்பிக்கிறார். நீங்கள் மாணவர்கள் ஆவீர்கள். நம்பிக்கையுடையவர்கள் அதிசயிப்பார்கள்: யாரிடமிருந்து பிரம்மாகுமாரிகள் அனைத்தையும் செவிமடுக்கிறார்களோ, அவர் என்னவாக இருப்பார்? அவரைப் போன்று இருப்பதற்கு எங்களில் நம்பிக்கையைப் பதிய வைப்பவர் யார்? முதலில் அவர்கள் அத்தகையதொரு தந்தையை வந்து சந்திப்பதற்கு விரும்புவார்கள். அவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும்வரை, அவர்களால் முன்னேற முடியாது. நம்பிக்கையுடையவர்கள் விரைவாக ஓடுவார்கள். நாங்கள் அத்தகையதொரு தந்தையைச் சென்று சந்திப்போம். நாங்கள் அவரை விட மாட்டோம்.. பாபா, நான் இப்பொழுது உங்களுக்கு உரியவன் ஆவேன். இப்பொழுது நான் வேறெங்கும் செல்ல மாட்டேன். ஒரு பாடல் உள்ளது: நீங்கள் என்னை எதிர்த்தாலும் அல்லது நீங்கள் என்னை நிராகரித்தாலும் உங்களைப் பித்துப் பிடித்து நேசிக்கும் இவர் உங்களின் வாசற்கதவை விட்டு நீங்க மாட்டார். அனைவருமே இங்கு தங்க முடியும் என்றில்லை. நீங்கள் சேவைக்கு அனுப்பப்பட வேண்டும். வீட்டில் குடும்பத்துடன் வாழும்பொழுது, ஒரு தாமரையைப் போன்று இருங்கள். சிலர் இதனை எழுத்தில் எழுதுகிறார்கள், ஆனால் அவர்கள் வெளியே செல்லும்பொழுது அவர்கள் மாயையின் சுழலில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்! மாயை பல தடைகளை விளைவிக்கிறாள். அதத்கையதொரு சிறிய தீபத்துக்கு மாயையின் பல புயல்கள் உள்ளன! பாபா வந்து உங்களுக்கு இப்பாடல்களின் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறார். இது உங்களுடைய அதிமங்களகரமான சங்கமயுகமாகும். பக்தர்களின் புண்ணிய மாதம் கடந்து விட்டது. தந்தை கூறுகிறார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு இச்சங்கமயுகத்தில் மாத்திரமே வருகிறேன். இவ்விளக்கம் மிகவும் சிறந்ததாகும்! நாளுக்கு நாள், சேவை முன்னேறுவதற்காக, புதிய வழிமுறைகள் தொடர்ந்தும் வெளிப்படும். பல சிறந்த படங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படும். கூறப்பட்டுள்ளது: ஒரு பணிக்கு நீண்டகாலம் எடுத்தாலும், அது நன்றாக நிறைவேற்றப்படும். எவரும் உடனடியாகவே புரிந்துகொள்ளுமாறு நீங்கள் முன்னரே ஆயத்தமாகவுள்ள (சநயனல-அயனந) விடயங்களைப் பெறுகிறீர்கள். ஏணியின் படம் மிகவும்; சிறந்ததாகும். தாங்கள் தூய்மையானவர்கள் என இந்நேரத்தில் எவராலும் கூற முடியாது. சத்தியயுகம் மாத்திரமே தூய உலகம் என அழைக்கப்படுகிறது. இலக்ஷ்மியும் நாராயணனுமே தூய உலகின் அதிபதிகள் ஆவார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சிறிதளவேனும் சூட்சுமமான அல்லது வெளிப்படையான பாவம் செய்யப்படாதிருப்பதில் பெருமளவு கவனத்தைச் செலுத்துங்கள். எதனையும் இரகசியமாக எடுக்க வேண்டாம். பேராசையையும், பற்றையும் பற்றி அவதானமாக இருங்கள்.

2. உங்களை முழுமையாகவே முடித்துவிடுகின்ற தூய்மையற்ற அகங்காரத்தைத் துறவுங்கள். வேறு எவரையுமன்றி, ஒரு தந்தையை நினைவுசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
எண்ணங்களின் எந்த சூட்சும பந்தனத்திலிருந்தும் விடுபட்டிருப்பதன் மூலம் பந்தனத்திலிருந்து விடுபட்டு, உயர்ந்ததோர் ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.

எந்தளவிற்கு பந்தனத்திலிருந்து குழந்தைகள் விடுபட்டிருக்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்த்தில் ஸ்திரமாக நிலைத்திருக்க முடியும். ஆகையால் சோதித்துப் பாருங்கள்: எனது எண்ணங்களிலோ, வார்த்தைகளிலோ அல்லது செயல்களிலோ ஏதேனும் இழை இன்னமும் சூட்சும வடிவிலேனும் பற்றிக் கொண்டுள்ளதா? ஒரேயொரு தந்தையை தவிர வேறு எவரையும் நினைவு செய்ய வேண்டாம். உங்கள் சரீரத்தை நினைவு செய்தாலேனும், அப்பொழுது உங்கள் சரீரத்துடன், சரீரத்தின் உங்கள் உறவினர்களையும், உங்கள் பௌதீக உடமைகளையும் அதன் பின்னர் உலகம் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக பின்தொடரும். நான் பந்தனத்திலிருந்து விடுபட்டிருக்கின்றேன். இந்த ஆசீர்வாதங்களை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து முழு உலகையும் மாயையின் பொறியிலிருந்து விடுவிக்கின்ற சேவையை செய்யுங்கள்.

சுலோகம்:
ஆத்ம உணர்வு ஸ்திதியினால், தமது சரீரத்தினதும் மனதினதும் பிரச்சினைகளை முடிப்பவர்களால் அசைக்க முடியாதவர்களாக இருக்க முடியும்.