04.10.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    29.03.86     Om Shanti     Madhuban


இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுடன் பாப்தாதாவின் இதயபூர்வமான கலந்துரையாடல்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அனைவரையும் சூட்சும வதனத்தில் வரவழைத்து, குழந்தைகள் அனைவரினதும் சிறப்பியல்புகளைப் பார்த்தார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் விசேட ஆத்மாக்கள். இதனாலேயே நீங்கள் இப்போது தந்தைக்குச் சொந்தமாகியுள்ளீர்கள். அதாவது, நீங்கள் மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருப்பவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் விசேடமானவர்கள். அவ்வாறிருந்தும், உங்களை வரிசைக்கிரமமானவர்கள் என்றே சொல்ல முடியும். எனவே, இன்று, பாப்தாதா குறிப்பாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைப் பார்த்தார். வெவ்வேறு சம்பிரதாயங்கள், வழக்கங்கள், நம்பிக்கைகளில் இருந்து வந்திருந்தாலும், நீங்கள் குறுகிய காலத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறீர்கள். பெரும்பாலான குழந்தைகளில் பாப்தாதா குறிப்பாக இரண்டு சிறப்பியல்புகளைப் பார்க்கிறார். முதலாவது, நீங்கள் மிக விரைவாக அன்பின் உறவுமுறையால் கட்டுப்பட்டு விடுகிறீர்கள். இந்த அன்பின் உறவுமுறை, இறை குடும்பத்திற்கும் தந்தைக்கும் சொந்தம் ஆகுவதற்கு உங்களுக்கு மிகவும் உதவி செய்துள்ளது. எனவே, முதலாவது, அன்பானவர் ஆகும் சிறப்பியல்பு. இரண்டாவது, இந்த அன்பினால் நீங்கள் இலகுவாக மாற்றத்தின் சக்தியை உங்களின் நடைமுறை வாழ்க்கைகளில் ஏற்படுத்துகிறீர்கள். சுய மாற்றத்திற்கான அன்பினாலும், அத்துடன்கூடவே, உங்களைப் போன்றவர்களின் மாற்றத்திற்கான அன்பினாலும் நீங்கள் மிக நன்றாக முன்னேறுகிறீர்கள். நீங்கள் அன்பின் சக்தி, மாற்றத்திற்கான சக்தி என்ற இரண்டு சிறப்பியல்புகளையும் தைரியமாகக் கிரகித்திருப்பதுடன் அதற்கான அத்தாட்சியை மிக நன்றாகக் காட்டுகிறீர்கள்.

இன்று, பாபாவும் தாதாவும் குழந்தைகளின் சிறப்பியல்புகளைப் பற்றி சூட்சும வதனத்தில் தங்களுக்கிடையே உரையாடினார்கள். இப்போது, இந்த வருடப் பருவகாலத்தின் வியக்த் ரூபத்திலான (பௌதீகம்) அவ்யக்த சந்திப்புக்களும், சந்திப்புக்களின் மேளாக்களும் (ஒன்றுகூடல்) முடிவிற்கு வருகின்றன. எனவே, பாப்தாதா அனைவரின் பெறுபேறுகளையும் பார்த்தார். பொதுவாக, அவ்யக்த ஸ்திதியில் அவ்யக்த ரூபத்தில் எப்போதும் சந்திப்பு நிகழ்கிறது. அது எப்போதும் நிகழும். எவ்வாறாயினும், பௌதீக ரூபத்தில் சந்திப்பிற்கான நேரங்கள் குறிக்கப்பட வேண்டியுள்ளது. இதில் காலத்தின் வரையறைகளும் கருதப்பட வேண்டியுள்ளது. அவ்யக்த ரூபத்தில் சந்திப்புகளுக்கு கால வரையறைகள் கிடையாது. நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்பிய காலப்பகுதிக்கு சந்திப்பைக் கொண்டாட முடியும். அவ்யக்த சக்தியை அனுபவம் செய்வதன் மூலம், உங்களால் உங்களையும் சேவையையும் சதா முன்னேறச் செய்ய முடியும். எவ்வாறாயினும், குறிக்கப்பட்ட நேரத்திற்கேற்ப, இந்த வருடத்தின் பருவகாலம் இப்போது முடிவிற்கு வந்தாலும், நீங்கள் முடிவிற்கு வருவதில்லை. ஆனால், நீங்கள் சம்பூரணமானவர்கள் ஆகுகிறீர்கள். சந்தித்தல் என்றால் சம்பூரணமானவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் சமமானவர் ஆகுகிறீர்கள், அல்லவா? எனவே, இது முடிவு அல்ல. பருவகாலத்தின் காலம் முடிவிற்கு வந்தாலும், நீங்கள் சமமானவர்களாகவும் சம்பூரணமானவர்களாகவும் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, பாப்தாதா எங்கும் உள்ள இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அனைவரையும் சூட்சும வதனத்திற்கு அழைத்து வந்ததை இட்டு மகிழ்ச்சி அடைகிறார். சிலரால் பௌதீகமாக வரமுடியும். ஆனால் ஏனையோரால் வரமுடியாது. இதனாலேயே, நீங்கள் உங்களின் புகைப்படங்களை அல்லது கடிதங்களை அனுப்புகிறீர்கள். எவ்வாறாயினும், பாப்தாதாவால் இலகுவாக அவ்யக்த ரூபத்தில் எங்கும் இருந்து வரவழைத்து ஓர் ஒன்றுகூடலை உருவாக்க முடியும். அனைவரையும் இங்கு அழைத்து இங்கே தங்கியிருக்கும்படி கூறினால், அனைவரும் தங்கியிருப்பதற்கான வசதிகளும் தேவை. அவ்யக்த வதனத்தில், பௌதீக வசதிகளுக்கான தேவை எதுவும் இல்லை. அங்கு, நீங்கள் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளை மட்டுமன்றி, பாரதம் முழுவதிலும் உள்ள குழந்தைகளை ஒன்றுசேர்த்தாலும், அது எல்லையற்ற அவ்யக்த வதனமாகவே இருக்கும். அங்கு எத்தனை நூறாயிரக்கணக்கோர் இருந்தாலும், நீங்கள் சிறியதொரு ஒன்றுகூடலை மட்டும் பார்ப்பது போலவே இருக்கும். எனவே, இன்று, பாபா சூட்சும வதனத்தில் இரட்டை வெளிநாட்டவர்களை மட்டும் வரவழைத்தார்.

நீங்கள் வெவ்வேறு சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் உடையவர்களாக இருந்தாலும், உங்களின் திடசங்கற்பமான எண்ணங்களால் நீங்கள் மிக நன்றாக முன்னேறியிருப்பதை பாப்தாதா பார்த்தார். உங்களில் பெரும்பாலானோர் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுகிறீர்கள். ஆமாம், எப்போதும் தமது விளையாட்டுக்களைக் காட்டும் சிலர் இன்னமும் இருப்பார்கள். ஆனால் பாபா கண்ட பெறுபேற்றில், கடந்த வருடம் வரை நீங்கள் அதிகளவில் குழப்பம் அடைந்திருந்தீர்கள். எவ்வாறாயினும், இந்த வருடத்தின் பெறுபேற்றில் கடந்த வருடத்தை விடப் பல குழந்தைகள் இப்போது பலசாலிகளாக ஆகியிருப்பதை பாபா கண்டார். இன்னமும் சில குழந்தைகள் தமது விளையாட்டுக்களை பாபாவிடம் காட்டுவதையும் பாப்தாதா கண்டார். நீங்கள் இன்னமும் குழப்பம் அடையும் விளையாட்டுக்களைக் காட்டுகிறீர்கள், இல்லையா? அந்த நேரத்தில் உங்களை ஒரு வீடியோ எடுத்து, அதை அமர்ந்திருந்து பார்த்தால், அது ஒரு நாடகம் போல் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். எவ்வாறாயினும், இது முன்னர் இருந்ததை விட வேறுபட்டதாகவே இருக்கிறது. இப்போது, அனுபவசாலி ஆகியவர்களும் முதிர்ச்சி அடைகிறார்கள். எனவே, படிப்பிற்கான உங்களின் அன்பும் நினைவிற்கான உற்சாகமும் இலகுவாக வெவ்வேறு சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் மாற்றுவதை பெறுபேற்றிலே பாபா கண்டார். பாரத மக்களுக்கு மாற்றம் இலகுவாக உள்ளது. அவர்களுக்கு தேவதேவியர்களைத் தெரியும். அவர்களிடம் சமயநூல்களின் கலப்படமான ஞானம் உள்ளது. அதனால் பாரத மக்களுக்கு இந்த நம்பிக்கைகள் புதியவை இல்லை. முற்றாக, எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரிலும், இத்தகைய நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்ட ஆத்மாக்களை பாபா கண்டார். அதனால் அவர்கள் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இவ்வாறான நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருப்பவர்கள், மற்றவர்களையும் நம்பிக்கையுள்ள புத்தி உடையவர்கள் ஆக்குவதற்கு உதாரணங்கள் ஆகுகிறார்கள். உங்களின் வீடுகளில் குடும்பங்களுடன் வசிக்கும்போது, உங்களின் சக்திவாய்ந்த எண்ணங்களால் நீங்கள் உங்களின் பார்வையையும் மனோபாவத்தையும் மாற்றுகிறீர்கள். இத்தகைய விசேட இரத்தினங்களை பாபா கண்டார். முன்னர் தமது சொந்த பழக்கவழக்கங்களுக்கேற்ப தற்காலிகமான வசதிகளிலும் தற்காலிகமான சந்தோஷத்திலும் முற்றிலும் ஈடுபட்டிருந்த குழந்தைகளும் இப்போது தீவிர முயற்சியாளர்களின் வரிசையில் முன்னேறுகிறார்கள். அத்துடன் இரவு பகலாக சதா மாற்றத்தையும் ஏற்படுத்துகிறார்கள். அவர்களில் பலர் இல்லாவிட்டாலும், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். பாப்தாதா ஜாட்கு (ஓரடியில் பலி கொடுப்பவர்கள்) என்ற உதாரணத்தை வழங்குகிறார். அதேபோல், உங்களின் மனதில் துறவறத்தின் எண்ணம் ஏற்பட்டதும், உங்களின் பார்வை அதில் திரும்பிச் செல்வதில்லை. இத்தகையவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இன்று, பாபா முழுமையான பெறுபேற்றைப் பார்த்தார். சக்திசாலி ஆத்மாக்களைப் பார்த்தபோது, பாபாவும் தாதாவும் புன்னகைத்தார்கள். எவ்வாறு பிரம்மாவின் இரண்டு வகையான படைப்புகள் நினைவுகூரப்படுகின்றன என்றும் இதயபூர்வமாக உரையாடினார்கள். முதலாவது, பிரம்மாவின் வாயில் இருந்து தோன்றிய பிராமணர்கள். மற்றைய படைப்பானது, பிரம்மா தனது எண்ணங்களால் உருவாக்கிய உலகம் ஆகும். தந்தை பிரம்மா நீண்ட காலமாக மேன்மையான, சக்திவாய்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்தார். பாபா, தாதா இருவரும் இருந்தாலும், அந்தப் படைப்பை சிவனின் படைப்பு என்று அழைக்க முடியாது. நீங்கள் சிவனின் சந்ததி; என்று அழைக்கப்படுகிறீர்கள். உங்களை சிவகுமார்கள், சிவகுமாரிகள் என்று அழைக்க முடியாது. நீங்கள் பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். எனவே, பிரம்மா குறிப்பாக மேன்மையான எண்ணங்களால் உங்களை அழைத்தார். அதாவது, அவர் படைப்பை உருவாக்கினார். அதனால், தந்தை பிரம்மாவின் சக்திவாய்ந்த எண்ணங்களின் அழைப்பினூடாக நீங்கள் பௌதீக ரூபங்களில் இங்கு வந்துள்ளீர்கள்.

எண்ணங்களின் படைப்பும் சளைத்தவர்கள் இல்லை. எண்ணங்கள் சக்திவாய்ந்தவையாக இருக்க வேண்டியிருந்தன. ஏனெனில் குழந்தைகளை வெவ்வேறு திரைகளின் பின்னால் இருந்து, தொலைவில் இருந்து அவரின் குடும்பத்திற்குள் கொண்டுவர வேண்டியிருந்தது. இத்தகைய மேன்மையான, சக்திவாய்ந்த எண்ணங்கள் உங்களைத் தூண்டி, உங்களை நெருக்கமாகக் கொண்டுவந்தன. ஆகவே, சக்திவாய்ந்த எண்ணங்களினூடாக உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பும் சக்திவாய்ந்ததே. உங்களில் பலருக்கும் குறிப்பாக யாரோ உங்களின் புத்தியைத் தூண்டி, உங்களை நெருக்கமாகக் கொண்டு வரும் அனுபவம் ஏற்பட்டது. பிரம்மாவின் சக்திவாய்ந்த எண்ணங்களால், பிரம்மாவின் படத்தைப் பார்த்த உடனேயே, அது உயிர்பெற்றதைப் போல் நீங்கள் அனுபவம் செய்தீர்கள். உயிர்வாழும் உறவுமுறையை அனுபவம் செய்வதன் மூலம் நீங்கள் முன்னேறுகிறீர்கள். எனவே, படைப்பைப் பார்ப்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைந்தார். நீங்கள் இப்போது தொடர்ந்து மேலும் சக்திவாய்ந்த படைப்பின் நடைமுறை அத்தாட்சியைக் கொடுப்பீர்கள். இரட்டை வெளிநாட்டுச் சேவையின் நேரத்தைப் பொறுத்தவரை, குழந்தைப்பருவ காலம் இப்போது முடிவடைந்துவிட்டது. இது இப்போது அனுபவசாலிகள் ஆகுவதற்கும், மற்றவர்களை ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக ஆக்கி, அவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுப்பதற்கான நேரம் ஆகும். விளையாட்டுக்களை விளையாடுவதற்கான நேரம் இப்போது முடிவடைந்துவிட்டது. இப்போது சதா சக்திசாலிகள் ஆகித் தொடர்ந்து பலவீனமான ஆத்மாக்களைச் சக்திசாலிகள் ஆக்குங்கள். உங்களிடம் பலவீனமான சம்ஸ்காரங்கள் இருந்தால், நீங்கள் மற்றவர்களையும் பலவீனமாக ஆக்குவீர்கள். சிறிதளவு நேரமே உள்ளது. அதிகபட்சமான படைப்பு வரவுள்ளது. இப்போது பலர் இருக்கிறார்கள் என நினைத்து இந்த எண்ணிக்கையைப் பார்த்து சந்தோஷப்படாதீர்கள். இப்போதே எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது. எவ்வாறாயினும், நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரமும், உங்களின் பராமரிப்பிற்கான வழிமுறையும் இப்போது மாறப் போகின்றன.

பொன்விழா கொண்டாடுபவர்களுக்கும் வெள்ளி விழாக் கொண்டாடுபவர்களுக்கும் இடையே 50 வருடப் பராமரிப்பிற்கான வேறுபாடு உள்ளது. அதேபோல், பிந்தி வருபவர்களுக்கும் இவ்வாறான வேறுபாடு காணப்படும். எனவே, குறுகிய காலத்தில் அவர்களைச் சக்திசாலிகள் ஆக்குங்கள். ஆமாம், அவர்களின் சொந்த மேன்மையான உணர்வுகளும் காணப்படும். எவ்வாறாயினும், நீங்களும் உங்களின் உறவுமுறைகளாலும் தொடர்புகளாலும் குறுகிய காலத்திற்குள் அவர்கள் முன்னேறுவதற்கு உதவி செய்ய வேண்டும். அதனால் அவர்களுக்கு முன்னேறுவதற்கான உற்சாகமும் தைரியமும் இலகுவாக ஏற்படும். இந்தச் சேவை இப்போது அதிகளவில் அதிகரிக்கப் போகிறது. உங்களுக்காக மட்டும் சக்தியைச் சேமிப்பதற்கான நேரம் இதுவல்ல. ஏனென்றால், உங்களுக்கான சக்தியுடன் கூடவே, மற்றவர்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுப்பதற்காகவும் நீங்கள் மற்றவர்களுக்காகவும் அதிகளவு சக்தியைச் சேமிக்க வேண்டும். ஒத்துழைப்பை எடுப்பவர்களாக மட்டும் நீங்கள் ஆகக்கூடாது. ஆனால் ஒத்துழைப்பைக் கொடுப்பவர்களாகவும் ஆகவேண்டும். இங்கு ஏற்கனவே இரண்டு வருடங்கள் இருப்பவர்களுக்கு, அந்த இரண்டு வருடங்கள் என்பது சிறிய விடயமல்ல. நீங்கள் அனைத்தையும் குறுகிய காலத்திற்குள் அனுபவம் செய்ய வேண்டும். கல்ப விருட்சத்தின் படத்தில், இறுதியில் வருகின்ற ஆத்மாக்களும் நிச்சயமாக நான்கு நிலைகளுக்கூடாகவும் கடந்து செல்ல வேண்டும் என்பதை நீங்கள் காட்டுகிறீர்கள். அவர்கள் 10 இலிருந்து 12 பிறப்புக்கள் எடுத்தாலென்ன அல்லது எத்தனை பிறப்புக்கள் எடுத்தாலும் அவர்கள் அனைவருக்கும் அவ்வாறே இருக்கும். எனவே, இறுதியில் வருகின்றவர்களும் குறுகிய காலத்திற்குள் சகல சக்திகளையும் அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் மாணவ வாழ்க்கையையும் அனுபவம் செய்ய வேண்டும். அதேவேளை ஒரு சேவையாளராகவும் இருக்க வேண்டும். சேவையாளர்கள் வெறுமனே பாடநெறிகளைக் கொடுப்பவர்களும் சொற்பொழிவு ஆற்றுபவர்களும் அல்ல. ஒரு சேவையாளர் என்றால், சதா ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் ஒத்துழைப்பைக் கொடுப்பவர்கள். மற்றவர்களைச் சக்திசாலிகள் ஆக்குவதில் ஒத்துழைப்பவர்கள். நீங்கள் குறுகிய காலத்திற்குள் சகல பாடங்களிலும் சித்தி எய்த வேண்டும். இத்தகைய துரித கதியில் நீங்கள் அனைத்தையும் செய்தால் மட்டுமே உங்களால் உங்களின் இலக்கைச் சென்றடைய முடியும். ஆகவே, நீங்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் ஒருவரோடு ஒருவர் யோகம் செய்யக்கூடாது. ஒருவரோடு ஒருவர் யோகம் செய்ய ஆரம்பிக்காதீர்கள். சதா ஒத்துழைப்பைக் கொடுப்பதன் மூலம், ஓர் ஒத்துழைக்கும் ஆத்மா மற்றவர்களைத் தந்தைக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து அவர்களைச் சமமானவர்கள் ஆக்குவார். நீங்கள் மற்றவர்களை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கக்கூடாது. ஆனால் தந்தைக்குச் சமமானவர்கள் ஆக்க வேண்டும். உங்களின் பலவீனங்கள் அனைத்தையும் இங்கேயே விட்டுவிடுங்கள். அவற்றை உங்களுடன் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் சக்திவாய்ந்த ஆத்மாக்களாகி, மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்க வேண்டும். இந்தத் திடசங்கற்பமான எண்ணம் சதா உங்களின் விழிப்புணர்வில் இருக்க வேண்டும். அச்சா.

பாபா குறிப்பாக எங்கும் உள்ள குழந்தைகளுக்கும் அன்பு நிறைந்த நினைவுகளை வழங்குகிறார். சதா அன்பான, ஒத்துழைக்கும், சக்திநிறைந்த மேன்மையான ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பல்வகைகள் இருந்தாலும் நீங்கள் அனைவரும் இப்போது ஒரேயொருவருக்கே சொந்தமானவர்கள் என்ற சந்தோஷம் உங்கள் அனைவருக்கும் உள்ளதல்லவா? இப்போது வெவ்வேறு வழிகாட்டல்கள் இல்லை. நீங்கள் இறைவனின் வழிகாட்டல்களைப் பின்பற்றும் மேன்மையான ஆத்மாக்கள். பிராமணர்களின் மொழி ஒன்றே. நீங்கள் ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். ஒரேயொரு தந்தையின் ஞானத்தை நீங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களையும் தந்தைக்குச் சொந்தமானவர்கள் ஆக்க வேண்டும். இது ஒரு பெரிய, மேன்மையான குடும்பம். நீங்கள் எங்கே சென்றாலும், எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கு வீட்டில் இருக்கும் போதை உங்களுக்கு ஏற்படுகிறது. சேவை நிலையம் என்றால் உங்களின் வீடு என்று அர்த்தம். இத்தனை வீடுகளைக் கொண்டிருப்பவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. உங்களுக்குப் பழக்கமானவர்கள் எங்கே இருக்கிறார்கள் என யாராவது உங்களிடம் கேட்டால், அவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்றே நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் எங்கே சென்றாலும், அங்கே உங்களின் குடும்பம் இருக்கும். எல்லையற்றதன் உரிமை உங்களிடம் உள்ளது. நீங்கள் சேவையாளர்கள் ஆகியுள்ளீர்கள். ஒரு சேவையாளர் ஆகுவதென்றால், சகல உரிமைகளையும் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். உங்களிடம் இந்த எல்லையற்ற, ஆன்மீக சந்தோஷம் உள்ளது. இப்போது, ஒவ்வோர் இடமும் சக்திவாய்ந்த ஸ்திதியுடன் வளருகிறது. முதலில் இதற்குச் சிறிதளவு முயற்சி தேவைப்பட்டது. பின்னர், சில உதாரணங்கள் உருவாகியதும், அவர்களைப் பார்க்கும் மற்றவர்களும் தொடர்ந்து முன்னேறுகிறார்கள்.

இந்த மேன்மையான எண்ணத்தைப் பற்றி பாப்தாதா மீண்டும் மீண்டும் குழந்தைகளான உங்களுக்கு நினைவூட்டுகிறார். நினைவு செய்வதற்கும் சேவை செய்வதற்கும் நீங்கள் சதா ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேண வேண்டும். தொடர்ந்து சந்தோஷத்துடன் துரித கதியில் முன்னேற வேண்டும். அத்துடன் மற்றவர்களையும் அதேபோல் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறச் செய்ய வேண்டும். இங்கு பௌதீகமாக வர முடியாத, எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரிடமிருந்தும் பாபா புகைப்படங்களையும் கடிதங்களையும் பெற்றுள்ளார். அனைவருக்கும் பதிலளிக்கும் முகமாக, பாப்தாதா அனைவருக்கும் பலமில்லியன்மடங்கு அன்பையும் நினைவுகளையும் இதயபூர்வமாக வழங்குகிறார். இப்போது உங்களிடம் எவ்வளவு ஊக்கமும் உற்சாகமும் உள்ளனவோ, அவற்றைப் பலமில்லியன் மடங்காக அதிகரியுங்கள். சிலர் தமது பலவீனங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்கள். எனவே பாப்தாதா அவர்களுக்குக் கூறுகிறார்: பாபாவிற்கு எழுதுவது என்றால், அவற்றை பாபாவிடம் கொடுத்தல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் கொடுத்துவிட்ட எதையும் உங்களுடன் வைத்திருக்காதீர்கள். உங்களின் பலவீனங்களை ஒரு தடவை கொடுத்துவிட்டால், உங்களின் எண்ணங்களிலேனும் அவற்றை மீண்டும் நினைக்காதீர்கள். மூன்றாவதாக, உங்களின் சம்ஸ்காரங்களால், ஒன்றுகூடலின் சம்ஸ்காரங்களால் அல்லது சூழலின் எந்தவிதமான குழப்பத்தாலும் ஒருபோதும் மனச்சோர்வு அடையாதீர்கள். எப்போதும் தந்தை உங்களுடன் ஒன்றிணைந்திருக்கிறார் என்பதை அனுபவம் செய்யுங்கள். மனச்சோர்வில் இருந்து சக்திசாலியாகி, தொடர்ந்து முன்னால் பறந்து செல்லுங்கள். கர்மக்கணக்குகள் தீர்க்கப்பட்டதும், சுமைகள் நீக்கப்பட்டுவிட்டன என்பதே அதன் அர்த்தம். கடந்த காலத்தின் சுமைகளைத் தொடர்ந்து சந்தோஷத்துடன் எரியுங்கள். பாப்தாதா எப்போதும் குழந்தைகளான உங்களுடன் ஒத்துழைக்கிறார். அதிகம் சிந்திக்காதீர்கள். வீணான எண்ணங்களும் உங்களைப் பலவீனமானவர்கள் ஆக்கிவிடும். உங்களுக்குள் அதிகளவு வீணான எண்ணங்கள் இருந்தால், ஒரு முரளியை இரண்டிலிருந்து நான்கு தடவைகள் படியுங்கள். அதைக் கடையுங்கள். அதைத் தொடர்ந்து படியுங்கள். ஏதாவதொரு கருத்து உங்களின் புத்தியில் தங்கும். தூய எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம் தொடர்ந்து சக்தியைச் சேமியுங்கள். வீணானவை முடிந்துவிடும். உங்களுக்குப் புரிகிறதா?

பாப்தாதாவிடமிருந்து விசேடமான தூண்டுதல்கள்.

வெளிநாடுகளோ அல்லது இந்தத் தேசமோ, எங்கும் பல சிறிய இடங்கள் உள்ளன. தற்காலத்திற்கேற்ப, அவை சாதாரணமாக உள்ளன. ஆனால் குழந்தைகள் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியுள்ளார்கள். தமது சார்பாகக் கருவி குழந்தைகளை அங்கு ஒரு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்ல வேண்டும் என நீண்ட காலமாக விரும்பியிருந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆசைகள் நிறைவேறவில்லை. பாப்தாதா அந்த ஆசையை நிறைவேற்றுகிறார். மகாராத்திக் குழந்தைகளுக்காக விசேடமான திட்டங்களைச் செய்யுங்கள். அவர்கள் மற்றவர்களில் நம்பிக்கைத் தீபங்களை ஏற்றுவதற்கு அங்கு செல்ல முடியும். பாப்தாதா நம்பிக்கைத் தீபங்களை விழித்தெழச் செய்வதற்கு விசேடமான நேரத்தைக் கொடுக்கிறார். மகாராத்திக் குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வெவ்வேறு பிரதேசங்களுக்குச் செல்வதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். காலத்தின் காரணமாக இங்கு வரமுடியாத கிராமங்களில் உள்ள குழந்தைகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் பிரதானமான இடங்களுக்குச் செல்கிறீர்கள். ஏனென்றால் அவர்கள் பெரிய நிகழ்ச்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் சிறிய இடங்களில் அவர்களின் கொள்ளளவிற்கேற்ப அவர்கள் செய்யும் நிகழ்ச்சிகள் அவர்களுக்குப் பெரிய நிகழ்ச்சிகளே. அவர்களின் பாவனா (அன்பான உணர்வுகள்) அவர்களின் மிகப் பெரிய விழாவாகும். நீண்ட காலமாக இத்தகைய பல குழந்தைகளின் வேண்டுகோளின் கோப்பு (பைல்) ஒன்று பாப்தாதாவிடம் உள்ளது. பாப்தாதா இந்த கோப்பை பூர்த்திசெய்ய விரும்புகிறார். பாபா மகாராத்திக் குழந்தைகளுக்கு உலகை ஆட்சி செய்பவர்கள் ஆகுவதற்கான ஒரு விசேட வாய்ப்பை வழங்குகிறார். எனவே, தாதியே எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும் எனக் கூறாதீர்கள். ஒரு தாதி எங்கும் செல்ல வேண்டியிருந்தால், அதற்கு ஐந்து வருடங்கள் செல்லும். பாப்தாதா ஐந்து வருடங்களுக்கு வராவிட்டால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? பாப்தாதாவின் சந்திப்பு இங்கே மதுவனத்தில் நிகழும்போது, தாதி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தால் அது நன்றாக இருக்காது. எனவே, மகாராத்திகளுக்கு ஒரு நிகழ்ச்சியை உருவாக்குங்கள். எவரும் இதுவரை சென்றிராத இடங்களுக்குச் செல்வதற்காக ஒரு நிகழ்ச்சியைத் தயார் செய்யுங்கள். இந்த வருடம், நீங்கள் எங்கே சென்றாலும், குறிப்பாக ஒரு நாள் பொதுமக்களுக்குச் சேவை செய்யுங்கள். இன்னொரு நாள் பிராமணர்களுக்கு ஒரு தபஸ்யா நிகழ்ச்சியைச் செய்யுங்கள். பொது நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டு, திரும்பி ஓடி வராதீர்கள். எந்தளவிற்கு சாத்தியமோ, அந்தளவிற்கு அவர்களுக்கு விசேடமான புத்துணர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை உருவாக்குங்கள். இத்துடன்கூடவே, விஐபி களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளும் வைக்கலாம். ஆனால் அவை குறுகிய நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும். பிராமணர்கள் ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் சக்தியைப் பெறுவதுடன், தடைகளில் இருந்து விடுபட்டவர் ஆகுவதற்கு தைரியத்தாலும் உற்சாகத்தாலும் நிரம்பக்கூடிய வகையில் நிகழ்ச்சிகளைச் செய்யுங்கள். எனவே, எங்கும் சுற்றுப்பயணம் செய்வதற்காக நிகழ்ச்சியைத் தயாரிப்பதற்கான நேரத்தை பாபா உங்களுக்கு வழங்குகிறார். ஏனென்றால், நேரத்திற்கேற்ப, சூழ்நிலைகள் மாறுகின்றன. தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். ஆகவே, இந்த கோப்பை இப்போது முடியுங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் மேன்மையான ஆன்மீக ஸ்திதியால் சூழலை ஆன்மீகமானதாக்கும் இலகு முயற்சியாளர் ஆகுவீர்களாக.

உங்களின் ஆன்மீக ஸ்திதியால், உங்களின் சேவை இடத்தின் சூழலை ஆன்மீகம் ஆக்குங்கள். அப்போது, உங்களுக்கும் வரவுள்ள ஆத்மாக்களுக்கும் இலகுவாக முன்னேற்றம் ஏற்படும். இது ஏனென்றால், வருகின்ற அனைவரும் வெளியிலுள்ள சூழலால் களைப்படைந்துள்ளார்கள். அவர்களுக்கு மேலதிகமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஆகவே, ஆன்மீக சூழலால் அவர்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுங்கள். வருகின்ற ஒவ்வோர் ஆத்மாவும் தாம் இலகுவாக முன்னேறக்கூடிய இடமாக இதை அனுபவம் செய்ய வேண்டும்.

சுலோகம்:
ஆசீர்வாதங்களை அருள்பவராகி, தொடர்ந்து நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் ஆசீர்வாதங்களாக வழங்குங்கள்.