04.10.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்வதற்கு, பல்வேறு வழிமுறைகளை உருவாக்குங்கள். முயற்சி செய்வதுடன், உங்கள் அட்டவணையையும் வைத்திருங்கள். களைப்படையாதீர்கள். புயல்களின்பொழுது, அசைக்க முடியாதவராக இருங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஒருவருடனொருவர்; பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவங்கள் எவை?

பதில்:
1. எவ்வளவு நேரம் தந்தையை நினைவுசெய்கிறீர்கள் என்பதையும், எவ்வாறு அவரை நினைவுசெய்கின்றீர்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உணவு உண்ணும் வேளையில், நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்களா அல்லது ஏனைய பல எண்ணங்கள் உங்களுக்கு உள்ளனவா? பாபா கூறுகிறார்: குழந்தைகளே, இதை முயற்சித்துப் பாருங்கள். உணவு உண்ணும் வேளைகளில், நீங்கள் தந்தையைத் தவிர வேறு எவரையேனும் நினைவுசெய்கிறீர்களா? அவ்வாறாயின், உங்கள் மத்தியில் உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 2. பயங்கரமான காட்சிகளைப் பார்க்கும்பொழுது, உங்கள் ஸ்திதி எவ்வாறுள்ளது என்பது பற்றிய உங்கள் அனுபவங்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பாடல்:
உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எது கூறினாலும் பரவாயில்லை.

ஓம் சாந்தி.
எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பவராகிய எல்லையற்ற தந்தையையும், அரைக்கல்பமாக நீங்கள் நினைவுசெய்து வருபவரையும், இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு மறக்க முடியும்? மனிதர்களை ஒருபொழுதும் கடவுள் என அழைக்க முடியாது என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டு விட்டீர்கள், அவரை நினைவுசெய்வதால் நீங்கள் பெறுகின்ற நன்மை அற்புதமானது. தூய்மையாக்குபவரான தந்தையை நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகத் தொடர்ந்தும் தூய்மையாகுவீர்கள். நீங்கள் தற்பொழுது தூய்மையாக இருக்கின்றீர்கள் என உங்களால் கூறமுடியாது; இறுதிவரை உங்களால் இவ்வாறு கூற முடியாது. நீங்கள் முழுமையாகத் தூய்மையாகும்பொழுது, சரீரங்களை நீக்கி, முற்றிலும் தூய சரீரங்களை எடுப்;பீர்கள். சத்திய யுகத்தில் புதிய சரீரங்களைப் பெற்றதும், அவை சம்பூரணமானவையாக இருக்கும். அப்பொழுது இராவணன் முடிவடைந்திருப்பான். சத்தியயுகத்தில் இராவணனின் கொடும்பாவிகள் உருவாக்கப்படுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்திருந்தாலும், உலாவித் திரிந்தாலும், இப்பொழுது 84 பிறவிச் சக்கரத்தைப் பூர்த்திசெய்து விட்டீர்கள் என்றும், புதிய சக்கரம் ஆரம்பிக்க உள்ளது என்பதும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அது தூய்மையான, புதிய உலகான புதிய பாரதமும், புது டெல்கியும் ஆகும். முதலில் யமுனை ஆற்றங்கரையிலேயே தேவதைகளின் உலகம் உருவாக்கப்பட்டது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைத்திற்கும் முதலில் நீங்கள் தந்தையையே நினைவுசெய்ய வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தையாகிய கடவுளே, உங்களுக்குக் கற்பிக்கிறார். அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். நீங்கள் இதை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் குட்டிக்கரணம் போடுகிறீர்கள் என்பதையும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார். பல்வேறு குலங்களின் படமும் மிகவும் முக்கியமானது. சிவபாபாவே அதிமேலானவர், பின்னர் பிராமணர்களது உச்சிக்குடுமி உள்ளது. பாபா உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துவதற்காக, இதை உங்களுக்குக் கூறுகின்றார். சரி. நீங்கள் 84 பிறவிகளின் குட்டிக்கரணத்தைப் போடுகிறீர்கள் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இப்பொழுது இது சங்கமயுகமாகும். தந்தை இங்கு அதிகக் காலத்திற்கு இருப்பதில்லை. இருப்பினும் அதற்கு ஏறத்தாழ 100 வருடங்கள் எடுக்கிறது. குழப்பங்கள் முடிவடைந்தவுடன், இராச்சியம் ஆரம்பிக்கிறது. எல்லையற்ற சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்ற, அம் மகாபாரத யுத்தம் இதுவேயாகும். உங்களது திறமைகள் அற்புதமானவை. சமயப் பக்கிரிகள் எவ்வாறு தங்கள் திறமைகளைக் (குட்டிக்கரணம்) காட்டியவாறு யாத்திரை செல்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால், அவர்களுக்கு ஏதோவொன்றைக் கொடுக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்தும் அவர்கள் பராமரிக்கின்றனர், இல்லையேல், வேறு எதனை அம்மக்கள் தம்முடன் சுமந்து செல்வார்கள்? பாபா இவ்விடயங்கள் அனைத்திலும் அனுபவசாலியாவார். பாபா அனுபவம் வாய்ந்த இரதத்தையே எடுத்துள்ளார். இவர் பல குருமார்களைக் கொண்டிருந்தார். அவர் பலவற்றைப் பார்த்திருப்பதுடன், பல யாத்திரைகளும் சென்றுள்ளார். பாபா கூறுகிறார்: உங்களால் குட்டிக்கரணத்தை நினைவில் வைத்திருக்க முடியும். இப்பொழுது நாங்கள் பிராமணர்கள், பின்னர் தேவர்களாகி, அதன்பின்னர்; சத்திரியர்கள் ஆகுவோம். இவை அனைத்தும் பாரதத்தையே குறிக்கின்றன. ஏனைய சமயங்கள் அனைத்தும் துணைக் கதைகள் போன்றவையே எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை உங்களது 84 பிறவிகளின் கதையை உங்களுக்குக் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் வரும்பொழுது, அவர்கள் சராசரியாக எத்தனை பிறவிகளை எடுப்பார்கள் என்பதை விவேகிகளால் கணக்கிட்டுப் புரிந்துகொள்ள முடியும். துல்லியமான கணக்கிற்கு அவசியம் இல்லை. இவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்வதே, உங்களுக்கு இருக்க வேண்டிய பெரும் கவலை ஆகும். இந்த ஒரு கவலையே உங்களுக்கு உள்ளது: ஒரேயொருவரையே நினைவுசெய்தல் வேண்டும். மாயை மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஏனைய பல கவலைகளைக் கொண்டு வருகிறாள். இங்கு மாயை உங்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறாள். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தங்களது இனிய வீட்டை யார் நினைவுசெய்யாமல் இருப்பார்கள்? அவர்கள் அமைதியை அருள்பவரிடமிருந்து அமைதியை வேண்டுகிறார்கள். அவர்கள் கடவுளிடம் அமைதியை வேண்டுகிறார்கள். இப்பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது உங்கள் புத்தியில் உள்ளது, ஆனால் ஏனைய மனிதர்கள் அனைவரும் காரிருளில் உள்ளனர். சத்தியயுகத்தில் மாத்திரமே அமைதி நிலவுகின்றது: அங்கு ஒரே தர்மமும், ஒரே மொழியும், ஒரே சம்பிரதாயமுமே இருக்கும். அது அமைதி இராச்சியம் ஆகும். அங்கு பிரிவினைகள் என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு சதோபிரதானான, ஒரேயொரு இராச்சியமே உள்ளது. யுத்தத்தை உருவாக்கும் இராவண இராச்சியம் அங்கு இருக்க மாட்டாது. ஆகவே குழந்தைகளான உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர வேண்டும். சமயநூல்களில் நினைவுகூரப்பட்டுள்ளது: அதீந்திரிய சுகத்தைப் பற்றிக் கோப, கோபியர்களிடம் வினவுங்கள். நீங்களே கோபர்களும், கோபிகைகளும் ஆவீர்கள். நீங்கள் இங்கே நேரடியே அமர்ந்துள்ளீர்கள். பாபாவே எங்கள் பாபாவும், ஆசிரியரும், எங்கள் குருவும் என்பதை நினைவுசெய்வதில் நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். இது ஓர் அற்புதம்! அவர் வாழ்நாள் முழுவதும் உங்கள் சகபாடி. அவர் உங்களைத் தத்தெடுத்ததும், கல்வி ஆரம்பிக்கிறது. இந்தளவை நினைவுசெய்தாலுமே, உங்களால்; பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியும். இருப்பினும்; மாயை உங்களை இதையும் மறக்கச் செய்கிறாள். இது இன்னமும் மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட வேண்டும். சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என மக்கள் உங்களிடம் வினவுகின்றனர். அவர்களிடம் கூறுங்கள்: பாருங்கள், இங்கே எழுதப்பட்டுள்ளது: இவை கடவுளின் வாசகங்கள். ஒரு யாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஞான யாகம் ஆகும். கிருஷ்ணரால் யாகத்தை உருவாக்க முடியாது. நாங்களே இந்த எல்லையற்ற யாகத்தின் பிராமணர்கள் என்பது குழந்தைகளான உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். பாபா எங்களைக் கருவிகளாக்கியுள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஞானத்தையும், யோகத்தையும் நன்றாகக் கிரகித்து, சம்பூரணமும், முழுமையும் அடையும்பொழுது, இவ் வைக்கோற் போர் எரியூட்டப்படும். இதுவே அனைவரும் வந்து, தங்கள் பாகங்களை நடிக்கின்ற, ஓர் எல்லையற்ற கர்ம ஷேத்திரம் என்பதை மனிதர்கள் அறிந்துள்ளனர். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதே மீண்டும் இடம்பெறுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகள் அறியாதவற்றைப் பற்றி மாத்திரமே கவலைப்படுகின்றனர். நடைபெற்றவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதால், நீங்கள் அதனையிட்டு ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள் ஒரு நாடகத்தைப் பார்க்கின்றோம். மக்கள் நாடகத்தில் (திரைப்படத்தில்) ஒரு துன்பமான காட்சியைப் பார்க்கும்பொழுது, அழுகின்றனர். அது செயற்கையான நாடகமும், ஆனால் இது உண்மையான நாடகமும் ஆகும். மக்கள் தொடர்ந்தும் கூறுகின்றனர்: அது உண்மை! அது உண்மை! எவ்வாறாயினும் நீங்கள் துன்பக் கண்ணீர் சிந்தக்;கூடாது. நீங்கள் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளர்களாக இருந்து பார்வையிட வேண்டு;ம். இது ஒரு நாடகம் என்பதால் இதையிட்டு அழுவதற்கு என்ன இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். கடந்தது கடந்து விட்டது! நீங்கள் அதனைப் பற்றி ஒருபொழுதும் சிந்திக்கவும் கூடாது. தொடர்ந்தும் முன்னேறிச் செல்வதுடன், தந்தையையும் நினைவுசெய்வதோடு, அனைவருக்கும் பாதையையும் காட்டுங்கள். பாபா தொடர்ந்தும் உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். உங்களிடம் திரிமூர்த்தியின் பல படங்கள் உள்ளன. அவர் சிவபாபா எனவும், இது நீங்கள் அவரிடமிருந்து பெறுகின்ற ஆஸ்தி என்பதும் மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்படங்களைப் பார்க்கும்பொழுது, பெருமளவு சந்தோஷமடைய வேண்டும். நாங்கள் பாபாவிடமிருந்து விஷ்ணு தாமத்தின் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறோம். பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. இப்படங்களை உங்கள் முன்னால் வைத்திருங்கள். அதில் செலவு எதுவும் இல்லை. விருட்சத்தின் படமும் மிகவும் சிறந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து, ஞானக்கடலைக் கடையுங்கள். நீங்களே உங்களுடைய சொந்த ஆசிரியராகிக் கற்றிடுங்கள். அனைவரும் புத்தியைக் கொண்டிருக்கின்றனர். இப்படங்களை உங்கள் வீடுகளில் வைத்திருங்கள். ஒவ்வொரு படமும் முதற்தரமான ஞானத்தைக் கொண்டுள்ளது. 'விநாசம் இடம்பெறும்" என்று கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஏற்கெனவே தந்தை மீது உங்களுக்கு அன்புள்ளது, இல்லையா? சிவபாபா முகவராகி, எங்களை நிச்சயம் செய்கிறார். இப்பொழுது நீங்கள் முகவர் (பிரம்மா) வடிவில் சற்குருவைக் கண்டுள்ளீர்கள், நீங்கள் புரிந்துகொள்வதற்கும், ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்கும் பல நல்ல விடயங்களையும் பெற்றுள்ளீர்கள். இருப்பினும், மாயையின் பெருமளவு பகட்டும் இருக்கிறது. 100 வருடங்களுக்கு முன்னர் மின்சாரம், எரிவாயு போன்றவை இருக்கவில்லை. ஆரம்ப காலத்தில், அரச பிரதிநிதிகள் போன்றோர்; நான்கு அல்லது எட்டுக் குதிரைகளால் இழுக்கப்படுகின்ற, வண்டிகளிலேயே பயணிப்;பார்கள். முன்னர் செல்வந்தர்கள் காரில் (மோட்டார் வண்டி) பயணிப்பது வழக்கம். இப்பொழுது விமானங்கள் போன்றன உள்ளன. முன்னர் இவ்விடயங்கள் எதுவும் இருக்கவில்லை. கடந்த 100 வருடங்களில் என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன எனப் பாருங்கள். இதுவே சுவர்க்கம் என மக்கள் எண்ணுகின்றனர். சுவர்க்கம் சுவர்க்கமே என்பதையும், ஆனால் இங்குள்ள அனைத்தும் சதப் பெறுமதியே வாய்ந்தது என்பதையும் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இவை அனைத்தும் செயற்கையான பகட்டு என அழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களிடம் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்வதற்கான அக்கறை மாத்திரமே இருக்க வேண்டும். இதிலேயே மாயை தடைகளை உருவாக்குகின்றாள். பாபா உணவு உண்ணும்பொழுது, தனக்கு ஏற்படுகின்ற, தனது சொந்த உதாரணத்தை கூறுகிறார்: நான் நினைவில் உண்பதற்குப் பெருமளவு முயற்சி செய்கிறேன், ஆனால் அப்படியிருந்தும், நான் பாபாவை மறக்கிறேன். ஆகவே குழந்தைகளாகிய உங்களுக்கு அதற்கு எவ்வளவு முயற்சி தேவை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். சரி, குழந்தைகளே, அதனை நீங்களே செய்து பாருங்கள்! பாபாவின் நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எந்நேரமும் நினைவில் நிலைத்திருக்க முடிகிறதா என உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்கள் அனுபவங்களை நீங்கள் கூற வேண்டும். பாபா, நான் பல்வேறு விடயங்களை நினைவுசெய்வதால், என்னால் எல்லா நேரமும் நினைவில் நிலைத்திருக்க முடிவதில்லை. பாபாவே தனது சொந்த அனுபவத்தைக் கூறுகிறார். பாபா பிரவேசித்துள்ள இவரும் முயற்சியாளரே, அத்துடன் இவர் பல பொறுப்புக்களையும் கொண்டிருக்கிறார். முக்கியஸ்தராக அறியப்படுதல் என்பதன் அர்த்தம் அதிகளவு துன்பங்களைப் பெற்றுக் கொள்வது என்பதாகும். பாபா அதிகளவு செய்திகளைப் பெறுகிறார். அவர்கள் விகாரத்திற்காகப் பெண்களை அதிகளவில் அடிக்கின்றனர். அவர்களை வீட்டிலிருந்தும் அவர்கள் விரட்டி விடுகின்றனர். புதல்விகள் கூறுகின்றனர்: நான் கடவுளிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளேன். அவர்களுக்குப் பல்வேறு தடைகள் உள்ளன. எவருக்கும் எவ்விதமான அமைதியும் இல்லை. இப்பொழுது முயற்சி செய்து ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், உங்களால் அமைதியாக இருக்க முடியும் எனும் உத்தரவாதம் குழந்தைகளான உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, மிகவும் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ்கின்ற அத்தகைய பல குடும்பங்களை பாபா பார்த்துள்ளார். அவர்கள் அனைவரும் தங்கள் மூத்தோரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் கூறுகிறார்கள்;: நாம் சுவர்க்கத்தில் இருப்பதைப் போலுள்ளது. சகல விதமான சந்தோஷங்களும் நிறைந்த, அத்தகையதொரு சுவர்க்கத்திற்கே பாபா இப்பொழுது உங்களை அழைத்துச் செல்கிறார். தேவர்களுக்கு 36 வகையான உணவுகள் படைக்கப்;படுவதாக நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அங்கு, நீங்கள் மிகவும் சுவையான உணவை உண்பதுடன், தூய்மையாகவும் இருப்பீர்கள். நீங்கள் இப்பொழுது அவ்வுலகிற்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள்;. அரசர், அரசி, பிரஜைகளிற்கிடையே ஒரு வேறுபாடு காணப்படும். முன்னர், அரச குடும்பத்தவர்கள் பெரும் ஆடம்பரத்துடன் வாழ்ந்தார்கள். இருப்பினும் அவர்கள் தூய்மை அற்றவர்களாகவும், இராவண இராச்சியத்திலும் இருந்தனர். எனவே, சத்தியயுகத்தில் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் எனச் சிந்தித்துப் பாருங்கள்! இலக்ஷ்மி நாராயணனின் படம் உங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கிருஷ்ணரைப் பற்றிப் பொய்யான விடயங்களை எழுதி, அவரை அவதூறு செய்துள்ளார்கள். பொய்யென்றால் பொய்யே; அதில் எள்ளளவும் உண்மை கிடையாது. நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதையும், 84 பிறவிகள் எடுக்கும்பொழுது, உங்கள் புத்தி முற்றாகவே சூத்திரருடையதைப் போலாகி விட்டது என்பதையும் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். உங்கள் நிலைமை என்னவாகி விட்டது எனப் பாருங்கள்! முயற்சி செய்வதனால், இப்பொழுது நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள்? நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் என பாபா உங்களை வினவுகின்றார். சூரிய வம்சத்தினர் ஆகவேண்டும் என்பதற்கே நீங்கள் அனைவரும் உங்கள் கைகளை உயர்த்துகிறீர்கள்: நாங்கள் தாயையும் தந்தையும் முழுமையாகப் பின்பற்றுவோம். நாம் அதனை விடவும் குறைவான முயற்சியைச் செய்ய மாட்டோம். நினைவுசெய்வதிலும், மற்றவர்களை உங்களுக்குச் சமமாக்குவதிலுமே அனைத்து முயற்சியும் உள்ளது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இயன்றவரை எவ்வாறு சேவை செய்யலாம் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். இது மிகவும் இலகுவானது. இவர் சிவபாபா, இது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக ஆகுகின்ற, விஷ்ணுபூமி. இவர் மிகுந்த அனுபவசாலி. உங்களால் ஏணிப் படத்தை விளங்கப்படுத்த முடியும். விருட்சத்தினதும், சக்கரத்தினதும் படங்களைப் பார்க்கும்பொழுது, குழந்தைகளான உங்கள் புத்தியில் அனைத்து ஞானமும் பிரவேசிக்க வேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் எங்கு சென்றது? யார் யுத்தத்தில் போரிட்டார்கள்? அதில் உங்களைத் தோற்கடித்தவர் யார்;? அந்த இராச்சியம் இப்பொழுது இல்லை. இந்த இறை விடயங்கள் பற்றி அவர்கள் முற்றாகவே அறியார்கள். எவ்வாறு தங்கம், வைரங்கள் என்பன குகைகளிலிருந்தும், சுரங்கங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகின்றன என்ற காட்சிகளைக் குழந்தைகளான நீங்கள் கண்டிருந்தீர்கள். இந்த விஞ்ஞானம் உங்கள் சந்தோஷத்திற்காகவே இருக்கும். இங்கோ அது துன்பத்திற்காகவே உள்ளது. அங்கு விமானங்கள் கூட பழுதடையாதவையாக இருக்கும். ஆரம்பத்தில்; குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தினதும் காட்சிகளைக் கண்டீர்கள். இறுதியிலும் கூட நீங்கள் பல காட்சிகளைக் காண்பீர்கள். திருடர்கள் அனைத்தையும் கொள்ளையடிக்க வருகின்றனர் என்பதையும், உங்கள் சக்தி ரூபத்தினைப் பார்க்கும்பொழுது, அவர்கள் எவ்வாறு ஓடி விடுவார்கள் என்பதையும் நீங்கள் காட்சிகளாகக் கண்டிருந்தீPர்கள். இவ்விடயங்கள் அனைத்தும் இறுதி நேரத்திற்கே பொருந்துகின்றது. திருடர்கள் உங்களிடம் திருட வருவார்கள், ஆனால் நீங்கள் தந்தையின் நினைவில் இருந்தீர்களாயின், அவர்கள் ஓடி விடுவார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது பெருமளவு முயற்சியைச் செய்யுங்கள். தூய்மையே பிரதான விடயம். ஒரு பிறவிக்குத் தூய்மையாகுங்கள். மரணம் உங்கள் முன்னால் உள்ளது. அனைத்தையும் அழித்து விடக்கூடிய, மிகவும் தீவிரமான பல இயற்கை அனர்த்தங்கள் வரும். சிவபாபா இவரின் மூலமாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவரின் ஆத்மாவும் செவிமடுக்கின்றார். இந்த பாபா உங்களுக்கு அனைத்தையும் கூறுகின்றார். சிவபாபா இதில் எதனையும் அனுபவம் செய்வதில்லை. எவ்வாறு மாயையின் புயல்கள் வருகின்றன என்பதைக் குழந்தைகளே அனுபவம் செய்கின்றார்கள். இவரே முதலாம் இலக்கத்தவர், எனவே அவர் அனைத்தையும் அனுபவம் செய்கின்றார். இதில் பயப்படுவதற்கு எதுவுமேயில்லை. அசைக்க முடியாதவராக இருங்கள். தந்தையின் நினைவில் இருப்பதனால், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். சில குழந்தைகள் தங்களுடைய அட்டவணையை எழுதுகின்றார்கள், ஆனால் பின்னர் முன்னேறும்பொழுது, அதனைச் செய்வதை நிறுத்தி விடுகின்றார்கள். அவர்கள் களைப்படைந்து விட்டார்கள் என்பதை அப்பொழுது பாபா புரிந்துகொள்கின்றார்;. அத்தகைய பெரும் ஆஸ்தியைத் தாங்கள் யாரிடமிருந்து பெறுகின்றார்களோ, அந்த அப்பாலுள்ள தந்தைக்கு அவர்கள் ஒரு கடிதமேனும் எழுதுவதில்லை. அவர்கள்; ஒருபொழுதும் அவரை நினைவுசெய்வதுமில்லை! இத்தகைய தந்தை அதிகளவு நினைவுசெய்யப்பட வேண்டும்: சிவபாபா, நான் உங்களைப் பெருமளவு நினைவுசெய்கின்றேன். பாபா, உங்களை நினைவுசெய்யாமல் என்னால் எவ்வாறு வாழ முடியும்? உலக இராச்சியத்தை யாரிடமிருந்து நீங்கள் பெறுகின்றீர்களோ, அத்தந்தையை உங்களால் எவ்வாறு மறக்க முடியும்? நீங்கள் ஒரு மடலை எழுதினாலும், அதுவும் தந்தையை நினைவுசெய்வதாகும். ஒரு லௌகீகத் தந்தையும் தனது குழந்தைக்குக் கடிதம் எழுதுவார்: என் கண்களின் ஒளியான என் குழந்தையே ஒரு மனைவி தனது கணவனுக்கு என்ன எழுதுவார்? இங்கு நீங்கள் இரண்டு உறவுமுறைகளையுமே கொண்டிருக்கின்றீர்கள். இதுவும் தந்தையை நினைவுசெய்வதற்குரிய ஒரு வழியாகும். பாபா மிகவும் இனிமையானவர்! அவர் எங்களிடமிருந்து எதைக் கேட்கின்றார்? எதையுமே இல்லை! அவரே அருள்பவர். அவரே கொடுப்பவர். அவர் எதையும் எடுப்பதில்லை. அவர் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நான் வந்து விட்டேன், பாரதத்தை ஒரு நறுமணம் மிக்க பூந்தோட்டமாக்கிய பின்னர், நான் திரும்பிச் சென்று விடுவேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சூரிய வம்சத்தில் ஒருவர் ஆகுவதற்கு, தாயும் தந்தையுமானவரை மிகச்சரியாகப் பின்பற்றுங்கள். நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்வதுடன், ஏனையோரையும் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குங்கள்.

2. முயற்சி செய்து, ஸ்ரீமத்தைப் பின்பற்றி, அமைதி நிறைந்தவர்களாக இருங்கள். மூத்தவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களை ஒரு சேவகராகக் கருதி, ஒரு பணிவான இதயமுடைய கருவியாகத் தலை வணங்குவதுடன், பிறரையும் தலை வணங்கச் செய்வீர்களாக.

தனது ஒவ்வோர் எண்ணத்தையும், செயலையும் தந்தைக்கு அர்ப்பணிக்கின்ற ஒருவரே ஒரு கருவி என்று கூறப்படுகின்றார். ஒரு கருவியாக இருப்பதெனில், உங்களை அர்ப்பணிப்பதாகும், தலை வணங்குகின்ற எவரும் ஒரு பணிவான இதயமுடையவர் என்று கூறப்படுகின்றார். உங்கள் சம்ஸ்காரங்கள் மற்றும் எண்ணங்கள் மூலம் எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தலை வணங்குகின்;றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உலகம் உங்களுக்குத் தலை வணங்கும். தலை வணங்குதல் என்றால், பிறரைத் தலை வணங்கச் செய்வதாகும். நல்லது, பிறர் என் முன்னால் தலை வணங்கட்டும் என்ற எண்ணம் இல்லாதிருக்கட்டும். உண்மையான சேவகர்கள் எப்பொழுதும் தலை வணங்குகின்றார்கள். அவர்கள் என்றுமே எந்த அதிகாரத்தையும் காட்டுவதில்லை.

சுலோகம்:
இப்பொழுது, பிரச்சனைகளின் சொரூபமாக இருக்காமல், தீர்வுகளின் சொரூபம் ஆகுங்கள்.