04.11.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அல்ஃபா என்ற பாடத்தை முதலில் அனைவருக்கும் உறுதியாக்குங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள்.

கேள்வி:
எந்த ஒரு விடயத்தில் கடவுளின் மேன்மையான வழிகாட்டல்கள் மனித வழிகாட்டல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது?

பதில்:
உங்களால் அநாதியான முக்தியைப் பெற முடியும் என மனித வழிகாட்டல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த நாடகம் அநாதியானதும் அழிவற்றதும் என்றும், எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது என்றும், ஸ்ரீமத் கூறுகின்றது. இங்கே ஒரு பாகத்தை ஏற்க விருப்பமில்லை என்று ஒருவர் கூறிய போதிலும், எவராலும் அதனையிட்டு ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் பாகங்களை நடிக்க நீங்கள் இங்கே கீழிறங்கி வர வேண்டும். ஸ்ரீமத் மாத்திரமே உங்களை மேன்மையானவர் ஆக்குகின்றது. பல வகையான மனித கட்டளைகள் உள்ளன.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். தனது குழந்தைகள் தனக்கு முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார்கள் என்பது தந்தைக்கும் தெரியும். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்களைப் பின்னர் நீங்கள் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முதன்முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும், ஏனெனில், அனைவரும் தந்தையையும் அவரது கற்பித்தல்களையும் மறந்து விட்டார்கள். இப்பொழுது தந்தை உங்களுக்குக் கற்பிக்கும் கற்பித்தல்கள், 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் கொடுக்கப்படும். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தையின் அறிமுகமே பிரதான விடயமாகும். அதன் பின்னர், நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். முழு உலகிலும் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாகங்களைத் தங்கள் சரீரங்களினூடாக அவர்கள் நடிக்க வேண்டும். சுவர்க்கம் என்றும் அழைக்கப்படுகின்ற புதிய உலகிற்கு உங்களை அழைத்துச் செல்வதற்காகவே தந்தை இப்பொழுது வந்துள்ளார். எவ்வாறாயினும், சகோதரர்களாகிய நாங்கள் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கின்றோம். ஒருவரேனும் தூய்மையானவர் அல்ல. தூய்மையற்ற அனைவரையும் தந்தையால் மாத்திரமே தூய்மை ஆக்க முடியும். இது தூய்மையற்ற, விகாரம் நிறைந்த இராவணனின் உலகமாகும். இராவணன் என்றால் ஐந்து விகாரங்கள் ஆகும். அதாவது ஆண்களில் இருக்கின்ற ஐந்து விகாரங்களும், பெண்களில் இருக்கின்ற ஐந்து விகாரங்களும் ஆகும். தந்தை மிகவும் எளிமையாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆகையால், உங்களாலும் அவ்வாறு விளங்கப்படுத்த முடியும். முதன்முதலில், அந்த ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்றும், ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்றும் விளங்கப்படுத்துங்கள். அவர்களிடம் வினவுங்கள்: இது சரியா? அதன் பின்னர், இதனை எழுதுமாறு அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எங்கள் அனைவரது தந்தையும் ஒருவரே. அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் பரமாத்மா ஆவார். அவரே தந்தை என்று அழைக்கப்படுகின்றார். அவர்களின் புத்தியில் இதனை உறுதியாகப் பதியச் செய்தால், சர்வவியாபி என்ற அவர்களது அர்த்தமற்ற அபிப்பிராயம் அகற்றப்பட்டுவிடும். நீங்கள் முதலில், அவர்களுக்கு அல்ஃபாவைக் கற்பிக்க வேண்டும். அவர்களிடம் முதலில் கூறுங்கள்: மிகத்தெளிவாக எழுதுங்கள்: முன்னர் கடவுள் சர்வவியாபி என்றே நான் எண்ணினேன்;. அவர் சர்வவியாபி அல்ல என்பதை நான் இப்பொழுது புரிந்து கொண்டேன். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். ஆத்மாக்கள் அனைவரும் கூறுகின்றார்கள்;: கடவுளே, தந்தையும், பரமாத்மாவான பரமதந்தையும், அல்லாவும் ஆவார். முதன் முதலில், நாங்கள் ஆத்மாக்களே அன்றி, பரமாத்மா அல்ல என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். எனவே பரமாத்மா எங்களுக்குள் பிரசன்னமாகுவதில்லை. ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா பிரவேசித்துள்ளார். ஒரு சரீரத்தின் ஆதாரத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம், ஆத்மாக்கள் தமது வெவ்வேறான பாகங்களை நடிக்கின்றார்கள். அனைவருக்கும் இதனை உறுதியாக்குங்கள். நல்லது! அதன் பின்னர், அந்தத் தந்தை வந்து, உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஓர் ஆசிரியராக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்தச் சக்கரம் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கொண்டது என்ற கேள்விக்கே இடமில்லை. இது அநாதியாக நிச்சயிக்கப்பட்டது. அது எவ்வாறு சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சத்தியயுகமும், திரேதாயுகமும் கடந்து விட்டன. இதனைக் குறித்துக் கொள்ளுங்கள்! அவை சுவர்க்கமும், அரைவாசி சுவர்க்கமும் என்று அழைக்கப்படுகின்றன. அது தேவர்களின் இராச்சியமாகும். சத்தியயுகத்தில் அவர்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்திருக்கின்றனர். திரேதாயுகத்தில் 14 கலைகளைக் கொண்டிருக்கின்றனர். சத்தியயுகத்தின் செல்வாக்கு மிகச் சிறந்ததாகும். அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். புதிய உலகம் சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. அதுவே புகழப்படுகின்றது. புதிய உலகில், ஒரேயொரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மமே உள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய படங்களும் உங்களிடம் உள்ளன. உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. சக்கரத்தின் கால எல்லை 5000 ஆண்டுகள் ஆகும். சூரிய, சந்திர வம்சங்களைப் பற்றி உங்கள் புத்தி இப்பொழுது புரிந்து கொண்டுள்ளது. விஷ்ணுதாமம் மாற்றம் அடைந்து, இராமர், சீதையின் உலகமாகுகின்றது. அவர்களுக்கும் வம்சம் உள்ளது. அந்த இரண்டு யுகங்களும் மாறிய பின்னர், இராவண இராச்சியமாகிய துவாபரயுகம் வருகின்றது. தேவர்கள் பாவப்பாதையில் விழும் பொழுதே விகாரங்களைப் பின்பற்றுகின்ற சம்பிரதாயம் உருவாக்கப்படுகின்றது. சத்தியயுகத்திலும், திரேதாயுகத்திலும் அனைவரும் விகாரமற்றவர்களாக இருக்கின்றார்கள். அப்பொழுது ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே உள்ளது. நீங்கள் விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களிடம் படங்களைக் காட்டுங்கள், அத்துடன் வாயினால் விளங்கப்படுத்துங்கள்: தந்தை எங்கள் ஆசிரியராகி, இவ்வாறாக எங்களுக்குக் கற்பிக்கின்றார்;. தந்தையே வந்து, தனது அறிமுகத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே கூறுகின்றார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காக வருகின்றேன். ஆகையால், எனக்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவை. இல்லாவிடின், நான் எவ்வாறு பேசுவது? நான் உணர்வுள்ளவரும், சத்தியமானவரும், அமரத்துவமானவரும் ஆவேன். ஆத்மாக்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கின்றார்கள். தூய்மையற்றவர்கள் ஆகுவதும் ஆத்மாக்களே, தூய்மையானவர்கள் ஆகுவதும் ஆத்மாக்களே. சம்ஸ்காரங்கள் அனைத்தும் ஆத்மாவிலேயே உள்ளன. ஆத்மாக்கள் தமது பழைய நல்ல, பாவச் செயல்களைக் கொண்ட சமஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றார்கள். சத்தியயுகத்தில் எந்தப் பாவமும் செய்யப்படுவதில்லை. அவர்கள் செயல்களைச் செய்து, தமது பாகங்களை நடிக்கின்றார்கள். ஆனால் அந்தச் செயல்கள் நடுநிலையானவையாகும். கீதையிலும் இந்த வார்த்தைகள் உள்ளன. உங்களால் இதனை இப்பொழுது நடைமுறை ரீதியில் புரிந்து கொள்ள முடியும். பாபா பழைய உலகைப் புதிய உலகாக மாற்றவே வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு அனைத்துச் செயல்களும் நடுநிலையாகவே இருக்கும். அதுவே சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே செயல்கள் பாவம்நிறைந்ததாகி உள்ளது. ஆகையால், இது கலியுகம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் இருக்கின்றீர்கள். பாபா இரு பக்கங்களையும் பற்றி உங்களுக்குக் கூறுகின்றார் என்பதால், தந்தை ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.. நல்லது! அந்தப் பணி குருவிடம் விடப்;பட்டுள்ளது. மக்கள் அவரைக் கூவி அழைக்கின்றார்கள்: வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள்! ஆத்மா தூய்மையாகும் போது, சரீரமும் தூய்மையாகுகின்றது. தங்கம் எவ்வாறோ, ஆபரணமும் அவ்வாறே உள்ளது. 24 கரட் தங்கத்தில் கலப்படம் கலக்காதிருந்தால், அதில் செய்யப்படும் ஆபரணமும் சதோபிரதானாக இருக்கும். அதில் கலப்படம் கலக்கப்படும் பொழுதே அது தமோபிரதான் ஆகுகின்றது. பாரதம் முதலில், தங்கச் சிட்டுக் குருவியாக இருந்தது. அது 24 கரட் தங்கமாக இருந்தது. அது புதிய சதோபிரதான் உலகமாகும். ஆனால் இப்பொழுது அது தமோபிரதான் ஆகியுள்ளது. அது ஆரம்பமாகும் போது, தூய தங்கமாகும். புதிய உலகம் தூயதாகும். பழைய உலகம் தூய்மையற்றதாகும். பின்னர், கலப்படம் தொடர்ந்தும் கலக்கப்பட்டது. தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். எந்த மனிதருக்குமோ குருமாருக்குமோ இது தெரியாது. அவர்கள் கூவி அழைக்கின்றார்கள்;: வந்து எங்களை தூய்மையாக்குங்கள்! மனிதர்களை இல்லறத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களை ஓய்வு ஸ்திதிக்கு அழைத்துச் செல்வதே சற்குருவின் பணியாகும். எனவே, நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, தந்தை மாத்திரமே வந்து, இந்த முழு ஞானத்தையும் கொடுக்கின்றார். அவர் மனித உலக விருட்சத்தின் விதையாவார். அந்த ஒரேயொருவரே முழு விருட்சத்தின் ஞானத்தை விளங்கப்படுத்துகின்றார். சிவபாபாவின் பெயர் எப்பொழுதும் சிவன் ஆகும். ஆத்மாக்கள் அனைவரும், தத்தமது பாகங்களை நடிப்பதற்காக இங்கே வர வேண்டும். எனவே அவர்கள் வெவ்வேறு பெயர்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள். மக்கள் தந்தையைக் கூவி அழைத்தாலும், அவர்களுக்கு அவரைத் தெரியாது. நீங்கள் தூய உலகிற்குச் செல்வதற்காக அவர் எவ்வாறு பாக்கிய இரதத்தினுள் பிரவேசிக்கின்றார்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் உள்ளவரின் சரீரத்திலேயே நான் பிரவேசிக்கின்றேன். அவர் முழு 84 பிறவிகளையும் எடுக்கின்றார். நான் இந்தப் பாக்கிய இரத்தத்திற்குரியவரை, அரசர்களுக்கெல்லாம் அரசராக ஆக்குவதற்காகவே அவருக்குள் பிரவேசிக்கின்றேன். ஸ்ரீ கிருஷ்ணர் முதல் எண்ணிற்குரியவர். அவர் புதிய உலகின் அதிபதியாவார், அதன் பின்னர் அவர் சூரிய, சந்திர வம்சங்களையும், பின்னர் வைஷிய, சூத்திர வம்சங்களையும் கடந்து வரும் வேளையில் கீழிறங்குகின்றார். அதன் பின்னர், அவர் பிரம்மாவின் வம்சத்தினர் ஆகுகின்றார். சத்தியயுகத்தவராக இருந்தவர், பின்னர், திரேதாயுகத்தவர் ஆகுகின்றார். நீங்கள் மீண்டும் ஒரு முறை கலியுகத்தவரில் இருந்து சத்தியயுகத்தவர் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: தந்தையாகிய என்னை யாவரும் நினைவு செய்யுங்கள்! நான் பிரவேசித்துள்ள சரீரத்திற்குரிய ஆத்மாவிற்கு இந்த ஞானம் சிறிதேனும் இருக்கவில்லை. நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். ஆகையாலேயே அவர் பாக்கிய இரதம் என்று அழைக்கப்படுகின்றார். தந்தையே கூறுகின்றார்;: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் பொழுது வருகின்றேன். கீதையில் உள்ள வார்த்தைகள் மிகவும் சரியானவையாகும். அது அனைத்து சமயநூல்களினதும் இரத்தினம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை சங்மகயுகத்தில் வந்து, பிராமண குலத்தையும், தேவ குலத்தையும் உருவாக்குகின்றார். அனைவருக்கும் ஏனைய குலங்களைப் பற்றித் தெரியும். ஆனால் எவருக்குமே இவற்றைப் பற்றித் தெரியாது. தந்தை சங்கமயுகத்தில், இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நானே விதையாவேன். கிருஷ்ணர் சத்தியயுக வாசியாவார். அவரை வேறு எந்த இடத்திலும் காண முடியாது. அவர் மறுபிறப்பெடுக்கும் போது, அவரது பெயர், வடிவம், தேசம், நேரம், காலம் அனைத்தும் மாறுகிறது. ஆரம்பிக்கும் போது, அவர் அழகிய சிறு குழந்தையாவார். அதன் பின்னர் அவர் வளரும் போது, அவர் அந்தப் பழைய சரீரத்தை அகற்றி, இன்னுமொரு இளமையான சரீரத்தைப் பெறுகின்றார். இது ஏற்கனவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டதாகும். அவரது அடுத்த சரீரத்தில் அவர் கிருஷ்ணர் என்று அழைக்கப்படுவதில்லை. அவரது அடுத்த சரீரத்திற்கு வேறு பெயர் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில், அவரது முகச்சாயல், திகதி, நேரம், காலம் போன்றன மாறுகின்றன. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் அதேபோன்றே நிகழ்கின்றது. இந்த நாடகம் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் சுழல்கின்றது. நீங்கள் சதோ, இரஜோ தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும். உலகின் பெயரும், யுகத்தின் பெயரும் மாறுகின்றன. இப்பொழுது இது சங்கமயுகமாகும். நான் இந்தச் சங்கமத்தில் வருகின்றேன். இதனை நீங்கள் உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்காக உங்களுக்கு மிக நல்ல வழியைக் காட்டும் இந்தத் தந்தையே உங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். கீதையில் எழுதப்பட்டுள்ளது: சரீர உணர்வையும், சரீரம் சார்ந்த சகல சமயங்களையும் துறந்து உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். நீங்கள் நிச்சயமாக உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பக்தி மார்க்கத்தில், கடவுளிடம் செல்வதற்காக மக்கள் அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். அது முக்தி தாமம் ஆகும். நீங்கள் செயல்கள் செய்வதிலிருந்து விடுதலை அடைந்து அசரீர உலகிற்குச் சென்று அங்கு அமர்ந்து விடுகின்றீர்கள். ஒரு நடிகர் வீடு திரும்பும் போது, அவர் தனது பாகத்தை நடிப்பதிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அனைவரும் முக்தியைப் பெறவே விரும்புகின்றார்கள். ஆனால் எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. இந்த நாடகம் அநாதியானதும் அழிக்க முடியாததுமாகும். சிலர் தங்கள் பாகத்தை நடிக்க விரும்பவில்லை எனக் கூறுகின்றார்கள். எனினும் எவராலும் அதனையிட்டு எதுவும் செய்ய முடியாது. இந்த நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டது. ஒருவரேனும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. மனிதர்கள் பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் மேன்;மையானவர் ஆகுவதற்கு, உங்களுக்கு உதவ மேன்மையான வழிகாட்டல்கள் உள்ளன. நீங்கள் மனிதர்களை மேன்மையானவர்கள் என்று அழைக்க மாட்டீர்கள். தேவர்களே மேன்மையானவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அனைவரும் அவர்களுக்கே தலை வணங்குகின்றார்கள். எனவே அவர்களே மேன்மையானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் சுவர்க்க இளவரசனான ஒரு தேவன் ஆவார். அவர் எவ்வாறு இங்கு வர முடியும்? கீதையைப் பேசியவர் ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல. அவர் ஒரு தேவர் என்பதால், அவரை அனைவரும் வழிபடுகின்றார்கள். தேவர்கள் தூய்மையானவர்கள். ஆனால் அவர்களோ தூய்மையற்றவர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்;: நாங்கள் தெய்வீகக் குணம் இல்லாத, நற்பண்புகள் அற்றவர்கள். எங்களிடம் நற்பண்கள் எதுவும் இல்லை. எங்களை நற்பண்புகளுடையவர் ஆக்குங்கள்! அவர்கள் சிவனின் விக்கிரகத்திற்கு முன்னால் சென்று கூறுகிறார்கள்: எனக்கு முக்தி அருளுங்கள்! ஏனெனில், சிவன் என்றுமே ஜீவன்முக்திக்குள்ளோ அல்லது எந்த பந்தனத்திற்குள்ளோ வருவதில்லை. அவர்கள் அவரைக் கூவி அழைக்கின்றார்கள்: எங்களுக்கு முக்தியை அருளுங்கள்! அந்த ஒரேயொருவரே ஜீவன்முக்தியை அருள்பவர். நீங்கள் அனைவரும் மம்மாவினதும் பாபாவினதும் குழந்தைகள் என்பதனை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவர்களிடமிருந்து அளப்பரிய செல்வத்தைப் பெறுகின்றீர்கள். மக்களுக்குப் புரிந்துணர்வு இல்லாததால் எதனையாவது கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். விளக்கம் எதுவும் இல்லாதவர்கள் நிச்சயமாகத் துன்பத்தை அனுபவம் செய்வார்கள். அவர்கள் அளவற்ற துன்பத்தை அனுபவிக்க வேண்டும். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் எல்லையற்ற தந்தையை அறிந்து கொள்ளாததால், தொடர்ந்தும் ஒருவரோடொருவர் சண்டையிடுகின்றார்கள். அவர்கள் அநாதைகளாகி விட்டனர். அங்கே அவர்கள் எல்லைக்குட்பட்ட அநாதைகள், இங்கே அவர்கள் எல்லையற்ற அநாதைகள். தந்தை புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். இப்போது இது தூய்மையற்ற ஆத்மாக்களின் தூய்மையற்ற உலகமாகும். சத்தியயுகம் தூய உலகம் என்றும், கலியுகம் பழைய உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவ் விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. பழைய உலகம் அழிக்கப்பட்டு, நீங்கள் புதிய உலகிற்கு மாற்றப்படுவீர்கள். நீங்கள் இப்போது தற்காலிகமாக சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். பழைய உலகம் புதிய உலகமாக மாறிக்கொண்டிருக்கின்றது. உங்களுக்கும் புதிய உலகைப் பற்றித் தெரியும். உங்கள் புத்தி இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் அமர்ந்திருந்தாலும், சுற்றித் திரிந்தாலும், உங்கள் புத்தி, தந்தை கற்பிக்கும் விடயங்களை நாங்கள் கற்கின்றோம் என்பதை நினைவு செய்யவேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இதனை நினைவு செய்ய வேண்டும். ஆனாலும் உங்கள் நினைவு இன்னமும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே இருக்கின்றது. தந்தையும் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உங்களுக்கு அன்பையும் நினைவையும் கொடுக்கின்றார். ஆசிரியரும் நன்றாகக் கற்பவரிடம் பெரும் அன்பைக் கொண்டிருப்பார். அதில் பெருமளவு வித்தியாசமுள்ளது! தந்தை தொடர்ந்தும் அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகள் அனைத்து விடயங்களையும் கிரகிக்க வேண்டும். உங்கள் புத்தி தந்தையைத் தவிர வேறு எந்தத் திசைக்கும் செல்லக் கூடாது. நீங்கள் தந்தையை நினைவு செய்யாவிடின், உங்கள் பாவங்கள் எவ்வாறு அழிக்கப்படும்? மாயை தொடர்ந்தும் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிப்பாள். மாயை உங்களை அதிகளவு ஏமாற்றி விடுகின்றாள். இந்த பாபா உங்களுக்கு உதாரணங்களைக் கொடுக்கின்றார்: பக்தி மார்க்கத்தில் நான் இலக்ஷ்மியை பெருமளவு வழிபட்டேன். படத்தில் இலக்ஷ்மி நாராயணனின் கால்களைப் பிடித்து விடுவதைப் பார்த்ததும் அவரை நான் விடுதலை செய்தேன். நான் நினைவில் அமர்ந்திருக்கும் போது, எனது புத்தி இங்கும் அங்கும் அலைந்தால், ஏன் எனது புத்தி வேறு திசைகளுக்குச் செல்கிறது என என்னையே நான் அடித்துக்கொள்வேன். இறுதியாக நான் விநாசத்தையும், புதிய உலக ஸ்தாபனையின் காட்சியையும் கண்டேன். காட்சிக்கான எனது விருப்பம் நிறைவேற்றப்பட்டது. புதிய உலகம் இப்போது வரப்போகின்றது என்பதையும், நான் என்னவாகப்போகின்றேன் என்பதையும், இந்தப் பழைய உலகம் அழிகப்படும் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். அதில் இந்த உறுதியான நம்பிக்கை இருந்தது. எனது சொந்த இராச்சியத்தின் காட்சியையும் கண்டேன். ஆகவே நானே என்னைக் கேட்டுக் கொண்டேன்: எனக்கு சுவர்க்க இராச்சியம் கிடைக்கும் போது நான் ஏன் இராவண உலகில் இருக்க வேண்டும்? இது இறை புத்தி எனப்படுகின்றது. கடவுள் என்னில் பிரவேசித்து எனது புத்தியைச் செயல்படச் செய்கின்றார். ஞானக்கலசம் தாய்மாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்தும் தாய்மார்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது: நீங்கள் அனைத்து வியாபாரத்தையும் கவனிப்பதுடன் அனைவருக்கும் கற்பியுங்கள். தொடர்ந்தும் அனைவருக்கும் கற்பிப்பதனால் நீங்கள் இந்தளவிற்கு வந்துள்ளீர்கள். ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வதினால் உங்களில் எத்தனை பேர் உள்ளார்கள் எனப் பாருங்கள்! ஆத்மாக்கள் தூய்மையாகியதும் அவர்களுக்குத் தூய சரீரங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் தூய்மையைப் பற்றிப் புரிந்து கொண்டாலும், மாயை அவர்களை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் அவர்களைத் தொடர்ந்தும் ஏழு நாட்களுக்குக் கற்கும்படி கூறுகிறீர்கள் நாங்கள் நாளை வருகின்றோம் என அவர்கள் பதிலளிப்பாhர்கள். எவ்வாறாயினும் அடுத்த நாள் மாயை அவர்களை முடித்துவிடுகிறாள். அவர்கள் வரமாட்டார்கள். கடவுள் கற்பித்தாலும் அவர்கள் கடவுளுடன் கற்பதற்கு வரமாட்டார்கள். ஆம், நாங்கள் நிச்சயமாக வருவோம் என அவர்கள் கூறினாலும், மாயை அவர்களை மறையச் செய்துவிடுகின்றாள். அவள் அவர்களை ஒழுங்காக வருவதற்கு அனுமதிப்பதில்லை. கடந்த கல்பத்தில் முயற்சி செய்தவர்களே, மீண்டும் நிச்சயமாக அவ்வாறு செய்வார்கள். அங்கு வேறு கடைகள் இல்லை. நீங்கள் அதிகளவு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் பெருமளவில் தொல்பொருள் காட்சிச்சாலை போன்றவற்றைக் கட்டுகின்றீர்கள். கடந்த கல்பத்தில் புரிந்து கொண்டவர்கள், மீண்டும் புரிந்து கொள்வார்கள். விநாசம் இடம் பெறுவதுடன் ஸ்தாபனையும் தொடந்தும் இடம் பெறுகின்றது. ஆத்மாக்கள் கற்று முதற்தரமான சரீரத்தை எடுப்பார்கள். இதுவே உங்கள் இலட்சியமும் குறிக்கோளும் ஆகும். இதனை ஏன் நீங்கள் நினைவு செய்வதில்லை? இப்போது நாங்கள் செய்யும் முயற்சிக் கேற்பவே புதிய உலகிற்குச் செல்கின்றோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இந்தச் சங்கம யுகத்தில் ஒரு குறுகிய காலத்திற்கே இருக்கின்றீர்கள் என்பதனை உங்கள் புத்தி எப்பொழுதும் நினைவு செய்ய வேண்டும். பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. எனவே நாங்கள் புதிய உலகிற்கு மாற்றப்படுவோம். இதனாலேயே நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தை பழைய உலகிலிருந்து அகற்றவேண்டும்.

2. தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுப்பதுடன் கர்ம தத்துவத்தின் ஆழத்தையும் பாவச்செயல், நடுநிலைச் செயலையும் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். முதலில் அல்ஃபா என்ற பாடத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்துங்கள்.


ஆசீர்வாதம்:
கர்மத்தினதும், யோகத்தினதும் சமநிலையைப் பேணுவதனால் எந்தவொரு கர்ம பந்தனத்திலிருந்தும் விடுபட்டவராகி கர்மாதீத ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.

கர்மத்தினதும் யோகத்தினதும் சமநிலையை நீங்கள் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு செயற்பாட்டிலும் நீங்கள் இயல்பாகவே வெற்றி அடைவீர்கள். கர்மயோகி ஆத்மா ஒருபோதும் எந்தவொரு கர்மபந்தனத்திலும் அகப்பட்டுக் கொள்ளமாட்டார் பந்தனத்திலிருந்து விடுபட்டிருப்பவா.;கர்மாதீத்என அழைக்கப்படுவார்.கர்மாதீத் என்பது நீங்கள் செயல்களுக்கு அப்பால் செல்வீர்கள் என்பதல்ல. அதாவது செயல்கள் செய்யாமல் இருப்பதல்ல. நீங்கள் செயல்களிலிருந்து விடுபட்டிருக்கக்கூடாது. ஆனால் கர்மபந்தனத்தில் சிக்கிக் கொள்வதில் இருந்து விடுபட்டிருங்கள்.அத்தகைய கர்மயோகி ஆத்மா தன்னுடைய செயல்கள் மூலம் ஏனையோரின் செயல்களையும் மேன்மையடையச் செய்வார். அத்தகைய ஆத்மாவிற்கு ஒவ்வொரு செயலும் களிப்பூட்டுவதாக இருக்கும். அவர் எதையும் சிரமமாக அனுபவம் செய்யமாட்டார்.

சுலோகம்:
கடவுளின் அன்பானது அமிர்தவேளையில் உங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் அலாரமாகும்.