04.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சதா நினைவு செய்தல் எனும் தூக்கு மேடையில் நிலைத்திருக்க வேண்டும். நினைவின் மூலம் மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் நிஜத் தங்கங்கள் ஆகுகிறீர்கள்.

கேள்வி:
உங்கள் குற்றப் பார்வையை உடனடியாக மாற்றுகின்ற சக்தி எது?

பதில்:
ஆத்மாக்களாகிய நீங்கள் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெறும்போது குற்றங்கள் அனைத்தும் முடிவடைகிறது. தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, நீங்கள் அனைவரும் சகோதரர்களும், சகோதர சகோதரிகளும் ஆவீர்கள். உங்களுடைய கண்கள் ஒருபோதும் குற்றமானதாக இருக்கக்கூடாது. நீங்கள் எப்பொழுதும் நினைவு என்ற போதையில் அமர்ந்திருக்க வேண்டும். அற்புதம், அற்புதமான பாக்கியம்! கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்! இவ்வாறு நினைக்கும்போது, நீங்கள் போதையில் நிலைத்திருப்பீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தையும் ஓர் ஆத்மாவே என்பதும், அவர் சம்பூரணமானவர் என்பதும், அவரிடம் எந்தத் துருவும் ஒருபோதும் இருக்காது என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தன்னிடம் துரு இருக்கின்றதென சிவபாபா கூறுவாரா? நிச்சயமாக இல்லை! இந்த தாதா முழுமையாக துருவினால் மூடப்பட்டிருக்கின்றார். தந்தை அவரினுள் பிரவேசித்துள்ளதால், அவர் அந்த உதவியைப் பெறுகிறார். ஐந்து விகாரங்கள் என்ற துருவினை தங்களில் கொண்டிருப்பதால், ஆத்மாக்கள் தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதே பிரதான விடயமாகும். தந்தையை நீங்கள் எவ்வளவுக்கு நினைவு செய்கின்றீர்களோ, அதற்கேற்ப துருவானது தொடர்ந்தும் அகன்றுவிடும். நீங்கள் பிறவி பிறவியாக பக்தி மார்க்கக் கதைகளை செவிமடுத்தீர்கள். நீங்கள் இப்பொழுது செவிமடுக்கின்ற விடயங்கள் தனித்துவமானது. நீங்கள் இப்பொழுது ஞானக் கடலிடமிருந்து ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்களுடைய புத்தியில் ஓர் இலக்கையும் குறிக்கோளையும் கொண்டுள்ளீர்கள். வேறெந்த ஆன்மீக ஒன்றுகூடலிலும் எவ்வித இலக்கோ அல்லது குறிக்கோளோ இருப்பதில்லை. நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, அவர்கள் கடவுளை சர்வவியாபி எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் அவரை அவதூறு செய்கின்றார்கள். இது ஒரு நாடகம் என்பதையோ அல்லது படைப்பவரும் இயக்குனரும் நாடகத்தால் கட்டுண்டுள்ளார்கள் என்பதையோ அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் சர்வசக்திவான் என்று நினைவுகூரப்பட்டாலும், அவரும் நாடகத் தண்டவாளத்திலே நகர்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். பாபாவே வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். என்னுடைய ஆத்மாவில் பதியப்பட்டுள்ள அழிக்கமுடியாத பாகத்திற்கேற்ப நான் உங்களுக்கு கற்பிக்கின்றேன் என்று அவர் கூறுகின்றார். நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றவை எல்லாம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, அதிமேன்மையான இந்த சங்கமயுகத்தில் நீங்கள் அதிமேன்மையான மனிதர்களாக ஆகவேண்டும். இவை கடவுளின் வாசகங்களாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து, இந்த இலக்ஷ்மி நாராயணனைப் போல் ஆகவேண்டும். நீங்கள் உலகின் அதிபதிகளாக வேண்டும் என்று எந்த மனிதராலும் கூறமுடியாது. நீங்கள் உலகின் அதிபதிகளாக ஆகுவதற்காகவும், சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுவதற்காகவும் இங்கே வந்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் பக்தி மார்க்கத்தில் பிறவி பிறவியாக பல கதைகளைக் செவிமடுத்திருந்தாலும், நீங்கள் எதையும் புரிந்துகொள்ளவில்லை. சுவர்க்கத்தில் உண்மையாக இலக்ஷ்மி நாராயணனுடைய இராச்சியமே இருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அது இப்பொழுது இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு திரிமூர்த்தியைப் பற்றியும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிசனாதன தேவ தேவியரின் தர்மம் பிரம்மாவின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது, வேறு எந்த சமயங்களும் இருக்கவில்லை. அந்த தர்மம் இப்பொழுதில்லை, அது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன். இது ஒரு பல்கலைக்கழகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய நடத்தையை இங்கே மாற்றவேண்டும். ஐந்து விகாரங்களும் நீக்கப்பட வேண்டும். நீங்கள் தேவர்களின் முன்னிலையில் நின்று பாடுவதுண்டு: நீங்கள் அனைத்து நற்குணங்களும் நிறைந்தவர்கள், நாங்கள் பாவிகள்;. பாரத மக்களே தேவர்களாக இருந்தார்கள். சத்தியயுகத்தில், இலக்ஷ்மியும் நாராயணனும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தார்கள், இப்பொழுது கலியுகத்தில் அவர்கள் பூஜிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த, சதோபிரதான் ஆத்மாக்களாக இருந்தார்கள். அவர்களுடைய சரீரங்களும் சதோபிரதானாக இருந்தன. ஆத்மாக்கள் எவ்வாறோ, அவ்வாறே ஆபரணங்களும் இருக்கின்றன. தங்கம் கலப்படமாக்கப்படும்போது, அதன் பெறுமதியும் அதிகளவு குறைகின்றது. உங்களுடைய பெறுமதியும் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. உங்களுடைய பெறுமதி இப்பொழுது அதிகளவு குறைந்துவிட்டது! நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது பூஜிப்பவர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் எந்தளவுக்கு யோகம் செய்கின்றீர்களோ, அந்தளவுக்கு துரு அகற்றப்படுவதுடன் தந்தை மீதான உங்கள் அன்பு அதிகரித்து, நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். பாபா உங்களுக்கு தெளிவாகக் கூறுகின்றார்: குழந்தைகளே, நாள் முழுவதும் நீங்கள் எவ்வளவு நேரம் நினைவில் இருந்தீர்கள் என்ற அட்டவணையை வைத்திருங்கள். நினைவு யாத்திரை என்று கூறுவது சரியானது. நினைவில் நிலைத்திருந்து, துரு அகற்றப்படுவதால், உங்களுடைய இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கை நோக்கிச் செல்லும். அந்த வழிக்காட்டிகள் உங்களை யாத்திரையில் பௌதீகமாக அழைத்துச் செல்கிறார்கள். இங்கே, ஆத்மாக்களாகிய நீங்களே யாத்திரையில் இருக்கின்றீர்கள். நாடகச்சக்கரம் முடிவிற்கு வருவதால், நீங்கள் பரந்தாமத்திற்குச் செல்ல வேண்டும். இந்த உலகம் மிகவும் தீயது என்பது உங்களுக்குத் தெரியும். எவரும் கடவுளை அறிந்ததுமில்லை, அவரை அறியப் போவதுமில்லை. இதனாலேயே கூறப்படுகின்றது: விநாச காலத்தில் சிலருக்கு அன்பற்ற புத்தி உள்ளது. அவர்களுக்கு இந்த நரகம் சுவர்க்கத்தைப் போன்றுள்ளது. இந்த விடயங்கள் அவர்களுடைய புத்தியில் பதிவதில்லை. இந்த ஞானத்தைக் கடைவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஏகாந்தமாக இருப்பது அவசியமாகும். உங்களுக்கு இங்கே அதிகளவு ஏகாந்தத்தில் இருக்கலாம், இதனாலேயே மதுவனம் புகழப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். கடவுள் ஆத்மாக்களாகிய எங்களுக்கு கற்பிக்கின்றார். அவர் முன்னைய கல்பத்தில் கற்பித்ததைப் போன்றே எங்களுக்குக் கற்பிக்கின்றார். இது கிருஷ்ணரைப் பற்றிய கேள்வியல்ல, அவர் சிறு குழந்தையாவார். அவர் ஓர் ஆத்மா, இவர் பராமாத்மா ஆவார். முதல் இலக்கத்தவராக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர், இறுதி இலக்கத்தவராக ஆகுவதால், அவருடைய பெயர் மாற்றமடைகின்றது. அவருடைய பல பிறவிகளின் இறுதியில், அவருடைய பெயர் நிச்சயமாக வேறொன்றாக இருக்கும். இவர் தாதா லேக்ராஜ் என அழைக்கப்பட்டார். இது இவருடைய பல பிறவிகளின் இறுதிப்பிறவியாகும். தந்தை கூறுகிறார்: நான் இவரினுள் பிரவேசித்து இராஜயோகத்தை உங்களுக்கு கற்பிக்கிறேன். தந்தை நிச்சயமாக எவரேனும் ஒருவரில் பிரவேசிக்க வேண்டும். இவ்விடயங்கள் சமய நூல்களில் குறிப்பிடவில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மாத்திரமே இதை கற்கிறீர்கள். இந்த ஞானம் சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. அங்கே வெகுமதி மட்டுமே உள்ளது. தந்தை சங்கமயுகத்தில் வந்து, இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார், பின்னர் நீங்கள் உங்களுடைய அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்ற காலம் இதுவேயாகும். எனவே குழந்தைகளாகிய நீங்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது. மாயை உங்களை மிகக் கவனயீனமானவர்களாக ஆக்கும்போது, அது உங்களுடைய பாக்கியத்தில் இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. தந்தை உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். அப்பொழுது உங்களுடைய பாக்கியத்தில் பெரும் வித்தியாசம் ஏற்படுகிறது. சிலர் சித்தியடைகின்றார்கள், சிலர் சித்தியடைவதி;ல்லை. இரட்டைக் கீரிடம் அணிந்தவர்களாகுவதற்கு நீங்கள் ஏதாவது முயற்சி செய்யவே வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்களுடைய வீட்டில் குடும்பத்துடன் இருக்கலாம். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பௌதீகத் தந்தையுடனான கடன்களைத் தீர்க்க வேண்டும். நீங்கள் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடப்பவராக இருக்க வேண்டும். இவ்வுலகில் அனைத்துமே சட்டத்திற்கு முறனாகவே இருக்கின்றன. மிக மேன்மையானவர்களாக இருந்த நீங்கள் தொடர்ந்து கீழே இறங்கி வருகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். நீங்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், அதாவது பிரம்ம குமாரர்கள் ஆவீர்கள். எனவே நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். ஆகையால் குற்றப்பார்வை எதுவும் இருக்கக் கூடாது. தந்தை உங்களுக்கு இந்த உபாயத்தைக் கூறுகிறார். 'பாபா, பாபா" என்று நீங்கள் அனைவரும் தொடர்ந்து கூறுகிறீர்கள். எனவே நீங்கள் சகோதர, சகோதரிகள். நீங்கள் அனைவரும் கடவுளை 'பாபா" என அழைக்கின்றீர்கள். தாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என ஆத்மாக்கள் கூறுகிறார்கள். ஆனால் சரீரத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் சகோதர சகோதரிகள். ஆகவே ஏன் குற்றப்பார்வை இருக்க வேண்டும்? நீங்கள் இவற்றை பெரிய ஒன்றுகூடல்;களில் விளங்கப்படுத்தலாம். நீங்கள் அனைவரும் சகோதரர்கள். பிரஜாபிதா பிரம்மா மூலம் படைப்பு படைக்கப்படும்பொழுது நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளாக ஆகுகின்றீர்கள். வேறு எந்த உறவுமுறையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் என்பதால் எவ்வாறு நாங்கள் விகாரத்தில் ஈடுபட முடியும்? நாங்கள் அனைவரும் சகோரர்கள் ஆக இருப்பதுடன், சகோதர சகோதரிகளுமாக இருக்கிறோம். இக்கண்களே பெரிதும் ஏமாற்றுகின்றன என்பதை தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். கண்கள் நல்ல பொருள் ஒன்றைப் பார்த்தவுடனேயே, இதயம் அதைப் பெறவேண்டுமென விரும்புகிறது. எதையுமே பார்க்காவிட்டால் ஆசைகள் எதுவுமே இருக்காது. இக் குற்றப் பார்வை மாற்றப்பட வேண்டும். சகோதரர்களும் சகோதரிகளும் விகாரத்தில் ஈடுபட முடியாது. அப்படியான பார்வை அகற்றப்பட வேண்டும். மூன்றாவது கண்ணாகிய ஞான சக்தி இருக்க வேண்டும். அரைக்கல்பமாக உங்களுடைய கண்களினாலேயே நீங்கள் அனைத்தையும் செய்தீர்கள். இப்பொழுது தந்தை வினவுகிறார்: துரு அனைத்தையும் எவ்வாறு அகற்ற முடியும்? தூய்;மையாக இருந்த ஆத்மாக்களாகிய நாங்கள் துருப்பிடித்தவர்கள் ஆகி விட்டோம். எவ்வளவு அதிகமாக நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களுக்கு அவரின் மீது அன்பு அதிகரிக்கும். நினைவின் மூலமே அன்பு உருவாகிறது. கல்வியின் மூலம் அல்ல. இது பாரதத்தின் புராதன யோகமாகும். இதன் மூலமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகி வீடு திரும்புவீர்கள். சகோதரர்கள் அனைவருக்கும் அவர்களுடைய தந்தையின் அறிமுகத்தை கொடுக்க வேண்டும். சர்வவியாபி என்ற கருத்தினால் அனைவரும் கீழே மிக பலமாக தள்ளப்பட்டு விட்டார்கள். நாடகத்திற்கு ஏற்ப, இப்பொழுது இதுவே உங்களுடைய பாகம் எனத் தந்தை கூறுகிறார். இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும். முன்னைய கல்பத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் என்ன முயற்சி செய்தீர்களோ, அதையே நீங்கள் நிச்சயமாகத் மீண்டும் செய்வீர்கள். தொடர்ந்தும் நீங்கள் பற்றற்ற பார்வையாளராக பாருங்கள். பலர் உங்கள் கண்காட்சிகளைப் பார்க்க வருவார்கள். இது கடவுளின் பணியகம். இது அசரீரியான தந்தையாகிய கடவுளின் பணியகமாகும். மக்கள் கிறிஸ்தவ பணியகம், பௌத்த பணியகம் போன்றவற்றைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவோ அசரீரியான கடவுளின் பணியகமாகும். அசரீரியானவர் நிச்சயமாக ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கிறார். அசரீரி ஆத்மாக்களாகிய நீங்கள் என்னுடன் வசித்தீர்கள். இந்த நாடகம் எவ்வாறானது என்பது எவருடைய புத்தியிலும் இல்லை. இராவணனுடைய இராச்சியத்தில் அனைவரும் அன்பற்ற புத்தியையே கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தந்தையின்மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். 'என்னுடையவர் ஒருவரே அன்றி வேறெவருமில்லை" என நீங்கள் சத்தியம் செய்தீர்கள். நீங்கள் பற்றை வென்றவர்கள் ஆக வேண்டும். இதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகிறது. இது தூக்கு மேடையில் ஏறுவது போன்றதாகும். தந்தையை நினைவு செய்வதென்பது தூக்கு மேடையில் ஏறுவது போன்றதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரத்தை மறந்து, நினைவின் மூலம் தந்தையிடம் செல்ல வேண்டும். தந்தையை நினைவு செய்வதே மிகவும் அவசியமானதாகும். வேறு எவ்வாறு துருவை அகற்ற முடியும்? சிவபாபாவே கற்பிக்கின்றார் என்ற உள்ளார்ந்த சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். வெளியிலுள்ளவர்கள் இதை கேட்க நேரிட்டால் 'நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று வினவுவார்கள். ஏனெனில் அவர்கள் கிருஷ்ணரையே கடவுள் என நம்புகிறார்கள். கிருஷ்ணருடைய இராச்சியத்திற்கு நீங்கள் சென்று கொண்டிருப்பதால் குழந்;தைகளாகிய நீங்கள் மிகுந்த சந்தோஷம் அடைகிறீர்கள். நாங்களும் இளவரசர்களும் இளவரசிகளும் ஆகமுடியும். அவரே முதலாவது இளவரசர் ஆவார். அவர் புதிய வீட்டில் வசிக்கிறார். தாமதித்து பிறப்பு எடுக்கின்ற குழந்தைகளும் பின்னர் வருவார்கள். எவ்வாராயினும் அவர்கள் சுவர்க்கத்தில் பிறப்பெடுப்பார்கள். நீங்களும் சுவர்க்கத்தின் இளவரசனாக முடியும். அனைவராலும் முதல் இலக்கத்தைப் பெற முடியாது. மாலையும் வரிசைக்கிரமமாகவே உருவாக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, அதிகளவு முயற்சி செய்யுங்கள்! நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்காகவே இங்கே வந்துள்ளீர்கள். இதுவே சத்திய நாராயணனின் கதையாகும். எவருமே 'இதுவே சத்திய இலக்ஷ்மியின் கதை" என்று கூறுவதை நீங்கள் ஒருபோதும் கேட்டதில்லை. அனைவரும் கிருஷ்ணரை விரும்புகின்றார்கள். அவர்கள் கிருஷ்ணரை ஒரு தொட்டிலில் இட்டு ஆட்டுகிறார்கள். ஏன் ராதையை அவ்வாறு செய்வதில்லை? நாடகத்திட்டப்படி அவருடைய பெயர் நினைவு கூரப்படுகிறது. ராதையும் கிருஷ்ணருக்குச் சமமானவர் என்பதால், ஏன் கிருஷ்ணர் மீது அதிகளவு அன்பு செலுத்தப்படுகிறது? நாடகத்தில் அவருடைய பாகம் அத்தகையது! புத்திரர்களே எப்பொழுதும் அதிகமாக நேசிக்கப்படுகிறார்கள். ஒரு லௌகீகத் தந்தை புத்திரர்களைப்; பார்ப்பதில் அதிகளவு சந்தோஷமடைகிறார். ஒருவருக்கு புத்திரன் இருக்கும்பொழுது அவர் அதிகளவு சந்தோஷமடைகிறார். அவருக்கு ஒரு புத்திரி இருக்குமாயின், அவர் தொடர்ந்தும் திணறுவார். சிலர் அவளைக் கொல்லவும் செய்வார்கள். இராவணனுடைய இராச்சியத்தில் இருப்பவர்களது நடத்தையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. நீங்கள் பாடுகிறீர்கள்: நீங்களே சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்...... நாங்கள் தெய்வீக குணங்களே அற்றவர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்பொழுது மீண்டும் தெய்வீக குணங்களை உடையவர்கள் ஆகுங்கள்! நீங்கள் எண்ணற்ற தடவைகள் உலக அதிபதிகளாக ஆகியுள்ளீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். ஓகோ! சிவபாபா கற்பிக்கின்றார்! இதைப்பற்றி அமர்ந்திருந்து சிந்தியுங்கள்! 'கடவுள் எங்களுக்குக் கற்பிக்கின்றார். அற்புதமான பாக்கியம்! அற்புதம்!" இப்படியாக எண்ணுவதினால் நீங்கள் மிகவும் போதை உடையவர்களாக ஆக வேண்டும். அற்புதம், அற்புதமான பாக்கியம்! நாங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டு விட்டோம். பாபாவை மாத்திரமே நாங்கள் நினைவு செய்வோம். நாங்கள் தூய்மையை கிரகிக்க வேண்டும். நாங்கள் இவ்வாறு ஆகுவதால், தெய்வீக குணங்களை கிரகிக்கின்றோம். இதுவும் மன்மனாபவ ஆகும். பாபா இவ்வாறே எங்களையும் ஆக்குகிறார். இது ஒரு நடைமுறை அனுபவம் பற்றிய விடயமாகும். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை அறிவுரை கூறுகிறார்: உங்கள் அட்டவணையை எழுதுங்கள்! ஏகாந்தத்தில் இருந்து உங்களுடனேயே பேசுங்கள். இந்தப் பதக்கத்தை (பட்ஜை) உங்கள் இதயத்தில் அணியுங்கள். கடவுளின் ஸ்ரீமத்தை பின்பற்றுவதால் நாங்கள் இவ்வாறு ஆகுகின்றோம். அதைப் பாருங்கள், அதன்மீது தொடர்ந்தும் அன்பு செலுத்துங்கள். பாபாவின் நினைவைக் கொண்டிருப்பதினால் நாங்கள் இவ்வாறு ஆகுகின்றோம். பாபா, இது உங்களுடைய அற்புதமே! பாபா, நீங்கள் எங்களை உலக அதிபதிகளாக ஆக்குவீர்கள் என்பதை முன்னர் அறிந்திருக்கவில்லை. தீவிர பக்தி செய்யும் மக்கள் ஒரு காட்சியைப் பெறுவதற்காக தங்களுடைய கழுத்தை வெட்டி தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்கள். அப்படிச் செய்வதனால் மாத்திரம் அவர்கள் ஒரு காட்சியைப் பெறுவார்களா? அத்தகைய பக்தர்களை மாத்திரம் கொண்டதே பக்தர்களின் மாலையாகும். பக்தர்களுக்கும் மரியாதை உண்டு. கலியுக பக்தர்கள் சக்கரவர்த்திகளைப் போன்றவர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைமீது அன்பு செலுத்துகிறீர்கள். நீங்கள் தந்தை ஒருவரைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யக் கூடாது. உங்களுடைய பாதை மிகத் தெளிவானதாக இருக்க வேண்டும். இப்பொழுது எங்கள் 84 பிறவிகள் முடிவிற்கு வந்துவிட்டது. நாங்கள் இப்பொழுது தந்தையின் கட்டளைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். காமமே மிகக் கொடிய எதிரியாகும். நாங்கள் காமத்தினால் தோற்கடிக்கப்படக் கூடாது. நீங்கள் அதனால் தோற்கடிக்கப்பட்டால், வருந்தவேண்டி ஏற்படுவதால், நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் எலும்புகள் முற்றிலும் நொறுக்கப்பட்டுவிடும். மிகத் தீவிர தண்டனையைப் பெறுவீர்கள். உங்கள் துரு அகற்றப்படுவதற்கு பதிலாக, நீங்கள் மேலும் துருப்பிடித்தவர்கள் ஆகிவிடுவீர்கள்! உங்களால் யோகம் செய்ய முடியாதிருக்கும். நினைவில் நிலைத்திருப்பது மிகக் கடினமாகும். முழு நேரமும் பாபாவின் நினைவிலிருப்பதாகச் சிலர் பொய்யான கதைகளைக் கூறுகிறார்கள். எனினும் இதை அவர்களால் செய்ய முடியாது என்பது பாபாவிற்குத் தெரியும். மாயை இதில் பல புயல்களை உருவாக்குகிறாள். சிலர் தம்மைத் தொந்தரவு செய்யும் கனவுகளையும் காண்கின்றார்கள். ஞானம் மிகவும் சதாரணமானது. சிறு குழந்தைகளாலும் அதை விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், நினைவு யாத்திரையிலேயே பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் அதிகளவு சேவை செய்கிறீர்கள் என நினைத்து சந்தோஷமடையாதீர்கள். நீங்கள் உங்கள் நினைவின் மறைமுகமான சேவையை தொடர்ந்தும் செய்யவேண்டும். சிவபாபாவின் புத்திரனாக இருக்கின்ற ஒரேயொரு போதையே இவருக்குள்ளது. பாபா உலகத்தைப் படைப்பவர். ஆகவே நிச்சயமாக நான் சுவர்க்கத்தின் அதிபதியாகுவேன். 'நான் இளவரசன் ஆகப்போகின்றேன்" எனும் உள்ளார்ந்த சந்தோஷம் இருக்கவேண்டும். ஆனால் குழந்தைகளாகிய உங்களைப் போன்று என்னால் அதிகளவு நினைவில் இருக்க முடியவில்லை. பாபா பல விடயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. பிரசித்தி பெற்ற மக்களுக்கு பாபா அதிகளவு உபசாரம் செய்கிறார் என நினைத்து, குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் பொறாமை கொள்ளக் கூடாது. அவர்களுக்கு நன்மையளிப்பதற்காக பாபா ஒவ்வொருவருடைய நாடியையும் பார்த்து, அதற்கேற்ப அவர்களுடன் பழகுவார். ஒவ்வொரு மாணவனுடனும் எப்படிப் நடந்துகொள்ள வேண்டும் என்பது ஆசிரியருக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இதையிட்டு எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து உங்களுடனேயே பேசுங்கள். ஆத்மாவிலுள்ள துருவை அகற்றுவதற்கு நினைவு யாத்திரையில் இருங்கள்.

2. எவ்விடயங்களிலும் சந்தேகமடைந்து பொறாமை படாதீர்கள். உங்களுடைய உள்ளார்ந்த சந்தோஷத்தைப் பேணுங்கள். உங்களுடைய மறைமுகமான சேவையைத் தொடருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் யோக்யுக்தான, யுக்தியுக்தான சேவையாளர்களாக இருந்து, சேவை செய்யும் பொழுது, அப்பால் நிலைத்திருப்பீர்களாக.

யோக்யுக்தாகவும் யுக்தியுக்தாகவும் இருப்பவர்கள் சேவை செய்யும் பொழுது, எப்பொழுதும் அப்பால் இருக்கிறார்கள். நிறைய சேவை செய்ய இருப்பதனால் அவர்களால் சரீரமற்றவர்கள் ஆக முடியவில்லை என்றில்லை. அது உங்களுடைய சேவை இல்லை ஆனால் அதனை தந்தையே உங்களுக்குக் கொடுத்துள்ளார் என்பதனை நினைவு செய்தால், நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பீர்கள். பயிற்சி செய்யுங்கள்: நான் நம்பிக்கை பொறுப்பாளன், நான் பந்தனத்திலிருந்து விடுபட்டிருக்கிறேன். இக்கட்டான நேரங்களில் இறுதி ஸ்திதியான கர்மாதீத் ஸ்திதியை பயிற்சி செய்யுங்கள். அவ்வப்பொழுது உங்கள் எண்ணப் போக்குவரத்தை நீங்கள் கட்டுப்படுத்துவதைப் போன்று, இக்கட்டான நேரங்களில், இறுதி ஸ்திதியை நீங்கள் அனுபவம் செய்தால், இறுதி கணங்களில் உங்களால் சிறப்புச்சித்தி எய்த முடியும்.

சுலோகம்:
நல்லாசிகள், சாக்குப்; போக்குளை தீர்வுகளாக மாற்றுகின்றது.