04.11.23 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தூய்மையாகி, முக்தியும் ஜீவன் முக்தியும் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாகுங்கள். தூய்மையற்ற ஆத்மாக்கள் முக்தி அல்லது ஜீவன் முக்தி பெறுவதற்குத் தகுதியற்றவர்கள். எல்லையற்ற தந்தை உங்களை எல்லையற்ற முறையில் தகுதி வாய்ந்தவர்களாக ஆக்குகின்றார்.
பாடல்:
தந்தைக்கு விசுவாசமானவர் என்று நீங்கள் யாரை அழைப்பீர்கள்? அவர்களின் பிரதான அடையாளங்களைக் கூறுங்கள்.பதில்:
தந்தையின் ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றுபவர்களும், சரீரமற்றிருப்பதைப் பயிற்சி செய்பவர்களும், கலப்படமற்ற நினைவில் நிலைத்திருப்பவர்களுமே தந்தைக்கு விசுவாசமானவர்கள். அவ்வாறான தகுதிவாய்ந்த குழந்தைகளாலேயே அனைத்தையும் கிரகிக்க முடியும். அவர்களுக்குச் சதா சேவை பற்றிய எண்ணங்களே தொடர்ந்து இருக்கும். அவர்களது புத்தி எனும் பாத்திரம் தொடர்ந்து தூய்மையாகிக் கொண்டிருக்கும். அவர்களால் என்றுமே தந்தையை விட்டு விலக முடியாதிருக்கும்.பாடல்:
இதயம் தனக்கு ஆதரவளித்தவருக்கு நன்றி கூறுகின்றது....ஓம் சாந்தி.
குழந்தைகள் தமது முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக நன்றி கூறுகிறார்கள். அனைவரும் ஒரேயளவிற்கு நன்றி கூறுவதில்லை. புத்தியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாகவும், இதயபூர்வமாக அளவற்ற அன்புடன் தந்தையின் சேவையில் ஈடுபட்டவர்களாகவும் இருப்பவர்களே உளமார நன்றி கூறுகிறார்கள்: பாபா, இது உங்கள் அற்புதமே. எங்களுக்கு எதுவுமே தெரியாது. உங்களைச் சந்திப்பதற்குத் தகுதியற்றவர்களாக இருந்தோம். அது உண்மையே. மாயை அனைவரையும் தகுதியற்றவர்களாக ஆக்கிவிட்டாள். உங்களைச் சுவர்க்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குவது யார் என்றோ அல்லது நரகத்துக்குத் தகுதி வாய்ந்தவர்களாக ஆக்குவது யார் என்றோ அவர்களுக்குத் தெரியாது. தந்தையே உங்களை முக்தி, ஜீவன் முக்தி ஆகிய இரண்டுக்கும் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குகின்றார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இல்லாவிட்டால் எவருமே அவற்றுக்குத் தகுதியாக இல்லை. தாங்கள் தூய்மையற்றவர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த உலகம் தூய்மையற்றது. சாதுக்கள், புனிதர்கள் போன்றோருக்கும் தந்தையைத் தெரியாது. இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். தந்தையே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே நியதி. அவர் இங்கே வந்து உங்களைத் தகுதி வாய்ந்தவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் ஆக்க வேண்டும். மேலே அவர் இருக்கும் இடத்தில் இருந்து உங்களைத் தூய்மையாக்க அவரால் முடியுமாயின், இந்தளவிற்கு நீங்கள் ஏன் தகுதியற்றவர்களாக ஆகிவிட்டீர்கள்? குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும் நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிக்கேற்ப உங்கள் புத்தியிலுள்ள நம்பிக்கையும் வரிசைக்கிரமமானதாகவே இருக்கின்றது. தந்தையின் அறிமுகத்தை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்ற விவேகம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நிச்சயமாகக் கூறப்படுகின்றது: சிவனுக்கு வந்தனங்கள். அவர் மாத்திரமே அதிமேலானவராகிய தாயும் தந்தையுமாவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் படைப்புக்களே. அவர்களைப் படைத்தவர் நிச்சயமாகத் தந்தையாகவே இருக்க வேண்டும். தாயும் இருக்க வேண்டும். நிச்சயமாக அனைவருக்கும் தந்தையாகிய கடவுள் ஒரேயொருவரே ஆவார். அசரீரியான ஒருவர் மாத்திரமே கடவுள் என அழைக்கப்படுகின்றார். படைப்பவர் எப்பொழுதும் ஒரேயொருவர் மாத்திரமே. அனைத்திற்கும் முதலில் நீங்கள் அல்பாவை அறிமுகப்படுத்த வேண்டும். சாமர்த்தியமாக அறிமுகப்படுத்துவது எவ்வாறு என்றும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் மாத்திரமே ஞானக்கடல் ஆவார். அவர் ஒருவரே வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார். அக் கடவுள் யார்?; முதலில் அல்பாவை இனங்கண்டு கொள்ளச் செய்யுங்கள். தந்தை அசரீரியானவர். ஆத்மாக்களும் அசரீரியானவர்கள். அந்த அசரீரியான தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் யாரோ ஒருவர் மூலமாகவே உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். வேறு எவ்வாறு அவர் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்களாக்கினார்? சத்தியயுக இராச்சியத்தை ஸ்தாபித்தது யார்? சுவர்க்கத்தைப் படைத்தவர் யார்? நிச்சயமாக, தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே ஆவார். அது அசரீரியானவராகவே இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். கிருஷ்ணர், பிரம்மா, விஷ்ணு, சங்கர் தந்தை என்று அழைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் படைப்புக்கள். சூட்சுமவாசிகள் படைக்கப்படும் பொழுது, அவர்களும் படைப்புக்கள் ஆகுகின்றார்கள், அப்பொழுது, பௌதீக உலகிலுள்ளவர்களை எவ்வாறு கடவுள் என்று அழைக்க முடியும்? நினைவுகூரப்பட்டது: தேவர்களுக்கு வந்தனங்கள். மற்றையது, சிவனுக்கு வந்தனங்கள். இதுவே பிரதானமான விடயமாகும். கண்காட்சியில் ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்த மாட்டீர்கள். இங்கே, ஒவ்வொருவருக்கும் நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்தி, அவர்களுக்குள் நம்பிக்கை ஏற்படும் வகையில் அவர்களைத் தூண்டுதல் வேண்டும். எவர் வந்தாலும் முதலில் அவர்களிடம் கூறுங்கள்: வாருங்கள், கடவுளுடைய ஒரு காட்சியை நாங்கள் உங்களுக்குக் கொடுப்போம். நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும்;. உங்களுக்குக் கீதையில் இராஜயோகம் கற்பித்தவர் கிருஷ்ணர் அல்ல, தந்தையே ஆவார். தந்தையே கீதையின் கடவுள். இதுவே முதலாவது விடயமாகும். கடவுளாகிய கிருஷ்ணர் பேசுகிறார் என்றல்ல. கடவுளாகிய உருத்திரர் பேசுகிறார் என்றும் அல்லது கடவுளாகிய சோமநாதர் பேசுகிறார் என்றும் அல்லது கடவுளாகிய சிவன் பேசுகிறார் என்றும் கூறப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்;க்கைச் சரிதமும் தனிப்பட்டதாகும். ஒன்று இன்னொன்றைப் போல இருக்க முடியாது. யார் வந்தாலும் எல்லாவற்றுக்கும் முதலில் இக் கருத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இதுவே விளங்கப்படுத்தப்பட வேண்டிய பிரதானமான விடயமாகும். இது பரமாத்மாவாகிய பரமதந்தையின் தொழிலாகும். அவர் தந்தையானவர், இவர் ஒரு குழந்தையும் ஆவார். அவர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் ஆனால் இவரோ சுவர்க்கத்தின் இளவரசர். இதை நீங்கள் மிகத்தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். பிரதானமானது கீதையேயாகும். ஏனெனில், ஏனைய சமயநூல்கள் அனைத்தும் அதனையே அடிப்படையாகக் கொண்டவை ஆகும். பகவத் கீதையே சாஸ்திர சிரோன்மணி என்றும் சமயநூல்களின் தாய் என்றும் கூறப்படுகின்றது. மக்கள் வினவுகின்றார்கள்: நீங்கள் வேதங்களையும், சமயநூல்களையும்; நம்புகின்றீர்களா? ஓ, அனைவரும் தங்களுடைய சொந்த சமயநூல்களை நிச்சயமாக நம்புவார்கள். அவர்கள்; சமயநூல்கள் அனைத்தையும் நம்புவதில்லை. ஆம், நிச்சயமாகச் சகல சமயநூல்களும் இருக்கின்றன. ஆனால், சமயநூல்;களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, நீங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளும் தந்தையைப் பற்றி அறிந்து கொள்வதே முதலாவது பிரதான விடயமாகும். சமயநூல்களிலிருந்து நீங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதில்லை. தந்தையிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை கொடுத்துள்ள ஞானத்தையும் ஆஸ்தியையும் பற்றிய புத்தகம் ஒன்றை அவர்கள் தயாரித்திருக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் கீதையையே எடுத்துக் கொள்ள வேண்டும். கீதையின் கடவுள் யார்? அதில் இராஜயோகம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இராஜயோகம் நிச்சயமாகப் புதிய உலகத்துக்குரியதாகும். கடவுள் வந்து அனைவரையும் தூய்மையற்றவர்களாக ஆக்குவதில்லை. அவர் தூய்மையான சக்கரவர்த்திகளையே உருவாக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, “இவரே எனது தந்தை என்ற நம்பிக்கை உண்மையாகவே எனக்கு இருக்கிறது” என்று அவர்களை எழுதச் செய்யுங்கள். முதலில் விளங்கப்படுத்த வேண்டும்;: சிவனுக்கு வந்தனங்கள். நீங்களே தாயும், நீங்களே தந்தையும். புகழ் அத்தந்தைக்கே உரியது. பக்தியின் பலனைக் கொடுப்பதற்குக் கடவுள் இங்கே வர வேண்டும். பக்தியின் பலன் என்ன என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அதிகளவு பக்தி செய்தவர்களே அந்தப் பலனைப் பெற்றுக் கொள்வார்கள். இந்த விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. உங்கள் மத்தியிலும், உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே நீங்களும்; இதனை அறிந்துள்ளீர்கள். அவர் உங்கள் எல்லையற்ற தாயும் தந்தையும் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஜெகதாம்பாளும் ஜெகத்பிதாவும் நினைவுகூரப்பட்டுள்ளார்கள். ஆதாமும் ஏவாளும் மனிதர்கள் என்றே புரிந்து கொள்ளப்படுகின்றார்கள். ஏவாளைத் தாய் என்று அழைக்கிறார்கள். ஏவாள் யார் என்பதை எவருமே சரியான முறையில் அறியவில்லை. தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். ஆம், எவருமே உடனடியாகப் புரிந்து கொள்வதில்லை. கற்பது என்றால் காலம் எடுக்கும். கற்பதனால்; அவர்கள் படிப்படியாகச் சட்டத்தரணிகளாக ஆகுகின்றார்கள். நிச்சயமாக ஓர் இலக்கும் குறிக்கோளும் இருக்கின்றது. நீங்கள் தேவர்களாக ஆகவேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்களே தாயும் தந்தையும் என்று மக்கள் பாடுகிறார்கள். பின்பு தூய்மையாக்குபவரே வாருங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எனவே, தூய்மையற்ற உலகம் என அழைக்கப்படுவது எது, தூய உலகம் என அழைக்கப்படுவது எது? கலியுகம் மேலும் 40,000 வருடங்களுக்கு நிலைத்திருக்குமா? நல்லது, உங்களைத் தூய்மையாக்குபவர் தந்தை ஒருவரே, இல்லையா? சுவர்க்கத்தைப் படைப்பவர் தந்தையாகிய கடவுளே. அது கிருஷ்ணராக இருக்க முடியாது. அவர் தன் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டார். அந்த ஸ்ரீ கிருஷ்ணர் சுவர்க்கத்து இளவரசர், சிவபாபாவோ சுவர்க்கத்தைப் படைப்பவர். அவர் முதல் இளவரசராகிய படைப்பு ஆவார். இதை நீங்கள் தெளிவாக்கி, பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும். அப்பொழுது, உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும். அப்பொழுது அவர்கள் படைப்பவரைப் பற்றியும், படைப்பைப் பற்றியும் புரிந்து கொள்வார்கள். படைப்பவரே ஞானம் நிறைந்தவர். அவரே உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பவர். அவர் ஓர் அரசர் அல்லர். அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை அரசர்களுக்கு அரசர்களாக்குகிறார். கடவுள் இராஜயோகத்தைக் கற்பித்தார். ஸ்ரீகிருஷ்ணர் இராஜ அந்தஸ்தை அடைந்தார். அதை அவர் இழந்தார். மீண்டும் அவர் அதனை அடைய வேண்டும். படங்களைப் பயன்படுத்தி இதனை மிக நன்றாக விளங்கப்படுத்தலாம். தந்தையின் தொழில் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. ஸ்ரீகிருஷ்ணருடைய பெயரைப் புகுத்தியதால் பாரதம் ஒரு சிப்பியைப் போல் ஆகுகின்றது. சிவபாபாவை அறிந்து கொள்வதன் மூலம் பாரதம் ஒரு வைரம் போலாகுகின்றது. எவ்வாறாயினும், அவர் உங்கள் தந்தை என்பது முதல்pல் உங்கள் புத்தியில் பதிய வேண்டும். முதன் முதலில் தந்தையே சுவர்க்கம் என்னும் புதிய உலகைப் படைத்தார். இது இப்பொழுது பழைய உலகம் ஆகும்;. இராஜயோகம் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்களும் இராஜயோகம் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் கீதையிலிருந்து அதைக் கற்றிருக்கிறார்கள். இது உங்களுக்கும் இப்பொழுது தெரியும். நீங்கள் இப்பொழுது தந்தை யார் என்பதை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முயற்சி செய்கின்றீர்கள். அவர் எங்கும் நிறைந்தவரல்லர். அவர் எங்கும் நிறைந்தவராயின்;, எவ்வாறு அவர் இராஜயோகத்தைக் கற்பித்திருக்க முடியும்? இத் தவறு பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டும். சேவையில் நன்கு ஈடுபட்டிருக்கின்றவர்களே இதைப் பற்றிச் சிந்திப்பார்கள். நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, சரீரமற்றவர்களாகி, மன்மனாபவ ஆக நிலைத்திருந்து, ஒரு விசுவாசமான மணவாட்டியாகி, தந்தைக்கு விசுவாசமாக நிலைத்திருக்கும் பொழுதே, அதாவது, நீங்கள் ஒரு தகுதிவாய்ந்த குழந்தையாகும் பொழுதே உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியும். தந்தை உங்களுக்குக் கட்டளையிடுகிறார்: முடிந்த வரையில் தொடர்ந்தும் நினைவை அதிகரியுங்கள். சரீர உணர்வுக்கு வருவதால் நீங்கள் என்னை நினைவு செய்வதும் இல்லை, உங்கள் புத்தி தூய்மையாகுவதும் இல்லை. தங்கப் பாத்திரத்திலேயே சிங்கத்தின்பால் வைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. இங்கே தந்தைக்கு விசுவாசமான ஒரு பாத்திரம் தேவைப்படுகின்றது. கலப்படமற்றவர்களாகவும் தந்தைக்கு விசுவாசமானவர்களாகவும் இருப்பவர்கள் மிகச்சிலரேயாவர்;;;; சிலருக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் சிறு குழந்தைகள் போல் இருக்கிறார்கள். அவர்கள் இங்கே இருந்தாலும் அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை. இது சிறு குழந்தைப் பருவத்தில் விவாகம் செய்வது போன்றதேயாகும். பெற்றோர் அவர்களைத் தங்கள் மடியில் அமர்த்தித் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாகவும், அளவற்ற அன்புடையவர்களாகவும் இருந்து விரைவில் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதுவும் அது போன்றதே. அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள விரும்பினாலும் அவர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. நாங்கள் மம்மா, பாபாவுக்கு உரியவர்கள். அவரிடமிருந்து நாங்கள் எங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. இது ஓர் அதிசயமே. அவர்கள் இங்கே ஐந்தாறு வருடங்கள் இருந்து விட்டு, பின்பு கணவனாகிய தந்தையை விவாகரத்துச் செய்து விடுகிறார்கள். மாயை அவர்களைப் பெரிதும் துன்புறுத்துகின்றாள். எல்லாவற்றுக்கும் முதலில் அவர்களிடம் கூறுங்கள்: சிவனுக்கு வந்தனங்கள். அவரே பிரம்மா, விஷ்ணு, சங்கரரையும் படைப்பவர். சிவன் ஞானக்கடலாவார். எனவே, இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? திரிமூர்த்திக்கு அருகில் இடமிருப்பதால், அதில் நீங்கள் எழுத வேண்டும்: சிவபாபாவின் வேலையும் கிருஷ்ணரின் வேலையும் வெவ்வேறானவை. இதை முதலில் நீங்கள் விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களின் புத்தி திறந்து கொள்ளும். இக்கல்வி எதிர்காலத்திற்கானது. இதைப் போல் வேறு எந்தக்; கல்வியும் இல்லை. இந்த அனுபவங்களை நீங்கள் சமயநூல்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் சத்தியயுக ஆரம்பத்திற்காகக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நாங்கள் பாடசாலைக் கல்வியை முடித்து, இறுதிப் பரீட்சைக்கு அமர்வோம். அங்கே சென்று நாம் ஆட்சிபுரிவோம். கீதையை உரைப்பவர்களால் இத்தகைய விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் தந்தையை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். தந்தை ஒருவரே திரிகாலதரிசியாவார். உலகில் மனிதர்கள் எவருமே திரிகாலதரிசிகள் அல்லர். உண்மையில் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் பின்பு பூஜிப்பவர்களாக ஆகுகின்றார்கள். நீங்களே பக்தி செய்தவர்கள். இது வேறு எவருக்கும் தெரியாது. பக்தி செய்தவர்களே முதல்தரமானவர்கள். அவர்களே பிரம்மாவும் பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களும் ஆவர். இவரே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுகின்றார். முதல்தரமான பூஜிக்கத்தகுதியுடையவராக இருந்தவரே, பின்னர் முதல்தரமான பூஜிப்பவராகுகின்றார். பின்பு அவர் மீண்டும் பூஜிக்கத்தகுதியுடையவராகுவார். முதலாவதாகப் பக்தியின் பலனைப் பெறுகின்றவரும் அவரே. பிராமணர்கள் கற்று, அதன் பின் தேவர்கள் ஆகுகின்றார்கள். இது வேறெங்குமே எழுதப்படவில்லை. உங்களை அம்பெய்யத் தூண்டுகின்றவர் வேறு ஒருவரே என்பதை பீஷ்ம பிதாமகர் போன்றோர் அறிந்துள்ளார்கள். ஏதோ ஒரு சக்தி அங்கு இருக்கின்றது என்பதை நிச்சயமாக அவர்கள் புரிந்து கொள்வார்கள். இப்பொழுதும் கூறுகிறார்கள்: அவர்களுக்கு ஏதோ ஒரு சக்தி கற்பிக்கின்றது. பாபா பார்க்கிறார்: இவர்கள் அனைவரும் என் குழந்தைகள். அவர் (சிவபாபா) அனைத்தையும் இக் கண்களால் (பிரம்மாவின் கண்கள்) பார்ப்பார். சரீரத்தை விட்டுப் பிரிந்த ஆத்மாவுக்கு உணவளிக்கும் போது அந்த ஆத்மா வந்து இவர் இன்னார் என்று பார்க்கிறார். அந்த நபர் உணவருந்தும் போது அவருடைய கண்கள் வரவழைக்கப்பட்ட ஆத்மாவினுடைய கண்களைப் போல் ஆகி விடுகின்றன. ஆத்மா தற்காலிகக் கடன் ஒன்றைப் பெறுகின்றார். இது பாரதத்திலேயே இடம்பெறுகின்றது. புராதன பாரதத்தில் அனைவருக்கும் முதலில் இராதையும் கிருஷ்ணரும் உள்ளார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள் அவ்வளவு மேன்மையானவர்களாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் குறைந்தளவுக்கே சித்தியடைந்தார்கள். முதன்முதலில் கிருஷ்ணருடனேயே புகழ் ஆரம்பமாகுகின்றது. இராதை, கிருஷ்ணர் இருவருமே தமது சொந்த இராச்சியங்களில் வருகிறார்கள். குழந்தைகள் அவர்களது பெற்றோரை விடவும் அதிகளவில் பெயர் பெறுகின்றார்கள். இவையெல்லாம் மிகவும் அற்புதமான விடயங்கள்! மறைமுகமான சந்தோஷம் இருக்கின்றது. தந்தை கூறுகின்றார். நான் சாதாரண சரீரத்திலேயே பிரவேசிக்கிறேன். இத்தனை பெரிய தாய்மார்கள் குழுவொன்றை அவர் பராமரிக்க வேண்டியிருப்பதால், தொடர்ந்து செலவினங்களைப் பராமரிக்கக்கூடியவருடைய சாதாரண சரீரமொன்றில் நான் பிரவேசித்திருக்கிறேன். இது சிவபாபாவின் பண்டாரா (களஞ்சியம்). அவர் அழிவற்ற ஞான இரத்தினங்களின் அப்பாவிப் பொருளாளர். நீங்கள் பராமரிக்கப்படுகின்ற, தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். நீங்கள் முதலில் ஆரம்பியுங்கள்: கடவுள் சிவன் பேசுகிறார்;. அவரே அனைவரையும் படைப்பவர். பின்னர் கேளுங்கள்: கிருஷ்ணர் எவ்வாறு ஞானக்கடல் என்றும் அல்லது தந்தையாகிய கடவுள் என்றும் அழைக்கப்பட முடியும்;. வாசிக்கும் போது அவர்கள் புத்தியில் மிக நன்றாகப் பதியும் அளவுக்கு எழுத்துக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். சிலர் இதைப் புரிந்து கொள்வதற்கு இரண்டு, மூன்று வருடங்கள் எடுக்கிறார்கள். கடவுள் பக்தியின் பலனைக் கொடுப்பதற்கே வந்துள்ளார். தந்தை பிரம்மா மூலம் இந்த யாகத்தை உருவாக்கியுள்ளார். அவர் பிராமணர்களுக்குக் கற்பித்து, அவர்களைத் தேவர்களாக்கினார். அதன் பின் நீங்கள் கீழிறங்க வேண்டும். இது மிக நல்லதொரு விளக்கம். முதன்முதல் நீங்கள் ஸ்ரீகிருஷ்ணர் சுவர்க்கத்தின் இளவரசர் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் அல்ல. எங்கும் நிறைந்தவர் என்ற கருத்தால் மக்கள் முற்றிலும் தமோபிரதானாகி விட்டார்கள். அவர்கள் தங்கள் இராச்சிய அதிகாரத்தைக் கொடுத்தவரையே மறந்து விட்டார்கள். பாபா ஒவ்வொரு சக்கரமும் இராச்சியத்தைக் கொடுக்கிறார். பின்பு நாம் அவரை மறந்து விடுகிறோம். இது மிகவும் அற்புதமானது. நாள் முழுவதும் நீங்கள் சந்தோஷ நடனமாட வேண்டும். பாபா எங்களை உலக அதிபதிகளாக ஆக்குகின்றார்! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கலப்படமற்ற முறையில் தந்தைக்கு விசுவாசமானவர்களாக இருங்கள்;;. நினைவு செய்வதை அதிகரித்து, உங்கள் புத்தியைத் தூய்மையாக்குங்கள்.2. தந்தையின் அறிமுகத்தைச் சாதுரியமான முறையில் கொடுப்பதற்கான வழிகளை உருவாக்குங்கள். ஞானக் கடலைக் கடைந்து, அல்பா யார் என்பதை நிரூபியுங்கள். புத்தியில் நம்பிக்கை கொண்டிருந்து, சேவை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
சுயமாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், உலக மாற்றத்திற்கு கருவியாகுகின்ற மேன்மையானதொரு சேவையாளர் ஆகுவீர்களாக.உங்கள் சுயமாற்றத்தின் மூலம் உலக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை குழந்தைகளாகிய நீங்கள் செய்திருக்கிறீர்கள். உலக மாற்றத்திற்கான அடிப்படை சுயமாற்றமாகும். ஓர் ஆத்மாவையிட்டு நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களை மாற்றாமல் அந்த ஆத்மாவில் எந்த மாற்றமும் ஏற்பட மாட்;டாது. ஏனெனில், இன்றைய உலகில் மக்கள் வெறுமனே எதனையோ கேட்பதால் மாறப் போவதில்லை. ஆனால் அவர்கள் மாற்றத்தை பார்ப்பதால் மாறுகிறார்கள். உங்களுக்கு பந்தனத்தை விளைவிக்கின்ற பலர், உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை பார்ப்பதால் தாம் மாறுகிறார்கள். எனவே, அவ்வாறு செய்வதன் மூலம் அதனை செய்து காட்டுங்கள், உங்களை மாற்றுவதன் மூலம் அதனை செய்து காட்டுவதே மேன்மையான சேவையாளர் ஆகுவதாகும்.
சுலோகம்:
உங்கள் நேரத்தின், எண்ணங்களின், வார்த்தைகளின் சக்தியை வீணானதில் இருந்து சிறப்பானதாக ஆக்கும் போது நீங்கள் சக்திசாலி ஆகுகிறீர்கள்.