04.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் ஆன்மீக யோகமானது என்றென்றும் தூய்மை ஆகுவதற்கானது. ஏனெனில் நீங்கள் தூய உலகை ஸ்தாபிப்பதற்காகத் தூய்மைக்கடலுடன் யோகம் செய்கிறீர்கள்.

கேள்வி:
தங்கள் புத்தியில் உறுதியான நம்பிக்கையுடைய குழந்தைகள் எல்லாவற்றிற்கும் முதலில் எந் நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்? அந் நம்பிக்கையின் அடையாளங்கள் எவை?

பதில்:
முதலாவதாகவும் முதன்மையானதாகவும் நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள், நீங்கள் அவரிடமிருந்தே தேவ இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பது அவசியமாகும். உங்களுக்கு இந்நம்பிக்கை இருக்கும்பொழுது, நீங்கள் செய்து வரும் பக்தி இப்பொழுது முடிவடைந்து, கடவுளையே இப்பொழுது கண்டுகொண்டீர்கள் என்பது உடனடியாக உங்கள் புத்தியில் பிரவேசிக்கும். புத்தியில் உறுதியான நம்பிக்கை உடைய குழந்தைகளே வாரிசுகள் ஆகுகிறார்கள்.

பாடல்:
ஓ தூரதேசப் பயணியே.

ஓம்சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து அனைவரும் தூரதேசப் பயணிகளே என விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்கள் அனைவரும் மிக, மிகத் தூரதேசமான பரந்தாமத்து வாசிகளே. இதுவும் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரிய ஒளியோ அல்லது சந்திர ஒளியோ இல்லாத தொலைதூரத்திலேயே ஆத்மாக்கள் வசிக்கின்றனர். அசரீரி உலகிலோ அல்லது சூட்சும உலகிலோ ஒரு நாடகம் கிடையாது. மனித உலகம் என அழைக்கப்படுகின்ற, பௌதீக உலகின் நாடகமே இருக்கின்றது. அசரீரி உலகிலோ அல்லது சூட்சும உலகிலோ 84 பிறவிகளின் சக்கரம் கிடையாது. சக்கரம் மனித உலகிலேயே காட்டப்பட்டுள்ளது. மனித உலகம் என்றால் என்ன? மனிதர்கள் எதனால் ஆக்கப்பட்டுள்ளனர்? ஒரு மனிதர் ஓர் ஆத்மாவினாலும் ஒரு சரீரத்தினாலும் ஆக்கப்பட்டுள்ளார். ஒரு பொம்மை (சரீரம்) ஐந்து தத்துவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது, ஓர் ஆத்மா அதனுள் பிரவேசித்து, தனது பாகத்தை நடிக்கின்றார். ஆகவே, அனைவரும் தூரதேசத்து வாசிகளே. எவ்வாறாயினும், உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மனிதர்களுக்கு நம்பிக்கை கிடையாது. நீங்கள் என்னைத் தூரதேசவாசி என அழைக்கின்றீர்கள், ஆனால் ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரினதும் வசிப்பிடமும் அதுவே" எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஏனைய நாடகங்களில் ஒரு பாகத்தை நடிப்பவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய சொந்த வீடுகள் உள்ளன. அவர்கள் அங்கிருந்து தங்கள் பாகங்களை நடிப்பதற்கு வருகின்றார்;கள். இங்கு, நீங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள் எனவும், நீங்கள் அனைவரும் பரந்தாமமாகிய, ஒரே வீட்டில் வசிப்பவர்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அது மகா பிரம்ம தத்துவம், இதுவோ ஆகாய தத்துவம் ஆகும். நீங்கள் இங்கு உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள். இரவும் பகலும் இருக்கின்றன, இதனாலேயே சூரியனும் சந்திரனும் இருக்கின்றன. அசரீரி உலகில் பகலோ அல்லது இரவோ கிடையாது. சூரியனும், சந்திரனும் தேவர்கள் அல்ல் அவை மேடையை ஒளியூட்டும் ஒளிகள். சூரியன் பகலில் ஒளியைக் கொடுக்கிறது. இரவில் சந்திர ஒளி இருக்கின்றது. இப்பொழுது, மனிதர்கள் அனைவரும் முக்தி தாமம் செல்வதற்கு விரும்புகின்றனர். கடவுள் மேலே வசிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் கடவுளை நினைவுசெய்து 'ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே!" எனக் கூறும்பொழுது அவர்களின் புத்தி மேலே செல்கின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், ஆனால் எங்கும் அறியாமையே இருக்கிறது. நீங்கள் இவ்விடத்து வாசிகள் அல்ல என்பதை அறிவீர்கள். அவர் எங்கள் தந்தை. அவர்கள் 'ஓ தந்தையாகிய கடவுளே! எனத் தங்கள் வாயினால் கூறியபின்னர், 'அனைவரும் தந்தையே, கடவுள் சர்வவியாபி" எனக் கூறுகிறார்கள். அனைவரும் தந்தை அல்ல எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள். அவர்கள் இதனை அறியாததால் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை, சச்சரவில் ஈடுபடுகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள், அத்துடன் நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். புத்தியில் நம்பிக்கை உடையவர்களும் வரிசைக்கிரமமானவர்களே. லௌகீக உறவுமுறையில் நீங்கள் உங்களுடைய தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறப் போகின்றீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்பொழுதும் இருக்கிறது. இங்கு, மாயை மீண்டும் மீண்டும் உங்கள் முகத்தைத் தந்தையிடமிருந்து திருப்பி விடுகின்றாள். நீங்கள் சர்வசக்திவான் தந்தைக்கு உரியவர்கள் ஆதலால், மாயையும் ஒரு சர்வசக்திவானாக உங்களுடன் சண்டையிடுகிறாள். இது ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்வதற்கான யுத்தம் ஆகும். யுத்தம் மிகவும் பிரபல்யமானது, ஆனால் அவர்கள் சமயநூல்களில் காட்டியிருப்பதைப் போல கௌரவர்கள், பாண்டவர்கள் என எதுவும் கிடையாது. இராவணனுடனான இந்த யுத்தம் மிகவும் பயங்கரமானது. ஆத்மாக்களாகிய நாங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்து முழுமையானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகுவதற்கு விரும்புகின்றோம். ஆதற்கு யோகத்தைத் தவிர வேறெந்த வழியும் கிடையாது. யோகத்தைக் கற்கும் ஏனைய அனைவரும் தூய்மையைக் கடைப்பிடிப்பதற்காக அதனைச் செய்வதில்லை. அவை அனைத்தும் ஒரு தற்காலிகமான பௌதீக யோகமாகும், ஆனால் இதுவோ என்றென்றும் தூய்மை ஆகுவதற்கான ஆன்மீக யோகம். தூய்மைக்கடலுடன் யோகம் செய்வதால் நாங்கள் தூய்மை ஆகுகின்றோம். 'இந்த யோகத் தீயின் மூலம் உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படுகின்றன" எனத் தந்தை கூறுகிறார். இவ்;வுலகம் தூய்மையற்றது என உங்கள் புத்தியும் கூறுகிறது. இது சத்தியயுகமா அல்லது கலியுகமா என எவரிடமேனும் வினவுங்கள். எவரும் இதனைச் சத்தியயுகம் என அழைக்க மாட்டார்கள். சத்தியயுகம் புதிய உலகில் இருக்கின்றது. அது சத்தியயுகம் எனவும், இது கலியுகம் எனவும் அழைக்கப்படுகிறது. பழைய உலகம் கலியுகம் எனவும், புதிய உலகம் சத்தியயுகம் எனவும் அழைக்கப்படுகிறது. இது இப்பொழுது சத்தியயுகமும், கலியுகமும் என உங்களால் கூறமுடியாது; இல்லை. நரகவாசி என்றால் நரகவாசியே. பழைய உலகம் தூய்மையற்ற உலகம் எனவும், புதிய உலகம் தூய உலகம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விளக்கம் மனிதர்களுக்குரியதே. 'ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்! என மிருகங்கள் கூறாமாட்டா. எவரிடம் வினவினாலும், இது நரகம் என்றே அவர்கள் கூறுவார்கள். பாரதமே சுவர்க்கமாகிய புதிய உலகமாக இருந்தது, பாரதம் இப்பொழுது நரகமாகிய பழைய உலகமாக இருக்கின்றது. பாரதம் என்பதைத் தொடர்ந்தும் வலியுறுத்திக் கூறுங்கள். ஏனைய அனைவரும் மத்திய காலத்திலேயே வருகின்றார்கள். எங்களுக்கு அவர்களுடன் எத் தொடர்பும் இல்லை. மறைந்து விட்ட எங்கள் தர்மம் வேறுபட்டதாகும். நீங்கள் இப்பொழுது புத்தியில் நம்பிக்கை உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்பதை அறிவீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து சுய இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், உங்களுக்கு இந்த உறுதியான நம்பிக்கை இருப்பது அவசியமாகும். நீங்கள் ஞானத்தைச் செவிமடுக்கிறீர்கள், அது சிறந்தது; பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். எவ்வாறாயினும், நீங்கள் எல்லையற்;ற தந்தையின் குழந்தைகள் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் கடவுளைச் சந்திப்பதற்குப் பக்தி செய்து வந்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அந்தப் பக்தி இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இப்பொழுது கடவுளே வந்து, எங்களைச் சந்தித்துள்ளார். நாங்கள் அவரிடமிருந்து சூரிய வம்ச அந்தஸ்தாகிய சுய இராச்சியத்தைப் பெறுகின்றோம். நாங்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றோம். செல்வந்தர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கிறார்கள், அவர்கள் ஒரு குழந்தையை மாத்திரமே தத்தெடுக்கிறார்கள், ஆனால் இங்கு எல்லையற்ற தந்தை எண்ணற்ற குழந்தைகள் இருப்பதை விரும்புகிறார். அவர் கூறுகிறார்: எனது குழந்தைகள் ஆகுபவர்களே சுவர்க்கமாகிய ஆஸ்தியைப் பெறுவார்கள். எனக்கு உரியவர்கள் ஆகாதவர்களால் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. அவர்கள் ஸ்ரீமத்தையும் பின்பற்றுவதில்லை. நம்பிக்கை உடையவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நீங்கள் மீண்டும் ஒருமுறை வந்துள்ளீர்கள், ஆகவே நாங்கள் ஒருபொழுதும் உங்கள் கரங்களை நீங்கிச் செல்ல மாட்டோம். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். பின்னர் குழந்தைகள் தாங்கள் பரலோகத் தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளார்கள் என ஏனையோருக்கு விளங்கப்படுத்துகிறார்கள். நாங்கள் அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறோம். பரமாத்மாவாகிய பரமதந்தை எங்களுக்குக் கற்பிக்கி;றார். பலர் பிரம்மகுமார்கள், குமாரிகள் ஆகியிருப்பதால் அவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது, ஆகவே நாங்களும் ஏன் அவ்வாறு ஆகக்கூடாது? நீங்கள் 'நான் இப்பொழுது உங்களுக்கு உரியவர்" என எழுதி பாபாவுக்கு அனுப்ப வேண்டும். தந்தை கூறுவார்: நான் தொலைவில் இல்லை. நான் இங்கு அமர்ந்திருக்கின்றேன். நான் இங்கு பிரசன்னமாகி இருக்கிறேன். நான் இங்கு நடைமுறைரீதியில் இருக்கிறேன். ஜனாதிபதியையிட்டு, அவர் இப் பூமியில் பிரசன்னமாகி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஜனாதிபதி சர்வவியாபி என்பது அதன் அர்த்தமல்ல. அதேபோல் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர் என அழைக்கப்படுகின்ற பரமாத்மாவாகிய பரமதந்தையும் சர்வவியாபியாக இருக்க முடியாது. (சுவர்க்கத்தில்) தந்தை இல்லாதபொழுதிலும் ஒரு நபரேனும் சந்தோஷமற்று இருக்கவில்லை. எனவே மனிதர்களால் எவ்வாறு தந்தை இருக்கும்பொழுது அவ்வளவு சந்தோஷமற்று இருக்க முடியும்? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்காக ஒரு கூட்டை உருவாக்குகின்றார். பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்காக ஒரு கூட்டை உருவாக்குவது போன்று தந்தையும் குழந்தைகளாகிய உங்களுக்காக ஒரு கூட்டை உருவாக்குகின்றார். அவர் உங்கள் மூலமே உங்களுக்காகக் கூட்டை உருவாக்குகிறார். நீங்கள் வசிப்பதற்காகச் சுவர்க்கமாகிய கூடு உருவாக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றினால், சுவர்க்கத்தில் ஆட்சிசெய்வீர்கள். உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால், நீங்கள் இதனை இறுக்கமாகப் பற்றிக் கொள்வீர்கள். நீங்கள் இங்கேயே அமர்ந்திருக்க வேண்டும் என்பதல்ல. நீங்கள் உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் நீங்கிச் செல்லக்கூடாது. அம்மக்கள் தமது வீடுகளையும் குடும்பங்களையும் நீங்கிச் செல்கிறார்கள். அவர்கள் தங்கள் குருவையே தங்கள் கடவுளாகக் கருதுகிறார்கள். அவர்கள் மரணித்து வாழ்வதில்லை. நீங்கள் மரணித்து வாழ்ந்து, பின்னர் சத்தியயுகத்தில் வசிக்க வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பித்து, உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பதால், நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் தந்தையின் குழந்தை ஆகும்பொழுது, அவர் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். எல்லாவற்றிற்கும் முதலில், ஒரு வாரத்திற்குப் பத்தியில் அமருங்கள். நீங்கள் தினமும் தொடர்ந்தும் ஞானத்தைப் பெறுவீர்கள். அனைவரும் ஒரேயளவிற்குப் புரிந்துகொள்வதில்லை. ஒவ்வொருவரும் தத்தம் முயற்சிக்கேற்பவும், பாக்கியத்திற்கு ஏற்பவுமே பெறுகிறார்கள். அனைத்தும் உங்களுடைய முயற்சிகளிலும், பாக்கியத்திலுமே தங்கியுள்ளது. உங்கள் பாக்கியத்தில் என்ன இருக்கிறது எனவும், நீங்கள் எந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள் எனவும் உங்களால் கூற முடியும். தந்தைக்கு உரியவராகிய பின்னரும் நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும். அச்சா, உங்களுக்கென ஓர் இல்லறம் இல்லாவிடின், அப்பொழுது குருடருக்கு ஒரு கைத்தடி ஆகுங்கள். நீங்கள் நிச்சயமாகச் சத்திய நாராயணனின் கதையைக் கூறுவதற்காகச் செல்ல வேண்டும். பாருங்கள், புத்திரி பிரேம் சேவைக்குச் சென்றுள்ளார், அவரை அழைத்தவர்கள் அவரைக் கௌரவமாக வரவேற்று, அவரைப் பலருக்கு அறிமுகப்படுத்தியதால், அவர்கள் மிகவும் தூண்டப்பட்டனர். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: எல்லையற்ற தந்தையே உங்கள் அனைவருக்கும் கற்பிக்கின்றார், அவரிடமிருந்தே நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பின்னர் பெறுகின்றீர்கள் என்ற நம்பிக்கை அவர்களில் எவரினதும் புத்தியில் இல்லை. அவர்களும் கூட தூண்டப்;பட்டனர், ஆனால் உண்மையிலேயே ஞானக்கடலாகிய தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது. ஆம், அவர்கள் இது மிகவும் நல்லது எனக் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் வெளியே சென்றவுடன் அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. அரிதாகவே எவரும் இம்முயற்சியைச் செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்கிடையில் ஆன்மீக ஒன்றுகூடல்;களை நடாத்தியபொழுதும், ஒன்றுகூடுபவர்களின் புத்தியில் அந்நம்பிக்கை இல்லை. அவர்கள் அரைக்குலத்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர். நம்பிக்கையும், சந்தேகமும் உள்ளன. ஒரு நிமிடம் தந்தையே தங்களுக்குக் கற்பிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள், மறுநிமிடமே அவர்கள் வினவுகிறார்கள்: இது எவ்வாறு சாத்தியம்? ஆம், தூய்மையாகுவது சிறந்ததே, ஆனால் தூய்மையாக இருப்பது மிகவும் சிரமமானது. எல்லாவற்றுக்கும் முதலில், நம்பிக்கை இருக்க வேண்டும், அத்துடன் அவர்கள்; அதே உள்ளார்ந்த சந்தோஷத்துடன் எழுத வேண்டும். பந்தனத்திலிருந்து விடுதலை அடைந்தவர்கள் பந்தனத்தில் உள்ள கோபிகைகளைப் போல அத்தகைய கடிதங்களை என்றுமே எழுதுவதில்லை. பாபா எழுதுகிறார்: நீங்கள் ஒரு நபரைக் கூட புத்தியில் நம்பிக்கை உடையவர் ஆக்கவில்லை. ஆம், நீங்கள் சாதாரணப் பிரஜைகளை உருவாக்கியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் வாரிசுகளை உருவாக்கவில்லை. ஒரு நபர் கூட புத்தியில் நம்பிக்கை உடையவர் ஆகவில்லை. புத்தியில் நம்பிக்கை உடையவர்களே வாரிசுகள் ஆகுகிறார்கள். சிலருக்குப் புத்தியில் நம்பிக்கை இருந்தபொழுதிலும், அவர்கள் ஞானத்தைப் பெறாததால், அவர்கள் அவ் வம்சத்திற்குச் சென்று பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுகிறார்கள். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது மிகவும் துல்லியமான காட்சிகளைப் பெறுவீர்கள். நீங்கள் எந்த இலக்கப் பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்வீர்கள். அப்பொழுது, அங்கு பெருமளவுக்கு வருந்துதல் இருக்கும். நான் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை. இதனாலேயே நான் இந்நிலைமையை அடைந்துள்ளேன்;. எப்படியாயினும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அது நாடகம் என்றே கூறப்படும். கல்பம் கல்பமாக இவருக்கு நாடகத்தில் இப்பாகமே இருக்கின்றது. நீங்கள் நிச்சயமாகக் காட்சிகளைப் பெறுவீர்கள். இறுதியிலேயே பெறுபேறு அறிவிக்கப்பட வேண்டும். பின்னர், அது விதி எனக் கூறப்படும். இதுவே எனது பாக்கியத்தில் இருந்தது. உங்கள் கல்வியின் பெறுபேறுகள் அறிவிக்கப்படும். இது மிக உயர்வான பாடசாலை. ஒரேயொருவரே உங்களுக்குக் கற்பிப்பவர். ஒரேயொரு கல்வியும், ஒரேயொரு பரீட்சையுமே இருக்கின்றது. மாணவர்கள் எவ்வாறானவர்கள் என ஆசிரியர் அறிவார். அனைவரும் தொடர்ந்தும் வேகமாக முன்னேறிப் பாய்ந்து செல்கிறார்கள். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, அதிகளவு அறிந்துகொள்வீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் சென்றதைப் போன்றே, மீண்டும் மீண்டும் திரான்ஸில் செல்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் புரிந்துகொள்கிறீர்கள், தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால் தவறுகள் செய்கிறீர்கள். அவ்வாறு செய்வதால் நீங்கள் அப்பழக்கத்தை வளர்த்து கொள்கிறீர்கள். நீங்கள் வினவலாம்: சிவபாபா, நான் உங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றேனா? பாபா உங்களுக்குக் கூறுவார்: 'நீங்கள் பின்பற்றாததனால் உங்கள் பாக்கியம் அவ்வாறே காணப்படுகிறது". தற்சமயம் உங்களுக்குத் தீய சகுனங்கள் இருக்கின்றன என்பது புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, அவை அகற்றப்;படும். சிலர் காமத்தின் போதைக்குள் சிறிதளவு விழுகிறார்கள். பாரதம் தூய்மையாகவும், மேன்மையாகவும் இருந்தது, அது இப்பொழுது சீரழிந்து விட்டது. புகழ் அம்மேன்மையான தேவர்களுக்கு உரியது. தந்தை கூறுகிறார்: இது அசுர சமுதாயம். நான் தேவ சமுதாயத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளேன். இத்தேவ தர்மமே அனைத்திலும் உயர்வானது. தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். ஆனால் மக்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்கு வருகின்ற அனைவரும் நிச்சயமாகத் தூய்மையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும், நன்மையும், தீமையும் இருக்கின்றன. குறைந்தளவு பாக்கியத்தை உடையவர்களும், சிறந்த பாக்கியத்தை உடையவர்களும் இருக்கின்றார்கள். இந்த இராவண இராச்சியம் இப்பொழுது முடிவடையவுள்ளது. இந்த இராவணனின் நகரம் தீ மூட்டப்படவுள்ளது. இராமரின் சேனையினராகிய நீங்கள் இங்கமர்ந்துள்ளீர்கள். இத் தர்மத்துக்கு உரியவர்கள் தொடர்ந்தும் புரிநதுகொள்வார்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கிறீர்கள். சிலர் ஜனக மன்னரைப் போல் ஓர் அம்பினால் தாக்கப்பட்டு, தங்களை அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் ஒருபொழுதும் சாக்குப்போக்குகளை உருவாக்குவதில்லை. இங்கு சாக்குப்போக்குகள் எதுவும் தொழிற்படாது. எவ்வாறாயினும், மாயையின் புயல்கள் பலவும் இருக்கின்றன. உங்கள் சொந்தக் குலத்தையும், நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதையும் மறந்து விடுமாறு அவள் செய்கிறாள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகவேண்டும். காமத்தின் போதை சிறிதளவும் இருக்கக்கூடாது. காமமே கொடிய எதிரி. இதுவே அதி முக்கியமான பரீட்சை. பாபா கூறுகிறார்: குழந்தைகளே, ஒன்றாக வாழ்ந்து தூய்மையாக இருந்து இதனை நடைமுறையில் செய்து காட்டுங்கள். தந்தை குழந்தைகளின் ஸ்திதியை அறிவார். புத்தியில் நம்பிக்கை உடையவர்கள் தங்கள் செய்தியைத் தந்தைக்குக் கொடுக்கிறார்கள்: பாபா, நான் உங்களை நினைவு செய்வதுடன் சேவையும் செய்கிறேன். அவர்கள் தங்கள் சேவைச் செய்தியை தந்தைக்கு எழுதும்பொழுது மாத்திரமே நான் அவர்களில் நம்பிக்கை கொள்கிறேன். அவர்கள் சேவையின் அத்தாட்சியைக் கொடுக்கும் பொழுதே பாபா அவர்களில் அதிகளவு நம்பிக்கையை உணர்கின்றார். அப்பொழுது பாபாவும், குழந்தைகளாகிய எங்களில் பலரும் இருக்கிறோம் என்பதுவும் புரிந்துகொள்ளப்படுகிறது. பாபா உங்களுக்குத் தினமும் பதிலளிக்க வேண்டும் என எண்ணாதீர்கள்;; இல்லை. தந்தையே ஏழைகளின் பிரபு. ஏழைகளுக்கே தானங்கள் கொடுக்கப்;படுகின்றன. இப்பாரத தேசம் ஏழ்மையானது. செல்வம் மிக்கதாக இருந்த பாரதம் ஏழையாகியுள்ளது. எவரும் இதனை அறியார். இப்பாரதம் கடவுள் அவதரிக்கின்ற அழிவற்ற தேசம். பாரதம் தங்கச் சிட்டுக்குருவியாக இருந்தது, அதாவது, அதுவே மொத்த சந்தோஷத்தினதும் பொக்கிஷக் களஞ்சியமாக இருந்தது, நாங்கள் அனைவரும் அச் சந்தோஷ பூமிக்குச் செல்வதற்கு முயற்சி செய்கிறோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. சாக்குப்போக்கு கூறாதீர்கள், ஆனால் தொடர்ந்தும் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். சேவையின் அத்தாட்சியைக் கொடுங்கள்.

2. நீங்கள் கடவுளின் குழந்தைகள், உங்கள் குலமே அனைத்திலும் உயர்வானது என்பதை மறந்துவிடாதீர்கள். புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன் ஏனையோரையும் நம்பிக்கை கொள்ளுமாறு தூண்டுங்கள்.


ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய விழிப்புணர்வில் பிராமணப் பிறப்பின் சிறப்பியல்பையும், தனித்துவத்தையும் வைத்திருந்தவாறே ஒரு பற்றற்ற பார்வையாளராகச் சேவை செய்வீர்களாக.

இந்தப் பிராமணப் பிறவி ஒரு தெய்வீகமான பிறவி. சாதாரண ஆத்மாக்கள் தங்களுடைய பிறந்த தினங்;;கள், திருமண தினம்;, நண்பர்கள் தினத்தை வேறாகக் கொண்டாடுகின்றார்கள், ஆனால் உங்கள் பிறந்த தினம்;, திருமண தினம்;, அன்னையர் தினம், தந்தையர் தினம், நிச்சயதார்த்த தினம் அனைத்தும் ஒன்றேயாகும், ஏனெனில் நீங்கள் அனைவரும் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்கு உரியவர்களாக இருத்தல் என்னும் சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். எனவே, உங்கள் விழிப்புணர்வில் இந்தப் பிறவியின் சிறப்பியல்பையும், தனித்துவத்தையும் வைத்தவாறே சேவை செய்வதில் உங்கள் பாகத்தை நடியுங்கள். சேவையில் ஒருவருக்கொருவர் சகபாடிகளாக இருங்கள், ஆனால் பற்றற்ற பார்வையாளராக இருக்கும்பொழுதே ஒரு சகபாடியாக ஆகுங்கள். எவருக்கும் அடிமையாக இருப்பது சிறிதேனும் இல்லாதிருக்கட்டும்.

சுலோகம்:
தனது வாழ்வில் பணிவிற்கும் அதிகாரத்திற்குமான சமநிலையைக் கொண்டவரே ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆவார்.