05.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் சகோதர ஆத்மாக்களுடன் பேசுங்கள். தீய ஆவிகள் எதுவும் உங்களுக்குள் உட்புகாவண்ணம் உங்கள் பார்வையை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். எவரிலாவது ஒரு தீய ஆவி இருப்பதை நீங்கள் காணும்போது அந்த நபரிலிருந்து விலகிச் செல்லுங்கள்.

கேள்வி:
தந்தைக்கு உரியவர்கள் ஆகிய பின்பும், எவ்வாறு குழந்தைகள் நாஸ்திகர்களாகவும், ஆஸ்திகர்களாகவும் ஆகுகின்றார்கள்?

பதில்:
இறை ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதுடன், ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி செய்பவர்களே ஆஸ்திகர்களாவார்கள். இறை ஒழுக்கங்களுக்கு எதிராகத் தீய ஆவிகளின் ஆதிக்கத்துக்குட்பட்டு, தங்களுக்கிடையே சண்டை, சச்சரவு செய்பவர்களே நாஸ்திகர்கள். 2. ஆஸ்திகக் குழந்தைகள் தங்களின் புத்தியின் யோகத்தைத் தங்கள் சரீரத்திலிருந்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட, சரீர உறவுகளிலிருந்தும் விடுவித்துக் கொள்வதுடன், தங்களைச் சகோதரர்களாகவும் கருதுவார்கள். நாஸ்திகக் குழந்தைகள் சரீர உணர்வுடையவர்களாக இருப்பார்கள்.

ஓம்சாந்தி.
முதலாவதாகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: ஓ குழந்தைகளே, சிவபாபாவே உங்களின் பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவும் என்பதை உங்கள் புத்தி நினைவுசெய்ய வேண்டும். முதலில் இது உங்கள் புத்தியில் நிச்சயமாகப் பதிய வேண்டும். இது உங்கள் புத்தியில் பதிந்துள்ளதா அல்லது இல்லையா என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம். உங்கள் புத்தியில் நினைவு இருந்தால், நீங்கள் ஓர் ஆஸ்திகராவீர்கள். அது உங்கள் புத்தியில் பதியாவிட்டால் நீங்கள் ஒரு நாஸ்திகராவீர்கள். தங்கள் ஆசிரியர் வந்துவிட்டார் என்பது உடனடியாக மாணவர்களின் புத்தியில் பதியும். நீங்கள் வீட்டில் வசிக்கும்போது, இதனை மறந்துவிடுகிறீர்கள். தங்களுடைய அதி மேலான பாபா வந்துவிட்டார் என்பதை எவரும் மிக அரிதாகவே ஆன்மீகப் போதையுடன் புரிந்துகொள்கிறார்கள். அவரே எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆசிரியரும், சற்குருவும் ஆவார். இதனை நீங்கள் நினைவுசெய்யும்போது, உங்களின் சந்தோஷப் பாதரசம் உயரும். இல்லாவிடில் நீங்கள் அழுக்கான உலகின் வேதனைகள், துன்பங்கள் பற்றிய பல்வேறு எண்ணங்களில் அமர்ந்திருப்பீர்கள். இரண்டாவதாக, விநாசம் நடைபெறுவதற்கு இன்னும் எவ்வளவு காலமுள்ளதென்று உங்களை மக்கள் கேட்பார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்;: இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாது. அனைத்திற்கும் முதலில், எங்களுக்கு இதனை விளங்கப்படுத்தும் ஒரேயொருவரைத் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். இப் பழக்கத்தை நீங்கள் உங்களில் பதித்;துக் கொண்டீர்களானால், அவர்களுக்கு விளங்கப்படுத்துவீர்;கள். இல்லாவிட்டால் மறந்துவிடுவீர்கள். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டுமென்று, தந்தை உங்களுக்கு அதிகளவு கூறுகிறார். மற்றவர்களை ஆத்ம உணர்வுப் பார்வையுடன் பாருங்கள். எவ்வாறாயினும் உங்களால் அந்தப் பார்வையைக் கடைப்பிடிக்க முடியாதுள்ளது. இது அரிதாகவே உங்கள் புத்திக்கு எட்டுகின்றது, அதாவது ஒரு சதப் பெறுமதி அளவேனும் எட்டுவதில்லை. அது சாதாரணமாக உங்கள் புத்தியில் தங்காது போன்றதாகும்;. தந்தை உங்களைச் சபிக்கின்றார் என்றில்லை. இந்த ஞானம் மிக மேன்மையானது என்று தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஓர் இராச்சியம் ஸ்;தாபிக்கப்படுகிறது. ஏழையாக இருந்து நீங்கள் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். வெகுசிலரே செல்வந்தர்கள் ஆகுகிறார்கள். ஏழைகள் வரிசைக்கிரமமே. கடைசி இலக்கத்தைக் கொண்டவர்களின் புத்தியில் ஒருபோதும் எதுவும் நிலைத்திருக்காது. எனவே எவருக்கும் விளங்கப்படுத்தும்போது, முதலில், சிவபாபாவின் 32 திவ்ய குணங்களையும் காட்டும்; படத்தை உபயோகித்து விளங்கப்படுத்துங்கள். பரம தந்தையே பரம ஆசிரியரும், சற்குருவுமென்றும் அதன்மேல் எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு விளங்கப்படுத்தும் ஒருவர் பரம தந்தையே என்ற நம்பிக்கையை நீங்கள் முதலில் கொண்டிருக்கும்போது, உங்களுக்குச் சந்தேகங்கள் ஏற்படாது. தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த ஸ்தாபனையை மேற்கொள்ள முடியாது. ஸ்தாபனை இடம்பெறுகின்றது என்று நீங்கள்; விளங்கப்படுத்தும்போது, உங்களுக்கு இவை அனைத்தையும் ஒருவர் விளங்கப்படுத்துகின்றார் என்பது நிச்சயம் அவர்கள் புத்தியில் பதியவேண்டும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகி;ன்றதென்று எந்த மனிதராலும் கூறமுடியாது. ஆகவே முதலில் அவர்கள்; தந்தையில் உறுதியான நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள். கடவுளான தந்தை எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இவை மனிதர்களின் கட்டளைகள் அல்ல. இவை கடவுளின் வழிகாட்டல்கள். புதிய உலகம் நிச்சயமாகத் தந்தையினால் ஸ்தாபிக்கப்படும். பழைய உலகின் விநாசத்தை ஏற்படுத்துவதும் தந்தையின் செயலாகும். அவர்களுக்கு இந்த நம்பிக்கை ஏற்படும்வரை அவர்கள் தொடர்ந்து, அது எவ்வாறு இடம்பெறும் என்று கேட்பார்கள். இதனாலேயே நீங்கள் முதலில் ஸ்ரீமத்தைப் பற்றி அவர்களின் புத்தியில் பதியச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள் மேலும் எதனையும் புரிந்துகொள்வார்கள். அல்லது அவர்கள் இவற்றை மனிதர்களின் கட்டளைகளெனக் கருதுவார்கள். ஒவ்வொரு மனிதரின் கட்டளைகளும் வெவ்வேறானவை. மனிதர்களால் ஒரேயொரு வழிகாட்டலை வழங்க முடியாது. இந்நேரத்தில் ஒரேயொருவரே உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அவரின் ஸ்ரீமத்தை மிகச்சரியாகப் பின்பற்றுவது மிகவும் சிரமமாகும். தந்தை கூறுகிறார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். உங்களின் சகோதரர்களுடன் பேசுவதாகக் கருதிக்கொள்ளுங்கள். அப்போது எதுவித சண்டை அல்லது சச்சரவுகள் இருக்காது. ஒருவர் சரீர உணர்வுடையவர் ஆகினால் அவரை ஒரு நாஸ்திகரெனக் கருதுங்கள். ஒருவர் ஆத்ம உணர்வுடையவராக இல்லையென்றால் அவர் ஒரு நாஸ்திகராவார். ஒருவர் ஆத்ம உணர்வுடையவர் ஆகினால், அவரை ஓர் ஆஸ்திகராகக் கருதுங்கள். சரீர உணர்வு சேதம் விளைவிக்கக்கூடியது. ஒரு சிறு சண்டை, சச்சரவு இருந்தாலும் அவரை ஒரு நாஸ்திகராகக் கருதுங்கள். அவர்களுக்குத் தந்தையைப் பற்றித் தெரியாது. கோபம் என்ற தீய ஆவி இருந்தால் அவர் ஒரு நாஸ்திகராவார். தந்தையின் குழந்தைகள்; எவ்வாறு தீய ஆவிகளைக் கொண்டிருக்க முடியும்? அவர்கள் நாஸ்திகர்கள் அல்லர். அவர்கள் தாங்கள் தந்தையில் அன்பு கொண்டுள்ளார்கள் என்று எவ்வளவுதான் கூறினாலும், கடவுளின் நல்லொழுக்க முறைகளுக்கு விரோதமாக அவர்கள் பேசினால், அவர்கள் இராவண சமுதாயத்திற்குச் சொந்தமானவர்கள் என்றே கருதவேண்டும். அவர்கள் சரீர உணர்வுடையவர்கள். எவரிலாவது தீய ஆவி இருப்பதைக் கண்டால் அல்லது எவரினதும் பார்வை தீயதாக இருந்தால் நீங்கள் அவரிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும். ஒரு தீய ஆவியின் முன் நீங்கள் நின்றால், அந்தத் தீய ஆவி உங்களுக்குள் புகுந்துவிடும். தீய ஆவிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிடும். ஒரு தீய ஆவி எவரிலாவது புகுந்துகொண்டால், அவர் முழுதாக நாஸ்திகர் ஆகிவிடுவார். தேவர்கள் சகல திவ்ய குணங்களும் நிறைந்தவர்கள். ஆனால் இத் திவ்ய குணங்கள் இல்லாதவர்கள் நாஸ்திகர்கள் ஆவார்கள். நாஸ்திகர்கள் ஓர் ஆஸ்தியைப் பெற மாட்டார்கள். ஒரு சிறு குறைபாடும் இருக்கக்கூடாது. அல்லது மிகுந்;த தண்டனையை அனுபவம் செய்ய வேண்டி இருப்பதுடன், நீங்கள் பிரஜைகளில் ஒருவராகவும் வருவீர்கள். நீங்கள் தீய ஆவிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். தீய ஆவிகளை எதிர்கொண்டு நின்றீர்களாயின், தீய ஆவிகள் வரும். நீங்கள் ஒருபோதும் தீய ஆவியை எதிர்க்கக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அதிகம் பேசவும் கூடாது. தந்தை கூறுகிறார்: இது தீய ஆவிகளின் உலகமாகும். தீய ஆவிகள் உங்களைவிட்டு நீங்காவிட்டால், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்வதுடன், உங்களால் ஓர் அந்தஸ்தைப் பெறவும் முடியாது. ஒரு போரே உள்ளது. சிலர் செல்வந்தர்கள் ஆகுவார்கள். மற்றவர்கள் ஏழையாகுவார்கள். செல்வந்தர்களின் உலகம் இருந்தது. இப்போது அது ஏழைகளின் உலகமாகும். ஒவ்வொருவரிலும் ஒரு தீய ஆவி உள்ளது. தீய ஆவிகளை அகற்றுவதற்கு நீங்கள் முழு முயற்சி செய்யவேண்டும். பாபா, முரளியில் உங்களுக்கு மிகவும் விபரமாக விளங்கப்படுத்துகிறார். பலவிதமான சுபாவங்கள் உள்ளன. கேட்கவே வேண்டாம்! ஆகவே கண்காட்சிகளில் நீங்கள் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும். தந்தை மிகவும் இனிமையானவர். அவர் எங்களை அவ்வாறான தேவர்கள் ஆக்குகின்றார். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை என்று பாடப்பட்டுள்ளது. சத்திய யுகத்தில் தேவர்கள் இருந்தார்கள். ஆகவே நிச்சயம் அதற்கு முன்னர் கலியுகம் இருந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் புத்தியில் உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். அங்கு தேவர்கள் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். பின்பு நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெற்றபின்னர், இந்த ஞானத்திற்கான தேவை இருக்க மாட்டாது. 21 பிறவிகளுக்குச் சுவர்க்கம் என்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்ற இவர், எல்லையற்ற தந்தையாவார். ஆகவே நீங்கள் அவ்வாறான தந்தையை அதிகம் நினைவுசெய்ய வேண்டும். பாபா எப்போதும் விளங்கப்படுகிறார்: சிவபாபாவே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்று எப்போதும் நினையுங்கள். சிவபாபா எங்களுக்கு இந்த இரதத்தின் மூலம் கற்பிக்கின்றார். அவர் எங்கள் தந்தை, ஆசிரியர் மற்றும் குரு ஆவார். இது ஓர் எல்லையற்ற கல்வி. முன்னர் நீங்கள் சீரழிந்த புத்தியைக் கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்கிறீர்கள். எவருக்கும் இந்தக் கல்லூரியைப் பற்றித் தெரியாது. ஆகவே நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது அவாகளின் புத்தியில் நன்கு பதியும்படி மிகத்தெளிவாக விளங்கப்படுத்துங்கள். இதில் கிருஷ்ணர் என்ற கேள்விக்கே இடமில்லை. கிருஷ்ணரின் தெய்வீகச் செயல்கள் என்று எதுவுமில்லையென்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இவை சிவபாபாவினுடையவை மாத்திரமாகும். பிரம்மா. விஷ்ணு, சங்கர் ஆகியோருடைய தெய்வீகச் செயல்களும் இருக்கமுடியாது. மனிதர்களைத் தேவர்கள் ஆக்குகின்ற ஒரேயொருவருடைய தெய்வீகச் செயல்கள் மாத்திரமே உள்ளன. அவர் உலகைச் சுவர்க்கம் ஆக்குகின்றார். நீங்கள் அந்தத் தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்கள். தந்தையின் உதவியாளர்கள் நீங்களே. அவை தந்தையினுடையவை இல்லாவிடின், உங்களால் எதனையும் செய்ய முடியாது இருந்திருக்கும். நீங்கள் ஒரு சதப் பெறுமதியற்று இருந்ததிலிருந்து, இப்போது ஒரு பவுண் பெறுமதியானவர்கள் ஆகுகின்றீர்கள். இப்போது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக அனைத்தையும் தெரிந்துகொண்டுள்ளீர்கள். ஆகவே முதலில் தந்தையின் அறிமுகம் உள்ளது. கிருஷ்ணர் சிறு குழந்தையாக இருந்தார். சத்திய யுகத்தில் கிருஷ்ணரின் எல்லையற்ற இராச்சியம் இருந்தது. அவரின் இராச்சியத்தில் வேறு எவரும் இருக்கவில்லை. இப்போது இது கலியுகமாகும். அத்துடன் பல சமயங்களும் உள்ளன. இந்த ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் எப்போது ஸ்தாபிக்கப்பட்டதென்பது எவரினதும் புத்தியில் இல்லை. இதுவும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக உள்ளது ஆகவே முதலில் நீங்கள் தந்தையின் புகழை மிகத்தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். இந்த அறிமுகத்தைத் தந்தையிடமிருந்து நாங்கள் பெற்றுள்ளோம் என்பது நிச்சயமாக எங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: அனைவருக்கும் சற்கதியை அளிப்பவரும் நானே. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் அறிவுரை கூறுகிறேன்: உங்களை ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுங்கள். ஆத்ம உணர்வுடையவராகுங்கள்! மற்றவர்களை ஆத்மாக்களாகக் கருதுவதனால் உங்களிடம் குற்றப் பார்வை இருக்கமாட்டாது. ஆத்மாவே சரீரத்தின் மூலம் கருமங்களை ஆற்றுகிறது: நான் ஓர் ஆத்மா, இவர் ஓர் ஆத்மா. நீங்கள் இதனை உறுதியாக்க வேண்டும். ஆரம்பத்தில் நீங்கள் 100மூ தூய்மையானவர்களாக இருந்தீர்களென்றும், பின்னர் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்களென்பதும் உங்களுக்குத் தெரியும். ஓ பாபா, வாருங்கள்! என்று ஆத்மாக்கள் கூவி அழைக்கிறார்கள். ஆத்மாவின் விழிப்புணர்வு உறுதியாக இருக்கவேண்டும். அத்துடன் நீங்கள் மற்ற உறவினர்களை மறக்க வேண்டும். ஆத்மாவாகிய நான். இனிய வீட்டில் வசிப்பவராவேன். நான் ஒரு பாகத்தை நடிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கிறீர்கள். அவரை நினைவு செய்வதில் நீங்களும் வரிசைக்கிரமமே. கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆகவே அதிகளவு சந்தோஷம் இருக்கவேண்டும். கடவுள் எங்கள் தந்தையும், ஆசிரியரும். எங்கள் சற்குருவுமாவார். அவரைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்வதில்லையென்று நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரத்திலிருந்தும், உங்கள்; சரீர உறவுகளிலிருந்தும் உங்களைத் துண்டித்து, என்னை மாத்திரம் சதா நினைவுசெய்யுங்கள். நீங்கள் அனைவரும் சகோதரர்கள். சிலர் இதனை நம்புகிறார்கள். ஏனையவர்கள் நம்புவதில்லை. ஆகவே அவர்களை நாஸ்திகர்களாகக் கருதுங்கள். நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள், ஆகவே நாங்கள் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். பாபா வந்து எங்களைத் தூய உலகின் அதிபதிகள் ஆக்குங்கள் என்று நீங்கள் தந்தையைக் கூவி அழைத்தீர்கள். சத்திய யுகத்தில் தூய்மையாகுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. அவர் ஒருவரே சிவபாபா என்றும், அவர் மூலமே புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதையும் முதலில் புரிந்துகொள்ளுங்கள். எப்போது விநாசம் நடைபெறும் என்று மக்கள் கேட்டால், அவர்களுக்குக் கூறுங்கள்: முதலில் அல்பாவை விளங்கிக்கொள்ளுங்கள். அல்பாவை நீங்கள் விளங்கிக் கொள்ளாவிட்டால், அதற்குப் பின்னுள்ளவை எவ்வாறு உங்கள் புத்தியில் பதியும்? சத்தியமான தந்தையின் குழந்தைகளாகிய நாங்கள் சத்தியத்தைப் பேசுகிறோம். நாங்கள் மனிதர்களின் குழந்தைகள் அல்ல. நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள். கடவுள் பேசுகிறார்: அனைத்து சகோதரர்களினதும் தந்தையான கடவுள் ஒருவரே. மனிதர்கள் தங்களைக் கடவுள் என்று அழைக்க முடியாது. கடவுள் அசரீரியானவர். அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார். எந்த மனிதராலும் தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாக முடியாது. எந்த மனிதராலும் எவருக்கும் முக்தியை அருள முடியாது. மனிதர்கள் கடவுளாக முடியாது. பாபா தூய்மையாக்குபவர். இராவணனே உங்களைத் தூய்மையற்றவாகள்; ஆக்குகிறான். ஏனையவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருக்கள் ஆவார்கள். இங்கு வருபவர்கள் ஆஸ்திகர்கள் ஆகுகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். அவர்கள் எல்லையற்ற தந்தையிடம் வருகிறார்கள். அந்த ஒருவரே எங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள். பூரணமாக நீங்கள் சகல திவ்ய குணங்களையும் கொண்டிருக்கும்போது, போர் ஆரம்பமாகும். அந் நேரத்தில் நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடைவதாகப் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் இன்னும் உங்கள் கர்மாதீத நிலையை அடையவில்லை. இப்போது செய்வதற்கு அநேக வேலைகள் உள்ளன. நீங்கள் பலருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. யுத்தம், மிக வலிமையுடன் ஆரம்பமாகும். பின்னர் இந்த வைத்தியசாலை, மருத்துவர்கள் போன்றோர் இருக்க மாட்டார்கள். தந்தை நேரடியாகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்தின் மூலம் 84 பிறவிகளுக்கான உங்கள் பாகத்தை நடிக்கிறீர்கள். சிலர் 70 அல்லது 80 பிறவிகளை எடுப்பார்கள். அனைவரும் திரும்பிச் செல்லவேண்டும். விநாசம் இடம்பெற வேண்டும். தூய்மையற்ற ஆத்மாக்கள் வீட்டிற்குத் திரும்ப முடியாது. தூய்மையாகுவதற்கு நீங்கள் நிச்சயம் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதற்கு முயற்சி தேவை. 21 பிறவிகளுக்கு நீங்கள் சுவர்க்க வாசிகள் ஆகவேண்டும். இது சிறு விடயமல்ல. இன்னார் இன்னார் சுவர்க்கவாசிகள் ஆகிவிட்டனர் என்று மக்கள் கூறுகிறார்கள். உண்மையாகவா? ஆனால் சுவர்க்கம் எங்கே? அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. கடவுள் எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றும், எங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என்றும், குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கவேண்டும். ஒன்று நிரந்தர சந்தோஷமாகும். மற்றது தற்காலிகச் சந்தோஷமாகும். நீங்கள் கற்காவிட்டால் அல்லது மற்றவர்களுக்குக் கற்பிக்காவிட்டால் எவ்வாறு சந்தோஷம் இருக்கமுடியும்? நீங்கள் அசுர குணங்களை நீக்கவேண்டும். தந்தை அதிகளவுக்கு விளங்கப்படுத்துகிறார். கர்ம வேதனை அதிகம் உள்ளது. கர்ம வேதனை இருக்கும்வரை, அது இன்னும் நீங்கள் கர்மாதீத நிலையை அடையவில்லை என்பதையே காட்டுகிற.து. இப்போது நீங்கள் முயற்சி செய்யவேண்டும். மாயையின் புயல்கள் எதுவும் வரக்கூடாது. பல தடவைகள் தந்தை உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றினார் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. இந்தளவாவது உங்களது புத்தியில் பதிந்தால், அது பெரும் பாக்கியமே. இது ஓர் எல்லையற்ற பாடசாலையாகும். மற்றைய பாடசாலைகள் சிறியனவும், எல்லைக்குட்பட்டனவும் ஆகும். தந்தை மிகக் கருணை கொள்கிறார்: நான் எவ்வாறு அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? சிலரிலிருந்து தீய ஆவிகள் இன்னமும் நீக்கப்படவில்லை. இதய சிம்மாசனத்தில் ஏறுவதற்குப் பதிலாக அவர்கள் விழுகின்றார்கள். பல புத்திரிகள் பலருக்கு நன்மை செய்வதற்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. இறை ஒழுக்கங்களுக்கு முரணாக எதனையும் செய்யாதீர்கள். எவரிலாவது தீய ஆவி இருந்தால் அல்லது தீய பார்வை இருந்தால் அந்த நபரிலிருந்து விலகிச் செல்லுங்கள். அந்த நபருடன் அதிகம் பேசாதீர்கள்.

2. நிரந்தர சந்தோஷத்தை அனுபவம் செய்வதற்குக் கல்வியில்; முழுக் கவனம் செலுத்துங்கள். அசுர குணங்களை அகற்றி, திவ்ய குணங்களைக் கிரகித்து, ஆஸ்திகர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு விநாடியினதும் ஒவ்வோர் எண்ணத்தினதும் முக்கியத்துவத்தை அறிந்து உங்கள் சேமிப்புக் கணக்கை நிரப்புவதன் மூலம் சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில் அழிவற்ற தந்தையிடமிருந்து அழிவற்ற பேறுகளை ஒவ்வொரு கணமும் பெறுகிறீர்கள். முழுச் சக்கரத்திலும் இந்நேரத்திலேயே நீங்கள் அத்தகைய பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள். இதனாலேயே உங்கள் சுலோகம்: இப்பொழுதில்லையேல், எப்பொழுதுமில்லை. எத்தகைய மேன்மையான செயல்களை நீங்கள் செய்ய வேண்டுமாயினும் அவற்றை நீங்கள் இப்பொழுதே செய்ய வேண்டும். இந்த விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருக்கும்பொழுது, உங்கள் நேரம், எண்ணங்கள், செயல்களை ஒருபொழுதும் வீணாக்க மாட்டீர்கள். உங்கள் சக்திவாய்ந்த எண்ணங்களின் ஊடாக உங்கள் சேமிப்புக் கணக்கு நிரம்புவதுடன், ஆத்மாவும் சக்திவாய்ந்ததாகி விடும்.

சுலோகம்:
ஓவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு செயலிலும் தனித்துவமானது தூய்மையே ஆகும். சாதாரணமானதைத் தனித்;துவமானது ஆக்குங்கள்.

தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி .
லௌகீகத்தில் அலௌகீகமாக இருக்கும் விழிப்புணர்வு இருக்கட்டும். லௌகீகத்தில் வசிக்கும்பொழுது நாங்கள் ஏனையோரிலும் விடவும் வேறுபட்டவர்கள். உங்கள் ஆத்மீக உணர்வு வடிவில் உங்களை வேறுபட்டவராகக் கருதுங்கள். உங்கள் செயல்களில் வேறுபட்டவராக இருப்பது சுலபம். அதன் மூலம் நீங்க்ள உலகத்தினரால் நேசிக்கப்பட மாட்டீர்கள். ஆனால் நீங்கள் சரீரத்திலிருந்து விடுபட்டு ஆத்ம உணர்விலிருந்து செயல்களைச் செய்யும்பொழுது, நீங்கள் அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள். இது அலௌகீக ஸ்திதி என அழைக்கப்படும்.