05.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை முட்களை மலர்களாக மாற்றுவதற்கே வந்திருக்கிறார். தந்தை மலர்களுடன், முட்களையும் நேசிக்கிறார். அவர் முட்களை மலர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றார்.

கேள்வி:
ஞானத்தைக் கிரகித்துள்ள குழந்தைகளின் அடையாளங்கள் எவை?

பதில்:
அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்துகிறார்கள். அவர்களால் தமக்கும் மற்றவர்களுக்கும் ஏதாயினும் நன்மை செய்யாது இருக்கவே முடியாது. அவர்கள் ஞான அம்பால் தாக்கப்பட்டதுமே, பற்றை அழித்தவர்களாகி, ஆன்மீகச் சேவையில் ஈடுபடுகிறார்;கள். அவர்களது ஸ்திதி நிலையானதாகவும், ஸ்திரமாகவும், ஆட்ட அசைக்க முடியாததாகவும் உள்ளது. விவேகமற்ற செயல்களை அவர்கள் என்றுமே செய்வதில்லை. அவர்கள் எவருக்கும் ஒருபொழுதும் துன்பம் விளைவிப்பதில்லை. குறைபாடுகள் என்ற முட்களை அவர்கள் தொடர்ந்தும் அகற்றுகின்றார்கள்.


ஓம் சாந்தி.
தந்தையே மிகப் பெரிய நிலைக்கடிகாரம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் மிகச்சரியான நேரத்தில் முட்களை மலர்களாக மாற்றுவதற்கு வருகிறார். அது ஒரு விநாடியேனும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க முடியாது; சற்றேனும் வித்தியாசம் இருக்க முடியாது. இந்த நேரத்தில் இது கலியுக முட்காடு என்பதையும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆகவே, மலர்கள் ஆகவுள்ளவர்கள், தாங்கள் மலர்களாகுகின்றோம் என்று உணர வேண்டும். முன்னர், நாங்கள் அனைவரும் முட்களாக இருந்தோம்: சிலர் சிறியதாகவும், ஏனையோர் பெரிதாகவும் உள்ளனர். சிலர் அதிகளவு துன்பத்தையும், ஏனையோர் சிறிதளவு துன்பத்தையும் விளைவிக்கின்றார்கள், தந்தை அனைவர் மீதும் அன்பு கொண்டுள்ளார். நான் மலர்களையும் அத்துடன்;, முட்களையும் நேசிக்கிறேன் என்று ஒரு பாடல் உள்ளது. அவர் யாரை முதலில் நேசிக்கிறார்? நிச்சயமாக, அவர் முட்களையே நேசிக்கிறார். அவர் அதிகளவு அன்பு கொண்டிருப்பதால், அவர்களுக்காக முயற்சி செய்து, அவர்களை மலர்களாக மாற்றுகின்றார். உண்மையில் அவர் முட்கள் நிறைந்த உலகிற்கே வருகிறார். இதில் சர்வவியாபகர் என்ற கருத்தே இருக்க முடியாது. ஒரேயொருவரின் புகழ் மாத்திரமே உள்ளது. ஆத்மா ஒரு சரீரத்தை எடுத்துத் தனது பாகத்தை நடிக்கும்பொழுதே ஆத்மாவிற்கான புகழ் பாடப்படுகின்றது. ஆத்மாவே மேன்மையானவராகவும், ஆத்மாவே சீரழிந்தவராகவும் ஆகுகிறார். ஆத்மா ஒரு சரீரத்தை எடுத்துச்; செயல்களைச் செய்வதால், அதற்கேற்பவே, ஓர் ஆத்மா பாவச் செயல்களைச் செய்பவரா அல்லது தூய செயல்களைச் செய்பவரா என்று கூறப்படுகிறது. ஆத்மாவே நல்ல அல்லது தீய செயல்களைச் செய்கிறார். நான் சத்தியயுகத்துத் தெய்வீக மலரா அல்லது கலியுகத்து அசுர முள்ளா? என உங்களையே கேட்டுப் பாருங்கள். சத்தியயுகத்துக்கும் கலியுகத்துக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. முட்களாக இருப்பவர்கள் தம்மை மலர்கள் என்று அழைக்க முடியாது. சத்தியயுகத்தில் மலர்கள் இருக்கின்றன் அவை கலியுகத்தில் இருப்பதில்லை. இப்பொழுது இது நீங்கள் முட்களிலிருந்து மலர்களாக மாறும் சங்கமயுகமாகும். ஆசிரியர் உங்களுக்கு ஒரு பாடத்தைக் கொடுக்கும்பொழுது, அதனை தெளிவாகச் செய்து ஆசிரியரிடம் காட்ட வேண்டியது குழந்தைகளாகிய உங்களின் கடமை. உண்மையில் நீங்கள் இவ்வாறும் எழுத வேண்டும்: நீங்கள் மலராகுவதற்கு விரும்பினால், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்களை மலர்களாக்கும் பரமாத்மாவான பரமதந்தையை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது, உங்கள் குறைபாடுகள் அகற்றப்பட்டு நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். பாபா உங்களிடம் கட்டுரை ஒன்றைக் கொடுக்கின்றார். அனைவரும் அதனையிட்டுச் சிந்திக்கும்வகையில், அதைத் திருத்தம் செய்து, அதனை அச்சடிப்பது, குழந்தைகளாகிய உங்களின் கடமை. இது ஒரு கல்வி. பாபா உங்களுக்கு எல்லையற்ற வரலாறையும் புவியியலையும் கற்பிக்கிறார். அப் பாடசாலைகளில் அவர்கள் பழைய உலகின் வரலாறையும் புவியியலையுமே கற்பிக்கிறார்கள். புதிய உலகின் வரலாறும் புவியியலும் எவருக்கும் தெரியாது. எனவே, இது ஒரு கல்வியும், அத்துடன் ஒரு விளக்கமுமாக உள்ளது. தீய செயலைச் செய்வது விவேகமற்றது. பின்னர், துன்பத்தை விளைவிக்கும் அத்தகைய விகாரமான செயல்களை நீங்கள் செய்யக்கூடாது என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தைக் கொடுப்பவராகிய தந்தையின் புகழ் உள்ளது. இங்கே, நீங்கள் எவருக்குமே துன்பம் விளைவிக்கக்கூடாது எனக் கற்றுக் கொள்கின்றீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: எப்பொழுதும் சந்தோஷத்தையே தொடர்ந்தும் கொடுங்கள். அவ்வளவு விரைவில் இந்த ஸ்திதி உருவாக மாட்டாது. தந்தையிடமிருந்து ஒரு விநாடியில் உங்களால் ஆஸ்தியை பெற முடியும், ஆனால், தகுதி வாய்ந்தவராகுவதற்குக் காலம் எடுக்கின்றது. சுவர்க்க இராச்சியமே எல்லையற்ற தந்தையிடமிருந்து கிடைக்கும் ஆஸ்தி என நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பாரதம் பரலோகத் தந்தையிடமிருந்து உலக இராச்சியத்தைப் பெற்றது என்று நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் அனைவருமே உலக அதிபதிகளாக இருந்தீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குள் அந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தது நேற்றைய விடயம். மக்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஒவ்வொரு யுகமும் நூறாயிரக்கணக்கான வருடங்களைக் கொண்டது என அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் நீங்;களோ முழுச் சக்கரத்தின் ஆயுட்காலமும் 5000 வருடங்கள் என்று கூறுகிறீர்கள்: பெருமளவு வேறுபாடு உள்ளது. ஒரேயொரு தந்தையே ஞானக்கடல். அவரிடமிருந்து நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். உலக மக்கள் நாளுக்கு நாள் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகின்றார்கள். அவர்கள் மேலும் மேலும் தொடர்ந்தும் குறைபாடுகளையே கற்றுக் கொள்கிறார்கள். முன்னர் இந்தளவிற்கு ஊழலோ, கலப்படமோ இருக்கவில்லை. அது இப்பொழுது அதிகரிக்கின்றது. நீங்கள் இப்பொழுது தந்தையின் நினைவுச் சக்தியினால் தொடர்ந்தும் சதோபிரதான் ஆகுகின்றீர்கள். கீழே இறங்கி வருவதைப் போலவே நீங்கள் திரும்பிச் செல்லவும் வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் தந்தையைக் கண்டு விட்டீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு உள்ளது. உங்கள் தொடர்பு இணைக்கப்பட்டு நினைவு யாத்திரை நிகழ்கின்றது. அதிகளவு பக்தி செய்தவர்கள் அதிகளவு நினைவு யாத்திரையில் இருப்பார்கள். பல குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, என்னால் நினைவில் நிலைத்திருக்க முடியாதுள்ளது. பக்தி மார்க்கத்திலும் இதுவே இடம்பெறுகிறது. ஒரு சமயக் கதையைக் கேட்பதற்கென அமரும்பொழுது, அவர்களது புத்தி வேறு திசைகளில் அலைபாய்கின்றது. கதையைக் கூறுபவர் அவர்களைக் கவனித்து விட்டு, பின்னர் திடீரென்று அவர்களிடம் கேள்வி கேட்பார்: நான் இப்பொழுது உங்களை என்ன கேட்டேன்? அப்பொழுது அவர்கள் தடுமாறும்பொழுது, ஏனையோர் உடனடியாகப் பதிலளிப்பார்கள். அனைவரும் ஒரேவிதமாக இருப்பதில்லை: அவர்கள் இங்கே அமர்ந்திருந்தாலும், எதையும் கிரகிப்பதில்லை. அவர்கள் ஞானத்தைக் கிரகிப்பவர்களாக இருந்தால், அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள். அவர்களால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யாதிருக்க முடியாது. சிலருக்குத் தமது வீடுகளில் அளவற்ற சந்தோஷம் இருந்தாலும், அவர்களிடம் மாளிகை, மோட்டார்வண்டி போன்றவை இருந்தாலும், அவர்களை ஞான அம்பு தாக்கியதும் அவ்வளவே. அவர் தன் கணவரிடம் கூறுவார்: நான் இந்த ஆன்மீகச் சேவையைச் செய்ய விரும்புகிறேன். எவ்வாறாயினும், மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். மாயை அவரை அவ்வாறு செய்ய அனுமதிப்பதில்லை: பற்று இருக்கிறது. இந்த மாட மாளிகைகளையும் அந்தச் சந்தோஷத்தையும் எவ்வாறு அவரால் துறக்க முடியும்? ஆ! ஆனால்;;, ஆரம்பத்தில் நீங்கள் அனுபவித்த சந்தோஷத்தைப் பற்றி என்ன சொல்வது? சிலர் கோடீஸ்ர, பல்கோடீஸ்வரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைத்தையும் துறந்து இங்கே வந்தார்கள். இவர்களுக்கோ அனைத்தையும் விட்டுவிட தைரியம் இல்லை என்பதையே அவர்களது பாக்கியம் காட்டுகிறது. அவர்கள் இராவணனுடைய சங்கிலிகளுக்குள் அகப்பட்டிருக்கிறார்கள்; அந்தச் சங்கிலிகள் புத்தியின் சங்கிலிகளாகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆ! நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். 21 பிறவிகளுக்கு நீங்கள் என்றுமே நோய்வாய்ப்பட மாட்டீர்கள் என்ற உத்தரவாதத்தைத் தந்தை கொடுக்கின்றார். 21 பிறவிகளுக்கு நீங்கள் என்றும் ஆரோக்கியமானவராக இருப்பீர்கள். உங்கள் கணவருடன் நீங்கள் வாழலாம், ஆனால், தூய்மையாக இருப்பதற்கு அனுமதி பெற்று, ஏனையோரையும் தூய்மையாக்குங்கள். உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்ற தந்தையை நீங்கள் நினைவுசெய்ய வேண்டியது உங்கள் கடமை. அவரை நினைவுசெய்வதால் நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். இது பெரும் புரிந்துணர்வுக்குரிய விடயம். சரீரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. குறைந்தபட்சம் தந்தைக்குரியவர் ஆகுங்கள்! அவரை விட இனிமையானது வேறு எதுவுமே இல்லை. தந்தை உங்களை உலக அதிபதிகளாக்குவதால் அவர் கூறுகிறார்: நீங்கள் விரும்பியவாறு சதோபிரதான் ஆகுங்கள். நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைக் காண்பீர்கள். தாய்மார்களாகிய உங்களினூடாகவே பாபா சுவர்க்க வாசலைத் திறக்கின்றார். தாய்மார்கள் மீதே அவர் ஞானக் கலசத்தை வைத்திருக்கிறார். தாய்மார்களையே பாபா நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார்: தாய்மார்களாகிய நீங்களே அனைத்தையும் பராமரிக்கின்றீர்கள். இவர் (பிரம்மாவின்) மூலம் தாய்மார்;கள் மீது அவர் கலசத்தை வைத்துள்ளார், பின்னர், கடல் கடையப்பட்டு அமிர்தக் கலசம் இலக்ஷ்மியிடம் கொடுக்கப்பட்டது என்று அவர்கள் எழுதியுள்ளார்கள். பாபா சுவர்க்க வாசலைத் திறக்கிறார் என்று இப்பொழுது உங்களுக்குத் தெரியும். எனவே, நாங்கள் ஏன் பாபாவிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறக்கூடாது? நாங்கள் ஏன் மகாவீரர்களாகி, வெற்றி மணிமாலையில் கோர்க்கப்படக்கூடாது? எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தன் மடியில் அமரச் செய்கின்றார். எதற்காக? உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்காக. முழுமையான முட்களாக இருப்பவர்களுக்கே அவர் இங்கிருந்து கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். எனவே, அவர் முட்களையும் நேசிக்கிறார். ஆகையாலேயே அவர்களை அவர் மலர்கள் ஆக்குகிறார். தூய்மையற்ற உலகிற்கு, தூய்மையற்றதொரு சரீரத்தில் நீங்கள் தந்தையை வரவழைக்கிறீர்கள்: உங்கள் நிர்வாணா உலகை விட்டு, இங்கே வாருங்கள். தந்தை கூறுகிறார்: நாடகத்திற்கேற்ப, நான் முட்களின் உலகிற்கே வரவேண்டும். எனவே, நிச்சயமாக அவருக்கு உங்கள் மீது அன்பு உள்ளது. அன்பில்லாது விட்டால், அவரால் உங்களை எவ்வாறு மலர்கள் ஆக்க முடியும்? இப்பொழுது நீங்கள் கலியுக முட்களில் இருந்து, சத்தியயுக சதோபிரதான் உலக அதிபதிகளாக மாற வேண்டும். அதிகளவு அன்புடன் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. ஒரு குமாரி ஒரு மலர் என்பதாலேயே அனைவரும் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறார்கள். அவர் முள்ளாகும்பொழுது (தூய்மையற்றவர்), அவர் அனைவருக்கும் தலை வணங்க வேண்டும். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எப்பொழுதும் ஒரு மலராகவே இருந்தால் என்றென்றும் ஒரு மலர் ஆக ஆகுவீர்கள். சந்நியாசிகள் விகாரத்தின் மூலம் பிறப்பதைப் போன்று, ஒரு குமாரியும் விகாரத்தினூடாகப் பிறந்திருந்தாலும் அவர் விகாரமற்றவர். அவர்கள் திருமணம் செய்த பின்னர், தமது வீட்டையும் குடும்பத்தையும் விட்டுச் செல்கிறார்கள். பின்பு அவர்களை மக்கள் மகாத்மாக்கள் என அழைக்கிறார்கள். சத்தியயுக உலக அதிபதிகளுக்கும் கலியுக மகாத்மாக்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகவே பாபா கூறியுள்ளார்: அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேளுங்கள்: நீங்கள் கலியுக முள்ளா அல்லது சத்தியயுக மலரா? நீங்கள் சீரழிந்தவரா அல்லது மேன்மையானவரா? இது இராவண இராச்சியம் என்பதால், இது சீரழிந்த உலகமாகும். இது அசுரர்களின் இராச்;சியமான, அரக்க இராச்சியம் என்று கூறப்படுகிறது. எனினும், அவர்கள் எவருமே தாம் அவ்வாறனவர்கள் என்று புரிந்துகொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் சாதுரியமாக இக் கேள்விகளை அவர்களிடம் கேட்கும்பொழுது, தாம் காமம், கோபம், பேராசை நிறைந்த மக்கள் என்பதை அவர்கள் தாமாகவே புரிந்துகொள்வார்கள். தாம் கலியுக முட்கள் என்பதை அவர்கள் உணரும் வகையில், இவ் விடயங்களைக் கண்காட்சிகளில் எழுதுங்கள். இப்பொழுது நீங்கள் மலர்கள் ஆகுகின்றீர்கள். பாபா சதா மலராகவே இருக்கிறார். அவர் என்றுமே முள்ளாகுவது இல்லை. எவ்வாறாயினும், ஏனைய அனைவருமே முள்ளாகுகிறார்கள். எனவே மலரானவர் கூறுகிறார்: முட்களாகிய உங்களை நான் மலர்களாக மாற்றுகிறேன். ஆகவே என்னை நினைவுசெய்யுங்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். எனவே, நீங்கள் மாயைக்கு உரியவர் ஆக விரும்புகிறீர்களா? தந்தை உங்களைத் தன்னை நோக்கி இழுக்கின்றார், மாயையும் உங்களைத் தன்னை நோக்கி இழுக்கிறாள். இது ஒரு பழைய சப்பாத்து. ஓர் ஆத்மா முதன்முதலில் புதிய சப்பாத்தையே ஏற்கின்றார், பின்னர், பழைய சப்பாத்தை ஏற்கின்றார். இந்நேரத்தில் எல்லாச் சப்பாத்துகளுமே தமோபிரதானாக உள்ளன. நான் உங்களை வெல்வெட் (எநடஎநவ) போல் ஆக்குகிறேன். அங்கே, ஆத்மாக்கள் தூய்மையாக இருப்பதால், எக் குறைபாடும் இல்லாத, வெல்வெட் சரீரங்களைப் பெறுகின்றார்கள். இங்கே பல குறைபாடுகள் இருக்கின்றன. அங்கே முகச்சாயல்கள் எவ்வளவு அழகாக உள்ளன என்று பாருங்கள். அந்த முகச்சாயல்களை இங்கே எவராலும் உருவாக்கவே முடியாது. தந்தையே கூறுகிறார்: உங்களை நான் மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறேன். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதே தூய்மையாகுங்கள். பிறவிபிறவியாக உங்கள் மீது சேர்ந்த துருவை அகற்றுவதற்கே யோக அக்கினி உள்ளது. இதனால் உங்கள் பாவங்கள் எரிந்து போகும். நீங்கள் நிஜத் தங்கமாகுவீர்கள். கலப்படத்தை அகற்றுவதற்கு உங்களுக்கு மிகவும் சிறந்த வழிமுறை கொடுக்கப்;பட்டுள்ளது: சதா என்னையே நினைவுசெய்யுங்கள். இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. ஓர் ஆத்மா சின்னஞ்சிறியவர். இதை விடப் பெரிதாக இருந்திருந்தால், அவரால் பிரவேசித்திருக்க முடியாது. அவரால் எவ்வாறு பிரவேசிக்க முடியும்? ஆத்மாவைக் காண வேண்டும் என்பதற்காக வைத்தியர்கள் அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்களைப் பார்க்க முடியாது. உங்களால் காட்சியொன்றைப் பெற முடியும். எனினும், காட்சிகளைப் பெறுவதால் எந்த நன்மையும் இல்லை. உதாரணமாக, உங்களுக்கு வைகுந்;தத்தின் காட்சி (சுவர்க்கம்) கிடைத்தால், அதில் என்ன நன்மை உள்ளது? பழைய உலகம் முடிவடையும்பொழுதே, உங்களால் வைகுந்தவாசியாக முடியும். அதற்கு நீங்கள் யோகத்தைப் பயிற்சி செய்ய வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நான் முதலில் முட்கள் மீதே அன்பு கொள்கிறேன். தந்தை உச்சளவு அன்புக்கடலாக உள்ளார். குழந்தைகளாகிய நீங்களும் தொடர்ந்தும் இனிமையானவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி பிறரைச் சகோதரர்களாகப் பார்க்கும்பொழுது, குற்ற எண்ணங்கள் அனைத்தும் முற்றாக முடிவடையும். சகோதரனும் சகோதரியும் என்ற உறவின் பொழுதும், உங்கள் புத்தி விஷமம் செய்வதால், நீங்கள் அனைவரையும் சகோதரர்களாகவே பார்க்க வேண்டும். அங்கே, அத்தகைய விழிப்புணர்வோ அல்லது அப் பற்றோ இருக்கின்ற வகையில் சரீர உணர்வு இருக்க மாட்டாது. தந்தை ஆத்மாக்களுக்கு மாத்திரமே கற்பிக்கிறார். எனவே, நீங்களும் ஆத்மாக்களாகவே உங்களைக் கருத வேண்டும். அச் சரீரம் அழியக்கூடியது என்பதால், அதன் மீது உங்கள் இதயத்தை இணைக்காதீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் அதன் மீது அன்பு கொண்டிருப்பதில்லை. பற்றை வென்ற அரசரின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கூறப்பட்டுள்ளது: ஆத்மா ஒரு சரீரத்தை விட்டுச் சென்ற பின்னர், வேறொன்றை எடுப்பார். அவரது பாகத்தை அவர் பெற்றிருப்பதால், நீங்கள் ஏன் பற்று வைக்க வேண்டும்? இதனாலேயே பாபாவும் கூறுகிறார்: எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் தாயார் அல்லது உங்கள் மனைவி மரணித்தாலும் அல்வா உண்ணுங்கள். யார் மரணித்தாலும் நீங்கள் அழ மாட்டீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள். உங்கள் தந்தையை நினைவுசெய்து சதோபிரதான் ஆகுங்கள். சதோபிரதான் ஆகுவதற்கு வேறு வழியேதும் இல்லை. முயற்சி செய்வதனால், நீங்கள் வெற்றி மணிமாலையின் மணியாகுவீர்கள். முயற்சி செய்வதால், நீங்கள் என்னவாக வர விரும்புகிறீர்களோ அவ்வாறு ஆகலாம். கடந்த சக்கரத்தில் நீங்கள் செய்த அதே முயற்சியையே இப்பொழுதும் செய்வீர்கள் என்பதைத் தந்தை புரிந்துகொள்கிறார். தந்தை ஏழைகளின் பிரபு. ஏழைகளுக்கே தானம் செய்யப்படுகிறது. தந்தையே கூறுகிறார்: நான் ஏழையோ அல்லது செல்வந்தரோ அல்லாத ஒரு சாதாரண சரீரத்திலேயே பிரவேசிக்கிறேன். குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே தந்தையைத் தெரியும். உலகிலுள்ள ஏனையோரோ அவரைச் சர்வவியாபி என்றே அழைக்கிறார்கள். துன்பம் என்ற குறிப்பே இல்லாததொரு தர்மத்தையே தந்தை ஸ்தாபிக்கிறார். பக்தி மார்க்கத்தில் மக்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகின்றார்கள். இங்கே, கருணையைப் பெறுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. யாரை நீங்கள் கீழே விழுந்து வணங்குவீர்கள்? அவரோ ஒரு புள்ளியாவார். அவர் பெரிதான ஒன்றாக இருப்பாராயின் உங்களால் கீழே விழுந்து வணங்க முடியும். சின்னஞ் சிறியதை உங்களால் விழுந்து வணங்க முடியாது. நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது யாரைக் கைகூப்பி வணங்குகின்றீர்கள்? பக்தி மார்க்கத்தின் அந்த அடையாளங்கள் அனைத்தும் மறைந்து விடும். நீங்கள் கைகூப்பி வணங்குதல் பக்தி மார்க்கம் ஆகுகின்றது. வீட்டில் சகோதர, சகோதரிகள் ஒருவர் முன்னால் ஒருவர் கைகூப்பி வணங்குகிறார்களா? மக்கள் தமக்கு வாரிசாக ஆக்கிக் கொள்வதற்கு ஒரு மகனை வேண்டுகின்றார்கள். குழந்தை அதிபதி ஆகுவதாலேயே தந்தை குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார். தந்தை குழந்தைகளின் சேவகர். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அழியும் சரீரங்களில் உங்கள் இதயத்தை இணைக்காதீர்கள். பற்றை வென்றவர் ஆகுங்கள். எவர் சரீரத்தை நீங்கினாலும், அழ மாட்டீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள்.

2. தந்தையைப் போல் இனிமையானவர் ஆகுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். முட்களை மலர்களாக மாற்றும் சேவையைச் செய்யுங்கள். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு தாமரை ஆசனத்தில் அமர்ந்திருந்து, சரீரத்தின் விழிப்புணர்விலிருந்து பற்றற்றிருப்பதால், கடவுளின் அன்பை அனுபவம் செய்வீர்களாக.

ஒரு தாமரை ஆசனமே பிராமண ஆத்மாக்களின் மேன்மையான ஸ்திதி ஆகும். அத்தகைய தாமரை ஆசனத்தில் அமர்ந்துள்ள ஆத்மாக்கள் இயல்பாகவே சரீரத்தின் விழிப்புணர்விலிருந்து பற்றற்று இருக்கின்றார்கள். சரீரத்தின் விழிப்புணர்வு அவர்களை ஈர்ப்பதில்லை. தந்தை பிரம்மா நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் தேவதை ரூபத்தையும், தேவ ரூபத்தையும் தனது விழிப்புணர்வில் எப்பொழுதும் கொண்டிருந்தார். அதேவிதமாக, நீங்கள் இயல்பான, ஆத்ம உணர்வு ஸ்திதியைக் கொண்டிருக்கும்பொழுது, சரீரத்தின் விழிப்புணர்விலிருந்து பற்றற்று இருக்கின்றீர்கள் எனக் கூறப்படுகின்றீர்கள். சரீரத்தின் விழிப்புணர்விற்கு அப்பால் இருப்பவர்களே கடவுளால் நேசிக்கப்படுகின்றார்கள்.

சுலோகம்:
கடவுளால் பிரபு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டுள்ளவையே உங்கள் சிறப்பியல்புகளும் தெய்வீகக் குணங்களும் ஆதலால், அவற்றை உங்களுக்குச் சொந்தமானவை என்று கருதுவது, சரீர அகங்காரம் ஆகும்.