05.02.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, திறமைச்சித்தி எய்த வேண்டுமாயின், உங்கள் புத்தியின் யோகம் சற்றேனும் அலைபாயக்கூடாது. ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். வேறு எவரது சரீரத்தையும் நினைவுசெய்கின்ற எவராலும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது.

கேள்வி:
அதியுயர்ந்த இலக்கு என்ன?

பதில்:
ஆத்மாக்களாகிய நீங்கள் மரணித்து வாழ்ந்து, ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவராக இருந்து, வேறு எவரையும் நினைவுசெய்யாது, உங்கள் சரீரங்களின் உணர்வு அனைத்தையும் முற்றாக மறந்திருத்தலே அதியுயர்ந்த இலக்காகும். சதா ஆத்ம உணர்வு எனும் உங்கள் ஸ்திதியை உருவாக்குவதே அதியுயர்ந்த இலக்காகும். இதன் மூலமே நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள்.

பாடல்:
நீங்களே அன்புக்கடல்; நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகின்றோம்!

ஓம் சாந்தி.
இப்பொழுது, இப்பாடல் தவறானது. அன்பிற்கு மாறாக அது ஞானக்கடல் என்றே கூறப்பட வேண்டும். நீங்கள் ஒரு கலசத்தை அன்பினால் நிரப்ப முடியாது. ஒரு கலசத்தை கங்கை நீர் போன்றவற்றினால் நீங்கள் நிரப்ப முடியும். எனவே அப்புகழ் பக்தி மார்க்கத்திற்கு உரியது. அது பிழையானது, இது சரியானதாகும். முதலில் தந்தையே ஞானக்கடல். குழந்தைகளாகிய உங்களுக்குச் சிறிதளவு ஞானம் இருந்தாலும், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். இந்த நேரத்தில், குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக இந்த உயிருள்ள தில்வாலா ஆலயத்தின் அங்கத்தவர்கள் என்பதை அறிவீர்கள். அந்தத் தில்வாலா ஆலயம் உயிரற்றது. ஆனால் இது உயிருள்ள தில்வாலா ஆலயமாகும். இதுவும் அற்புதமாகும். நீங்கள் இங்கே உயிருள்ள வடிவில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஆனால் அதுவோ உங்கள் உயிரற்ற ஞாபகார்த்தமாகும். எவ்வாறாயினும், மனிதருக்கு எதுவும் புரிவதில்லை. நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, இது நிச்சயமாகத் தந்தையான கடவுளின் பல்கலைக்கழகம் என்பதையும், கடவுளே இங்கே கற்பிக்கின்றார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். இதனைவிட சிறந்த பல்கலைக்கழகம் எதுவும் இருக்க மாட்டாது. இதுவே உயிருள்ள தில்வாலா ஆலயம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அந்தத் தில்வாலா ஆலயம் உங்களது மிகச்சரியான ஞாபகார்த்தமாகும். மேலே, கூரையில் அவர்கள் சூரிய, சந்திர வம்சங்களைச் சித்தரித்துள்ளார்கள். அத்துடன் ஆதிதேவர், ஆதிதேவி, குழந்தைகளாகிய நீங்களும் தரையில் யோகத்தில் அமர்ந்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் பிரம்மா, சரஸ்வதி பிரம்மாவின் புத்திரியாவார். பிரஜாபிதா பிரம்மா இருப்பதால், நிச்சயமாக கோபியரும் கோபிகைகளும் இருக்க வேண்டும். அந்த உருவங்கள் உயிரற்றவை. அவை கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் உருவங்கள். ஒருவர் மரணித்தவுடன் விரைவில் அவரது படம் ஒன்றை உருவாக்குவதைப் போன்றதே இதுவுமாகும். அவர்களுக்கு அவரது பதவியையோ அல்லது அவரது வாழ்க்கை வரலாற்றையோ தெரியாதிருந்தாலோ அல்லது அதில் அவரது தொழிலை அவர்கள்; எழுதாது விட்டாலோ அப்படத்தினால் எப்பயனும் இல்லை. ஏனெனில் அதன் மூலமே நீங்கள் அவர் என்ன குறிப்பிட்ட பணியைச் செய்தார் என்பதைக் கண்டுகொள்கின்றீர்கள். இப்பொழுது தேவர்களுக்கான ஆலயங்கள் இருந்தபொழுதிலும், எவருக்கும் அவர்களின் தொழில்களோ அல்லது வாழ்க்கை வரலாறுகளோ தெரியாது. எவருக்கும் அதி மேலான சிவபாபாவைத் தெரியாது. இந்த நேரத்தில், குழந்தைகளாகிய உங்களுக்கு அனைவரது வாழ்க்கை வரலாறும் தெரியும். கடந்த காலத்தில் பிரதானமாக இருந்தவர்கள் யார் என்பதையும், அவர்கள் ஏன் பூஐpக்கப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். கடவுளே அதிமேலானவர். மக்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். ஆகையால், அவர் நிச்சயமாக அவதரித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர் எப்பொழுது அவதரித்தார் என்பதையோ, அவர் வந்தபொழுது என்ன செய்தார் என்பதையோ எவரும் அறியார். சிவனுடன், பிரம்மாவும் உள்ளார். ஆதிதேவர் யார்? ஆதிதேவி யார்? அவர்கள் ஏன் அதிகளவு கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்? அது பின்னர் இடம்பெற்ற விரிவாக்கத்தின் அடையாளமாகும். பிரஜாபிதா பிரம்மாவின் ஊடாக அதிகளவு விரிவாக்கம் இடம்பெற்றது. பிரம்மாவிற்கு 100 கரங்கள் அல்லது 1000 கரங்கள் இருப்பதாக அவரைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவர்கள் விஷ்ணு, சங்கரர் ஆகியோரின் பல கரங்களைப் பற்றி பேசுவதில்லை. அவர்கள் ஏன் பிரம்மாவை இட்டு இவ்வாறு கூறுகின்றார்கள்? முழுப் படைப்பும் பிரஜாபிதா பிரம்மாவைப் பற்றியதாகும். பௌதீகமாக அந்தளவு கரங்கள் இருப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. அவர்கள் 1000 கரங்களை உடைய பிரம்மாவைப் பற்றி பேசியபொழுதிலும் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. இப்பொழுது பிரம்மாவிற்கு எத்தனை கரங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் நடைமுறை ரீதியில் பார்க்க முடியும். இக் கரங்கள் எல்லையற்றவை. அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் அவரது தொழில் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. ஓர் ஆத்மாவிற்குக் கரங்கள் இருக்க முடியாது; சரீரத்திற்கே கரங்கள் உள்ளன. மில்லியன் எண்ணிக்கையான சகோதரர்கள் உள்ளனர். அவ்வாறாயின் எத்தனை கரங்கள் இருக்க வேண்டும்? இவ்விடயங்களைப் பிறருக்குக் கூறுவதற்கு முன்னர் இந்த ஞானம் முழுவதையும் அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரேயொரு தந்தை முதலாவதாகவும், பிரதானமாகவும் கூறுகின்றார்: என்னையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். ஞானக்கடலும் நினைவுகூரப்பட்டுள்ளார்; அவர் பல ஞானக் கருத்துக்களைக் கொடுக்கின்றார். இக் கருத்துக்கள் அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியும் என்றில்லை. சாராம்சம் மாத்திரமே புத்தியில் இருக்கின்றது. இறுதியாக, எஞ்சியுள்ள சாராம்சம் மன்மனாபவ ஆகும். கிருஷ்ணர் ஞானக்கடலாக இருக்க முடியாது; அவர் படைப்பில் ஒருவராவார். தந்தை ஒருவர் மாத்திரமே படைப்பவர். தந்தையே அனைவருக்கும் ஆஸ்தியைக் கொடுப்பதுடன், அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்தும் செல்கின்றார். மௌனதாமமே தந்தையினது வீடும், ஆத்மாக்களினது வீடும் ஆகும். விஷ்ணுதாமம் தந்தையின் வீடு என் அழைக்கப்படுவதில்லை. ஆத்மாக்கள் வாழுகின்ற அசரீரி உலகமே தந்தையின் வீடாகும். விவேகமான குழந்தைகளால் இவ்விடயங்கள் அனைத்தையும் கிரகித்துக் கொள்ள முடியும். இந்த ஞானம் முழுவதும் ஒருவரது புத்தியில் நிலைத்திருக்க முடியும் அல்லது அவை அனைத்தையும் தாள்களில் எழுதி விட முடியும் என்றில்லை. நீங்கள் இம்முரளிகள் அனைத்தையும் சேர்த்தால், முழு மண்டபமுமே இவற்றினால் நிறைந்து விடும். ஏனைய கல்வியில் பல புத்தகங்கள் உள்ளன. அவர்கள் தமது பரீட்சையில் சித்தி எய்தியதும் அவர்களின் புத்தியில் அதன் சாராம்சம் மாத்திரமே எஞ்சியிருக்கும். அவர்கள் தமது சட்டக்கல்விப் பரீட்சையில் சித்தி எய்தும்பொழுது, அவர்களுக்கு ஒரு பிறவிக்கான தற்காலிகச் சந்தோஷம் உள்ளது. அது அவர்களுக்கு அழியக் கூடியதொரு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றது. இந்தத் தந்தை உங்களை எதிர்காலத்துக்கான அழிவற்ற வருமானத்தை ஈட்டுமாறு செய்கின்றார். குருமார்கள், சாதுக்கள் போன்றோர் மக்களை அழியக் கூடிய வருமானத்தை ஈட்டவே உதவி செய்கின்றார்கள். விநாசம் நெருங்கி வரும்பொழுது, அந்த வருமானம் குறைவடையும். வருமானம் உண்மையில் அதிகரிக்கின்றது என நீங்கள் கூறலாம் ஆனால் அது அவ்வாறில்லை. இவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. முன்னர் அரசர்களிடம் பயன்படுத்துவதற்குச் சொந்த வருமானம் போன்றவை இருந்தன. இந்நாட்களில் அவர்களிடம் அதுவும் இல்லை. உங்கள் வருமானம் அதிகளவு காலத்திற்கு நீடிக்கின்றது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதும், உலகில் உள்ள எவருக்கும் இது தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் இதனை வரிசைக்கிரமமாகவே கிரகிக்கின்றீர்கள். உங்களில் சிலருக்கு எதனையும் விளங்கப்படுத்த முடியாதுள்ளது. சிலர் தமது உறவினர்கள், நண்பர்கள் போன்றோருக்கு விளங்கப்படுத்துவதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அதுவும் தற்காலிகமானது. கண்காட்சிகள் போன்றவற்றில் உங்களால் ஏன் இவ்விடயங்களைப் பிறருக்கு விளங்கப்படுத்த முடியாதுள்ளது? ஏனெனில் நீங்கள் அதனை மிகச்சரியாக கிரகிக்காததால் ஆகும். உங்களை மிகவும் திறமைசாலிகள் என கருத வேண்டாம்! நீங்கள் சேவை செய்வதில் உற்சாகம் கொண்டிருந்தால், நீங்கள் தெளிவாக விளங்கப்படுத்துபவர்களைச் செவிமடுக்க வேண்டும். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு உங்களுக்கு உதவி செய்யவே தந்தை வந்துள்ளார். எனவே நீங்கள் சில முயற்சிகளைச் செய்ய வேண்டும். எனினும் அது உங்கள் பாக்கியத்தில் இல்லாதிருந்தால், நீங்கள் ஸ்ரீமத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டீர்கள். அப்பொழுது உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படுகின்றது. இந்த இராச்சியம் நாடகத் திட்டத்திற்கேற்ப ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்த இராச்சியத்திற்கு பல்வேறு வகையானோரும் தேவைப்படுகிறார்கள். சிலர் நல்ல பிரஜைகளாகவும், சிலர் இன்னமும் குறைவானவர்களாகவும் ஆகுவார்;கள் என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் புரிந்துகொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்திருக்கின்றேன். தில்வாலா ஆலயத்தில் அரசர்களின் உருவங்களும் உள்ளன. பூஜிக்கத் தகுதியுடையவர் ஆகுபவர்கள் பின்னர் பூஐpப்பவர்கள் ஆகுகின்றார்கள். அந்த அரசர்களதும், அரசிகளதும் அந்தஸ்து உயர்ந்தது. அவர்கள் பாவப்பாதையில் வீழும்பொழுதும், செல்வம் நிறைந்தவர்களைக் கொண்ட இராச்சியங்கள் இருந்தன. ஜெகத்நாதர் ஆலயத்தில், அனைவரும் கிரீடத்துடன் காட்டப்பட்டுள்ளார்கள். பிரஜைகள் கிரீடம் அணிவதில்லை. கிரீடம் அணிந்துள்ள அந்த அரசர்களும் அரசிகளும் விகாரத்தில் ஈடுபட்டிருப்பதைப் போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கும் அதிகளவு சந்தோஷமும், செல்வமும் உள்ளன. ஆனால் சிலரிடம் அதிகளவு செல்வமும், சிலரிடம் குறைவாகவும் இருக்கின்றது. வைரம் பதித்த மாளிகைகளுக்கும் வெள்ளி மாளிகைகளுக்கும் இடையில் நிச்சயமாக வேறுபாடு உள்ளது. ஆகையால் குழந்தைகளிடம் தந்தை கூறுகின்றார்: உயர்ந்த அந்தஸ்தைக் கோர நல்ல முயற்சி செய்யுங்கள். அரசர்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்கின்றார்கள். அங்கு அனைவருமே சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆனால் இங்கோ, அனைவரும் சந்தோஷமற்றிருக்கின்றார்கள். இங்கே அனைவரும் சுகயீனம் போன்றவற்றை அனுபவம் செய்கின்றார்கள். அங்கு சந்தோஷம் மாத்திரமே உள்ளது. இருப்பினும் அவர்களது அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே உள்ளது. தந்தை கூறுகின்றார்: எப்பொழுதும் முயற்சியைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருங்கள்; சோம்பல் அடையாதீர்கள். நீங்கள் செய்கின்ற முயற்சியிலிருந்து, நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் எத்தகைய சற்கதியைப் பெறுவீர்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. சற்கதி அடைய வேண்டுமாயின், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரு மாணவர் தனது ஆசிரியர் கொடுக்கும் வழிகாட்டல்களைப் பின்பற்றாதிருந்தால், அவர் பயனற்றவர். நீங்கள் அனைவரும் நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமானவர்கள். உங்களால் ஏதோ ஒன்றைச் செய்ய முடியவில்லை என்று நீங்கள் கூறினால், நீங்கள் எதனைக் கற்பீPர்கள்? நீங்கள் கற்று விவேகமானவர் ஆக வேண்டும். அப்பொழுதே நீங்கள் நன்றாக விளங்கப்படுத்துகின்றீர்கள் என்று மக்கள் கூறுவார்கள். எனினும் ஆத்மாக்களாகிய நீங்கள் மரணித்து வாழ்ந்து, ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவர்களாக இருக்க வேண்டும். வேறு எவரையும் நினைவுசெய்யாது, அனைத்துச் சரீர உணர்வையும் துண்டிப்பதே அதியுயர்ந்த இலக்காகும். நீங்கள் அனைத்தையும் மறக்க வேண்டும். உங்கள் ஸ்திதியை நீங்கள் முற்றாக ஆத்ம உணர்வில் வைத்திருப்பதே உயர்ந்த இலக்காகும். மேலே அங்கிருக்கும் ஆத்மாக்கள் சரீரமற்றவர்கள். பின்னர் அவர்கள் இங்கு வந்து சரீரங்களை ஏற்றுக் கொள்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் இங்கிருக்கும்பொழுது, சரீரமற்றவர்களாக உங்களைக் கருத வேண்டும். இம்முயற்சி மிகவும் மகத்தானது. நீங்கள் ஆத்மாக்களாக உங்களைக் கருதி, கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டும். ஒரு பாம்பிற்குக் கூட தனது பழைய தோலை அகற்றிவிடும் விவேகம் உள்ளது. நீங்களும் உங்கள் சரீர உணர்வைத் துறக்க வேண்டும். நீங்கள் பரந்தாமத்தில் இருக்கும்பொழுது, எவ்வாறாயினும் ஆத்ம உணர்வில் இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் ஒரு சரீரத்தில் இருக்குமபொழுதே, உங்களை ஓர் ஆத்மாவெனக் கருத வேண்டும். சரீர உணர்வு முடிக்கப்பட வேண்டும். இது கடவுளே கற்பிப்பதற்கு வர வேண்டியதொரு மிகப் பெரிய பரீட்சையாகும். சரீரத்திற்கான அனைத்து உறவுமுறைகளையும் துறந்து, எனக்குரியவர் ஆகுங்கள் என வேறு எவருமே கூறமாட்டார்கள். உங்களை அசரீரியான ஆத்மாக்கள் என்று கருதுங்கள். உங்களுக்கு ஏனைய எந்த உணர்வும் இருக்கக்கூடாது. மாயை பிறரது சரீர உணர்வில் உங்களைச் சிக்க வைக்கின்றாள். ஆகையாலேயே இந்தச் சரீரதாரியைக் கூட நீங்கள் நினைவுசெய்யக்கூடாது என்று பாபா உங்களிடம் கூறுகின்றார். பாபா கூறுகின்றார்: உங்கள் சொந்த சரீரங்களைக் கூட நீங்கள் மறந்து, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. மாயை நல்ல குழந்தைகளைக் கூட பிறரின் பெயரிலும், வடிவிலும் சிக்க வைத்து விடுகின்றாள். அந்தப் பழக்கம் மிகவும் தீயதாகும். ஒருவரது சரீரத்தை நினைவுசெய்வது, தீய ஆவிகளை நினைவுசெய்வதைப் போன்றது. ஒரேயொரு சிவபாபாவை மாத்திரம் நினைவுசெய்யுங்கள் என்று நான் உங்களிடம் கூறுகின்றேன். ஆனால் நீங்கள் ஐந்து தீய ஆவிகளையே தொடர்ந்தும் நினைவுசெய்கின்றீர்கள். எவரது சரீரத்தின் மீதும் எந்தப் பற்றும் இருக்கக்கூடாது. உங்கள் ஆசிரியருடன் நீங்கள் கற்க வேண்டும். ஆனால் அந்த ஆசிரியரின் பெயரிலோ, வடிவத்திலோ நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி தேவை. பல குழந்தைகளும், தமது அட்டவணைகளை பாபாவிற்கு அனுப்புகின்றனர். ஆனால் அவர்களின் மீது பாபாவிற்கு நம்பிக்கை இல்லை. சிலர் கூறுகின்றார்கள்;: நான் சிவபாபாவைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்வதில்லை. எவ்வாறாயினும், அவர்களது நினைவு ஒரு சதப் பெறுமதியும் அற்றது என்பது பாபாவிற்குத் தெரியும். நினைவுசெய்வதற்கே அதிகளவு முயற்சி தேவை. ஆத்மாக்கள் எவராவது ஒருவரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். சரீரதாரியை நினைவுசெய்தல் என்றால் ஐந்து தீய ஆவிகளையும் நினைவுசெய்தல் என்றே அர்த்தமாகும். அது ஐந்து தீய ஆவிகளின் வழிபாடு என்றும் அழைக்கப்படுகின்றது. நீங்கள் தீய ஆவிகளை நினைவுசெய்கின்றீர்கள். இங்கே நீங்கள் ஒரேயொரு சிவபாபாவையே நினைவுசெய்கின்றீர்கள். வழிபாடு செய்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் பக்தியின் பெயர், சுவடு அனைத்தையும் முடித்துள்ளீர்கள் என்பதால், நீங்கள் ஏன் அந்த விக்கிரகங்களை நினைவுசெய்கின்றீர்கள்? அவையும் களிமண்ணாலேயே செய்யப்பட்டுள்ளன. தந்தை கூறுகின்றார்: இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நான் உங்களைப் பூஐpப்பவர்களிலிருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக மாற்ற வேண்டும். நீங்கள் எந்தச் சரீரதாரியையும் நினைவுசெய்யக்கூடாது; தந்தையைத் தவிர வேறு எவரையும் அல்ல. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும்பொழுது, தூய சரீரங்களைப் பெறுவீர்கள். இப்பொழுது அந்தச் சரீரங்கள் தூய்மையானவையல்ல. ஆத்மாக்கள் சதோபிரதானிலிருந்து சதோ, இரஜோ, தமோவாக மாறும்பொழுது, அவர்கள் அதற்கேற்ப சரீரங்களைப் பெறுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் தூய்மையாக்கப்படுகின்றீர்கள். ஆனால் உங்கள் சரீரங்கள் இங்கே தூய்மையாக மாட்டாது. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இக்கருத்துக்களை நன்றாகப் புரிந்துகொண்டு, அதனைப் பிறருக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றவர்களின் புத்தியிலேயே அவை நிலைத்திருக்கும். ஆத்மாக்களே சதோபிரதானாக வேண்டும். தந்தையை நினைவுசெய்வதற்கே அதிகளவு முயற்சி தேவை. உங்களில் சிலருக்குச் சற்றேனும் நினைவுசெய்ய முடிவதில்லை. திறமைச்சித்தி எய்த வேண்டுமாயின், உங்கள் புத்தியின் யோகம் சற்றேனும் அலைபாயக்கூடாது. ஒரேயொரு தந்தையின் நினைவு மாத்திரமே உங்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் உங்களின் புத்தியின் யோகம் தொடர்ந்தும் அலைபாய்கின்றது. நீங்கள் எந்தளவிற்கு அதிகளவினரை உங்களுக்குச் சமமானவர் ஆக்குகின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். பிறரது சரீரத்தை நினைவுசெய்பவர்களால் ஒருபொழுதும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. இங்கே நீங்கள் திறமைச்சித்தி எய்த வேண்டும். இந்த முயற்சியை நீங்கள் செய்யாதிருந்தால் எவ்வாறு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும்? பிறரது சரீரத்தை நினைவுசெய்பவர்களால் எந்த முயற்சியையும் செய்ய முடியாது. தந்தை கூறுகின்றார்: முயற்சி செய்பவர்களைப் பின்பற்றுங்கள். இவரும் ஒரு முயற்சியாளர். இந்த ஞானம் தனித்துவமானது. இவ் உலகில் உள்ள எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. ஆத்மாக்கள் எவ்வாறு மாறுகின்றார்கள் என்பது எவரது புத்தியிலும் இல்லை. இவை அனைத்திற்கும் மறைமுகமான முயற்சி தேவை. பாபா மறைமுகமானவர். உங்கள் இராச்சியத்தை நீங்கள் எவ்வாறு பெறுகின்றீர்கள்? இதற்கு நீங்கள் சண்டை, சச்சரவில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. அனைத்துமே ஞானத்தையும் யோகத்தையும் பற்றியது. இதற்காக நீங்கள் எவருடனும் சண்டையிடத் தேவையில்லை. ஆத்மாக்களைத் தூய்மையாக்கவே முயற்சி செய்யப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்பொழுது, தூய்மையற்ற சரீரங்களை எடுக்க ஆரம்பிக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையாகி வீடு திரும்ப வேண்டும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எத்தகைய முயற்சி செய்கின்றீர்கள் என்பதை பாபாவால் புரிந்துகொள்ள முடியும். இது சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம். நீங்கள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் சேவை செய்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் சேவை செய்யாதிருந்தால், நீங்கள் சதப் பெறுமதியான அந்தஸ்தையே பெறுகிறீர்கள். நீங்கள் இங்கு தந்தையிடம் சேவை செய்வதற்காக வந்த பின்னர் சேவை செய்யாதிருந்தால், நீங்கள் எந்த அந்தஸ்தைக் கோரப் போகின்றீர்கள்? இங்கேயே ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பணியாளர் போன்றோரும் இங்கேயே உருவாக்கப்பட வேண்டும். இப்பொழுதே நீங்கள் இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். வேறு எந்த யுத்தமும் இருக்க முடியாது. இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்ற இந்த விடயம் மிகவும் மறைமுகமானது. நீங்கள் உங்களுடைய யோகசக்தியின் மூலம் உங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அமைதிதாம வாசிகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள், உங்களுடைய எல்லையற்ற வீட்டை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் எங்கள் பாகங்களை இங்கு நடித்த பின்னர், அந்த வீட்டிற்குச் செல்லவே வந்துள்ளோம். ஆத்மாக்கள் எவ்வாறு வீடு திரும்புகின்றார்கள் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். அதன் பின்னர் ஆத்மாக்கள் மீண்டும் நாடகத் திட்டத்திற்கு ஏற்ப கீழே இங்கு வரவேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எந்த சரீரதாரிகள் மீதும் பற்று வைக்காதீர்கள். ஒருவரது சரீரத்தை நினைவுசெய்தல் என்றால் தீய ஆவிகளை நினைவுசெய்தலாகும். ஆகவே எவரது பெயரிலும் வடிவத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் சொந்தச் சரீரத்தையும் கூட மறந்துவிட வேண்டும்.

2. எதிர்காலத்திற்கான அழியாத வருமானத்தைச் சேகரியுங்கள். விவேகிகளாகி உங்கள் புத்தியில் ஞானக் கருத்துக்களைக் கிரகியுங்கள். தந்தை விளங்கப்படுத்துகின்ற விடயங்களைப் புரிந்துகொண்டு, பின்னர் அதனைப் பிறருக்கும் விளங்கப்படுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இதயங்களிற்குச் சௌகரியம் அளிப்பவரான, திலாராமினால் நேசிக்கப்பட்டு, ஒரு நேர்மையான சுத்தமான இதயத்தின் அடிப்படையில் முதல் இலக்கத்தைக் கோருவீர்களாக.

இதயங்களிற்குச் சௌகரியம் அளிப்பவராகிய, தந்தை நேர்மையான இதயங்களைக் கொண்டுள்ள குழந்தைகளை மாத்திரமே நேசிக்கின்றார். ஒருவர் உலகியல் ரீதியாகப் புத்திசாலியாக இல்;லாவிட்டாலும், ஒரு நேர்மையான, சுத்தமான இதயத்தைக் கொண்டிருந்தால், அவர் முதல் இலக்கத்தைக் கோருவார். தந்தை அத்தகையதொரு பெரிய புத்தியைக் கொடுக்கின்றார், அதன் மூலம் படைப்பவரை அறிந்துகொள்வதால், நீங்ள் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை அறிந்துகொள்கின்றீர்கள். ஆகவே, ஒரு நேர்மையான, சுத்தமான இதயத்தைக் கொண்டிருப்பதிலேயே இலக்கங்கள் தங்கியுள்ளனவே அன்றி, சேவையின் அடிப்படையில் அல்ல. ஒரு நேர்மையான இதயத்தின் மூலம் செய்யப்படுகின்ற சேவை இதயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புத்திசாலி ஆத்மாக்கள் ஒரு பெயரைச் சம்பாதிக்கின்றனர், ஒரு இதயத்தைக் கொண்டுள்ளவர்களோ, ஆசீர்வாதங்களைச் சம்பாதிக்கின்றனர்.

சுலோகம்:
அனைவருக்காகவும் தூய எண்ணங்களையும், நல்லாசிகளையும் கொண்டிருப்பதே, உண்மையான ஈடேற்றத்தைக் கொடுப்பதாகும்.