05.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இக்கல்;வியை ஒருபொழுதும் தவறவிடக்கூடாது. கற்பதாலேயே நீங்கள் ஒரு புலமைப்பரிசிலை வெல்கிறீர்கள். ஆகவே தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஞானத்தைக் கிரகியுங்கள்.

கேள்வி:
யாரை நீங்கள் தகுதிவாய்ந்த பிராமணர்கள் என அழைப்பீர்கள்? அவர்களின் அறிகுறிகள் என்ன?

பதில்:
1. தகுதிவாய்ந்த பிராமணர்கள் பாபாவின் கீதை ஞானத்தை இதயபூர்வமாகக் கூறக்கூடியவர்கள்.

ஓம் சாந்தி.
தந்தை தனது அறிமுகத்தையும், உலகச் சக்கரத்தின் ஞானத்தையும் கொடுத்துள்ளார். அவர்கள் நாடகங்களையும் மாதிரிகளையும் (அழனநடள) உருவாக்குவது போன்று, உலகச் சக்கரமும் மீண்டும், மீண்டும் அதேபோன்று இடம்பெறுகிறது என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் பதிந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இச்சக்கரத்தை உங்கள் புத்தியில் சுழற்ற வேண்டும். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என அழைக்கப்படுவதால், இவை யாவும் உங்கள் புத்தியில் சுழல வேண்டும். தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஞானத்தைக் கிரகியுங்கள். இறுதியில் நீங்கள் ஒரேயொரு தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதுடன், உங்களில் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினது ஞானம் இருக்கக் கூடிய அளவிற்கு அதனைக் கிரகிக்கவும் வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிக நல்ல முயற்சியைச் செய்ய வேண்டும். இது ஒரு கல்வி. பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எவரும் இக்கல்வியை அறியார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பல்வேறு வகையான சாதிகள் உள்ளன. அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மக்கள் நம்புகிறார்கள். இப்பொழுது உலகம் முழுவதும் ஒன்றாக முடியாது. இவ்வுலகில் ஒரே ஓர் இராச்சியமும், ஒரேயொரு தர்மமும், ஒரேயொரு மொழியும் இருக்க வேண்டிய தேவை உள்ளதாயினும், அது சத்தியயுகத்தில் மாத்திரமே இருக்க முடியும். அங்கு உலக அதிபதிகளான, இலக்ஷ்மி நாராயணனது உலக இராச்சியமும் இருக்கும். அந்நேரத்தில் உலகில் எவ்வாறு அமைதி இருந்தது என்பதை நீங்கள் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இது பாரதத்திற்கான ஒரு கேள்வி மாத்திரமே. அது அவர்களின் இராச்சியமாக இருந்தபொழுது, முழு உலகிலும் அமைதி நிலவியது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாது. அனைவரும் பக்தர்களே, அவர்களின் பக்திக்கும், இந்த ஞானத்திற்குமிடையில் உள்ள வேறுபாட்டை உங்களால் பார்க்க முடியும். நீங்கள் வழிபாடு செய்யாவிட்டால், பேய்களும் தீய ஆவிகளும் உங்களுக்குத் தீங்கிழைக்கும் என்றில்லை. இல்லை. இப்பொழுது நீங்கள் தந்தைக்குரியவர்கள். உங்களுக்குள் நீங்கள் எத்தகைய தீய ஆவிகளைக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். முதன்மையான தீய ஆவி சரீர உணர்வின் ஆணவமாகும். நீங்கள் இதனைத் துறக்கும்பொருட்டு, தந்தை உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குகிறார். நீங்கள் தந்தையை நினைவுசெய்யும்பொழுது, எந்தத் தீய ஆவியும் உங்கள் முன்னால் வருவதற்குப் பயப்படும். 21 பிறவிகளுக்கு எந்தத் தீய ஆவிகளும் வரமாட்டாது. ஜந்து தீய ஆவிகளும் இராவண சமுதாயத்திற்கு உரியவை. இராவண இராச்சியமும் இராம இராச்சியமும் ஒன்றிலிருந்து மற்றையது வேறுபட்டது. இராவண இராச்சியத்தில் சீரழிவு காணப்படுகிறது. ஆனால் இராம இராச்சியத்தில் ஆத்மாக்கள் மேன்மையானவர்கள். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவராலும் இவ் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியாது. எவ்வாறாயினும் உங்கள் மத்தியிலும் விவேகமானவர்களும் புத்திசாலிகளும் மாத்திரம் இதை மிக நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். ஏனெனில் பூனையான, மாயையும் குறைந்தவளல்ல. சிலவேளைகளில் குழந்தைகள் கற்பதை நிறுத்துகிறார்கள், அல்லது நிலையத்திற்குச் செல்வதை நிறுத்துகிறார்கள். அத்துடன் அவர்கள் நற்குணங்களையும் கிரகிப்பதில்லை. அவர்களின் கண்கள் அவர்களை ஏமாற்றுகின்றன: அவர்கள் ஏதாவது நல்லதைக் கண்டால் அதனைச் சாப்பிட்டு விடுவார்கள். எனவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இதுவே (இலக்ஷ்மியும் நாராயணனும்) இலக்கும், இலட்சியமும் ஆகும். நீங்களும் அவர்களைப் போல் ஆகுவதுடன் அவர்களிடம் உள்ளதைப் போன்று நற்குணங்களையும் கிரகிக்க வேண்டும். அங்கு அரசர், அரசி எப்படியோ பிரஜைகளும் அவ்வாறே. அனைவரும் நற்குணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அங்கு அசுர குணங்கள் இருப்பதில்லை. அங்கு அசுரர்களும் இருப்பதில்லை. இவ்விடயங்களை பிரம்மகுமார்கள், பிரம்மகுமார்களாகிய உங்களைத் தவிர வேறெவராலும் புரிந்துகொள்ள முடியாது. உங்களிடம் தூய பெருமை உள்ளது. ஏனெனில் நீங்கள் இனிமையிலும் இனிமையான ஆன்மீகத் தந்தைக்குரியவர் என்பதால், இப்பொழுது ஆஸ்திகர்கள் ஆகியுள்ளீர்கள். எந்தச் சரீரதாரியாலும் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது என்பதையும், வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தையோ அல்லது நினைவு யாத்திரையையோ கற்பிக்க முடியாது என்பதையும் நீங்களும் அறிவீர்கள். தந்தையால் மாத்திரமே இதனை உங்களுக்குக் கற்பிக்க முடியும். இதனை நீங்கள் கற்று, பின் ஏனையோருக்கும் கற்பிக்கின்றீர்கள். உங்களுக்கு இதனைக் கற்பித்தவர் யார்? உங்கள் குரு யாரென அவர்கள் ஒருவேளை உங்களிடம் வினவக்கூடும்;. ஏனெனில் இந்த ஆன்மீக விடயங்களை ஆசிரியர்களால் கற்பிக்க முடியாது. ஒரு குரு மாத்திரமே இவ்விடயங்களைக் கற்பிப்பார். எனினும், சற்குருவைத் தவிர வேறு எந்தக் குருவையும் நீங்கள் கொண்டிருக்கவில்லை எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் பரம் என்றும் அழைக்கப்படுகிறார். நாடகத்திற்கேற்ப உண்மையான சற்குருவே வந்து, தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவர் எங்களுக்குக் கூறுவதெல்லாம் சத்தியமே. அவர் எங்களைச் சத்திய பூமிக்கு அழைத்துச் செல்கிறார். ஒரேயொரு சத்தியமானவர் மாத்திரமே இருக்க முடியும். சரீரதாரி எவரையாவது நினைவுசெய்வது பிழையாகும். இங்கு நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் சின்னஞ்சிறிய ஒளிப் புள்ளிகளாக இருப்பதைப் போன்று, தந்தையும் ஓர் ஒளிப் புள்ளியே. ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கெனச் சொந்த சம்ஸ்காரங்களையும், கர்மாவையும் கொண்டுள்ளார். அவர்களது சம்ஸ்காரங்கள் ஒரேமாதிரியாக இருக்கமுடியாது. அவர்களின் சம்ஸ்காரங்கள் ஒரேமாதிரியாக இருந்தால், அவர்களின் சாயல்களும் (கநயவரசநள) ஒரேமாதிரியாக இருக்கும். எவ்வாறாயினும் ஒருபொழுதுமே சாயல்கள் ஒரேமாதிரி இருக்க முடியாது. சிறிதளவேனும் வேறுபாடு இருக்க வேண்டும். இந்த ஒரு நாடகமும், ஒரேயொரு உலகமும் மாத்திரமே இருக்கும். பல அல்ல. மேலே ஓர் உலகமும், கீழே ஓர் உலகமும் உள்ளன என்றோ அல்லது நட்சத்திரங்களில் ஓர் உலகம் உள்ளது என்றோ கூறுவதெல்லாம் கட்டுக்கதைகள். பாபா வினவுகிறார்: இதனை உங்களுக்குக் கூறியது யார்? அவர்கள் பல்வேறு வகையான சமயநூல்களைக் குறிப்பிடுகிறார்கள். சமயநூல்கள் நிச்சயமாக மனிதர்களாலேயே எழுதப்பட்டன. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். விநாடிக்கு விநாடி நடிக்கப்படுகின்ற எதுவானாலும் ஏற்கனவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளே, எவ்வாறு இந்த உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதும், எவ்வாறு மனிதர்கள் தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளன. சத்தியயுகத்தில் உங்களுக்கு மாத்திரமே நடிப்பதற்கான பாகங்கள் உள்ளன என்று பாபா குழந்தைகளான உங்களுக்குக் கூறியுள்ளார். உங்கள் பாகங்களை நடிப்பதற்காக, வரிசைக்கிரமமாக நீங்கள் கீழிறங்கி வருகிறீர்கள். பாபா உங்களுக்கு அனைத்தையும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். எனவே குழந்தைகளாகிய நீங்கள் இவை அனைத்தையும் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். பெரிய நிலையங்கள் திறக்கப்படும். அப்பொழுது முக்கியஸ்தர்களும், அத்துடன் ஏழைகளும் வருவார்கள். பொதுவாக, இந்த ஞானம் ஏழைகளின் புத்தியில் மிக விரைவில் பிரவேசித்து விடும். முக்கியஸ்தர்கள் வருகிறார்;கள். ஆனால் தங்களின் வேலைகளினால் இங்கு கற்பதற்காக வருவதற்குத் தங்களுக்கு நேரமில்லையெனக் கூறுகிறார்;கள். குழந்தைகள் தாங்கள் நன்றாகக் கற்பதாகச் சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கற்காவிட்டால், தங்களுக்கே தீங்கிழைக்கிறார்கள். மாயை அவர்களைத் தன் பக்கம் இழுத்து விடுவாள். கற்பதை நிறுத்திய பல குழந்தைகள் உள்ளார்கள். அவர்கள் தங்கள் கல்வியைத் தவறவிட்டால், நிச்சயமாக அவர்கள் சித்தி எய்த மாட்டார்கள். ஒரு பாடசாலையில் உள்ள நல்ல மாணவர்கள் திருமண வைபவத்திற்கோ அல்லது வேறெங்;கோ செல்வதற்கென ஒருபொழுதும் விடுமுறை (லீவ்) எடுக்க மாட்டார்கள். ஏனெனில் தாங்கள் சிறப்பாகக் கற்றுப் புலமைப்பரிசில் பெற வேண்டுமென அவர்களின் புத்தி கூறுகிறது. இதனாலேயே, அவர்கள் கற்கிறார்கள். அவர்கள் ஒருபொழுதும் கற்பதைத் தவற விடுவதைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தங்கள் கல்வியைத் தவிர வேறெதுவும் இனிமையானதாகத் தோன்றாது. இல்லையேல், தங்களின் நேரம் பயனற்ற முறையில் வீணாகிவிடும் என அவர்கள் புரிந்துகொள்வார்கள். இங்கு உங்களுக்கு ஒரே ஓர் ஆசிரியர் மாத்திரமே கற்பிக்கின்றார். ஆகையால் நீங்கள் ஒருபொழுதும் உங்கள் கல்வியைத் தவறவிடக்கூடாது. ஆம், மாணவர்களும் தாங்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமானவர்கள். தனது மாணவன் நன்றாகச் செய்கிறான் என ஆசிரியர் உணரும்பொழுது, கற்பிப்பதில் களிப்படைகிறார். அவர்கள் நன்றாகச் செய்யும்பொழுது, ஆசிரியரின் பெயரும் போற்றப்படுகிறது. அவர்களின் தரம் முன்னேற்றமடைந்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இங்கேயும் நன்றாகக் கற்கின்றவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். ஒரே வகுப்பிலிருந்தே சிலர் உயர்ந்த அந்தஸ்தையும், சிலர் குறைந்த அந்தஸ்தையும் பெறுவர். எனவே அவர்களது வருமானம் சமமாக இருக்க மாட்டாது. அனைத்தும் புத்தியிலேயே தங்கியுள்ளது. அங்கு மனிதர்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். எனினும், இங்கு எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆதலால் நீங்கள் மிக நன்றாகக் கற்க வேண்டும். கவனயீனமாக இருக்கக்கூடாது. நீங்கள் இந்தக் கல்வியை ஒருபொழுதும் கைவிட்டுச் செல்லக்கூடாது. சிலர் சிலவேளைகளில் ஒருவருக்கொருவர் தலைகீழான விடயங்களைக் கூறித் துரோகிகள் ஆகுகிறார்கள். நீங்கள் பிறரின் கட்டளைகளைப் பின்பற்றக்கூடாது. ஸ்ரீமத்தைப் பற்றி எவராவது எதனைக் கூறினாலும், உங்களுக்குக் கற்பிப்பவர் தந்தையே என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும், எனவே நீங்கள் என்றுமே இக்கல்வியைக் கைவிட்டுச் செல்லக்கூடாது. குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள், ஆனால் தந்தை எப்பொழுதும் முதல் எண்ணில் முதலாவதாக உள்ளவர். நீங்கள் இக்கல்வியை விட்டு விலகி எங்கு செல்ல முடியும்? நீங்கள் இக்கல்வியை வேறெங்கும் பெற முடியாது. நீங்கள் சிவபாபாவுடனேயே கற்க வேண்டும். நீங்கள் சிவபாபாவுடனேயே ஒரு பேரத்தையும் கொண்டிருக்க வேண்டும். சிலர் தலைகீழான விடயங்களைக் கூறி, பிறரை மறு பக்கத்திற்குத் திருப்புகிறார்கள். இது சிவபாபாவின் வங்கி. உதாரணமாக உங்களிற் சிலர் ஓர் ஆன்மீக ஒன்றுகூடலை வெளியே ஆரம்பிக்க விரும்பினால், சிவபாபாவின் வங்கியில் சேமிப்பு வைக்க விரும்பினால், எவ்வாறு அதனை நீங்கள் செய்யப் போகின்றீர்கள்? இங்கு வரும் குழந்தைகள் தங்களால் கொடுக்கக்கூடியளவை சிவபாபாவின் பண்டாரிக்குக் கொடுக்கிறார்கள். ஒரு சதம் கொடுத்தாலும், அதற்குப் பதிலாக அவர்கள் நூறு மடங்கைப் பெறுகிறார்;கள். சிவபாபா கூறுகின்றார்: அதற்குப் பதிலாக நீங்கள் ஒரு மாளிகையைப் பெறுவீர்கள். இப் பழைய உலகம் முழுவதும் அழியப் போகின்றது. செல்வந்தக் குடும்பங்களிலிருந்து பலர் வந்திருந்தாலும், சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்து நீங்கள் பராமரிக்கப்படவில்லையென உங்களில் எவருமே கூறமாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அனைவரும் இங்கேயே பராமரிக்கப்படுகின்றீர்கள். சிலர் ஏழைகளாகவும், சிலர் செல்வந்தர்களாகவும் உள்ளார்கள். ஏழைகள் செல்வந்தர்களால் பராமரிக்கப்படுகிறார்கள். இதில் பயப்படுவதற்கான கேள்வி எதுவுமில்லை. பல குழந்தைகள் பாபாவிற்கு உரியவர்களாக வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் இதற்கு அவர்கள் தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், ஞானத்தைக்; கொடுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அரசாங்கமும் எவரையும் உள்ளெடுப்பதற்கு முன் அவர்களை முழுமையாகச் சோதிக்கும். இங்கேயும் முதலில் அனைத்தையும் சோதிக்க வேண்டும். அவர்கள் சேவை செய்யக்கூடியவர்களா? அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த முயற்சியைச் செய்கிறீர்கள். சிலர் நன்றாக முயற்சி செய்தாலும் பின்னர் வராமல் இருந்து விடுகிறார்கள். ஏதோவொரு காரணத்தால் அவர்கள் வருவதை நிறுத்தி விடுகிறார்கள். பின்னர் அது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றது. இவை அனைத்தும் உங்களுக்கு கற்பிக்கப்பட்டிருப்பதினால் நீங்கள் என்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகமுடியும். நினைவைக் கொண்டிருப்பதனால் மாத்திரம் அவர்களின் பாவங்கள் அழிக்கப்படும் என ஆர்வமுள்ளவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் மிக நல்ல முயற்சியைச் செய்கிறார்;கள். சிலர் தங்கள் நேரத்தைப் போக்குவதற்கே இங்கு வருகிறார்கள். இதைப் பற்றி நீங்களே உங்களைப் பரிசோதனை செய்ய வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் ஒரு தவறைச் செய்தால், உங்களால் எவருக்கும் கற்பிக்க முடியாதிருக்கும் என அறியப்பட்டுள்ளது. பாபா கூறுகிறார்: நீங்கள் 7 நாட்களுக்குள் பெயரளவில் ஒரு பிராமணராக அல்லாமல்; ஒரு தகுதிவாய்ந்த பிராமணராக ஆகவேண்டும். ஓர் உண்மையான பிராமணர் என்றால் பாபாவின் கீதை ஞானத்தை இதயபூர்வமாக நினைவுசெய்யக்கூடியவர். பிராமணப் புரோகிதர்களும் வரிசைக்கிரமமானவர்கள். இங்கேயும் அவ்வாறே. இக்கல்வியில் நீங்கள்; கவனம் செலுத்தாவிட்டால், நீங்கள் என்னவாகுவீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் முயற்சி செய்து, சேவையின் அத்தாட்சியைக் காட்ட வேண்டும். அப்பொழுது நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பது புரிந்துகொள்ளப்படுவதுடன், இது கல்பம், கல்பமாகவும் நிச்சயிக்கப்பட்டிருக்கும். நீங்கள் கற்று, பிறருக்குக் கற்பிக்காவிட்டால், நீங்கள் உள்ளாரப் புரிந்துகொள்ள வேண்டும்: நான் மிக நன்றாகக் கற்கவில்லை, இதனாலேயே என்னால் எவருக்கும் கற்பிக்க முடியவில்லை. பாபா கூறுகிறார்: நீங்கள் பிறருக்குக் கற்பிக்கத் தகுதிவாய்ந்தவராக ஏன் இன்னும் ஆகவில்லை? இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஒரு பிராமண ஆசிரியரை உங்களுக்கு அனுப்ப முடியும்? நீங்கள் பிறரையும் உங்களைப் போல ஆக்க வேண்டும். நன்றாகக் கற்பவர்கள் உதவி செய்ய வேண்டும். ஆனால் உங்களிற் பலர் ஒருவரோடு ஒருவர் ஒரு வகையான முரண்பாட்டைக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது ஒருவர் மீது ஒருவர் பற்றுடையவராகிக் கற்பதை நிறுத்தி விடுகிறீர்கள். முயற்சி செய்பவர்கள் அதன் பலனைப் பெறுவார்கள். நீங்கள் சிலர் கூறுகின்ற, வார்த்தைகளின் செல்வாக்கிற்குட்பட்டு ஏன் கற்பதை நிறுத்துகிறீர்கள்? இதுவும் நாடகத்தில் உள்ளது. அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை. நாளுக்கு நாள் இக்கல்வி அதிகத் தீவிரமாகுவதுடன் அதிக நிலையங்களும் தொடர்ந்தும் திறக்கப்படுகின்றன. இது சிவபாபாவின் செலவு அல்ல, சகல செலவுகளும் குழந்தைகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதுவே சிறந்த தானம். மற்றவர்கள் தானம் செய்யும்பொழுது எல்லைக்குட்பட்ட, குறுகிய கால சந்தோஷத்தைப் பிரதிபலனாகப் பெறுகிறார்கள். எவ்வாறாயினும் நீங்கள் இங்கு தானம் செய்யும்பொழுது, அதன் வெகுமதியை 21 பிறவிகளுக்குப் பெறுகிறீர்கள். நீங்கள் சாதாரண மனிதனில் இருந்து நாராயணன் ஆகுவதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நீங்கள் யார் நன்றாகக் கற்கின்றார்களோ அவர்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒழுங்காகக் கற்க வேண்டும். பொதுவாகச் சரீர உணர்வு காரணமாகவே உங்களிற் பலர் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறீர்கள்; நீங்கள் உங்கள் சொந்தப் பாக்கியத்தில் முகம் கோணுகிறீர்கள்; இதனாலேயே தாய்மார்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள். தாய்மார்களின் பெயரே பெருமைப்படுத்தப்படுகிறது. இந்தத் தாய்மார்களின் முன்னேற்றமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே தந்தை கூறுகின்றார்: இனிய, இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள். ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள். ஒரு சரீரமின்றி எப்படி நீங்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்பீர்கள்? இந்த உறுதியான பயிற்சியைச் செய்யுங்கள். நான் ஓர் ஆத்மா, அத்துடன் நான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பாபா கூறுகின்றார்: ஏனைய அனைத்தையும் துறந்து, தந்தையை மட்டும் நினைவுசெய்யுங்கள். இதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தந்தை கூறுகின்றார்: உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யுங்கள். எட்டு மணித்தியாலங்களுக்கு வியாபாரத்தைச் செய்யுங்கள், எட்டு மணித்தியாலங்கள் ஓய்வெடுங்கள், எட்டு மணித்தியாலங்களுக்கு இந்த அரசாங்கத்துக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் எனக்குச் சேவை செய்கின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் முழு உலகத்திற்கும் சேவை செய்கின்றீர்கள். இதனாலேயே நீங்கள் இதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். முக்கியமான விடயம் நினைவு யாத்திரையாகும். நீங்கள் உங்கள் நேரத்தை வீனாக்கக்கூடாது. அந்த அரசாங்கத்திற்கு 8 மணித்தியாலங்கள் உழைப்பதால் என்ன பெறுகிறீர்கள்? கிட்டத்தட்ட ஓரிரு அல்லது ஐயாயிரங்கள். இந்த அரசாங்கத்திற்குச் சேவை செய்வதால் பல்கோடீஸ்வரர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே நீங்கள் இதயபூர்வமாகச் சேவை செய்ய வேண்டும். எட்டு மணிகளில் ஒன்றாக வர விரும்புபவர்கள் நிச்சயமாக எட்டு மணித்தியாலங்களுக்கு பாபாவை நினைவுசெய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் அதிகளவு நினைவைக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள்; அவர்கள் எதனையும் பெறுவதில்லை. கங்கையி;ல் நீராடுவதன் மூலமும், மந்திரங்களை உச்சரித்துக் கடுந்;தவம் செய்வதனாலும் தங்கள் ஆஸ்தியைத் தரும் தந்தையை அவர்களால் சந்திக்க முடியாது. இங்கேயே நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பிறரின் கட்டளைகளைப் பின்பற்றுவதனால், ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாமல் இருக்காதீர்கள். பிழையான விடயங்களைச் செவிமடுத்து, கல்வியைப் புறக்கணிக்காதீர்கள். நீங்கள் எவருடனும் முரண்பாட்டைக் கொண்டிருக்கக்கூடாது.

2. உங்களையே சோதித்து வினவுங்கள்: எங்கேயாவது நான் தவறிழைக்கிறேனா? நான் இக்கல்வியில் முழுக் கவனம் செலுத்துகிறேனா? எனது நேரத்தை வீணாக்குகிறேனா? நான் ஆத்ம உணர்வுடையவர் ஆகிவிட்டேனா? நான் எனது இதயபூர்வமாக ஆன்மீகச் சேவையைச் செய்கின்றேனா?

ஆசீர்வாதம்:
நீங்கள் பழைய சம்ஸ்காரங்களிதும், பழைய உலகின் உறவுமுறையினதும் கவர்ச்சியிலிருந்தும் விடுபட்டிருக்கின்ற, இலேசாகவும், ஒளியாகவும் இருக்கும் ஒரு தேவதை ஆவீர்களாக.

ஒரு தேவதையாக இருப்பது என்றால், பழைய உலகின் கவர்ச்சிகள் எதிலிருந்தும் - எந்த உறவுமுறையினது அல்லது உங்கள் சரீரத்தினது அல்லது எந்தச் சரீரதாரியினது அல்லது உடைமையினது கவர்ச்சியிலிருந்தும் விடுபட்டிருப்பதாகும். அதேபோன்று, நீங்கள் பழைய சம்ஸ்காரங்களின் கவர்ச்சியிலிருந்தும் விடுபட வேண்டும். எண்ணங்களின் ரூபத்தில்;, மனோபாவத்தின் ரூபத்தில் அல்லது வார்த்தைகளின் ரூபத்தில் சம்ஸ்காரங்களின் கவர்ச்சி எதுவும் இல்லாதிருக்கட்டும். நீங்கள் கவர்ச்சிகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவர் ஆகும்பொழுதே, அதாவது, நேரத்தை வீணாக்குவதிலிருந்தும், வீணான சகவாசத்திலிருந்தும், வீணான சூழலிலிருந்தும் விடுபடும்பொழுதே, நீங்கள் இலேசாகவும், ஒளியாகவும் இருக்கும் ஒரு தேவதை என்று கூறப்படுவீர்கள்.

சுலோகம்:
மௌன சக்தி மூலம் ஆத்மாக்கள் அனைவரையும் பராமரிப்பவர்களே, ஆன்மீக சமூக சேவையாளர்கள் ஆவர்.