05.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கள்ளங்கபடமற்ற பிரபுவான, அதியன்பிற்கினிய தந்தை உங்களின் முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றார். அவரை அன்புடன் நினைவுசெய்யுங்கள், அந்த அன்பு அதிகரிக்கும், சகல தடைகளும் முடிவடைந்துவிடும்.

கேள்வி:
பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் என்றுமே பாவச்செயல்கள் எதையும் செய்யாதிருப்பதற்கு எப்பொழுதும்; நினைவுசெய்ய வேண்டிய விடயம் என்ன?

பதில்:
நான் என்ன செயல்களைச் செய்கின்றேனோ, என்னைப் பார்ப்பவர்களும் அதையே செய்வார்கள். நீங்கள் இதை நினைவுசெய்யும்பொழுது, பாவச்செயல்களைச் செய்ய மாட்டீர்கள். எவராவது இரகசியமாகப் பாவச்செயல்களைச் செய்தால், தர்மராஜிடமிருந்து மறைந்திருக்கவே முடியாது; அவர் அதற்கான தண்டனையை உடனடியாகவே பெறுவார். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, இராணுவச் சட்டம் இருக்கும். எந்தத் தூய்மையற்ற மனிதரும் இந்த இந்திரசபையில் இரகசியமாக அமர்ந்திருக்க முடியாது.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இப்பொழுது உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவருடைய பெயர் கள்ளங்கபடமற்ற பிரபு என்பதாகும். ஒரு தந்தை மிகவும் கள்ளங்கபடமற்றவர். அவர் தனது குழந்தைகளைக் கற்பித்து, பராமரிப்பதற்காக அதிகளவு சிரமங்களைச் சகித்துக் கொள்கின்றார். பின்னர் அவர்கள் வளர்கின்றபொழுது, அவர் அனைத்தையும் அவர்களிடம் கொடுத்து விட்டு, ஓய்வு நிலைக்குச் செல்கிறார். அவர் தனது பொறுப்புக்களைப் பூர்த்திசெய்து விட்டதாகவும், இப்பொழுது அது குழந்தைகளைப் பொறுத்தது எனவும் நம்புகின்றார். எனவே ஒரு தந்தை கபடமற்றவர். தந்தை கள்ளங்கபடமற்ற பிரபு ஆதலால், இப்பொழுது அவரே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறு எல்லைக்குட்பட்ட தந்தையர்கள் கபடமற்றவர்கள் எனவும் அவர் விளங்கப்படுத்துகின்றார். அது எல்லைக்குட்பட்ட கபடமற்ற தன்மையாகும். அவரே எல்லையற்ற தந்தையாகிய, கள்ளங்கபடமற்ற பிரபு. அவர் பரந்தாமத்திலிருந்து பழைய உலகிலுள்ள ஒரு வயதான சரீரத்தினுள் வருகின்;றார். மக்கள் அவர் எவ்வாறு இந்தப் பழைய உலகில், ஒரு பழைய சரீரத்தில் பிரவேசிக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளாததால், தூய சரீரமுள்ள கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி விட்டார்கள். அந்தக் கீதை, வேதங்கள், சமயநூல்கள் மீண்டும் உருவாக்கப்படும். சிவபாபா எவ்வளவு கள்ளங்கபடமற்றவர் எனப் பாருங்கள்! அவர் வருகின்றபொழுது, தந்தை இங்கேயிருப்பது போன்ற அவ்வாறான உணர்வைக் கொடுக்கின்றார். இந்த லௌகீக பாபாவும் கள்ளங்கபடமற்றவர். இவரிடம் சால்வை அல்லது திலகம் போன்றவை இருப்பதில்லை. ஏனெனில் இந்த சாதாரணமான பாபாவும் பாபாவே. சிவபாபா எவ்வாறு இந்த ஞானம் அனைத்தையும் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதைக் கொடுப்பதற்கான சக்தி வேறு எவருக்குமில்லை. நாளுக்கு நாள், குழந்தைகளின் அன்பு அதிகரிக்கும். நீங்கள் தந்தையை அதிகளவு நினைவுசெய்தால், உங்களின் அன்பும் அதிகரிக்கும். தந்தையே அதி அன்பிற்கினியவர்; இந்த நேரத்தில் மாத்திரமல்ல, பக்தி மார்க்கத்திலும் நீங்கள் அவரை அதி அன்பிற்கினியவராகவே கருதினீர்கள். பாபா, நீங்கள் வரும்பொழுது, நாங்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் எங்கள் அன்பைத் துண்டித்து, உங்களில் மாத்திரம் அன்பு செலுத்துவோம் என நீங்கள் கூறினீர்கள். நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்துகொள்கின்றீர்கள், ஆனால் மாயை உங்களை அந்தளவு அன்பு கொள்ள அனுமதிப்பதில்லை. நீங்கள் மாயையைப் புறக்கணித்து விட்டு, அவளுக்குப் பதிலாகத் தந்தையை நினைவுசெய்வதை மாயை விரும்புவதில்லை. அவள் நீங்கள் சரீர உணர்விலிருந்து அவள் மீது அன்பு செலுத்துவதையே விரும்புகின்றாள். அதையே மாயை விரும்புகிறாள், இதனாலேயே அவள் பல தடைகளை உருவாக்குகின்றாள். நீங்கள் தடைகளுக்கு அப்பாற் செல்ல வேண்டும்! குழந்தைகளான நீங்கள் குறைந்தபட்சம் சில முயற்சிகளையாவது செய்ய வேண்டும். முயற்சி செய்வதன் மூலமே, உங்கள் வெகுமதியை நீங்கள் பெறுகின்றீர்கள். நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு எவ்வளவு முயற்சி தேவை என்பதை அறிவீர்கள். முதலில் விகாரங்களைத் தானம் செய்யுங்கள், இரண்டாவதாக, நீங்கள் தந்தையிடமிருந்து பெற்ற அழியாத ஞானச் செல்வம் எனும் இரத்தினங்களைத் தானம் செய்யுங்கள். இந்த அழியாத ஞானச் செல்வத்தினாலேயே நீங்கள் அதி செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். ஞானமே உங்கள் வருமானத்தின் ஆதாரமாகும். அது சமயநூல்களின் தத்துவமாகும், ஆனால் இதுவோ ஆன்மீக ஞானமாகும். மக்கள் சமயநூல்களை வாசிப்பதனால், பெருமளவு சம்பாதிக்கின்றார்கள். அவர்கள் கிராந்த்தை ஒரு மாடத்தில் வைத்து, அதில் சிறிதளவை வாசிக்கின்றார்கள். அது அவர்களுக்கு வருமானத்தைக் கொடுக்கின்றது. அது சரியான ஞானமல்ல, தந்தை ஒருவரே உங்களுக்குச் சரியான ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர்கள் இந்த ஆன்மீக ஞானத்தைப் பெறும்வரை, அவர்களது புத்தியில் சமயநூல்களின் தத்துவம் மாத்திரமே இருக்கும். அவர்கள் உங்களைச் செவிமடுக்க மாட்டார்கள். உங்களில் வெகு சிலரே இருக்கின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் இந்த ஆன்மீக ஞானத்தை ஆன்மீகத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள் என்பது 100மூ நிச்சயமானது. எனவே ஞானம் உங்கள் வருமானத்தின் மூலாதாரமாகும். நீங்கள் பெருமளவு செல்வத்தைப் பெறுகின்றீர்கள். யோகம் உங்கள் ஆரோக்கியத்துக்கான மூலாதாரம், அதாவது, நீங்கள் ஒரு நோயற்ற சரீரத்தைப் பெறுகின்றீர்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் செல்வத்தைப் பெறுகின்றீர்கள். இவையே பிரதானமான இரு பாடங்கள். சிலர் ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்கின்றார்கள். ஏனையோர் குறைவாகவே கிரகிக்கின்றனர். எனவே குறைந்த செல்வமும் வரிசைக்கிரமமாகப் பெறப்படுகின்றது. அவர்கள் தண்டனையை அனுபவம் செய்து, பின்னர் தங்கள் அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். அவர்கள் முழுமையான நினைவில் நிலைத்திருக்காததால், அவர்களுடைய பாவங்கள் அழிவதில்லை. ஒரு பாடசாலையைப் போன்று பின்னர் தண்டனை அனுபவம் செய்யப்பட்டு, அந்தஸ்தும் அழிக்கப்படுகின்றது. இது எல்லையற்ற ஞானமாகும். இந்த ஞானத்தின் மூலம் உங்கள் படகு அக்கரையை அடைகின்றது. அந்த ஞானத்தில், மக்கள் சட்டநிபுணர்களாக, வைத்தியர்களாக அல்லது பொறியியலாளர்களாக ஆகுவதற்குக் கற்கின்றார்கள். இங்கே ஒரு கல்வியே இருக்கின்றது. யோகத்தின் மூலமும், ஞானத்தின் மூலமும் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுகின்றீர்கள்;. நீங்கள் இளவரசர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே சத்தியயுகத்தில் எந்த சட்டநிபுணர்களோ அல்லது நீதிபதிகள் போன்றவர்களோ இருக்க மாட்டார்கள். அங்கே தர்மராஜூக்கான தேவையில்லை. அங்கே கருப்பைச் சிறையோ அல்லது தர்மராஜ்புரியிலோ தண்டனை இருப்பதில்லை. நீங்கள் கருப்பை எனும் மாளிகையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். இங்கே கருப்பைச் சிறையில் தண்டனை அனுபவஞ் செய்யப்பட வேண்டும். குழந்தைகளான நீங்களே இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். மனிதர்களே சமயநூல்களில் சமஸ்கிருத வாசகங்கள் போன்றவற்றை உருவாக்கினார்கள். சத்தியயுகத்தில் என்ன மொழி இருக்கும்? என்று சிலர் கேட்கின்றனர். தந்தை கூறுகின்றார்: தேவர்களின் மொழி எதுவோ, அது அங்கே பயன்படுத்தப்படும். அந்த இடத்து மொழி வேறு எங்கும் இருக்க முடியாது. சமஸ்கிருத மொழி அங்கே இருப்பது சாத்தியமில்லை. தேவர்களும், தூய்மையற்ற மனிதர்களும் ஒரே மொழியைக் கொண்டிருக்க முடியாது. அந்த இடத்தின் மொழி எதுவோ அது அங்கே பயன்படுத்தப்படும். இதைப் பற்றிக் கேட்க வேண்டிய அவசியமில்லை. முதலில் குறைந்தபட்சம் உங்களின் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோருங்கள்! முன்னைய கல்பத்தில் எது நடந்ததோ, அது மீண்டும் நடைபெறும். முதலில் உங்களின் ஆஸ்தியைக் கோருங்கள்! வேறு எது பற்றியும் கேட்க வேண்டாம். அச்சா, 84 பிறவிகள் இல்லாவிடின் 80 அல்லது 82 பிறவிகள் மாத்திரம் இருக்கும் என்றால் கூட, அதுவும் பரவாயில்லை. அந்த விடயங்களை ஒருபுறம் வையுங்கள். தந்தை கூறுகின்றார்: அல்பாவை நினைவுசெய்யுங்கள்! நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகிறீர்கள், இல்லையா? நீங்கள் சுவர்க்க இராச்சியத்தை எண்ணற்ற தடவைகள் பெற்றுள்ளீர்கள். நீங்கள் மேலிருந்து கீழிறங்கவும் வேண்டும். நீங்கள் இப்பொழுது மாஸ்டர் ஞானக்கடல்களாகவும், மாஸ்டர் சந்தோஷக் கடல்களாhகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். பாபா சம்பூரணமானவர். தந்தை என்ன ஞானத்தைக் கொண்டிருக்கின்றாரோ, குழந்தைகளாகிய நீங்களும் அதைக் கொண்டிருக்கிறீர்கள், ஆயினும் உங்களைக் கடல்கள் என அழைக்க முடியாது. ஒரு கடலே இருக்கின்றார். ஆனால் அவர்கள் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். நீங்கள் ஞானக்கடலிலிருந்து தோன்றிய ஆறுகள் ஆவீர்கள். நீங்கள் மானசரோவர் ஆறுகள் ஆவீர்கள். ஆறுகளுக்குப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா ஆறு மிகப்பெரியது. கல்கத்தாவில் கடலினதும், ஆறுகளினதும் சங்கமம் இருக்கின்றது. அதுவே வைரத் துறைமுகம் என அழைக்கப்படுகின்றது. பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களான நீங்கள் வைரங்கள் போல் ஆகுகின்றீர்கள். ஒரு பெரிய சந்திப்பு இடம்பெறுகின்றது. பிரம்மாவின் சரீரத்தில் பாபா பிரவேசித்துக் குழந்தைகளைச் சந்திக்கின்றார். இந்த விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இருந்தபொழுதிலும் பாபா கூறுகின்றார்: மன்மனாபவ! தொடர்ந்தும் பாபாவை நினைவுசெய்யுங்கள். அவரே அனைத்து உறவுமுறைகளிலும் சக்கரீனாகிய, அதி அன்பிற்கினியவர். ஏனைய அனைத்து உறவுமுறைகளும் விகாரங்களின் அடிப்படையில் அமைந்தவை. அவற்றின் மூலம் துன்பம் பெறப்படுகின்றது. பாபா அனைத்தினதும் பிரதிபலனை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு அனைத்து உறவுமுறைகளினதும் அன்பைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார்! வேறு எவராலும் உங்களுக்கு அந்தளவு சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. எவராவது அதைக் கொடுத்தாலும், அது தற்காலிகமானது மாத்திரமே. சந்நியாசிகள் சந்தோஷத்தைக் காக்கையின் எச்சம் என்று குறிப்பிடுகின்றார்கள். துன்ப பூமியில் நிச்சயமாகத் துன்பம் மாத்திரமே இருக்கும். எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாகங்களை எண்ணற்ற தடவைகள் நடித்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் எவ்வாறு உயர்ந்த அந்தஸ்தை அடையலாம் என்ற அக்கறையும் இருக்க வேண்டும். நீங்கள் தோல்வியடையாத வகையில், பெருமளவு முயற்சி செய்யுங்கள். நீங்கள் நல்ல இலக்கத்துடன் சித்தியடைந்தால் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதுடன், சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்கள். அனைவரும் ஒரேமாதிரி இருக்க முடியாது; ஒவ்வொருவரும் எவ்வளவு யோகம் செய்கின்றார் என்பதிலேயே இது தங்கியுள்ளது. தந்தையை ஒருபொழுதும் சந்திக்காத பல கோபிகைகளும் இருக்கின்றார்கள்; அவர்கள் தந்தையைச் சந்திப்பதற்குப் பரிதவிப்புடன் உள்ளனர். சாதுக்கள், புனிதர்களைச் சந்திப்ப்தற்கு அவ்வாறான பரிதவிப்பு இருப்பது பற்றிய கேள்வியே இல்லை. இங்கே நீங்கள் சிவபாபாவைச் சந்திக்க வருகின்றீர்கள். இது ஓர் அற்புதமான விடயம். நீங்கள் வீட்டிலிருந்து தந்தையை நினைவுசெய்கின்றீர்கள்: சிவபாபா, நான் உங்களுடைய குழந்தை. ஆத்மாவே அனைத்தையும் நினைவுசெய்கின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் சிவபாபாவிடமிருந்து உங்களது ஆஸ்தியைக் கோருகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். அதே தந்தை ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் வந்திருக்கின்றார். எனவே நீங்கள் அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது. பாபா வந்துள்ளார் என்பதை ஆத்மா அறிவார். மக்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர், ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் எவ்வாறு சிவபாபா வந்து கற்பிக்கின்றார் என்பதைப் பற்றிய எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் பெயரளவிலேயே சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் அதற்காக விடுமுறையும் கொடுப்பதில்லை; உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கொடுத்தவருக்கு அவர்கள் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. பதிலாக ஆஸ்தியைப் பெற்றவரின் (கிருஷ்ணர்) பெயரைப் புகழ்ந்துள்ளார்கள். அவர் குறிப்பாக வந்து, பாரதத்தைச் சுவர்க்கமாக்கினார். ஏனைய அனைவரும் முக்தியைப் பெறுகின்றார்கள். அனைவரும் அதையே வேண்டுகின்றனர். முக்திக்குப் பின்னர், நீங்கள் ஜீவன்முக்தியைப் பெறுவீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை வந்து உங்களை மாயையின் பந்தனத்திலிருந்து விடுவிக்கின்றார். தந்தை அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என அழைக்கப்படுகின்றார். அனைவரும் தாங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக ஜீவன்முக்தியைப் பெறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: இந்த உலகம் தூய்மையற்ற, துன்ப உலகமாகும். சத்தியயுகத்தில் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள்! அது பாகிஸ்ட் (சுவர்க்கம்) என அழைக்கப்படுகின்றது. அல்லா ஏன் பாகிஸ்டை உருவாக்கினார்? அவர் இஸ்லாமியருக்காக மாத்திரம் அதை உருவாக்கினாரா? அவர்களுடைய சொந்த மொழிக்கேற்ப சிலர் அதைப் பாகிஸ்ட்; எனவும், ஏனையோர் சுவர்க்கம் எனவும் அழைக்கின்றனர். சுவர்க்கத்தில் பாரதம் மாத்திரமே இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளான நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப இந்த விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் இருக்கின்றது. தான் அல்லாவின் பூந்தோட்டத்திற்குச் சென்றதாக ஒரு முஸ்லீம் கூறினார். அவை அனைத்தும் காட்சிகளாகும். அவை அனைத்தும் முன்னதாகவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்தில் எது நடந்தாலும், ஒரு விநாடி கடந்தவுடன், அது முன்னைய கல்பத்திலும் நடந்ததாகக் கூறப்படுகின்றது. நாளை என்ன நடைபெறப் போகின்றது என நீங்கள் அறிய மாட்டீர்கள். கவலைப்படுவதற்கு எதுவுமில்லாத வகையில் நாடகத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். பாபா எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்;: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். அனைவரும் மரணிக்க வேண்டும். எவருக்காகவும் அழுவதற்கு எவரும் இருக்கப் போவதில்லை. மரணம் வருகின்றது, ஆத்மா செல்கின்றார்;; அழுவதற்கு நேரம் இருக்க மாட்டாது. எந்த ஒரு சத்தமும் வெளியாகாது. இந்நாட்களில் மக்கள் இறந்த சரீரத்தின் சாம்பலை வைத்துக் கிரியைகள் செய்கின்றார்கள்; அவர்களுக்கு அதில் நம்பிக்கையுள்ளது. அவை அனைத்தும் நேர விரயமாகும். அதில் என்ன உள்ளது? தூசு தூசுடன் கலந்து விட்டது. பாரதம் அதன் மூலம் தூய்மையாகுமா? தூய்மையற்ற உலகில் மக்;கள் செய்வனவெல்லாம், அவர்களைத் தூய்மையற்றவர்களாகவே ஆக்கும். மக்கள் பெருமளவு தானங்களையும், புண்ணியங்களையும் செய்கின்றார்கள், ஆனால் பாரதம் தூய்மையாகியதா? நீங்கள் ஏணியில் கீழிறங்க வேண்டியிருந்தது. சத்தியயுகத்தில், நீங்கள் சூரிய வம்சத்தவர்கள் ஆகினீர்கள், பின்னர் நீங்கள் ஏணியில் கீழிறங்க வேண்டியிருந்தது. நீங்கள் படிப்படியாக ஏணியில் கீழிறங்குகின்றீர்கள். மக்கள் என்ன யாகங்கள், தபஸ்யா போன்றவற்றைச் செய்கின்றார்களோ, அதற்கான தற்காலிகப் பலனைத் தங்;களுடைய அடுத்த பிறவியில் பெறுகின்றார்கள். தவறான செயல்களைச் செய்பவர்களும் அதன் பலனைப் பெறுகின்றனர். தான் குழந்தைகளுக்குக் கற்பிக்க வரவேண்டும் என்பதை எல்லையற்ற தந்தையும் அறிவார். அவர் ஒரு சாதாரண சரீரத்தையே எடுத்துள்ளார். திலகம் போன்றவற்றை அணிய வேண்டிய தேவை எதுவுமில்லை. பக்தர்கள் பெரிய திலகத்தை இடுகின்றார்கள், ஆனால் அவர்கள் அதிகளவு ஏமாற்றுகின்றார்கள்! தான்; ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்துக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதாக பாபா கூறியுள்ளார். அவர் ஓய்வு ஸ்திதியில் இருக்கின்றார். மக்கள் ஏன் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள்? அவர்களிடம் இதைத் தீர்மானிக்கின்ற புத்தியில்லை. பாபா இப்பொழுது உங்களுக்கு எது சரி, எது தவறு எனத் தீர்மானிக்கின்ற புத்தியைக் கொடுத்துள்ளார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் யாகங்களை உருவாக்கி, தபஸ்யா செய்து, தானங்கள் கொடுத்து, புண்ணியம் செய்வதுடன், சமயநூல்களையும் வாசித்து வந்தீர்கள். அந்தச் சமயநூல்களில் ஏதாவது இருக்கின்றதா? நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உலக இராச்சியத்தைக் கொடுத்தேனா? அல்லது கிருஷ்ணர் அதைக் கொடுத்தாரா? இதைத் தீர்மானியுங்கள்! நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நீங்கள் இந்த ஞானத்தைப் பேசுகின்றீர்கள். கிருஷ்ணர் ஓர் இளம் இளவரசர்; அவரால் எவ்வாறு இந்த ஞானத்தைப் பேச முடியும்? பாபா, உங்களின் இராஜயோகத்தின் மூலமே, நாங்கள் அவ்வாறு ஆகுகின்றோம். தந்தை கூறுகின்றார்: சரீரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பெருமளவு முயற்சி செய்யப்பட வேண்டும். சில நேரத்தில் பாபா, இன்னார், இன்னார் மிகச்சிறந்த, நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்படுகின்றார். நான் கூறுகின்றேன்: அவருக்குச் சிறிதளவு நம்பிக்கையும் இல்லை. பெருமளவு அன்பு செலுத்தப்பட்டவர்கள் இப்பொழுது இங்கில்லை. பாபா அனைவருடனும் பெருமளவு அன்புடனேயே பழகுகின்றார். நான் என்ன செயலைச் செய்கின்றேனோ, என்னைப் பார்ப்பவர்;களும் அதையே செய்வார்கள். சிலர் விகாரத்தில் ஈடுபட்டு, பின்னர் இரகசியமாக இங்கு வந்து அமர்கின்றார்கள். பாபா விரைவில் திரான்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகின்றார். அவ்வாறான செயல்களைச் செய்பவர்கள் தொடர்ந்தும் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்கள்; ஆகுகின்றார்கள். அவர்களால் எதிர்காலத்தில் தொடர முடியாதிருக்கும். இறுதியில் சிக்கலான நேரங்களில், ஒருவர் தவறான எதையும் செய்யும்பொழுது, அவர்களுக்கு இராணுவச் சட்டம் இருக்கும். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, பாபா என்ன செய்கின்றார் என்பதைப் பெருமளவில் காண்பீர்கள். பாபா எவரையும் தண்டிப்பதில்லை. அவர் தர்மராஜின் மூலம் அதைச் செய்கின்றார். ஞானத்தில் தூண்டுதல் என்ற கேள்வியில்லை. மனிதர்கள் அனைவரும் கடவுளிடம் கூறுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! ஆத்மாக்கள் அனைவரும் தங்களுடைய அங்கங்கள் மூலமே கூவியழைக்கின்றார்கள். தந்தையே ஞானக்கடல். அவரிடம் பலவகையான கையிருப்பு (பொக்கிஷங்கள்) உள்ளது. எவரிடமும் அவ்வாறான கையிருப்பு இருக்க முடியாது. கிருஷ்ணருடைய புகழ் முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் (இலக்ஷ்மி நாராயணன்) எவ்வாறு அப்படி ஆகினார்கள்? தந்தையின் கற்பித்தல்களால் ஆகும். தந்தையே உங்களை அவ்வாறு ஆக்குபவர். தந்தை வந்து செயல், பாவச்செயல், நடுநிலைச் செயலின்; தத்துவத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது உங்கள் மூன்றாவது கண் திறந்துள்ளது. இது 5000 வருடங்களுக்கான விடயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் உங்களது பாகங்களை நடிக்க வேண்டும். இதுவே சுயதரிசனச் சக்கரம். உங்கள் பெயர் சுயதரிசனச் சக்கரதாரிகளும், பிரஜாபிதா பிரம்மாகுமார்களும், குமாரிகளும், பிராமணக் குல அலங்காரங்களும் என்பதாகும். உங்களில் நூறாயிரக்கணக்கானோர் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுவீர்கள். நீங்கள் அதிகளவு ஞானத்தைக் கற்கின்றீர்கள். அச்சா

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இக்காலங்கள் மிகவும் சிக்கலானவை ஆகையால், நீங்கள் தவறான செயல்கள் எதையும் செய்யக்கூடாது. செயல், நடுநிலைச் செயல், பாவச்செயலின் தத்துவத்தை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து, சதா மேன்மையான செயல்களைச் செய்யுங்கள்.

2. யோகத்தினால், உங்கள் சரீரத்தை என்றென்றும் நோயிலிருந்து விடுபட்டதாக்குங்கள். அதியன்பிற்கினிய தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையிடமிருந்து நீங்;கள் பெற்ற அழிவற்ற ஞானச் செல்வத்தைத் தானம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய சுய மரியாதையில் ஸ்திரமாக இருப்பதால், சரீர உணர்விலிருந்து விடுபட்டவராகி, முழு உலகிடமிருந்தும் மரியாதையைப் பெறுவீர்களாக.

சரீர உணர்விலிருந்து பற்றற்றவராகுவதும், ஆத்ம உணர்வில் இருப்பதுமே இந்தக் கல்வியின் பிரதான இலக்கு ஆகும். சதா உங்களுடைய சுய மரியாதை ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதே, பற்றற்றவராக இருப்பதற்கும், சரீர உணர்விலிருந்து விடுபட்டவராக இருப்பதற்குமான வழிமுறை ஆகும். சங்கமயுகத்தினதும், எதிர் காலத்தினதும் பல்வகையான சுய மரியாதையில் ஸ்திரமாக இருப்பதனால், உங்கள் சரீர உணர்வானது தொடர்ந்தும் முடிவடையும். தங்களுடைய சுய மரியாதையில் ஸ்திரமாக இருப்பவர்கள், இயல்பாகவே அனைவரிடமிருந்தும் மரியாதையைப் பெறுகின்றார்கள். தங்களுடைய சுய மரியாதையில் சதா ஸ்திரமாக இருப்பவர்கள், உலகச் சக்கரவர்த்திகள் ஆகுகின்றார்கள், அவர்கள் முழு உலகிடமிருந்தும் மரியாதையைப் பெறுகின்றார்கள்.

சுலோகம்:
நேரத்திற்கேற்ப நீங்கள் வளைந்து கொடுப்பதே, நிஜத்தங்கம் ஆகுவதாகும்.