05.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றும்போது, எவராலும் உங்களுக்குத் துன்பத்தை கொடுக்க முடியாது. இராவணனே உங்களுக்குத் துன்பத்தையும் சிரமத்தையும் கொடுத்த பொழுதிலும், அவன் உங்கள் இராச்சியத்தில் இருப்பதில்லை.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞான யாகத்தில் எதனை அர்ப்பணிக்கிறீர்கள்?

பதில்:
நீங்கள் ஞான யாகத்தில் பார்லி அல்லது எள்ளு விதைகளை அர்ப்பணிப்பதில்லை. நீங்கள் சரீரம் உட்பட, உங்களிடமுள்ள அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். அதாவது, உங்கள் புத்தி அனைத்தையும் மறக்கவேண்டும். தூய்மையைக் கடைப்பிடிக்கும் பிராமணர்களால் மாத்திரமே யாகத்தைப் பராமரிக்க முடியும். தூய பிராமணர்கள் ஆகுபவர்களே பின்னர் தேவர்களாகவும் ஆகுகின்றனர்;.

பாடல்:
உங்களை கண்டு கொண்டதால் நாங்கள் அனைத்தையும் கண்டுவிட்டோம். இந்த பூமியும் ஆகாயமும் எங்களுக்கே உரியது.

ஓம் சாந்தி.
குழந்தைகள் தந்தையிடம் வரவேண்டும். அவர்கள் அவரை இனங்கண்டு தந்தை என்று அழைக்கும் போது நிச்சயமாக வருவார்கள். இல்லையேல் அவர்களால் இங்கு வரமுடியாது. குழந்தைகள் எல்லையற்ற அசரீரியான தந்தையிடம் செல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அவருடைய பெயர் சிவபாபா. அவருக்குச் சொந்தமாகச் சரீரம் இல்லை. அவருக்கு எவரும் எதிரியாக இருக்க முடியாது. இங்கே, பகைமை இருக்கும்போது, ஆட்சியாளர்கள் கொல்லப்படுகிறார்கள். காந்திஜிக்குச் சரீரம் இருந்தபடியால் கொல்லப்பட்டார்;. தந்தைக்குச் சொந்தமாகச் சரீரம் இல்லை. அவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்தாலும் அது நான் பிரவேசிப்பவரின் சரீரமாகவே இருக்கும். எவராலும் ஆத்மாவைக் கொல்லவோ காயப்படுத்தவோ முடியாது. என்னைத் துல்லியமாக இனங்கண்டு கொள்பவர்களுக்கு நான் இராச்சியத்திற்கான பாக்கியத்தைக் கொடுக்கிறேன். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் எவரும் இராச்;சிய பாக்கியத்தை எரித்துவிடவும் முடியாது, அது நிலத்தின் கீழ் அமிழ்ந்தும் போகாது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து அழியாத இராச்சியத்திற்கான ஆஸ்தியைக் கோரிக்கொள்ள வந்துள்ளீர்கள். அங்கே, இராச்சியத்தில் எவரும் எவருக்கேனும் துன்பத்தைக் கொடுக்கவோ அல்லது பிரச்சனையை உருவாக்கவோ முடியாது. அங்கே, சிரமங்களை ஏற்படுத்துபவர் எவரும் இல்லை. இராவணனே பிரச்சனைகளை ஏற்படுத்துபவன். அவர்கள் இராவணனைப் பத்துத் தலைகளுடன் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இராவணனை மாத்திரம் காட்டியுள்ளார்கள். அவர்கள் மண்டோதரியைக் (இராவணனின் மனைவி) காட்டுவதில்லை. அவர்கள் அவளை இராவணனின் மனைவி என்றே கூறுகிறார்கள். இங்கு, இராவணனின் இராச்சியத்தில் உங்களுக்குச் சிரமங்கள் இருக்கலாம். அங்கே இராவணன் இல்லை. தந்தை அசரீரியானவர்;;: எவரும் அவரைக் கொல்லவோ காயப்படுத்தவோ முடியாது. அவர் நீங்கள் சரீரத்தில் இருக்கும்போது, எந்தவிதத் துன்பத்தையும் அனுபவம் செய்யாதவாறு ஆக்குகிறார். ஆகவே, நீங்கள் அத்தகைய தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். பாபா ஒருவரே ஞானக்கடலாவார். வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. அவர் பிரம்மாவினூடாகச் சமயநூல்களின் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறார். பிரம்மா சிவபாபாவின் குழந்தை. இது விஷ்ணுவின் தொப்புளிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார் என்பதல்ல. நீங்கள் தொப்புளைப் பற்றிப் பேசினாலும், அவர் சிவனுடைய தாமரை போன்ற தொப்புளிலிருந்தே வெளிப்படுகிறார். நீங்களும் சிவனின் தொப்புளிலிருந்தே வெளிப்பட்டுள்ளீர்கள். மற்றப் படங்கள் எல்லாம் தவறானவை. பாபா ஒருவரே தர்மம் நிறைந்தவர். இராவணன் உங்களை அதர்மவான்கள் ஆக்குகிறான். இது ஒரு நாடகம். இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பமாகியது என்றும், மக்கள் எவ்வாறு முற்றுமுழுதாக வீழ்ச்சியடையும் வரை, படிப்படியாக வீழ்ச்சியடைகிறார்கள் என்றும் இந்த நாடகத்தைப் பற்றி நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கிறீர்கள். எவராலும் மேலேற முடியவில்லை. தந்தையிடம் செல்லும் வழியைக் காட்டுபவர்களே மேலும் அடர்ந்த காட்டிற்குள் உங்களை வழிநடத்திச் செல்லுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தந்தையின் வீட்டிற்கான வழியோ அல்லது சுவர்க்கத்திற்கான வழியோ தெரியாது. குருமார் அனைவரும் வீடுகளைத் துறந்து சென்ற ஹத்தயோகிகளாவார். பாபா உங்களை வீட்டிலிருந்து வெளியேறச் செய்வதில்லை அவர் கூறுகிறார்: தூய்மையாகுங்கள்! குமார்களும் குமாரிகளும் தூய்மையானவர்கள். திரௌபதிகள் கூவி அழைக்கின்றார்கள். பாபா எங்களைக் காப்பாற்றுங்கள், நாங்கள் தூய்மையாகி கிருஷ்ண தாமத்துக்குச் செல்ல வேண்டும். குமாரிகளும் கூவியழைக்கிறார்கள், பாபா, எங்களுடைய பெற்றோர்களும் நாங்கள் கட்டாயமாகத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி எங்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள் குமாரிகள் திருமணமாவதற்கு முன்னர் அவர்களைப் பெற்றோர்கள் வணங்குகிறார்கள். ஏனெனில் தாங்கள் தூய்மையற்றவர்கள் என்றும், குமாரிகள் தூய்மையானவர்கள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் கூவியழைக்கிறார்கள்: தூய்மையாக்குபவரே வாருங்கள். பாபா கூறுகிறார்: குமாரிகளே, தூய்மையற்றவர்கள் ஆகாதீர்கள், இல்லையேல் நீங்கள் கூவியழைக்க வேண்டிவரும். உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாபா உங்களைத் தூய்மையாக்க வந்துள்ளார். அவர் கூறுகிறார்: உங்களுக்குச் சுவர்க்க இராச்சிய ஆஸ்தியைக் கொடுப்பதற்கே நான் வந்துள்ளேன். ஆகையால் நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினால், தூய்மையற்ற நிலைமையிலேயே மரணிப்பீர்கள். உங்களால் சுவர்க்க சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. சுவர்க்கத்தில் அதிகளவு மகிழ்ச்சி நிறைந்துள்ளது. வைரங்களும் இரத்தினங்களும் பதித்த மாளிகைகள் உள்ளன. பின்னர் அதே இராதையும் கிருஷ்ணரும் இலக்ஷ்மி நாராயணனாக ஆகுகிறார்கள். எனவே இலக்ஷ்மி நாராயணனுக்கு அதேயளவு அன்பு காட்டப்பட வேண்டும். அச்சா. மக்கள் கிருஷ்ணரை நேசிக்கிறார்கள், ஆனால் ஏன் இராதையை மறைத்துள்ளார்கள்? அவர்கள் கிருஷ்ணரைத் தொட்டிலில் ஆட்டி அவரது பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். தாய்மார்கள் கிருஷ்ணரின் மீது அதிகளவு அன்பு வைத்திருக்கின்றார்கள். ஆனால் அந்தளவிற்கு இராதை மீது அன்பு செலுத்துவதில்லை. கிருஷ்ணராகப் போகும் பிரம்மாவையும் அந்தளவு வழிபாடு செய்வதில்லை. அவர்கள் உலக மாதாவை (ஜெகதாம்பாள்) அதிகளவில் வழிபடுகிறார்கள். அவர் பிரம்மாவின் மகளாகிய சரஸ்வதி. அஜ்மீரில் மட்டுமே ஆதிதேவ் பிரம்மாவிற்கு ஆலயம் உள்ளது. மம்மா ஞானதேவியாவார். அவர் ஒரு பிராமணர் என்பது உங்களுக்குப் புரிந்துள்ளது. அவர் சுவர்க்கத்தின் முதலாவது தேவியல்ல. அத்துடன் எட்டுக் கரங்கள் உடையவருமல்ல. அவரது ஆலயத்தில் எட்டுக் கரங்கள் காட்டப்பட்டுள்ளன. தந்தை கூறுகிறார்: மாயையின் இராச்சியத்தில் பொய்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. சத்தியமான கடவுள் ஒருவரே மனிதரைத் தேவராக மாற்றுவதற்குச் சத்தியத்தைப் பேசுகிறார். அந்த பௌதீக பிராமணர்களிடமிருந்து கதைகளைச் செவிமடுப்பதனால், நீங்கள் இந்நிலையை அடைந்துள்ளீர்கள்! மரணம் உங்கள் முன்னிலையில் உள்ளது. பாபா கூறுகிறார்: விருட்சம் முற்றிலும் உக்கிய நிலையை அடையும்பொழுதே, கலியுக இறுதியில், சக்கரங்களின் சங்கமத்தில் நான் வருகிறேன். நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. நான் ஒரு மீனிலோ அல்லது முதலையிலோ அல்லது ஒரு காட்டுப்பன்றியிலோ அவதரிப்பதில்லை. நான் ஒவ்வொரு துணிக்கையிலும் இருப்பதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொரு துணிக்கையிலும் இருப்பதில்லை, அவ்வாறாயின் நான் எவ்வாறு ஒவ்வொரு துணிக்கையிலும் இருக்க முடியும்? மனிதர்கள் மிருகங்களாக மாறுகிறார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். பல்வேறு உயிரினங்கள் உள்ளன, உங்களால் அவற்றைக் கணக்கிடவும் முடியாது. தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது உங்களுக்குச் சரியான விடயங்களை விளங்கப்படுத்துகிறேன். இப்பொழுது தீர்மானியுங்கள்: 8.4 மில்லியன் பிறவிகள் உள்ளன என்பது சரியானதா அல்லது பிழையானதா? இப்பொய்யான உலகில் எவ்வாறு உண்மையான ஏதாவது இருக்க முடியும்? ஒரேயொருவரே சத்தியமானவர் ஆவார். தந்தை மாத்திரமே வந்து, உண்மையையும் பொய்மையையும் வேறுபிரிக்கிறார். மாயை அனைவரையும் பொய்யானவர்கள் ஆக்கிவிட்டாள். தந்தை வந்து அனைவரையும் உண்மையானவர்கள் ஆக்குகிறார். இப்பொழுது தீர்மானியுங்கள்: யார் சரியானவர்? உங்கள் குருமார்கள் அனைவரும் சரியானவர்களா அல்லது ஒரேயொரு தந்தை சரியானவரா? ஒரேயொரு தர்மம் நிறைந்த பாபாவே தர்மம் நிறைந்த உலகை ஸ்தாபிக்கிறார். அங்கே, நியதிக்கெதிராக எதுவும் நடைபெறுவதில்லை. அங்கே எவரும் நஞ்சைப் பெறுவதில்லை. நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்: பாரத வாசிகளான நாங்கள் நிச்சயமாகத் தேவர்களாக இருந்தோம். நாங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டோம். மக்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அரசர்கள், அரசிகள், பிரஜைகள் அனைவரும் தூய்மையற்றவர்கள், இதனாலேயே அவர்கள் இலக்ஷ்மியையும், நாராயணனையும் பூஜிக்கிறார்கள். பாரதத்தில் தூய அரசர்கள் இருந்தார்கள், அவர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் தூய்மையானவர்களைப் பூஜிக்கிறார்கள். இப்பொழுது பாபா வந்து, உங்களைச் சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தினிகளும் ஆக்குகிறார். ஆகவே, நீங்கள் முயற்சி செய்யவேண்டும். எட்டுக் கரங்களையுடைய எவருமே இல்லை. இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் இரு கரங்கள் மாத்திரமே உள்ளன. விக்கிரகங்களில் அவர்கள் நாராயணனை கருநீலமாகவும் இலக்ஷ்மியை வெள்ளையாகவும் காட்டுகிறார்கள். எவ்வாறு ஒருவர் தூய்மையானவராகவும், மற்றவர் தூய்மையற்றவராகவும் இருக்க முடியும்? ஆகவே படங்கள் பொய்யானவை ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இராதை, கிருஷ்ணர் இருவரும் அழகானவர்களாக இருந்தார்கள். பின்னர், காமச்சிதையில் அமர்ந்ததனால், இருவரும் அவலட்சணம் ஆகினார்கள். அவர்களில் ஒருவர் அவலட்சணமானவராகவும், மற்றவர் அழகானவராகவும் இருக்க முடியாது. கிருஷ்ணர் சியாம்சுந்தர் (அவலட்சணமானவரும், அழகானவரும்) என அறியப்படுகிறார். அவர்கள் ஏன் இராதையை சியாம்சுந்தர் என அழைப்பதில்லை? ஏன் இந்த வேறுபாடு உள்ளது? ஒரு தம்பதியினர் ஒரேவிதமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது ஞானச்சிதையில் அமர்ந்துள்ளீர்கள், ஆகவே நீங்கள் ஏன் சென்று காமச்சிதையில் அமர்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளை இம்முயற்சியைச் செய்;ய வையுங்கள்: நாங்கள் ஞானச்சிதையில் அமர்ந்திருக்கிறோம். பின்னர், நீங்கள் ஏன் காமச்சிதையில் அமர்வதற்கு விரும்புகிறீர்கள்? கணவன் ஞானத்தைப் பெற்று, மனைவி பெறாதுவிட்டால், அது ஒரு சண்டையை உருவாக்குகிறது. இந்த யாகத்தில் பல தடைகள் உள்ளன. இந்த ஞானம் மிகவும் பரந்ததாகும்! பாபா முதலில் வந்த காலத்திலிருந்து இந்த உருத்திர யாகம் ஆரம்பித்தது. நீங்கள் பிராமணர்கள் ஆகாமல், தேவர்களாக ஆகமுடியாது. தூய்மையற்ற சூத்திரரிலிருந்து ஒரு தூய தேவராக மாறுவதற்கு நீங்கள் ஒரு பிராமணராக ஆக வேண்டும். பிராமணர்களே ஒரு யாகத்தைப் பராமரிப்பவர்கள் ஆவார்கள். இந்த யாகத்தில், நீங்கள் தூய்மையாக வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் ஏனையோரைப் போன்று, பார்லி, எள்ளு விதைகள் போன்றவற்றைச் சேகரிக்கத் தேவையில்லை. மக்கள் சிரம காலத்திலேயே யாகத்தை வளர்க்கிறார்கள். கடவுளும் அத்தகையதொரு யாகத்தை உருவாக்கினார் என அவர்கள் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: இதுவே நீங்கள் ஓர் அர்ப்பணிப்பைச் செய்கின்ற, ஞான யாகம் ஆகும். நீங்கள் உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். நீங்கள் பணம் போன்றவற்றை அதற்குள் இடத் தேவையில்லை. இதில் அனைத்தையும் அர்ப்பணியுங்கள். இதனைப் பற்றிய கதையொன்றும் உள்ளது: தட்ச பிரஜாபிதா ஒரு யாகத்தை உருவாக்கினார். ஒரேயொரு பிரஜாபிதா பிரம்மாவே உள்ளார், ஆகவே தட்ச பிரஜாபிதா எங்கிருந்து வந்தார்? பிரஜாபிதா பிரம்மாவினூடாக, தந்தை இந்த யாகத்தை உருவாக்குகிறார். நீங்கள் அனைவரும் பிராமணர்கள், நீங்கள் பாட்டனாரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் பிரம்மாவின் ஊடாக சிவபாபாவிடம் வந்துள்ளீர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். இது சிவபாபாவின் தபாற்கந்தோர் ஆகும். நீங்கள் ஒரு கடிதத்தை எழுதும்பொழுது, பிரம்மாவினூடாக சிவபாபாவிற்கு என்றே எழுதுகிறீர்கள். பாபா இவரில் வசிக்கிறார். இந்த பிராமணர்கள் அனைவரும் தூய்மையாகுவதற்கு ஞானத்தையும், யோகத்தையும் கற்கிறார்கள். நாங்கள் தூய்மையற்றவர்கள் அல்ல என்று நீங்கள் கூறுவதில்லை. நாங்கள் தூய்மையற்றவர்கள், ஆனால் தூய்மையாக்குபவர் எங்களைத் தூய்மையாக்குகிறார். அம்மனிதர்களில் எவரும் தூய்மையானவர்கள் அல்ல, இதனாலேயே அவர்கள் கங்கையில் நீராடச் செல்கிறார்கள். சற்குருவாகிய பாபா மாத்திரமே எங்களைத் தூய்மையாக்குகிறார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவருடைய ஸ்ரீமத்: குழந்தைகளே, உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் மாத்திரமே இணையுங்கள். நீங்கள் விரும்பினால், அந்த குருமார்களிடம் செல்ல முடியும் அல்லது நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்ற முடியும். நீங்களே தீர்மானியுங்கள்! உங்களுடையவர் ஒரேயொரு தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். எல்லையற்ற தந்தை மனிதர்கள் அனைவருக்கும் கூறுகிறார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! தேவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆவார்கள். இங்கே எவருக்கும் இந்த ஞானம் கிடையாது. ஆத்மாவே பரமாத்மா எனவும், ஆத்மா பிரம்ம தத்துவத்தில் இரண்டறக் கலக்கிறார் எனவும் சந்நியாசிகள் கூறுகிறார்கள். அத்தகைய விடயங்களைச் செவிமடுப்பதனால், நீங்கள் மிகவும் சந்தோஷமற்றவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். நஞ்சினூடாகப் பிறப்பவர்களே சீரழிந்தவர்கள் ஆவார்கள். இராவண இராச்சியத்தில், அனைவரும் சீரழிந்த செயல்களைச் செய்கிறார்கள். பின்னர் உங்களை அழகிய மலர்கள் ஆக்குவதற்குத் தந்தை வரவேண்டும். அவர் பாரதத்திற்கு மாத்திரமே வருகிறார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு ஞானத்தையும் யோகத்தையும் கற்பிக்கிறேன். 5000 வருடங்களுக்கு முன்னர், நான் உங்களுக்கு இதனைக் கற்பித்து, உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக்கினேன், நான் உங்களை மீண்டும் அவ்வாறு ஆக்குகிறேன். நான் ஓவ்வொரு கல்பத்திலும் தொடர்ந்தும் வருகிறேன். இதற்கு ஆரம்பமோ அல்லது இறுதியோ கிடையாது. சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. பிரளயத்தின் கேள்வியே கிடையாது. இந்நேரத்தில், குழந்தைகளாகிய நீங்கள் இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களின் மூலம் உங்கள் புத்தியை நிரப்புகிறீர்கள். சிவபாபாவே தங்களுடைய புத்தியை நிரப்புபவர் என அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, அவர் சங்கை ஊதி, எங்கள் புத்தியை நிரப்புகிறார். உங்கள் புத்தியில் ஞானம் தங்குகிறது. ஆத்மாக்கள் சம்ஸ்காரங்களினால் நிரப்பப்படுகிறார்கள். ஆத்மாவே கற்று, ஒரு பொறியியலாளராக அல்லது ஒரு சட்டநிபுணராக ஆகுகிறார். இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் என்னவாக ஆகுவீர்கள்? பாபா, நாங்கள் எங்களுடைய ஆஸ்தியைக் கோரி, இலக்ஷ்மி நாராயணன் ஆகுவோம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆத்மாக்கள் நிச்சயமாக மறுபிறவி எடுக்கிறார்கள். இவ்விடயங்களுக்குப் புரிந்துணர்வு தேவையாகும். நீங்கள் ஓர் ஆத்மா, சிவபாபாவை நினைவு செய்யுங்கள், நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவீர்கள் என ஒருவரின் செவிகளினுள் ஓரிரு வார்த்தைகளை மெதுவாகக் கூறுங்கள். அது மிகவும் இலகுவானது! ஒரேயொரு தந்தையே உண்மையைக் கூறுகிறார். அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். ஏனைய அனைவரும் பொய்களைக் கூறி, சீரழிவை ஏற்படுத்துகிறார்கள். அச்சமயநூல்கள் போன்றவை அனைத்தும் பின்னரே உருவாக்கப்பட்டன. பாரதத்தின் சமயநூல் ஒன்று மாத்திரமே உள்ளது, அது கீதை ஆகும். அவை தொன்றுதொட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்றன என மக்கள் கூறுகிறார்கள், ஆனால் எப்பொழுதிலிருந்து? உலகம் நூறாயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்கிறது என அவர்கள் நினைக்கின்றார்கள். அச்சா. குழந்தைகளாகிய நீங்கள் பாபாவுக்குத் திராட்சைப் பழங்களைக் கொண்டு வருகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அவற்றைக் கொண்டுவந்து, அவற்றை நீங்களே உண்ணுகிறீர்கள். நான் அவற்றை உண்பதில்லை. நான் அபோக்தா (செயல்களின் பலனின் அனுபவத்துக்கு அப்பாற்பட்டவன்). நான்; சத்தியயுகத்தில் உங்களுக்காக மாளிகைகளைக் கட்டுகிறேன். இங்கும், நான் நீங்கள் தங்குவதற்குப் புதிய மாளிகைகளைக் கொடுக்கிறேன். நான் பழையதிலேயே தங்குகிறேன். அந்த பாபா அற்புதமானவர்! அவர் தந்தையும், விருந்தாளியும் ஆவார். நான் பம்பாயிற்குச் சென்றால், அவர்கள் என்னை ஒரு விருந்தாளி என்றே அழைப்பார்கள். அவரே முழு உலகத்திலும் மகத்தான விருந்தாளி ஆவார்! அவர் வந்து செல்வதற்கு நீண்ட நேரம் எடுப்பதில்லை. அவரே அற்புதமான விருந்தாளி! தொலைதூரவாசி அந்நிய நாட்டினுள் வந்துள்ளார். ஆகவே, அவர் ஒரு விருந்தாளி ஆவார். அவர் உங்களை அழகிய மலர்கள் ஆக்குவதற்கும், உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுப்பதற்கும், உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாற்றுவதற்கும் வருகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அழிவற்ற ஞான இரத்தினங்களைக் கிரகித்து, சங்கை ஊதுங்கள். அனைவருக்கும் இந்த ஞான இரத்தினங்களைக் கொடுங்கள்.

2. சத்தியத்திற்கும் பொய்மைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, சத்தியத்தைப் பின்பற்றுங்கள். சட்டத்திற்கு எதிராக எந்தச்செயலையும்; செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் புத்;தியை மும்முரமாக வைத்திருப்பதன் மூலம், நீங்கள் சதா சக்திசாலிகளாக இருந்து, சகல வீணானவற்றையும் முடிப்பீர்களாக.

தமது புத்தியை மும்முரமாக வைத்;திருக்கின்ற வழிமுறையை பயன்படுத்துபவர்கள் சதா சக்திசாலிகள் ஆகுகின்றார்கள். சகல வீணானவற்றையும் முடித்து சக்திசாலிகளாக இருப்பதற்கு, சதா மும்முரமாக இருப்பதே இலகுவான வழியாகும். ஆகையால், ஒவ்வொருநாளும் காலையில் நீங்கள் ஒரு பௌதீகமான நேரசூசியை வைத்திருப்பதைப் போன்று, உங்கள் புத்தியை மும்முரமாக வைத்திருப்பதற்கும் ஒரு நேரசூசியை வைத்திருங்கள்: இந்த நேரத்தில், எனது புத்தியில் இந்த சக்திவாய்ந்த எண்ணத்தைக் கொண்டிருந்து அனைத்து வீணானவற்றையும் முடிப்பேன். நீங்கள் மும்முரமாக இருந்தால், தொலைவிலேயே மாயை சென்றுவிடுவாள்.

சுலோகம்:
துன்ப உலகை மறப்பதற்கு, சதா கடவுளின் அன்பில் திளைத்திருங்கள்.