05.06.22    Avyakt Bapdada     Tamil Lanka Murli    17.03.91     Om Shanti     Madhuban


திருப்தி இரத்தினமாக மேன்மையான ஆசனத்தில் அமர்ந்திருப்பதற்கு, திருப்தியான, கவலையற்ற ஆத்மா ஆகுங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது திருப்தி இரத்தினங்களைப் பார்க்கிறார். சங்கமயுகம் என்பது திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்தியாக ஆக்குவதற்கான யுகமாகும். பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பு திருப்தியே. திருப்தி சகல பொக்கிஷங்களிலும் மகத்தான பொக்கிஷமாகும். திருப்தி என்பது பிராமண வாழ்க்கையின் தூய்மையின் ஆளுமையாகும். இந்த ஆளுமையால் உங்களால் இலகுவாக விசேடமானதோர் ஆத்மா ஆகமுடியும். திருப்தியின் ஆளுமை இல்லாவிட்டால், உங்களை ஒரு விசேடமான ஆத்மா என்று அழைக்க முடியாது. தற்காலத்தில், இரண்டு வகையான ஆளுமைகள் புகழப்படுகின்றன. ஒன்று, பௌதீக சரீரத்தின் ஆளுமை. மற்றையது, பதவியின் ஆளுமை. பிராமண வாழ்க்கையில் ஒருவரின் முகத்தில் திருப்தியின் ஆளுமை புலப்படும். அத்துடன் தனது பிராமண வாழ்க்கையில் திருப்தியின் மகத்துவத்தைக் கொண்டுள்ள பிராமண ஆத்மாவின் வெளிப்படுத்தும் ஆற்றலிலும் அது புலப்படும். அத்துடன் மேன்மையான ஸ்திதியின் பதவியின் ஆளுமையும் புலப்படும். திருப்திக்கான அடிப்படை, தந்தையிடமிருந்து பெறுகின்ற சகல பேறுகளாலும் நிறைந்திருந்தல். அதாவது, ஆத்மா திருப்தியாக இருக்கிறார் என்று சொல்லப்படும். அதிருப்திக்கான காரணம், பேறுகள் இல்லாதிருத்தல். திருப்திக்கான காரணம், சகல பேறுகளையும் கொண்டிருத்தல். இதனாலேயே, நீங்கள் பிராமணப் பிறவி எடுத்தவுடனேயே பாப்தாதா பிராமணக் குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் முழுமையாக ஆஸ்தியைக் கொடுத்துள்ளார். அல்லது, பாபா சிலருக்குக் குறைவாகவும் ஏனையோருக்கு அதிகமாகவும் கொடுத்துள்ளாரா? பாப்தாதா எப்போதும் குழந்தைகள் எல்லோரிடமும், தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள் என்றே சொல்கிறார். சகல பேறுகளுமே ஆஸ்தியாகும். இதில் சகல சக்திகளும் அடங்கியுள்ளன. சகல நற்குணங்களும் அடங்கியுள்ளன. ஞானமும் இதில் அடங்கியுள்ளது. சகல சக்திகளும் சகல நற்குணங்களும் முழுமையான ஞானமும் அடங்கியுள்ளன. இது வெறுமனே ஞானம் மட்டுமல்ல. ஆனால், முழுமையான ஞானமாகும். இது வெறுமனே சக்திகளும் நற்குணங்களும் மட்டுமல்ல. ஆனால் சகல சக்திகளும் சகல நற்குணங்களும் ஆகும். ஆஸ்தி அனைத்தாலும் நிறைந்துள்ளது. அதாவது, அது சம்பூரணமாக உள்ளது. எதுவும் அதில் குறைவாக இல்லை. ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் அரைவாசியை அன்றி, முழுமையான ஆஸ்தியைப் பெறுகிறார். சகல நற்குணங்களிலும் நீங்கள் இரண்டு நற்குணங்களையும் வேறொருவர் இன்னொரு இரண்டு நற்குணங்களையும் பெறுகிறார் என்பதல்ல. முழுமையான ஆஸ்தி என்றால் சம்பூரணமும் முழுமையும் என்று அர்த்தம். ஒவ்வொருவரும் முழுமையான ஆஸ்தியைப் பெறுவதனால், எங்கு சகல பேறுகளும் உள்ளதோ, அங்கு திருப்தி இருக்கும். பாப்தாதா சகல பிராமணர்களினதும் திருப்தியின் ஆளுமையைப் பார்த்தார். அத்துடன் ஒவ்வொருவரும் எந்தளவிற்கு இந்த ஆளுமையை விருத்தி செய்துள்ளார் என்பதையும் பார்த்தார். பிராமண வாழ்க்கையில் அதிருப்தியின் பெயரோ அல்லது சுவடோ இல்லை. இது, இந்த ஆளுமையினூடாக பிராமண வாழ்க்கையின் களிப்பை அனுபவம் செய்தல் எனப்படுகிறது. பிராமண வாழ்க்கையின் களிப்பு, இந்த ஆளுமையிலேயே உள்ளது. இது மகிழ்ச்சியான வாழ்க்கை. இது களிப்பிற்கான வாழ்க்கை.

தபஸ்யா என்பதன் அர்த்தம், உங்களின் கண்களில், உங்களின் முகத்தில், உங்களின் வெளிப்படுத்தும் ஆற்றலில், உங்களின் செயல்களில் திருப்தியின் ஆளுமை புலப்படும். பாபா இத்தகைய திருப்தி இரத்தினங்களின் மாலையை உருவாக்கினார். எத்தனை மாலைகள் உருவாக்கப்பட்டன? திருப்தி இரத்தினம் என்றால், மாசற்ற இரத்தினம் என்று அர்த்தம். திருப்தியின் அடையாளம் என்னவென்றால், ஒரு திருப்தியான ஆத்மா தனக்குள் மனநிறைவை அனுபவம் செய்வார். அத்துடன் மற்றவர்களும் அந்த ஆத்மாவுடன் மனநிறைவாக இருப்பார்கள். மனநிறைவுடன் இருக்கும் ஸ்திதியில் இதயம் கேள்விகள் கேட்காது. ஒன்று, மனநிறைவுடன் (பிரசன்) இருக்கும் இதயம். மற்றையது, கேள்விகள் கேட்கும் (பிரஷ்ன) இதயம். பிரஷ்ன என்றால் கேள்விகள் என்று அர்த்தம். மனநிறைவுடைய இதயத்தைக் கொண்டுள்ள ஒருவர் நாடகத்தைப் பற்றி ஞானம் நிறைந்தவராக இருப்பதனால் மனநிறைவாகவே இருப்பார். அவர் கேள்விகள் கேட்க மாட்டார். சுயத்தைப் பற்றியோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ என்ன கேள்விகள் எழுந்தாலும், நீங்களே முதலில் அதற்கான பதிலைப் பெறுவீர்கள். என்ன? அல்லது, ஏன்? என்ற கேள்விகள் கேட்காதீர்கள், ஆனால், ஒரு புள்ளி வையுங்கள் என உங்களுக்கு முன்னரே சொல்லப்பட்டுள்ளது. என்ன? அல்லது ஏன்? என்றிருக்கக்கூடாது. ஆனால் ஒரு முற்றுப்புள்ளி, ஒரு புள்ளியை வையுங்கள். ஒரு விநாடியில் விரிவாக்கத்தைச் செய்யுங்கள். ஒரு விநாடியில் சாரத்திற்குள் வாருங்கள். இத்தகைய அளவிற்கு மனநிறைவுடைய ஒருவர் சதா கவலையற்றவராகவே இருப்பார். எனவே, சோதித்துப் பாருங்கள்: திருப்தி இரத்தினமான எனக்குள் இந்த அடையாளங்கள் உள்ளனவா? பாப்தாதா எல்லோருக்கும் திருப்தி இரத்தினம் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார். எனவே, பாப்தாதா கேட்கிறார்: ஓ திருப்தி இரத்தினங்களே, நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? நீங்கள் உங்களுக்குள், அதாவது, உங்களின் முயற்சிகளில், உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுகின்ற முயற்சியில், உங்களின் முயற்சிகளினதும் உங்களின் ஸ்திதியினதும் சதவீதத்தில் எப்போதும் திருப்தியாக இருக்கிறீர்களா? ஓகே, இரண்டாம் கேள்வி: நீங்கள் உங்களின் மனம், வார்த்தைகள், செயல்களில், அதாவது, உறவுமுறைகளாலும் தொடர்புகளாலும் இடம்பெறும் சேவைகளில் எப்போதும் திருப்தியாக இருக்கிறீர்களா? மூன்றிலும், ஒரு வகையான சேவையில் மட்டுமன்றி, நீங்கள் செய்யும் மூன்று வகையான சேவைகளிலும் நீங்கள் எப்போதும் திருப்தியாக இருக்கிறீர்களா? எந்தளவிற்கு நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சோதித்துப் பார்த்தீர்களா? ஓகே, மூன்றாவது கேள்வி: நீங்கள் உங்களுடனும் மற்றவர்களுடனும் ஆத்மாக்கள் எல்லோருடனும் ஒரு தொடர்பை அல்லது உறவுமுறையைப் பேணும்போது எப்போதும் திருப்தியாக இருக்கிறீர்களா? இது ஏனென்றால், தபஸ்யா வருடத்தில், இதுவே நீங்கள் அடைய வேண்டிய தபஸ்யாவின் வெற்றியின் பலனாகும். உங்களுடன், சேவையில், மற்றவர்களுடன் - எல்லாவற்றிலும் திருப்தி இருக்க வேண்டும். நீங்கள் நான்கு மணிநேரம் சேவை செய்தீர்கள். அது மிகவும் நல்லது. நீங்கள் நான்கு மணிநேரத்தில் இருந்து எட்டு மணிநேரத்தை அடைவீர்கள். அதுவும் நல்லதே. யோகத்தினால் வெற்றி சொரூபம் ஆகுங்கள். யோகாவே வழிமுறையாகும். ஆனால், இந்த வழிமுறையால் நீங்கள் என்ன வெற்றியைப் பெற்றீர்கள்? உங்களின் யோகத்தை இணைப்பதே வழிமுறையாகும். யோகம் செய்வதன் மூலம் பெறப்படும் பேறுகளே வெற்றியாகும். எட்டு மணிநேரம் யோகம் செய்வதற்கான இலக்கு உங்களிடம் இருப்பதைப் போல், இந்த மூன்று வகையான திருப்தியின் பெறுபேற்றையும் பெறுவதற்கான தெளிவான, மேன்மையான இலக்கைக் கொண்டிருங்கள். சில குழந்தைகள் தமது சொந்தக் கெட்டித்தனத்தால் தாம் திருப்தியாக இருப்பதாகக் கருதுகிறார்கள். அந்த முறையில் திருப்தி அடையாதீர்கள். ஒன்று, உங்களின் இதயம் ஏற்றுக் கொள்ளும்போது ஏற்படுவது. மற்றையது, உங்களின் தலை எற்றுக் கொள்ளும்போது ஏற்படுவது. எமக்கென்ன கவலை? நாம் கவலையற்ற சக்கரவர்த்திகள் என்று உங்களின் தலையால் நீங்கள் நினைக்கும்போது உங்களுடன் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள். உங்களின் தலையால் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள் என நினைப்பது திருப்தியல்ல. நீங்கள் இதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குள் திருப்தியின் அடையாளங்களை அனுபவம் செய்யுங்கள். உங்களின் இதயம் எப்போதும் மனநிறைவுடன் இருக்க வேண்டும். அந்த ஆளுமை இருக்க வேண்டும். உங்களுக்கு அந்த ஆளுமை இருக்கிறதென்று நீங்கள் கருதி, மற்றவர்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால், நீங்கள் உங்களையே திருப்திப்படுத்திக் கொள்கிறீர்கள் என்றே அர்த்தம். எனவே, அந்த வகையான திருப்தி இருக்கக்கூடாது. ஆனால் நீங்கள் சரியான அனுபவத்தினால் ஒரு திருப்தியான ஆத்மா ஆகவேண்டும். திருப்தி என்றால், உங்களின் இதயமும் தலையும் எப்போதும் ஓய்வாக இருக்க வேண்டும். அவை சௌகரியமும் சந்தோஷமும் என்ற ஸ்திதியில் இருக்கும். அவை சஞ்சலத்துடன் இருக்க மாட்டாது. அவை சந்தோஷமாகவும் சௌகரியமாகவும் இருக்கும். இத்தகைய திருப்தி இரத்தினங்கள் சதா தந்தையின் நெற்றியில் இரத்தினங்களாக ஜொலிப்பார்கள். உங்களையே சோதித்துப் பாருங்கள். திருப்தியானது, தந்தையிடமிருந்தும் ஏனையவர்களிடமிருந்தும் நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறச் செய்கிறது. திருப்தியானதோர் ஆத்மா, அவ்வப்போது, தந்தையினதும் ஏனையவர்களினதும் ஆசீர்வாதங்களின் விமானத்தில் தான் பறப்பது போன்று அனுபவம் செய்வார். இத்தகைய ஆத்மாக்களுக்கு இந்த ஆசீர்வாதங்கள் பறக்கும் வாகனம் போன்றிருக்கும். அவர்கள் தம்மைச் சதா ஒரு பறக்கும் வாகனத்தில் அமர்ந்து பறந்து கொண்டிருப்பது போல் அனுபவம் செய்வார்கள். இத்தகைய ஆத்மாக்கள் ஆசீர்வாதங்களைக் கேட்க மாட்டார்கள். ஆனால் ஆசீர்வாதங்கள் இயல்பாகவே அவர்களை நோக்கி வரும். இத்தகையதொரு திருப்தி இரத்தினமாக இருத்தல் என்றால், வெற்றி சொரூபமான ஒரு தபஸ்வியாக இருத்தல் என்று அர்த்தம். இது தற்காலிகமானதொரு வெற்றி அல்ல. இது அநாதியான, ஆன்மீக வெற்றியாகும். பாபா இத்தகைய திருப்தி இரத்தினங்களைப் பார்த்தார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் யார்?

தபஸ்யா வருடத்திற்காக உங்களிடம் மிக நல்ல ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் கொள்ளளவிற்கேற்பச் செய்கிறீர்கள். அத்துடன் எதிர்காலத்திற்கான உற்சாகத்தையும் கொண்டிருக்கிறீர்கள். இந்த உற்சாகம் மிகவும் நல்லது. இப்போது, உங்களின் வாழ்க்கையில் தபஸ்யா செய்வதனாலும், ஏனையோர்களுடன் உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் நீங்கள் பெற்ற பேறுகளை வெளிப்படுத்துங்கள். நீங்கள் உங்களில் இதை அனுபவம் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களின் அனுபவங்களை உங்களின் மனதிலும் புத்தியிலும் மட்டும் வைத்திருக்கக்கூடாது. அவை உங்களின் நடத்தையிலும் உங்களின் முகங்களிலும் வெளிப்படவேண்டும். அவற்றை உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் கொண்டுவாருங்கள். உங்களுக்குள் அவை முதலில் வெளிப்படுத்தப்பட்டால் மட்டுமே, அவை உங்களின் உறவுமுறைகளிலும் வெளிப்படுத்தப்படும். பின்னர் அவை உலக மேடையில் வெளிப்படுத்தப்படும். அப்போதுதான் வெளிப்படுத்தலுக்கான முரசங்கள் ஒலிக்கும். புராணங்களில் சங்கரர் தனது மூன்றாம் கண்ணைத் திறந்தபோது விநாசம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுவது உங்களின் ஞாபகார்த்தமே. சங்கரர் என்றால் சரீரமற்ற ஸ்திதி, தபஸ்வி என்று அர்த்தம். அதாவது, விகாரங்களின் பாம்பை உங்களின் கழுத்து மாலையாக ஆக்கி, சதா மேன்மையான ஸ்திதியை அனுபவம் செய்து, மேன்மையான ஆசனத்தில் அமர்ந்திருத்தல் என்று அர்த்தம். மூன்றாம் கண் என்றால், முழுமை ஆகுவதன் கண், சம்பூரணம் ஆகுவதன் கண் என்று அர்த்தம். தபஸ்விகளான நீங்கள் உங்களின் சம்பூரணமான ஸ்திதியில் இருந்து, உலக மாற்றத்திற்கான எண்ணத்தைக் கொண்டிருக்கும்போது, இந்த இயற்கையானது சம்பூரணமான குழப்பம் என்ற நடனத்தை ஆடும். அது அனர்த்தங்களை உருவாக்கும் நடனத்தை ஆடும். நீங்கள் அசைக்க முடியாதவர்களாக இருப்பீர்கள். அது குழப்பத்தை உருவாக்கும். அது ஏன்? முழு உலகையும் யார் சுத்தம் செய்வது? மனித ஆத்மாக்களால் அவ்வாறு செய்ய முடியுமா? எனவே, இந்தக் காற்றில், நிலத்தில், கடல் நீரில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாவற்றையும் சுத்தம் செய்யும். நீங்கள் இந்தத் தபஸ்யாவினால் சம்பூரணமான ஸ்திதியை உருவாக்க வேண்டும். உங்களுடன் சதா ஒத்துழைக்கும் மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் என்ற பிரிவுகள் முதலில் உங்களின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும்போது, உங்களின் எண்ணங்களினூடாக வழங்கப்படும் உங்களின் கட்டளையை இயற்கை ஏற்றுக் கொள்ளும். உங்களுடன் சதா ஒத்துழைக்கும் புலன்கள் உங்களின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், எவ்வாறு இயற்கை உங்களின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும்? ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ஒரே எண்ணம் ஏற்படும் வகையில் சக்திவாய்ந்த தபஸ்யா என்ற உயர்ந்த ஸ்திதி இருக்க வேண்டும். மாற்றம் என்ற ஒரு விநாடி எண்ணம் ஏற்பட்டதும், இயற்கை பிரசன்னமாக வேண்டும். உலகிலுள்ள பிராமண ஆத்மாக்களான நீங்கள் ஒரே வேளையில் உலக அமைதிக்கான யோகத்தைச் செய்கிறீர்கள். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் நினைவிற்கான ஒரே எண்ணம் ஏற்படுகிறது. இந்த முறையில், எல்லோருடைய எண்ணங்களினூடாகவும் இயற்கை குழப்பத்தின் நடனத்தை ஆட ஆரம்பிக்கும். இதனாலேயே, சுய மாற்றத்தினூடாக உலக மாற்றம் ஏற்படுகிறது என நீங்கள் கூறுகிறீர்கள். இந்தப் பழைய உலகம் எவ்வாறு மாற்றப்பட்டுப் புதியதாகும்? உங்கள் எல்லோருடைய சக்திவாய்ந்த எண்ணத்தினால். எல்லோருக்கும் ஒன்றாக ஒரே எண்ணம் ஏற்படும்போது, மாற்றம் நிகழும். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இதுவே தபஸ்யா என்று அழைக்கப்படுகிறது. அச்சா.

பாப்தாதா எப்போதும் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறார். அவர் பாரதவாசிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடையவில்லை என்று அர்த்தமில்லை. தற்சமயம் இது இரட்டை வெளிநாட்டவர்களின் முறையாகும். தந்தை எப்போதும் பாரதத்தையிட்டு மகிழ்ச்சி அடைகிறார். இதனாலேயே அவர் பாரதத்தில் வந்துள்ளார். அத்துடன் உங்கள் எல்லோரையும் பாரதவாசிகள் ஆக்கியுள்ளார். எனவே, இந்த வேளையில், நீங்கள் எல்லோரும் வெளிநாட்டவர்களா அல்லது பாரதவாசிகளா? பாரதவாசிகள் ஆகியிருப்பதுடன், நீங்கள் மதுவனவாசிகளாகவும் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மதுவனவாசிகள் ஆகுவதை விரும்புகிறீர்கள். இப்போது சேவையை விரைவாக முடியுங்கள். அப்போது உங்களால் மதுவனவாசிகள் ஆகமுடியும். முழு உலகிற்கும் விரைவாகச் செய்தியைக் கொடுத்து முடித்த பின்னர் நீங்கள் இங்கே வந்தால், நீங்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டீர்கள். அந்த வேளையில், இந்த இடமும் தயார் ஆகிவிடும். பாருங்கள், இங்குள்ள இடம் (அமைதிப்பூங்கா) மிகப் பெரியது. முன்கூட்டியே அங்கு ஆயத்தங்கள் செய்யப்படும். அதனால் உங்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் இருக்காது. எவ்வாறாயினும், நேரம் வரும்போது, நீங்கள் உங்களின் சூட்கேஸின் மீதுகூடத் தூங்க வேண்டியிருக்கும். உங்களுக்குக் கட்டில் கிடைக்காது. அது முற்றிலும் வேறுபட்ட நேரமாக இருக்கும். அந்த நேரம், இந்த நேரத்தை விட வேறுபட்டதாக இருக்கும். இப்போது, நீங்கள் செய்யும் சேவையின் செய்தியானது உங்களின் மனதிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் ஒத்ததாக இருக்க வேண்டும். அப்போது சேவையின் வேகம் அதிகரிக்கும். உங்களின் மனதில் சக்திவாய்ந்தவர் ஆகுங்கள். உங்களின் வார்த்தைகளில் ஞானம் நிறைந்தவர் ஆகுங்கள். உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும், அதாவது, உங்களின் செயல்களில் அன்பு நிறைந்தவர் ஆகுங்கள். இவை மூன்றும் ஒரே வேளையில் அனுபவம் செய்யப்பட வேண்டும். இதுவே துரித கதியில் சேவை செய்தல் எனப்படுகிறது. அச்சா. நீங்கள் எல்லோரும் உங்களின் சரீரங்களிலும் மனங்களிலும் நன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் தொலைவில் இருந்து வந்துள்ளீர்கள். எனவே, தொலைவில் இருந்து வந்துள்ள சந்தோஷமான குழந்தைகளைப் பார்த்து பாப்தாதாவும் சந்தோஷப்படுகிறார். எவ்வாறாயினும், நீங்கள் தொலைவில் இருந்து வந்திருந்தாலும், நீங்கள் விமானத்தில் வந்ததனால் நன்றாக இருக்கிறீர்கள். அச்சா.

இந்தக் கல்பத்தில் முதல் தடவை வந்திருப்பவர்களுக்கு பாப்தாதா விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். முன்னரும் வந்து, இப்போது மீண்டும் வந்திருப்பவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்கு நல்ல தைரியம் உள்ளது. நீங்கள் திரும்பிச் சென்று, உங்களின் டிக்கெட்டுக்கான பணத்தைச் சம்பாதித்துப் பின்னர் மீண்டும் வருகிறீர்கள். இதுவும் ஒருவகையில் நினைவு செய்வதற்கான வழிமுறையாகும்: நாம் செல்ல வேண்டும், நாம் செல்ல வேண்டும்! நீங்கள் இங்கு வந்ததும், வெளிநாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் இங்கிருந்து சென்றதும், இங்கு மீண்டும் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இங்கே வந்து சேர்ந்ததும், திரும்பிச் செல்வதைப் பற்றி நினைக்கிறீர்கள். இந்த பிராமண ஆத்மாக்கள் அபுவின் அழகு என அந்த அரசாங்கம் நினைக்கும் காலமும் வரும். அச்சா.

நான்கு திசைகளிலும் உள்ள மகத்தான, திருப்தியான ஆத்மாக்கள் எல்லோருக்கும், சதா மனநிறைவான இதயங்களைக் கொண்டுள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும், கவலையற்றவர்களாக இருப்பவர்களுக்கும், சேவையாளர்களாக இருந்து, ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளையும் துரித கதியில் செய்பவர்களுக்கும், மேன்மையான ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தபஸ்வி ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

நீங்கள் எல்லோரும் உங்களைப் புனித அன்னங்களாகக் கருதுகிறீர்களா? ஒரு புனித அன்னத்தின் விசேடமான பணி என்ன? (ஒவ்வொருவரும் தத்தமது சொந்தக் கருத்துக்களைச் சொன்னார்கள்.) நீங்கள் சொன்ன சிறப்பியல்புகள் எல்லாம் உங்களின் நடைமுறைச் செயல்களில் உள்ளனவா? பிராமணர்களான உங்களைத் தவிர வேறு எவரால், புனித அன்னங்கள் ஆகமுடியும்? எனவே, ஆன்மீக போதையுடன் சொல்லுங்கள் - தந்தை எப்போதும் தூய்மையானவராக இருந்து, எல்லா வேளையும் சகல சக்திகளையும் செயலில் காட்டுவதைப் போல், புனித அன்னங்களான நீங்களும் எப்போதும் சகல சக்திகளையும் நடைமுறையில் கடைப்பிடியுங்கள். நீங்கள் சதா தூய்மையானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் அவ்வாறுதான் இருந்தீர்கள். நீங்கள் எப்போதும் அவ்வாறே இருப்பீர்கள். நீங்கள் முக்காலங்களையும் நினைக்கிறீர்கள்தானே? குழந்தைகள் முன்னரும் பல தடவைகள் நடித்த பாகங்களைப் பார்த்து பாப்தாதாவும் மகிழ்கிறார். இதனாலேயே, உங்களுக்கு இது கஷ்டமாக இருப்பதில்லை, அப்படித்தானே? மாஸ்ரர் சர்வசக்திவான்களின் கனவுகளிலேனும் கஷ்டம் என்ற வார்த்தை பிரவேசிக்க முடியாது. பிராமணர்களின் அகராதியில் கஷ்டம் என்ற வார்த்தை இருக்குமா? சிறியதொரு எழுத்தில் எங்கேயாவது அது இருக்காதுதானே? நீங்கள் மாயையைப் பற்றியும் ஞானம் நிறைந்தவர்கள்தானே? நீங்கள் நிறைந்தவர்களாக இருக்கும்போது, உங்களால் தோல்வி அடைய முடியாது. தோல்வி அடைவதற்கான காரணம் என்ன? முன்கூட்டியே நீங்கள் அதைப் பற்றி அறிந்திருக்கும்போது, நீங்கள் ஏன் தோல்வி அடைகிறீர்கள்? ஒருவர் முன்கூட்டியே அதை அறிந்திருந்தும், பின்னர் தோல்வி அடைந்தால், நீங்கள் அவரை என்னவென்று அழைப்பீர்கள்? ஏதாவது நிகழும்போது, நீங்கள் தோல்வி அடைவதற்கான காரணம், ஏதாவதொன்றைப் பற்றி நீங்கள் உணர்ச்சிகளைக் கொண்டிருப்பதேயாகும். உங்களுக்கு உணர்ச்சிகளின் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் வந்தால் என்ன செய்யும் என்று உங்களுக்குத் தெரியுமா? அது உங்களைப் பலவீனமாக்கிவிடும். உங்களுக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, ஏதாவதொன்று சிறியதாக இருக்கும். ஆனால் நீங்கள் அதைப் பெரியதாக்கி விடுவீர்கள். ஆகவே, நிரம்பியர்கள் ஆகுங்கள்! நீங்கள் தோற்கக்கூடாது. நீங்கள் சித்தி அடைய வேண்டும். எந்தவொரு சூழ்நிலை வந்தாலும், தொடர்ந்து அதனூடாகக் கடந்து செல்லுங்கள். நீங்கள் திறமைச்சித்தி எய்துவீர்கள். எனவே, நீங்கள் அதை வெற்றி கொள்ள வேண்டும். நீங்கள் அதை வெற்றி கொள்ளவும் (பாஸ்) வேண்டும். அத்துடன் நெருக்கமாகவும்(பாஸ்) இருக்க வேண்டும். உங்கள் அளவிற்கு பாப்தாதாவின் மீது அன்பு கொண்டவர்கள் எவரும் கிடையாது என நீங்கள் போதையுடன் சொல்லும்போது, உங்களுக்கு அன்பு இருப்பதனால், நீங்கள் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது தொலைவில் இருக்க விரும்புகிறீர்களா? எனவே, நீங்கள் நெருக்கமாக இருந்து, சித்தி அடைய வேண்டும். யுகே இல் இருந்து வந்திருப்பவர்கள், பாப்தாதாவின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்கள்தானே? தந்தையின் முதலாம் இலக்க தூய விருப்பம் என்ன? பாபா குறிப்பாக யுகே ஐச் சேர்ந்தவர்களைக் கேட்கிறார். நீங்கள் தந்தையை வெளிப்படுத்தக்கூடிய கருவிகள் ஆகுவதுடன், தந்தைக்கு நெருக்கமாக வரக்கூடிய பெரிய மைக்குகளைக் கொண்டுவர வேண்டும். இப்போது நிச்சயமாக மைக்குகள் யுகே, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்தும் வெளிப்படுவார்கள். ஆனால், ஒருவகையினர் ஒத்துழைப்பவர்கள். இன்னொரு வகையினர் நெருக்கமாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருப்பவர்கள். எனவே, இத்தகைய மைக்குகளைத் தயார் செய்யுங்கள். பொதுவாகச் சேவையில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. அது தொடர்ந்து வளரும். அச்சா. ரஷ்யாவைச் சேர்ந்த குழந்தைகள் இளையவர்கள். ஆனால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களுக்குத் தந்தையிடம் எந்தளவு அன்பு உள்ளது? இது நல்லது. குழந்தைகளின் தைரியத்தைப் பார்த்து பாப்தாதா சந்தோஷப்படுகிறார். எவ்வாறு சிரமப்படுவது என்பதை நீங்கள் இப்போது மறந்து விட்டீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
உங்களின் ஒவ்வோர் எண்ணத்தாலும் ஒவ்வொரு வார்த்தையாலும் ஒவ்வொரு செயலாலும் புண்ணியச் செயலைச் செய்வதன் மூலம், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டிருப்பீர்களாக.

உங்களுக்குள் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள் - நாள் முழுவதும், உங்களின் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் செயல்களாலும், நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகித் தொடர்ந்து புண்ணியத்தைச் செய்வீர்கள். புண்ணியம் செய்வதன் உடனடிப்பலன், ஒவ்வோர் ஆத்மாவிடமிருந்தும் கிடைக்கும் ஆசீர்வாதங்களாகும். எனவே, உங்களின் ஒவ்வோர் எண்ணத்திற்கும் வார்த்தைக்கும் ஆசீர்வாதங்களைச் சேமியுங்கள். உங்களுடன் உறவுமுறையிலம் தொடர்பிலும் வருபவர்களின் இதயங்களில் இருந்து ஒத்துழைப்பிற்கான நன்றிகள் வெளிப்பட வேண்டும். இத்தகைய ஆத்மாக்கள் மட்டுமே ஒரு பரிசைப் பெறுவார்கள்.

சுலோகம்:
சதா ஒரேயொரு தந்தையின் சகவாசத்தில் இருந்து, தந்தையை உங்களின் சகபாடி ஆக்குங்கள். இதுவே மகத்துவம் ஆகும்.