05.07.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    20.02.86     Om Shanti     Madhuban


பறக்கும் ஸ்திதியால் அனைவருக்கும் நன்மை.


இன்று, பாப்தாதா குறிப்பாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு இரட்டைப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறார். முதலாவதாக, நீங்கள் தொலைதேசங்களுக்கு வெவ்வேறு மதங்களில் சென்றாலும், பாரதத்தில் நெருக்கமாக வசிக்கும் பல ஆத்மாக்களை விட மிக விரைவாக நீங்கள் தந்தையை இனங்கண்டுகொண்டீர்கள். தந்தையை இனங்கண்டதற்கு, அதாவது, உங்களின் பாக்கியத்தை அடைந்ததற்குப் பாராட்டுக்கள். இரண்டாவதாக, நீங்கள் விரைவாகத் தந்தையை இனங்கண்டதைப் போல், விரைவாகச் சேவையிலும் உங்களை ஈடுபடுத்தினீர்கள். எனவே, இரண்டாவதாக, சேவையில் விரைவாக முன்னேறிச் செல்வதற்குப் பாராட்டுக்கள். சேவையின் விரிவாக்கத்தின் வேகம் துரிதமாக உள்ளது. எதிர்காலத்திலும், இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் விசேடமான பணிக்குக் கருவிகள் ஆகவேண்டும். பாரதத்தில் கருவிகள் ஆகிய ஆதி இரத்தினங்கள், விசேடமான ஆத்மாக்கள், மிகப் பலம்வாய்ந்த அத்திவாரம் ஆகி, ஸ்தாபனைப் பணியைச் செய்தார்கள். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் விரைவாக ஒலியைச் சகல திசைகளிலும் பரவச் செய்யும் சேவையைச் செய்தார்கள். தொடர்ந்தும் அவ்வாறே செய்வார்கள். இதனாலேயே, நீங்கள் வந்து பிறப்பு எடுத்தவுடனேயே சேவையில் விரைவாக முன்னேறுவதற்காகக் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதா விசேடமான பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். குறுகிய காலத்தில், நீங்கள் வெவ்வேறு இடங்களில் சேவையை விரிவாக்கியுள்ளீர்கள். இதனாலேயே, ஒலியைப் பரப்பும் பணியானது இலகுவாக வளருகிறது. எப்போதும் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதன் மூலம், நீங்கள் நிச்சயமாக இரட்டைக் கிரீடாதாரி ஆகுவதற்கான உங்களின் முழு உரிமையையும் பெறுவதற்கு எப்போதும் தீவிர முயற்சி செய்வீர்கள். பாப்தாதா குறிப்பாக உங்களைச் சந்திப்பதற்காகவே வந்திருக்கிறார். அனைவரின் இதயங்களிலும் சந்தோஷ முரசங்கள் ஒலிப்பதை பாப்தாதா பார்க்கிறார். குழந்தைகளின் சந்தோஷ சங்கீதத்தையும் அவர்களின் சந்தோஷப் பாடல்களையும் பாப்தாதா கேட்கிறார். நீங்கள் நினைவிற்காகவும் சேவைக்காகவும் ஆழ்ந்த அன்புடன் முன்னேறுகிறீர்கள். நினைவும் சேவையும் உள்ளன. ஆனால் மேலும் எதைச் சேர்க்க வேண்டியுள்ளது? இரண்டும் உள்ளன. ஆனால் எப்போதும் இரண்டிலும் சமநிலை இருக்க வேண்டும். இந்தச் சமநிலையே உங்களுக்காகவும் சேவைக்காகவும் தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறும் அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். அப்போது சேவையில் உங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும். இப்போது, மேற்கொண்டு செய்யும் சேவையில், நினைவிற்கும் சேவைக்கும் இடையே மகத்தான சமநிலை இருக்குமாயின், இந்தச் சத்தம் உலகில் மிகவும் உரத்து எதிரொலிக்கும். நீங்கள் மிக நல்ல விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். விரிவாக்கத்தின் பின்னர் என்ன செய்யப்படும்? விரிவாக்கத்தின் பின்னர், விசேடமான ஆத்மாக்கள் சேவையின் சாரத்திற்குக் கருவிகள் ஆக்கப்பட வேண்டும். அப்போது அந்த விசேடமான ஆத்மாக்கள் பாரதத்தின் விசேடமான ஆத்மாக்களை விழித்தெழச் செய்வார்கள். இப்போது, பாரதத்திலும், காலத்திற்கேற்ப, சேவைக்கான வழிமுறைகள் முன்னேற்றம் அடைகின்றன. தலைவர்கள், மதத் தலைவர்கள், நடிகர்களும் தொடர்பில் வருகிறார்கள். வேறு யார் எஞ்சியுள்ளார்கள்? அவர்கள் தொடர்பில் வருகிறார்கள். தலைவர்களும் தொடர்பில் வருகிறார்கள். ஆனால் இப்போது, குறிப்பாக அரசியல் தலைவர்களை நெருக்கமான தொடர்பில் கொண்டுவருவதற்கான எண்ணம் வெளிப்பட வேண்டும்.

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளான நீங்கள் அனைவரும் இப்போது பறக்கும் ஸ்திதிக்கு செல்கிறீர்கள், இல்லையா? நீங்கள் ஏறுகின்ற ஸ்திதியில் இருப்பவர்கள் இல்லையல்லவா? உங்களிடம் பறக்கும் ஸ்திதி இருக்கிறதா? பறக்கும் ஸ்திதி இருக்கும்போது, அனைவருக்கும் நன்மை உள்ளது என்பதே அதன் அர்த்தம். குழந்தைகள் அனைவரிடமும் சதா, ஸ்திரமான பறக்கும் ஸ்திதி இருக்கும்போது, அனைவரும் நன்மை அடைவார்கள். அதாவது, மாற்றத்திற்கான பணி நிறைவடையும். இப்போது, பறக்கும் ஸ்திதி உள்ளது. ஆனால் அத்துடன் கூடவே, வெவ்வேறு மட்டங்களின் ஸ்திதியும் காணப்படுகின்றன. சிலவேளைகளில், ஸ்திதி மிக நன்றாக உள்ளது. ஏனைய வேளைகளில், அந்த ஸ்திதியை உருவாக்குவதற்கு முயற்சி செய்யும் ஸ்திதியாக உள்ளது. பெரும்பாலானோரிடம் சதா பறக்கும் ஸ்திதி இருக்கும்போது, சம்பூரணம் நிகழப் போகிறது என்பதே அதன் அர்த்தம். இப்போது, பறக்கும் ஸ்திதியே மேன்மையான ஸ்திதி என்பதைக் குழந்தைகளான நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பறக்கும் ஸ்திதியே கர்மாதீத் ஸ்திதி அடைவதற்கான ஸ்திதி ஆகும். பறக்கும் ஸ்திதியே, சரீரத்தில் இருந்தாலும் அதில் இருந்து பற்றற்றவராக இருக்கும், தந்தையின் மீதும் சேவையிலும் அன்புடையவராக இருக்கும் ஸ்திதி ஆகும். பறக்கும் ஸ்திதியே பாக்கியத்தை அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் இருக்கும் ஸ்திதி ஆகும். பறக்கும் ஸ்திதியே நடக்கும் அசையும் தேவதைகளினதும் தேவர்களினதும் காட்சிகளை அருளும் ஸ்திதியாகும்.

பறக்கும் ஸ்திதி ஆத்மாக்கள் அனைவரையும் பிச்சைக்காரர்களாக இருப்பதில் இருந்து விடுவிக்கிறது. அத்துடன் அவர்களுக்குத் தந்தையின் ஆஸ்தியின் உரிமையையும் கொடுக்கிறது. ஆத்மாக்கள் அனைவரும் தமது இஷ்ட தேவர்களை அல்லது தெய்வங்களை அல்லது தமது கருவி தேவதேவியர்களை இந்த பூமியில் அவதரித்துள்ளதாகவே அனுபவம் செய்வார்கள். சத்தியயுகத்தில், அனைவரும் சத்கதியை அடைந்திருப்பார்கள். ஆனால், இந்த நேரத்தில் உள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் சத்கதியை அருள்பவர்கள் நீங்களே. ஒரு நாடகம் முடிவடைந்ததும், நடிகர்கள் அனைவரும் மேடைக்கு வருவார்கள். எனவே, இப்போது, இந்தக் கல்பத்தின் நாடகத்தின் முடிவிற்கான நேரம் வரவுள்ளது. உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் தமது கனவுகளில் ஒரு விநாடி தரிசனத்தை அல்லது எங்கும் இடம்பெறும் வெளிப்படுத்துகையால் இந்த நாடகத்தின் கதாநாயக நடிகர்கள் இந்த மேடையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற காட்சியை நிச்சயமாகக் காண்பார்கள். பூமியின் நட்சத்திரங்கள் பூமியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமது இஷ்ட தெய்வங்களை அடைந்ததில் அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுக்கு ஆதாரம் கிடைக்கும். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளான நீங்களும் விசேடமாக அன்பு செலுத்தப்படும் தேவ, தேவியர் ஆவீர்கள், இல்லையா? அல்லது, அது பொன்விழாவிற்குரியவர்கள் மட்டுமா? நீங்கள் அதில் ஒருவரா அல்லது நீங்கள் வெறுமனே பார்வையாளர்களா? நீங்கள் பொன்விழாக் காட்சிகளைக் கண்டீர்கள், இல்லையா? இப்போது, சுவாரசியமான பாகம் நடிக்கப்பட்டது. எவ்வாறாயினும், இறுதிக் காட்சிகளில், நீங்கள் காட்சிகளை அருள்பவர்களாக இருப்பீர்களா? அல்லது வெறுமனே பார்வையாளர்களாக இருப்பீர்களா? நீங்கள் எவ்வாறு இருப்பீர்கள்? நீங்கள் கதாநாயக நடிகர்கள், இல்லையா? இப்போது, என்ன நிகழப்போகிறதோ அந்தக் காட்சி வெளிப்படட்டும். இப்போது திரிகாலதரிசியாகி, அந்த இறுதிக்காட்சி எத்தனை அழகாக இருக்கும் என்றும் நீங்கள் எவ்வளவு அழகாக இருப்பீர்கள் என்றும் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் தேவதைகள் ஆகுவீர்கள். பின்னர் தெய்வீகக் குணங்களுடைய அழகாக அலங்கரிக்கப்பட்ட தேவர்களாக இருப்பீர்கள். அதற்கு, இப்பொழுதில் இருந்தே உங்களின் தேவதை ரூபத்தின் ஸ்திதியில் உங்களைப் பார்ப்பதைப் பயிற்சி செய்து, தொடர்ந்து முன்னேறுங்கள். பிரதானமாக நான்கு பாடங்கள் உள்ளன. ஞான ரூபம் ஆகுதல், சதா நினைவின் ரூபம் ஆகுதல், சகல தெய்வீகக் குணங்களினதும் ரூபம் ஆகுதல். ஒரு நற்குணம் இல்லாவிட்டாலும், உங்களை பதினாறு சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர் என்று அழைக்க முடியாது. மூன்று வகையான புகழும் இருக்க வேண்டும். பதினாறு சுவர்க்கக் கலைகள், சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர், அனைத்தாலும் நிரம்பியிருப்பவர். சகல தெய்வீகக்குணங்களும் நிரம்பியவர், சம்பூரணமாக விகாரமற்றவர், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர். மூன்று சிறப்பியல்புகளும் தேவை. பதினாறு சுவர்க்கக் கலைகள் என்றால் நீங்கள் நிரம்பியிருக்க வேண்டும், முழுமையாக இருக்க வேண்டும். அத்துடன் சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியிருக்க வேண்டும். எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். இந்த வருடம் நீண்ட காலத்திற்கு உங்களால் சேமிக்கக்கூடிய வருடம் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பின்னர், நீண்ட காலக் கணக்கு முடிவிற்கு வந்துவிடும். அதன்பின்னர் நீண்ட காலம் என்று இல்லாமல், குறுகிய காலத்திற்கு என்றே சொல்லப்படும். இப்போது, நீண்ட காலத்திற்கு முயற்சி செய்பவரின் வரிசையில் வாருங்கள். அப்போது நீண்ட காலத்திற்கு இராச்சிய பாக்கியத்தை அடையும் உரிமையை நீங்கள் பெறுவீர்கள். இரண்டு அல்லது நான்கு பிறவிகள் குறைவாக இருந்தாலும், அதை நீண்ட காலம் எனக் கணக்கிட முடியாது. முதல் பிறவி இருக்க வேண்டும். அத்துடன் இயற்கை ஆரம்பிக்கும்போது அதன் மேன்மையான சந்தோஷம் இருக்க வேண்டும். அது 1.1.1 ஆக இருக்க வேண்டும். அனைத்திலும் முதலாவதாக ஆகுங்கள். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சேவையில் நீங்கள் முதலாம் இலக்கத்தவர் ஆகினால், உங்களின் ஸ்திதியும் முதலாம் இலக்கமாக இருக்கும். அப்போது நீங்கள் 1.1.1 இல் வருவீர்கள், இல்லையா? எனவே, சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் முதலாம் இலக்க ஆத்மாவுடனும் முதல் பிறப்பில் தமது பாகங்களை நடிப்பவர்களுடனும் பாகங்களை நடிப்பவர்களாக ஆகுங்கள். எனவே, நீங்களே யுகத்தை ஆரம்பித்து வைப்பவர்கள். முதல் பிறவி எடுப்பவர்களே, முதல் யுகத்தின் முதல் மாதத்தின் முதலாம் திகதியில் ஆரம்பிப்பார்கள். எனவே, இரட்டை வெளிநாட்டவர்களான நீங்களும் முதல் இலக்கத்தவர் ஆகுவீர்கள், இல்லையா? அச்சா. தேவதை ஆடையை எவ்வாறு அணிவது என உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு பிரகாசமான ஆடை. அந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதுடன் அந்த ரூபமாக ஆகுதல் என்றால், தேவதை ஆடையை அணிதல் என்று அர்த்தம். பிரகாசிக்கும் எதுவும் தொலைவில் இருந்;தே கவரும். எனவே, இந்த தேவதை ஆடை, அதாவது, இந்த தேவதை ரூபம் வெகு தொலைவில் உள்ள ஆத்மாக்களையும் கவரும். அச்சா.

இன்று, இது யுகே இன் முறையாகும். யுகே இன் சிறப்பியல்பு என்ன? நீங்கள் இலண்டனை சத்தியயுகத்திலும் உங்களின் இராச்சியத்திற்கான இடமாக ஆக்குவீர்களா? அல்லது, அது ஒரு சுற்றுலாத்தலமாக இருக்குமா? அது ஐக்கிய இராச்சியம், இல்லையா? நீங்கள் அங்கும் ஓர் இராச்சியத்தை அமைப்பீர்களா? அல்லது, அரசர்கள் அங்கு பார்ப்பதற்காகச் செல்வார்களா? எவ்வாறாயினும், அது ஓர் இராச்சியம் என்றே அழைக்கப்படுகிறது, இல்லையா? எனவே, இந்த வேளையில், அது சேவைக்குரிய இராச்சியமாகவும் இருக்கிறது. அது வெளிநாடுகள் அனைத்திற்கும் சேவை செய்வதற்கு ஓர் சர்வதேச இராச்சியமாக இருக்கிறதல்லவா? இராச்சியம் என்ற பெயர் சரியானதல்லவா? அது அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய ஓர் இராச்சியம் ஆகும். அது ஆத்மாக்கள் அனைவரையும் தந்தையைச் சந்திக்கச் செய்யும் ஓர் இராச்சியம் ஆகும். யுகேயில் இருப்பவர்களுக்கு பாப்தாதா, நீங்கள் ஓகே ஆக இருப்பவர்கள் எனக் கூறுகிறார். யுகே என்றால் ஓகே ஆக இருப்பவர்கள் என்று அர்த்தம். உங்களை யாரும் கேட்டால், நான் ஓகே என்றே சொல்வீர்கள், இல்லையா? ஆமாம், அது உண்மையே, நான் ஓகே.. என நீண்ட பெருமூச்சுடன் கூறமாட்டீர்கள். நீங்கள் நன்றாக இருந்தால், ஆமாம், நான் ஓகே என்று மிகவும் உற்சாகத்துடன் சொல்வீர்கள். நீங்கள் ஓகே சொல்லும் முறையில் ஒரு வேறுபாடு உள்ளது. எனவே, சங்கமயுகத்தின் இராச்சியம், ஆத்மாக்கள் ஆட்சியாளர்கள் ஆகுவதற்கான தூண்டுதல் எங்கும் பரவ வேண்டிய சேவையின் இராச்சியம், அதாவது, அரச குடும்பம் ஆயத்தமாக வேண்டும். ஆகவே, இராச்சியத்திற்கான உரிமையைப் பெறக்கூடிய ஆத்மாக்களை உருவாக்கும் இடம் ஓர் இராச்சியமே ஆகும். இதனாலேயே, குறிப்பாக பாப்தாதா ஒவ்வொரு நாட்டின் சிறப்பியல்பையும் நினைவு செய்கிறார். அத்துடன் அந்தச் சிறப்பியல்புடன் தொடர்ந்து சதா முன்னேறச் செய்கிறார். பாப்தாதா பலவீனங்களைப் பார்க்கவில்லை. ஆனால் ஒரு சமிக்கை கொடுக்கிறார். நீங்கள் மிக நல்லவர்கள், நீங்கள் மிக நல்லவர்கள் எனத் தொடர்ந்து கூறுவதன் மூலம், நீங்கள் நல்லவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் பலவீனமானவர்கள், நீங்கள் பலவீனமானவர்கள் என அவர் கூறினால், நீங்கள் பலவீனம் ஆகிவிடுவீர்கள். நீங்கள் ஏற்கனவே பலவீனமாக இருந்து, யாராவது ஒருவரும் அதையே கூறினால், நீங்கள் மயக்கம் அடைந்துவிடுவீர்கள். ஒருவர் எவ்வளவிற்கு மயக்கமாக இருந்தாலும், மேன்மையான விழிப்புணர்வு, அவர்களின் சிறப்பியல்புகளின் விழிப்புணர்வு என்ற சஞ்சீவனி மூலிகையை அவருக்குக் கொடுத்தால், அவர் மயக்கத்தில் இருந்து எழுந்துவிடுவார். உங்கள் அனைவரிடமும் சஞ்சீவனி மூலிகை இருக்கிறதல்லவா? எனவே, சிறப்பியல்புகளின் கண்ணாடியை அவரின் முன்னால் வையுங்கள். ஏனெனில், ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் சிறப்பானவரே. நீங்கள் பலமில்லியன்களில் கைப்பிடி அளவினர், இல்லையா? ஆகவே, நீங்கள் விசேடமானவர்கள், இல்லையா? அந்த நேரத்தில், சிலர் தமது சிறப்பியல்புகளை மறந்து விடுகிறார்கள், அவ்வளவே. அவற்றை அவர்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் அவர்கள் விசேடமான ஆத்மாக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களின் சிறப்பியல்புகளைப் பற்றி எந்தளவிற்கு அதிகமாகப் பேசுகிறீர்களோ, அந்தளவிற்கு அவர்கள் தமது பலவீனங்களை மிகத் தெளிவாக உணர்வார்கள். அவற்றை அவர்களுக்கு நீங்கள் நினைவூட்ட வேண்டியதில்லை. அவர்களின் பலவீனங்களைப் பற்றி நீங்கள் அவர்களுக்குக் கூறினால், அவர்கள் அதை மறைக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் அதைத் தவிர்ப்பதுடன், நான் அவ்வாறில்லை என்றே சொல்வார்கள். அதற்குப் பதிலாக, அவர்களின் சிறப்பியல்புகளைப் பற்றிச் சொல்லுங்கள். அந்தப் பலவீனங்களை தாங்களே உணரும் வரைக்கும், அவர்கள் அவற்றில் 50 வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருந்தாலும், அவர்களால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, மயக்கம் அடைந்திருப்பவர்களை இந்த சஞ்சீவனி மூலிகையால் எழுப்பி, தொடர்ந்து பறப்பதுடன், மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். இதையே யுகே இலுள்ளவர்கள் செய்கிறார்கள், இல்லையா? அச்சா.

இலண்டனில் இருந்து ஏனைய இடங்களுக்கு எத்தனை பேர் சென்றுள்ளார்கள்? அவர்கள் பாரதத்தில் இருந்தே சென்றுள்ளார்கள். எனினும் இலண்டனில் இருந்து எத்தனை பேர் சென்றுள்ளார்கள்? எத்தனை பேர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்கள்? அவுஸ்திரேலியர்களும் விரிவடைந்துள்ளார்கள். அவர்களும் ஏனைய இடங்களுக்குச் சென்றுள்ளார்கள். ஞான கங்கைகள் எந்தளவிற்கு அதிகமாகப் பாய்கின்றனவோ, அந்தளவிற்கு அது சிறப்பாக இருக்கும். யுகே, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பாவில் எத்தனை நிலையங்கள் உள்ளன? (அனைவரும் தத்தமது இடங்களைப் பற்றிக் கூறினார்கள்.)

விரிவாக்கம் இடம்பெறுகிறது என்பதே இதன் அர்த்தம். வேறு ஏதாவது விசேடமான இடம் தவறவிடப்பட்டுள்ளதா? (பல இடங்கள் இருக்கின்றன) அச்சா, நீங்கள் அவற்றுக்கும் திட்டங்கள் செய்வீர்கள். வெளிநாடுகளில் மிக இலகுவாக நிலையங்களைத் திறக்க முடியும் என்ற உயர்த்தியை அவர்கள் பெற்றுள்ளார்கள். உங்களால் லௌகீகத் தொழிலையும் செய்ய முடியும். அத்துடன் அலௌகீக சேவைக்கான கருவிகளாகவும் ஆக முடியும். பாரதத்தில், அழைப்பின் பேரில் நிலையங்களைத் திறக்கும் சிறப்பியல்பு காணப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளில் நீங்களே ஓர் அழைப்பை உங்களுக்குக் கொடுக்கிறீர்கள். நீங்களே அழைப்பைக் கொடுப்பவர்கள். நீங்களே அங்கும் செல்பவர்கள். ஆகவே, சேவையில் இலகுவான விரிவாக்கத்திற்கு இதுவும் நீங்கள் பெற்றுள்ள ஓர் உயர்த்தியே ஆகும். நீங்கள் எங்கே சென்றாலும், இரண்டு அல்லது மூன்று பேர் அங்கு ஸ்தாபனைக்குக் கருவிகள் ஆகுகிறார்கள். நாடகத்தின்படி அவர்கள் தொடர்ந்து அவ்வாறு ஆகுவார்கள். நீங்கள் பெற்றுள்ள ஒரு பரிசு அல்லது ஓர் உயர்த்தி என எவ்வாறு நீங்கள் அதை அழைத்தாலும், குறுகிய காலத்தில் நீங்கள் சேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். துரித கதி இருந்தால் மட்டுமே இதை நேரத்தில் முடிக்க முடியும். பாரதத்தின் வழிமுறைகளுக்கும் வெளிநாடுகளின் வழிமுறைகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. ஆகவே, வெளிநாடுகளில் விரிவாக்கம் விரைவாக நடைபெறுகிறது. அவ்வாறே தொடர்ந்தும் நடக்கும். ஒரு நாளில் பல நிலையங்களைத் திறக்க முடியும். வெளிநாடுகளில் உள்ள கருவிகளுக்கு சகல திசைகளிலும் சேவை செய்வதற்கான இலகுவான வாய்ப்பு உள்ளது. பாரத மக்களைப் பாருங்கள்! அவர்களுக்கு ஒரு விசா எடுப்பதுகூடக் கடினமாக உள்ளது. எனவே, வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு அங்கிருக்கும் மக்களுக்குச் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, சேவை செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. கடைசியாக வந்து விரைவாகச் செல்லும் வாய்ப்பு இருப்பதைப் போல், விரைவான சேவை செய்வதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆகவே, நீங்கள் பிந்தி வந்துள்ளீர்கள் என்ற முறைப்பாடு இருக்காது. பிந்தி வந்தவர்களுக்கு வேகமாகச் செல்லும் விசேடமான வாய்ப்பு உள்ளது. ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சேவையாளரே. நீங்கள் அனைவரும் சேவையாளர்களா? அல்லது நிலையங்களில் வசிப்பவர்கள் மட்டும் சேவையாளர்களா? நீங்கள் எங்கே இருந்தாலும், சேவை செய்யாமல் உங்களால் ஓய்வெடுக்க முடியாது. சேவையே சௌகரியமான நித்திரை ஆகும். நீங்கள் சௌகரியமாக நித்திரை செய்தால், அதுவே வாழ்க்கை! எனக் கூறப்படுகிறது. சேவை, சௌகரியமான தூக்கம் எனப்படுகிறது. சேவை இல்லாவிட்டால், சௌகரியமான தூக்கமும் இல்லை. சேவை என்பது வெறுமனே வார்த்தைகளால் மட்டும் செய்யப்படுவதல்ல என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு விநாடியிலும் சேவை உள்ளது. ஒவ்வோர் எண்ணத்திலும் சேவை உள்ளது. பாரத வாசிகளோ அல்லது வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களோ, எந்தவொரு பிராமணராலும், தனக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புக் கிடைப்பதில்லை எனக் கூற முடியாது. உங்களுக்கு நோய் ஏற்பட்டாலும், ஒரு சூழலை உருவாக்கி, உங்களின் மனதால் அதிர்வலைகளைப் பரப்பும் சேவையை உங்களால் செய்ய முடியும். நீங்கள் என்ன வகையான சேவையைச் செய்தாலும், சேவையில் மும்முரமாக இருக்க வேண்டும். சேவையே உங்களின் வாழ்க்கை ஆகும். பிராமணர் ஆகுவதென்றால் சேவையாளர் ஆகுதல் என்று அர்த்தம். அச்சா.

சதா பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்களுக்கும், அதனால் அனைவருக்கும் நன்மை செய்பவர்களுக்கும், எப்போதும் தங்களைத் தேவதைகளாக அனுபவம் செய்பவர்களுக்கும், இஷ்ட தெய்வங்களாக உலகிற்கு வெளிப்படுத்தப்படும் விசேடமாக நேசிக்கப்படும் தேவாத்மாக்களுக்கும், தங்களை எப்போதும் விசேடமான ஆத்மாக்களாகக் கருதி, மற்றவர்களுக்கு அவர்களின் சிறப்பியல்புகளின் அனுபவத்தைக் கொடுப்பவர்களுக்கும், விசேடமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா ஒரு குழுவைச் சந்திக்கிறார்:

நீங்கள் எப்போதும் உங்களைக் கர்ம யோகிகளாகக் கருதுகிறீர்களா? கர்மயோகி வாழ்க்கை என்றால், ஒவ்வொரு பணியைச் செய்யும்போதும் சதா நினைவு யாத்திரையில் இருத்தல் என்று அர்த்தம். மேன்மையான தந்தையின் குழந்தைகள் மட்டுமே இந்த மேன்மையான பணியைச் செய்கிறார்கள். அத்துடன் எப்போதும் வெற்றி பெறுகிறார்கள். நீங்கள் அனைவரும் கர்மயோகி ஆத்மாக்கள், இல்லையா? அனைத்தையும் செய்யும்போதும், எப்போதும் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருங்கள். இந்தப் பயிற்சியுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களுக்குப் பொறுப்பாக இருப்பதுடன், உங்கள் அனைவருக்கும் உலகின் பொறுப்பும் உள்ளது. எவ்வாறாயினும், அவை அனைத்தும் பௌதீக வசதிகள். ஒரு கர்மயோகி வாழ்க்கையுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். அத்துடன் தொடர்ந்து மற்றவர்களையும முன்னேறச் செய்யுங்கள். இது ஓர் அதிகபட்ச அன்பான வாழ்க்கை ஆகும். சேவையும் உள்ளது. அத்துடன் சந்தோஷமும் உள்ளது. ஒரே வேளையில் இரண்டும் உங்களிடம் அதிகளவில் உள்ளதல்லவா? இது அனைவருக்கும் பொன்விழா. பொன் என்றால் சதோபிரதான் ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதாகும். ஆகவே, இந்த மேன்மையான ஸ்திதியுடன் உங்களைத் தொடர்ந்து முன்னேறச் செய்யுங்கள். நீங்கள் அனைவரும் மிக நன்றாகச் சேவை செய்தீர்கள், அல்லவா? இப்போது மட்டுமே சேவை செய்வதற்கான வாய்ப்பை நீங்கள் பெறுகிறீர்கள். பின்னர், இந்த வாய்ப்பு முடிந்துவிடும். எனவே, சதா சேவையில் தொடர்ந்து முன்னேறுங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
தந்தையின் பாதுகாப்புக் குடையை அனுபவம் செய்வதன் மூலம், நீங்கள் தடைகளை அழிப்பவர் என்ற பட்டத்தைப் பெற்று, அனுபவத்தின் சொரூபம் ஆகுவீர்களாக.

தந்தை உங்களுடன் இருக்கும்போது, எவராலும் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. அவரின் சகவாசத்தின் அனுபவம் ஒரு பாதுகாப்புக் குடை ஆகுகிறது. பாப்தாதா எப்போதும் குழந்தைகளைப் பாதுகாக்கிறார். பரீட்சைத் தாள்கள் உங்களை அனுபவசாலிகள் ஆக்கவே வருகின்றன. எனவே, உங்களை அடுத்த வகுப்பிற்;கு முன்னேறச் செய்வதற்காகவே அந்தப் பரீட்சை வந்தது என எப்போதும் நினையுங்கள். இதனாலேயே நீங்கள் தடைகளை அழித்தவர் என்ற பட்டத்தையும் எல்லா வேளைக்கும் அனுபவ சொரூபமாக இருக்கும் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள். இப்போது சிலர் சிறிதளவு சத்தமிட்டால் அல்லது தடைகளை உருவாக்கினால், அவர்கள் படிப்படியாகக் குளிர்மை அடைவார்கள்.

சுலோகம்:
தேவைப்படும் நேரத்தில் ஒத்துழைப்பவர்கள், ஒன்றின் பிரதிபலனாகப் பலமில்லியன் மடங்கைப் பெறுவார்கள்.