05.09.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.03.88     Om Shanti     Madhuban


புதிய உலகப்படத்திற்கான அடிப்படை, நிகழ்கால மேன்மையான பிராமண வாழ்க்கையே.


இன்று, உலகைப் படைப்பவரான பாப்தாதா, உலகின் மேன்மையான பாக்கியத்தை உருவாக்கும் ஒரேயொருவர், மேன்மையான பாக்கியத்தின் சித்திரத்தின் சொரூபங்களாக இருக்கும் தனது குழந்தைகளைப் பார்க்கிறார். பிராமண ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் உலகின் மேன்மையான பாக்கியத்தின் சித்திரங்கள் ஆவீர்கள். பிராமண வாழ்க்கையின் ஒவ்வொரு மேன்மையான செயலும் எதிர்கால மேன்மையான பலனின் அனுபவத்தைக் கொடுக்கிறது. பிராமண வாழ்க்கையின் மேன்மையான எண்ணங்கள், எதிர்கால மேன்மையான சம்ஸ்காரங்களை மிகத் தெளிவாக ஆக்குகின்றன. எனவே, நிகழ்கால பிராமண வாழ்க்கையே எதிர்கால பாக்கியசாலி உலகின் சித்திரம் ஆகும். எதிர்காலத்தின் சித்திரமாக விளங்கும் இத்தகைய குழந்தைகளைப் பார்க்கையில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்களே சித்திரம் ஆவீர்கள். அத்துடன் எதிர்காலப் பாக்கியத்தின் ஆதார மூர்த்திகளும் ஆவீர்கள். நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். அப்போது மட்டுமே உலகமும் மேன்மையானது ஆகுகிறது. உங்களிடம் பறக்கும் ஸ்திதி இருக்கும்போது, உலகத்திற்கும் பறக்கும் ஸ்திதி இருக்கும். காலத்திற்குக் காலம், பிராமண ஆத்மாக்களான நீங்கள் பல்வகை ஸ்திதிகளைக் கடந்து செல்வதைப் போல், அதற்கேற்ப உலகத்தின் நிலைகளும் மாறுகின்றன. உங்களின் ஸ்திதி சதோபிரதானாக இருக்கும்போது, உலகமும் சதோபிரதானாக இருந்தது. அதுவே சத்தியயுகம். நீங்கள் மாறும்போது, உலகமும் மாறுகிறது. நீங்களே இந்தளவிற்கு ஆதார மூர்த்திகள் ஆவீர்கள்!

தற்சமயம், நீங்கள் தந்தையுடன் இத்தகைய மேன்மையான பாகங்களை நடிக்கிறீர்கள். கல்பம் முழுவதிலும், இப்போது மட்டுமே நீங்கள் விசேடமான, அதிமேன்மையான பாகங்களை நடிக்கிறீர்கள். நீங்கள் தந்தையுடன் ஒத்துழைப்பவராகி, எல்லா ஆத்மாக்களினதும் எண்ணற்ற பிறவிகளுக்கான ஆசைகளைப் பூர்த்தி செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் தந்தையிடமிருந்து முக்தியையும் ஜீவன்முக்தியையும் பெறுவதற்கான உரிமையைக் கொடுப்பதற்குக் கருவிகள் ஆகுகிறீர்கள். நீங்களே காமதேனு, தந்தையைப் போல் சகல ஆசைகளையும் பூர்த்தி செய்பவர்கள். நீங்களே ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவர்கள். இந்த முறையில், நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் முற்றுமுழுதாக ஆசைகளே அறியாதவர் என்ற ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுக்கிறீர்கள். இதனால், அரைக்கல்பத்திற்கு, பக்தி செய்கின்ற ஆத்மாக்களுக்கோ அல்லது ஜீவன்முக்தி ஸ்திதியை அடையும் ஆத்மாக்களுக்கோ ஒவ்வொரு பிறவியிலும் எந்தவிதமான ஆசைகளும் இருக்காது. நீங்கள் ஒரு பிறவிக்கான ஆசைகளை மட்டும் நிறைவேற்றுவதில்லை. ஆனால், எண்ணற்ற பிறவிகளுக்கு ஆசைகளே அறியாத ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுக்கிறீர்கள். தந்தையின் பொக்கிஷக்களஞ்சியங்களும் பொக்கிஷங்களும் எப்போதும் நிரம்பி வழிவதைப் போல், அதில் எதையும் அடையவில்லை என்று குறிப்பிடுவதோ அல்லது அடையாளமோ இல்லாததைப் போல், நீங்கள் எப்போதும் தந்தையைப் போல் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பி வழிகிறீர்கள்.

பிராமண ஆத்மா என்றால், சகல பேறுகளின் சொரூபமாக இருப்பவர், அனைத்தையும் நிறைவேற்றும் ஓர் ஆத்மா என்று அர்த்தம். தந்தை எப்போதும் வெளிச்சவீடாகவும் சக்தி வீடாகவும் இருப்பதைப் போன்று, பிராமண ஆத்மாக்கள் தந்தைக்குச் சமமானவர்கள். நீங்களும் வெளிச்சவீடுகள் ஆவீர்கள். இதனாலேயே, ஆத்மாக்கள் எல்லோரும் தமது இலக்கை அடையச் செய்வதற்கு நீங்கள் கருவிகள் ஆகுகிறீர்கள். தந்தை எப்போதும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு செயலிலும் அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் இருப்பதைப் போல், பிராமண ஆத்மாக்களான நீங்களும் அருள்பவர்களும் மாஸ்ரர் ஆசீர்வாதங்களை அருள்பவர்களும் ஆவீர்கள். உங்களின் பிராமண வாழ்க்கையின் சித்திரம் இவ்வாறு இருக்கிறதா? நீங்கள் ஏதாவதொன்றின் சித்திரத்தை வரையும்போதெல்லாம், அதன் சிறப்பியல்புகள் அனைத்தையும் நீங்கள் அதில் காட்டுகிறீர்கள்தானே? அதேபோல், நீங்கள் நிகழ்கால பிராமண வாழ்க்கையின் சித்திரத்தின் சிறப்பியல்புகளால் உங்களை நிரப்பிவிட்டீர்களா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்தச் சித்திரத்தை வரைகின்ற, மகத்தான ஓவியர்கள் ஆவீர்கள். உங்களின் சித்திரத்தை வரைவதைப் போல், உலகின் சித்திரமும் அதே வேளையில் வரையப்படுகிறது. இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?

புதிய உலகில் என்ன இருக்கும் எனச் சிலர் கேட்கிறார்கள். நீங்கள் புதிய உலகின் சித்திரம் ஆவீர்கள். உங்களின் வாழ்க்கைகளினூடாக எதிர்காலம் தெளிவாகிக் கொண்டிருக்கிறது. உங்களின் நிகழ்காலச் சித்திரத்தைப் பார்த்துச் சோதியுங்கள்: உங்களின் சித்திரத்தைப் பார்ப்பவர்கள், எல்லா வேளைக்கும் திருப்தி அடையும் வகையில் உங்களின் சித்திரம் வரையப்பட்டுள்ளதா? உங்களின் சித்திரத்தைப் பார்த்ததும், சிறிதளவு அமைதியின்மையின் அலையைக் கொண்டிருப்பவர்களும் அமைதியின்மையை மறந்து, அமைதி அலைகளை அனுபவம் செய்ய வேண்டும். பேறுகளற்ற சொரூபமாக இருக்கும் ஓர் ஆத்மா, இயல்பாகவே பேறுகளை அனுபவம் செய்ய வேண்டும். பிச்சைக்காரராக வருகின்ற ஒருவர் தன்னை நிரப்பிக் கொண்டு செல்ல வேண்டும். உங்களின் புன்னகை முகத்தைப் பார்த்து, அவர்கள் தமது மனங்களிலும் கண்களிலும் உள்ள கண்ணீரை மறந்து, புன்னகைப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். தந்தையிடம், அவர் எவ்வாறு புன்னகைப்பது என உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என நீங்கள் கூறுகிறீர்கள்தானே? ஆகவே, உங்களின் கடமையும் அவர்கள் அழுவதை நிறுத்தி, அவர்களுக்கு எவ்வாறு புன்னகைப்பது எனக் கற்றுக் கொடுப்பதேயாகும். பிராமண வாழ்க்கை என்பது இத்தகையதொரு சித்திரம் ஆகும். நாங்கள் ஆதார மூர்த்திகள், அத்திவாரங்கள் என்ற விழிப்புணர்வை எப்போதும் கொண்டிருங்கள். மரத்தின் படத்தைப் பாருங்கள். பிராமணர்கள் எங்கே அமர்ந்திருக்கிறார்கள்? அவர்கள் அத்திவாரத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள், இல்லையா? பிராமண அத்திவாரம் மிகவும் பலமானது. இதனாலேயே, அரைக்கல்பத்திற்கு நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் சாதாரணமான ஆத்மாக்கள் இல்லை. நீங்கள் ஆதார மூர்த்திகள், அத்திவாரங்கள் ஆவீர்கள்.

நிகழ்காலத்தில் உங்களின் முழுமையான ரூபமே, சத்தியயுகத்தில் 16 சுவர்க்கக் கலைகளைக் கொண்ட உங்களின் ஸ்திதிக்கான அடிப்படையாகும். நிகழ்காலத்தின் ஓர் அறிவுறுத்தல், அங்கு ஓர் இராச்சியத்தின் ஆதாரத்தின் அடிப்படையாக இருக்கிறது. நிகழ்காலத்தின் ஞானம், நற்குணங்கள், சக்திகளின் சகல பொக்கிஷங்களும் நிறைந்திருப்பதே, அங்கு நிறைந்திருப்பதற்கு அடிப்படை ஆகுகிறது. தற்சமயம், சரீரக் கவர்ச்சியில் இருந்து விடுபட்டிருத்தல், அங்கு ஆரோக்கியமான சரீரத்தைப் பெறுவதற்கு அடித்தளம் ஆகுகிறது. இப்போது சரீரமற்றவராக இருக்கும் ஸ்திதி, நோயிலிருந்து விடுபட்டிருப்பதுடன் நீண்ட ஆயுளைப் பெறுவதற்கும் அடித்தளம் ஆகுகிறது. இங்கு கவலையற்ற சக்கரவர்;த்தியாக இருக்கும் வாழ்க்கை, வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியானதாக இருக்கும் ஸ்திதியை அடைவதற்கு அடிப்படை ஆகுகிறது. அது மனதின் மகிழ்ச்சியாகும். வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் நிலையான, அசைக்க முடியாத, ஆன்மீக முயற்சி, நிலையான, எல்லையற்ற, முடிவற்ற, தடைகளில் இருந்து விடுபட்ட வசதிகளைப் பெறுவதற்கு அடித்தளம் ஆகுகிறது. தற்சமயம் உள்ள பாப்தாதாவின் சிறிய குடும்பம், அதாவது, தாயும் தந்தையும், சகோதர சகோதரிகளும் என்ற இந்தச் சிறிய குடும்பம் அங்கு சிறியதொரு குடும்பத்திற்கு அடித்தளம் ஆகுகிறது. இங்கு ஒரேயொரு தாயுடனும் தந்தையுடனும் இருக்கும் உறவுமுறையின் சம்ஸ்காரம், எதிர்கால இராச்சியத்தின் உலகச் சக்கரவர்த்தியையும் உலகச் சக்கரவர்த்தினியையும் தாயும் தந்தையுமாக உணரச் செய்கிறது. இங்கு, அன்பு நிறைந்த குடும்பத்தின் உறவுமுறை உள்ளது. அங்கு, ஒருவர் அரசரோ அல்லது பிரஜையோ, ஒரு பிரஜையும் தன்னை அந்தக் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே கருதுவார். குடும்பத்திற்குள், அன்பின் நெருக்கம் காணப்படும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அந்தஸ்து கிடைத்தாலும், அது அன்பான அந்தஸ்தாகவே இருக்கும். அங்கு தயக்கமோ அல்லது பயமோ இருக்காது. எனவே, நீங்களே எதிர்காலத்தின் சித்திரம் ஆவீர்கள், இல்லையா? உங்களின் சித்திரத்தில் இந்த விடயங்கள் எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள். எந்தளவிற்கு மேன்மையான சித்திரம் தயாராக உள்ளது? அல்லது, நீங்கள் இன்னமும் கோடுகளையே வரைந்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் புத்திசாலி ஓவியர்கள்தானே?

நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்கு உங்களின் சித்திரத்தைப் பூர்த்தி செய்துள்ளீர்கள் என பாப்தாதா தொடர்ந்து பார்க்கிறார். உங்களால் எவரைப் பற்றியும் முறைப்பாடு செய்ய முடியாது - அவர் இதைச் சரியாக வரையவில்லை, இதனாலேயே அது இவ்வாறு உள்ளது. நீங்கள் உங்களின் சொந்தச் சித்திரத்தை வரைய வேண்டும். நீங்கள் பாப்தாதாவிடமிருந்து அதற்குத் தேவையான பொருட்களையும் பெறுகிறீர்கள். அவற்றில் எந்தவிதக் குறைவும் இல்லையல்லவா? இங்கும், பொருட்களை வாங்கி, அவற்றைக் கட்டடத்திற்காகப் பயன்படுத்தும் விளையாட்டை நீங்கள் கற்பிக்கிறீர்கள். அதைக் கட்டுபவரிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. அவரால் தான் விரும்பிய அளவை எடுத்துக் கொள்ள முடியும். அதை எடுப்பவரால் எவ்வளவற்றை எடுத்துக் கொள்ள முடிகிறது என்பதிலேயே அது தங்கியுள்ளது. இது ஒரு திறந்த சந்தை. நீங்கள் இரண்டு அல்லது நான்கை எடுக்கிறீர்களா என பாப்தாதா கணக்கிடுவதில்லை. எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் அதி அழகான சித்திரத்தை வரைந்துள்ளீர்கள்தானே? நீங்களே எதிர்காலப் பாக்கியத்தின் சித்திரம் என எப்போதும் நினையுங்கள். இந்த விழிப்புணர்வுடன் ஒவ்வோர் அடியையும் எடுத்து வையுங்கள். நீங்கள் அன்பாக இருப்பதனால், ஒத்துழைப்பவராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் ஒத்துழைப்பவராக இருப்பதனால், ஒவ்வோர் ஆத்மாவும் தந்தையின் ஒத்துழைப்பைப் பெறுகிறார்கள். சில ஆத்மாக்களுக்கு அதிகளவு ஒத்துழைப்பும் ஏனையோருக்குக் குறைந்தளவு ஒத்துழைப்பும் கிடைக்கும் என்பதல்ல. இல்லை. ஒன்றிற்குப் பதிலாக, பாப்தாதா ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒத்துழைப்பிற்கான பலமில்லியன் மடங்கு வெகுமதியைக் கொடுக்கிறார். ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் எல்லோரும் எப்போதும் தந்தையின் ஒத்துழைப்பைப் பெறுகிறார்கள். அவர் இங்கே இருக்கும்போது அவர்கள் தொடர்ந்து அதைப் பெறுவார்கள். உங்களுக்குத் தந்தையின் ஒத்துழைப்பு இருக்கும்போது, ஒவ்வொரு பணியும் ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள். தொடர்ந்து முன்னேறும்போது இதைத் தொடர்ந்து அனுபவம் செய்கிறீர்கள். எதுவும் கஷ்டம் என்றில்லை. ஏனென்றால், பாக்கியத்தை அருள்பவரிடமிருந்து நீங்கள் பெற்ற பாக்கியமே, உங்களின் பேறுகளின் அடிப்படையாகும். எங்கு பாக்கியமும் ஆசீர்வாதங்களும் உள்ளதோ, அங்கு எதுவும் கஷ்டமாக இருக்காது.

மிக நல்ல சித்திரத்தை வரைந்திருப்பவர்கள், நிச்சயமாக முதலாம் இலக்கத்தைப் பெறுவார்கள். எனவே, நீங்கள் எல்லோரும் முதல் பிரிவின் பாகம் ஆகப் போகின்றவர்கள்தானே? ஒரேயொரு முதலாம் இலக்கமே இருக்கும். ஆனால், பலர் முதல் பிரிவில் இருப்பார்கள், இல்லையா? எனவே, நீங்கள் எதில் வரப் போகின்றீர்கள்? முதல் பிரிவு அனைவருக்குமானது. ஏதாவதொன்றைச் செய்து அதைப் பெறுவது நல்லதே. பாப்தாதா அவர்கள் பாரதவாசிகளோ அல்லது இரட்டை வெளிநாட்டவர்களோ, எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கிறார். ஏனென்றால், இன்னமும் பெறுபேறு வெளிவரவில்லை. சிலவேளைகளில், பெறுபேறு வெளியாகுதவற்கு முன்னர், நல்லவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள். எனவே, உங்களால் அவர்களின் இடங்களைப் பெற்றுக் கொள்ள முடியும், இல்லையா? இதனாலேயே, நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்வதற்கு உங்களுக்கு இன்னமும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர், எந்தவோர் இடமும் இல்லை, ஆசனங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்ற பலகை போடப்பட்டுவிடும். ஆகவே, மிக உயரத்தில் பறந்திடுங்கள். ஓடாதீர்கள், பறந்திடுங்கள். ஓடுபவர்கள் கீழே கைவிடப்பட்டு விடுவார்கள். ஆனால் பறப்பவர்கள், உயரே செல்வார்கள். ஆகவே, நீங்களும் பறப்பதுடன், மற்றவர்களையும் பறப்பதற்குத் தூண்டுங்கள். அச்சா.

நானா திசைகளிலும் உள்ள, மேன்மையான பாக்கியத்தைக் கொண்ட மேன்மையான சித்திரமான மகாத்மாக்கள் அனைவருக்கும், சதா தங்களை உலகின் ஆதார மூர்த்திகளாகக் கருதுபவர்களுக்கும், பேறுகளின் சொரூபமாக இருக்கும் தமது சொந்த அனுபவத்தினூடாக சதா மற்றவர்களுக்கு பேறுகளின் சொரூபமாக இருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், தேவாத்மாக்கள் ஆகப் போகும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த பிராமணர்களுக்கும், தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு அன்பையும் ஒத்துழைப்பையும் பெறும் உரிமையுடையவர்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

தனிப்பட்ட குழுச் சந்திப்பு:

தந்தையின் கரம் சதா உங்களின் தலைமீது இருப்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? மேன்மையான வழிகாட்டல்களே மேன்மையான கரம் ஆகும். எனவே, ஒவ்வோர் அடியிலும் தந்தையின் கரம் உங்கள் மீதிருக்கும்போது, அதாவது, நீங்கள் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றும்போது, அந்த மேன்மையான வழிகாட்டல்களால், இயல்பாகவே மேன்மையான பணிகள் இடம்பெறும். சதா கரத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், சக்திசாலியாகித் தொடர்ந்து முன்னேறுங்கள். தந்தையின் கரம், எப்போதும் இலகுவாகவும் முன்னேறுவதற்கான அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். ஆகவே, இந்த மேன்மையான பாக்கியத்தின் விழிப்புணர்வை ஒவ்வொரு பணியிலும் உங்களுடன் வைத்திருந்து, தொடர்ந்து முன்னேறுங்கள். சதா உங்கள் மீது கரம் உள்ளது. அத்துடன் நீங்கள் சதா வெற்றி பெறுகிறீர்கள்.

கேள்வி: சதா இலகு யோகி ஆகுவதற்கான இலகுவான வழிமுறை என்ன?

பதில்: தந்தையே எனது உலகம். இந்த விழிப்புணர்வை வைத்திருங்கள். நீங்கள் இலகுயோகி ஆகுவீர்கள். ஏனென்றால், நாள் முழுவதும், உங்களின் புத்தியானது உலகை நோக்கி இழுபடும். தந்தை உங்களின் உலகமாக இருக்கும்போது, உங்களின் புத்தி எங்கே செல்லும்? அது அந்த உலகிற்கே செல்லும். அது காட்டிற்குள் செல்லாது. ஆகவே, தந்தையே உங்களின் உலகமாக இருப்பதனால், நீங்கள் இலகுயோகி ஆகுவீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் இங்கிருந்து உங்களின் புத்தியை நீக்கி, அங்கே இணைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கும். எப்போதும் தந்தையின் அன்பில் திளைத்திருங்கள். அவரை மறக்கவே முடியாது. அச்சா.

அவ்யக்த பாப்தாதா இரட்டை வெளிநாட்டுச் சகோதர, சகோதரிகளைச் சந்திக்கிறார்.

இரட்டை வெளிநாட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கான மிக நல்ல உற்சாகம் உள்ளது. இதனாலேயே, நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள். வெளிநாடுகள் 14 வருடங்களில் சேவையில் மிக நன்றாக முன்னேறியுள்ளன. நீங்கள் லௌகீக மற்றும் அலௌகீக இரட்டைச் சேவை செய்து கொண்டே முன்னேறுகிறீர்கள். நீங்கள் உங்களின் நேரத்தை இரட்டைப் பணிக்காகப் பயன்படுத்துகிறீர்கள். அத்துடன் உங்களின் புத்தியையும் பௌதீக சக்தியையும் பயன்படுத்துகிறீர்கள். இதுவும் புத்தியின் அற்புதமேயாகும். உங்களின் லௌகீகப் பணியைச் செய்தவண்ணம் சேவையில் முன்னேறுவதென்பது தைரியமான ஒரு செயலாகும். இத்தகைய தைரியசாலிக் குழந்தைகளுக்கு பாப்தாதா எப்போதும் ஒவ்வொரு பணியிலும் உதவி செய்கிறார். உங்களுக்குள் எந்தளவிற்கு அதிக தைரியம் உள்ளதோ, அதற்கேற்ப நீங்கள் தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், உங்களின் இரண்டு பாகங்களையும் நடித்தவண்ணம் நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள். குழந்தைகளில் இதைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் மாயையில் இருந்து விடுபட்டிருக்கிறீர்கள்தானே? நீங்கள் யோகியுக்த் ஆகும்போது, இயல்பாகவே மாயையில் இருந்து விடுபட்டிருப்பீர்கள். நீங்கள் யோகியுக்த் இல்லாவிட்டால், மாயையிடம் இருந்து விடுபட்டிருக்க மாட்டீர்கள். மாயையும் பிராமண ஆத்மாக்களை விரும்புகிறாள். பலசாலிகளாக இருப்பவர்கள், தங்களைப் போன்றே பலசாலிகளாக இருக்கும் மற்றவர்களை விரும்புவார்கள். மாயை சக்திசாலி ஆவாள். நீங்களும் சக்திசாலிகளே. எனவே, மாயையும் சக்திசாலிகளுடன் விளையாட விரும்புகிறாள். இப்போது உங்களுக்கு மாயையை மிக நன்றாகத் தெரியும். அவள் எவ்வாறு சிலவேளைகளில் புதிய வடிவங்களில் வருகிறாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஞானம் நிறைந்தவர் என்றால், தந்தையையும் படைப்பையும் அதேவேளை மாயையும் அறிந்திருப்பதாகும். உங்களுக்குப் படைப்பவரையும் படைப்பையும் பற்றித் தெரிந்து, மாயையைப் பற்றித் தெரியாவிட்டால், உங்களால் ஞானம் நிறைந்தவர் ஆகமுடியாது.

எந்த நேரத்திலும், எந்தவொரு சூழ்நிலையிலும், உங்களின் சரீரம் பலவீனமாக இருந்தாலும் அல்லது உங்களின் பணியில் பெரும் சுமை இருந்தாலும், உங்களின் மனதில் களைப்படையாதீர்கள். சரீரத்தின் களைப்பை, மனதின் சந்தோஷத்தால் முடிக்க முடியும். எவ்வாறாயினும், மனதின் களைப்பானது, சரீரத்தின் களைப்பை மேலும் அதிகரிக்கும். ஒருபோதும் உங்களின் மனதைக் களைப்படைய அனுமதிக்காதீர்கள். நீங்கள் களைப்படைந்ததும், ஒரு விநாடியில் தந்தையின் உலகிற்கு வாருங்கள். உங்களின் மனம் களைப்படைவது உங்களின் பழக்கமாக இருந்தால், பிராமண வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உங்களால் அனுபவம் செய்ய முடியாதிருக்கும். நீங்கள் முன்னேறுகிறீர்கள். ஆனால், அனைவரையும் அசையச் செய்யும் ஒரேயொருவர், உங்களையும் அசையச் செய்கிறார் என்பதை நீங்கள் அனுபவம் செய்ய மாட்டீர்கள். நீங்கள் அதிகளவு கடின உழைப்புடன் முன்னேறுவதைப் போன்றே அது இருக்கும். நீங்கள் கடினமாக உழைக்கும்போது, களைப்பு ஏற்படும். எனவே, எப்போதும் நினையுங்கள்: கரவன்ஹார் என்னைச் செயல்பட வைக்கிறார். அனைவரையும் அசையச் செய்யும் ஒரேயொருவர் என்னையும் அசையச் செய்கிறார்.

உங்களின் காலம், சக்தி என்பவற்றுக்கேற்ப தொடர்ந்து சேவை செய்யுங்கள். சேவை ஒருபோதும் காத்திருக்காது - இன்றில்லாவிட்டால், நாளை அது நிகழும். உங்களால் முடிந்தளவு சேவையை உங்களின் இதயபூர்வமாகவும் இதயத்தின் அன்புடனும் நீங்கள் செய்தால், பாப்தாதா ஒருபோதும், நீங்கள் இந்தளவே செய்தீர்கள், அந்தளவைச் செய்யவில்லை என முறைப்பாடு செய்ய மாட்டார். உங்களுக்கு சபாஷ்! என்ற பாராட்டுக் கிடைக்கும். உண்மையான இதயத்துடன் காலத்திற்கேற்பவும் உங்களின் சக்திக்கேற்பவும் நீங்கள் சேவை செய்தால், பிரபு நேர்மையான இதயத்தை இட்டு மகிழ்ச்சி அடைகிறார். உங்களிடம் எந்தளவு பணி எஞ்சியுள்ளதோ, பாப்தாதா எப்படியாவது அதை நிறைவேற்றி விடுவார். குறிப்பிட்ட நேரத்தில் என்ன சேவை இடம்பெற வேண்டுமோ, அது நிச்சயமாக இடம்பெறும். அது நிகழாமல் விடாது. பாப்தாதா ஏதாவதோர் ஆத்மாவைத் தொட்டு, அந்த ஆத்மாவைத் தனது குழந்தைகளுடன் ஒத்துழைக்கச் செய்வார். யோகி குழந்தைகள் பொருத்தமான நேரத்தில் சகல வகையான ஒத்துழைப்பையும் பெறுகிறார்கள். ஆனால், யார் ஒத்துழைப்பைப் பெறுவார்கள்? உண்மையான இதயத்தைக் கொண்டுள்ள உண்மையான சேவையாளர் ஆத்மாக்களே. எனவே, நீங்கள் எல்லோரும் சேவையாளர்களா? பிரபு எங்கள்மீது மகிழ்ச்சியுடன் இருக்கிறார் - நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள்தானே? அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொரு தந்தையின் அன்பில் அமிழ்ந்திருந்து, சதா ஏறுகின்ற ஸ்திதியை அனுபவம் செய்வதுடன், வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

சேவையில் வெற்றி பெறுவதற்கும், உங்களின் ஸ்திதி உயர்வதற்குமான பிரதானமான அடிப்படை, தந்தையின் மீதுள்ள துண்டிக்காத அன்பாகும். ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எதையும் பார்க்க உங்களை அனுமதிக்காதீர்கள்: பாபாவே உங்களின் எண்ணங்களில் இருக்கிறார். பாபாவே உங்களின் வார்த்தைகளில் இருக்கிறார். உங்களின் செயல்களிலும் பாபாவின் சகவாசமே உள்ளது. அன்பிலே அமிழ்ந்திருக்கும் ஆத்மா ஒரு வார்த்தை பேசினாலும், அந்த அன்பான வார்த்தைகள் ஏனைய ஆத்மாக்களையும் அன்பு பந்தனத்தில் கட்டிவிடும். அன்பிலே அமிழ்ந்திருக்கும் இத்தகைய ஆத்மாக்களில் இருந்து வெளிப்படும் பாபா என்ற ஒரு வார்த்தை, மாயாஜாலத்தைப் போல் செயல்படும். அவர்கள் ஆன்மீக மந்திரவாதிகள் ஆகிவிடுவார்கள்.

சுலோகம்:
யோகி ஆத்மா என்பவர் அகநோக்கிலும் ஒளி மற்றும் சக்தி ரூபத்தில் ஸ்திரமாகவும் இருப்பவர் ஆவார்.