05.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, உங்கள் சரீரத்தில் இருந்து நீங்கள் வேறுபட்ட ஓர் ஆத்மா என்ற அனுபவத்தை பயிற்சி செய்யுங்கள். இதுவே மரணித்து வாழ்வது எனப்படும்.

கேள்வி:
ஏகாந்தம் என்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் ஏகாந்தத்தில் அமர்ந்திருக்கும் போது, எதனை அனுபவம் செய்யவேண்டும்?

பதில்:
ஒரேயொருவரின் நினைவிலிருந்து, சரீரம் அற்றிருத்தலே ஏகாந்தம் (ஒருவரின் அன்பில் மூழ்கியிருத்தல்) என்பதன் அர்த்தமாகும். அதாவது ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து ஆத்மாவாகிய நான், இந்தச் சரீரத்தை நீக்கிவிட்டு, தந்தையிடம் செல்கிறேன் என்ற அனுபவத்தைப் பெறுதலே இதன் அர்த்தமாகும். வேறு எவரையும் நினைவு செய்யக் கூடாது. நீங்கள் அங்கு அமர்ந்திருக்கும் போது, சரீரமற்றவர் ஆகுங்கள். அதாவது உங்கள் சரீரத்தில் இருக்கையில், நீங்கள் மரணித்துள்ளதைப் போன்றிருக்க வேண்டும். ஆத்மாவாகிய நான் சிவபாபாவின் ஒரு குழந்தையாவேன். அவ்வளவே! இதனைப் பயிற்சி செய்வதனால், உங்கள் சரீர உணர்வு தொடர்ந்தும் துண்டிக்கப்படும்.

ஓம் சாந்தி.
தந்தை, எல்லாவற்றிற்கும் முதலில், குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும், இனிமையான குழந்தைகளே, இங்கு நினைவில் அமர்ந்திருக்கும் போது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தொடர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தி வேறு எங்கும் ஈர்க்கப்படக் கூடாது. நீங்கள் ஆத்மாக்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாவாகிய நான், இந்தச் சரீரத்தின் மூலம் ஒரு பாகத்தை நடிக்கின்றேன். ஆத்மா அழிவற்றவரும், சரீPரம் அழியக்கூடியதும் ஆகும். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள், ஆத்ம உணர்வுள்ளவர்களாகி, தந்தையின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நான் ஓர் ஆத்மா, இந்த அங்கங்களைச் செயல்படுத்துவதும் நிறுத்துவதும் என்னைப் பொறுத்ததாகும். உங்கள் சரீரத்தில் இருந்து நீங்கள் வேறுபட்டவர் என நீங்கள் கருத வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மா எனக் கருதுங்கள். தொடர்ந்தும் உங்கள் சரீரத்தை மறந்து விடுங்கள். ஆத்மாவாகிய நான் சுதந்திரமானவன். நான் வேறு எவரையுமன்றி ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்ய வேண்டும். நான் வாழும் வரை மரணித்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது ஆத்மாக்களாகிய எங்களின் யோகம் தந்தையுடனாகும். நான் எனது வீட்டுக்கும், உலகத்திற்கும் மரணித்துள்ளேன். நீங்கள் மரணிக்கும் பொழுது, உலகம் உங்களுக்கு மரணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் மரணித்து வாழவேண்டும். ஆத்மாவாகிய நான், சிவபாபாவின் குழந்தையாவேன். தொடர்ந்தும் சரீர உணர்வை மறந்து விடுங்கள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவு செய்யுங்கள். சரீர உணர்வை மறந்து விடுங்கள். இது ஒரு பழைய சரீரம். அப்படியல்லவா? பழைய பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. உங்களை சரீரமற்றவர்களாகக் கருதுங்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவு செய்தவாறு, அவரிடம் செல்ல வேண்டும். இதனைச் செய்வதினால், நீங்கள் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே, ஏன் நீங்கள் இந்தப் பழைய உலகினை நினைவு செய்ய வேண்டும்? ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து உங்களுக்காக முயற்சி செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில், சிறிய குகைகளில் அமர்ந்திருந்து மாலையின் மணிகளை உருட்டி வழிபாடு செய்கின்றார்கள். நீங்களும் ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து இதனை முயற்சி செய்தால், நீங்கள் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் வாய் மூலம் எதனையும் கூறத் தேவையில்லை. இங்கே இது ஒரு புத்திக்குரிய விடயமாகும். சிவபாபா ஒருவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் முயற்சி செய்ய வேண்டியதில்லை. இந்த பாபாவே முயற்சி செய்கின்றார். பின்னர் அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். முடிந்தளவிற்கு அமர்ந்திருந்து இந்த முறையில் ஞானத்தைக் கடையுங்கள். இப்போது நாங்கள் எங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். இந்தச் சரீரங்கள் இங்கேயே துறக்கப்பட வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, உங்கள் ஆயுட்காலம் நீடிக்கும். நீங்கள் இதனைத் தொடர்ந்தும் உள்ளார்ந்தமாகச் சிந்திக்க வேண்டும். நீங்கள் சத்தமிட்டு எதனையும் கூறத் தேவையில்லை. பக்தி மார்க்கத்தில், சிலர் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்கிறார்கள். இன்னும் சிலர் சிவனை நினைவு செய்கிறார்கள். ஆனால் அந்த நினைவு சரியானதல்ல, அவர்களுக்குத் தந்தையின் அறிமுகம் கிடைக்காதபோது, அவர்கள் எவ்வாறு அவரைச் சரியாக நினைவு செய்வார்கள்? இப்போது உங்களுக்குத் தந்தையின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதிகாலையில் விழித்தெழுந்து, ஏகாந்தத்திலிருந்து இவ்வாறாக உங்களுடன் தொடர்ந்தும் பேசுங்கள். ஞானக்கடலைக் கடைந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா, உண்மையில் நான் இப்போது உங்கள் மடிக்கு வர இருக்கிறேன். அது ஆன்மீக மடியாகும். ஆகவே இந்த முறையில் உங்களுடன் பேசுங்கள். பாபா வந்து விட்டார். ஒவ்வொரு சக்கரத்திலும் பாபா வந்து எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதுடன், சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவராக வேண்டும். முழுச்சக்கரத்தின் ஞானமும் தந்தையிடமே உள்ளது. இப்போது அவர் அதனை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் உங்களை முக்காலங்களையும் அறிந்தவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் முக்காலங்களையும், அதாவது ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். தந்தை பரமாத்மா ஆவார். அவருக்கு தனக்கெனச் சொந்தச் சரீரம் இல்லை. அவர் இப்போது இந்தச் சரீரத்தில் அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது ஓர் அதிசயமான விடயமாகும். அவர் இந்த அதிர்ஷ்ட ரதத்தில் பிரவேசிக்கும் வரை நிச்சயமாக மற்றுமோர் ஆத்மா அதில் இருந்திருக்க வேண்டும். இது அவருடைய பல பிறவிகளின் கடைசிப் பிறவியாகும். இவரே, முதலாவது இலக்கத் தூய ஆத்மாவாகவிருந்து, பின்னர், முதல் இலக்கத் தூய்மையற்றவர் ஆகியவரும் ஆவார். அவர் தன்னைக் கடவுள் என்றோ அல்லது விஷ்ணு போன்றவர் என்றோ அழைப்பதில்லை. இங்கு தூய்மையான ஆத்மா ஒருவரேனும் இல்லை. அனைவருமே தூய்மையற்றவர்கள். எனவே, பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இந்த முறையில் ஞானத்தைக் கடைந்தால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். இதற்கு ஏகாந்தம் நிச்சயமாகத் தேவையாகும். ஒரேயொருவரின் நினைவில் இருப்பதனால் சரீரம் அற்றுப் போகின்றது. இதுவே ஏகாந்தம் எனப்படுகின்றது. பின்னர் இந்தச்சரீரம் துறக்கப்படும். சந்நியாசிகள் பிரம்மாந்தத்தின் அல்லது பஞ்;சதத்துவங்களின் நினைவில் இருக்கும்போது, அந்த நினைவுடனேயே அவர்கள் சரீரம் என்ற உணர்வைத் துறக்கின்றார்கள். பிரம்ம தத்துவத்துடன் கலப்பதே அவர்களுடைய ஒரே நோக்கமாகும். அவர்கள் அந்த விழிப்புணர்வில் மாத்திரமே அமர்ந்திருக்கின்றார்கள். அந்தத் தபஸ்யாவில் அமர்ந்திருக்கும் போது, அவர்கள் தங்கள் சரீரங்களைத் துறக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் பெருமளவில் அலைந்து திரிகின்றார்கள். இங்கு அலைந்து திரிதல் என்ற கேள்வி இல்லை. நீங்கள் நினைவில் மாத்திரம் நிலைத்திருக்க வேண்டும். இறுதி நேரத்தில், வேறு எவருமே நினைவு செய்யப் படக்கூடாது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும் போதே, இதனைப் பயிற்சி செய்வதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒரு மாணவன் தனது கல்வியில் பெருமளவு ஆர்வத்தைக் கொண்டிருப்பார். இதுவும் ஒரு கல்வியே. நீங்கள் உங்களை ஓர் ஆத்மா எனக் கருதாதுவிடில், தந்தையையும், ஆசிரியரையும், குருவையும் மறந்து விடுவீர்கள். ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து இவ்வாறு ஞானத்தைக் கடையுங்கள். மும்முரமாக இருக்கும் குடும்பத்தில் உள்ள அதிர்வுகள் அவ்வளவு நல்லதல்ல. அதற்குப் பதிலாக வேறு ஏதாவது ஒழுங்குகளைச் செய்து, முடிந்தளவில் ஒரு சிறிய அறையில் ஏகாந்தத்தில் அமர்ந்திருங்கள். குழந்தைகள் பாடசாலைக்குச் சென்றதும் தாய்மார்களுக்குப் பகலில் நேரம் இருக்கும். நேரம் கிடைக்கும் போது தொடர்ந்தும் இதனைப் பயிற்சி செய்யுங்கள். உங்களிடம் ஒரு வீடு மாத்திரமே உள்ளது. ஆனால் தந்தையிடம் பல கடைகள் இருப்பதுடன் அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்தும் வளர்கின்றன. மக்கள் தங்கள் வியாபாரம் போன்றவற்றால் கவலைப்பட்டு, அதனால் நித்திரையை இழக்கின்றார்கள். இதுவும் ஒரு வியாபாரமேயாகும். பாபா மிகப் பெரிய பங்குத்தரகர் ஆவார். அவர் அதிகளவில் பரிமாற்றம் செய்கிறார். அவர் உங்கள் பழைய சரீரங்கள் போன்றவற்றைப் புதிதாக மாற்றுகின்றார். அவர் அனைவருக்கும் பாதையைக் காட்டுகிறார். அவர் இந்த வியாபாரத்தைச் செய்ய வேண்டும். இந்த வியாபாரம் மிகவும் பெரியது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் மாத்திரமே கவனமாக இருப்பார்கள். பாபா இந்த வியாபாரத்தைப் பயிற்சி செய்த பின்னர், உங்களையும் அவ்வாறு செய்யுமாறு கூறுகின்றார். தந்தையின் நினைவில் நீங்கள் நீண்ட நேரம் இருந்தால், நீங்கள் நீண்ட நேரம் விழித்திருப்பீர்கள். ஒரு வருமானத்தை சம்பாதிக்கும்போது ஆத்மா களிப்படைகின்றார். மக்கள் பணம் சம்பாதிப்பதற்கு இரவில் விழித்திருப்பார்கள். விஷேச காலங்களில் தங்கள் கடைகளை முழு இரவும் திறந்து வைத்திருப்பார்கள். நீங்கள் மிகவும் நல்ல வருமானத்தை இரவிலும், அதிகாலையிலும் சம்பாதிப்பீர்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவராகவும், முக்காலத்தை அறிந்தவர்களாகவும் ஆகுவீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான செல்வத்தைச் சேகரிக்கின்றீர்கள். மக்கள் செல்வந்தர்களாகுவதற்கு முயற்சி செய்கின்றார்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் பலத்தையும் பெறுவீர்கள். உங்கள் தலையில் பெருமளவு பாவச்சுமை இருப்பதனால், நீங்கள் நினைவு யாத்திரையில் அமர்ந்திருக்காவிட்டால், பெருமளவு இழப்பை அனுபவம் செய்வீர்கள். இப்போது நீங்கள் சேமிக்க வேண்டும். ஒருவரை மாத்திரம் நினைவு செய்து முக்காலங்களையும் அறிந்தவர்கள் ஆகுங்கள். அரைக்கல்பத்திற்கான இந்த அழிக்க முடியாத செல்வத்தை நீங்கள் சேகரிக்க வேண்டும். இது மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். ஞானக்கடலைக் கடைந்து இரத்தினங்களைத் தேர்;ந்தெடுங்கள். பாபா, தான் செய்த முறைகளைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் காட்டுகின்றார். சிலர் கூறுகின்றார்கள்: பாபா, மாயையின் பல புயல்கள் வருகின்றன. பாபா கூறுகின்றார்: முடிந்தளவிற்குச் சம்பாதியுங்கள். அது உபயோகமாக இருக்கும். ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுக்கு நேரமிருந்தால், ஆலயங்கள் போன்ற இடங்களில் அதிகளவில் சேவை செய்யலாம். நீங்கள் உங்கள் பட்ஜைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அப்போது நீங்கள் ஆன்மீக சேனை என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். நீங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதையும் எழுதவேண்டும். அங்கே ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. அது தொடர்ந்தும் இருப்பதில்லை. அது இப்போது ஸ்தாபிக்கப்படுகின்றது. இலக்ஷ்மியும், நாராயணனுமே உங்கள் இலக்கும், இலட்சியமுமாகும். அதேநேரம் நீங்கள் இந்த திரான்ஸ்லைட் படத்தைப் பற்றரியுடன் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று நீங்கள் இந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் எனக் கூற வேண்டும். இந்தப்படம் முதற்தரமானதாகும். இந்தப்படம்; மிகவும் பிரபல்யம் அடையும். அது இலக்ஷ்மி, நாராயணன் மாத்திரம் அல்ல, அவர்களுடைய முழு இராச்சியமும் அங்கு இருக்கும். சுயராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: மன்மனாபவ! தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கீதையின் ஒரு வாரத்தைக் கொண்டாடுவதாக அவர்கள் கூறுகின்றார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு கல்பத்திற்கு முன்னரும் செய்யப்பட்டவையாகும். நீங்கள் இந்தப் படத்தை முழு நகரத்தையும்; சுற்றி எடுத்து வரும்போது, அதனைப் பார்ப்பவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமடைவார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். மன்மனாபவ! இது கீதையில் இருந்து வந்த வார்த்தையாகும். சிவபாபா கடவுள் ஆவார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! 84 பிறவிச் சக்கரத்தை நினைவு செய்யும்போது, அவ்வாறே நீங்கள் ஆகுவீர்கள். நீங்கள் நூல்களைத் தொடர்ந்தும் பரிசாகக் கொடுக்கலாம். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் தொடர்ந்தும் நிறைந்து வழிகின்றது. நீங்கள் மேலும் முன்னேறுகையில் பெருமளவு சேவை இடம்பெறும். இலக்கும், இலட்சியமும் மிகவும் தெளிவானதாகும். அங்கே ஓர் இராச்சியமும், ஒரு தர்மமும் இருப்பதுடன், நீங்கள் மிகவும் செல்வந்தராகுவீர்கள். அங்கே மக்கள் ஓர் இராச்சியத்தையும், ஒரு தர்மத்தையும் விரும்புவார்கள். மக்களுக்குத் தேவையானவற்றின் அடையாளங்கள் உங்கள் முன் தோன்றும். பின்னர், நீங்கள் கூறுபவை சரியானவை என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். 100 வீதம் தூய்மை, அமைதி, சந்தோஷமான இராச்சியம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. பின்னர் நீங்களும், சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் நினைவில் இருக்கும் போது, உங்கள் அம்பு இலக்கைத் தைக்கும். நீங்கள் குறைவாகப் பேசி, மௌனத்தில் இருக்க வேண்டும். நீங்கள் அதிகளவு சத்தத்திற்குள் வரக்கூடாது. பாபா பாட்டுகளையோ, கவிதை போன்றவற்றையோ விரும்புவதில்லை. நீங்கள் வெளியிடத்து மக்களுடன் ஒப்பிடக்கூடாது. உங்களுடைய அனைத்தும் முற்றிலும் வித்தியாசமானது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் மக்கள் வாசித்ததும் விழித்தெழக்கூடிய மிகவும் நல்ல சுலோகங்களை வைத்திருக்க வேண்டும். பல எண்ணிக்கையான குழந்தைகள் தொடர்ந்தும் வளர்வார்கள். ஆனால் பாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் நிறைந்திருக்கும். குழந்தைகள் கொடுத்த அனைத்தையும் அவர்களே உபயோகப் படுத்துவார்கள். தந்தை தன்னுடன் பணத்தைக் கொண்டு வருவதில்லை. உங்கள் பொருட்களை நீங்களே உபயோகப்படுத்துவீர்கள். பாரத மக்கள் பலவற்றைத் தாங்கள் சீர்திருத்துவதாக நம்புகின்றார்கள். ஐந்து வருடகாலத்திற்குள் அதிகளவு தானியங்கள் கிடைக்கும் என்பதால் அங்கு என்றுமே தானியத்தைப்பற்றி எவ்விதச் சிரமமும் இருக்கமாட்டாது. இருந்த போதிலும் உண்பதற்குரிய உணவு எதனையும் பெறமுடியாத சூழ்நிலை வரும் என்பது உங்களுக்குத் தெரியும். தானியமும் மலிவு விலையில் பெறமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தை பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் இச்சிறிய கஷ்டங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும். கூறப்பட்டுள்ளது சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கான உணவு வேறெதுவுமில்லை. கோப, கோபியர்களின் அதீந்திரிய சந்தோஷமும் நினைவுகூரப்படுகின்றது. அங்கு பல குழந்தைகள் இருப்பார்கள். இந்த நாற்றுக்குச் சொந்தமானவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். விருட்சம் இங்கேயே வளர வேண்டும். ஸ்தாபனை இங்கே இடம் பெறுகின்றது. இது போன்று ஏனைய சமயங்களில் இடம் பெறுவதில்லை. அவர்கள் மேலிருந்து இறங்கி வருகின்றார்கள். அவர்கள் வரும்பொழுது அவர்களின் விருட்சம் ஏற்கனவே நாட்டப்பட்டது போன்றிருக்கும் பின்னர், அவர்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வர அவர்களின் விருட்சம் தொடர்ந்தும் வளரத் தொடங்குகின்றது. அவர்களுக்கு முற்றிலும் எவ்விதச் சிரமமும் இல்லை. அவர்கள் மேலிருந்து கீழே வந்து, தங்கள் பாகத்தை நடிப்பார்கள். ஆகவே, அதில் போற்றுவதற்கு எந்தவிதமான விடயமும் இல்லை. பின்பற்றுபவர்கள் தொடர்ந்தும் இங்கே தங்கள் சமயஸ்தாபகர்களைப் பின்பற்றுவார்கள். அவர்கள் சற்கதி அடைவதற்கு என்ன கற்பித்தல்களைக் கொடுப்பார்கள்? எதுவுமே இல்லை! இங்கே எதிர்கால தேவதர்மத்தைத் தந்தை ஸ்தாபிக்கின்றார். சங்கமயுத்தில் புதிய நாற்று நாட்டப்படுகின்றது. முதலில் ஒரு சாடியில் நாற்றப்பட்ட நாற்று பின்னர் மீண்டும் அது இடம் மாற்றி நிலத்தில் நாற்றப்பட்டு, அங்கே அது தொடாந்தும் வளர்கின்றது. நீங்கள் அனைவரும் நாற்றை நடுகின்றீர்கள். பின்னர் அது சக்தியயுகத்தில் வளர்ந்து நீங்கள் உங்கள் எதிர்கால இராச்சியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் புதிய உலகை ஸ்தாபிக்கின்றீர்கள். நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் இருப்பதாக சமயநூல்கள் கூறவதினால், கலியுகம் பல வருடங்கள் நீடிக்கும். என மக்கள் நம்புகின்றார்கள். கலியுகம் இன்னமும் 40,000 வருடங்கள் இருப்பதாகவும், பின்னர் தந்தை வந்து புதிய உலகை உருவாக்குவார் எனவும் அவர்கள் நினைக்கின்றார்கள். கீதையின் கடவுள் நிச்சயமாக இருக்கின்றார் எனவும், இது அதே மகாபாரத யுத்தம் எனவும் சிலர் நம்புகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு அவர் கிருஷ்ணர் அல்ல எனக் கூறுங்கள். கிருஷ்ணர் 84 பிறவிகளை எடுக்கின்றார் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஒரு பிறவியின் அங்க அடையாளங்கள் அதேபோன்று அடுத்த பிறவியில் அமைவதில்லை. எனவே எவ்வாறு கிருஷ்ணர் இங்கு வருவார்.? எவருமே இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. கிருஷ்ணர் சுவர்க்கத்தின் இளவரசர் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள், எனவே, அவர் எவ்வாறு துவாபரயுகத்தில் வரமுடியும்? இலக்ஷ்மி, நாராயணனின் படத்தைப் பார்க்கும்போது, நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள். சிவபாபா இந்த ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தைத் தந்தையே ஸ்தாபிக்கின்றார் சக்கரம், விருட்சம் போன்றவற்றின் படங்களும் குறைந்தவையல்ல, ஒரு நாள் நீங்கள் வைத்திருக்கின்ற இந்தப் படங்கள் அனைத்தும் திரான்ஸ் லைட் வடிவில் உருவாக்கப்படும். பின்னர், அனைவரும் அத்தகைய படங்களைக் கேட்பார்கள். இத்கைய படங்களினால் விரைவான சேவை நடைபெறும். உங்களுக்கு நேரம் இல்லாத அளவிற்கு உங்களிடம் அதிகளவில் குழந்தைகள் வருவார்கள். பலர் வருவதால் நீங்கள் சந்தோஷமடைவீர்கள். நாளுக்கு நாள் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். நாடகத்திற்கேற்ப, மலர்களாக வருபவர்கள் ஈர்க்கப்படுவார்கள். பாபா இவரின் புத்தியைத் தூண்டுங்கள், எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறமாட்டீர்கள். பாபா எவரின் புத்தியையும் ஈர்ப்பதில்லை. சரியான நேரத்தில் அவர்கள் தாமாகவே கவரப்படுவார்கள். தந்தை உங்களுக்குப் பாதையை மாத்திரம் காட்டுவார். அநேக பெண்குழந்தைகள் எழுதுகின்றார்கள் எனது கணவரின் புத்தியைக் கவருங்கள். பாபா அனைவரின் புத்தியையும் தொட்டால், அனைவருமே சுவர்க்கத்திற்கு வந்து விடுவார்கள். கல்வியில் முயற்சி தேவை. நீங்கள் கடவுளின் உதவியாளர்கள். பாபா உங்களுக்கு முன்கூட்டியே அனைத்து உண்மைகளையும் கூறுகின்றார். அவர் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகவே கூறுகின்றார். இந்தப் படங்களை எடுத்துக் கொள்வதுடன் ஏணியின் படத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். நாடகத்திற்கேற்ப ஸ்தாபனை இடம் பெறவேண்டும். சேவைக்காக பாபா கொடுக்கின்ற வழிகாட்டல்களில் கவனம் செலுத்துங்கள். பாபா கூறுகின்றார்: நூறாயிரக்கணக்கான பட்ஜை வித்தியாசமான வகைகளில் உருவாக்குங்கள். புகைவண்டி டிக்கற்றை வாங்கி 100 மைல்கள் சுற்றிச் சேவை செய்யுங்கள். ஒரு பெட்டியில் இருந்து மற்றையதிற்கும், அதிலிருந்து மற்றையதுக்கும் செல்லுங்கள். இது மிகவும் இலகுவானது. குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானக்கடலைக் கடைந்து, மிகச் சிறந்த இரத்தினங்களை பிரித்தெடுங்கள். ஒரு வருமானத்தைச் சேமித்துக் கொள்ளுங்கள். உண்மையான உதவியாளராகி, சேவை செய்யுங்கள்.

2. கல்வியில் மிக்க ஆர்வமுடையவர்களாகுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏகாந்தத்தில் இருங்கள். உயிருடன் வாழும் போதும், உங்கள் சரீரத்திலிருந்து மரணித்திருக்கப் பயிற்சி செய்யுங்கள். இந்த ஸ்திதியைத் தொடர்ந்தும் அனுபவம் செய்வதனால், சரீர உணர்வை மறந்து விடுங்கள்.

ஆசீர்வாதம்:
சகல வேறுபாடுகளையும் முடித்து, ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற ஓர் உண்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.

பலரையும் ஒற்றுமையாக்குவதே பிராமண வாழ்வின் சிறப்பியல்பாகும். உங்கள் ஒற்றுமையினாலேயே உலகில் ஒரே தர்மமும், ஒரே இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. எனவே, எந்த வேற்றுமையையும் முடித்து ஒற்றுமையை ஏற்படுத்துபவதில் விசேட கவனம் செலுத்துங்கள். நீங்கள் உங்களுக்கான சேவையாளர்கள் அல்ல. ஆனால் சேவை செய்வதற்கான சேவையாளர்கள். நீங்கள் அர்ப்பணித்தவை அனைத்தும் சேவைக்கானதாகும். சக்கார் பாபா தனது எலும்புகளை சேவைக்காக அர்ப்பணித்தைப் போன்று, உங்கள் பௌதீகப் புலனங்கள் ஒவ்வொன்றினாலும் சேவை தொடர்ந்தும் இடம்பெறட்டும்.

சுலோகம்:
கடவுளின் அன்பில் மூழ்கும் போது துன்ப உலகம் மறக்கப்படுகின்றது.